Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நேர்முகத் தேர்வுக்கு தயாராக...........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இசை... "30 நாளில் மலையாளம் கற்பது எப்படி?" என்ற புத்தகத்தை வாங்கினால்...

கடலை போடும் போது, யூரியா போடாமலே... விளைச்சல் அதிகமாக இருக்கும். :D:lol:

நானும் வேலை தேடிட்டு இருக்கன் எனக்கும் உதவியா இருக்கும் இணைப்புக்கு நன்றிகள்

புதிய வேலையில் இணைந்திருக்கும் நிழலி அண்ணாவிற்கும் இசை அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்..!

Spoiler
ஓஓஓஓஓ இசை அண்ணா கொத்தலாசாவடிக்கு வந்தாச்சா? :icon_mrgreen: இனி கொத்தலாசாவடியின் அருமை பெருமைகள் எல்லாம் யாழில் தூள் கிளப்பபோகின்றது :icon_idea::lol: .
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பகுதிக்குள் இன்னும் நிறைய பயன் உள்ள தகவல்களை உள்ளடக்க வேணும்...அது மட்டுமல்லாமல் முக்கியமான தகவல் பரிமாற்றங்களோடு கூடிய திரிகளை உடன் எடுக்க கூடியதாக பைல் பண்ணி விட்டால் உதவியாக இருக்கும்...கடந்த சில வருடங்களின் பின் மீண்டும் வேலை தேடும் பணி ஆரம்பித்துள்ளதால் எனக்கும் உதவியாக இருக்கிறது.

Edited by யாயினி

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எப்படி?

 
நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எப்படி?

நீங்கள் வேலைக்கு எல்லா விதத்திலும் பொருத்தமானவர் என்று இண்டர்வியூ செய்பவர் தீர்மானிக்கும் விதத்தில் நீங்கள் உங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும். அந்த அலுவலகத்தைப் பற்றிய விவரங்கள், சேவைகள், தொழிலாளர்களின் திறமை, நிதி நிலைமை, உற்பத்திப் பொருள்கள், ஆண்டு வருமானம், லாப நஷ்டங்கள், எதிர்கால விரிவுத் திட்டம், அவர்களுடைய போட்டியாளர்கள், அவர்களது செயல்முறைகள் போன்ற விஷயங்களை பற்றி முடிந்த அளவு விவரங்களைச் சேகரித்துக் கொள்ளவும்.

நேர்முகத் தேர்வு நடக்க உள்ள இடம், நேரம் பற்றி உறுதியாகத் தெரிந்து வைப்பதுடன், எப்படி சரியான நேரத்துக்குள் அங்கு போய்ச் சேர வேண்டும் என்பதையும் முன்னதாகத் தீர்மானம் செய்து வைத்துக் கொள்ளவும். நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்களை (Certificates) முன்கூட்டியே தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அவர்கள் கேட்கக்கூடியதாக உங்களுக்குத் தோன்றும் கேள்விகளையும், நீங்கள் அவர்களை கேட்க நினைப்பவை பற்றியும் ஒரு குறிப்பை முன்னதாகவே தயாரித்து வைத்துக் கொள்ளவும்.

நீங்கள்தான் தகுதியானவர் என்று நினைக்கும் வகையில் பதில் அளிக்கவும். உங்கள் கெüரவமான உடை (Dress) அமைப்பும், ஒழுங்குமுறையும் (Manners)உங்களைப் பற்றி சாதகமாக அவர்களுக்குத் தெரிவிக்கும்.

பளிச்சென்று சுத்தமான ஸ்மார்ட்டாகத் தோற்றமளிக்கும் உடையை அணிந்து செல்ல வேண்டும். ஒரு தேர்ச்சி பெற்ற நேர்முகத் தேர்வாளர், உங்கள் டிரஸ், பாடி லாங்குவேஜ், முகபாவனைகள் இவற்றை வைத்தே உங்கள் மனதையும், உங்களையும் நன்கு எடை போட்டு விடுவார்.

அதனால், நன்றாகக் கட்டுப்படுத்தப்பட்ட உடலசைவு, முக பாவனைகள் மூலம் எளிதில் உங்களை அவர் விரும்பக்கூடும். நீங்கள் அவரை வெற்றி கொள்ளலாம். நேர்மையாகவும், திறந்த மனதுடனும் இருங்கள். உள்ளே நுழையும்போதே சிநேக பாவத்துடனும் (Warm and Friendly) நம்பிக்கையுடனும் இருங்கள். கை குலுக்குவது, உங்களுடைய சிநேக பாவம், உற்சாகம், கவர்ச்சி போன்றவற்றைத் தெரிவிக்கும் என்பதை நினைவில் வையுங்கள். நேராக, உறுதியுடன், வலிமையாக கொடுக்கப்படும் கை குலுக்கல் உங்களைப் பற்றிய பாஸிடிவ் விவரங்களை அவர்களுக்குத் தெரிவிக்கும்.

நீங்கள் ஆசனத்தில் உட்காரும் விதத்திலிருந்து உங்களிடம் மறைந்து கிடக்கும் விவரங்களை அவர்கள் அறியக்கூடும். அதனால், உங்களுக்கு அளிக்கப்பட்ட ஆசனத்தில் நேராக நிமிர்ந்து அமரவும். உங்கள் கைகள் மடிமீது அல்லது ஆசனத்தின் கைகள் மீது இருக்கும்படி அமரவும். அமைதியாக, வசதியாக உட்காரவும். ரிலாக்ஸ் என்றால், வீட்டில் சோபாவில் அமருவது போல கால்கள் நீட்டி அமர்வது இல்லை. உங்கள் முழங்கால் இண்டர்வியூ செய்பவரை நோக்கி இருக்கட்டும். அது, நீங்கள் அவர்கள் மீது கவனமாக இருப்பதைக் காட்டும்.

அப்படி அமருவது கஷ்டமாக இருந்தால், உங்கள் கைகள் நீங்கள் சொல்வதைத் தொடர்வது போல இருக்கலாம். குறிப்பிட்ட பாயிண்டில் உங்களுடைய உறுதியான நம்பிக்கையை அது காட்டும். ஆனால், மார்புக்கு குறுக்காகக் கைகளைக் கட்டி அமர்ந்தால் உங்களுடைய பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை (Negative) பிரதிபலிக்கும்.

மூக்கைத் தொடுதல், கன்னத்தைத் தேய்த்தல், வேறு எங்கோ நோக்குதல் போன்றவை உங்களிடம் ஒருவித சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும். அவருடைய மேஜையில் உங்கள் கைகள், காகிதம், பைல்கள் மூலம் அதிகப்படி இடம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

வார்த்தைகளைவிடக் கண்கள் அதிகம் பேசக் கூடியவை. தேர்வாளரை உங்கள் நிலையான, உண்மையான பார்வையால் சந்தியுங்கள். இடையே கண் இமைகளை மூட மறவாதீர்கள். அதற்காக, கண்களையே சிறிது நேரம் மூடுவது தவறு. வழக்கத்துக்கு அதிகமாகக் கண் சிமிட்டுதலும், அடிக்கடி இங்கும் அங்கும் நோக்குவதும், மிகக் குறைவாக அவருடைய கண்களைச் சந்திப்பதும் உங்களுடைய பலவீனம் (Weakness) மற்றும் குறைபாடுகளைக் குறிக்கும். அவரை நோக்குவதும் கண்கள் லெவலுக்கு கீழே செல்லக்கூடாது. பொதுவாக, பிடித்தமற்ற செய்கைகள், குறிப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

இண்டர்வியூ நேரம் முழுவதும் தைரியமாகவும், பாஸிடிவ் ஆகவும் இருங்கள். கேட்கப்படும் கேள்விகளுக்கு பொய் பேசாதீர்கள். குடும்ப விவரம் பற்றி சுருக்கமாகத் தெரிவியுங்கள். கடைசியாகத் தேர்வு செய்தவருக்கும், அந்த அலுவலகத்துக்கும் நன்றி கூறி விடை பெறவும். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

 

http://thachankurichymail.blogspot.in/2012/04/blog-post_648.html

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேர்முகத் தேர்வு பற்றி எனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கின்றேன்.

 

ஒவ்வொரு நாட்டிற்கும் சில மாற்றங்கள் இருக்கும் என நம்புகின்றேன். 

 

பலவீனம்

இந்தக் கேள்வி இல்லாத நேர்முகத்தேர்வே இல்லை எனலாம். எனது அனுபவத்தில் இந்தக் கேள்விக்கு துறைசார்ந்து பதிலளிப்பது நல்லதல்ல. அதாவது உங்கள் துறையில் உங்களிற்கு தெரியாதவிடயங்களை எக்காரணம் கொண்டும் பலவீனம் என்று சொல்வதை தவிர்க்கவும். இந்த தவறை ஆரம்பத்தில் நானும் செய்தேன். பொய் சொல்லாமல் உண்மையை மறைத்து பேச வேண்டும். அவர்கள் கிண்டிக்கேட்டால் மட்டும் மறைக்காமல் சொல்லலாம். 

 

சரியான பதில்கள் இப்படி இருக்கலாம்:

- Software xy  இல் எனக்கு அனுபவம் போதாமல் உள்ளது. அந்த மென்பொருளை பாவிப்பதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை. 

 

- சில சமயங்களில் அனைத்து வேலைகளையும் உடனடியாகவே செய்துமுடித்துவிட வேண்டும் என நினைப்பேன். அதனால் அளவுக்கதிமான நேரம் வேலை செய்ததுண்டு. 

 

- யார் உதவி கேட்டாலும் இல்லை என்று சொல்வதில்லை. சில சமயங்களில் அதனால் எனது வேலைகள் தடைபட்டுப்போனது. 

 

பலம்

இங்கே உங்களின் பலத்தை நேரடியாகவே சொல்லலாம். அந்த துறைக்கு சாதகமான பலங்களை மட்டுமே முன்நிறுத்துங்கள். நீங்கள் முன்னர் வேலை பார்த்த நிறுவனத்தில் கிடைத்த அனுபவங்கள், சம்பவங்கள் அதனை நீங்கள் எப்படி கையாண்டீர்கள் என்பவற்றை சேர்த்து சொல்லுங்கள். 

 

வேறுசில கேள்விகள்

 

ஏன் வேறு வேலை தேடுகிறீர்கள்? அல்லது ஏன் முதல் வேலை பார்த்த நிறுவனத்திலிருந்து விலகினீர்கள்?

 

இந்த கேள்விக்கு அவசரப்பட்டு எக்காரணம் கொண்டும் முன்னர் வேலை பார்த்த நிறுவனத்தை பற்றியோ அல்லது அங்கு உங்களிற்கு பிரச்சனை இருந்தது பற்றியோ வாய்திறந்துவிடாதீர்கள். உங்களின் முன்னயை நிறுவனத்தின் மீது நீங்கள் என்னமாதிரியான அபிப்பிராயம் வைத்துள்ளீர்கள் என்பதை அறியவே இந்தக் கேள்வி. 

 

தனிப்பட்ட, வளர்ச்சி அலுவலகம் செல்லும் வழியின் தூரம், எதிர்காலதிட்டங்கள் போன்றவற்றை காரணமாக சொல்லலாம். 

 

என்ன சம்பளம் எதிர்பார்க்கின்றீர்கள்?

இதற்கு எடுத்த எடுப்பில் பதிலை போட்டுடைக்காமல் இருப்பது நல்லது. 

இதுவரை எனது அனுபவங்கள் மற்றும் படிப்பு தகுதிகளின் அடிப்படையில்.... என்று தொடங்கவும். அதன் பின்னர் அந்த நிறுவனம் எந்த துறை சார்ந்தது என்று அறிந்து அவர்களிற்கென்று இணையத்தளங்களில் தேடிய ஒரு எண்ணை சொல்லவும் (இதற்கு முன்னர் பெற்ற சம்பளத்திற்கு குறைவாக சொல்லிவிடாதீர்கள்). 

 

உங்களின் எதிர்பார்ப்பை சொல்லிவிட்டு இப்படி ஒரு பிட்டை போட்டுப்பாருங்கள்:

எனது எதிர்பார்ப்பு நிரந்தரமானது அல்ல. அது பற்றி நாம் தேவைப்படின் கலந்தாலோசிக்கலாம். இப்படியான ஒரு அருமையான வேலை எனக்கு பணத்தால் கிடைக்காமல் போனதாக இருக்க வேண்டாமே. 

 

வேறு ஏதாவது கேள்விகள் உள்ளனவா என்று கேட்டால் இல்லை என்று எழும்பி வந்துவிடாதீர்கள்.

 

தொடர்கல்வி திட்டங்களிற்கு நிறுவனம் உதவி செய்யுமா என்று கேட்கவும். இதன் மூலம் நீங்கள் கற்பதில் ஆர்வம் உள்ளவர் என்பதை அவர்களிற்கு தெரிவிக்கின்றீர்கள். 

தேவையேற்படின் வார இறுதி நாட்களில் வேலை செய்வது சாத்தியமா என கேட்கவும். நீங்கள் ஒரு கடின உழைப்பாளி போல் காட்டிக்கொள்ளவும். 

 

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விடயம் ஒன்றே ஒன்று தான்:

சரியான தயார்படுத்தல் மட்டுமே வெற்றியை தரும்!

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு மிகச்சரியான தருணத்தில் இந்தத் திரியை மீண்டும் பார்வைக்கு கொண்டுவந்தமைக்கு மிகுந்த நன்றி!.

என்னுடைய சுயவிபரக்கோர்ப்பை மிகச்சரியான முறையில் திருத்தி அமைத்துத்தர யாராவது முன்வருவீர்களா?!...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.