Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமக்கு வேண்டாம் கொலைத் தொழில்

Featured Replies

[size=6]நமக்கு வேண்டாம் கொலைத் தொழில் [/size]

[size=2][size=4]கோடை வெயிலும் குளிர் காற்றும் குழைந்து கிடந்தன…[/size][/size]

[size=2][size=4]அவசர உலகில் அவன் அவசரமாக நடந்து கொண்டிருந்தான்…[/size][/size]

[size=2][size=4]” பொத் பொத் .. ” என்ற ஓசையுடன் அவன் சப்பாத்துக்கள் தரையில் மோதின.. அவசரம்..[/size][/size]

[size=2][size=4]கீழே பார்த்தான்..[/size][/size]

[size=2][size=4]ஒரு பூச்சி..[/size][/size]

[size=2][size=4]சாணத்தின் நிறம்.. சிறக்கைகளில் கருமையாக கோலங்கள்..[/size][/size]

[size=2][size=4]அதனுடைய அசைவு சாதாரணமாகப்படவில்லை… ஏராளம் பிரச்சனைகளை சுமந்து அந்தரப்படுவது தெரிந்தது..[/size][/size]

[size=2][size=4]பூச்சிகளின் உலகில் அதற்கு ஏதோ பெரிய பொறுப்பு இருக்க வேண்டும்… இல்லாவிட்டால் இவ்வளவு அந்தரமாக அது அசைய முடியாது..[/size][/size]

[size=2][size=4]இவனுக்கும் அவசரம்தான் அடுத்த காலடியை அவசரமாகப் போட வேண்டும்…[/size][/size]

[size=2][size=4]போட்டால் காலுக்குள் கிடக்கும் பூச்சிக்கு அந்த இடத்திலேயே பரலோகம்தான்… போடலாமா.. ? விடலாமா..?[/size][/size]

[size=2][size=4]கடுமையாக யோசித்தான்…[/size][/size]

[size=2][size=4]அந்தப் பூச்சியின் நிறம் என்றோ செத்துப்போன ராணியக்காவின் சாண நிறமான சேலை போலவே இருந்தது..[/size][/size]

[size=2][size=4]அவனுடைய நினைவுக்குள் குருட்டு பியதாச குறுக்கே வந்தான்..[/size][/size]

[size=2][size=4]அவன் சிங்கள ஆமிக்காரன்… குடும்ப வறுமைக்காக ஆயுதம் ஏந்தி யாழ்ப்பாணம் வந்திருந்தான்.[/size][/size]

[size=2][size=4]அன்று காவல் கடமையில் இருந்த அவனுடைய ரேண்..[/size][/size]

[size=2][size=4]யாரோ ஒரு தமிழனை அல்லது தமிழிச்சியை சுட வேண்டும்.. மேலிடத்து கட்டளை… படிப்படியான இன அழிப்பிற்கு அது அவசியம்..[/size][/size]

[size=2][size=4]” யாரைச் சுடலாம்…? ”[/size][/size]

[size=2][size=4]காலையில் இருந்து குறி பார்த்துக் கொண்டே இருந்தான்…[/size][/size]

[size=2][size=4]அவனுடைய துப்பாக்கி இலக்கிற்குள் எத்தனையோ உருவங்கள்..[/size][/size]

[size=2][size=4]நூற்றுக்கணக்கான தமிழ் அப்பாவிகள் அந்த முகாமை கடந்து போவதும் வருவதுமாக இருந்தார்கள்…[/size][/size]

[size=2][size=4]லொத்தர் யாருடைய தலையில் விழப்போகிறது..[/size][/size]

[size=2][size=4]” அடோ பொட்ட கண் பியதாச மொக்கத கறண்ட..” தூரத்தே யாரோ ஒரு ஆமிக்காரன் கேலி செய்வது கேட்டது..[/size][/size]

[size=2][size=4]கடிகாரத்தைப் பார்த்தான் ஐந்து நிமிடங்களுக்குள் அலுவலை முடித்துவிட்டு அடுத்தவன் கையில் துப்பாக்கியை கொடுக்க வேண்டும்…[/size][/size]

[size=2][size=4]அப்போதுதான் சாண நிறத்தில் சேலையணிந்த ராணியக்கா அவனுடைய துப்பாக்கி வளையத்திற்குள் மங்கலாகத் தெரிந்தாள்…[/size][/size]

[size=2][size=4]அவள் உடம்பிற்குள் ஏராளம் அசைவுகள்.. தாங்க முடியாத சுமைகளை ஏந்தியபடி வியர்க்க விறுவிறுக்க நடந்து கொண்டிருந்தாள்..[/size][/size]

[size=2][size=4]கடகத்தில் ஒரு கொத்து சோத்தரிசி, சூடை மீன், வெங்காயம்… மேலும் மூசி நடந்தாள்..[/size][/size]

[size=2][size=4]” ஐயோ என்ரை குஞ்சுகள் பாவம்.. பட்டினியால துடிச்சுப் போச்சுதுகள்… இண்டைக்காவது சமைச்சுக் குடுக்க வேணும்…”[/size][/size]

[size=2][size=4]ஒரு தாயின் வேகம்…[/size][/size]

[size=2][size=4]இராணுவம்… இன அழிப்புப் போர்… இந்தியா.. கொய்யாக்காய்… ஐ.நா.. நோர்வே..என்ன கோதரிக்கு இவைகள் இருக்கின்றன என்றே தெரியாத வாழ்வின் பிரதிநிதி அவள்…[/size][/size]

[size=2][size=4]கொலை வளையத்திற்குள் வந்துவிட்டாள்..[/size][/size]

[size=2][size=4]குருட்டுப் பியதாச தடுமாறினான்…. இவளையும் விட்டுவிட்டால்.. அடுத்து யாரும் தொலைவில் தெரியவில்லை.. வேலை முடிய ஒரு நிமிடம் இருந்தது…[/size][/size]

[size=2][size=4]” படீர்…ர்….ர்….” துப்பாக்கி அலறியது..[/size][/size]

[size=2][size=4]துப்பாக்கிக்குக் கிடைத்த அலறும் வாய்ப்புக் கூட ராணி அக்காவுக்கு கிடைக்கவில்லை.. மூளை சிதறி பூவரசம் கொப்பில் தொங்கியது கூட தெரியாது…[/size][/size]

[size=2][size=4]சோத்தரிசியும் சூடை மீனும் சுடு வெயிலில் சிதறிக்கிடந்தன..[/size][/size]

[size=2][size=4]இலங்காபுவத் இரவுச் செய்தி, ஒரு பெண் கரும்புலி சுடப்பட்டதாகக் கூறியபோது சில புத்தபிக்குகள் மகிழ்வோடு மண்டையைத் தடவியது, புத்தரை இன்னொரு தடவை நிர்வாணமாக்கியது…[/size][/size]

[size=2][size=4]சூடேறிய நினைவுக்கம்பி அத்தோடு முறிந்தது..[/size][/size]

[size=2][size=4]கீழே பார்த்தான்..[/size][/size]

[size=2][size=4]இப்போது ராணி அக்காவின் சேலை நிறத்தில் இருந்த பூச்சி அவசரமாக பறக்க சிறகை அகற்றியது..[/size][/size]

[size=2][size=4]அதன் மீது காலைப் போடலாமா.. இல்லை உயிருடன் விடலாமா…[/size][/size]

[size=2][size=4]இந்தப் பூச்சியின் அவசரத்திற்கும் அவனுடைய அவசரத்திற்கும் என்ன தொடர்பு..[/size][/size]

[size=2][size=4]” வேண்டாம்… அது தன்னுடைய பிரச்சனையை முடிக்க வேணும்..” காலை அப்படியே வைத்திருந்தான்…[/size][/size]

[size=2][size=4]ராணியக்கா பூச்சி அவசரமாக பறந்து போகிறது..[/size][/size]

[size=2][size=4]அவன் நடை தொடர்ந்தது.. மனசு இலேசாகி மிதந்தது..[/size][/size]

[size=2][size=4]சிங்கள இனவாத குருட்டு பியதாசாவிலிருந்து வேறுபட்டது மகிழ்வு தந்தது..[/size][/size]

[size=2][size=4]நமக்கு வேண்டாம் கொலைத் தொழில்..[/size][/size]

[size=2][size=4]ஏனென்றால்..[/size][/size]

[size=2][size=4]ஒரு பூச்சியை வாழவிடுவதில்தான் எத்தனை மகிழ்ச்சி..[/size][/size]

[size=2]----------------------------------------------[/size]

[size=2][size=4]கி.செ.துரை 02.07.2012[/size][/size]

[size=2]http://www.alaikal.com/news/?p=109210[/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நன்று.. :(

  • தொடங்கியவர்

[size=4]சாதாரண தமிழர்கள் அதியுயர் மென்போக்கு கொண்டவர்கள். [/size]

[size=1]

[size=4]பெரும்படை கொண்ட எல்லாளன், கெமுனுவிடம் தோற்றான். சோழர்கள், பார்ப்பனர்கள் சொல்லைக்கேட்டு ஆன்மீகவாதிகளானார்கள்.[/size][/size]

[size=1]

[size=4]வலிந்து தாக்குதல் பிழை. தற்பாதுகாப்பு தாக்குதல் சரி என்பதே எனது நிலை. தற்பாதுகாப்பு தாக்குதலும் வேண்டாம் என்று கூறும் பொழுது ... நிலை பதிதாபமாகிவிடும்.[/size][size=4]'ஒரு கன்னத்தில் யாரும் அறைந்தால் உன் மறுகன்னத்தை காட்டு' என்பதற்கு அமைய வாழும் தமிழனுக்கு நாடும் இல்லை வீடும் இல்லை. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தெளிவான உயிரோட்டமான பதிவு

நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் இந்தப் பக்கம் அகோதா அண்ணாட இணைப்பு வந்திருப்பதை பார்த்திருக்கிறன்..மிக்க நன்றி உங்கள் பகிர்வுக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]நல்ல பகிர்வு [/size]

நன்றி பகிர்வுக்கு.

[size=2][size=4]இலங்காபுவத் இரவுச் செய்தி, ஒரு பெண் கரும்புலி சுடப்பட்டதாகக் கூறியபோது சில புத்தபிக்குகள் மகிழ்வோடு மண்டையைத் தடவியது, புத்தரை இன்னொரு தடவை நிர்வாணமாக்கியது…[/size][/size]

:( :( :(

இப்படி தான் பல அப்பாவிகளை சுட்டுப்போட்டு புலி எண்டு சொன்னார்கள். :(

  • 3 weeks later...

மிகவும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.