Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலன் : உன் அழகே அழகு,உன் ஒவ்வொரு பாகமும் வாரத்தின் 07 நாட்களுக்கு நிகர்.

காதலி : அப்படியா???,என்னென்ன எதுஎதுக்கு நிகர் னு சொல்ல முடியுமா???

காதலன் : ,உன் கன்னம் இரண்டும் ஞாயிறு

உன் கண்கள் இரண்டும் திங்கள்

உன் மூக்கு செவ்வாய்

உன் வாய் புதன்

உன் உதடு இரண்டும் வியாழன்

உன் காது இரண்டும் வெள்ளி

மொத்தத்தில் நீயொரு சனி......

காதலி : ச்சீ.......,Good Bye for Your LOVE

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் அண்ணாவின் பள்ளிப்பருவம்..........,

கணக்கு வகுப்பு....,,,,,.

ஆசிரியர்: 8 ஆப்பிள் இருக்கு அத சமமா எப்பிடி 6 பேருக்கு பிரிச்சு கொடுப்பே?

நந்தன் அண்ணா கொஞ்ச நேரம் தலைய போட்டு பிச்சிட்டு எழும்பி சொன்னார்......

ஜூஸ் போட்டு சார் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்க லவர் உங்களுக்கு ரொமாண்டிக்கா மெசேஜ் அனுப்பினா அத பாத்து சந்தோஷ பட்டுக்காதிங்கா...... அந்த மெசேஜ் ஆ உங்க லவர் க்கு யாரு அனுப்பி இருப்பான்னு கொஞ்சம் யோசிச்சுப்பாருங்க

அப்ப நான் வட்டா

:D :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகின் நிரந்தர பணக்காரர்கள் பட்டியலை, "செலிபிரிட்டி நெட் வொர்த்' என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது; இதில், 25 பேர், இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில், பெண்கள் யாரும் இடம் பெறவில்லை.இந்த இணையதளம் வெளியிட்டுள்ள பட்டியலில், 14 பேர் அமெரிக்கர்கள். தற்போது, இந்த பட்டியலில் உள்ளவர்களில், மூன்று பேர் மட்டுமே உயிரோடு உள்ளனர்.ஐதராபாத்தை ஆண்ட கடைசி நிஜாம், உஸ்மான் அலி கான். இவரது சொத்து மதிப்பு, 13.50 லட்சம் கோடி ரூபாய்; இவர் இந்தியாவின் நிரந்தர பணக்காரராக கருதப்படுகிறார். 1967ல், 80 வயதில் காலமானார். இவருக்கு, ஏராளமான ஆசை நாயகிகள் இருந்தாலும், மூன்று பேர் மட்டுமே மனைவியாக அங்கீகரிக்கப்பட்டனர்.

மத்திய ஆப்ரிக்க நாடான மாலியை, 14ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்சா மூசாவின் சொத்து மதிப்பு தான், உலகிலேயே அதிகம். இவரது சொத்து மதிப்பு, 23 லட்சம் கோடி ரூபாய். தன்னுடைய நாட்டில் இருந்த தங்கம் மற்றும் உப்பு வளங்களை சுரண்டி, சொத்து சேர்த்தார்.இந்த பட்டியலில், அமெரிக்க செல்வந்தரான ராக்பெல்லரின் பெயர், மூன்றாம் இடத்தில் உள்ளது. இவரது சொத்து மதிப்பு, 20 லட்சம் கோடி ரூபாய்.இப்பட்டியலில், இடம் பெற்றுள்ள குறைந்த சொத்து மதிப்புடைய பணக்காரர், வாரன் பப்பெட், 82 வயதான இவரின் சொத்து மதிப்பு, 3.7 லட்சம் கோடி ரூபாய்.

Dinamalar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nanthan Anna : யப்பா! உன்னைய நான் டிரைவரா சேத்துக்கிடறேன். ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன். ஓகேவா?

Sundal : உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்!

Nanthan anna : இருக்கட்டும் இருக்கட்டும்!

Sundal : ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே. இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க?

Nanthan Anna : ஆகா!! கெளம்பிட்டானே…

Nanthan Anna : தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?

Sundal : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!

Nanthan anna : ?!?!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பையன் ஒரு பொண்ணு கார்ல போறாங்க......

அந்த பொண்ணு அந்த பையன ரொம்ப லவ் பண்ணுறா one side ஆ...........

போகும் போது .....அவள் தன்னோட காதல சொல்லி லெட்டர் கொடுக்கிறா........

அவன் அவள திட்டி கார விட்டு இறங்க சொல்லிட்டான்..........

அவ இறங்கும் போது வேகமா வந்த லாரி ஒன்னு அவ மேல மோதி அவ இறந்திட்டா..........

அவன் அந்த லெட்டர படிக்கிறான்........

நீ என்னை பிரியும் போது என் உயிரும் பிரியும்......

  • கருத்துக்கள உறவுகள்

நீ என்னை பிரியும் போது என் உயிரும் பிரியும்......

நீ என்னைச் சேரும்போது உன் பிராணன் பிரியும்.. இதைச் சொல்லலையா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Nanthan Anna : யப்பா! உன்னைய நான் டிரைவரா சேத்துக்கிடறேன். ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன். ஓகேவா?

Sundal : உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்!

Nanthan anna : இருக்கட்டும் இருக்கட்டும்!

Sundal : ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே. இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க?

Nanthan Anna : ஆகா!! கெளம்பிட்டானே…

Nanthan Anna : தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?

Sundal : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!

Nanthan anna : ?!?!

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வெளி நாட்டுக்காரன் இந்தியாக்கு வந்தாராம்........

எல்லா இடமும் சுத்தி பாத்திட்டு மறுபடியும் தன்னோட நாட்டுக்கு போக ஒரு ஆட்டோ ல ஏர்போர்ட் போனாராம்..... போற வழில

ஒரு Honda கார் அவரோட ஆட்டோ வ முந்திட்டு போக ஆட்டோ டிரைவரா பாத்து சொன்னாராம்.....Honda made in Japan very fast எண்டு............

அடுத்து........... Toyota போச்சாம்....... அதையும் பாத்து சொன்னாராம்...... Toyota made in japan very fast எண்டு.........

அபிடியே airport க்கு வந்து சேர்ந்த உடன ஆட்டோ டிரைவரா பாத்து கேட்டார் how much ? எண்டு

டிரைவர்: rs 8000

Foreigner : என்ன இது பகல் கொள்ளையா இருக்கு ரொம்ப கூடவா இருக்கேன்னு

அதுக்கு ஆட்டோ டிரைவர் சொன்னாராம் மீட்டர் made in India very fast எண்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அதே லண்டன் மாநகரம்...... அதே நந்தனாரும்.......தொப்பிலியாரும்......... சந்திக்கின்றார்கள்.........

என்ன நந்தனார் வியாபாரம் எல்லாம் எப்பிடி போகுது........

எதோ இந்த கோழியல் இருக்கிறதால அத வறுத்து பொரிச்சு..... கல்லா கட்டுதண்ணை.........

அப்புறம் உங்க வாழ்க்கை எல்லாம் எப்பிடி போது........

எதோ உன்னோட புண்ணியத்தில என்னோட செலவில நல்லா போகுது.......,

அது சரி இந்த கோழி ஓட கால் இவளவு ஒல்லியா இருக்கு இது நிஜமா கோழி தானோ இல்லை...... என்று கூறியவாறு மேலும் கீழும் நந்தனாரை பாக்க ....... பக்கத்து மரத்தில் இருந்த காகம் கா கா என்று கரையத்தொடங்கியது......... திடுக்கிட்ட நந்தனார் வாங்கன்னை.... அப்பிடியே ஆபீஸ் ல போய் இருந்து பேசுவம்..... என்று உள்ளே அழைத்து செல்கின்றார்..... திடீர் என்று வாசலில் ஒரு car motorcycleai overtake பண்ணி செல்லவே...... தொப்பிலியார் நந்தனாரை பாத்து.....

ஸ்பீடா போற வண்டிய ரொம்ப ஸ்பீடா போய் overtake பண்ணலாம்.....ஆனா ஸ்லொவ் வா போற வண்டிய ஸ்லோவா போய் overtake பண்ண முடியுமா எண்டு கேட்டு கடை அதிர சிரித்தார்...... நந்தனாரும் சாட்டுக்கு சிரித்து விட்டு..... சரியடாப்பா பசிக்கிது எண்டு சொல்லியவாறே தொப்பிலியார் ஒரு கோழி காலை எடுக்கவும் மீண்டும் மரத்தில் இருந்து கா கா சத்தம்.... எனக்கு என்னமோ வயித்த பிரட்டுற மாதிரி இருக்கு எண்டு சொன்ன தொப்பிலியார் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினார்.....:D

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தண்ணிக்குள்ள கப்பல் போனா ஜாலி.........

கப்பலுக்குள்ள தண்ணி வந்தா காலி.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்: இசை அண்ணா dye க்கும் die க்கும் உள்ள வித்தியாசத்த தமிழ்ல சொல்லுங்க plz

இசை அண்ணா: Dye னா.....மண்டையில போடுறது..........

Die னா மண்டைய போடுறது

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D

Boy : உன்னோட வீட்டுக்கு போய் இருந்தன் இனிமேலும் நமக்கு கல்யாணம் ஆகும்னு எனக்கு தோனேல்ல....

Girl : ஏன் எங்க அப்பாவ பாத்திங்களா?

Boy : இல்ல உன்னோட தங்கச்சிய பாத்தன்....

சாய்ந்த கோபுரத்த ஜப்பான்ல கட்டி இருந்தா என்ன பேர்?

நிக்குமோ- நிக்காதோ

சீனாவில கட்டினா

சான்ச்சுச்சு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகின் முதல் இரட்டை குழந்தைகள் யார் தெரியுமா?

 

ஒருமுறை தேவலோகத்தில் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரும் வியாழ பகவானைக் கவனியாமல் ஆடிக்கொண்டிருந்தனர். இதனால் கோபம் அடைந்த தேவகுரு ""பூந்துறை நாட்டில் முத்தி என்ற தாசி வயிற்றில் இரட்டை குழந்தைகளாக பிறப்பீர்கள் என சபித்தார். தாங்கள் அறியாமல் செய்த தவறை மன்னித்தருளுமாறு குருபகவானை இருவரும் வேண்டினார்கள். சாப விமோசனம் வேண்டிய அவர்களை மன்னித்த தேவகுரு, ""தாசியின் வயிற்றில் பிறந்து 12 ஆண்டுகள் பார்வதி தேவியை வணங்கி வந்தால், ஐராவதம் ஏறிய இந்திரன் நீங்கள் வாழும் பூந்துறை நாட்டில் பொன்மாரி பெய்வான். அப்போது உங்கள் சாபம் நீங்கும் என்றார்.

தேவகுருவின் சாபத்தால் ரம்பை, ஊர்வசி இருவரும் அழகாலும் குணத்தாலும் சிறந்த தாசி முத்தியின் வயிற்றில் பிறந்தனர். அவர்கள் சிறுநல்லாள், பெருநல்லாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். தேவகுருவின் வாக்கின்படியே சிறுநல்லாள், பெருநல்லாள் இருவரும் ஈரோட்டில் குடி கொண்டுள்ள ஆருத்ரா கபாலீஸ்வரரையும், வருணாம்பிகையையும் மனமுருக வழிபாடு செய்தனர். அவர்களது அன்புக்கு இறங்கிய சிவன், இந்திரன் மூலம் பூந்துறை (தற்போதைய ஈரோடு) நாட்டில் பொன்மாரி பொழிய வைத்து ரம்பை, ஊர்வசியின் பாவம் போக்கினார். இந்த ரம்பை, ஊர்வசி தான் உலகின் முதல் இரட்டை குழந்தைகள்!..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்ற பழமொழியின் அர்த்தம் தெரியுமா?

விருந்தும், மருந்தும் மூன்று நாளைக்கு மேல் இருந்தால் தொல்லை தான் என்பது இந்த காலத்து பழமொழி இல்லை, 100 ஆண்டுக்கு முன்பே சொல்லி வைக்கப்பட்டது தான், காரணம் இரண்டுமே ரொம்ப நாளைக்கு நீடித்தால் தனிமனிதனுக்கு இழப்பு, இங்கு விருந்து என்பது விருந்தினர்களையும் மருந்து என்பது நோய்களுக்கான மருந்து, இவையெல்லாம் வந்து உடனே செல்லும் அளவில் இருப்பதே நல்லது என்ற பொருளில் தான் சொல்லப்படுகிறது, 2000 ஆண்டுகளுக்கு முன்பு மோப்பக் குழையும் அனிச்சம், நோக்கக் குழையும் விருந்து என்ற குறளில் முகம் காட்டுவது விருந்தினர்களையும் அவர்களது உறவையும் கெடுத்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு, அவர் காலத்தில் விருந்தினர்கள் தொலைவில் இருந்து வந்தவர்களாக இருந்திருக்கக் கூடும், தவிர அவர்களுக்கான பணிவிடை என்பது உணவும் உறைவிடமும் கொடுத்து உதவுவது என்ற அளவில் தான் இருந்திருக்கும். பின்னர் நூற்றாண்டுகளின் மாற்றங்களில் விருந்தினர்கள் மூன்று நாளைக்கு மேல் தங்குவது தொல்லை தான் என்றே உணர்ந்து பழமொழி வடிவெடுத்திருக்கிறது.

ஒருவீட்டுக்கு விருந்தினராகச் செல்கிறோம் என்றால், காலையில் போய் விட்டு மாலைக்குள் திரும்பி விடுவது தான் மரியாதை. மீறி தங்கினால், தேவையற்ற கருத்து வேறுபாடுதான் வரும். பெற்றவர்கள் கூட, பிள்ளைகள் வீட்டில் குறைந்த நாள் தான் தங்க வேண்டிய சூழல் இருக்கிறது. விலைவாசி மற்றும் குடும்பச்சூழல் அப்படி!  ஒரு கதையைக் கேளுங்க! ஒரு வாத்து முட்டைகளை குஞ்சு பொரித்தது. எப்படியோ, அன்னப்பறவையின் முட்டை ஒன்றும் அதனுள் கலந்து விட்டது. குஞ்சு பொரித்ததும், மற்ற குஞ்சுகள் சுமாரான நிறத்தில் இருந்தன. அன்னப்பறவை குஞ்சு மட்டும் வெள்ளை வெளேரென இருந்தது. அது மட்டுமல்ல! வாத்துக்கள் சாய்ந்து சாய்ந்து நடந்தன. அன்னப்பறவையின் நடையழகோ அபாரமாய் இருந்தது. இதைக் கண்ட தாய் வாத்தும், மற்ற குஞ்சுகளும் அன்னக்குஞ்சு மீது பொறாமை கொண்டன. தேவையில்லாமல் அதைத் தொந்தரவு செய்தன. கொத்திக் காயப்படுத்தின. அப்போது, அன்னப்பறவை கூட்டம் ஒன்று அங்கு வந்தது. தங்கள் குஞ்சு ஒன்று வாத்துக் கூட்டத்துடன் இருப்பதைப் பார்த்து, ""அன்னக்குஞ்சே! நீ எங்கள் இனமல்லவா! மந்த புத்தியுள்ள இந்த வாத்துகளுடன் ஏன் இருக்கிறாய். இதோ! இந்த நீர் நிலையில் உன் உருவத்தைப் பார். எங்களைப் போலவே இருப்பாய், உயரத்தில் பறக்கும் சக்தியும் உனக்கு உண்டு என்றன. அப்போது தான் அன்னக்குஞ்சுக்கு, தான் ஏன் துன்புறுத்தப்பட்டோம் என விளங்கியது. அது தன் இனத்துடன் சேர்ந்து பறந்து விட்டது. அவரவர் இடத்தில் இருந்தால் தான் அவரவருக்கு மதிப்பு! தெரியாமல் வந்த அன்னக்குஞ்சுக்கே அந்தக்கதியென்றால், தெரிந்தே விருந்தினர் இல்லங்களுக்குச் செல்பவர்களுக்கு என்ன கதி வரும் என சொல்லியா தெரிய வேண்டும்! விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பது அந்தக்காலத்திலேயே இருக்கிறபழமொழி. அப்போதேஅப்படி என்றால், இப்போது...!

Dinamalar

:D

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் முதல் இரட்டை குழந்தைகள் யார் தெரியுமா?

ஒருமுறை தேவலோகத்தில் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரும் வியாழ பகவானைக் கவனியாமல் ஆடிக்கொண்டிருந்தனர். இதனால் கோபம் அடைந்த தேவகுரு ""பூந்துறை நாட்டில் முத்தி என்ற தாசி வயிற்றில் இரட்டை குழந்தைகளாக பிறப்பீர்கள் என சபித்தார். தாங்கள் அறியாமல் செய்த தவறை மன்னித்தருளுமாறு குருபகவானை இருவரும் வேண்டினார்கள். சாப விமோசனம் வேண்டிய அவர்களை மன்னித்த தேவகுரு, ""தாசியின் வயிற்றில் பிறந்து 12 ஆண்டுகள் பார்வதி தேவியை வணங்கி வந்தால், ஐராவதம் ஏறிய இந்திரன் நீங்கள் வாழும் பூந்துறை நாட்டில் பொன்மாரி பெய்வான். அப்போது உங்கள் சாபம் நீங்கும் என்றார்.

தேவகுருவின் சாபத்தால் ரம்பை, ஊர்வசி இருவரும் அழகாலும் குணத்தாலும் சிறந்த தாசி முத்தியின் வயிற்றில் பிறந்தனர். அவர்கள் சிறுநல்லாள், பெருநல்லாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். தேவகுருவின் வாக்கின்படியே சிறுநல்லாள், பெருநல்லாள் இருவரும் ஈரோட்டில் குடி கொண்டுள்ள ஆருத்ரா கபாலீஸ்வரரையும், வருணாம்பிகையையும் மனமுருக வழிபாடு செய்தனர். அவர்களது அன்புக்கு இறங்கிய சிவன், இந்திரன் மூலம் பூந்துறை (தற்போதைய ஈரோடு) நாட்டில் பொன்மாரி பொழிய வைத்து ரம்பை, ஊர்வசியின் பாவம் போக்கினார். இந்த ரம்பை, ஊர்வசி தான் உலகின் முதல் இரட்டை குழந்தைகள்!..

வியாழ பகவான், அலியோ? :wub:

வியாழன், சூரியனைச் சுற்றிவரும் காலம், பன்னிரண்டு வருசங்கள்!

பொம்பிளைப் பிள்ளையளைப், பன்னிரண்டு வயதுக்குப் பிறகு, இந்திரனை நம்பி விடேலாது! :icon_mrgreen:

சுண்டலுக்கை, கன விஷயம் இருக்குப் போல கிடக்கு! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bill Gates organized an enormous session to recruit a new Chairman for Microsoft Europe. 5000 candidates assembled in a large room.

One candidate is our Ramasamy.

Bill Gates: Thank you for coming.

Those who do not know JAVA may leave.

2000 people leave the room.

Ramasamy says to himself,

‘I do not know JAVA, but I have

nothing to lose if I stay. I’ll give it a try !’

Bill Gates: Candidates who never had experience of managing more

than 100 people may leave.

2000 people leave the room.

Ramasamy says to himself

‘I never managed anybody by

myself, but I have nothing to lose if I stay. What can

happen to me?’ So he stays.

Bill Gates: Candidates who do not have management diplomas may

leave.

500 people leave the room.

Ramasamy says to himself,

‘I left school at 15, but what

have I got to lose?’ So he stays in the room.

Lastly,

Bill Gates asked the candidates who do not speak Serbo-Croat

to leave.

498 people leave the room.

Ramasamy says to himself,

‘I do not speak one word of

Serbo-Croat but what do I have to lose ?’ So he stays

and finds himself with one other candidate; Everyone else

has gone.

Bill Gates joined them and said ‘Apparently you are the only

two candidates who speak Serbo-Croat, so I’d now like to

hear you have a conversation together in that

language.’

Calmly, Ramasamy turns to the other candidate and says ‘ endha ooru ? ‘

The other candidate answers… ‘Thoothukudi pakkam ‘

“vazhga tamil”

:D

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பு தாங்க முடியவில்லை..! சிரிப்பு தாங்க முடியவில்லை..! சிரிப்பு தாங்க முடியவில்லை..!

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பு தாங்க முடியவில்லை..! சிரிப்பு தாங்க முடியவில்லை..! சிரிப்பு தாங்க முடியவில்லை..!

இந்த லொள்ளுத்தானே வேணாங்கிறது

சிரிப்பு தாங்க முடியவில்லை..! சிரிப்பு தாங்க முடியவில்லை..! சிரிப்பு தாங்க முடியவில்லை..!

சிரிப்பு தாங்க முடியவில்லை. ஒரே பகிடிதான். ஒரே பகிடிதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.