Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

16 வயதான சீன யுவதி, யே ஷிவென்

Featured Replies

[size=4]சனிக்கிழமை இடம்பெற்ற 400 மீட்டர் மெட்லி போட்டியில் அவர், புதிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.

அந்தப் போட்டியின் இறுதி ஐம்பது மீட்டரை அவர், ஆடவர் பிரிவின் வெற்றியாளரை விட வேகமாக நீந்திக் கடந்தார்.[/size]

[size=4]main_12561.jpg[/size]

[size=4]அதனையடுத்து, அவர் ஊக்க மருந்தைப் பயன்படுத்தியிருக்கலாமென அமெரிக்க பயிற்றுனர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

போட்டியில் வெற்றி பெறும் அனைவரும் ஊக்க மருந்துச் சோதனைக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளது. ஷிவென், ஊக்க மருந்துப் பரிசோதனைக்கு முகம் கொடுத்தாரெனவும், அவர் பரிசோதனையில் வெற்றி பெற்றாரெனவும் குறிப்பிட்ட பிரித்தானிய ஒலிம்பிக் சங்கத் தலைவர், ஷிவெனின் திறமை பாராட்டப்படவேண்டுமென கூறினார்.

சீன ஒலிம்பிக் விளையாட்டுக் குழு, தெளிவான விதிகளைக் கொண்டுள்ளதெனவும், ஊக்க மருந்து தொடர்பான சந்தேகம் தவறானதெனவும் ஷிவென் கூறினார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=12561[/size]

[size=4]இன்று உலகின் அதிவேக நீச்சல் வீரர் என்ற பெருமையை இந்தப்பெண் பெற்றுள்ளார்.[/size]

[size=4]இவர் சிறுமியாக இருந்தவேளை (இன்னும் சிறுமிதான்) ஒரு ஆசிரியர் இவரது கைகளைப்பார்த்து பெற்றோரிடம் இவளை நீச்சல் பயிற்சியில் சேர்க்க கேட்டாராம்.[/size]

  • தொடங்கியவர்

[size=5]சீன நீச்சல் வீரர் வெற்றி -அமெரிக்க கருத்துக்கு கண்டனம்[/size]

[size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டியில் புதிய உலக சாதனைப் படைத்துள்ள சீன வீராங்கனை ஒருவர் ஊக்க மருந்து பயன்படுத்தியிருக்கலாம் என்று எழுந்துள்ள சந்தேகங்களுக்கு சீனாவில் கோபாவேசத்துடன் கூடிய கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

சீன வீராங்கணை யி ஷிவின் கடந்த சனிக்கிழமை மகளிருக்கான 400 மீட்டர் தனிப் பிரிவில் சாத்தியப்படாத வேகத்தில் நீந்திச் சென்றார் என்று அமெரிக்க நீச்சல் அணியின் பயிற்சியாளர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.[/size]

[size=4]யி ஷிவின்னின் வெற்றியும் சாதனையும் பிரமிக்கத்தக்க வகையில் இருந்தன என்று, அமெரிக்க பயிற்சியாளர் தெரிவித்த கருத்துக்களுக்கு சமூக இணைய தளங்களின் கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வந்துள்ளன.[/size]

அவரது வெற்றியை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் பொறாமையின் காரணமாகவே இப்படியான கருத்துக்கள் சமூக இணையதளங்களின் பதிக்கப்பட்டுள்ளன என்று சீனாவில் கோபாவேசம் எழுந்துள்ளது.

எனினும் சீனாவின் பல நீச்சல் வீரர்கள், முன்னர் ஊக்கமருந்து பயன்பாட்டியில் சிக்கியிருந்ததால், அமெரிக்க பயிற்சியாளரின் சந்தேகத்தில் நியாயம் இருக்கிறது எனவும் கருத்துக்கள் வந்துள்ளன.

ஆனால், தான் ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக வந்துள்ள குற்றச்சாட்டை யி ஷிவின் கடுமையாக மறுத்துள்ளார்.

இன்று(செவ்வாய்கிழமை அவர் மகளிருக்கான 200 மீட்டர் நீச்சலின் இறுதிப் போட்டியில் பங்குபெறுகிறார்.

இதனிடையே பிரிட்டிஷ் ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரான காலின் மொய்னிஹான் பிரபு, யி ஷிவின் படைத்துள்ள சாதனையையும் அவரது திறமைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

உக்க மருந்து பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பு 'வாடா' இது தொடர்பில் மிக மிக கவனமாக உள்ளது என்றும், யி ஷியின் வாடாவின் பரிசோதனையின் வெற்றி பெற்றுள்ளார். அதனால் அவர் எந்தத் தவறையும் செய்யவில்லை என்பது உறுதியாகிவிட்டது என்றும், அத்துடன் இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும் பிபிசியிடம் தெரிவித்தார்.

http://www.bbc.co.uk...ryishiwin.shtml

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா அளாப்பி வெல்லப் பாத்திருக்கு, ஒலிம்பிக் கமிட்டியினர் உசாராயிட்டினம். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிவனின் அருள் இருந்ததால்தான் சிறுமி ஷிவன் வெற்றிபெற்றுள்ளார்..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

16 வயதான சீன யுவதி, யே ஷிவென்

எனக்கு எப்பவும் உந்த சீனா விளையாட்டுகாரரிலை கன டவுட்........உவங்கள் ஏதோ மிசின் வைச்சும் கண்டுபிடிக்கேலாத அளவுக்கு மருந்துமாத்திரையள் பாவிக்கிறாங்கள் எண்டுறன்!!!!!இல்லாட்டி என்னெண்டப்பா?உவ்வளவத்துக்கு?????

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளையல் எல்லாம் அடிச்சிடுக் குப்புறப்படுத்தால் இப்படித்தான் முடியும் :rolleyes:

  • தொடங்கியவர்

எனக்கு எப்பவும் உந்த சீனா விளையாட்டுகாரரிலை கன டவுட்........உவங்கள் ஏதோ மிசின் வைச்சும் கண்டுபிடிக்கேலாத அளவுக்கு மருந்துமாத்திரையள் பாவிக்கிறாங்கள் எண்டுறன்!!!!!இல்லாட்டி என்னெண்டப்பா?உவ்வளவத்துக்கு?????

[size=4]திருட்டு செய்யலாம், ஆனால் பிடிகொடுக்காமல் செய்யவேண்டும். சீனா அதில் பட்டப்படிப்பு படித்துள்ளது, அரசியல் / விளையாட்டு / பொருளாதாரம்... என. [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]main_12561.jpg[/size]

[size=4]இவர் சிறுமியாக இருந்தவேளை (இன்னும் சிறுமிதான்) ஒரு ஆசிரியர் இவரது கைகளைப்பார்த்து பெற்றோரிடம் இவளை நீச்சல் பயிற்சியில் சேர்க்க கேட்டாராம்.[/size]

இனி நான் ஒரு சிறுமியை பெத்து, அதுக்கு இப்படி கை இருந்து, எப்ப அதுவும் கோல்ட் மெடல் எடுக்கபோகுதோ? -

சுருளி ராஜனின் வில்லுப்பாட்டு மாதிரி எல்லோ இருக்கு, பிள்ளை பிறக்கையிலே "ஒரு கையிலே பென்சில் மற்ற கையில் அழி ரப்பர் ஓடு பிறந்தது" என்ற மாதிரி..

இசைக்கலைஞன்;

சரியாக சொன்னீர்கள்

அவன் அருளாலே அவன்தாள் வணங்கி...........

சீனத்து சின்னப்பெண்மீது பலருக்கு பொறாமையும், எரிச்சலும் வந்ததில் ஆச்சரியம் இல்லை. பிரித்தானியாவில் கல்விகற்கின்ற லித்துவேனியாவை சேர்ந்த 15 வயது சிறுமியும் தனிநபர் நீச்சல் போட்டி ஒன்றில் நேற்று முன்தினம் தங்கம் வென்றார். உடற்பயிற்சி போட்டிகளில் கலந்து வெற்றிபெறும் பெரும்பாலானவர்கள் மிகவும் இளையவர்களாக உள்ளார்கள், நீச்சலிலும் இவ்வாறே.

மிக இளம் வயது பெண்களுக்கு முதியவர்களைவிட உடல் நீட்டி வளைந்து இசைந்துகொடுப்பதனால் இவ்வாறு சாதனை செய்யமுடிகின்றதோ என்னமோ.

நம்மவர்களின் பிள்ளைகள் ஒலிம்பிக்போட்டியில் பதக்கங்களை வெல்வது எந்தக்காலமாம்? ஏராளம் பிள்ளைகள் நீச்சல்பயிற்சியை முறையாகவும், முழுமையாகவும் கற்று Life Guard நிலைக்கு இலகுவாக செல்கின்றார்கள். ஆனால், போட்டிகளில் ஆர்வம் செலுத்தாமல் உள்ளதற்கு காரணம் யாதோ? அமெரிக்காவுடனும், மற்றைய நாடுகளுடனும் ஒப்பிடும்போது நீச்சல்போட்டிகளில் கனடா மிகவும் பின் தங்கியுள்ளது. இன்று ஓர் கனேடிய வீரர் நீண்ட பல வருடங்களின் பின் கனடா நாட்டுக்கு வெண்கல பதக்கத்தை ஒலிம்பிக்நீச்சல் போட்டியில் பெற்றுக்கொடுத்து பெறுமை சேர்த்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

-----

நம்மவர்களின் பிள்ளைகள் ஒலிம்பிக்போட்டியில் பதக்கங்களை வெல்வது எந்தக்காலமாம்? ஏராளம் பிள்ளைகள் நீச்சல்பயிற்சியை முறையாகவும், முழுமையாகவும் கற்று Life Guard நிலைக்கு இலகுவாக செல்கின்றார்கள். ஆனால், போட்டிகளில் ஆர்வம் செலுத்தாமல் உள்ளதற்கு காரணம் யாதோ? அமெரிக்காவுடனும், மற்றைய நாடுகளுடனும் ஒப்பிடும்போது நீச்சல்போட்டிகளில் கனடா மிகவும் பின் தங்கியுள்ளது. இன்று ஓர் கனேடிய வீரர் நீண்ட பல வருடங்களின் பின் கனடா நாட்டுக்கு வெண்கல பதக்கத்தை ஒலிம்பிக்நீச்சல் போட்டியில் பெற்றுக்கொடுத்து பெறுமை சேர்த்தார்.

எம்மவர்கள் பிள்ளையை டாக்ரராகவோ, பொறியியலாளராகவோ வரவேண்டும் என்று முயற்சிப்பதால், ஒலிம்பிக் விளையாட்டை குறி வைத்து பிள்ளையை வளர்ப்பதில்லை. இங்குள்ள நகர‌ விளையாட்டு அரங்குகளில்... சிறிய வயதிலிருந்தே பிள்ளைகளை நேரகாலம் பாராது, பயிற்சி கொடுத்துக் கொண்டிருப்பார்கள். உணவுக்கட்டுப்பாட்டாளர், பயிற்சியாளர், டாக்டர் என்று... ஒரு குழுவே மும்முரமாக இயங்கும். பின் அதில் தேறியவர்களை, நாடு ரீதியில் தேர்ந்தெடுத்து... அடுத்த கட்ட‌ பயிற்சி நட‌க்கும். அதிலும்... ஒலிம்பிக் போட்டிக்கு பரம்பரையாக, ஜேர்மனில் வாழ்ந்தவர்களையே... அனுப்புவதை அனுபவபூர்வமாக கண்டுள்ளேன். வெளிநாட்டவர்களுக்கு அந்தச்சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில்... வசிப்பவர்களுக்கு, ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தடை ஏதும் இல்லை என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேகமா நீந்துங்கோ.. நாங்கள் லேட்டாவே வாறம் என்பது எங்கள் பொலிசி.. :D பிறகு எப்பிடி வெல்லுறது..? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.