Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸ்: பயங்கரவாதத்தை ஒழிக்க சீனாவுக்கு இலங்கை பக்கபலமாக இருக்கும்!- ஜனாதிபதி மகிந்த

சுண்டல்: ஆமா பதிலுக்கு இலங்கையில் கொசுக்களை ஒழிக்க சீனா பக்க பலமாக இருந்து கடன் உதவி வழங்கும்.

கொய்யாலே இலங்கையின் அலட்டல் தாங்க முடியல்லப்பா

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

...அதனால் தான் பாரததேசம் முழுவதும் கோவில்களில் சமஸ்கிருதத்தை நம் முன்னோர்கள் நடைமுறைப் படுத்தி வைத்துள்ளார்கள்.

தமிழ் நாட்டுக்கோவில்களில் தமிழ்மொழி அர்ச்சனை என்றால் மொழியால் ஆந்திரனாய், மகராஷ்டிரனாய்,ஒரிசாகாரனாய் இருக்கும் மக்களுக்கு எந்த மொழியில் அர்ச்சனை செய்வது?

....

காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை இந்த மக்களை ஒன்றிணைப்பது சமஸ்கிருதம். அது எதோ ஒரு ஜாதியின் மொழி என்பது இந்த தேசத்தை நாசமாக்க நினைக்கும் துரோகிகளின் ஓலம்.

Thanks FB

 

கொடுமையின் உச்சம். :wub:

 

என் வழியில், எனக்கு புரியும் மொழியில் தான் கடவுளை நாம் காண முடியும்.

 

திண்ணன் என்ற வேடவன் தனக்கு தெரிந்த வழியிலேயே  கடவுளை வணங்கினான். தன் காலால் சிவனின் கண்ணை மிதித்து தன் கண்ணையே அளித்து அருள் பெற்றான்.

 

இறையை அடைய எந்தமொழியும் உகந்ததே. இதில் சமஸ்கிருதம், இணக்கப்பாடு என்று ஏமாந்தால் எம்மை இன்னொருவன் ஏறி மேய்க்கவே இடம் கோலும்.

 

இந்நோக்கு வன்மையாக கண்டிக்கபட வேண்டியதாகும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில MSN இப்போ Face book எண்டு நாம கடலை போட அவ்வப்போது புதுசு புதுசா எதோ ஒண்ணு வந்துகிட்டே தான் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில MSN இப்போ Face book எண்டு நாம கடலை போட அவ்வப்போது புதுசு புதுசா எதோ ஒண்ணு வந்துகிட்டே தான் இருக்கு

 

ஆக மொத்தத்தில் இவ்விடலை, சுடலை வரைக்கும் கடலையே போட்டுகொண்டிராமல், சீக்கிரம் ஒரு நங்கையின் மடலை பிரிக்க வேண்டுதல்கள்! :lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராஜவன்னியன் அண்ணா அதே கருத்துக்கு இன்னும் ஒருவர் முக நூலில் எழுதியதை அப்பிடியே தருகின்றேன்.....

நான் இணைத்த முதல் இணைப்பை எழுதியவர் ஒரு பா ஜ க விசுவாசி இதுக்கு அவருக்கு இன்னுமொருவர் கொடுத்த பதில்

தமிழ் வரலாற்றில் ஆரியமும் தமிழும் ஒன்றாகவே இணைபிரியாமல் வழக்கில் இருந்துள்ளது. எந்த ஒரு அறிக்கையிலும் முன்னுரையாக கடவுள் வாழ்த்து ஆரியத்திலும், அதைத் தொடர்ந்து தமிழிலும் இருக்கும். தமிழ் இலக்கணம் நன்னூல் வடசொல் இலக்கணத்தைத் தழுவியது எனக் கூறுகிறது. தமிழுக்கு நான்கு சொற்கள். இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல். வடசொல் என்பது தமிழின் இலக்கியங்கள், கலைகள்,குறித்த நூல்கள் எழுத் வழக்கில் இருந்தது. இறை வணக்கம் விஞ்ஞானம், பரதம், பாட்டு காலக் கணிதம் ஆகியவை வடசொல்லில் இருந்தது.அனைத்து அரசர்களுக்கும் தமிழிலும் வடசொல்லிலும் பெயர்கள் இருந்தன. இறைவனுக்கும் தமிழில் மற்றும் வடசொல்லில் நாமங்கள் உள்ளன. தொல்காப்பியரின் வடசொல் பெயர் த்ரண்துமாக்னி என்பதாகும். ஆரியம் எனும் சமஸ்க்ருதம் தமிழருடையதே. உலகின் அனைத்து நாகரீகங்களுக்கும் 4 மொழிகள் வழக்கு உண்டு. இயல்பாக பொதுமக்கள் பேசும் மொழி, இறைமொழி, பிரபுக்கள் மொழி, அரசியல் மொழி என தனித்தனி மொழி வழக்கு இருந்துள்ளது. சீனாவிலும் நான்கு மொழி வழக்கில் இருந்தது.தமிழனுடைய மொழி தான் வடசொல்லான ஆரியம்.

நீங்கள் பதிந்த கருத்தையும் அவரின் முகநூல் சுவற்றில் அப்பிடியே பதிவு செய்துளேன் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கம்யூனிஸ்ட்க்களுக்கு அம்மா சீட் கொடுப்பாவா மாட்டவா?

"தாபா"

க்கு Bp எகிறிட்டு இருக்கு

ரஷ்ய அமெரிக்கா சண்டை வருமா வராதா என்றத விட இதில தான் டென்ஷன் ஜாஸ்தியா இருக்கு

தமிழ் நாடு அரசு சுற்றுலாத் துறையைப் பேண பல மொழிகளைப் பாவிக்கட்டும். சைவர்களுக்கு ஆன்மீகத்தை பேன தமிழ் போதும்.

Edited by மல்லையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

கம்யூனிஸ்ட்க்களுக்கு அம்மா சீட் கொடுப்பாவா மாட்டவா?

"தாபா"

க்கு Bp எகிறிட்டு இருக்கு

ரஷ்ய அமெரிக்கா சண்டை வருமா வராதா என்றத விட இதில தான் டென்ஷன் ஜாஸ்தியா இருக்கு

இதை பிபிசி காரன் எப்படி சுத்தி சுத்தி கேட்டாலும், இந்த தாபா வும் அந்த வரதராசனும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கு என்று சொல்லி கொண்டே இருக்கினம். இப்போ கொஞ்ச நாளா சூடா வேற சொல்லினம். :o 

எனக்கு என்னமோ தேர்தல் முடியும் வரை பேச்சு வார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கும் என்று பட்சி சொல்லுது. :icon_idea: 

எல்லாம் அந்த அம்மம்மாவுக்கே சீ அம்மாவுக்கே வெளிச்சம். :lol:  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் எனக்கென்னடா அம்மா ஆப்படிச்சிட்டா போல தான் இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மா.சு – குஷ்பு போட்டி

தென் சென்னையில் மா.சுப்பிரமணியம் பெயர் உறுதியாகிவிட்டதாம். ஆனால், குஷ்புவை நிறுத்துவதில் கருணாநிதி முடிவாக இருக்கிறாராம். இதனால் தலைவர், பொருளாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர்.

சபாஷ் இனி தளபதியும் கட்சியை விட்டு நீக்கப்பட்டு குஷ்பூ தலிவிர் ஆனாலும் ஆகிடுவா போல இருக்கே அந்தளவுக்கு தலிவிர் மனசு பூரா பூ தான் i mean குஷ்பூ தான் :D

கருணாநிதி குடும்பத்திற்காக கழகத்தை அழித்தவர். இப்போ கழகத்தை ஜெயலலிதாவிடமிருந்து காக்க குஸ்பூவை ஏற்றுகிறார்.

 

kuspoo-jayalalitha-homepage.jpg

 

தமிழகத்திலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மாகாராஸ்டிரம் என்று போய் இத்தாலி ஈரான் ஈராக்கு என்றுதான் முடியும் போலிருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குஷ்பூட origin ஆப்கானிஸ்தான் பா :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமா இது எத்தினையாவது ஜெனிவா மாநாடு? இடையில கவுன்ட் பண்ணுறத விட்டிட்டன் ......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ வந்த ஆணும் பெண்ணும் பொம்மையாட்டம்...... வாழுகின்ற வாழ்க்கை ஒரு பொம்மலாட்டம்......

இப்போல்லாம் தமிழ் சினிமா பாட்டுகளை விட சீரியல் பாட்டுகள் நல்லாவும் இருக்கு அர்த்தங்கள் பொதிந்ததாகவும் இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொன்று தொட்டு கிறிஸ்தவர்களாக இருந்து வந்த மேற்கத்தைய சமுகம் மெல்ல மெல்ல தங்கள் மதத்தை மறந்து வரும் நிலையில் ..... இப்போ எல்லாம் மக்கள் வரத்து இல்லாமல் தேவாலையங்கள் எல்லாம் வெளிநாடுகளில் விற்கப்படும் நிலையில் இப்பொழுது கிறிஸ்த்தவ மதத்தை ஓரளவு தாங்கி நிற்பவர்கள் இடையில் சலுகைகளுக்காகவும் தேவைகளுக்காகவும் மதம் மாறிய அல்லது மாற்றப்பட்ட ஆபிரிக்கர்களும் ..... இலங்கை இந்திய மற்றும் சில ஆசிய நாடுகளை சேர்ந்த மக்களுமே.....மற்றவர்களை மதம் மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருப்பவர்களும் இவர்களே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் அனைத்து இடங்களிலும், நீக்கமற நிறைந்திருப்பவன் என்று சொன்னால், நாத்திகவாதிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நாத்திகர்கள் சொல்வதை, ஆன்மிகவாதிகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதேசமயம், ஆன்மிகவாதியோ, நாத்திகவாதியோ யாராக இருந்தாலும், அனைவரையுமே கோப உணர்ச்சி ஆட்டிப் படைக்கிறது என்ற உண்மையை, ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.

கோபத்திற்கு, இன, மொழி, நாடு, வயது, ஆண், பெண், ஊர்வன, பறப்பன, நடப்பன என்று, எந்த பேதமும் இல்லை அரை விநாடியில் கோபப்பட்டு, ஆயுள் முழுவதும் துயரப்படுவோர் நம்மில் அநேகர் உண்டு. கோபத்தின் கொடுமையை விளக்கும் கதை இது:

கலியுகம் துவங்கும் நேரம். காமன், கோபன் எனும் இருவர் உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தனர். அப்போது கட்டியங்காரன், காமனின் குணாதிசயங்களை விவரித்துக் கொண்டு வந்தான். 'காமனுக்கு அடிபணியாத உயிர்கள் இல்லை; அவன், பெரும் பெரும் முனிவர்களைக் கூட, வசப்படுத்தி இருக்கிறான். அப்பேற்பட்ட சக்தி படைத்தவன்...' என்று, காமனின் ஆற்றலை கூறினான்.

அப்போது கட்டியங்காரனின் அருகில் இருந்த கோபன், 'கட்டியங்காரனின் பேச்சை யாரும் நம்பாதீர்கள். சின்னஞ்சிறு குழந்தைகளிடம், காமனின் ஆட்டம் செல்லாது. நோயாளிகள் மற்றும் முதியவர்கள், ஆகியோரிடமும் காமனின் ஆற்றல் அடிபட்டு போய் விடும். ஆனால், கோபனான என் சக்தி தான் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகும். ஆண், பெண், படித்தவன், படிக்காதவன், பெரியவன் - சிறியவன், ஏழை - பணக்காரன், நோயாளி- ஆரோக்கியசாலி என, அனைவரையும் ஆட்டிப் படைப்பேன்.

'மா முனிவர்களை கூட ஆட்டிப் படைத்து, அவர்களின் தவ ஆற்றலை தள்ளாட வைத்திருக்கிறேன். எனக்கு கால நேரம், இடம், பொருள் என்பதெல்லாம் கிடையாது. தாய் - தாரம், தகப்பன் - பிள்ளை, குரு - சிஷ்யன் என, எல்லா பேதங்களையும் அடித்து நொறுக்கி, அனைவரையும் குப்பையாக்குபவன் நான். சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகி எரிந்து போனவன் காமன். ஆகையால், காமனை விட கோபனான நான் தான் பெரியவன்...' என்று, சொல்லி முடித்தான்.

உண்மை தானே... கோபத்தை விட, கொடுமை உண்டா? சற்று அமைதியாக இருக்கும் போது, கோபத்தின் கொடுமையை, அதனால், ஏற்படும் விளைவை யோசித்தால், கோபம் கொள்வது சரியா, தவறா என்பது நமக்கே புரியும்.

பி.என்.பரசுராமன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருவிகளின் தத்தக்க பித்தக்க #3011

சூரியன சுத்தினால் வெந்து போவீர்கள்.........

சுடிதார சுத்தினால் நொந்து போவீர்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கம்யூனிஸ்ட் கட்சிகள் அ தி மு க வில் 8 சீட்க்களுக்கு மேல் தர கோரிக்கை......

அடப்பாவிங்களா இது உங்களுக்கே ஓவரா இல்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தீர்மான நகல் என்பதற்கு பதிலா அமெரிக்கா தீர்மானம் "நக்கல்" என்று சொல்லலாம்.....

மீண்டும் மீண்டும் தமிழ் ஊடகங்களை நம்பி ஏமாறும் தமிழினம்.....

சிங்கள ராஜதந்திரம் மீண்டும் வெற்றி பெற்றுகின்ற்றது.......வெறும் சர்வதேசத்தை நம்பிக்கொண்டு இருக்காமல் இலங்கை அரசுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வாவேண்டிய நேரம் இது என்று காலம் எமக்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தி நிற்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தீர்மானத்தில் சர்வதேச விசாரணையை கோரி இருப்பதாக கூறி தமிழ் மக்களை முட்டாளாக்கும் ஒரு பொய் பிரச்சாரம் தமிழ் ஊடகங்களாலும் ஈழ ஆதரவு முகப்புத்தாக பக்கங்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருவதை யாரும் நம்பி விடாதீர்கள் அந்த தீர்மானத்தில் எந்த ஒரு வார்த்தையும் அப்பிடி இல்லை அமெரிக்கா சமர்பித்து இருப்பது ஒண்டுமே இல்லாத வெறும் வெற்றுக்காகிதம் என்று சொல்லலாம்

குருவிகளின் தத்தக்க பித்தக்க #3011

சூரியன சுத்தினால் வெந்து போவீர்கள்.........

சுடிதார சுத்தினால் நொந்து போவீர்கள்.....

 

 

சுத்தாமல் இருங்கோ!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சர்ச்சில் பாதர், பிரார்தனைக்கு வந்திருந்தவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்..."

இந்த கூட்டத்தில் இருப்பவர்களில் யார் யார் எல்லாம் சொர்கத்திற்கு போக விரும்புகின்றீர்கள்? சொர்கத்திற்கு போக விரும்புவர்கள் எல்லோரும் எழுந்திருங்கள் பார்கலாம்" என்று.

மிகவும் சோர்வாக இருந்த ஒருவன் தூங்கி விட்டான் ..

அவனை தவிர அனைவரும் எழுந்து நின்றனர்....

பிறகு பாதிரியார் சொன்னார் " அனைவரும் அமருங்கள்.. இப்போது நரகத்திற்கு போக விரும்புபவர்கள் எல்லோரும் எழுந்திருங்கள்... " என்று.

அனைவரும் உட்காரும் சத்தம் கேட்டு, தூங்கிக் கொண்டிருந்தவன் மட்டும் எழுந்து நின்றான்.

அவனை பார்து ஆச்சிரியப்பட்ட பாதிரியார் கேட்டார்.." உன்மையாக இது தான் உங்கள் விருப்பமா?" என்று..

தூக்கத்தில் எழுந்தவன் திரு திரு என்று முழித்த அவன் சொன்னான்

" பாதர்.. நீங்கள் எதை பற்றி கேட்கின்றீர்கள் என்று தெரியவில்லை ஆனால்

நிற்பது நீங்களும்... நானும் தான்!"

பாதர் ..........??????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணி இல்லைன்னு அதிமுக சொல்லிவிட்டதே...: கதறியழுத தா. பாண்டியன்

அதான் சொல்லிட்டாங்கல்ல இனி கடைய மாத்துங்கையா......

உங்களுக்கு கம்யூனிஸ்ட் எண்டு பேரு தான் ஆனா வெக்கம் மானம் சூடு சுரணை எதுவுமே இல்லாத கம்யூனிஸ்ட் காரனுங்க நீங்க இனி கருணாநிதியின் காலடியில் விழுந்து கெஞ்சுவீர்கள் .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் மேர்வின் சில்வாவை கடித்த அவரது வீட்டு நாய்

கொய்யாலே இதுக்கு தான் சொல்லுறது ஒரு வீட்ல ரெண்டு இனம் இருக்க கூடாதுன்னு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பப்பப்பா யாரு யாரு கூட சேருவாங்கண்ணே தெரியல்லியே.....கூட்டணி அமைக்க பெரிய அக்கப்போரே நடக்குது.....தி மு க பலத்த தோல்வியை தழுவும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் இப்பொழுது தி மு க ஒரு எதிர்பாராத வெற்றியை அடைய போகின்றது.....

ஜெயலலிதா தனித்து நின்று மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கின்றார்......30 க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெல்ல வாய்பிருந்தும் தனது வெற்றியை 20 க்குள் அடக்கிவிடப்போகின்றார்

இதில் மிகப்பெரிய பரிதபத்துக்குரியவர் வைக்கோ..... தோல்வி நிச்சியம் என்று தெரிந்தும் பா ஜ க வுடன் கூட்டணி....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.