Jump to content

விடியல் சிவா இன்று காலை 10.30 க்கு சாவடைந்துவிட்டார்


Recommended Posts

[size=3]

என் அன்பிற்குரிய தோழர் விடியல் சிவா இன்று காலை 10.30 க்கு சாவடைந்துவிட்டார் என்ற துயரச் செய்தி என்னை உலுக்கியது.நக்சல் பாரி இயக்கத்தில் அவர் இருந்த காலத்தில் ஏற்பட்ட அறிமுகம் நேரில் சந்திக்காமல் 35 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தது.தோழர் நான் உங்களை பார்க்காமலே இறந்துவிடுவேன் என்று அவர் 5 வருடங்களுக்கு முன்னர் கூறிய வார்த்தை இன்று பலித்துவிட்டது

[/size]

Link to comment
Share on other sites

அவரது ஆன்மா சாந்தியடையட்டும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரது குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

Link to comment
Share on other sites

அன்னாரின் ஆன்மா நித்திய அமைதியில் இளைப்பாற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

Link to comment
Share on other sites

Somee Tharan

[size=3]தோழர் விடியல் சிவா அவர்களுக்கு அஞ்சலிகளும் வணக்கங்களும்[/size]

41638_100000410998113_9021_q.jpg

அருண் தமிழ் ஸ்டுடியோ

[size=5]தன்னுடைய விடியல் பதிப்பகம் சார்பாக மார்சியம் சார்ந்த பல புத்தகங்களையும், தமிழில் வெளிவர வாய்ப்பில்லாத பல புத்தகங்களையும் பதிப்பித்த நல்ல மனிதர் தோழர் சிவா. இவரது புத்தகங்களே எனக்கு ரஷ்ய போராளிகளின் வரலாறு தெரிய மிக முக்கிய காரணம். அவர் இன்று இயற்கை எய்திவிட்டார். கேன்சர் அவரை இனியும் விட்டுவைக்க விரும்பவில்லை போலும். அவரது உடல் கோவை அரசு பொது மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டது என்று நண்பர் ரமேஷ் சொன்னார்.

மரணம்தான் எத்தகைய கொடியது...[/size]

Cartoonist Bala இன் புகைப்படம் ஒன்றை தின இதழ் கண்ணன்பகிர்ந்துள்ளார்.

[size=2]

388085_3486154478919_1720684062_n.jpg

[size=5]தோழர். விடியல் சிவா அவர்களுடன் எனக்கு நேரடி அறிமுகமில்லை. ஆனால் அவரின் பதிப்பக புத்தகங்கள் பல என் அறிவு வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றன.

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த தோழர் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வருந்துகிறேன்.. ஆழ்ந்த இரங்கல்கள்.[/size]

[/size]

[size=5]Bharathi Raja

பல்வேறு மார்க்சிய புத்தகங்கள் மற்றும் முற்போக்கு புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்த தோழர் விடியல் சிவா அவர்களின் மரனம்...

தமிழ்சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு....

-------------------------------------------------------------------------------------------------------------தோழருக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.. மிகச்சிறப்பான புத்தங்களை வெளிகொணர்ந்தவர்...... அவரது பங்களிப்பு மிக முக்கியமானது.. சமரசமின்றி செயலாற்றிய்வர்...[/size]

Link to comment
Share on other sites

தோழர் விடியல் சிவா மிகப்பயனுள்ள பணிகளில் தமது வாழ்வைச் செலவளித்துள்ளார். அதனால் அவரின்

மறைவு தமிழ் உலகத்திற்கு பேரிழப்பாகும். அவருக்கு எனது அஞ்சலிகள்! அவரின் குடும்பத்தினருக்கு எனது

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

விடியல் சிவா அவர்களுக்கு வீரவணக்கம்

[size=3]

[/size][size=3]

2008 ஆம் ஆண்டில் மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தநேரம் மக்கள் விருது என்ற பெயரில் ஆண்டுதோறும் பல்வேறு துறைசார்ந்த திறமையாளர்களுக்கு விருதுவழங்கி சிறப்பிக்க நினைத்தார்கள்.

நான் நான்கைந்து துறைகளுக்கு மட்டும் சிலரை முன்மொழிந்தேன். (எளியவர்கள் குரலுக்கு மதிப்பளிக்கும் மாமனிதர் ஒருவர் அப்போது மக்கள் தொலைக்காட்சியில் இருந்தார்)

ஓவியத்துக்கு சந்துரு,

அந்த ஆண்டுக்கான திரைப்படம் - பூ,

சிறந்த நாடகம் முருகபூபதி,

சிறந்த பதிப்பகம் விடியல்.

Vidiyal+Siva+02.jpg

தமிழில் பெருமளவு அபுனைவு (non fiction) நூல்களை வெளியிட்டதிலும் குறிப்பாக தேர்ந்தெடுத்த பிறமொழி நூல்களை தமிழில் கொண்டு வந்தமைக்காகவும் இவை எல்லாவற்றையும் கடந்து ஒரு நூலின் அட்டைப் படத்திற்கு ஏதாவது ஒரு ஓவியத்தைப் பயன்படுத்தியிருந்தால் அதன் படைப்பாளியின் பெயரை நூல் விவரம் அடங்கிய இரண்டாம் பக்கத்தில் குறிப்பிடும் நேர்மை இவற்றிற்காக விடியலுக்கு வழங்கலாம் என்றேன்.

தமிழில் எந்தப் பதிப்பகத்தின் மீதும் ஆதரவான எதிரான விமர்சனங்கள் சரிபாதி இருக்கக்கூடும். ஆனால் விடியல் அதில் விதிவிலக்கானதாக இருப்பதாக நம்புகிறேன்.

"மலர்ந்தும் மலராத" பாடலைப் போல அனைவருடைய இதயத்திலும் இடம்பிடித்த பதிப்பகம் விடியல்.

Vidiyal+Siva+03.jpg

இத்தகை பெருமைகளையெல்லாம் ஒரு பதிப்பகத்திற்கு உரியதாக்கிய சிவா அவர்களின் மறைவு இன்றைய நாளை துயர்மிகு நாளாக்கிவிட்டது.

[/size][size=3]

பதிவர்: ​செல்​லையா முத்துசாமி நேரம் 8:46 pm 0 கருத்து​ரைகள் icon18_email.gifஇப்பதி​வை இ​ணைக்க[/size]

Marx Anthonisamy

[size=3]என் அன்பிற்குரிய தோழர் விடியல் சிவாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தப் போய்க்கொண்டிருக்கிறேன். என்ன சொல்வது என்ன எழுதுவது எனப் புரிகிற மனநிலையில் நான் இல்லை. நம் எல்லோருடைய இறுதி எச்சமுமான நம் உடலையும் அவர் மருத்துவ மாணவர்களின் அறிதலுக்குப் பரிசளித்துவிட்டார். மருத்துவக் கல்லூரிக்கு அவர் செல்லுமுன் அவரைத் தரிசித்துவிட வேண்டும்.[/size]

Link to comment
Share on other sites

[size=5]நேரில் பார்க்காமல் தோழர் என்ற சொல்லுக்குரிய உண்மையான அர்த்தத்தில் அவர் என்னுடன் கொண்டிருந்த உறவு உயரிய நட்பை நான் எப்படிச் சொல்வேன்?[/size]

[size=5]நான் ஈழமுரசு ஆசிரியராக இருந்த காலத்தில் நாதோறும் என்னுடன் தொலைபேசியில் அரசியல் பொருளதாரம் சமூக விடுதலை புரட்சி என்று பல்வேறு தளங்களில் ஆக்க பூர்வமாக உரையாடி எனக்கு உந்து சக்தியாக இருந்ததை சொல்லவா?[/size]

[size=5]ஈழ விடுதலைக்கு எதிரான இந்திய அதிகார வர்க்க சிந்தனையை இந்திய அளவிலுள்ள உதாரங்களுடன் எனக்கு புரியவைத்து குறிப்பாக ஒரு ஆசானாக இருந்து வழிகாட்டியதை சொல்லவா....[/size]

[size=5]ஒன்றாய் ஒரே கொள்கையில் ஒரே இயக்கத்தில் இருந்த தோழர் மணிவண்ணன் நடிகராவதற்கு சென்னை செல்வதற்கு உதவி செய்துவிட்டு அவர் நடிகர் மணிவண்ணனாக பேரும் புகழும் பெற்றதும் கூட அவரிடம் தான் செய்த உதவிக்கான பிரதிபலனை எதிர்பாக்காமல் இருந்த எழிமையை சொல்வதா?[/size]

[size=5]எனக்காக கப்டன் கஜனின் ஆருக்குக்குச் சொல்லியழ நூலை வெளியிட்டுத்தந்தைச் சொல்லவா?[/size]

[size=5]இந்திய அதிகார வர்க்கத்துக்குக்கு எதிராக தன் வாழ் நாள் எல்லாம் போராடிய அவரை ரோ உளவாளி என்று சிறுமைப்படுத்தி கொச்சைப் படுத்திய பாரிஸ் நகரத்து ஆதித்தன் பரமேஸ்வரன் முதலான கழிசடைகளின் பொறுகித் தனத்தைப்பற்றிச் சொல்வதா?[/size]

[size=5]'உலகில் எங்கு அக்கிரமம் நடந்தாலும் அதைக்கண்டு உனக்கு ஆத்திரம் எற்பட்டால் அதற்கு எதிராக போராடவேண்டும் என்ற உணர்வு உனக்கு ஏற்பாட்டால் நீயும் நானும் தோழர்கள்' என்று சேகுவரா சொன்னதை எனக்கு நடைமுறையில் உணர்த்திய தோழரே! உங்களுடைய இந்தப் பிரிவு முள்ளிவாய்க்காலின் பின்னர் அதிக வலியைத் தந்த பிரிவாக இருக்கிறதே![/size]

Link to comment
Share on other sites

[size=5]Dev Sojourner Anand எழுதிய அஞ்சலிக் குறிப்பு[/size]

[size=5]விடியல் சிவா' என்ற சிவஞானம்...

2001 -2002 வருடத்தில் கோவையில் பணிபுரிந்த நிலையில் யாழ் நூலகம் திரு.துரைமடங்கன் அவர்கள் மூலம் அறிமுகம் ஆனார் இவர்!

அப்போதுதான் 'சே'வின் வாழ்வும் -மரணமும் விடியலின் வாயிலாக வெளிவந்த நேரம்...

நான்கு ஊர்களை சுற்றி வந்து உலக இலக்கியம் உலக சினிமா இவற்றை கரைத்து குடித்ததாய் சொல்லிக்கொள்பவர்கள்;

நான்கு பேர்கள் சொல்வதை கேட்டு ஒரு புத்தக விமரிசனம் எழுதும் அறிவுஜீவிகள் மத்தியில் இவர் குளத்தின் அடியில் கிடக்கும் கூலாங்கல் போல் அலைகள் பல எழுப்பியவராக இருந்தார்!

நான் எழுத்தாளனோ; ஊடக துறை சார்ந்தவனோ இல்லை கல்லூரிப்படிப்பை முடித்த நிலையில் தத்துவ ரீதியாக அவநம்பிக்கையில் இருந்த நிலையில் திரு.துரைமடங்கன் கொடுத்த

Paulo Freire எழுதிய Pedagogy of the Oppressed புத்தகத்தின் பிரதியுடன் இவரை சந்தித்த அந்த மதிய நேரம் என் வாழ் நாளின் முக்கியமான நாளாக மாறியது !

'marxism ' என்பதில் ஏதும் தவறில்லை ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள மார்க்சியவாதிகள் இந்த அருமையான அறிவியலை ஒரு இறக்குமதி பண்டம் போல் பாவிப்பதன் தவறு என்ற புரிதலை ஏற்படுத்திய இவர் என் தந்தை போல் ஆனார் ! இந்த மூன்றாம் உலக நாடுகளின் தன்மைக்கேற்ற தகவமைப்புடன் கூடிய மார்க்சியத்தை மற்றும் அது சார்ந்த தலைவர்களை புத்தகங்களை அறிமுகப்படுத்தி என் ஆசானாய் ஆனார்!

Patrice Lumumba;Amílcar Cabral இவர்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள் ! நன்றி தோழா ! எங்களுக்கு மிகப்பெரிய பாதையை விட்டு சென்றுள்ளீர்கள் ! தமிழ் இலக்கிய சூழலில் உங்களின் இடத்தை யாரை கொண்டு நிரப்ப ?![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடியல் சிவா அவர்களின் மறைவால், துயருறும் குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் கண்ணீரஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

விடியலால் வெளியிடப்பட்ட பல நூல்களை வாசித்து இருக்கின்றேன். பெயர் தெரியாத எழுத்தாளர் எழுதி இருந்தால் கூட விடியலின் வெளியீடு என்பதற்காகவே அதை வாங்கி வாசித்து இருக்கின்றேன். தமிழ் வெளியீட்டு உலகில் கனதியான புத்தகங்களை வெளியிட்டவர்களில் விடியல் முன்னுக்கு இருக்கின்றது.

எனக்கு விடியல் சிவா பற்றித் தெரியாது. ஆனால் நவம் எழுதியிருப்பதை வாசிக்கும் போதும், விடியலின் தரமான வெளியீடுகளை அசை போடும் போது, சிவாவின் இழப்பு மிகப் பெரிய இழப்பாகத் தோன்றுகின்றது.

கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

[size=5]தோழர் சிவாவிள் மறைவுத் துயரை பகிர்ந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி[/size]

Link to comment
Share on other sites

விடியல் சிவா என்றொரு மாமனிதன்!

[size=3]

இரா.சிவக்குமார் [size=2]செவ்வாய், 31 ஜூலை 2012 13:40[/size]

emailButton.pngprintButton.pngpdf_button.png[/size] பயனாளர் தரப்படுத்தல்:rating_star.pngrating_star.pngrating_star.pngrating_star.pngrating_star.png / 1

குறைந்தஅதி சிறந்த [size=3]

[size=5]விட்டில் பூச்சிகளாய்

வீழ்ந்து கிடந்த

தமிழ்ச் சமூகத்திற்கு

விடியலைக் காண்பித்தவன்..![/size]

[size=5]ஆயுத வழிப் புரட்சியிலிருந்து

காகித வழிப் புரட்சிக்கு

தன்னையே ஒப்பளித்தவன்..![/size]

[size=5]கருப்பு உடுப்பு

சிவப்புச் சிந்தனை

வெள்ளை அணுகுமுறை

எங்களின் தோழமையே...

உனக்குச் சிவப்பஞ்சலி![/size]

[size=5]***[/size]

[size=5]vidiyal_siva_243.jpgதமிழ்ச் சமூகத்தின் அறிவுலகத்தை குறிப்பாக இளந்தலைமுறையை மார்க்சியக் கண்ணோட்டத்தோடும், தமிழிய ஆர்வத்தோடும் வளர்த்தெடுக்க முனைந்தவர். தனது விடியல் பதிப்பகத்தின் வாயிலாக அரும் பெரும் நூல்களையெல்லாம் தமிழில் மொழி பெயர்த்தவர். உடற் குறைபாட்டிற்கு இடையிலும் தளராமல் இயங்கியவர். நோய் முற்றிய நிலையில் முடங்கிப் போனாலும், அண்மையில் விடியல் பதிப்பகம் குறித்து எழுத்து வியாபாரி ஜெயமோகன் அள்ளி வீசிய அவதூறுகளை மிகக் கண்ணியமான வகையில் பதிலுரைத்து, செருப்பால் அறைந்தவர். உள்ளபடியே தமிழுலகம் ஒப்பற்ற ஒரு கண்ணியவானை இழந்துவிட்டது. அதேபோழ்து, இலக்கியங்களையும், உலக வரலாற்றையும் அள்ளித் தந்த ஒரு பதிப்பகச் செம்மலையும் சாவுக்குக் கொடுத்துவிட்டு தடுமாறுகிறது.[/size]

[size=5]ஒருமுறை மதுரை புத்தகக் கண்காட்சியில் திரு.சிவாவுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, கேள்வியொன்றை அவரிடம் கேட்டேன். 'புத்தகத் திருடர்களும் கண்காட்சிக்கு வருகிறார்கள்தானே. அவர்களில் எவரேனும் ஒருவர் தங்களது அரங்கிற்கு வந்து நூல்களைத் திருடிச் சென்றால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'ஒன்னும் செய்ய மாட்டேன். வாங்குவதற்கு பணமில்லையென்றால் பரவாயில்லை. எடுத்துச் செல்லுங்கள். ஆனால் தங்களால் இயலும்போது, அதற்கான தொகையை வழங்கிவிடுங்கள் என்றுதான் அறிவுறுத்துவேன். இதே போன்று ஈரோடு, நெய்வேலி புத்தகக்கண்காட்சியிலும் நடந்திருக்கிறது' என்றார். அப்படியொரு பெருந்தன்மையும், தமிழ்ச் சமூகத்தின் அறிவுப் பரப்பை விரிவு படுத்த வேண்டும் என்ற தணியாத தாகமும் கொண்டவர் தோழர் சிவா.[/size]

[size=5]விடியல் சிவா என்ற ஒப்பற்ற, அப்பழுக்கற்ற மனிதனை இனி எங்கே காணப்போகிறோம்?[/size]

[size=5]இருந்தும் வாழ்கின்றார் விடியலாக... அதன் ஒவ்வொரு நூல்களாக...[/size]

[size=5]- இரா.சிவக்குமார், மதுரை[/size][/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.