Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பேசினா tongue roll ஆவுது..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோவை தைரியமாக கொண்டு வந்து இணைத்தற்காக நெடுக்கருக்கு ஒரு பச்சை கொடுக்கத் தான் வேண்டும் :lol:

சோத்து ஆன்ரிமாருக்குத் தமிழ் தான் கதைக்கத் தெரியும் போல் :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோத்து ஆன்ரிமாருக்குத் தமிழ் தான் கதைக்கத் தெரியும் போல் :icon_mrgreen:

சோத்து ஆன்ரிங்க.. இங்கிலிஷ் காரனோட கதைக்கிறது தமிழ். ஊருக்குப் போனா கதைக்கிறது டங்கிலீஷ். ஏன்னா இவைட பந்தாவை அங்க தானே காட்ட முடியும்...!

அன்றைக்கு ஒன்று பார்க்கிறன்.. தபால் நிலையத்திற்கு பிச்சைச் சம்பளம்.. (ஊரில அரச நிவாரணத்தை இப்படித்தான் சொல்லுறவை) எடுக்க வந்து நின்று கொண்டு.. அந்தக் காட் காலவதியானதும் தெரியாமல்.. அவன் கேள்வி கேட்க.. பே பே என்று கொண்டு நிற்குது..! அதோட மல்லுக்கட்டிட்டு.. அவன் நிற்க.. கியூ.. நீண்டு போய்... சனம் கத்தத் தொடங்கிட்டுதுகள். இதுகள் எல்லாம்.. ஏன் தான்.. இந்த நாடுகளுக்கு வருதுங்களோ.. என்று ஆகி இருக்கும்.. அந்தக் கியூல நின்ற சனத்துக்கு. பாவம் வெள்ளைக்காரன்.. அவன் ரெம்ப பொறுமைசாலி...!

இதை நான் நக்கலாச் சொல்லேல்ல. எனக்கே பார்க்க பாவமாத்தான் இருந்திச்சு. உதவி செய்யப் போய்.. கியூல நின்றவங்கட்ட ஏச்சு வாங்க என்னால ஏலாது என்றிட்டு மெளமான நின்றிட்டன்..! எனவே இப்படியான ஆன்ரிகளுக்கு மொழி தெரியல்லைன்னா.. தயவுசெய்து தெரிஞ்ச யாரையாச்சும் கூட்டிட்டுப் போங்க. உங்களுக்கும் வேலை சுலபமா முடியும். மற்றவங்களுக்கும் அசெளகரியம் இருக்காது..! உங்கள தப்பா பார்க்கவும் மாட்டாங்க..! கியூவில.. வந்து கேள்வி கேட்டா.. தமிழில உடன முழக்காதீங்க.. அவங்களுக்கு ஒன்னும் புரியாது..!

நீங்க.. தமிழ் தெரிஞ்வங்க கிட்டதான் தமிழில பேசலாம்.. என்பதை புரிஞ்சுக்கோங்க. வேலை.. மற்றும் சேவை வழங்கு இடங்களில்.. கொஞ்சம் கறுப்பா இருக்கிறவன் எல்லாம் தமிழன் என்று ஊகிச்சு..ஒரு கேட்டுக் கேள்வி இல்லாம.. தமிழில் முழங்காதீங்க. அவன்.. இந்தியனா இருக்கலாம்.. பங்களாதேசிய இருக்கலாம்.. இன்னும் பலப்பல இடங்களை சேர்ந்தவங்களா.. பல்வேறு மொழி பேசுறங்களா.. இருக்கலாம். தெரியும்.. உங்களுக்கு ஊகம்.. அதிகம் என்று. ஆனால் உங்க ஊகம்.. பல நேரங்களில் பொய்த்து விடுகின்றது.. சோத்து ஆன்ரிங்களா..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. அந்த அக்கா ஒரு தமிழ்ப்பெண் என்கிற அடிப்படையில் நீங்கள் உதவியிருந்தால் யாழ்களத்தில் நாங்கள் மகிழ்ந்திருப்போம்.. :blink: உங்கள் தலைமைத்துவப் பண்பை வெளிப்படுத்தும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளீர்கள்..!! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

மேலே இணைக்கபட்ட தமிழ் பற்றிய இணைப்பு இப்போ எத்தனையோ காலத்திற்கு முன்னமே வந்துட்டு..இது ஒன்றும் புதிய நிகழ்சி இல்லை..சரி அதை விடுத்து லண்டன் தபாலத்தில் நடந்த விடயத்திற்கு வருவம்..கண்டிப்பாக இப்படியான இடங்களில் அவதிப்படுபவர்களுக்கு உதவி செய்வது தான் சிறந்தது..நீங்கள் என்ன செய்து இருக்கிறீர்கள் என்றால் வரிசையை குளப்பிக் கொண்டு போனால் பக்கத்தில் நிற்பவர்கள் குளம்பிடுவார்கள். உங்கள் நேரம்,அங்கு நிற்பவர்களின் நேரம் எல்லாம் கெட்டு விடும் என்பதற்காக பார்த்துக்கொண்டு நின்று இருக்கிறீர்கள்...அந்தத் தருணத்தில் அந்தப் பெண் எவ்வளவு தர்ம சங்கடப்பட்டு இருப்பா என்பதை உங்களால் ஏன் புரிந்து கொள்ள முடிய இல்லை..ஓரளவுக்கு பார்த்துக் கொண்டு நிற்கும் போதே சிலவற்றுக்கு உதவிக்கு போகலாமா இல்லையா என்பதை புரிந்து கொள்ளலாம்.அதன் பின்னரவாது உதவி தேவையாக என்று கேட்பதில் என்ன தப்பு இருக்கிறது..யாரும் பிறந்து வரும் போது எல்லாத்திலும் புலமை பெற்றவர்களாக பிறந்து வருவதில்லை..ஆகவே மற்றவர்களின் நிலையிலும் இருந்து பார்க்க வேணும்...

ஊரில் வயது வந்தவர்கள் சொல்வது போல் பிச்சைக் காசு அது,இது என்று சொல்வது எல்லாம் சொல்கிறீர்கள் .......என்ன தாற்பரியத்தின் நிமித்தம் அந்தப் பணத்தை பெற்றுறக் கொள்கிறாவோ யாருக்கு தெரியும்...ஏன் இங்கும் பிச்சைக் காசு தான் தாறாங்கள் என்று சொல்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்...ம்ம்ம்...எல்லாம் காலம்.

Edited by யாயினி

இதை நான் நக்கலாச் சொல்லேல்ல. எனக்கே பார்க்க பாவமாத்தான் இருந்திச்சு. உதவி செய்யப் போய்.. கியூல நின்றவங்கட்ட ஏச்சு வாங்க என்னால ஏலாது என்றிட்டு மெளமான நின்றிட்டன்..! எனவே இப்படியான ஆன்ரிகளுக்கு மொழி தெரியல்லைன்னா.. தயவுசெய்து தெரிஞ்ச யாரையாச்சும் கூட்டிட்டுப் போங்க. உங்களுக்கும் வேலை சுலபமா முடியும். மற்றவங்களுக்கும் அசெளகரியம் இருக்காது..! உங்கள தப்பா பார்க்கவும் மாட்டாங்க..! கியூவில.. வந்து கேள்வி கேட்டா.. தமிழில உடன முழக்காதீங்க.. அவங்களுக்கு ஒன்னும் புரியாது..!

இங்கு அந்த பெண் அழைத்து போவதற்கு யாரும் இல்லையோ அல்லது யாரும் வரவில்லையோ தெரியாது.

புலம்பெயர் தேசம் என்பது எமது நாடு போல் அல்ல. இங்கு மக்கள் பலரும் வேலைக்கு செல்வதால் பகலில் மொழி தெரிந்தவர்களை பிடிப்பது கஷ்டம்.

அதிலும் வேலைக்கு செல்லாதவர்கள் கூட உதவிக்கு வர மாட்டார்கள். ஏதோ இரக்கப்படும் சிலர் கண்டால் மட்டும் உதவுவார்கள்.

அந்த உதவியை நீங்கள் செய்திருக்கலாம் தானே? கியூவில் பின்னுக்கிருந்து முன்னுக்கு போய் நீங்கள் நின்றால் தானே பிரச்சினை. அவருக்காக கதைத்து விட்டு மீண்டும் அதே இடத்தில் வந்து நிற்பதில் என்ன பிரச்சினை.

யாராவது கேட்டால் அவருக்காக கதைக்க செல்கிறேன் என்று சொல்லி விட்டு போயிருக்கலாம். உங்களுக்கு மொழி தெரியும் தானே.

அவர்களை ஏன் சோத்து ஆன்டிகள் என்று அழைக்கிறீர்கள்? குட்டி ஹரியின் பழக்கம் உங்களுக்கும் தொத்தி விட்டதா? இன்னொருவரை மரியாதையாக கதைப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அந்த இடத்தில் இரண்டு பிரச்சனை இருந்தது.

1. அந்த நபரை எனக்குத் தெரியாது. அவர் பணம் எடுக்க வந்திருந்தார் என்று நினைக்கிறேன். நான் வலிந்து உதவப் போக அவர் இவன் பணம் புடுங்கிற பேர்வழியோ என்று பதற.. நான் தான் வம்பில் மாட்டி இருப்பேன். தெரியாத நபர்களுக்கு அதிகாரிகளின் கண்காணிப்பற்ற சூழலில்.. உதவப் போறது ஆபத்தானது..!

நீங்கள் கருத்துக்களத்தில் சுகமா எழுதிட்டு போவீங்கள். நடைமுறை யதார்த்தம் என்ற ஒன்றைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்..!

2. நான் போய் எழுந்தமானமாக ஒருவருக்கு.. உதவிறன் என்று உதவ முடியாது. அதற்கான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். அது அந்த நபருக்கு செலவழிக்கப்படும் நேரத்தைக் கூட்டும். அது கியூ இன்னும் குழப்பமடைவதை தூண்டும்.

நீங்க எல்லாரும் நல்லா தத்துவம் எழுதுவீங்க.. உங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தால்.. விழுந்து அடிச்சு ஓடிடுவீங்க..! இது ஒன்றும் ஊர் போல இல்ல பேசிச் சமாளிக்க. இது உடன பொலிஸ் கேஸ் ஆகிடும். பிறகு நான் தான் பொலிஸ்காரனோட மல்லுக்கட்டனும். அந்தப் பொம்பிள காரியம் முடிஞ்சிட்டு போயிடுவா..! இது எனக்கு தேவை...?!!

யாரும்.. பாவம் பார்க்கலாம்.. அதில யாருக்குத் தான் என்ன சேதாரம். தத்துவம் பேசலாம்.. அதில யாருக்குத்தான் என்ன சேதாரம்..! ஆலோசனை.. புத்திமதி வாரி வழங்கலாம்.. அதில யாருக்குத்தான் என்ன சேதாரம். ஆனால் உங்க பேச்சைக் கேட்டு அதை நடைமுறைப்படுத்திறான் பாருங்க ஒருத்தன்.. அவன் தான்.. சேதாரமாகி சின்னாபின்னமாகி நிற்க வேண்டி வரும்..! நீங்க அதுக்கும் ஒரு தத்துவம் எழுதிட்டு போவீங்க..! ஆனால் பிரச்சனைன்னு வரும் போது நாங்க தான் அதற்கு முகம் கொடுக்கனும்.. சுற்ற நின்று.. தத்துவம்.. ஆலோசனை பேசினவனையை... தூண்டி விட்டவையை.. மருந்துக்கும் காணக் கிடைக்காது.! நமக்கு நல்லாவே தெரியும்.. தமிழங்க எப்படின்னு..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. உங்கட கருத்தைப் பார்த்தால் லண்டன் மகா கேவலமான இடம்போலை தெரியுது.. :icon_idea: கனடாவில் இப்படியான உதவிகள் செய்பவர்களுக்கு பொதுவில் கியூவில் நிற்பவர்கள் ஆதரவளிப்பார்கள். :wub:

நெடுக்சின் பக்கத்தில் உள்ள நியாயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேணும்..........நானும் பலதடவை பலருக்கு உதவி செய்து பல உபத்திரவங்க்களையே தேடினேன் , நான் மட்டுமல்ல நீங்களும் அனுபவப்பட்டிருப்பீர்கள். .... உதவி என்பது கை செய்வதை கண் பார்க்காமல் இருக்க வேண்டும், என்று எங்கேயோ வாசித்த நினைவு. நெடுக்சிற்கு உதவி செய்யும் மனப்பான்மை இல்லாமல் இருந்திருந்தால் அவர் இந்த காட்சியை இங்கே இணைத்திருக்க மாட்டார். தன்னால் உதவி செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே அதை அவர் இங்கே இணைத்திருக்கிறார் என நினைக்கிறேன். உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்............. :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. உங்கட கருத்தைப் பார்த்தால் லண்டன் மகா கேவலமான இடம்போலை தெரியுது.. :icon_idea: கனடாவில் இப்படியான உதவிகள் செய்பவர்களுக்கு பொதுவில் கியூவில் நிற்பவர்கள் ஆதரவளிப்பார்கள். :wub:

இங்க வெள்ளையளின் ஊர்களில் அவர்கள் தெரிந்தவர்களுக்கு அடிக்கடி அங்க வாறவங்களுக்கு.. உதவி செய்வார்கள். ஆனால் லண்டன் போன்ற பல்லினத்தவர்களும் வாழும் இடங்களில் உதவி செய்யப் போறது ஆபத்து. நாங்க உதவி செய்யப் போக.. ஐயோ காட்டப் புடுங்கிறான் என்று கத்த.. (ஏன்னா உதவி செய்யுறன் என்று போய் காட்.. நகை பறிக்கிறது நடக்கிறது சகஜம் தானே..!) அப்புறம் நாங்க தான்.. பொலிஸிட்ட மாட்டி நிப்பம்..! இது தேவை...????!

எங்களுக்கு யுனில.. induction நேரத்தில சொல்லித் தந்த வழிகாட்டல்களில் இவையும் ஒன்று. அநாவசியமாக உதவி செய்யப் போகாதேங்க. நண்பர்கள்.. மற்றும் அறிமுகமானவர்கள் தவிர..!

ஊரில.. சின்னக் குழந்தைகளைக் கண்டா தூக்கி விளையாடுவினம். இங்க.. தூக்கினா.. அவங்க பொலிஸக் கூப்பிட்டா... பீடோன்னு.. உள்ள போட்டிருவாங்க. அதனால.. இங்க சின்னப் பிள்ளைகளைக் கண்டாவே தூர நிற்கனும். அது விழுந்து எழும்பினாக் கூட.. தூக்கக் கூடாது. அதுவா விழுந்து எழும்பும் இல்ல.. அதின்ர அப்பா அம்மா பார்த்து தூக்கிவிட்டால் சரி..! இப்படி எல்லாம் நமக்கு அறிவுரை தந்திருக்காங்க. நாம போயி ஏன் வீணா.. மாட்டுப்படுவான்..! :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இருந்து கொண்டு தாங்கள் மட்டும் தான் யாழுக்கு வாற மாதிரி சில பேரது கதை...உதவி செய்ய விருப்பம் இருந்தால் உடனே போய் அந்த அம்மாவிடம் உங்களுக்கு உதவலாமா எனக் கேட்டு விட்டு அங்கிருக்கும் காசாளரிடம் சொல்லி விட்டு பின்னுக்கு கீயூவில் இருப்பவர்களிடம் ஒரு மன்னிப்பை கேட்டு விட்டு உதவியைத் தொடரலாம்...அந்த அம்மா பின் நம்பர் தெரியாமல்,காசு எடுக்கத் தெரியாமல் நின்டவரா இல்லைத் தானே!...மொழி பெயர்ப்புக்கு போறதிற்கு இவ்வளவு கதை அதில் நக்கல் வேறு ^_^ ...இங்குள்ள பல இன மக்களும் தங்கள் இன மக்களுக்கு அப்படித்தான் உதவுகிறார்கள்...உதவி செய்ய வேண்டும் என்ட மனமிருந்தால் மார்க்கமுன்டு

வெளியில் தனியாக இருக்கும் காசு எடுக்கும் மெசினில் யாருக்காவது பிரச்சனை என்டால் தான் கிட்டப் போகக் கூடாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிதம் என்ற ஒன்றிருக்குது. லண்டனில தமிழர்களுக்கு ஒழுங்கா கியூவில நிற்கவே தெரியாது. இரண்டு கியூ நின்றால்.. நடுவில நிப்பினம். எது முன்னுக்குப் போகுதோ.. அதில போய் பின்னுக்கு நிப்பினம்... நான் இதை வெள்ளைகளிடம் காணவே இல்லை. இதற்காகவே தமிழ் ஆக்கள் அதிகம் வாற.. சில கடைகளுக்குப் போறதில்ல. அதுவும் இல்லாமல்.. கியூவை இடை மறிச்சுப் போகும் போது.. ஏதோ அவைக்காக மற்றவர்கள் இடம் விட வேண்டும் என்ற கணக்கா குறுக்கால போவார்கள். ஒரு மன்னிப்பு.. அனுமதி கோரல் கிடையாது. தமிழ் கடையில சாமான் வாங்கினா.. நீ வாங்கிட்டியா.. பக் பண்ணிட்டு.. காசைக் கொடுத்திட்டு போய் தொலை.. இப்படித்தான் நடந்து கொள்வார்கள். ஒரு உபசரிப்பு.. வரவேற்பு.. நன்றி தெரிவிப்பு கிடையாது. சும்மா போறவன் வாறவனை எல்லாம் அண்ணை எண்டுவினம். ஏதோ அவைட பக்கத்து வீட்டு ஆள் போல. இதெல்லாம் இங்கிதமான செயல்கள் அல்ல..!

அதுமட்டுமன்றி.. நாங்கள் வெளி இடத்தில் இருந்து லண்டனுக்குள் வந்தவர்கள். கூடிய இங்கிதம் வெளில இருக்குது. சும்மா ஒருவரை போய் அம்மா.. நான் உதவிறன் என்று உதவிறதெல்லாம்.. வரவேற்கப்படுவதில்லை. உதவி கேட்டால் உதவுவதுதான் வரவேற்கப்படும். மொழி பெயர்ப்பாளர்களை தபால் நிலையங்கள் தாமே வைத்திருக்கவும் கூடும். அந்த இடத்தில் நமக்கேன் தேவையில்லாத வேலை..! அது அவர்களின் பிரச்சனை. ஆனால்.. வாடிக்கையாளர்களாக எமது நேரம் அதிகம் செலவிடப்பட இந்தச் சம்பவம் காரணமாக இருப்பதை மட்டுமே நாங்கள் கண்டிக்கலாம். அதைவிடுத்து மற்றவர்களுக்கு ஓடிப் போய் உதவவோ.. மொழி பெயர்ப்பு பணி செய்யவோ எமக்கு அனுமதி இல்லை..!

சில ஆக்கள்.. தாங்கள் லண்டனில செய்யுறது எல்லாம் சரி என்ற மாதிரி எழுதினம். ஆனால் அவை செய்யுறது பலது அந்த நாட்டு மக்களின் பொதுப் பழக்க வழக்கத்துக்கு நேர் மாறானது..! பாவம் அவர்கள் லண்டன விட்டு வெளில போய் மற்றச் சமூகங்களோட கலந்து வாழ்ந்தால் தானே தெரியும்...இதுகள்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

காணொளி இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ்!

இங்க வெள்ளையளின் ஊர்களில் அவர்கள் தெரிந்தவர்களுக்கு அடிக்கடி அங்க வாறவங்களுக்கு.. உதவி செய்வார்கள். ஆனால் லண்டன் போன்ற பல்லினத்தவர்களும் வாழும் இடங்களில் உதவி செய்யப் போறது ஆபத்து. நாங்க உதவி செய்யப் போக.. ஐயோ காட்டப் புடுங்கிறான் என்று கத்த.. (ஏன்னா உதவி செய்யுறன் என்று போய் காட்.. நகை பறிக்கிறது நடக்கிறது சகஜம் தானே..!) அப்புறம் நாங்க தான்.. பொலிஸிட்ட மாட்டி நிப்பம்..! இது தேவை...????!

எங்களுக்கு யுனில.. induction நேரத்தில சொல்லித் தந்த வழிகாட்டல்களில் இவையும் ஒன்று. அநாவசியமாக உதவி செய்யப் போகாதேங்க. நண்பர்கள்.. மற்றும் அறிமுகமானவர்கள் தவிர..!

ஊரில.. சின்னக் குழந்தைகளைக் கண்டா தூக்கி விளையாடுவினம். இங்க.. தூக்கினா.. அவங்க பொலிஸக் கூப்பிட்டா... பீடோன்னு.. உள்ள போட்டிருவாங்க. அதனால.. இங்க சின்னப் பிள்ளைகளைக் கண்டாவே தூர நிற்கனும். அது விழுந்து எழும்பினாக் கூட.. தூக்கக் கூடாது. அதுவா விழுந்து எழும்பும் இல்ல.. அதின்ர அப்பா அம்மா பார்த்து தூக்கிவிட்டால் சரி..! இப்படி எல்லாம் நமக்கு அறிவுரை தந்திருக்காங்க. நாம போயி ஏன் வீணா.. மாட்டுப்படுவான்..! :lol::D:icon_idea:

இந்த அனுபவம் எனக்கு இருக்கு, ஒரு தரம் கடைக்குப் போகும் போது வாசல் கதவு (சுழலும் முறையைக் கொண்டது) சுற்றிக் கொண்டு இருந்தது, ஒரு சின்னன் தாயோட உள்ள இருந்து வந்து கொண்டு இருந்தது, தாய் யாரோடையோ பேச்சுக் கொண்டுத்துக் கொண்டு இருந்தது தெரியாமல் சின்னன் சுழலும் கதவுக்குகிடையில் நெரிபட்டுப்பட்டுப் போக உடனடியாக சுழலும் கதைவை நிறுத்தும் பொத்தானை அழுத்தி நிறுத்திவிட்டுப் பார்த்தேன் சின்னன் நான் நிற்க்கும் பக்கமும் தாய் எதிர்ப் பக்கமும்... சின்னன் உயிர் போற அளவில கதறத் தொடங்க லூசு மனுசி வந்து என்ன நடந்தது என்று என்னட்ட கேட்டது.. நடந்ததைச் சொல்லும் போது ஒரு சந்தேகத்தோட என்னைப் பார்க்க, என்ர நல்ல காலம் கடை வாசலில நின்று பொதுச் சேவைக்குப் பணம் சேர்த்துக் கொண்டு நின்ற இரண்டு பேர் சாட்சி சொன்னதால் நான் பிழைச்சேன்...

அன்றிலிருந்து படித்த பாடம், யாரும் உதவி என்று கேட்டால் மட்டும் செய்யவேண்டும் என்று...

தமிழ் ஆட்களாக இருந்தாலும் உதவி வேண்டும் என்று கேட்டாலே தவிர ஒரு போதும் நானாக வலிந்து போய் செய்வதில்லை... சிலர் தமக்கு மொழி தெரியாவிட்டாலும் தமது இனத்தவர்களைக் கண்டால் கொஞ்சம் தள்ளியே நிற்ப்பார்கள்... (எங்க தங்கட தனிப்பட்ட தரவுகள் அடுத்தவர்களுக்குத் தெரிந்து விடுமோ என்று...)

இந்த விடையத்தில் நெடுக்ஸ் செய்ததை பிழை என்று நான் சொல்ல மாட்டேன்! (ஒருவருக்கு உதவும் மனம் இருந்தாலும், அதனை ஏற்றுக் கொள்ள மற்றவருக்கு மனமும் நம்பிக்கையும் பல நேரங்களில் இருப்பதில்லை) :)

ஊரில் சின்னப்பிள்ளைகளை கண்டால் தூக்கி விளையாடலாம். இங்கு தூக்கி விளையாட கூடாது. காரணம் இங்கு குழந்தைகளை கடத்துவது அதிகம் என்பதால் தூக்குவதை கண்டாலே நாமும் அப்படியானவர்கள் என்று நினைத்து போலீஸை கூப்பிடுவார்கள்.

அதே போல் யாராவது கொலை செய்யப்பட்டாலும் அந்த இடத்திற்கு போக பயப்படலாம்.

ஆனால் இங்கு ஒருவர் உதவி இல்லாமல் கஸ்ரப்பட்டிருக்கிறார். அவருக்கு உதவி செய்வது பயம் என்று சொல்கிறீர்கள் சரி.

"காட் காலாவதியானது கூட தெரியாமல் அங்கு அவன் கேள்வி கேட்க பே பே என்று கொண்டு நிக்குது" என்று சொன்னீர்கள் தானே? அந்த அவன் கேள்வி கேட்கும் போதாவது போய் கதைத்திருக்கலாம் தானே? அப்பொழுது நீங்கள் காட்டை பறிக்கிறீர்கள் என்று அந்த பெண்ணும் சொல்ல முடியாது. சொன்னாலும் அந்த அவன் நீங்கள் பறிக்கவில்லை என்று சொல்வார்.

இரண்டும் இல்லை என்றால் postoffice இல் CCTV பொருத்தப்பட்டிருக்கும். அசம்பாவிதம் நடந்தால் நேரத்தை கவனித்து விட்டு அதில் பார்க்குமாறு சொல்லலாம் தானே? ஆதாரம் இல்லாமல் போலிஸ் உங்களை எதுவும் செய்ய முடியாது. லண்டனில் வேறு நாட்டவருடன் அதிகம் பழகிய உங்களுக்கு இந்த நடைமுறை தெரியாமல் இருக்காது.

அதை நீங்கள் கடைப்பிடிக்காமல் ரதி அக்கா லண்டனை விட்டு வெளியில் போய் வேறு சமூகத்தவருடன் பழகவில்லை என்று அவரை குற்றம் சாட்டுகிறீர்கள். அவர் பழகினாரா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் சொல்லப்போனால் வேறு சமூகத்தவருடன் அவர் பழகியிராவிட்டால் கூட இந்த விடயத்தில் உங்களை விட சரியாக அவர் யோசிக்கிறார்.

Edited by காதல்

எங்களுக்கு சும்மா அடுத்தவங்க விடயத்தில அதுவும் உதவி கேட்டாமல்.. போய் மாட்டுப்படுறதில இஸ்டமில்ல. உங்க ரதி அக்கா அப்படிச் செய்ய விருப்பம் என்றால் செய்து கொள்ளப்படும். அது பற்றி நமக்குப் பிரச்சனை இல்லை..!

ஆனால் ஒன்று மற்றைய இனத்தவர்கள் (குறிப்பாக பிரித்தானிய வெள்ளைகள்).... அநாவசியமா மற்றவர்களின் விடயங்களில் மூக்கை நுழைக்க விரும்புவதில்லை. அதேபோல் தான் நாங்களும்..! வேணுன்னா.. 999 க்கு அடிச்சு சொல்லிட்டு நடையக் கட்ட வேண்டியது தான். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாழாய் போன தமிழனுக்காய்

அநியாயமாக நாற்பத்தி இரண்டாயிரம் மாவீரகள் ரோளாகி போனார்களே என்ற ஏக்கத்தோடு போய் சேர வேண்டியதுதான்.

எங்களுக்கு சும்மா அடுத்தவங்க விடயத்தில அதுவும் உதவி கேட்டாமல்.. போய் மாட்டுப்படுறதில இஸ்டமில்ல. உங்க ரதி அக்கா அப்படிச் செய்ய விருப்பம் என்றால் செய்து கொள்ளப்படும். அது பற்றி நமக்குப் பிரச்சனை இல்லை..!

ஆனால் ஒன்று மற்றைய இனத்தவர்கள் (குறிப்பாக பிரித்தானிய வெள்ளைகள்).... அநாவசியமா மற்றவர்களின் விடயங்களில் மூக்கை நுழைக்க விரும்புவதில்லை. அதேபோல் தான் நாங்களும்..! வேணுன்னா.. 999 க்கு அடிச்சு சொல்லிட்டு நடையக் கட்ட வேண்டியது தான். :):icon_idea:

வணக்கம் நண்பர் நெடுக்ஸ் நீங்கள் கூறிய பதிலில் உடன்பாடு இல்லை அதை கலர் இட்டுள்ளேன்.

நாம் வெள்ளையரின் நாடுகளில் புலம்பெயர்ந்து ,வாழ்ந்தாலும் , பல நல்ல விடயங்களை அவர்களிடம் இருந்து பின்பற்ற வேண்டிய நிலையில் உள்ளோம் என்பது உண்மைதான்.ஆனாலும் இன்னும் பல விடயங்களை நாம் பின்பற்றக்கூடாது என்பதும் உண்மைதான்,. ஏனனில் சமூக கூட்டு வாழ்க்கையில் நாம் இயல்பானவர்கள் . வெள்ளையர்கள் அப்படியல்ல.உங்களுக்கு நடந்த சம்பவத்தில் நீங்கள் செய்தது பிழை என்று நான் முற்றுமுழுதாக கூறவில்லை என்றாலும் [ஏனனில் அதற்கு பல ஏற்கக்கூடிய காரணங்களை முன்வைத்து எழுதினீர்கள்] ஆனால் இங்கே மற்றவர்களின் விடயங்களில் மூக்கை நுழைக்க கூடாது என்பது உண்மைதான் .ஆனால்

இன்னொருவருக்கு உதவி தேவைப்படும் பொது கேட்காமல் நாம் செய்யவேண்டும் [மூக்கை நுழைப்பது ஒன்றும் தப்பில்லை

மன்னிக்கவும் அதிக பிரசங்கம் செய்கிறேன் என்று கருதவேண்டாம் .........தமிழ் உறவு என்ற வகையில் எனக்கு தோன்றியதை

எழதுகிறேன் ...........உடன்படுவதும்,உடன்படாததும் உங்கள் சுதந்திரம்............... :lol: :lol: :D :D :D

Edited by தமிழ்சூரியன்

எங்களுக்கு சும்மா அடுத்தவங்க விடயத்தில அதுவும் உதவி கேட்டாமல்.. போய் மாட்டுப்படுறதில இஸ்டமில்ல. உங்க ரதி அக்கா அப்படிச் செய்ய விருப்பம் என்றால் செய்து கொள்ளப்படும். அது பற்றி நமக்குப் பிரச்சனை இல்லை..!

அதென்ன என்ட ரதி அக்கா? ரதி அக்கா என்று தான் சொன்னனான். என்ட ரதி அக்கா என்று சொல்லேல்லை. ஒரு சக கருத்தாளருக்கு நீங்கள் கூறியது தவறு என்று தோன்றியதால் அவர் பெயரை குறிப்பிட்டன். அதுக்காக அவரை சொந்தம் கொண்டாடுறன் என்று நினைச்சியளோ?

நல்ல வேளை யாரும் ஆண்களை சுட்டிக்காட்டி கருத்து எழுதேல்லை. பிறகு என்ட (குறிப்பிட்ட நபரின் பெயர்) என்று சொல்லியிருப்பீங்கள். :lol:

ஆனால் ஒன்று மற்றைய இனத்தவர்கள் (குறிப்பாக பிரித்தானிய வெள்ளைகள்).... அநாவசியமா மற்றவர்களின் விடயங்களில் மூக்கை நுழைக்க விரும்புவதில்லை. அதேபோல் தான் நாங்களும்..! வேணுன்னா.. 999 க்கு அடிச்சு சொல்லிட்டு நடையக் கட்ட வேண்டியது தான். :):icon_idea:

அது தானே வெளிநாட்டுக்கு வந்ததும் தாங்கள் வெள்ளைக்காரன் போல் என்ற நினைப்பு. என்ன தான் பண்ணினாலும் அவர்கள் முன் நீங்கள் தமிழன் தான். வேற்று நாட்டவன் தான். அவர்கள் கூட வேறு உதவி செய்யாவிட்டாலும் பாசை தெரியாதவர்களுக்கு உதவுவார்கள். நீங்கள் ஒரு கறுப்பினத்தவனுக்கு உதவி செய்ய போனால் பயப்படலாம். எங்கள் நாட்டு பெண்ணுக்கு உதவி செய்ய இவ்வளவு கதை கதைக்கிறியள்.

நீங்கள் செய்ததை நியாயப்படுத்த என்ன வேண்டுமென்றாலும் எழுதுவியள். எழுதுங்கோ. உங்களை பற்றி தெரிய வைத்த இந்த திரிக்கு ஒரு நன்றி. :wub:

Edited by காதல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்காவின் நிலைப்பாட்டை ஆதரிச்சு எழுதினதால.. உங்கட கருத்தியல் நெருக்கத்தைச் சொல்ல உங்கட ரதி அக்கா என்று எழுதினன். அதில என்ன தப்பு..!

மேலும்....

கறுப்பை பார்த்துப் பயப்பிடனும் என்றது சுத்த நிறவாதம். அவங்களிலும் நல்லவங்க இருக்காங்க. வெள்ளையிலும் கூடாதவங்க இருக்காங்க. எங்கடையளில எத்தனை ஊத்தவாழி இருக்குது.

என்னைப் பொறுத்தவரை அறிமுகற்றவர்களுக்கு அதுவும் இந்த நாடுகளில் நாங்களா உதவி செய்வது ஆபத்து. ஏனென்றால்... அவர்களுக்கு உதவ காவல்துறை இருக்குது.. இன்னும் இன்னும் பல வசதிகள் இருக்கின்றன. நாங்கள் உதவப் போய் வீண் வம்பில் மாட்டிக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.

இத்திரியில் என்ன எத்திரியில் என்றாலும்.. எங்கள் கருத்தை வைத்து எங்களை யாராலும் எடைபோட முடியாது. அதை மட்டும் ஆணித்தரமாகச் சொல்லலாம்..! எடை போட வெளிக்கிட்டு.. ஏமாந்தவர்களே அதிகம்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி இணைப்பிற்கு நன்றி நெடுக்ஸ்!

இந்த அனுபவம் எனக்கு இருக்கு, ஒரு தரம் கடைக்குப் போகும் போது வாசல் கதவு (சுழலும் முறையைக் கொண்டது) சுற்றிக் கொண்டு இருந்தது, ஒரு சின்னன் தாயோட உள்ள இருந்து வந்து கொண்டு இருந்தது, தாய் யாரோடையோ பேச்சுக் கொண்டுத்துக் கொண்டு இருந்தது தெரியாமல் சின்னன் சுழலும் கதவுக்குகிடையில் நெரிபட்டுப்பட்டுப் போக உடனடியாக சுழலும் கதைவை நிறுத்தும் பொத்தானை அழுத்தி நிறுத்திவிட்டுப் பார்த்தேன் சின்னன் நான் நிற்க்கும் பக்கமும் தாய் எதிர்ப் பக்கமும்... சின்னன் உயிர் போற அளவில கதறத் தொடங்க லூசு மனுசி வந்து என்ன நடந்தது என்று என்னட்ட கேட்டது.. நடந்ததைச் சொல்லும் போது ஒரு சந்தேகத்தோட என்னைப் பார்க்க, என்ர நல்ல காலம் கடை வாசலில நின்று பொதுச் சேவைக்குப் பணம் சேர்த்துக் கொண்டு நின்ற இரண்டு பேர் சாட்சி சொன்னதால் நான் பிழைச்சேன்...

அன்றிலிருந்து படித்த பாடம், யாரும் உதவி என்று கேட்டால் மட்டும் செய்யவேண்டும் என்று...

தமிழ் ஆட்களாக இருந்தாலும் உதவி வேண்டும் என்று கேட்டாலே தவிர ஒரு போதும் நானாக வலிந்து போய் செய்வதில்லை... சிலர் தமக்கு மொழி தெரியாவிட்டாலும் தமது இனத்தவர்களைக் கண்டால் கொஞ்சம் தள்ளியே நிற்ப்பார்கள்... (எங்க தங்கட தனிப்பட்ட தரவுகள் அடுத்தவர்களுக்குத் தெரிந்து விடுமோ என்று...)

இந்த விடையத்தில் நெடுக்ஸ் செய்ததை பிழை என்று நான் சொல்ல மாட்டேன்! (ஒருவருக்கு உதவும் மனம் இருந்தாலும், அதனை ஏற்றுக் கொள்ள மற்றவருக்கு மனமும் நம்பிக்கையும் பல நேரங்களில் இருப்பதில்லை) :)

குட்டி நான் உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிலை நான் எதிர் பார்க்கவில்லை...நீங்கள் அநேக விடயங்களில் பொறுப்பாக பதில் எழுதக் கூடிய ஒருவர்...குழந்தைகள் விடயத்தில் நீங்கள் சொல்லுவது சரி நாங்கள் என்டாலும் வெள்ளையலோ அல்லது யாரோ எங்கள் குழந்தைக்கு கிட்ட வந்தால் சந்தேகக் கண்ணோடு தான் பார்ப்போம்...சில நேரத்தில் சில தமிழர்கள் உதவி செய்யப் போவோரை தப்பாக நினைப்பதும் உண்டு சில வேளை அவர்களை யாராவது ஏமாத்தி இருக்கலாம் அல்லது தமிழாக்கள் கிட்ட வந்தால் நகையை பறிச்சுக் கொண்டு ஓடிடுவாங்கள் போன்ற கதைகளை ஏமாந்த யாராவது இவர்களிடம் சொல்லியிருக்கலாம் ஆனால் அதற்காக முழுத் தமிழரையும் சந்தேகத்தோடு பார்ப்பதும் அவர்களுக்கு உதவி செய்ய மறுப்பதும் தப்பு என்பது என் கருத்து.

நெடுக்ஸ் மேலே என்ன நட‌ந்தது,எங்கே நட‌ந்தது என விபர‌மாய் எழுதியுள்ளார்...கண பேர் வரிசையில் தபால் நிலையத்தில் நிற்கையில் காசாளருக்கு முன்னால் இது நட‌ந்தது...காசாளர் அந்த அம்மாவுக்கு என்ன சொன்னார் என்பதும் நெடுக்ஸ்சுக்கு கேட்டு உள்ளது இது காசு எடுக்கும் விச‌யமோ அல்லது பின்[pin] நம்பர் விச‌யமோ இல்லை அந்த அம்மாவின் காட் காலவதியாகி விட்டது ஒரு சின்ன விச‌யம் இதை மொழி பெயர்த்து அந்த அம்மாவிற்கு சொல்வதில் என்ன பெரிய பிர‌ச்ச‌னை வந்து விட‌ப் போகிறது? புதுக் காட்டை உட‌னே கையில் கொடுத்து விட‌ப் போறார்களா என்ன இல்லைத் தானே!...உட‌னே போய் மொழி மாற்றத்திற்கு உதவி இருந்தால் வரிசையும் விரைவாக நகர்ந்திருக்கும் அங்கிருக்கும் மற்றவர்களும் விரைவாக தமது சேவையை முடித்துக் கொண்டு போய் இருப்பார்கள்...கண்ணுக்கு எதிரே ஒரு அம்மா அந்தர‌ப்பட்டுக் கொண்டு இருக்க பார்த்துக் கொண்டு இருக்க எப்படி மனசு வருகிறது? இதே உங்கள் அம்மாவிற்கு நட‌ந்தால் எப்படி இருக்கும் :)

சக தமிழருக்கு எம் கண் முன்னாலே அநியாயமோ,பிர‌ச்ச‌னையோ நட‌ந்து கொண்டு இருக்கையில் பார்த்து கொண்டு இருந்தோமானால் நாம் என்ன தமிழர்...உதவுகிறது,விடுகிறது அவர‌வர் விருப்பம்[நெடுக்ஸ் தனக்கு உதவ விருப்பமில்லை என சொல்லி விட்டார்] ஆனால் இந்த அம்மாவிற்கு சின்ன உதவி கூட‌ செய்ய விருப்பமில்லாதவர்கள் தேசியத்தையும்,எமது போராட்ட‌த்தையும் ஆதரிக்கிறார்கள் என்னும் போது முர‌ண்பாடாக இல்லையா?

ரதி, உதவி என்று கேட்பவர்களுக்கு அந்த நேரத்திகுள் உதவாமல் விட்டால் தான் கூடாது... அதே நேரம் வலியப் போய் உதவினால் சிலர் அதனை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் போதும், வலியப் போய் உதவுவதை ஒரு வேண்டா வெறுப்பாக (கவுரவக் குறைச்சல்- இதற்கு எம்மவர்கள் முதலிடம் கொடுப்பவர்கள் ரதி) வெளிப்படுத்தும் போதும் மற்றவருக்கு உதவ நினைக்கும் அந்த மனநிலையும் குறைந்து போக வாய்ப்புக்கள் இருக்கும் தானே? கசப்பான அனுபவங்கள் இருப்பின் அடுத்த முறை அதனை யோசித்துச் செய்வதில்லையா? அதன் அடிப்படையிலேயே எனது கருத்தைப் பதிந்தேன்...

நான் தான் சொல்லி இருக்கனே.. என்னால் அந்தப் பெண்மணிக்கு உதவக் கூடிய நிலை அந்தச் சூழலில் இருக்கவில்லை என்று. அதற்கான காரணத்தையும் சொல்லி உள்ளேன். எனக்குள்ள காரணங்களின் அடிப்படையில் தான் நான் செயற்பட முடியும். மற்றவர்கள் சொல்கிறார்கள்.. நியாயம் கேட்பார்கள்..என்பதற்காக எல்லாம் என்னால் செயற்பட முடியாது..! எனக்கு அதில இருந்த சூழ்நிலைக்கு ஏற்ப.. உதவப் போகனுன்னு தோனல்ல.. உதவல்ல. அதை யாரும் கேள்வி கேட்டு அதை இன்னொன்றோட முடிச்சுப் போட முடியாது.

அந்தப் பெண்மணி.. பிரச்சனைப்படுவதை பார்க்காமலே.. ஏதோ நடக்குது என்றிட்டு.. பக்கத்தில நிண்ட பிகரோட கடலை போட்டிட்டு.. நின்றிருந்தா.. ஒரு பிரச்சனையும் வந்திராது. பாவம் பார்க்கப் போய்.. வேணும்.. இதுவும் வேணும் இன்னும் வேணும்.

இதுகளைப் படிக்கிறப்போ.. தமிழ் ஆக்களுக்கு உதவியே செய்யப்படாது என்ற எண்ணம் தான் வலுவாக தோன்றுது..! வளர்க்க உங்கள் பணி..! இருக்கிற அனுதாபத்தையும் இழக்கச் செய்வதையே யாழில் அநேகர் செய்யுறீங்க. இதனால பாதிக்கப்படுறது பாவம்.. உதவி தேவைப்படும் மக்கள்..! நீங்களும் உதவ மாட்டியள்.. மற்றவனையும் விடமாட்டியள்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, உதவி என்று கேட்பவர்களுக்கு அந்த நேரத்திகுள் உதவாமல் விட்டால் தான் கூடாது... அதே நேரம் வலியப் போய் உதவினால் சிலர் அதனை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் போதும், வலியப் போய் உதவுவதை ஒரு வேண்டா வெறுப்பாக (கவுரவக் குறைச்சல்- இதற்கு எம்மவர்கள் முதலிடம் கொடுப்பவர்கள் ரதி) வெளிப்படுத்தும் போதும் மற்றவருக்கு உதவ நினைக்கும் அந்த மனநிலையும் குறைந்து போக வாய்ப்புக்கள் இருக்கும் தானே? கசப்பான அனுபவங்கள் இருப்பின் அடுத்த முறை அதனை யோசித்துச் செய்வதில்லையா? அதன் அடிப்படையிலேயே எனது கருத்தைப் பதிந்தேன்...

உங்கட உண்மையான பதிலுக்கு நன்றி குட்டி

2000 வருடங்களிற்கு முன் கிறிஸ்தவமத மக்களின் இறைவன் கூறிய ஓர் கதை.[

ஒரு காட்டு வழியே யூத இனத்தை சேர்ந்த ஒருவன் பயணம் செய்து கொண்டிருந்தான். அங்கே வந்த திருடர்கள் அவனை அடித்து அவனிடம் உள்ள பணம்,பொருள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவனை குற்றுயிராய் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அவன் வலியால் துடித்துக்கொண்டு இருந்தான்.அப்போது அவ்வழியே படித்து பண்பட்ட[லேவியன் ] ஒரு மானிடன் வந்தான்,அவனைக்கண்டான், தான் அவனுக்கு உதவினால் சட்டப்பிரச்சனைகள் போன்ற பலவிதமான பிரச்சனைகள் உருவாகும் என்ற காரணத்தினால் அவனுக்கு உதவாமல் சென்றுவிட்டான். அவ்வழியே அவன் இனத்தை சேர்ந்த பணக்கார யூதன் ஒருவனும் வந்தான். தன இனம் என அவன் அறிந்திருந்தும் உதவாமல் போய்விட்டான். பின் அவ்வழியே ஓர் சமாரிய இனத்தை சேர்ந்தவன் வந்தான், அக்காலத்தில் சமாரியர்கள் யூதருக்கு அடிமையான ஓர் இனம், யூதர்கள் அவர்களை மதிப்பதில்லை .......ஆனால் அந்த யூதனின் பரிதாப நிலைகண்ட சமாரியன் அவன் மேல் இரக்கபபட்டு தான் கொண்டுவந்த குடிநீரை அவனுக்கு கொடுத்து முதலுதவி அளித்து தனது ஒட்டகத்தின் மேல் இருத்தி வைத்திய நிலையத்திற்கு அழைத்து சென்று தனது செலவில் சிகிச்சைக்கு உட்படுத்தி மேலதிக செலவிற்காக பணமும் வைத்தியரிடம் கொடுத்துவிட்டுச்சென்றான்.

இதை என் நான் இங்கே இணைக்கிறேன் என்றால் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தன்னைப்போல் நினைத்து மற்ற மனிதனுக்கு உதவ வேண்டும் என்பதையே எல்லா மதங்களும், வாழ்க்கையின் நியதியும் கூறுகின்றது. ஆனால் இந்தக்கலி யுக காலத்தில் மனிதம்,உதவி என்ற மனிதப்பண்புகளை மறப்பதற்கு நாம் ஆயிரம் ஆயிரம் சாட்டுக்களை கூறிவருகிறோம்.......இது நாகரீகமான உலகம் , இது வளர்ச்சியடைந்த உலகம் , ஆகவே இந்தக்காலத்திலே உதவி செய்வதற்கும் சில வரம்புகள் இருப்பது என்று நாம் நினைத்தோம் ஆனால்...........மனிதம் டைனோஸ் என்ற விலங்கைப்போல் அழிந்து விடுவதற்கு பல காலம் எடுக்காது......ஆகவே உதவி செய்வதற்கு எந்த வரையறையும் இருக்ககூடாது என்பதே நியதி . இதை யார் மனதையும் புண்பட வேண்டும் என்ற நோக்கில் எழுதவில்லை....மாறாக பண்பட்ட சமூகமாக நாம் வர வேண்டும் என்ற நோக்கமே.......நன்றி.. :D:) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.