Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனுராதபுரம் SPயின் சப்பாத்தை நக்கி காலில் விழுந்து கும்பிடும்வரை அரசியல் கைதிகள் தாக்கப்பட்டார்கள்

Featured Replies

அனுராதபுரம் SPயின் சப்பாத்தை நக்கி காலில் விழுந்து கும்பிடும்வரை அரசியல் கைதிகள் தாக்கப்பட்டார்கள்

வவுனியா சிறைக்குள் புகுந்த 15 முதல் 23 வரையிலான அரசாங்க பாதுகாப்புத் தரப்பின் குண்டர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளால் மயங்கிய நிலையில் இருந்த சிறைக் கiதிகளை கடுமையாக தாக்கியுள்ளனர். அங்கிருந்து வாகனங்களில் தூக்கி போடப்பட்ட கைதிகள் பிற்பகல் 1 மணியளவில் அனுராதபுரத்திற்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டு இரவு 11 மணிவரை இடைவிடாது தாக்கப்பட்டனர்.

அங்கு குடிபோதையில் இருந்த சிறைக்காவலர்களும் காவற்துறையினரும் சிறைச்சாலை சுப்ரின்டனின் கால் சப்பாத்தை நக்குமாறு தொடர்ச்சியாக தாக்கியுள்ளனர். ஒவ்வொருவராக காலில் விழுந்து கும்பிட்டு சப்பாத்தை நக்கிய பின்னும் தாக்கப்பட்டுள்ளார்கள்.

இதன் தொடர்ச்சியாக கடுமையான கிரிமினல் குற்றவாளிகளை கொண்டு வந்து அரசியல் கைதிகளின் முகங்களில் காறித் துப்புமாறு பணிக்கப்பட்டு மாறி மாறி கிரிமினல் கைதிகள் தமிழ் கைதிகளின் முகங்களில் துப்பியதோடு களைக்கும் வரை அடிக்கும்படி பணிக்கப்பட்டு உள்ளார்கள்.

அனைத்து கைதிகளையும் காலை நீட்டச் சொல்லி முழங்காலுக்கும் பாதத்திற்கும் இடையில் கடுமையாக தாக்கியதில் முழங்காலுக்கு கீழ் அனைவருக்கும் கட்டு போடப்பட்டுள்ளது. அனைவருக்கும் உடலின் உட்காயங்கள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் முதுகில் வட்டமாக பெரிய காயம் ஒன்று உள்ளது இதற்கு காரணம் பிஸ்ரலால் அவர் சுடப்பட்டதாக தெரியவருகிறது.

அனைத்து கைதிகளினதும் விலா எழும்பு முறிக்கப்பட்டுள்ளது. அனைவரதும் உடுப்புகள் அனுராதபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாற்று உடுப்புகள் இல்லை. ரத்தக்காயங்களுடன் 3 நாட்கள் மாற்றுடையின்றி விடப்பட்டனர்.

சந்தேகத்தின் பேரில் கைதான நிலையில் இப்போ அடித்துக் கொல்லப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த நிமல ரூபனின் கால்கள் நடுவால் கிளிக்கப்பட்டுள்ளது. இறப்பதற்கு முதல்நாள் இரவு உடலின் கண்டல் காயங்களில் இருந்து நீர் வழிந்தோடியிருக்கிறது. தான் இறக்கப் போவதாக இரவு முழுவதும் வேதனையால் துடித்துள்ளார். கால்களுக்கு இடையில் மரக் கட்டைகள் வைக்கப்பட்டு கால் கிளிக்கப்பட்டதால் இடுப்பு பகுதி பலமான சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தில் உள்ள மற்றும் ஒரு கைதியின் மண்டைப் பகுதி கடுமையாக தாக்கப்பட்டதனால் அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இவரது உயிரை காப்பது மிகவும் கடினம் என அனுராதபுரத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

றாகம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ள நால்வரில் ஒருவர் கோமா நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்தப் போராட்டத்தில் முன்னின்றவர்கள் என அரச பாதுகாப்பு குண்டர்களால் அடையாளம் காணப்பட்ட மூவரே போகம்பர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அங்கு அவர்கள் மிகக் கொடூர சித்திரவதைகளை எதிர் கொள்வதாகவும் சிறைச்சாலை அதிகார மட்டத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதிகள் அனைவரது உடல்களிலும் செயின் மற்றும் சவுக்கு போன்ற பார்களால் அடிக்கப்பட்ட தழும்புகள் ரத்தக் காயங்கள் காணப்படுகின்றன.

இந்த நிலையில் இனி தம்மை அனுராதபுரத்திற்கு மாற்ற வேண்டாம் என்றும் மகரவிலேயே தாம் செத்து விடுகிறோம் எனவும் கைதிகள் அலறுகின்றனர். வவுனியாவில் இருந்து அனுராதபுரத்திற்கு ஏற்றிய போது அனைவரையும் அடித்தே கொல்லப் போகிறோம் எனக் கூறி இலங்கை அரசாங்க பாதுகாப்பு தரப்பின் குண்டர்கள் மிரட்டியுள்ளனர்.

இதனால் தமது உயிர்களைக் காப்பாற்றுமாறும் அல்லது மகர சிறையிலேயே சமாதி ஆக்குமாறும் கைதிகள் கோரி உள்ளனர்.

கடுமையான உயிர் பிரியக் கூடிய ஆபத்தான காயங்களுடன் இருக்கும் அவர்களுக்கு உரிய உடன் வைத்திய சிகிச்சைகள் அளிக்காவிடின் ஏனையவர்களும் கொல்லப்படும் நிலை காணப்படுவதாக சிறைச்சாலைகளோடு தொடர்புடைய மனிதாபிமானம் மிக்க அதிகாரி ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளார். உடனடியாகவே மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச சமூகம் தலையிட்டு இவர்களை உரிய சிகிச்சைக்கு வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பாதுகாப்பு செயலாளரும் இலங்கையின் நிஜ எஜமானுமான கோத்தாபய ராஜபக்ஸவுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/79852/language/ta-IN/article.aspx

.

[size=4]இன்று மூன்றுவருடங்கள் கடந்த நிலையில் தனித்தமிழீழம் தவிர வேறு ஒன்றும் தமிழர் பாதுகாப்பை உறுதி செய்யமுடியாது.[/size]

[size=4]உலகிலே இப்படி ஒன்று நடந்தது சீனாவிலோ இல்லை அப்கானிஸ்தானிலோ அல்ல.[/size]

[size=4]எந்த ஒரு நாட்டிற்கு பயங்ககரவாதத்திற்கு எதிரான என்ற இனவழிப்பு யுத்தத்திற்கு பல உலக நாடுகளால் உதவப்பட்டு இறுதியில் அந்த அரச பயங்கரவாதிகளிடமே புனர்வாழ்வை கொடுத்தனவோ அந்த நாட்டில்.[/size]

குற்றச்செயல்களை ஆதாரப்படுத்தாத வெறும் புலம்பல்களால் ஒன்றும் நடக்கப்போவது இல்லை.

சிறீ லங்காவில் சிறையதிகாரிகள் கையூட்டுக்களுக்காக ஏங்குபவர்கள். கையூட்டு மூலம் சிறீ லங்காவில் பல காரியங்களை ஆற்றமுடியும்.

இவ்வாறே, பாரிய குற்றங்களை புரிந்த சிங்களக்கைதிகளும் பணத்திற்கு எதையும் செய்யக்கூடியவர்கள்.

சிறையதிகாரிகள், சிங்கள சிறைக்கைதிகள் இவர்களுடன் இரகசிய தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்கு தேவையான கையூட்டை கொடுத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக குற்றங்கள் இழைக்கப்படுவதை வீடியோ பதிவுகள், புகைப்படங்கள் மூலம் ஆதாரப்படுத்த வேண்டும்.

இவ்வாறே சிறையினுள் வாழ்கின்ற கைதிகளிடம் நவீன புகைப்பட, வீடியோ கருவிகளை கொண்டு சென்று சேர்ப்பிக்கவேண்டும். அவை அவர்களுக்கெதிராக குற்றங்கள் இழைக்கப்படும்போது அவற்றை ஆதாரப்படுத்துவதற்கு உதவலாம்.

இப்போது எத்தனையோ வகையான நுண்ணிய, பார்வைக்கு எட்டாத wireless கமெராக்கள் உள்ளன. இவற்றை சிறையில் இரகசியமாக பொருத்தினால் அரசியல் கைதிகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை சாட்சிப்படுத்தமுடியும். சாட்சிப்படுத்தப்படும் விடயங்களை உடனடியாக வெளிப்படுத்தாது சிறிது காலத்திற்கு சேர்த்துவைத்து பின்னர் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், ஊடங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

எதிர்காலத்தில் தொழில்நுட்ப போரின் பங்கு தமிழரின் இருப்பை சிறீ லங்கவில் தக்கவைத்துக்கொள்ள உதவக்கூடும். அதேசமயம், சிறீ லங்கா சிறைகளினுள் நடைபெறும் இவ்வாறான சம்பவங்கள் திட்டமிட்ட, அப்பட்டமான தமிழர்களுக்கு எதிரான உளவியல் போர் என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை.

ஊடங்கள் புலம்பும்வகையில் செய்திகளை பதியாது, இப்படியான விடயங்களை சர்வதேச சமூகத்திற்கு வெளியில் வெளிச்சப்படுத்தும் வகையில் என்ன செய்யலாம் எனும் வகையில் செயற்படவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]ஒவ்வொரு நாளும் இலங்கையில் [/size][size=1]

[size=5]எங்கோ ஒரு இடத்தில் சடலம் [/size][/size][size=1]

[size=5]மீட்கப்படுகிறது.இது யாருடைய சடலம்?[/size][/size][size=1]

[size=5]சிறையில் இப்படி நடக்கிறது.கொஞ்சம் கொஞ்சமாய் [/size][/size][size=1]

[size=5]தமிழரை அழிப்பதையே சிங்களம் செய்கிறது.இப்போதாவது [/size][/size][size=1]

[size=5]முழுத்தமிழரும் ஒன்றாகி உலகை கேட்கவேண்டும் அல்லது .[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் பார்க்க கேட்க பராமரிக்க ஒருத்தர் இருந்தார்

தலையில் போட்டுவிட்டு வாழாதிருந்தோம்.

பணிகளைச்செய்ய விடாது

முண்டினோம்

மோதினோம்

துளைத்தெடுத்தோம்

இன்று சிங்களவன் தொடுவானா எம்மை அவரிருந்தால்....???

காலை தொடு என்று சொல்லுமுன் பிரபாகரன் வந்து போகமாட்டாரா அவன் கண்ணில்???

ஏதோ தெரியவிலல்லை

இன்று கரும்புலிகள் நாள்

இதைபப்பார்த்ததும் மில்லர் கண்ணுக்குள் நிற்கிறார்.

விசுகு, சும்மா அங்கலாய்ப்பதால் எதுவும் நடக்கப்போவது இல்லை. தலைவர் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற படுகொலைகள் நீங்கள் அறியாததா என்ன? என்ன செய்யமுடிந்தது? தீபாவளி தினத்தில் சிறீ லங்கா சிறையில் (பிந்துருவேவ) தமிழ்க்கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்கள். குற்றவாளிகளைக்கண்டுபிடித்து தண்டிக்கமுடிந்ததா?

என்னைப்பொறுத்தவரையில் இப்படியான பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதற்கு ஓர் திட்டத்தை செய்யலாம்.

அதாவது தமிழர்களுக்கு எதிராக சிறீ லங்காவில் நிகழ்த்தப்படும் குற்றங்களை ஆதாரங்களுடன் சாட்சிப்படுத்துவதற்கு ஓர் உளவு அமைப்பை ஆரம்பிக்கலாம். இந்த உளவு அமைப்பு மூலம் பல்வேறு வகையான குற்றங்களை வெளி உலகு அறியும் வகையில் அம்பலப்படுத்த வேண்டும். நவீன தொடர்பாடல் தொழிநுட்பங்களை மையமாகக்கொண்டு இயங்கக்கூடிய இந்த உளவு அமைப்பு மூலம் நீண்டகால நோக்கில் சிறீ லங்கா பெளத்த பேரினவாதத்திற்கு நல்லதோர் படிப்பினையை வழங்கமுடியும்.

அமெரிக்க இராணுவத்தினால் ஈராக் சிறையினுள் செய்யப்பட்ட பாரிய குற்றங்கள் வெளியுலகுக்கு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்படமுடியும் என்றால் சிறீ லங்கா சிறைகளில் தமிழ்க்கைதிகளுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை ஏன் ஆதாரத்துடன் வெளியுலகுக்கு அம்பலப்படுத்தமுடியாது?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதங்கம் தான் எனதும்

நான் நடந்து முடிந்தவற்றை நினைத்து ஏங்குகின்றேன்

நீங்கள் நடக்கவேண்டியவற்றை பொறுமையோடு சொல்கிறீர்கள்

இனி உங்கள் கையில் (இளையோர்) தான் எமது இனத்தின் எதிர்காலம்

நிச்சயம் நான் சாகும்வரை உங்களோடு நிற்பேன்.

அடுத்த படியை ஓன்றாக நின்று வைப்பொம்.

சிங்களம் தனது அக்கிரமங்களை நிறுத்தப்போவதில்லை.

எனவே வேறு வழி எமக்கில்லை.

அக்கிரமங்களை வெளியில் கொண்டுவர ஒன்று சேர்வோம்

[size=4]இந்த உலகத்திற்கு, அதாவது ஆட்சியில் இருப்பவர்களுக்கு, தாயகத்தில் நடப்பவை எல்லாமே தெரியும். ஒபாமவுக்கோ இல்லை மன்மோகன் சிங்கிற்கோ இல்லை பான் கி மூனுக்கோ நிலைமைகள் எம்மை விட நன்றாகவே தெரியும். [/size]

[size=4]கேள்வி என்னவென்றால் அவர்கள் அணுகுமுறையில் எவ்வாறு மாற்றம் கொண்டுவரலாம்? என்பதே.[/size]

[size=4]சாதாரண மேற்குலக இந்திய மக்கள் மத்தியில் விழிப்புணர்வை கொண்டுவந்தால் சில மாற்றங்கள் நடக்கலாம் ( உதாரணத்திற்கு பொருளாதார தடை). இந்த நாடுகள் நேரடியாக இராணுவ தலையீட்டில் இல்லாத படியால் [/size]

[size=4](உதாரணம் அப்கானிஸ்தான்) அதை விட பெரிதாக ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது. [/size]

[size=4] [/size]

[size=4]எம்மால் செய்யவேண்டியது, செய்யக்கூடியது நாம் வாழும் நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள், மனித ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில் தொடர்ச்சியான விழிப்புணர்வை (பரப்புரையை) செய்வதே! [/size]

[size=4] [/size]

[size=4]சனல் நான்கு போன்ற ஊடகங்கள் எவ்வாறு பல ஒளிப்படங்களை பெற்றனவோ அந்த வழியில் அங்கு நடக்கும் இனவழிப்பு சம்பவங்களை பெற உதவலாம்.[/size]

[size=4] [/size]

[size=4]அடுத்த மனித உரிமை தொடருக்கு சிங்களத்திற்கு ஆதரவு தரக்கூடிய நாடுகளுடன் இணைந்து செயல்படல் வேண்டும்.[/size]

[size=4] [/size]

[size=4]இலங்கையில் நடக்கவுள்ள பொதுநலவாய (காமன்வெல்த்) நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும்.[/size]

புலி வடலீக்கை மூத்திரம் பெய்தாலும் சர்வதேசத்துக்கு தெரியுமாம் எண்டீனம் இது தெரியாதோ நாங்கள் ஆதாரப்படுத்த...??

ஒண்டு மட்டும் உண்மை... இதுவும் கூட சிலரை மகிழ்ச்சிப்படுத்தும்...

  • கருத்துக்கள உறவுகள்

புலி வடலீக்கை மூத்திரம் பெய்தாலும் சர்வதேசத்துக்கு தெரியுமாம் எண்டீனம் இது தெரியாதோ நாங்கள் ஆதாரப்படுத்த...??

ஒண்டு மட்டும் உண்மை... இதுவும் கூட சிலரை மகிழ்ச்சிப்படுத்தும்...

அப்ப நீங்கள் சர்வதோசத்திற்கு சொல்ல மாட்டிங்கள் அவங்களா தேடி பிடிக்கவேணும் சர்வதேசத்தை யாழிலை ஒரு பிடி பிடிக்கவேணும் அதோடை அவங்கள் பயந்து நடுங்கவேணும்

அப்ப நீங்கள் சர்வதோசத்திற்கு சொல்ல மாட்டிங்கள் அவங்களா தேடி பிடிக்கவேணும் சர்வதேசத்தை யாழிலை ஒரு பிடி பிடிக்கவேணும் அதோடை அவங்கள் பயந்து நடுங்கவேணும்

கிகிகி..தவளை கிணத்துக்கை பிறந்தா அதுதான் அதுக்கு உலகம்.நீங்கள்தான் தவளையைதேடிவந்து கிணத்துக்கை குதிக்கவேணும்.

Edited by நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

மௌனத்தைக் கலைத்தால்தான் இனிச் சரிவரும்.. :rolleyes:

அதாவது, தாயகத்து மற்றும் புலம்பெயர் தமிழர்கள் தங்கள் மௌனத்தைக் கலைத்துவிட்டு சர்வதேசத்திற்குக் கேட்கும்படி உரக்கச் சொல்லவேண்டும்.. :D

அப்ப நீங்கள் சர்வதோசத்திற்கு சொல்ல மாட்டிங்கள் அவங்களா தேடி பிடிக்கவேணும் சர்வதேசத்தை யாழிலை ஒரு பிடி பிடிக்கவேணும் அதோடை அவங்கள் பயந்து நடுங்கவேணும்

ஒரு வேலை செய்யுங்கோவன்... உதை எனக்கு சொன்ன அறிஞர் அர்சுணை ஒருக்கா விளக்கமாக கேழுங்கோவன்... ஏனெண்டா பாருங்கோ எனக்கு விளக்கம் கொஞ்சம் காணாது...

நீங்கள் அறிஞர் பெருமக்கள் எல்லாமா சேர்ந்து ஒரு பட்டிமண்றங்களை வைச்சு எப்படி செயற்படவேணும் எண்டு விளக்கமா எனக்கு சொன்னீயள் எண்டால் சிறப்பாய் செயற்படுவன்...

இதிலை எனக்கு பெருமகிழ்ச்சி தாற சிறப்பு என்ன எண்டால் செய்யிறதுக்கு தயாரா இருக்கிற ஆக்களுக்கு அறிவுரை சொல்ல பேரளவு மக்கள் தயாரா இருக்கிறதை நினைக்க.. ஆகா என்ன அருமையாக இருக்கு...

கிகிகி..தவளை கிணத்துக்கை பிறந்தா அதுதான் அதுக்கு உலகம்.நீங்கள்தான் தவளையைதேடிவந்து கிணத்துக்கை குதிக்கவேணும்.

பார்றா அண்ணனோட விபரத்தை...

கற்பூரம் ஜயா கற்பூரம் :D .

Edited by நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

கைதியின் மரணம் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை நடத்த வேண்டும்:சுமந்திரன் _

வைத்தியசாலையில் மரணமான தமிழ் அரசியல் கைதியின் மரணம் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை நடத்த வேண்டுமென்றும் இச்சம்பவத்தை கடுமையாக கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று புதன்கிழமை சபையில் தெரிவித்தது.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டம் ஆகியவற்றின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கூட்டமைப்பின் எம்.பி. எஸ். சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட தமிழ் சிறைக் கைதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளினதும் பொலிஸாரினதும் தாக்குதலால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகையிலேயே இக்கைதி மரணமாகியுள்ளார்.

இச்சம்பவமானது மனிதாபிமானமற்ற செயலாகும். இதற்கு எமது கடுமையான எதிர்ப்பை வெளியிடுகின்றோம்.

சில நாட்களுக்கு முன்பு, வவுனியாசிறைச்சாலையிலிருந்து மாற்றப்பட்ட கைதிகளில் ஒருவரான நிமல ரூபன் என்பவரே ராகம வைத்தியசாலையில் (நேற்று புதன்கிழமை) மரணமாகியுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளாகியே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறானதோர் சூழ்நிலையிலேயே இவர் மரணமாகியுள்ளார்.

அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து நடத்திய சோதனைகளையடுத்து அங்கிருந்த பல கைதிகள் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தையடுத்து வவுனியா சிறைச்சாலையிலிருந்து அநுராதபுரம் சிறைச்சாலைக்கு இக்கைதிகள் மாற்றப்பட்டனர்.

அத்தோடு இச்சம்பவத்தில் காயமடைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டவர்களில் சிலர் அங்கிருந்து மஹர உட்பட போகம்பறை சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.

காயமடைந்த கைதிகள் ராகம உட்பட அருகிலுள்ள ஏனைய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சிறைக்கைதிகளாக அனுமதிக்கப்பட்டிருந்த போதே இன்று (நேற்று) கைதியொருவர் மரணமாகியுள்ளார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அதிகாரிகளால் தாக்கப்பட்டு மேற்படி இக்கைதி மரணமாகியுள்ளார்.

இச்சம்பவமானது மனிதாபிமானமற்ற செயலாகும். இதற்கு எமது கடுமையான எதிர்ப்பை இங்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இச்சபையில் கேள்வி எழுப்பியபோது நீண்ட காலமாக சிறையிலிருப்பவர்கள் தொடர்பாக ஒரு மாதத்திற்குள் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென சபை முதல்வர் பதிலளித்தார்.

அத்தோடு, இவ்வாறான கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் அல்லது விரும்பினால் புனர்வாழ்வளிக்கப்படும் ஏனையவர்கள் தொடர்பில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு, வவுனியா, மன்னார், அனுராதபுரம் போன்ற பகுதிகளில் விசேட நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கு வழக்குகள் விசாரிக்கப்படுமென்றும் சபை முதல்வர் தெரிவித்திருந்தார்.

ஒரு மாதத்திற்குள் கைதிகள் விடயத்திற்கு தீர்வை காண்போம் என அரசாங்கம் உறுதியளித்திருந்த சூழ்நிலையிலேயே மேற்படி துர்ப்பாக்கியமான நிலைமை உருவாகியுள்ளது.

எனவே, இச்சம்பவத்தில் ஏன் பெருமளவானோர் காயமடைந்தனர். இந்த மரணம் எக்காரணத்தால் ஏற்பட்டது. இவை தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

அத்தோடு மேற்படி கைதிகளை சந்திப்பதற்கு சட்டத்தரணிகள் அனுமதி கேட்டுள்ளனர்.

இக்கைதிகள் எங்கெங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது தொடர்பில் அவர்களது குடும்பத்தினருக்கும் விபரங்கள் தெரியாதென்றும் கூட்டமைப்பு எம்.பி. எஸ். சுமந்திரன் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39187

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரிகள் தாக்கியதிலேயே கைதி நிமலரூபன் மரணித்தார் நீதியான விசாரணையை உடன் நடத்துமாறு நாடாளுமன்றில் கூட்டமைப்பு அவசர கோரிக்கை

பொலிஸாரினதும் சிறைச்சாலை அதிகாரிகளினதும் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் அரசு உரிய வகையில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இது மனிதாபிமானமற்ற செயல் என சபையில் குமுறியதுடன், இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளது.

நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்/ சட்டம் மற்றும் முத்திரைத் தீர்வை (விசேட ஏற்பாடுகள் சட்டம்) ஆகியவற்றின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கூட்டமைப்பின் சார்பில் மேற்படி சம்பவத்துக்கு சுமந்திரன் எம்.பி. கடும் கண்டனத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

வவுனியா சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளில் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளினதும் பொலிஸாரினதும் தாக்குதல்களினால் காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் மஹர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இது விடயம் தொடர்பில் அரசு உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்த மனிதாபிமானமற்ற செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

வவுனியா சிறைச்சாலையிலிருந்து மாற்றப்பட்ட கைதிகளில் ஒருவரான நிமலரூபன் என்பவரே ராகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளாகி மேற்படி கைதி சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

வவுனியா சிறைச்சாலையில் அண்மையில் நடைபெற்ற சம்பவத்தையடுத்து இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து அங்கு முன்னெடுத்த நடவடிக்கைகளையடுத்து சிறையிலிருந்த கைதிகள் பலர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து வவுனியா சிறைச்சாலையிலிருந்த கைதிகள் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த கைதிகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகளில் சிலர் மஹர மற்றும் போகம்பரை ஆகிய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர். அத்துடன், காயமடைந்தவர்கள் ராகம மற்றும் அண்மையில் உள்ள வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையிலேயே நிமலரூபன் என்ற கைதி படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு அதிகாரிகளால் தாக்கப்பட்டமையாலேயே நிமலரூபனக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந் மனிதாபிமானமற்ற செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

கைதிகள் விவகாரத்திற்கு ஒரு மாதத்தில் தீர்வு காண்பதாக அரசு கூறியது உறுதியளித்தது. இந்நிலையிலேயே மேற்படி சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

வவுனியா சம்பவத்தையடுத்து ஏராளமானோர் காயமடைந்தனர் என்றும், எதனால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்றும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாம் அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

http://onlineuthayan.com/News_More.php?id=232481193205740434

[size=5]ஏன் சட்ட விரோதமாக நடந்த சிங்களக் காடையர்களை நீக்க வேண்டும் என்று கேட்கவில்லை?

ஏன் தமிழர்கள் சிங்களக் காடையர்கள், இஸ்லாமிய ஈனர்கள் பொறுப்பிலுள்ள சிறைகளில் பாதுகாப்பில்லை என்பது பல தசாப்பத்தங்களாக (குட்டிமணி கொலைகள் போன்றவை) உறுதிபடுத்தப்பட்டதால், விடுதலை செய்யும் வரை தமிழ் அதிகாரிகள் பொறுப்பிலுள்ள சிறைகளுக்கு மாற்றவேண்டும் என்று கேட்கவில்லை?

ஏன் ஒரு கோடி நட்ட ஈடு வழங்க வேண்டும் என்று கேட்கவில்லை?

சுமந்திரன் போன்று ஏமாற்றுப் பிழைப்பு நடத்தும் கேனையர்களுக்கு, அரைவேக்காட்டு சட்டத்தரணிகளுக்கு சட்டவலுவுள்ள இவ்வாறான கேள்விகளை கேட்டகத் தெரியாது![/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.