Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இந்த கொல வெறி :(

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
உணர்வுக்கதை :

பாசம்!
**********

தமிழ் பள்ளி ஒன்றில், அசிரியர் நன்னெறிக் கல்வி பாடத்தை போதித்துக் கொண்டிருந்தார். அன்பு சம்மந்தப்பட்ட தலைப்பை பற்றி விவாதித்த சமயத்தில் ,
வகுப்பிலிருந்த மாணவனொருவன் சந்தேகத்துடன் ஒரு கேள்வியை எழுப்பினான்.

மாணவன்: ”’ஐயா, நம் மீது அதிக பாசம் கொண்டவரை நாம் எப்படி அடையாளம் கண்டு கொள்வது? அதே சமயம் எவ்வாறு அவர்களின் பாசம் நீடிக்கும் படி செய்வது ?””

...
ஆசிரியர்: ”” உண்மையான பாசத்தை நீ அறிந்துக் கொள்ள விரும்புகிறாயா ?

சரி முதலில் நான் சொல்வதைச் செய். பிறகு அதன் அர்த்தத்தை புரிந்துக் கொள்வாய்.””

மாணவன்: சொல்லுங்கள் ஐயா செய்கிறேன்.

ஆசிரியர்: ””நம் பள்ளி திடலுக்குச் செல். அங்கு இருக்கும் புற்களை கீழ்
நோக்கி பார்த்தவாரே நட. அதில் மிக அழகாக காட்சியிலிக்கும் ஒரு புல்லை தேர்வு செய்து கொண்டுவா.

ஆனால் நீ நடந்து முடித்த பாதையை திரும்பி பார்க்காதே. உன்
முன்னால் இருக்கும்
புல்லை மட்டுமே தேர்வு செய்து என்னிடம்
கொண்டு வர வேண்டும்.””

மீண்டும் வகுப்பறைக்குள் நுழைந்த அம்மாணவனின் கையில் எந்த ஒரு புல்லும் காணவில்லை.

ஆசிரியர்: ””நான் கொண்டு வரச் சொன்ன
புல் எங்கே?””

மாணவன்: ”’நான்
புற்களை பார்த்தவாறு நடந்துக் கொண்டிருந்தேன். என் கண்களில் நிறைய
அழகான புற்கள் தென்பட்டன. ஆனால்
நீங்கள் கேட்டதோ மிக அழகான புல்.
ஆகையால் நான் தொடர்ந்து நடந்தேன்.
பின் இருந்த புற்கள் சில அழகாக இருந்தது ஆனால் நிபந்தனை படி நான் பின் நோக்கிப் பார்க்கக் கூடாது.

இறுதியில்
என்னால் எந்தப் புல்லையும் தேர்வு செய்ய முடியாமற் போனது.””

ஆசிரியர்: ””அதுதான் நீ கேட்ட கேள்விக்கான பதில். நம் மீது அன்பு காட்டும் ஒருவர் நன்
அருகில் இருக்கும் சமயத்தில் நாம் அவரை விட சிறந்த ஒருவரை தேடக் கூடாது.

அவர்களின் பாசத்தை மாரியாதை செய்ய வேண்டும். வாழ்க்கையை பின் நோக்கிப் பார்த்து பாசத்தை எடை போட கூடாது.
இறந்த காலத்தை நாம் சரி செய்ய இயலாது. நம்மோடு நிகழ்காலத்தில் இருப்பவரோடு கருத்து வேருபாடுகள் ஏற்பட்டால் சரி செய்து கொள்ள முடியும்.

அவர்களது பாசத்தை நிலைக்கச் செய்ய
முடியும். நம் மீது அன்பு செலுத்த பலர் இருந்தாலும், நிகழ்காலத்தில்
இருப்பவரே சிறந்தவர்.

நம் வாழ்க்கையின்
சுகதுக்கங்களை பகிர்ந்து கொண்டு நம் மீது பாசம் காட்டுபவரிடம், நேர்மையாக நடந்துக் கொள்வதே சிறந்த குணமாகும்.””
 
by.fb

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம் வாழ்க்கையின் சுகதுக்கங்களை பகிர்ந்து கொண்டு நம் மீது பாசம் காட்டுபவரிடம், நேர்மையாக நடந்துக் கொள்வதே சிறந்த குணமாகும்.””

சூப்பர் யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு உன் பின்னால் லோ லோ என்று அலைந்தேன்

உன் இதயத்தை தருவாய் என்று !

இதயத்தைத்தான் தரவில்லை பெண்ணே

சைக்கிளுக்கு வாடகையாவது தரலமிலா

உன் தங்கையின் பின்னாலாவது அலைவதற்கு உதவுமல்லாவா!

:(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடல் படத்தில் அறிமுகமாகியுள்ள கார்த்திக்கின் மகன் கவுதம், கிறிஸ்தவ இளைஞராகவும், ராதாவின் மகள் துளசி, இந்து பெண்ணாகவும் நடித்துள்ளனர். இப்படம், கடலோர மீனவ கிராமத்து மக்களின் பிரச்னையை சொன்னாலும், காதலுக்கே முதலிடம் கொடுத்து, படமாக்கியுள்ளார் மணிரத்னம். இதில், அர்ஜுன், அரவிந்த்சாமி இருவரும், காதலர்களுக்கு உதவி செய்யும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மன்மதன் அம்பு மற்றும் சிங்கம் உட்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீபிரசாத். இவரை ஹீரோவாக நடிக்க வைக்க, சிலர் முயற்சி எடுத்தனர். அப்போது, "ஸ்ரேயா ஹீரோயினி என்றால், தாராளமாக நடிக்கிறேன்...' என்றாராம் தேவி ஸ்ரீ பிரசாத். இந்த சேதி, ஸ்ரேயாவின் காதுகளை எட்டிய போது, "ஒரு இசையமைப்பாளர் என்னுடன் நடிக்க துடிக்கிறாரா?' என்று கேட்டு, சந்தோஷப்பட்டவர், நடிக்கவும் சம்மதம் தெரிவித்து விட்டார்.

ராம் மற்றும் பருத்திவீரன் என்று, யதார்த்த படங்களை, இயக்கிவந்த அமீர், தற்போது, ஆதிபகவன் படத்தை கமர்ஷியல் கதையில் இயக்கியுள்ளார். ஆனால், "இதே பார்முலாவை தொடர மாட்டேன்...' என்று சொல்லும் அமீர், "இதையடுத்து, கண்ணபிரான் படத்தை யதார்த்த கதைகளத்தில் இயக்க போகிறேன்...' என்கிறார்.

இசை படத்தை இயக்கி, நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யாவை, மீண்டும் நடிப்பதற்கு சில இயக்குனர்கள் அழைத்தனர். அதற்கு, "இசை படத்தை நல்ல படியாக இயக்கி, ஹிட் செய்த பிறகு தான், மற்றவர்களின் இயக்கத்தில் நடிப்பேன்,' என்று கூறிவிட்டார். அதோடு, "கதையிலும், என் பாணிக்கேற்ப சில மாற்றங்களை செய்வேன். அதற்கு உடன்படும் இயக்குனர்களுக்கு மட்டுமே, கால்ஷீட் தருவேன்...' என்றும், உறுதியாக சொல்கிறார்.

போராளி படத்துக்கு பின், தனக்கு ஆக்ஷன் கதைகள் செட்டாகாது என்பதை புரிந்து கொண்ட சசிகுமார், இனி, சுந்தரபாண்டியன் போன்று, காதல், காமெடி கதைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப் போவதாக சொல்கிறார். அதோடு, ஈசன் மாதிரி சிட்டி சப்ஜக்ட்டுகளை தவிர்த்து, நேட்டிவிட்டி கதைகளில் மட்டுமே நடிக்க @பாவதாக கூறுகிறார். சேதியறிந்து, மண்வாசனை கதைகளுடன் சில இயக்குனர்கள் அவரை முற்றுகை இட்டுள்ளனர்.

thanks to— சினிமா பொன்னையா

சுடுகாட்டில் அந்த சடலம் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

சிதைக்குத் தீ மூட்டியதும், சடலம் சூடுபட்டு நரம்புகள் முறுக்கேறி, பிரேதம் எழுந்து உட்காரும். இதை, "குறக்குளி இழுத்தல்' என்பர். அப்படி பிரேதம் எழுந்ததும், வெட்டியான்கள், அந்த உடலைத் தடியால் அடித்து, மீண்டும் படுக்கையில் கிடத்துவர்.

ஒருமுறை, வட்டிக்காரனின் பிரேதம், தீ மூட்டப்பட்டது. பிரேதம் சூடு கண்டதும், குறக்குளி இழுத்து, எழுந்து உட்கார்ந்தது. உடனே வெட்டியான், "வட்டி எல்லாம் வசூலாகி விட்டது!' என்றான்.

மீண்டும் படுத்துக் கொண்டது பிரேதம், நிம்மதியுடன்!

— கண்ணதாசன் சொன்ன குட்டிக்கதை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுட்பமான நகைச்சுவை என்பது

காதலியின் திருமணத்தில்

மணமகனை பார்த்து

சிரிப்பதே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எது நிரந்தரம்?

கருணாநிதி, தலைவர், தி.முக., : எங்கிருந்தோ வீசிய புயல் காற்றில், எப்படியோ சிலர், மேலே வந்து விடலாம். ஆனால், அந்த உயர்வு தற்காலிகமானது; உழைப்பிலே, தியாகத்திலே உயர்வதே நிரந்தரமானது. எனவே எது நிரந்தரம், எது தற்காலிகம் என்பதை, வருங்காலச் சமுதாயம் உணர்ந்து, அதற்கேற்ப, தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ATM இயந்திரத்தில் பணம் எடுக்கும் ஆண்.

************************************

1. காரை நிறுத்துவான்.

2. இயந்திரத்தில் அட்டையை செருகுவான்.

3. குறியீட்டு எண்ணை அழுத்துவான்.

4. பணத்தையும் அட்டையையும் சேகரிப்பான்.

5. காரைக் கிளப்புவான்.

ATM இயந்திரத்தில் பணம் எடுக்கும் பெண்.

**************************************

1. காரை நிறுத்துவாள்.

2. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.

3. ஓடிக்கொண்டிருக்கும் எஞ்சினை ஆஃப் செய்வாள்.

4. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.

5. இயந்திரத்தை அணுகுவாள்.

6. கைப்பையில் அட்டையை தேடுவாள்.

7. அட்டையை செருகுவாள்.

8. குறியீட்டு எண்ணை அழுத்துவாள்.

9. அழுத்திய எண்களை ரத்து செய்வாள்.

10. கைப்பையில் எண் குறிப்பை தேடுவாள்.

11. மீண்டும் அட்டையை செருகுவாள்.

12. குறிப்பைப் பார்த்து எண் அழுத்துவாள்.

13. பணத்தை சேகரிப்பாள்.

14. காருக்கு திரும்புவாள்.

15. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.

16. காரை ஸ்டார்ட் செய்வாள்.

17. ஆஃப் செய்வாள்.

18. இறங்கி ஒடுவாள்.

19. இயந்திரத்தில் இருந்து அட்டையை பிடுங்குவாள்.

20. காருக்கு வருவாள்.

22. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.

23. ஸ்டார்ட் செய்வாள்.

24. 1 கிலோ மீட்டர் ஓட்டுவாள்.

25. ஹாண்ட் ப்ரேக்கை எடுத்து விடுவாள்

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட்லாண்டிக் கடலில்.. யு.எஸ். கடற்படை கப்பலின் தலைவர் வானொலி மூலம் விடுக்கும் எச்சரிக்கை..

எதிரில் தெரியும் விளக்குக்கு சொந்தமானது எதுவாக இருந்தாலும் சரி.. உடனே 15 டிகிரி வலப்பக்கம் விலக்கி செலுத்துங்கள்..

கப்பல் தலைவர் அவர்களே.. தயவு செய்து தங்கள் கப்பலை 15 டிகிரி இடப்பக்கம் திருப்பி செலுத்தினால் விபத்தை தவிர்க்கலாம்..

என்ன..? அமெரிக்காவின் போர்க்கப்பல் இது.. உனக்கு உத்தரவிடுகிறேன்.. உடனே வலப்பக்கம் திருப்பு..

எவராக இருந்தால் என்ன.. ? விலகுவது எங்களால் முடியாத காரியம்.. அறிவுடன் செயல்படுங்கள்.. திசையை மாற்றுங்கள்.. அதுவும் உடனே...!!

என்ன.. எங்களுக்கே ஆணையிடுகிறாயா.. ? உலகின் பெரும் வல்லரசு நாட்டின் விமானம் தாங்கிக் கப்பலின் தலைவன் கடைசி முறையாக எச்சரிக்கிறேன்.. உடனடியாக விலகு..

அட முட்டாளே..! இது லைட் ஹவுஸ்.. !!!!

  • கருத்துக்கள உறவுகள்

ATM இயந்திரத்தில் பணம் எடுக்கும் ஆண்.

************************************

1. காரை நிறுத்துவான்.

2. இயந்திரத்தில் அட்டையை செருகுவான்.

3. குறியீட்டு எண்ணை அழுத்துவான்.

4. பணத்தையும் அட்டையையும் சேகரிப்பான்.

5. காரைக் கிளப்புவான்.

ATM இயந்திரத்தில் பணம் எடுக்கும் பெண்.

**************************************

1. காரை நிறுத்துவாள்.

2. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.

3. ஓடிக்கொண்டிருக்கும் எஞ்சினை ஆஃப் செய்வாள்.

4. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.

5. இயந்திரத்தை அணுகுவாள்.

6. கைப்பையில் அட்டையை தேடுவாள்.

7. அட்டையை செருகுவாள்.

8. குறியீட்டு எண்ணை அழுத்துவாள்.

9. அழுத்திய எண்களை ரத்து செய்வாள்.

10. கைப்பையில் எண் குறிப்பை தேடுவாள்.

11. மீண்டும் அட்டையை செருகுவாள்.

12. குறிப்பைப் பார்த்து எண் அழுத்துவாள்.

13. பணத்தை சேகரிப்பாள்.

14. காருக்கு திரும்புவாள்.

15. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.

16. காரை ஸ்டார்ட் செய்வாள்.

17. ஆஃப் செய்வாள்.

18. இறங்கி ஒடுவாள்.

19. இயந்திரத்தில் இருந்து அட்டையை பிடுங்குவாள்.

20. காருக்கு வருவாள்.

22. ஒப்பனையை சரி செய்து கொள்வாள்.

23. ஸ்டார்ட் செய்வாள்.

24. 1 கிலோ மீட்டர் ஓட்டுவாள்.

25. ஹாண்ட் ப்ரேக்கை எடுத்து விடுவாள்

:D

 

இண்டைக்கெண்டு, களத்திற்கு, பெண்கள் அதிகம் வராதபடியால், சுண்டலின் தலை, இன்னும் கழுத்தில் இருக்கின்றது, என நினைக்கின்றேன்!  :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளைய வரலாறு என்னை பற்றி மிகவும் தவறாக இருக்கும்...

நான் சர்வாதிகாரி என்று சொல்வார்கள்...

நான் அதிகமான மக்களை கொன்று குவித்தேன் என்று சொல்வார்கள்....

ஒருநாள் வரும் அப்பொழுது இந்த யூதர்கள் அளிக்க பட வேண்டியவர்கள் தான் என்று நிங்களே சொல்விர்கள் -

உலகிலுள்ள 90 சதவீதம் யூதர்களை நான் அழித்துவிட்டேன், மீதி 10 சதம் பேரை விட்டுச் செல்கிறேன், நான் ஏன் யூதர்களை அழித்தேன் என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக விட்டு செல்கிறேன்...

- ஹிட்லர்...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே இது ஹிட்லரின் வாசகமா? :unsure:

உண்மையை உணர்ந்துதான் எழுதியிருக்கிறார். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணே...

கல்யாண கனவு

உன் கண்ணுக்குள்...

காதலியின் பிரிவு

என் நெஞ்சுக்குள்...

முதல் முறை உன்னை

பார்த்ததும்...

என்னை கொடுதேனடி...

என்னருகில்

நீ வந்தாய்...

வாய் பேச

மறந்தேனடி...

நந்தாவன பூக்கள்

எல்லாம் மணமாலையாகும்...

உன் தோளில்...

என் தோட்டத்து

பூக்கள் எல்லாம்...

இறுதி மாலையாகும்

என் கழுத்தில்.....

  • கருத்துக்கள உறவுகள்

அருகில் வந்தபோது மூளையைப் பாவிச்சு கதைக்க மறந்ததால்தான் கவிதை எழுத நேரிட்டது.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யானைகளின் உயிரை காப்பாற்றிய "வோட்கா'

மாஸ்கோ :ரஷ்யாவில் குளிரில் விறைத்துப் போன இரண்டு சர்க்கஸ் யானைகள், "வோட்கா' உதவியால் உயிர் பிழைத்துள்ளன.

ரஷ்யாவின் சைபீரிய பகுதியில் உள்ளது, நொவொசிபிர்ஸ்க் நகரம். சர்க்கஸ் அமைப்பதற்காக இப்பகுதிக்கு இரண்டு ஆசிய யானைகள், லாரியில் அழைத்து வரப்பட்டன. துருவப் பகுதியை ஒட்டி அமைந்த பகுதி என்பதால், பகல் நேர வெப்பநிலை பூஜ்யம் டிகிரிக்கு இருந்தது. இதனால், 45 மற்றும் 48 வயதுடைய யானைகள், குளிரை சமாளிக்க முடியாமல் நடுங்கிக் கொண்டு வந்தன.திடீரென லாரி இன்ஜினில் தீப்பிடித்ததால், மற்றொரு லாரியில், இந்த யானைகளை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், இந்த யானைகளை, பயிற்சியாளர், தெருவில் நிற்க வைத்திருந்தார். கடுங்குளிரால், யானைகளின் காதுகள் விறைத்துக் கொண்டன. காதுகளை ஆட்ட முடியாமல் யானைகள், உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டு விட்டது.

இதை உணர்ந்த பயிற்சியாளர், அருகிலிருந்த ஒரு கல்லூரிக்குள் யானைகளை அழைத்துச் சென்று, 10 லிட்டர் வோட்காவை, வென்னீரில் கலந்து கொடுத்தார். அதன் பிறகு, யானைகள் சமாளித்துக் கொண்டு வழக்கம் போல், காதுகளை அசைக்கத் துவங்கின.இது குறித்து ரஷ்ய அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில், "வோட்கா தான், இந்த யானைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளது' என்றார்.

Dinamalar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜமைக்காவுக்கு அருகில் உள்ள ஒரு குட்டித்தீவுதான் ஹெயிட்டி. இது தற்போது அடுத்த சோமாலியாவாக மாறி வரும் நாடு. இங்கு மக்கள் மண்ணால் உருவான கேக்கை சாப்பிடுகின்றனர். ஹெயிட்டியை வறுமை வாட்டி வதைக்கிறது. ரொட்டி, பால், அரிசி போன்ற எதையும் இவர்களால் வாங்க முடியாது. கடைசியாக, எப்போது சாப்பிட்டீர்கள் என்று கேட்டால் இங்கு யாருக்குமே அது நினைவில் இல்லை.

குழந்தைகளுக்கு முதல்நாள் இந்த மண் கேக்கை ஊட்டுகின்றனர். மறுநாள் குழந்தை வயிற்றுவலியால் துடிக்கும். அடுத்த நாள் பட்டினி; அதற்கு மறுநாள் வயிறு காய்ந்து குழந்தை அலறும். அப்போது மீண்டும் மண் கேக். இப்படி கொடுத்து, கொடுத்து மண் கேக் அந்த குழந்தைக்கு பழகிவிடும். இந்த கேக்கில் எந்த ருசியும் இருக்காது. பணம் இருந்தால் கொஞ்சம் உப்பு வாங்கி, மண் கேக்கிற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடுவர். இந்த கேக்கை ஒருவகை களிமண்ணால் செய்கின்றனர். விலைவாசி உயர்வு வேறு எந்த நாட்டையும் விட ஹெயிட்டியை கடுமையாக பாதித்திருக்கிறது. சாப்பிட முடியாமல் இறந்து போனவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மீன், ரொட்டி என அனைத்திற்குமே வெளிநாடு களையே நம்பி உள்ளனர். உள்நாட்டில் எந்த உற்பத்தியும் இல்லை. விளைநிலங்கள் என்று எதுவும் இல்லை. எல்லாமே பொட்டல் காடுகள்தான். எஞ்சியிருந்த காடுகளையும் விறகிற்காகவும், கரிக்காகவும் அழித்து விட்டனர். நிலைமையை மீட்டெடுக்கிறோம் என்று 1980ல் ஹெயிட்டியின் பொருளாதார கதவுகளை அந்நாட்டு அரசு திறந்துவிட்டது. எதை வேண்டுமானாலும் இறக்குமதி செய்து கொள்ளலாம். அதற்கு வரிகள் கிடையாது. இதன் விளைவாக வேண்டிய அனைத்தும் கிடைத்தன. ஆனால், விலைதான் வாங்க முடியாத உச்சத்தில் இருந்தது.

போராடத் தொடங்கிய மக்கள் அதனால் எந்த பலனும் கிடைக்காமல் போய், இறுதியில் பிச்சையெடுக்கத் தொடங்கிவிட்டனர். பெண்களும், குழந்தைகளும், வயதானவர் களும் மண் கேக் சாப்பிட்டனர். இளைஞர்கள் பணக்காரர்களை கொள்ளையடித்தனர். இப்படியே வளர்ந்து இன்னொரு சோமாலியாவாக, ஹெயிட்டி மாறி வருவது உலகிற்கு தெரியவந்து, மண் கேக் சாப்பிடும் செய்திகளும், படங்களும் வெளியாகி உலகை உலுக்கிக் கொண்டிருக்கின்றன. பொருளா தாரத்தை சரிவர கையாளும் ஒரு திறன்மிக்க அரசு இல்லாவிட்டால், இதுபோன்ற பிரச்னைகள் தவிர்க்க முடியாதவையே.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒருமுறை கடல் தன்னிடம் என்னென்ன மரங்கள் வந்து சேர்கின்றன என்று யோசித்துக் கொண்டிருந்தது. "ஆறுகள் வெள்ளப் பெருக்கெடுத்து வரும்போது எல்லா வகையான மரங்களையும் இழுத்து வருகின்றன. பெரிய பெரிய ஆல மரங்களும், அரச மரங்களும் அவற்றிடம் தப்பிப்பது இல்லை. இதுவரை எந்த ஆறும் நீர் நொச்சி மரத்தை என்னிடம் கொண்டு வந்தது இல்லை. என்ன காரணமாக இருக்கும்?' என்று சிந்தித்தது.

அதனால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. எல்லா ஆறுகளையும் அழைத்தது அது.

""நீங்கள் எல்லா வகையான மரங்களையும் இழுத்து வந்து என்னிடம் சேர்க்கிறீர்கள். அந்த மரங்களில் நீர் நொச்சி மரத்தை மட்டும் நான் பார்த்தது இல்லை. அந்த மரம் சிறிய மரம். உங்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் அதற்கு இல்லை. நீங்கள் ஏன் அந்த மரங்களைக் கொண்டு வருவது இல்லை? அவை உங்களுக்கு ஏதேனும் உதவி செய்து உள்ளனவா? நன்றியாக நீங்கள் அவற்றைப் பிடுங்குவது இல்லையா? காரணம் தெரிந்து கொள்ளவே உங்களை அழைத்தேன்!'' என்றது.

அதற்கு கங்கை ஆறு, ""கடல் அரசே! நாங்கள் இழுத்து வந்த மரங்கள் எல்லாம் தற்பெருமை கொண்டவை. தங்கள் வலிமையால் எங்களை எதிர்த்து நின்றவை. அதனால் அவற்றை வேரோடு பிடுங்கி இழுத்து வந்தோம். நீர் நொச்சி மரங்களோ நாங்கள் வெள்ளப் பெருக்காக வருவதைப் பார்த்து, எங்களைப் பணிவாக வணங்குகின்றன. பிறகு தலை நிமிர்ந்து நிற்கின்றன. பணிவு உடையவர்கள் என்றும் அழிவது இல்லை; அவமானப்படுவதும் இல்லை. இது உங்களுக்குத் தெரியாதா?'' என்றது.

""நீ சொல்வது உண்மைதான். பணிவு உடையவர்களை யாராலும் அழிக்கமுடியாது!'' என்றது கடல்.

***

Edited by SUNDHAL

ஜமைக்காவுக்கு அருகில் உள்ள ஒரு குட்டித்தீவுதான் ஹெயிட்டி. இது தற்போது அடுத்த சோமாலியாவாக மாறி வரும் நாடு. இங்கு மக்கள் மண்ணால் உருவான கேக்கை சாப்பிடுகின்றனர். ஹெயிட்டியை வறுமை வாட்டி வதைக்கிறது. ரொட்டி, பால், அரிசி போன்ற எதையும் இவர்களால் வாங்க முடியாது. கடைசியாக, எப்போது சாப்பிட்டீர்கள் என்று கேட்டால் இங்கு யாருக்குமே அது நினைவில் இல்லை.

குழந்தைகளுக்கு முதல்நாள் இந்த மண் கேக்கை ஊட்டுகின்றனர். மறுநாள் குழந்தை வயிற்றுவலியால் துடிக்கும். அடுத்த நாள் பட்டினி; அதற்கு மறுநாள் வயிறு காய்ந்து குழந்தை அலறும். அப்போது மீண்டும் மண் கேக். இப்படி கொடுத்து, கொடுத்து மண் கேக் அந்த குழந்தைக்கு பழகிவிடும். இந்த கேக்கில் எந்த ருசியும் இருக்காது. பணம் இருந்தால் கொஞ்சம் உப்பு வாங்கி, மண் கேக்கிற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடுவர். இந்த கேக்கை ஒருவகை களிமண்ணால் செய்கின்றனர். விலைவாசி உயர்வு வேறு எந்த நாட்டையும் விட ஹெயிட்டியை கடுமையாக பாதித்திருக்கிறது. சாப்பிட முடியாமல் இறந்து போனவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மீன், ரொட்டி என அனைத்திற்குமே வெளிநாடு களையே நம்பி உள்ளனர். உள்நாட்டில் எந்த உற்பத்தியும் இல்லை. விளைநிலங்கள் என்று எதுவும் இல்லை. எல்லாமே பொட்டல் காடுகள்தான். எஞ்சியிருந்த காடுகளையும் விறகிற்காகவும், கரிக்காகவும் அழித்து விட்டனர். நிலைமையை மீட்டெடுக்கிறோம் என்று 1980ல் ஹெயிட்டியின் பொருளாதார கதவுகளை அந்நாட்டு அரசு திறந்துவிட்டது. எதை வேண்டுமானாலும் இறக்குமதி செய்து கொள்ளலாம். அதற்கு வரிகள் கிடையாது. இதன் விளைவாக வேண்டிய அனைத்தும் கிடைத்தன. ஆனால், விலைதான் வாங்க முடியாத உச்சத்தில் இருந்தது.

போராடத் தொடங்கிய மக்கள் அதனால் எந்த பலனும் கிடைக்காமல் போய், இறுதியில் பிச்சையெடுக்கத் தொடங்கிவிட்டனர். பெண்களும், குழந்தைகளும், வயதானவர் களும் மண் கேக் சாப்பிட்டனர். இளைஞர்கள் பணக்காரர்களை கொள்ளையடித்தனர். இப்படியே வளர்ந்து இன்னொரு சோமாலியாவாக, ஹெயிட்டி மாறி வருவது உலகிற்கு தெரியவந்து, மண் கேக் சாப்பிடும் செய்திகளும், படங்களும் வெளியாகி உலகை உலுக்கிக் கொண்டிருக்கின்றன. பொருளா தாரத்தை சரிவர கையாளும் ஒரு திறன்மிக்க அரசு இல்லாவிட்டால், இதுபோன்ற பிரச்னைகள் தவிர்க்க முடியாதவையே.

 

 

 

 

விண்வெளிக்கு செலவழிக்கும் பணத்தை பூமிழில் உள்ளவர்களுக்கு பயன்படுத்தாலமே, கெடுகெட்ட உலக மனிதம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொண்ணுங்கலாம் எங்கள டா போட்டு செல்லாமா கதைச்சா நாங்க ஜதார்த்தமா எடுத்துக்கிரம் பட் நாங்க சில பொண்ணுங்க கிட்ட டி போட்டு பேசினா பாம்பு மாதிரி சீறி பாயுறாங்க இது என்னங்க நியாயம் :(:D

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் எதுக்கும் செய்யலாம் சுண்டல் ஆண்கள் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் நீக்கள் டி போடுவதானாலும் கேட்டுப் போட்டுத்தான் போடலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்
பொண்ணுங்கலாம் எங்கள டா போட்டு செல்லாமா கதைச்சா நாங்க ஜதார்த்தமா எடுத்துக்கிரம் பட் நாங்க சில பொண்ணுங்க கிட்ட டி போட்டு பேசினா பாம்பு மாதிரி சீறி பாயுறாங்க இது என்னங்க நியாயம் :(:D

 

கல்யாணம் கட்டிப்போட்டு, நீங்க நல்லா டீ காபீ போட்டு குடியுங்க, அல்ல என்ன வேணுமன்றாலும் செய்யுங்கள்; இப்ப கவனமாக இருங்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொண்ணோட பேசிட்டு இருக்கும் போது உங்களுக்கு என்ன பிடிக்கும் எண்டு கேட்டா வந்த பதில் விளக்கு மாறு........ எஸ்கேப் சுண்டல் எஸ்கேப்.....

ராகு கேது மாற்றம் சும்மா புகுந்து விளையாடுது........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூட்டன் சொல்ல மறந்த விதிகள்

1.வரிசை விதி-

நீங்கள் நிற்கும் வரிசையை மாற்றினால் நீங்கள் விட்டுச் சென்ற வரிசை நீங்கள் இப்போது நிற்கும் வரிசையை விட வேகமாக நகரும்.

2.தொலைபேசி விதி

நீங்கள் தற்செயலாக பிழையான இலக்கத்தைச் சுழற்றினால் ஒரு போதும் அந்த இலக்கம் வேறு அழைப்பில் இருக்காது. உடனடியாகவே உங்களுக்கு இணைப்புக் கிடைத்துவிடும்.

3.இயந்திர பழுதுபார்ப்பு விதி-

உங்கள் கைகள் முழுவதும் கிறீஸ் பட்ட பின்னர் உங்கள் முதுகு அரிக்கத் தொடங்கும்.

4.தொழிற்சாலை விதி-

நீங்கள் தவறவிட்ட எந்தவொரு திருத்தும் கருவியும் எப்போதுமே எடுக்க முடியாத ஒரு இடத்தில் உருண்டு சென்று தஞ்சமடைந்திருக்­கும்.

5.பொய்க்காரண விதி-

நீங்கள் வேலைக்கு பிந்தி வந்ததற்கு காரணம் உங்கள் வாகன ரயர் ஒட்டையானது என நீங்கள் உங்கள் முதலாளியிடம் சொல்வீர்களாயின­் அடுத்த நாள் உண்மையாகவே உங்கள் ரயர் ஓட்டையாகும்.

6.குளிப்பு விதி-

நீங்கள் குளிக்கத் தொடங்கி உங்கள் உடல் முழுவதும் நீரால் நனைந்த பின்னர் உங்கள் தொலைபேசி சிணுங்கும்.

7.சந்திப்பு விதி-

உங்களுக்கு தெரிந்தஒருவரை சந்திப்பதற்கான நிகழ்தகவானது அந்த நபர் உங்களை யாரொடு சேர்த்து காணக் கூடாது என நினைக்கிறீர்களே­ா அவரோடு இருக்கும் போது அதிகம்.

8.வெளிப்படுத்து கை விதி-

ஒரு இயந்திரம் தொழிற்படவில்லை­ என ஒருவருக்கு நிரூபிக்க முற்படுகையில் அந்த இயந்திரம் தொழிற்பட ஆரம்பிக்கும்.

9.திரையரங்க விதி-

நீங்கள் திரையரங்கில் வாசல் ஓரத்தில் அமர்ந்திருக்கைய­ில் உங்கள் வரிசையில் கடைசியாக ஓரத்தில் இருப்பவர்கள் அனைவரும் படம் ஆரம்பித்து நீங்கள் இரசிக்க ஆரம்பித்த பின்னரே வருவார்கள்.

10.கோப்பி விதி-

உங்கள் அலுவலகத்தில் சூடான கோப்பி ஒன்றை பருக அமரும் தருணத்தில் தான் உங்கள் முதலாளி உங்களை அழைத்து பெரிய வேலையொன்றை தருவார். கோப்பி சூடாறி குளிரும் வரையாவது அந்த வேலை கட்டாயம் நீடிக்கும்.

:D

  • கருத்துக்கள உறவுகள்

போக்குவரத்து விதி

 

நீங்கள்   பயணிப்பதற்காக  காத்திருக்கும் போக்குவரத்து   வாகனம் நீங்கள் போக இருக்கும் பக்கத்துக்கு மறு பக்கமாகவே  அதிகம் சென்று கொண்டிருக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

481445_481278511918882_1632524159_n.jpgநன்றி fb

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ படித்தது

அடிக்கடி கோபப்பட்டால் கோபத்திற்கு மரியாதை இல்லை

கோபமே படா விட்டால் எமக்கு மரியாதை இல்லை

சுண்டல் சொல்லுவது

சோ கோப படுங்க பட் கொஞ்சமா கோபப்படுங்க கோபம் வரலியா? அட கோபமா இருக்கிற மாதிரியாவது நடிங்கப்பா.... நமக்கு மரியாதை தானே முக்கியம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.