Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சில நாட்களாக சுண்டுவை இந்தப் பக்கத்தில் காணவில்லை.

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விடுமுறைக்காலமாகிய இந்த இரு மாதங்களின் போதும்

ஆட்களைத்தேடுவது சரியன்று

ஆனால் இந்த அன்பைப்புரிந்து தான் நான் எங்கு போனாலும்

அறிவித்துவிட்டுத்தான்   போவேன்

 

மற்றவர்கள் ஏன் இதைப்புரிந்து கொள்கின்றார்களில்லை??? :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவுடன் மிகச் சிறந்த உறவுகளைப் பேண நரேந்திர மோடி விருப்பம் - சு.சுவாமி

ஆனா சிறி லங்காக்கு சீனாவுடன் மிகச்சிறந்த உறவைப்பேண தான் விருப்பம்.

_______________________________________

மன்னிக்க வேண்டும் உறவுகளே சில நாட்களாக வாழ்கையில் ஏற்ப்பட்ட சில சிக்கல்களை தீர்க்க வேண்டி இருந்ததால் வர முடியவில்லை என்னினும் குடும்பத்தினரின் உதவியுடன் சிக்கல்களை தீர்த்து மீண்டு வந்தாச்சு

இனி என்ன சிக்கல் என்ன வடிவில வருதோ.....

முடியல்ல.....

ஒரு பிரச்னையை முடிக்க இன்னொன்னு வருது.....ஹய்யோ

தேடிய உறவுகளுக்கு நன்றி

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் பெருமான், ஒருமுறை, காட்டெருமையாகப் பிறவி எடுத்திருந்தார். காட்டெருமையின் பலமோ அளவிட முடியாதது; அதைக்கண்டு, மற்ற மிருகங்கள் பயந்து நடுங்கும். அத்தகைய பலமிகுந்த காட்டெருமையாகப் பிறந்தும், புத்தர் காட்டில் வாழும் எந்த ஜீவராசியையும் பயமுறுத்தவில்லை; மிகவும் சாதுவாகவே இருந்தார்.

சாதுவாக இருந்தாலே, மற்றவர்கள் சீண்டிப் பார்ப்பது உலக நியதி தானே! அந்த தத்துவத்தின்படி, ஒரு குரங்கு, சாதுவாக இருந்த காட்டெருமையை சீண்டிக் கொண்டே இருந்தது. அது, காட்டெருமையின் முதுகில் ஏறி சவாரி செய்வதும், அதன் கொம்புகளைப் பிடித்து ஆட்டுவதும், வாலைப் பிடித்திழுப்பதும், கடிப்பதுமாக இம்சித்துக் கொண்டே இருந்தது.

இவ்வளவு செய்த போதும், காட்டெருமையாகப் பிறந்திருந்த புத்த பகவான், மிகவும் பொறுமையோடு இருந்தார்.

அவர் பொறுமையைக் கண்டு, தேவர்களுக்குப் பொறுக்க முடியவில்லை. அவர்கள் புத்தரிடம் வந்து, 'சாந்தத்தின் மொத்த உருவமே... உங்களைப் படாதபாடுபடுத்தும் அக்குரங்கை தண்டிக்காமல், நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே... அந்தக் குரங்கிடம் பயமா?' என்று, கேட்டனர்.

அதற்கு, பகவான் புத்தர், 'அந்தக் குரங்கைக் கண்டு, நான் ஏன் பயப்படப் போகிறேன்... நான் தலையைக் கொஞ்சம் ஆட்டினாலே போதும். அக்குரங்கின் வாழ்நாள் முடிந்து விடும். இருந்தும், அக்குரங்கின் குற்றத்தை பொறுத்துக் கொள்கிறேன். ஏன் என்றால், நம்மை விட பலசாலியாக இருப்பவர்கள் செய்யும் குற்றங்களை பொறுத்துப் போவதற்கு பெயர் பொறுமை இல்லை... நம்மை விட பலம் குறைந்தவர்கள் நமக்கு செய்யும் குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதற்கு பெயர் தான் பொறுமை. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்...' என்றார்.

விநாடி நேரம் அவசரப்பட்டு பொறுமையை இழந்து, பின், வாழ்நாள் முழுவதும் அல்லல் படுகிறோம். பொறுமை, என்றுமே பெருமையைத் தான் தரும்; சிறுமையைத் தராது.

  • கருத்துக்கள உறவுகள்

நம்மை விட பலசாலியாக இருப்பவர்கள் செய்யும் குற்றங்களை பொறுத்துப் போவதற்கு பெயர் பொறுமை இல்லை... நம்மை விட பலம் குறைந்தவர்கள் நமக்கு செய்யும் குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதற்கு பெயர் தான் பொறுமை.

 

 

ஆனால் மனிதன்

தன்னைவிட பலம் குறைந்தவன்

தன்னைவிட ஆட்பலம் இல்லாதவனிடமே வீரத்தைக்காட்டுகின்றான்

அது சிங்களமாக இருந்தாலும் சரி

லா சப்பல் குரூப்பாக  இருந்தாலும் சரி

(ஒருத்தனை பத்து பேர் வாள் கொண்டு வெட்டுவது தான் தற்பொழுதைய  வீரம்)

  • கருத்துக்கள உறவுகள்

23-1406090343-51copy.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்தியில் BJP ஆட்சிக்கு வரபோவதை அறிந்து திட்டமிட்ட முறையில் பிஜேபிக்குள் அமெரிக்கா போன்ற நாடுகளால் உள்ளே புகுத்தப்பட்டவர் தான் இந்த சுவாமி......

இவனை வெறும் கோமாளி என்றோ காமடி பீஸ் என்றோ ஒதுக்கி விட முடியாது.....அமெரிக்கா ஜனாதிபதியை சந்திக்க எத்தனையோ உலக நாட்டு தலைவர்கள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க இவன் மட்டும் ரொம்ப சுலபமா போய் சந்தித்து விட்டு வருவான்......

ஆனால் வேலியில் போன ஓணானை தூக்கி மடிக்குள் விட்ட கணக்கா பிஜேபி ஆட்சிக்கு இவனால் தான் அழிவு.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐநா நிபுணர்களை விஞ்சும் வகையில் எமது குழுவின் விசாரணைகள் அமையும்!- பரணகம செவ்வி

ஆமாம் போட்டி போட்டு யாரு இலங்கைய காப்பாத்த போறது என்று தானே உங்க விசாரணை இருக்க போகுது? படு கொலைகள் நடக்கும் போது கைகட்டி வேடிக்கை பார்ப்பாங்களாம் பிறகு கண் துடைப்புக்கு விசாரணை நடாத்துவாங்கலாம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயக்குநர்கள் விழுந்தால் கைதூக்கிவிட யாருமில்லை - கே பாக்யராஜ்

உண்மை தான் வரிசையாக பல ஹிட் கொடுத்த இயக்குனர்கள் ஒரு தோல்விப்படத்தோடு காணமல் போன வரலாறு தமிழ் சினிமாவை பொருத்தவரை நிறைய இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2012 ஆம் ஆண்டு July மாதம் முழு உலகும் அழிய இருந்திச்சாமே.....இப்போ தான் நாசா செய்திய மெல்ல கசிய விடுது

TWO years ago we were all going about our daily business blissfully unaware that our planet almost plunged into global catastrophe.

A recent revelation by NASA explains how on July 23, 2012 Earth had a near miss with a solar flare, or Coronal Mass Ejection (CME), from the most powerful solar storm on the sun in over 150 years, but nobody decided to mention it.

We managed to just avoid the event through lucky timing as the sun’s aim narrowly turned away from Earth. Had it occurred a week earlier when it WAS pointing at us the result could have been frighteningly different.

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் எப்படியாம் ஓடி ஒளிச்சவை...! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயக்குநர்கள் விழுந்தால் கைதூக்கிவிட யாருமில்லை - கே பாக்யராஜ்

உண்மை தான் வரிசையாக பல ஹிட் கொடுத்த இயக்குனர்கள் ஒரு தோல்விப்படத்தோடு காணமல் போன வரலாறு தமிழ் சினிமாவை பொருத்தவரை நிறைய இருக்கு

 

வந்தால் வந்த வேலையை பாக்கோணும்....

அதை விட்டுட்டு பாட்டும் நானே பாடலும் நானே எண்ட மாதிரி கதை,கதைவசனம்,பாடல்,இசை,கதாநாயகனும் நானே.கதநாயகி தேர்வு,கதாநாயகியோடை கதை டிஷ்கசன்,கதாநாயகியின்ரை மதர்ரோடையும் உடைகள் டிஷ்கசன்......... எண்டு எல்லாத்தையும் தலையிலை தூக்கி வைச்சு கீழைவிழுந்தால் எவன் தூக்கி விடுவான் ???  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

வந்தால் வந்த வேலையை பாக்கோணும்....

அதை விட்டுட்டு பாட்டும் நானே பாடலும் நானே எண்ட மாதிரி கதை,கதைவசனம்,பாடல்,இசை,கதாநாயகனும் நானே.கதநாயகி தேர்வு,கதாநாயகியோடை கதை டிஷ்கசன்,கதாநாயகியின்ரை மதர்ரோடையும் உடைகள் டிஷ்கசன்......... எண்டு எல்லாத்தையும் தலையிலை தூக்கி வைச்சு கீழைவிழுந்தால் எவன் தூக்கி விடுவான் ???  :lol:  :D

 

அதுதானே......கடைசியில கட்டினமனிசிதான் தூக்கிவிடவேண்டும்......:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி

Accident ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம்

தெரியுதா..?

அவர் : தெரியுது...

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

  • கருத்துக்கள உறவுகள்

 சுண்டுவுக்கு கொசுறுத் தகவல் எழுதிப் போட இன்று கிடைத்தவர்கள் அவரும்,இவருமே ...அப்படித் தானே சுண்டு பிறதர். :lol:

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி... சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்

அது என்னமோ தெரியா ஜெயலலிதாவ எதிர்த்து அரசியல் பண்ணுறவங்க எல்லாம் கடசில சக்கர நாற்காலிலையே செட்டில் ஆகிறாங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன்இருந்தானாம்.அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னுரொம்ப காலமாகடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.ஒருநாள் கடவுள் நேர்ல வந்தாராம்“பக்தாஎன்ன வரம் வேண்டும் கேள்” அப்படின்னு கேட்டாராம்..குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா“கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது”ன்னுகேட்டானாம்..“சரி பக்தா அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டுகடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.குப்புசாமி ரொம்ப சந்தோசமாகிட்டுவீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம்.வழியில யாரோஒருத்தர் குப்புசாமியைகவனிச்சுக்கிட்டே வந்து “உங்க பேரு என்ன?ன்னு கேட்டாராம்..அதுக்கு குப்புசாமி அவனோட பேரை சொல்லமுடியாம “குப்புமி” “குப்புமி” “குப்புமி”ன்னு சொன்னானாம்பாவம்கடைசிவரை அவனுக்கு ”சா” வே வரலையாம்…சாமியின் background voice.. "வரம் கேக்குற உனக்கே இத்தன அதப்புனா குடுக்குற எனக்கு எவ்வோளவு இருக்கும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10462843_689820694430497_311547714419726

 

கொப்பி மன்னர்கள்..... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முதல்வர் ஜனாதிபதியுடன் சென்றிருந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும்! அமைச்சர் டக்ளஸ்

பல வருடங்களாக இலங்கை அரசுடன் இணைந்து அமைச்சர் பதவியிலும் இருக்கும் உங்களாலே முடியவில்லையாம் வெறும் கொசு மருந்து அடிக்க கூடிய அதிகாரம் இல்லாத வடக்கு முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு தன்னால் எப்பிடி முடியும் என்று வடக்கு முதல்வர் நினைத்திருக்க கூடும்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமோக விளைச்சலைப் பெற விவசாயிகளுக்கு இலவச ஐ-பேடு... ஆந்திர முதல்வர் அதிரடி

பாத்து முதல்வரே அப்புறம் எல்லாரும் face book ல வந்து farmville ல தான் அமோகமா விளைவிக்கப்போறாங்க......

  • கருத்துக்கள உறவுகள்

அவே ஐபேடு கொடுக்கட்டும்..நீங்கள் எனக்கு நிறைய பச்சை தர வேண்டி இருக்கு தந்துட்டு போங்க ஓ .கே.. :)

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இண்டர்வியூ'வின் போது..

மேலாளர்;- நான் சொல்றதுக்கு எதிர் வார்த்தையை சொல்லுங்க..!

பையன்;- ஓகே சார்... சொல்லுங்க நான் ட்ரை பண்றேன்..!!

மேலாளர்;- நல்லது..

பையன்;- கெட்டது..!

மேலாளர்;- நான் இன்னும் ஆரம்பிக்க வில்லை...

பையன்;- நான் இப்போது தான் ஆரம்பித்தேன்..!!

மேலாளர்;- இல்லைங்க..

பையன்;- ஆமாங்க..!

மேலாளர்;- நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க...

பையன்;-நீங்க சரியா புரிஞ்சுகிட்டிங்க..!

மேலாளர்;- பேச்சை நிறுத்து..

பையன்;- தொடர்ந்து பேசு..!

மேலாளர்;- இப்போ வாயை மூடுறியா இல்லையா...

பையன்;- இப்போ பேசுறியா இல்லையா..!

மேலாளர்;- நிறுத்துடா... எல்லாத்தையும்...

பையன்;- தொடங்குடா...

எல்லாதையும்...!

மேலாளர்;- வெளியே போ..

பையன்;- உள்ளே வா..!

மேலாளர்;- ஐயோ கடவுளே..

பையன்;- ஆஹா..பிசாசே...!

மேலாளர்;- யு ஆர் ரிஜக்டட்...

பையன்;- ஐ ஆம் செலக்டட்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ், முஸ்லிம் கிராமங்களை அழிக்க வேண்டும்! ஞானசார தேரர்

பென்சிலால எழுதி வைச்சு.... இறப்பரால அழிக்க போறாரா தேரர்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1987ம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையின் போது முக்கிய பங்கை ஆற்றிய நட்வர்சிங், பிரபாகரனுடன் தாம் பேசியமையானது சவால்மிக்க அனுபவமாக இருந்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது இந்திய இலங்கை இராணுவத்தை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று பிரபாகரனிடம் தாம் தெரிவித்தாக நட்வர்சிங் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அதனை கண்டு பாவனை எதனையும் வெளிப்படுத்தாத பிரபாகரன், தாம் இறந்தாலும் தமிழீழ கொள்கையை கைவிடப் போவதில்லை என்று தெரிவித்ததாக நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டாம் என கூட்டமைப்பிடம் இந்தியா கோரவுள்ளது

ஆமாம் சுப்ரமணிய சுவாமி இருக்கும் போது எதுக்கு சர்வதேசத்திட்ட எடுத்திட்டு போறீங்க.......சுவாமிட கால்ல விழுந்து பிரச்சனைய சொன்னீங்க எண்டா தீர்த்து வைப்பாரு.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.