Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ரூபா ஒரு மில்லியன் - நாமல் ராகபக்ச முகவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் இருந்து வன்னி வாழ் தமிழ் மக்களின் பிள்ளைகளை ஆபத்தான கடல் வழிப் பயணங்களூடாக அகதிகள் என்ற போர்வையில் அவுஸ்திரேலியா நோக்கி அனுப்பி பெருமளவு பணம் சம்பாதிக்கும் தொழிலை ஆரம்பித்துள்ளார் சிறீலங்கா சனாதிபதியின் புத்திரர் நாமல் ராகபக்ச..!

இவரின் "பாதுகாப்பான" வன்னி விட்டான அவுஸ்திரேலியா நோக்கிய வெளியேற்றத்திற்கும் அவுஸ்திரேலியாவை சென்றடைவதை உறுதிப்படுதிக் கொள்வதற்கும் ஒருவரிடம் இருந்து ஒரு மில்லியன் இலங்கை ரூபாக்கள் அறிவிடப்படுகின்றன.

இந்த ஆட்கடத்தலின் முதல் கட்டமாக.. நாமலின் இந்த ரகசிய வலை அமைப்பிற்கு 200,000 ரூபா வழங்கப்பட்டதும் அந்த நபர் அவுஸ்திரேலியா நோக்கி முல்லையில் இருந்து பயணிப்பார். பின்னர் அவர் அவுஸ்திரேலியாவை சென்றடைந்ததும்.. மிகுதிப் பணத்தை இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வாழும் அந்த நபருக்குரியவர் வழங்க வேண்டும்.

இந்த ஆட்கடத்தல் வியாபார வலயத்தில்.. நாமல் மட்டுமன்றி... வடக்கு மாகாண ஆளுனரும்.. இராணுவ அதிகாரியுமான.. சந்திரசிறி.. ஈபிடிபி ஒட்டுக்குழு தலைவன் டக்கிளஸ் தேவானந்தா.. என்று பலரும் இடம்பெற்றிருப்பதாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டது.

மீள்கட்டுமானம் புனருத்தாரனம் என்ற போர்வையில்.. முல்லைத்தீவு கரையோரங்களை ஆக்கிரமித்து அங்கு சிங்களவர்களைக் குடியேற்றி தனது வியாபார நோக்கத்தை விரிவுபடுத்திக் கொள்ள முல்லைத்தீவில் முகாமிட்டுள்ள நாமல்.. சிங்கள இராணுவப் பிரச்சன்னத்தை உறுதிப்படுத்தி..தமிழ் மக்களிடையே அச்ச நிலையை ஏற்படுத்தி அவர்களை நாட்டை விட்டு துரத்தி அடிக்கும் இந்தப் பணியையும் ஆரம்பித்துள்ளார்.

உள்நாட்டில் நிலவும் அச்ச சூழல்.. மற்றும் வறுமையில் இருந்து எப்படியாவது தமது ஆண், பெண் பிள்ளைகளை காப்பாற்றி.. வெளியேற்றி விட வேண்டும் என்ற அவாவில் வன்னி மக்களும் இதர பிரதேச தமிழ் மக்களும்.. இவர்களின் திட்டங்களுக்கு இசைந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதுவரை இப்படியான பயணம் மூலம் சுமார் 25 பேர் கொண்ட அணி அவுஸ்திரேலியா நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தமிழ்நெட்டுக்கு செய்தி கிட்டியுள்ளது.

[size=4]Rajapaksa's son starts human trafficking from Vanni to Australia[/size]

[size=4][TamilNet, Friday, 22 June 2012, 16:14 GMT][/size]

[size=4]Namal Rajapaksa, the son of SL president Mahinda Rajapaksa, has been behind a human trafficking ring, which operates from Mullaiththeevu in Vanni, sending Eezham Tamils to Australia from the seas off Mullaiththeevu at a price tag of one million SL rupees per person, reveal families that have already sent their sons and daughters through the ring. Snatching away the entire coastal stretch of Vanni from Eezham Tamils, the Rajapaksa regime is also evicting them exploiting all possible avenues, concerned civil sources in Vanni said adding that the operation also discredits the asylum seekers who really need protection from the South Asian establishments. [/size]

http://www.tamilnet....=13&artid=35317

1981 இல் இருந்து சிங்கள அரசுகள் வடக்குக் கிழக்கு உட்பட.. சிறீலங்கா வாழ் தமிழ் மக்களிடம் அச்ச நிலையை தோற்றுவித்து... அகதி ஆசையை தூண்டிவிட்டு அவர்களின் பாதுகாப்பான வெளியேற்றத்தை உறுதி செய்து கொடுப்பதன் மூலம் தமிழர்களின் சனத்தொகைப் பரம்பலை இலங்கைத் தீவில் வெற்றிகரமாக குறைத்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அண்மைய 2011 குடிசன மதிப்பீட்டுப் படி யாழ் குடாவின் சனத்தொகை வளர்ச்சி 50% த்தால் வீழ்ச்சி அடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி.. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன்.. சிறீலங்கா பூராவும் இந்த நிலை அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு யுத்தத்தில் இளைஞர்கள் அதிக அளவில் கொல்லப்பட்டதும்.. நாட்டை விட்டு வெளியேறியமையும் முக்கிய காரணங்களாக இனங்காணப்பட்டுள்ளன.

Edited by nedukkalapoovan

[size=4]- மொழி பெயர்ப்புக்கு நன்றிகள் [/size][size=1]

[size=4]- இந்த 'ஜனநாயக வேடம் பூண்ட பயங்கரவாதிகளின்' முகங்களை வெளியில் ஆதாரத்துடன் கொண்டுவரல் வேண்டும் [/size][/size][size=1]

[size=4]- குறிப்பாக எம்மவர்களை நாடு கடத்த என்னும் இல்லை தடுப்பு முகாம்களில் வைத்திருக்கும் நாடுகளின் கவத்திற்கு கொண்டுவரல் வேண்டும் [/size][/size][size=1]

[size=4]- ஐ.நா. வின் அகதிகள் அமைப்பிற்கு கூற வேண்டும் [/size][/size]

.

ஒரு தமிழனைக் கொன்றால் சாவது ஒருவன். ஒரு தமிழனை வெளியேற்றினால், அவன், அவன் குடும்பம் என்று ஒரு ஒரு நாலு பேராவது வெளியேறுவார்கள். இது கொல்வதை விட லேசான வேலை. பின் வெள்நாடு போனவன் ஊரில் உள்ளவர்களுக்கு காசு அனுப்புவான். இதனால் நாட்டுக்கு டொலர்களும் கிடைக்கும்.

ஆளை அனுப்பும் போதும் காசு, அனுப்பிய பின்னும் காசு. காசுக்குக் காசு.. இனத்துப்பரவாக்கலும் அந்தமாதிரி..

சிங்களவன் கெட்டிக்காரன்.

  • கருத்துக்கள உறவுகள்

.

சிங்களவன் கெட்டிக்காரன்.

அவர்கள் பயங்கர சுழி.................யங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.