Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

பனிப்புயலில் சிக்கி வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு அடுத்த Winter க்கு இதை விட குளிருமா என்று விவாதித்து கொண்டு இருக்கும் கனேடிய தமிழர்கள் Australia க்கு புலம்பெயர விரும்பினால் தேவையான உதவிகள் வழங்கப்படும்.....

விலைப்படாத மீன் கருவாட்டு விலைக்கு போகுது. யாருக்காவது வேணுமா?

 

அங்கை போனால் அடுத்த நாளைக்கு பிரிஞ்ச பழைய போட்டிலைலை போட்டு திரும்பி வராமல் நடுகடலுக்கை தாட்டுவிட கோத்தாவுக்கு ஒரு கொஞ்சம் பணமும் கொடுப்பார்களாகும்.  :D

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வருடம் தடை செய்யப் படவேண்டும் எனக் கருதப் படும் ஆங்கில வார்த்தைகள்.

அமெரிக்காவின் LSSU எனப்படும் பல்கலைக் கழகத்தால் கடந்த 39 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் ஆங்கில அகராதியில் தடை செய்ய வேண்டும் என்று கருதப் படும் சொற்களின் பட்டியல் வெளியிடப் படும்.

அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மிக மோசமாகப் பாவிக்கப் பட்டு இவ்வருடம் தடை செய்யப் பட வேண்டும் என்று கருதப்படும் சொற்களின் பட்டியலில் சமீபத்தில் oxford அகராதியில் புதிதாகச் சேர்க்கப் பட்ட (Selfie) என்ற வார்த்தை அடங்கியுள்ளது.

Selfie தவிர்த்து மற்றைய வார்த்தைகளாக 'Twerking' மற்றும்

'hashtag' ஆகியவை உள்ளடக்கப் பட்டுள்ளன. இந்த வார்த்தைகளை நீக்குவதற்குக் குறித்த பல்கலைக் கழகம் கூறும் காரணம் ஒன்று இவை தவறாகப் பாவிக்கப்படுதல் அல்லது அளவுக்கு அதிகமாகப் பாவிக்கப் படுதல் அல்லது பிரயோசனமற்றவை என்பதாகும்.

கடந்த வருடம் இப்பட்டியலில்

'double down',

'bucket list'

'YOLO'

ஆகியவை அடங்கியிருந்தன.

இந்நிலையில் 2014 இல் தடை செய்யப் பட வேண்டும் என மும்மொழியப் பட்ட வார்த்தைகளில் 'Selfie' என்பது தனது ஸ்மார்ட் ஃபோன் மூலம் தன்னைத் தானே எடுக்கும் புகைப் படத்தையும்

'Twerk' என்பது ஒரு பிரசித்தமான பாடலுக்கு ஆபசாமான நடன அசைவுகளுடன் கூடிய நடனத்தையும்

'Hashtag' என்பது கணனித் தட்டச்சில் # எனும் குறியீட்டுடன் டுவிட்டரில் பதியப் படும் சொல்லையும் குறிப்பன ஆகும்.

கறுப்பின தலைவர் தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மரண சடங்கில் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்டவர்கள் தங்களை தாங்களே புகைப்படம் எடுத்ததன் மூலம் இந்த selfie என்ற வார்த்தை பிரபலமானவை குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது வரும்கால சந்ததிக்கு எமது அடையாளத்தை , மொழியை, கலாச்சாரத்தை கற்றுக்கொடுக்காமால் வெறும் பணத்தையும், படிப்பையும், சொத்தையும் கொடுத்து என்ன செய்ய போகின்றோம்?

வேரை இழந்த விழுதுகளாக ,அடையாளத்தை இழந்த அனாதைகளாக , கலாச்சாரத்தை இழந்த மக்களாக "அகதிகள்" என்ற அடையாளத்தோடு தொடர்ந்தும் இருக்க போகின்றோம்.....

இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகள் போய் வெளிநாடுகளில் உருவாகின்ற எமது சந்ததி .....அடையாளத்தை தேடி தமது வேரைத்தேடி அலைய போகின்றது......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகில் எந்த யுத்த களத்திலும் அதியுச்ச போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு குறுகலான சிறிய இடத்தில் வைத்து அந்தப் போராட்ட வேளையிலே யுத்த கோரத்தாண்டவங்களை நேரடியாக எவரும் ஒலிப்பரப்பு செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.

ஆனால், விடுதலைப் புலிகளோ… கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில், ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் வைத்து "தவபாலன்" என்ற போராளி தான் சுடப்பட்டு இறக்கும் வரை “புலிகளின் குரலை” இறுதி வரை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தார். அவ்வாறு சில போராளிகளும் பட ஒளிப்பதிவுகள் செய்தமையும், வீடியோக்களை பதிவுசெய்து வெளிநாடுகளுக்கும் அனுப்பியதாலும், மக்களின் பேரவலங்கள் இன்று உலகின் பார்வைக்கு வந்தது! விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களே…! உங்கள் சுயமூளையுடன் சற்று சிந்தியுங்கள்..! உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் வளர்ந்ததும் இல்லை!, வாழ்ந்ததும் இல்லை!இந்த இருபத்தியோராம் நூற்றாண்டுவரை உலகில் எந்த விடுதலை அமைப்பு, விடுதலைப் புலிகள் போல் போராடினார்கள்?

·

உலகில் எந்த யுத்த களத்திலும் அதியுச்ச போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு குறுகலான சிறிய இடத்தில் வைத்து அந்தப் போராட்ட வேளையிலே யுத்த கோரத்தாண்டவங்களை நேரடியாக எவரும் ஒலிப்பரப்பு செய்து கொண்டிருக்க மாட்டார்கள்.

ஆனால், விடுதலைப் புலிகளோ… கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில், ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் வைத்து "தவபாலன்" என்ற போராளி தான் சுடப்பட்டு இறக்கும் வரை “புலிகளின் குரலை” இறுதி வரை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தார். அவ்வாறு சில போராளிகளும் பட ஒளிப்பதிவுகள் செய்தமையும், வீடியோக்களை பதிவுசெய்து வெளிநாடுகளுக்கும் அனுப்பியதாலும், மக்களின் பேரவலங்கள் இன்று உலகின் பார்வைக்கு வந்தது! விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களே…! உங்கள் சுயமூளையுடன் சற்று சிந்தியுங்கள்..! உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் வளர்ந்ததும் இல்லை!, வாழ்ந்ததும் இல்லை!இந்த இருபத்தியோராம் நூற்றாண்டுவரை உலகில் எந்த விடுதலை அமைப்பு, விடுதலைப் புலிகள் போல் போராடினார்கள்?

·

 

இறைவன் என்ற சங்கேத பெயருடன், பெரும்பாலான நிகழச்சிகளை தொகுத்து வழங்கியதுடன், மக்கள், ஏன் சில வேளைகளில் போராளிகளை, கூட கடைசிவரை கட்டுகோப்பாக வைத்திருந்தமைக்கு தவபாலனுக்கும் புலிகளின் குரலுக்கும் தலைவணங்குகிறேன்.

 

பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும், புதுக்குடியிருப்பு - பரந்தன்  வீதி ராணுவத்திடம் விழும் தறுவாயிலும், தேவிபுரம் காட்டுவழியாக நீர்த்தேக்கம் ஊடாக, புலிகளின் குரல் வானொலி உபகரங்களை, தலையில் காவியபடி கந்தல் உடையுடன் தவபாலனும், ஜவானும் கண்   முன்னே வந்து செல்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொழி தெரியாமல்.....இனம் தெரியாமல்....உறவுகள் தெரியாமல்.....தங்கள் வரலாறு தெரியாமல் மெல்ல மெல்ல ஒரு தலைமுறை உருவாகிக்கொண்டு இருக்கின்றது......

என்ன செய்ய போகின்றோம் உறவுகளே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sundal: இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Nandu: ஹலோ இன்னிக்கு மாட்டுப்பொங்கல்.. ஏங்கிட்ட ஏன் சொல்றீங்க?

Sundal: எனக்கும் தெரியும்.. நான் மாட்டுக்கிட்ட தானே சொன்னேன்.. நீங்க எப்ப என் முன்னாடி வந்தீங்க..

  • கருத்துக்கள உறவுகள்

நந்தனுடைய  தம்பிக்கும்  வாழ்த்துக்கள்.............. :lol:  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் ஆமாம் அப்பிடியே அவரோட அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்.......

:D

நந்தன் அண்ணா : ச்சாய் இவங்க கூட ஒரே குஷ்டமப்பா :D

  • கருத்துக்கள உறவுகள்

Nandu: ஹலோ இன்னிக்கு மாட்டுப்பொங்கல்.. ஏங்கிட்ட ஏன் சொல்றீங்க?

 

மாட்டு பொங்கல்.  முன்பெல்லாம் மாட்டினா களிதான் கிடைக்கும் என்று சொல்வார்கள். இப்போ பொங்கலா! 'கிரிபத்' முன்னேற்றம்தான்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தோற்க்கடிக்கப்பட்டிருக்கலாம்

எங்களுக்கு நம்பிக்கையாக இறுதி வரை எங்களோடு நின்றவர்கள் எங்களை ஏமாற்றி இருக்கலாம்..... யாரெல்லாம் உதவிக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தோமோ அவர்கள் எங்களை கைவிட்டிருக்கலாம்.......

பட்ட அனுபவங்களையும் தோல்விகளையும் பாடமாக கொண்டு எமது எதோ ஒரு சந்ததி வெற்றியை பெற்றுத்தரும் அதுவரை பொறுமையோடு தளராமல் இரு தமிழினமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மற்றவங்க நடந்து போனா வீதி வெறும் வீதி நீ தெருவில் நடந்து போனால் எனக்கு செய்தி தலைப்பு செய்தி..... நந்தன் அண்ணா பாத்துப்புட்டா உனக்கு வரும் வாந்தி...... அதை அவரு பாத்துப்புட்டா பேதி அவருக்கு பேதி

http://youtube.com/watch?v=HS620p1M75o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் அதிபர்களாக வர்றவங்க எல்லாம் பெண்கள் தொடர்பான சர்ச்சைகளில் சிக்கி சீரழிவதே வேலையா போச்சு ஆஸ்திரேலியா அரசியல்வாதிகள் இந்த விஷயத்தில் பருவால்ல.... திருமண பந்தங்களுக்கு இல்லது bf , gf relationship க்கு மதிப்பு கொடுக்க கூடியவங்கலாவே இருக்காங்க

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் அதிபர்களாக வர்றவங்க எல்லாம் பெண்கள் தொடர்பான சர்ச்சைகளில் சிக்கி சீரழிவதே வேலையா போச்சு ஆஸ்திரேலியா அரசியல்வாதிகள் இந்த விஷயத்தில் பருவால்ல.... திருமண பந்தங்களுக்கு இல்லது bf , gf relationship க்கு மதிப்பு கொடுக்க கூடியவங்கலாவே இருக்காங்க

 

நாங்க  எப்படியோ

அரசரும் அதே வழி

எங்க வழி

தனினினினீ  வழி............ :icon_mrgreen:  :icon_mrgreen:

 

அது சரி

இன்றைக்கு +46 

ஆஸ்திரேலியா 

உறவுகள் எரிந்து கறுத்து    போய்விடாதீர்கள்....... :lol:  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம பக்கம் 36 தான் :D

46 க்கு போனால் தான் நிறைய கண்கொள்ளா காட்சிகளை பார்க்கலாம் :D

நம்ம பக்கம் 36 தான் :D

46 க்கு போனால் தான் நிறைய கண்கொள்ளா காட்சிகளை பார்க்கலாம் :D

 

கணகொள்ளா காட்சியளெண்டு காட்டுத் தீவழிச்சா தள்ளிவிழுத்துற பிளான்?!  :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்க எல்லாம் எரிமலை அண்ணே காட்டுத்தீ எல்லாம் எங்க பக்கத்த அண்டாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்கவி

புலிகளின் குரல் வானொலியில் பணிபுரிந்தவர். பாடகி, கேமிரா விமன், எடிட்டர், தயாரிப்பாளர், எழுத்தாளர். ஊடகத்தின் அத்தனை துறைகளிலும் அனுபவம் வாய்ந்தவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் மூன்று மொழிகளையுமே சரளமாகப் பேசக்கூடியவர்.

ஈழத்தின் கடைசிக்கட்ட போர் அனுபவங்களை நாவலாக எழுதியிருக்கிறார். ‘ஊழிக்காலம்’, தமிழினி வெளியீடாக வெளிவந்திருக்கிறது. போரின் வலி நேரடி சாட்சியமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நாவலை எழுத எவருக்குமில்லாத தகுதி அன்னை தமிழ்க்கவிக்கு உண்டு. ஏனெனில் தன்னுடைய இரண்டு மகன்களை போரின் பசிக்கு உணவாக கொடுத்த அவலமான அனுபவம் அவருக்கு இருக்கிறது.

போரிலக்கியம் என்கிற வகையில் வகைப்படுத்தக்கூடிய இந்நாவல், தமிழின் மிக முக்கியமான ஆக்கங்களில் ஒன்றாக நிச்சயம் இடம்பெறப் போகிறது என்று நம்புகிறேன்.

Thanks yuva FB

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சர்தார்ஜி வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்குத் தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.மு ன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.

அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு இன்னொரு சர்தார்ஜி வந்தார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார். "கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2014ஆம் ஆண்டுக்கான JAAS 19 வயது ஆண்களுக்கான உதைபந்தாட்ட போட்டியில் அரையிறுதியாட்டத்தில் மகாஜனாக் கல்லூரியை எதிர்த்து மானிப்பாய் இந்தக் கல்லூரி மோதவுள்ளது இப் போட்டி எதிர் வரும் திங்கக்கிழமை இரவு 07.30 மணிக்கு மின்னொளியில் மானிப்பாய் இந்தக் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தலைவரின் படத்தை போஸ்டர்களில் போட தமிழக அரசு ரகசியமான முறையில் கடும் தடை விதித்து வருகின்றது இம்முறை பொங்கல் பண்டிகைகளுக்காக நாம் தமிழர் அமைப்பினர் ஒட்டிய போஸ்டர்கள் மற்றும் கட் அவுட் களில் எல்லாம் தேசியத்தலைவரின் முகத்தை உருமறைப்பு செய்து வெறும் சீருடையணிந்த அவரின் உடல் பகுதியை மட்டும் போட்டிருந்தார்கள் அந்தளவிற்கு கடுமையான தடைகளை ஏற்படுத்தி வருகின்றது ஜெயலலிதா அரசு

இயக்குனர் களஞ்சியம் அவர்கள் முக நூலில் எழுதியது

திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம்

தோழர்களே வணக்கம்.

இன்று காலை நான் வீட்டில் இருந்து அலுவலகம் வந்துகொண்டிருந்த பொது 100அடி சாலை லக்ஸ்மன் சுருதி சந்திப்பில் ஒரு பதாகை பார்த்தேன்.நாம் தமிழர் கட்சியின் இளம் தோழர்கள் வைத்துள்ள பொங்கல் வாழ்த்து பதாகை.அதில் தமிழ்தேசிய தலைவரின் புகைப்படத்துக்கு பதிலாக தமிழிழ விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்து உள்ளனர்.கவலை அளிக்கிறது தோழர்களே...

தமிழ் நாட்டில் தமிழ்தேசிய தலைவர் படங்களை பயன்படுத்த இயலவில்லையே என வெக்கமாக இருக்கிறது.

ஆளும் ஈழாத்தாய் அரசு அவ்வளவு நெருக்கடி கொடுக்கிறது.மேடைகளில் கொந்தளிக்கும் நமது தோழர்கள் வாய் மூடி மௌனிகளாக இருப்பது தான் வேதனையளிக்கிறது...

''துணிந்து தலைவர் பிரபாகரன் புகைப்படத்தை போட்டு சுவரொட்டி அடித்தால்,பதாகை வைத்தால் என்ன செய்துவிடுவார்கள் தோழர்களே...உயிரைய எடுத்து விடுவான்.இனி ஒருபோதும் மேலே உள்ளது போல செய்யாதீர்கள் என பதாகையில் உள்ள தோழர்களுக்கு சொன்னேன்.

ஆகவே,

புகைப்படத்தை போட்டு அடிக்கணும்.

அல்லது

புகைப்படங்களை போடாமல் அடிக்கணும்.

இது போல வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்.

வேறு யாரும் தோழர்கள் இப்படி செய்யக்கூடது என்பதற்காக தான் இந்த பதிவிடுகிறேன்.

எனது நோக்கம் நாம் தமிழர் கட்சியை தூற்றுவதோ,அல்லது பதாகை வைத்துள்ள தோழர்களை காயப்படுத்துவதோ இல்லை.

அரசுக்கு எதிராக போராடும் மனநிலையை உருவாக்குவத்கு தான்.

Fb

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனுஷர் முதல் வேலையா போய் ஹிந்தி படிக்கணும் போல இருக்கு வேலையில .... கானுற இடத்தில எண்டு ஹிந்தி ல பேசுறாங்க ....பாரத தேசத்து மக்கள் அதுவும் பொண்ணுங்க ஹிந்தி ல பேசினா தெரியாட்டியும் தலைய தலைய ஆட்ட வேண்டியதா இருக்கு அவ்வ்....

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி: சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?
திருடன்: ஆமா எஜமான்! சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பா : டேய் பேஸ்புக்லையே இருக்கியே உனக்கு வேலை இல்லையா?

குமார் : நான் பேஸ்புக்ல இருக்குறதையே பார்த்துட்டு இருக்கியே உனக்கு வேலை இல்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிட்டுக் கொண்டிருந்த கர்ணனிடம் யாசகத்திற்குப் போனார் ஒரு அந்தணர். பக்கத்தில் இருந்த தங்கக்காசுகளை இடது கையில் எடுத்து அவரிடம் கொடுத்தானாம் கர்ணன். ‘‘இது அவமரியாதையில்லையோ? இடது கையில் யாசகம் தரலாமா?’’ என்கிறார், அந்தணர்.

பணிவோடு கர்ணன் சொல்கிறான்: ‘‘கொடுக்க வேண்டும் என்று தோன்றியவுடன் கொடுத்துவிடவேண்டும். சாப்பிட்டு கை கழுவிப் பின் வலது கையால் கொடுக்கலாம் என்பதற்குள் சில சமயம் மனம் மாறிவிடும். அதனால்தான் உடனே இடக்கையில் கொடுத்தேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.