Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பது இனவாதம், மதவாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தேசிய பிக்குகள் முன்னணியின் பிரதித் தலைவர் கல்யாண ரன்ஸ்ரீ[/size]

[size=3][size=4]mong%20front_CI.png[/size]

[size=4]தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும் எனவும் யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது எனவும் தேசிய பிக்குகள் முன்னணியின் பிரதித் தலைவர் கல்யாண ரன்ஸ்ரீ தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]தெற்கிலுள்ள விகாரைகளைப் புனரமைப்பதற்கு, பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்காத அரசு, வடக்கு, கிழக்கில் விகாரைகளை அமைத்து அதீத மதப்பற்றை வெளிப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது எனவும் அந்த முன்னணி குறிப்பிட்டுள்ளது.[/size]

[size=4]வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் போர் முடிவடைந்த கையோடு அரசு திட்டமிட்ட அடிப்படையில் சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றுவதுடன், புதிதாக விகாரைகளையும் அமைத்து வருகின்றது. பௌத்தர்கள் இல்லாத பிரதேசங்களிலும் விகாரைகள் அமைக்கப்படுகின்றன என்று தமிழ் கட்சிகள் சுட்டிக்காட்டி வருகின்றன.[/size]

[size=4]யுத்தம் முடிவடைந்ததையடுத்து, தமிழ் மக்களுக்கு அவர்களின் நிலங்களை அரசு மீளப் பெற்றுக்கொடுத்திருக்கவேண்டும்; வயல் நிலங்களை கையளித்திருக்கவேண்டும்; மீளக்குடியமர்த்தல் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியிருக்க வேண்டும். [/size]

[size=4]ஆனால், அரசு அவ்வாறு செய்யவில்லை. யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் தமிழ்மக்கள் இன்னும் முகாம்களிலேயே முடங்கியிருக்கின்றனர். அவர்க்ள இருண்ட யுகத்திலிருந்து இன்னும் மீளவில்லை. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு செய்யவில்லை.[/size]

[size=4]யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அரசு நாட்டில் புதுவிதமான பிரச்சினைகளை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றது. நீங்கள் சொன்னதுபோல பௌத்தர்கள் இல்லாத, தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு பிரதேசத்தில் விகாரைகளை அமைப்பதானது நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டும் செயலாகும்.[/size]

[size=4]தெற்கில் நிறையவே விகாரைகள் உள்ளன. பிக்குகள் இன்மையால் அவை பராமரிக்கப்படாமல் உள்ளன. எனவே, உள்ளவற்றைப் பாதுகாப்பதற்கும், புனரமைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்ததாக எமக்குத் தெரியவில்லை.[/size]

[size=4]மாறாக, வடக்கு, கிழக்கில் புதிதாக விகாரைகளை அமைப்பதோ அல்லது புத்தர் சிலைகளை நிர்மாணிப்பதோ மதப்பற்று அல்ல. முதலில் இருப்பவற்றைப் பாதுகாக்க பராமரிக்க நடவடிக்கை எடுத்தல் அவசியம் என தேசிய பிக்குகள் முன்னணியின் பிரதித் தலைவர் கல்யாண ரன்ஸ்ரீ தெரிவித்துள்ளார்.[/size][/size]

[size=4]http://www.globaltam...IN/article.aspx[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கில் புதிதாக விகாரைகளை அமைப்பதோ அல்லது புத்தர் சிலைகளை நிர்மாணிப்பதோ மதப்பற்று அல்ல. முதலில் இருப்பவற்றைப் பாதுகாக்க பராமரிக்க நடவடிக்கை எடுத்தல் அவசியம் என தேசிய பிக்குகள் முன்னணியின் பிரதித் தலைவர் கல்யாண ரன்ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இப்படியும் ஒரு சிங்கள பிக்குவா?? இவர் பிழைப்பு நடத்தினமாதிரிதான்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் ஒரு சிங்கள பிக்குவா?? இவர் பிழைப்பு நடத்தினமாதிரிதான்....

இவர் ஒரு தமிழ் பிக்குவாக இருக்குமோ ? பெயரிலையே கல்யாண என்று தொடங்குகிறது ..... :D

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகளுக்குள் புலம்பெயர் நாடுகளில் மிச்சம் மீதி இருக்கும்.. புலிகள் ஊடுருவல் என்று நாளை கோத்தா சொல்ல.. போதையில மாடில இருந்து விழுந்து மண்டை கழன்ற ஹெகலிய அதை சிங்கள மீடியாக்களில் சொல்ல சரியா இருக்கும்..!

பிறகு..

கே பி வந்து.. இவர்கள் பேசுவதுதான் மதவாதம்.. அரசு செய்வது இன ஐக்கியம் என்பார்.

கருணா வந்து.. கொழும்பில் எத்தனையோ யாழ்ப்பாணத்தவர்களின் இந்துக் கோவில் இருக்க.. ஏன் யாழ்ப்பாணத்தில் புத்த கோயில் இருக்கப்படாது என்பார்.. இதற்கு பிக்குகள் முன்னணி விளக்கம் தர வேண்டும் என்பார்.

பிள்ளையான் வந்து.. மட்டக்களப்பில் இருக்கிறது புத்த கோவில்.. ஏன் வன்னில.. யாழ்ப்பாணத்தில இருக்கப்படாது. இதெல்லாம் யாழ்ப்பாண படிச்ச திமிருக்கு வேணும் என்பார்.

டக்கிளஸ் வந்து.. நான் எப்பவும் சொல்வதைத் தான் செய்வன்.. செய்வதைத் தான் சொல்வன். புத்த கோவில்களா எமக்குப் பிரச்சனை. அது அதுபாட்டுக்கு இருந்திட்டுப் போகுது. இப்ப மக்கள் சாப்பிட வழி இல்லாமல் இருக்கினம்.. (மக்களை அப்படி வைச்சிருக்கிறதே அவங்க தான்.. அப்ப தானே இப்படிச் சொல்லிச் சொல்லியே வாக்கு வாங்கலாம்..!) அதுகளுக்கு ஒரு தீர்வு தேடாமல்.. நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கினம்.. இந்தப் பிக்குகள். அரசு இவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிக்கை விடுவார்.

பதிலுக்கு சம்பந்தன் வந்து...

எங்கட ஐயர் கட்டிற காவியும் ஒன்றுதான்.. பிக்குகள் போடுற காவியும் ஒன்றுதான்.. புத்த கோவில் கோபுரமும் ஒன்றுதான் அம்மன் கோவில் கோபுரமும் ஒன்று தான்.. நான் எப்போதுமே புத்த கோவிலை வழிபடும் பாரம்பரியத்தில் வந்தவன்.. எனக்கு இந்தப் பிக்குகளின் பேச்சில் உடன்பாடில்லை என்பார்..!

:lol::icon_idea:

Edited by nedukkalapoovan

பாவம் இந்த பிக்கு முக்கிய பதவியில் இருந்து தூக்கி வீச படப்போகின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தான் உண்மையாக பெளத்தமதத்தினைப் பின்பற்றும் பிக்கு

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.