Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூர் சந்தை போல யாழ். சந்தை களைகட்டியது

Featured Replies

  • தொடங்கியவர்

தும்பளையானின் கருத்துக்களுடன் நானும் ஒத்துப்போகிறேன்...

இது எங்களுடைய பிரச்சனையே தவிர அவர்களுடையது அல்ல, நாங்கள் இன்னும் மாறவில்லை 4 லட்சம் என்பது 4000 டொலர் என்று நினைக்க நாங்கள் இன்னும் தயாராகவில்லை. 4000 டாலரில் இல் என்ன விழா இங்கே நடத்தலாம் என்று யோசித்தால் இந்த 4 இலச்ச குழப்பம் வராது...

மற்றது யாழில், அல்லது இலங்கையில் புழங்குகிற முழுப்பணத்திற்கும் சொந்தக்காரர் நாங்கள்தான் என்று நினைக்கவில்லை. எனது மிக நெருங்கிய உறவினர் அண்மையில் இலங்கை போனவர், சொன்னார் இப்ப தனது வயதில் உள்ள 25 -26 வயதில் (தனக்கு தெரிந்த ) கம்பஸ் இல் படித்த எல்லா பொறியியல் ஆளர்களுக்கும் வேலை கிடைத்துள்ளதாம்,(50000 - 70000 மட்டில்) ஆனால் ஒரு பத்து வருடத்துக்கு முந்திய நிலை அதுவல்ல.

[size=4]புலம்பெயர் வாழ் தமிழர்களில் அதிகமானோர் இருப்பது டொராண்டோ, கனடாவில். அங்கே அதிகார புள்ளிவிவகாரப்படி, சராசரி வீடு வருமானம் - 40000 டாலர்கள். அப்படிப்பார்க்கும்பொழுது ஒரு விழாவிற்கு போறவார காசு, அங்குள்ள செலவுகள் எனப்பார்க்கும்பொழுது எத்தனைபேர் 'கடனில்தான்' விலாசம் காட்டுகிறார்கள் என எண்ணத்தோன்றுகின்றது. [/size]

[size=4]பத்துவருடத்திற்கு முன்னர் 30000 உழைத்தாலும் அன்றைய பணம் இன்றைய பணத்துடன் ஒப்பிடும்பொழுது வாங்குதிறன் கூடுதலாக இருந்தது என எண்ணுகிறேன். [/size]

  • Replies 68
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நீங்கள் கூறுவது போன்று மக்கள் உள்ளார்கள். ஆனால் அவர்கள் மொத்த சனத்தொகையில் எத்தனைவீதம்? ஐந்து வீதம்? இல்லை ஐம்பது வீதம்? [/size]

[size=1][size=4]ஐம்பது வீதமாக இருக்கவேண்டும் என்பதே எனது ஆசை. [/size][/size]

[size=1][size=4]ஐந்து வீதம் அளவில் எந்த பொருளாதார தடைகள், போர் உக்கிரமான சூழல் போன்றகாலங்களில் கூட மகிழ்வாகத்தான் வாழ்ந்தார்கள். ஒரு முப்பது வருடகால யுத்தம் பெயரளவில் முடிந்த நிலையில் ஒரு பொருளாதார வேக வளர்ச்சி இருப்பது எங்கும் உள்ளது. அந்த வளர்ச்சி காத்திரமனதாக இல்லாவிட்டால் அது காற்றடித்த 'பலூனகி' விடும். [/size][/size]

தற்போது குறைந்த சதவீதம் தான். ஆனால் இந்த எண்ணிக்கை போகப் போக அதிகரிக்கும். ஓரிருவர் துணிந்து முதலிட்டால் மற்றவர்களும் செய்வார்கள். ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாணக்கியமாக செய்ய வேண்டியது கட்டாயம், இல்லாவிட்டால் பல பேருக்கு பங்கு கொடுக்க வேண்டி வரும். ரயில் பாதையும் போட்டு ரயிலும் ஓடத் தொடங்கும் போது இந்த ஏற்றுமதி அளவு அதிகரிக்கும் அத்துடன் குறைந்த செலவிலே பொருட்களை தெற்கிற்கு அனுப்ப முடியும்.

பருத்தித்துறை ஓராங் கட்டிச் சந்தியிலே இயக்கத்தின் பூங்கா இருந்த காணி மூன்றாகப் பிரிச்சு விலைக்கு வந்திருக்கு. விலை கோடிகளில், அதற்கும் பலத்த போட்டி. எனக்கு தெரிந்த ஒரு பகுதி அதை வாங்கி அதிலே food city ஒன்றை போடும் யோசனையில் இருக்கிறார்கள். போட்டி காரணமாக காணி விலையும் ஏறிக்கொண்டே போகுது.

உங்களின் பல விடயங்களுடன் உடன் படுகிறேன் ஆனால் இலங்கைத் தீவினுள் அடுத்த பத்து வருடங்களில் தமிழர்களால் எதுவிதமான காத்திரமான அரசியல் போராட்டங்களும் மேற்கொள்ளப் படப்போவதில்லை. அப்படி மேற்கொள்ளப்பட்டாலும், அது வெற்றியளிக்கப் போவதும் இல்லை.

போராட்டம் என்பது தமிழீழத்துக்கான போராட்டமாக மட்டுமே இருக்க போகின்றது என நினைப்பது தவறு என நினைக்கின்றேன். கடந்த வாரங்களில் மக்கள் தன்னெழுச்சியாக போராடிய 'முருகண்டி நில மீட்பு போராட்டம்' மிகச் சிறந்த சான்று மக்களின் மனநிலைக்கு. மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்துக்குத் தான் அரசியல் கட்சிகள் பின்ன்னர் தலமை தாங்க முற்பட்டன. இந்தப் போராட்டம் பொதுவாக பொருளாதாரத்தில் மிகப் பின்தங்கிய முருகண்டி மக்களால் நடத்தப்பட்டது என்பது மிகக் கவனிக்கத்தக்கது

கீழே உள்ளது உங்களுக்கு இல்லை தும்.

எமது பல கருத்துக்கள் யாழ்ப்பாண மையத்தைத் தான் சுற்றி வருகின்றன. யாழுக்கு போனவர்களின் கருத்துகள், யாழ் மக்களின் போராட்டங்கள் என்பனவற்றை பற்றிய மையக் கருத்துகள் தான். இன்று கிழக்கில் உள்ள தமிழர்களின் கருத்துகள் மிகக் குறைவாகவே வெளி வருகின்றன. யாழ்ப்பாணம் தவிர்ந்த மற்ற இடங்களில் தான் போராட வேண்டிய முனைகள் முனைப்புக் கொள்கின்றன. ஏனெனில் இவர்கள் தான் தமிழீழத்திற்கான தேவையை தமிழ் தேசியத்துக்கு ஊட்டியவர்கள். யாழ்ப்பாணம் 100 வீதம் சிங்கபூராக மாறினாலும் கூட தமிழீழத்துக்கான தேவை இவர்களால் தான் நாளை எமக்கு உணர்த்தப்பட போகின்றது.

எனவே வெறுமனே யாழ்ப்பாணம் போகும் மக்களின் உணர்வுகளை மட்டுமே வைத்து எம்மால் ஈழத் தேசியம் பற்றி கணிப்புகளை மேற்கொள்ள முடியாது என நினைக்கின்றேன்

  • தொடங்கியவர்

உங்களின் பல விடயங்களுடன் உடன் படுகிறேன் ஆனால் இலங்கைத் தீவினுள் அடுத்த பத்து வருடங்களில் தமிழர்களால் எதுவிதமான காத்திரமான அரசியல் போராட்டங்களும் மேற்கொள்ளப் படப்போவதில்லை. அப்படி மேற்கொள்ளப்பட்டாலும், அது வெற்றியளிக்கப் போவதும் இல்லை. பல மக்களுக்கு இது நன்கு தெரியும். அத்துடன் "வாழ விடு" கொள்கையிலே பலர் உறுதியாக உள்ளார்கள். [size=5]நான் கதைத்த சந்தித்த எவருமே இன்னொரு போராட்டத்தை விரும்பவில்லை, அத்துடன் புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்களையும் அவர்கள் விரும்பவில்லை என்பதே கசப்பான உண்மை. [/size]புலம் பெயர் பொருளாதார உதவிகளை நிறுத்தினாலும் எமது மக்களின் வாழ்க்கை நீண்டகாலத்தில் அவளவு மாற்றமடையாது. வேறு விதமான வாழ்க்கை முறைகளுக்கு தங்களை மாற்றி விடுவார்கள்.

[size=4]உலகத்தில் எந்த நாடும் இல்லை சமூகமும் போரை விரும்புவதில்லை. தமிழ் மக்களும் என்றுமே போரை விரும்பியதில்லை. ஆனால் உலக நாடுகளில் அவற்றின் முதன்மை செலவாக வரவு-செலவு திட்டத்தில் இருப்பது - பாதுகாப்பு செலவே. [/size]

[size=4]"புலம்பெயர் மக்களின் போராட்டங்களை அவர்கள் விரும்பவில்லை" - அவர்கள் விரும்பாவிட்டாலும் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவைகள் உள்ளன (அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள், ஆசிரியர் தலையங்கங்கள்...) . முன்னெடுக்காவிட்டால், இன்னரும் இருபது வருடத்தில் கேட்பார்கள், "ஏன் நாங்கள் அழிக்கப்படும்பொழுது நீங்கள் சும்மா இருந்தீர்கள்?' என்று.[/size]

  • தொடங்கியவர்

தற்போது குறைந்த சதவீதம் தான். ஆனால் இந்த எண்ணிக்கை போகப் போக அதிகரிக்கும். ஓரிருவர் துணிந்து முதலிட்டால் மற்றவர்களும் செய்வார்கள். ஆர்ப்பாட்டம் இல்லாமல் சாணக்கியமாக செய்ய வேண்டியது கட்டாயம், இல்லாவிட்டால் பல பேருக்கு பங்கு கொடுக்க வேண்டி வரும். ரயில் பாதையும் போட்டு ரயிலும் ஓடத் தொடங்கும் போது இந்த ஏற்றுமதி அளவு அதிகரிக்கும் அத்துடன் குறைந்த செலவிலே பொருட்களை தெற்கிற்கு அனுப்ப முடியும்.

பருத்தித்துறை ஓராங் கட்டிச் சந்தியிலே இயக்கத்தின் பூங்கா இருந்த காணி மூன்றாகப் பிரிச்சு விலைக்கு வந்திருக்கு. விலை கோடிகளில், அதற்கும் பலத்த போட்டி. எனக்கு தெரிந்த ஒரு பகுதி அதை வாங்கி அதிலே food city ஒன்றை போடும் யோசனையில் இருக்கிறார்கள். போட்டி காரணமாக காணி விலையும் ஏறிக்கொண்டே போகுது.

[size=4]அண்மையில் யாழில் உள்ள பொருளாதார ஆய்வாளர் எழுதிய இந்தக்கட்டுரையை தயவு செய்து ஒரு தரம் வாசியுங்கள். அவர்கள்(சிங்களவர்கள்) உருளைக்கிழங்கு அறுவடை காலத்தில் யாழிற்கு உருளைக்கிழங்கை ஏற்றுகிறார்கள்: [/size]http://www.yarl.com/forum3/index.php?showtopic=80651&st=20

[size=1]

[size=4]கிட்டத்தட்ட நாலு இலட்சம் மக்கள், அவர்களின் உறவுகளில் ஒரு இலட்சம் புலம்பெயர்ந்த நிலையில், இஸ்ரேலை விட ஒரு சின்ன இடத்தில் அதிலும் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள், சிங்கள குடியேற்றங்கள். ஆம், நியூயோர்க்கின் மான்ஹாட்டன் தான் யாழ்ப்பாணம்![/size][/size]

[size=1]

[size=4]ஆம், உலகில் நிலத்தின் / வீட்டின் விலை ஏறுவதும் இறங்குவது வழமை. முன்னர் கொழும்பில் ஏறியது. இப்பொழுது யாழில் ஏறுகின்றது. என்னுடைய வாதம் - இது அத்திவாரம் அற்ற ஆரோக்கியம் இல்லாத விலையேற்றம்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உலகத்தில் எந்த நாடும் இல்லை சமூகமும் போரை விரும்புவதில்லை. தமிழ் மக்களும் என்றுமே போரை விரும்பியதில்லை. ஆனால் உலக நாடுகளில் அவற்றின் முதன்மை செலவாக வரவு-செலவு திட்டத்தில் இருப்பது - பாதுகாப்பு செலவே. [/size]

[size=4]"புலம்பெயர் மக்களின் போராட்டங்களை அவர்கள் விரும்பவில்லை" - அவர்கள் விரும்பாவிட்டாலும் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவைகள் உள்ளன (அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள், ஆசிரியர் தலையங்கங்கள்...) . முன்னெடுக்காவிட்டால், இன்னரும் இருபது வருடத்தில் கேட்பார்கள், "ஏன் நாங்கள் அழிக்கப்படும்பொழுது நீங்கள் சும்மா இருந்தீர்கள்?' என்று.[/size]

போராட்டம் பற்றிய அவர்களின் அபிப்பிராயங்கள், அபிலாசைகள், குரல்கள் சரியாக வெளிக்கொண்டு வரப்பட்டதா என்பதே எனது கேள்வி. அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை அவர்களிடம் மட்டுமே உள்ளது எனக் கருதுபவன் நான். அவர்கள் TNA இற்கு வாக்களித்ததன் மூலம் தங்கள் குரலை வெளிப் படுத்தினார்கள் என சிலர் கூறலாம், ஆனால் TNA யின் தற்போதைய நிலை எம் அனைவரிற்கும் தெரியும் தானே.

  • தொடங்கியவர்

போராட்டம் பற்றிய அவர்களின் அபிப்பிராயங்கள், அபிலாசைகள், குரல்கள் சரியாக வெளிக்கொண்டு வரப்பட்டதா என்பதே எனது கேள்வி. அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை அவர்களிடம் மட்டுமே உள்ளது எனக் கருதுபவன் நான். அவர்கள் TNA இற்கு வாக்களித்ததன் மூலம் தங்கள் குரலை வெளிப் படுத்தினார்கள் என சிலர் கூறலாம், ஆனால் TNA யின் தற்போதைய நிலை எம் அனைவரிற்கும் தெரியும் தானே.

[size=4]அந்த மக்கள் தான் ஐம்பதுகளில் சத்தியாக்கிரகத்தை முன்னெடுத்தார்கள். எழுபதுகளில் ஆயுதப்போராட்டத்தை சில அரசுகளின் ஆதரவோடு ஆரம்பித்தார்கள். [/size]

[size=4]இன்று அதே காரணிகள் அன்றைய காலத்தை விட பலமாக உள்ளன. எனவே நாளை போராட்டம் தொடரும் அந்த மக்களால், ஆனால் அது வேறு வடிவத்தில் இருக்கும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையானும்.. வல்கனோவும்.. இறந்த காலத்தின் நிஜத்தை மறந்து நிற்கினம். யாரிலையோ குற்றத்தை சுமத்தலாம் என்று பார்க்கினம்..

1990 இரண்டாம் ஈழப்போரில் மிக முக்கியமான ஒரு விடயம்.. சிங்கள அரச பொருண்மியத் தடைகள். சீமெந்தில் இருந்து சீனி வரைக்கும் தடை...!

போக்குவரத்துத் தடை.. கப்பல்களை எதிர்பார்க்கும் சீவியம்....

இவை எல்லாம்.. புலிகளால் என்று சிலர் சொல்லாமல் சொல்ல விளையினம்.. எதிரியும் அதைத் தான் மக்களுக்கு காட்ட நின்றான். எல்லாம் புலிகளால் தான்.. அவர்களை ஓரம் கட்டினால்.. அதாவது உங்கள் போராட்டத்தைக் கைவிட்டால்.. நிலைமை முன்னேறும்.

எல்லா ஆக்கிரமிப்பாளனும் செய்வதும் இதைத்தான். போராட்டம் ஒன்றை ஒடுக்கனும் என்றால் மக்களை துன்பத்தில் தள்ளி.. அவர்கள் அதனை முன்னெடுக்க முடியாதபடி செய்து... பின் அவர்களுக்கு வசதிகளைக் காட்டி.. அதை விட இது திறம் என்று உணரச் செய்து.. போராட்ட தேவையை முற்றாக நிராகரிக்கச் செய்தல்.

இந்த நிலை.. வல்கனோவின் பாசையில் தெளிவாகத் தெரிகிறது. அவர் தான் சிங்கள ஆக்கிரமிப்பாளனின் ஆக்கிரமிப்புக் கொள்கையின் சரியான அமுலாக்கத்திற்கு கிடைத்த பரிசின் சான்றும் கூட..!

ஆனால்.... உண்மை அதுவல்ல. ஒருவேளை எந்தப் பொருளாதாரத் தடையும் இன்றி.. போக்குவரத்துத் தடையும் இன்றி.. மக்களுக்கு இடைஞ்சல் அற்ற வகையில்.. எதிரி எம் மக்களின் எழுச்சியை எதிர்கொண்டிருப்பானானால்.. இன்றுள்ளதை விட மிகச் சிறந்த நிலைக்கு தாயகம் வந்திருக்கும். நிச்சயம் அதைப் புலிகள் செய்திருப்பார்கள். காரணம்.. எத்தனையோ தடைகள்.. குண்டுகளின் மத்தியில் தேசத்தை தாங்கிப் பிடித்தவர்களிடம்.. எல்லா வசதிகளும் இருந்திருப்பின்.. நிலைமை வேகமாக முன்னேறி இருக்கும்.

இந்த நோக்கில்.. எம்மிலும் பலர் சிந்திப்பதில்லை. துன்பங்கள்.. எல்லாம் புலிகளால்... போராட்டத்தால்.. என்ற குறுகிய சிந்தனையில்.. ஆக்கிரமிப்பாளனின் கொள்கை வழியில் சிந்திக்கும் மந்தைகளாகவே மக்களில் பலர் இன்றுள்ளனர். இவர்களுக்கு உரிமையை விட டாம்பீகத்தில் மோகம் அதிகம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என் யாயினி அப்ப எங்கட australia டாலர் ஊர்ல வேலை செய்யாத?

3, 4 லச்சம் எல்லாம் இப்ப ஒரு காசே இல்லை. 30, 40 லச்சமா இருக்கும். வீடியோக் காரனுக்கே ஒரு மூண்டு நாலு லட்சம் தேவை, நீங்கள் வேற. போன மூண்டு வருசமும், வருசத்துக்கு ஒருக்கா ஊர் போய் வந்திருக்கிறேன்.

அண்ணா நான் தான் சரியாக விளங்கப்படுத்தி கூறவில்லை என்று நினைக்கிறேன்.... இன்று தான் விபரமாக கேட்டேன். அவர்கள் ஜெர்மனியிலிருந்து சென்றவர்களாம்.

அன்றைய நாள் செலவு மட்டும் தான் 3,4 லட்சம். அதாவது சாப்பாடு, பலகாரம், குடிபானங்கள், பெண்ணுக்கு வழங்கிய அன்பளிப்புகள், மற்றும்பல.....

மற்றபடி மக்களுக்கான அழைப்பிதல், வீடியோ எடுத்தல், படம் எடுத்தல், மணவறை காசு (மணமுடித்தால் மணவறை, இதனை எப்படி சொல்லுற என்று தெரியவில்லை :D), மக்களை அமர்த்த கதிரைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தன, பெண்ணுக்குரிய சாறியின் விலை, பெண் அணிந்த நகைகள், வேறு செலவுகள், பத்தாததுக்கு அனைவரும் வீடு செல்லும் போது பலகாரங்களுடன் ஒரு சிலையையும் சேர்த்து வழங்கியிருந்தார்கள்... அதன் விலை போன்றவற்றை சேர்த்தால் எவ்வளவு என்று கணக்கு பாருங்கள்....

இந்த தகவல்கள் அங்கு சென்ற ஒருவர் குத்துமதிப்பாக கூறியது. ஆனால் அவர்கள் இன்னும் என்னென்ன செலவழித்தார்கள் என்று அவர்களுக்கு தான் தெரியும்.

---------------------------------------------

அவர்கள் குடும்பத்திலிருந்து 5,6 பேர் சென்றிருக்கிறார்கள். அவர்களின் போய் வருவதற்கான ticket காசு....

போய் கொழும்பில் சில நாட்கள் தங்கியிருந்திருக்கிறார்கள். அங்கு இருந்த வாடகை...

வெளியில் சென்று வர ஆட்டோ பிடித்து போவார்களாம். அதற்கு பணம். ஆட்டோகாரனுக்கு பியர், வைன் வேறு பரிசளித்தாராம். (வெளிநாட்டவன் என்று காட்ட வேணும் தானே???)

பின்னர் தனி வான் ஒழுங்கு செய்து யாழ்ப்பாணம் சென்றார்கள். போய்வர அதற்கான பணம்.

யாழ்ப்பாணத்தில் பலருக்கு பல அன்பளிப்புகள், மற்றும் சாக்லேட்டுகள் இன்னும்பல.....

இவற்றையும் கூட்டி கழித்து பாருங்கள்.... ஒட்டுமொத்தமாக எவ்வளவு பணம் செலவளித்துள்ளார்கள் என..

--------------------------------------------------

அது தவிர ஒரு பெண் வயதுக்கு வந்தால் எளிமையாக அதை கொண்டாடலாம். கொண்டாடுவதன் நோக்கம் சில பெண்களுக்கு உரிய வயதில் இவை நடக்காததால் தமது பெண்ணுக்கு நடந்து விட்டது தமது பெண் திருமணம் செய்யும் தகுதியை பெற்றுவிட்டாள் என்பதை அறிவிப்பதற்கு தான். ஆனால் அதனை இவ்வளவு பெரிதாக கொண்டாடி என்னத்தை காண போகிறார்கள்??????

---------------------------------------------------

அடுத்தது உங்களுக்கு 3,4 லட்சமெல்லாம் சிறிய காசாக உள்ளது. ஏனென்றால் நீங்கள் பணக்காரரின் நிலையில் இருந்து யோசிக்கிறீர்கள். ஆனால் நான் வன்னியிலுள்ள மக்களின் நிலையில் இருந்து யோசிப்பதால் 4 லட்சமென்ன 4,000 ரூபா கூட வீண் செலவு செய்தால் அது பெரிய தொகையாக தான் உள்ளது. :)

ஊரில் இருப்பவர்களின் மன நிலை யாழ் களத்தில் இருப்பவர்களின் மனநிலையிலிருந்து மிகவும் வேறுபட்டு இருக்கிறது.

ஊரில் காசு உள்ளவனுக்கு பண உதவி வழங்கினால் சொகுசாக தான் வாழ்வார்கள். எதுக்கும் வழியில்லாத மக்களை யோசித்து அவர்களுக்கு உதவி செய்ய தொடங்கினால் யாழ்கள உறவுகளின் மனநிலையை நீங்களும் அடைவீர்கள். :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்த திரி என்னும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டுதான் இருக்கின்றதா ? :D

தும்பளையானின் கருத்துக்களுடன் நானும் ஒத்துப்போகிறேன்...

இது எங்களுடைய பிரச்சனையே தவிர அவர்களுடையது அல்ல, நாங்கள் இன்னும் மாறவில்லை 4 லட்சம் என்பது 4000 டொலர் என்று நினைக்க நாங்கள் இன்னும் தயாராகவில்லை. 4000 டாலரில் இல் என்ன விழா இங்கே நடத்தலாம் என்று யோசித்தால் இந்த 4 இலச்ச குழப்பம் வராது...

அண்ணா உங்களைப்போல் நான் யோசிக்கவில்லை. மாறி யோசிக்கிறேன். 4000 டொலர் என்பது எமது நாட்டில் 4 லட்சம் என்று தான் யோசிக்க வேணும். ஏனென்றால் விழாவை நடத்தியிருந்தது எமது நாட்டில். ஆனால் அப்படி யோசிக்க நீங்கள் தயாரில்லை.

இவர்கள் பணத்தை அள்ளிக்கொட்டி நடத்துவார்கள். இவர்களை பார்த்து ஏட்டிக்கு போட்டியாக ஏனைய பணக்காரர்கள் நடத்துவார்கள். அப்ப வசதி குறைந்தவர்களின் நிலை என்ன????

இங்கு நீங்கள் 4000 டாலருக்குள் நடத்தி முடிக்க முடியாது என்பது உங்களை போன்றவர்களின் பணத்திமிரை காட்டுகிறது. (அப்பிடி சொல்லுறதுக்கு மன்னிச்சுக்கொள்ளுங்கோ :D).. இது ஒன்றும் திருமண கொண்டாட்டம் அல்ல. இதனை எளிமையாக கொண்டாட முடியும். தமது சொந்தங்களை மட்டும் அழைத்து அவர்களுக்கு உணவு (விரும்பினால் பலகாரமும்) மட்டும் வழங்கி உபசரித்து அனுப்பினால் போதும். வேறு எதுவும் தேவையில்லை.

என்ன இப்படி எளிமையாக கொண்டாடி விட்டீர்கள் என்று யாரும் கேட்டால் (எங்கட சனம் கட்டாயம் கேட்கும்)......

பல மக்கள் உண்ண உணவில்லாத போது எதுவும் கொண்டாட மனமில்லை என்று அவர்கள் முகத்தில் அறைந்த மாதிரி அன்பாக பதிலளிக்க வேண்டும்.

உங்களுக்கு 4000 டொலர் கொஞ்ச காசு என்றால் நாளைக்கே வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4000 டொலர் அனுப்புங்களன். :)

  • தொடங்கியவர்

Thumpalayan, on 16 July 2012 - 07:52 PM, said:

. ஊரில் இருப்பவர்களின் மன நிலை யாழ் களத்தில் இருப்பவர்களின் மனநிலையிலிருந்து மிகவும் வேறுபட்டு இருக்கிறது. தொழில், வியாபாரம் செய்யும் பலர் மிகவும் முன்னேறி இருக்கிறார்கள்.

இதைச் சொன்னால் உங்களை துரோகி என்பார்கள்.

ஆனாலும் எனக்கு 4 விதமான source களில் இருந்து தகவலகள் கிடைக்கின்றன

1. ஒன்று புலம்பெயர் மக்களின் யதார்த்தத்தை மீறிய உணர்ச்சிகளின் அடிப்படையிலான வெளிப்பாடுகள்

2. அங்கு போய் இங்கு வரும் மக்களின் ஒரு சில நாட்கள் (ஆகக்கூடியது 3 மாதங்கள்) பற்றிய குறிப்புகள்

3. அங்கே இருந்து இன்றும் தெளிவாக இருந்து தமது blogs இலும் பத்திரிகைகளிலும் உள்ளதை உள்ளபடி எழுதுபவர்கள்

4. இங்கு 18 வருடம் வாழ்ந்து (கனடா) பின் வெறுத்து அங்கு போன என் மாமா ஒவ்வொரு வருடமும் தன் பென்சன் காசை எடுக்க வரும் போது சொல்பவை

இந்த 4 தகவல்களும் சொல்லுபவை

1. இன்று அங்கு மக்கள் ஓரளவுக்கேனும் நிம்மதியாக வாழ்க்கையை வாழ்கின்றனர்

2. ஆனால் இந்த நிம்மதி எந்தக் கணத்திலும் பறி போகும் என்பதையும், இது நிரந்தரமில்லை என்பதையும் புரிந்து வைத்துள்ளனர்

3. மிக முன்னேறி வியாபாரத்தில் வெளுத்து வாங்கும் ஒரு தமிழ் நிறுவனம் இலங்கை அரசின் இன ஒதுக்கலால் அடுத்த நாளே தரை மட்ட லெவலுக்கு வரலாம் என

4. எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டு ஒரு சிறு பகுதியினர், தாம் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு அடிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றோம் என உணர்ந்து, எதிர்காலத்துக்கு என்ன செய்ய வேண்டும், எப்படி அரசியல் ரீதியில் போராட வேண்டும் என கணித்துக் கொண்டு அமைதியாக இருக்கின்றனர் என

இந்த 4 ஆவது பிரிவுதான் மிச்ச 3 பிரிவுகளின் எதிர்காலத்தை மட்டுமல்ல இலங்கைத் தீவின் தலை விதியையும் கூட தீர்மானிக்க போகின்றது.

#1 - [size=4]இந்தக்கருத்தில் எந்த துரோகமும் இல்லை, மாறாக ஒரு சிறு வட்டத்திற்குள் இருந்து வந்த கருத்து. [/size]

#2 - [size=4]குறிப்பிட்ட நாலு தகவல்களினதும் அடிப்படையில் 'நிரந்த நிம்மதியை' இன்றும் எமது உறவுகள் தேடியவண்ணமே உள்ளார்கள். அதற்கு எமது அரசியல் விடிவு முதல் படியாகும்.[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சொல்ல வந்தது இதுதான். 4 லட்சம் ரூபாவில் இலங்கையில் இன்று செய்யகூடிய காரியங்கள், நாங்கள்

"4 லட்சம் ரூபா" என்கின்ற நினைவில் இருக்கிற எண்ணக்கருவிலும் மிகக் குறைவானதே. அது இங்கே இருபவர்களில் அதிகமாக தெரிகிரிறது, ஏனெனில் நாங்கள் இன்னும் நினைப்பது 4 லட்சம் என்னும் போது "1990 களில் வந்தவர் அந்த காசுக்கு என்ன அந்தகாலத்தில் செய்திருக்க முடியும் என என்று யோசிப்பதும்", "2005 வந்தவர் அந்தக்காலத்தில் 4 என்ன செய்திருக்கலாம்" என்று யோசிப்பதாலேயே இந்த பிரச்சனைகள் வருகிறது. எல்லா இடமுமோ சில பொருட்களின் விலைகள் கூடியிருக்கு, சில மாறவில்லை..அதனால்தான் கூடுதலான மட்டும் தங்கத்தை அளவு கோலாக பார்ப்பார்கள்- எனக்கு தெரிய 2005 அது 14 ரூபா இன்று 55 தொடக்கம் 60 aayiram ரூபா..அப்படி இருக்கும் போது 4 லட்ச்சதிர்ற்கு என்ன செய்யலாம்? இதைத்தான் சொல்லு வந்தேன்.

இங்கே சமத்திய வீடு செய்தது சரியோ பிழையோ அல்ல பொருள், அந்த 4 லட்சம் கூடவா குறையவா என்பதே பொருள்.

அகூதா,

டொரோண்டோ இல் இருப்பவர்களின் வருமானம் 40000 என்று சொல்லியிருந்தீர்கள், அதை பற்றி கைதக்கவில்லை, அந்த 40000 உழைக்கிற கூட்டத்தில் தான்..விதம் விதமான விழாக்கள் நடப்பது நீங்கள் அறியாது அல்ல. இங்கே அப்படி செய்யலாம் என்றால் அதைவிட பல மடங்கு குறைந்த செலவில் என்ன இலங்கையில் செய்யக்கூடாது? இலங்கையில் இப்பவும் ஒரு சாப்பாடு செலவு - தமிழ் பிரதேசத்தில் நடக்கிற விழாக்களுக்கு 300 ரூபா/தலைக்கு, அது இங்கே கோப்பி குடிக்கவும் காணாது.

மற்றது எந்த நேரத்திலும் எல்லாவற்றையும் ஒப்பிட முடியாது..நீங்கள் சொல்லிய படி சராசரி வருமானம் 40000 என்றால் யாருக்கு அங்கே அந்த வருமானம் இருக்கு, ஆனாலும் இங்கேயும் மக்கள், தங்கள் நிலை மறந்து செய்கிறார்கள், அதே போல் அங்கேயும் செய்கிறார்கள்.

உண்மையிலே சில பொருட்கள் இங்கே மலிவு,,நான் அண்மையில் நியூ யோரக் உள்ள செரடனில் தங்க வேண்டி இருத்தது, உள்ள points எல்லாம் பாவித்து 120 டொலர் கொடுத்தது, கொழும்பில் உள்ள நண்பன் சொன்னால், உந்த காசுக்கு கால் வைக்கவும் விடமாட்டங்கள் என்று. அதே போல பெர்மிட் கார் என்று ??குப்பை காருக்கு எல்லாம் அள்ளிக்கொடுகிரார்கள்.. நாங்கள் எல்லாவற்றையும் ஒப்பிட முடியாது, அதேநேரத்தில் பொதுவான நாணய பெறுமதி அறிந்தால் இந்த குழப்பங்கள் வராது.

மற்றது..பத்து வருடத்துக்கு முன்பு 30 aayiram enpathu இன்று கிட்டதட்ட 6 -7 க்கு சமன்..(பவுன் கணக்கு படி பார்த்தால்) ஆனால் பத்து வருடத்துக்கு முன்பு வேலையே இல்லை,. வெள்ளவத்தையில் நடைதான் பயின்று கொண்டு திரிந்தவர்கள்..இங்கே இருக்கிறார், யாழ்பாணத்தின் பிரபல பாடசாலை ஒன்றில் இருந்து முதல் மாணவனாக கம்பஸ் போய்-நான் நினைக்கிறன் யாழ்ப்பாணத்தின் (சரித்திரத்தில் ) முதல்3- 5 க்குள் வரக்கூடிய மார்க்கஸ், கம்பஸ் முதல் மாணவன், பொறியியல், கணக்கியல் பட்டதாரி..10 வருடத்துக்கு முன் வேலையில்லாமல் வந்து அசைலம் அடித்து...reject பண்ணி கார்டு பெண்ணை பிடித்து...

அந்த நிலை இப்ப இல்லை.

அவரொரு மட்டை அடித்து கடைசி வாங்கில் இருந்தவர்கள் தான், கொழும்பில் சிங்களவரோடு பிளட்ஸ் கட்ட வெளிக்கிட்டு இப்ப நாங்கள் அண்ணார்த்து பார்க்கிற நிலையில் இருக்கிறார்கள்..நாங்கள்தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருக்கிறோம்...

முடிவாக..4000 எனக்கு பெரிய காசு, அதற்காக 4000 க்கு நாலு குதிரை வாங்கலாம் என்று சொல்ல மாட்டேன்..

நெடுக்காலபோவன் எதோ சொல்லியிருகிறார்..அவர் எங்கட லோக்கல் நெடுமாறன்.... உண்மைக்கும்/யதார்த்தத்துக்கும் அவருக்கும் ஒத்துவராது.... இருவருமே சிறந்த புனைகதை பேச்சாளர்கள்/எழுத்தாளர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Germanyla சாமத்திய வீடு செய்திருந்தன யாழ் பாணத்தில செலவழிச்சத விட கூட முடிஞ்சிருக்கும் சோ ஒரு வகைல அங்க கொண்டு போய் செய்ததால maybe அவங்களுக்கு லாபமா இருந்திருக்கலாம் ..... ஐரோ ல கொடுக்குறத விட இதுல லாபம் இருக்கு அதுவும் சொந்தங்களோட செய்யும் போது எவ்ளவு சந்தோசம் இத germanla செய்திருந்தா எங்கட சனம் நல்லா வந்து சாப்பிட்டு ஹால் சரி இல்லை சாரி சரி இல்லை சாப்பாடு சரி இல்லை மேக் அப் சரிலன்னு எவ்ளவு நொட்டை சொல்லி இருப்பினம் பட் அங்க செய்ததால அங்கத சனம் இத பாத்து வாயில கை வைச்சு புதுமைஜா கதைச்சு இருக்கினம்....

  • தொடங்கியவர்

[size=4]வொல்கேனோ,[/size]

[size=4]எனது எதிர்வு கூறல் இது தான்: அடுத்தவருட கடைசியில் உலகம் மீண்டும் ஒரு பாரிய பொருளாதார நெடுக்கடிக்குள் சிக்கிவிடும். அப்போது சிங்களத்தின் பொருளாதாரம் இன்னும் அதிகமாக, அதாவது அதன் நாணய பெறுமதி இன்னும் இறங்கிவிடும்.[/size]

[size=4]இன்று கனடாவில் உழைப்பவர்களுக்கு, ஒவ்வொரு நூறு டாலர் உழைப்பிற்கும் கிட்டத்தட்ட நூற்றி நாற்பது டாலர்கள் செலவு உள்ளது. இது தான் மேற்குலகில் 'நல்ல விகிதாசாரம்'. மற்றைய நாடுகளில் இதை விட நிலைமை மோசம். [/size]

[size=4][size=4]அங்கே போய் விழாக்கள் செய்ய நாணய பெறுமதி கை கொடுக்கும். ஆனால், இங்கே வேலை வாய்ப்புகள் அருகி இருக்கும். எம்மில் அநேகமானோர் வங்குரோத்து நிலையில் இருப்பார்கள்.[/size][/size]

Edited by akootha

அங்குள்ள மக்கள் இப்போ தமிழீழம் பற்றி யோசிக்கிறார்களோ இல்லையோ சிங்களம் இல்லாத ஒருஅரசியல் தீர்வை எட்டி ஒரு அமைதி வாழ்வை தேடுகிறார்கள்.

யாரோடு பேசினாலும் அவனால் முடியாதது (தலைவர் பிரபாகரன்) இனி யாரால் முடியும் சிங்களத்துடன் துணிந்து மோத அதெல்லாம் போச்சு என்று தான் இனி என்ன நடக்கும் என்று கேட்டால் சாதாரண ,படித்த மக்களே எல்லோரிடமும் இதே சுலோகம் தான்.

ஒரு வெறுமையில்வாழ்வதாகவே அவர்கள் உணர்கிறார்கள்

jaffna9.jpg

அடிச்சு சொல்லுவன் , இது புறக்கோட்டை, புகையிரத நிலையம் தாண்டிவரும் ...அரசாங்க பஸ் தரிப்பு நிலையத்துக்கு அருகில் இருக்கு.. அந்த கார் கண்ணாடியில் தெரிவது அந்த சந்தியில் இருக்கும் விகாரை...

  • தொடங்கியவர்

நெடுக்காலபோவன் எதோ சொல்லியிருகிறார்..அவர் எங்கட லோக்கல் நெடுமாறன்.... உண்மைக்கும்/யதார்த்தத்துக்கும் அவருக்கும் ஒத்துவராது.... இருவருமே சிறந்த புனைகதை பேச்சாளர்கள்/எழுத்தாளர்கள்

[size=1]

[size=4]நெடுக்கர் ஒரு ஆழமான எண்ணங்களை கொண்ட ஒரு கருத்தாளர், உறுதியானவர். அவரை நெடுமாறன் ஐயா வரை உயர்த்திய உங்களுக்கு நன்றிகள். [/size][/size][size=1]

[size=4]நாளை இறந்துவிடுவோம் என்பதும் உண்மை தான். அதற்காக அந்த யதார்த்தை மறுக்கவும் முடியாது. எல்லோர் கருத்தையும் மதிப்போம். [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.