Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒலிம்பிக் போட்டியில், பதக்கம் வென்ற நாடுகளின் அட்டவணை.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பிரான்சில் அதிகம் 'கபே' குடிப்பவர்கள் உள்ளதால் அங்குதான் அதிகம் கோப்பி நிறத்தவர்கள் உள்ளார்கள். ஜெர்மனில் பியர் அதிகம் குடிப்பவர்கள் உள்ளதால் ' தங்க நிறங்கள்' தான் அதிகம் :D[/size]

[size=4]பி.கு. பிரான்சின் வெற்றியாளர் அசத்தினார். [/size]

பிரான்ஸ்காரரை பார்த்து, தமிழ் ஆக்களும் "ரீ" குடிக்கிறதை விட்டுட்டு... "கபே" குடிக்கினம். :D :D :lol::icon_idea:

  • Replies 121
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

niederlande-deutschland-hockey-256685.jpg

1403150_M01.jpg

1403114_M01.jpg

ஹொக்கியில் 2:1 என்னும் முறையில் ஜேர்மனி, ஒல்லாந்தை வெற்றி கொண்டு பதினோரவது தங்கப் பதக்கத்தை எடுத்தது.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1403126_M01.jpg

1403121_M01.jpg

1403128_M01.jpg

4 x100 தடி ஓட்டப் போட்டியில்...36.84 வினாடிகளில் ஓடி ஜமேய்க்கா புதிய உலக சாதனையை ஏற்படுத்தி தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொண்டது. வெள்ளிப் பதக்கத்தை அமெரிக்காவும். மூன்றாவது இடத்திற்கு கனடா வந்த போதும்... தடியை குறிப்பிட்ட இடத்திற்குள்... கைமாற்றாததால் கனடாவின் வெற்றியை ஒலிம்பிக் கமிட்டியினர் ஏற்கவில்லை. அடுத்து வந்த ரினிடாட்டுக்கு வெண்கலப் பதக்கம் கொடுக்கப் பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுக்கு கால் சறுக்கிவிட்டது.. :D

கனடாவுக்கு இம்முறை அதிர்ஸ்டம் போதாது. bad luck, ஆண்களுக்கான 4*100 அஞ்சல் ஓட்டம் மட்டுமல்ல, இதர பல்வேறு போட்டிகளிலும் சறுக்கிவிட்டது. ஆனாலும், தமது 18 பதக்கங்கள் என்கின்ற இலக்கை கனடா எட்டிவிட்டது. உலகின் இரண்டாவது சனத்தொகையைக்கொண்ட நாடான இந்தியா நான்கு ஐந்து பதக்கங்களுடன் ஒலிம்பிக் போட்டியில் முக்குவதை பார்க்கும்போது கனேடிய வீரர்களின் திறமை எவ்வளவோ பரவாயில்லை.

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி, இந்தியாவுடன் ஒப்பிட்டால் சந்தோசம்தான், ஆனால் யமேக்கவுடன் ஒப்பிட்டால், மற்ற மற்ற குட்டி நாடுகள் உடன் ஒப்பிட்டால்.

கனடாவில் விண்டர் க்கு விளையாடுகிற விளையாட்டை தவிர ஒன்றிக்கும் முக்கியத்துவம் இல்லை. இதியாவில் கிரிகட் மாதிரி; எனது வெள்ளையின நண்பன் USA க்கு வந்தது பாஸ்கட் போல் விளையாட. கனடாவில் ஹை ஸ்கூல் படித்தவர், அதற்கு மேல் ஒருவித உதவியும் இல்லாத போது, இங்கே USA இல் ஒரு உனிவேர்சிட்டி இல் அந்த அணிக்காக விளையாடி, அவர்கள் அதற்காக சிறிதளவு பணமும் கொடுத்தார்கள்-இலவச படிப்பு தவிர- தனது இளமாணி படிப்பையும் முடித்தார். கனடாவில் பாஸ்கட் பால் ஐ ஊக்குவித்தால், டொராண்டோவில் நடக்கிற கருவல்களால் வரும் அரைவாசி பிரச்சனை குறையும். அவர்களுக்கும் சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும். பின்கதவால் இனவெறி பார்க்கும் நாடுகளில் கனடாவும் ஒன்று. உயர் தொழிலில்/

அதிக சம்பள தொழிலில்

முதல் தர பாகுபாடு காட்டும் நாடு கனடா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறித்தம்பி! நீங்கள் ஒருக்கால் இந்த ஒலிம்பிக்குக்கு வந்து ஒண்டுமெடுக்காமல் போன நாடுகளின்ரை பட்டியலையும் தந்தால் நல்லாயிருக்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

1403126_M01.jpg

1403121_M01.jpg

1403128_M01.jpg

4 x100 தடி ஓட்டப் போட்டியில்...36.84 வினாடிகளில் ஓடி ஜமேய்க்கா புதிய உலக சாதனையை ஏற்படுத்தி தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொண்டது. வெள்ளிப் பதக்கத்தை அமெரிக்காவும். மூன்றாவது இடத்திற்கு கனடா வந்த போதும்... தடியை குறிப்பிட்ட இடத்திற்குள்... கைமாற்றாததால் கனடாவின் வெற்றியை ஒலிம்பிக் கமிட்டியினர் ஏற்கவில்லை. அடுத்து வந்த ரினிடாட்டுக்கு வெண்கலப் பதக்கம் கொடுக்கப் பட்டது.

வெள்ளைக்கோட்டை மிதித்ததால் (கடைசி வீரர்,குழுத்தலைவன்)கனடா போட்டியில் இருந்து விலக்கப்பட்டது.

0812-oly-cole-sprint_23412681-e1344718262910.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி! நீங்கள் ஒருக்கால் இந்த ஒலிம்பிக்குக்கு வந்து ஒண்டுமெடுக்காமல் போன நாடுகளின்ரை பட்டியலையும் தந்தால் நல்லாயிருக்கும். :D

முழுமையான பட்டியல் இரண்டு நாட்கள் முன்பு வரை, இணையத்தில் இருந்தது. இப்போ எடுத்து விட்டார்கள் குமாரசாமி அண்ணா.

மொத்தமாக 205 நாடுகள் பங்குபற்றியது. இதுவரை 84 நாடுகள் ஏதாவது ஒரு பதக்கமாவது எடுத்திருக்கிறார்கள்.

121 ஒரு நாடுகள் ஒரு பதக்கமும் எடுக்கவில்லை. அவர்கள் சும்மா... லண்டன் பார்க்க வந்தவர்கள்.

அதில் ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூட்டான், பங்களாதேஸ், மாலைதீவு போன்ற சார்க் நாடுகளும் அடக்கம் :).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

336_47.jpg

12-yogeshwar-dutt.jpg

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 5வது பதக்கம்-மல்யுத்தத்தில் அசத்தினார் தத்!

லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 5வது பதக்கம் கிடைத்துள்ளது. மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் யோகேஷ்வர் தத் அபாரமாக செயல்பட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

டெல்லி காவல்துறையில் அதிகாரியாக இருப்பவர் தத். ஒலிம்பிக் போட்டிக்குக் கிளம்புவதற்கு முன்பே எபப்டியும் ஒரு பதக்கம் வெல்வேன் என்று சூளுரைத்திருந்தார். இப்போது தனது உறுதிமொழியை நிறைவேற்றி விட்டார். கடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் வெல்லத் தவறிய பதக்கத்தை லண்டனில் பெற்று விட்டார் தத்.

ஆடவர் 60 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் அபாரமாக மோதிய தத், வெண்கலப் பதக்கம் வென்றார்.

அட்டகாசமான ஆட்டத்திறனை நேற்று வெளிப்படுத்தினார் தத். அதுவும் ஒன்றரை மணி நேரத்தில் ஐந்து பேருடன் மோதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் வட கொரியாவின் ஜோங் மியாங் ரியை பந்தாடி வெண்கலத்தை வென்றார்.

இந்தப் பதக்கம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள 5வது பதக்கமாகும். ஒலிம்பிக் வரலாற்றில் அதிக அளவிலான பதக்கங்களை இந்தியா வென்றிருப்பது இதுவே முதல் முறையாகும் என்பதால் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நன்றி தற்ஸ்தமிழ்.

2000ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் ந‌ட‌ந்த‌ ஒலிம்பிக்கில்... இந்தியாவுக்கு ஒரு வெண்கலப் ப‌த‌க்க‌மும், 2004ம் ஆண்டு கிரீஸில் ந‌ட‌ந்த‌ ஒலிம்பிக் விளையாட்டில் ஒரு வெள்ளியும், 2008ம் ஆண்டு சீனாவில் ந‌ட‌ந்த‌ போட்டியில் ஒரு த‌ங்க‌ப் ப‌த‌க்க‌மும், இர‌ண்டு வெண்க‌ல‌ப் ப‌த‌க்க‌மும் கிடைத்த‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா விளையாட்டில் முன்னேறுவது தெரிகிறது.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா விளையாட்டில் முன்னேறுவது தெரிகிறது.. :D

இந்தியாவுக்கு, ஆறவது பதக்கமும் கிடைத்தது. :rolleyes:

--------

12-sushil-kumar-wrestler.jpg

லண்டன் ஒலிம்பிக்: தங்கப் பதக்க வாய்ப்பு கைநழுவியது! வெள்ளி வென்றார் இந்தியாவின் சுஷில்குமார்!

லண்டன்: ஒலிம்பிக் போட்டியின் இறுதிநாளான இன்று நடைபெற்ற ஆடவர் 66 கிலோ மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சுஷில் குமார் தங்கப் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரரிடம் தோற்ற சுஷில்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட விளையாட்டுகளில் மல்யுத்தமும் ஒன்று. கடந்த ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலம் பெற்றுத் தந்தவர் சுஷில்குமார். இவர்தான் நடப்பு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்ற பெருமைக்குரியவர்.

மல்யுத்தப் போட்டிகள் பொதுவாக எதிர்பார்ப்புகளை பொய்த்துபோக வைத்துவிட்ட நிலையில் சுஷில்குமாரின் மீது அனைவரது கவனமும் திரும்பியது. டெல்லி காமன்வெல்த் போட்டியில் தங்கம் பெற்றுத் தந்த சுஷில்குமார் இப்போதும் சாதிக்க வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது இந்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் தனது லட்சியம் என்று ஏற்கெனவே சுஷில் குமார் கூறியும் இருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரரை 3-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிப் போட்டியில் சுஷில்குமார் நுழைந்தார்.அதன் பின்னர் அரை இறுதியில் கஜகஸ்தான் வீரர் டன டரோவாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்துவிட்டார் சுஷில்குமார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருந்தது. ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்தப் போட்டியில் முதல் முறையாக இந்திய வீரர் ஒருவர் இறுதிப் போட்டியில் நுழைந்திருப்பதன் மூலம் சரித்திரம் படைத்தும் இருந்தார்..

மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் சுக்ரோவை சுஷில்குமார் எதிர்கொண்டார். ஆனால் ஜப்பான் வீரர் 1-0,3-1 என்ற புள்ளி கணக்கில் சுஷில்குமாரை வீழ்த்தி அவர் தங்கத்தை தட்டிச் சென்றார். இந்தியாவின் சுஷில்குமாருக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.

நன்றி தற்ஸ்தமிழ்.

வெள்ளைக்கோட்டை மிதித்ததால் (கடைசி வீரர்,குழுத்தலைவன்)கனடா போட்டியில் இருந்து விலக்கப்பட்டது.

வெள்ளைக்கோட்டை மிதித்தது கடைசியாக ஓடியவீரர் இல்லை, அவருக்கு முன் மூன்றாவதாக ஓடியவர். அவர் தனது ஒழுங்கையின் உட்புறமாகவுள்ள எல்லைக்கோட்டின்மேல் நன்றாக ஓரமாக ஓடியபோது (வெள்ளைக்கோடு) ஒரு தடவை காலை வைத்து விட்டார். கனடாவின் கடைசிவீரருக்கு அஞ்சல்தடி போட்டியில் ஐந்தாவதாகவே கிடைத்தது, ஆயினும் அவர் மற்றவர்களை துரத்திப்பிடித்து மூன்றாவதாக வந்தார். 1996ம் ஆண்டு ஒலிம்பிக் என்று நினைக்கின்றேன், அதில் கனடாவுக்கு 4*100மீற்றர் அஞ்சலோட்டத்தில் தங்கப்பதக்கம் கிடைத்தது.

அதுசரி, இந்தியாவுடன் ஒப்பிட்டால் சந்தோசம்தான், ஆனால் யமேக்கவுடன் ஒப்பிட்டால், மற்ற மற்ற குட்டி நாடுகள் உடன் ஒப்பிட்டால்.

நீங்கள் போட்டிகளை முழுமையாக பார்க்கவில்லை என்று நினைக்கின்றேன். பதக்கம் கிடைக்காவிட்டாலும் பல குழுநிலைப்போட்டிகளில் முதல் எட்டினுள் வந்தார்கள். இவ்வாறே பல்வேறு விதம் விதமான போட்டிகளில் பல வீரர்கள் முதல் பத்தினுள் வந்தார்கள். குறிப்பிட்ட ஒரு சில போட்டிகளிலேயே கனடா நாடு சிறப்பாக போட்டியிடுகின்றது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏறக்குறைய எல்லாவிதமான போட்டிகளிலும் கனேடிய வீரர்கள் பங்குபற்றியுள்ளார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1408138_M01.jpg

1408133_M01.jpg

1408281_M01.jpg

1408290_M01.jpg

1408291_M01.jpg

1408257_M01.jpg

1408255_M01.jpg

1408239_M01.jpg

1408222_M01.jpg

1408266_M01.jpg

பதினேழு நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற 30வது ஒலிம்பிக் போட்டிகள், நேற்றிரவு லண்டன் நேரம் 23:59ற்கு ஒலிம்பிக் தீபத்தை அணைத்ததன் மூலம் இனிதே.... நிறைவுற்றது. நான்கு வருடங்கள் கடுமையான பயிற்சிகள் மூலம் பதக்கங்களை பெற்றுக் கொண்டவர்களின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சியும்... சில மில்லி செக்கனிலும், மில்லி மீற்றரிலும் பதக்கங்களை தவற விட்டவர்களின் கண்களில் கண்ணீரையும்... வரவழைத்த நிகழ்வுகளை சந்தித்த ஒலிம்பிக், 2016 ம் ஆண்டு பிரேசில், ரியோ நகரத்தில் நடைபெறும். யாழ்களத்திலும் இந்த ஒலிம்பிக் சம்பந்தமாக ஆர்வம் காட்டிய கள உறவுகளுக்கும், கருத்துக்களை பகிர்ந்து கொண்ட உறவுகளுக்கும் நன்றி. விளையாட்டுச் செய்திகளுக்கு ஆயிரக் கணக்கில்... பார்வையாளர்கள் பார்வையிட்டது, மிகுந்த மகிழ்ச்சியை த‌ருகின்றது. தமிழனும் ஒரு நாள், தனது கொடியுடன்... ஒலிம்பிக் மைதானத்தில், வலம் வரும்

நாள் என்றோ.... எனும் ஏக்கமும் மனதில் எழுகின்றது.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

london-verabschiedet-sich-mit-einer-atemberaubenden-zeremonie-.jpg

லண்டன் ஒலிம்பிக் நிறைவுநாள் நிகழ்ச்சியில்.... பலரின், மனதை கொள்ளை கொண்ட "ஸ்பைஸ் (G)கேள்சின்" பாடல்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

Edited by தமிழ் சிறி

வெள்ளைக்கோட்டை மிதித்தது கடைசியாக ஓடியவீரர் இல்லை, அவருக்கு முன் மூன்றாவதாக ஓடியவர். அவர் தனது ஒழுங்கையின் உட்புறமாகவுள்ள எல்லைக்கோட்டின்மேல் நன்றாக ஓரமாக ஓடியபோது (வெள்ளைக்கோடு) ஒரு தடவை காலை வைத்து விட்டார். கனடாவின் கடைசிவீரருக்கு அஞ்சல்தடி போட்டியில் ஐந்தாவதாகவே கிடைத்தது, ஆயினும் அவர் மற்றவர்களை துரத்திப்பிடித்து மூன்றாவதாக வந்தார். 1996ம் ஆண்டு ஒலிம்பிக் என்று நினைக்கின்றேன், அதில் கனடாவுக்கு 4*100மீற்றர் அஞ்சலோட்டத்தில் தங்கப்பதக்கம் கிடைத்தது.

கனடா வீரர் மட்டுமல்ல மூன்றாவதாக வந்து வெண்கலம் வென்ற டிரினாட் வீரர் ஒருவரும் கோட்டை மிதித்தார் .

இதுவரை பார்த்த ஒலிம்பிக்சில் மிகப் போரடித்த கடைசிநாள் நிகழ்வுகள் இதுதான் .ஒரு விளையாட்டு நிகழ்வுபோல் அல்லாது பாட்டு கச்சேரி போல் ஆகிவிட்டிருந்தது . வெறுத்துப்போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]2012 ஒலிம்பிக் கோலாகலமாக நிறைவு[/size]

[size=2]

[size=4]images97.jpgகடந்த மாதம் 25-ம் திகதி கோலாகலமாக ஆரம்பமான லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் ஆடம்பரமான மற்றும் பிரம்மாண்டமான நிறைவுவிழா நிகழ்ச்சியுடன் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நிறைவடைந்தன.[/size]

[size=4]கண்கவர் அடையாளங்கள் அழகிய ஒளி நிகழ்ச்சிகள், மற்றும் வண்ண அலங்கார அணிவகுப்புகள் ஆகியவை இவ்விழாவில் இடம்பெற்றன.[/size]

[size=4]பாப் இசைப்பாடல்களுடன் நிறைவுவிழா நிகழ்ச்சியில் லண்டன் மாநகரின் அடையாளமாகக் கருதப்படும் பல்வேறு பொருள்களின் அணிவகுப்பும் நடத்தப்பட்டது.[/size]

[size=4]இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மற்றொரு இளவரசரான வில்லியமின் மனைவி கேத், லண்டன் மாநகர மேயர் ஆகியோர், சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவரான ஜாக்கஸ் ராக்குடன் விழா மேடையில் அமர்ந்திருந்தனர்.[/size]

[size=4]விழாவின்போது நடைபெற்ற அணிவகுப்பில் 10,800 விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். தங்களுக்குப் பிடித்தமான வீரர்களைக் கண்டதும் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரமிட, ரசிகர்களைப் பார்த்து வீரர்களும் பதிலுக்கு ஆரவாரம் செய்தனர்.[/size]

[size=4]ஒலிம்பிக் மைதானத்தில் கூடியிருந்த 80,000 ரசிகர்களும் விழாவினை ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர். மேலும், உலகம் முழுவதும் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இவ்விழாவை தொலைக்காட்சியில் கண்டுகளித்துள்ளனர்.[/size]

[size=4]2012 ஒலிம்பிக் போட்டி முடிவுகளின்படி ஐக்கிய அமெரிக்கா 46 தங்கம் 29 வெள்ளி 29 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.[/size]

[size=4]38 தங்கங்கள், 27 வெள்ளிகள், 22 வெண்கலங்களோடு சீனா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.[/size]

[size=4]29 தங்கங்கள், 17 வெள்ளிகள், 19 வெண்கலப் பதக்கங்களோடு பெரிய பிரித்தானியா மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.[/size]

[size=4]இலங்கை சார்பில் 7 வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய போதும் எவருக்கும் பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியா 7 பதக்கங்களை பெற்று தரவரிசை பட்டியலில் 55 இடத்தைப் பிடித்தது.[/size]

[size=4]மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி[/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா உந்த ரிவி,ரேடியோ,பேப்பர் எல்லாத்திலையும் ஒரு சோலி முடிஞ்சுது.......அதோடை ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டி கடைசிநாளை பாட்டுக்கச்சேரி ஆக்கின பெருமை இங்கிலாந்துக்குத்தான் சேரும். வெரி பிரிட்டிஷ் யூ நோ.....இந்த விசயத்திலை சீனாக்காரனை மெச்சோணும்......

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் Sydney 2000 தான் பெஸ்ட் :D

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கனடா வீரர் மட்டுமல்ல மூன்றாவதாக வந்து வெண்கலம் வென்ற டிரினாட் வீரர் ஒருவரும் கோட்டை மிதித்தார் .

இதுவரை பார்த்த ஒலிம்பிக்சில் மிகப் போரடித்த கடைசிநாள் நிகழ்வுகள் இதுதான் .ஒரு விளையாட்டு நிகழ்வுபோல் அல்லாது பாட்டு கச்சேரி போல் ஆகிவிட்டிருந்தது . வெறுத்துப்போச்சு.

http://youtu.be/uwLDpcye-VM

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.