Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹக்கீம், அஸ்வர் - இருவரில் யார் சொல்வது உண்மை? : அப்துல் மஜீத்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் எந்தப் பள்ளிவாயலுக்கும் ஆபத்தில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். ஏம். அஸ்வர் கூறும் அதே வேளை இந்த ஆட்சியில் பெண்களுக்கு தமது வீட்டில் கூட தொழ முடியவில்லை என அரசாங்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறுகிறார். இதில் எது உண்மை என்பதை ஹக்கீமினால் பாராளுமன்றத்தில் தெளிவு படுத்த முடியுமா என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஏ. எச். ஏம். அஸ்வர் இந்த ஆட்சியில் முஸ்லிம்களின் எந்தவொரு பள்ளி வாயலும் தாக்கப்படவில்லை என உரையாற்றினார். இதேவேளை கிழக்கில் தேர்தல் பிரசாரம் செய்யும் மு.கா தலைவரோ இந்த அரசாங்கத்தில் மத சுதந்திரம் இல்லை என்றும் நோன்பு காலத்தில் பெண்கள் தமது வீடுகளில் கூட தொழ முடியவில்லை என்றும் கூறுகிறார். அஸ்வர் அரசாங்கக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர். ஹக்கீம் அந்த அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியின் தலைவர். இப்படி அரசாங்கத்தில் உள்ள இருவரும் முரண்பட்ட வகையில் பேசும் போது அஸ்வர் பாராளுமன்றில் பேசியதற்கு அதே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பாராளுமன்றத்தில் வைத்து இதற்கு பதில் அளிக்கத் தயங்குவது ஏன்?

கிழக்கில் தமிழ் மொழி தவிர வேறு மொழி தெரியாத பொதுமக்கள் மத்தியில் வீறாப்புடன் பேசும் ரவூப் ஹக்கீம் தாம் ஒவ்வொரு வாரமும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதியைச் சந்திக்கும் போதும், பாராளுமன்றத்திலும் இவை பற்றி பேசாமல் இருக்கின்றார். இவர்களை மக்கள் பாராளுமன்றம் அனுப்பியது அங்குள்ள கதிரைகளை சூடாக்கவா அல்லது சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகளை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காகவா என்பது கூடத் தெரியாத நிலையில் மு. கா பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் இவ்வாறு இரட்டை வேடம் போட்டு தமது சுயநலத்திற்காக மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றும் இவர்களால் முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுத்தர முடியாது என்பதைக் கடந்த பத்து வருடங்களாக நாம் மட்டுமே சொல்லி வருகின்றோம். எமது கூற்று தொடர்ந்தும் உண்மையாகிக்கொண்டே இருக்கிறது என்பதை மக்கள் அறிவர்

http://virakesari.lk/article/local.php?vid=95

[size=4]மக்களாட்சி அல்லது ஜனநாயகம் ஒற்றையாட்சி முறையின் கீழே சிறுபான்மை சமூகங்களுக்கு ஆகாது. இதை முஸ்லீம் தலைமைகள் உணர்ந்து செயல்படாதவரைக்கும் நடத்துவது பொய்கள் நிறைந்த அரசியலே.[/size]

இரண்டிலும் ஏதும் உண்மைகள் இல்லை. அதற்காக இவற்றிலிருந்து மூன்றாவது ஒன்று உண்மையாக எழவும் முடியாது. இது எல்லாம் மந்திரிப்பதவியை காட்டி இந்த அற்ப, படித்த முட்டாள்களை, கற்பனாவாதத்தில் வைத்து உளறவைக்கும் மங்கிந்தாவின் மந்திர தந்திர ஜாலவிதைகள். இவற்றுக்கும் உண்மைகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மேலும் இதில் எதுவும் மகிந்தாவைகூட உண்மையாக காப்பாற்றவோ, தாக்கவோ சொல்லப்படுபவை அல்ல. இது மந்திரிப்பதவிகளை காப்பாற்ற சொல்லபடுபவையே. அதாவது மகிந்தாவுக்கு அஸ்வர் நண்பரோ கக்கீம் எதிரியோ அல்ல.

இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் எந்தப் பள்ளிவாயலுக்கும் ஆபத்தில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். ஏம். அஸ்வர் கூறும் அதே வேளை
கொலைகார மகிந்தாவை காப்பாற்றி அவரின் அருளை பெற சொல்லும் பொய். இதே மாதிரியே கக்கீம் ஐ.நா.வில் செய்தவர்.

இந்த ஆட்சியில் பெண்களுக்கு தமது வீட்டில் கூட தொழ முடியவில்லை என அரசாங்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறுகிறார்.
இப்படி ஒரு பிரச்சனை கிழக்கிலோ அல்லது தெற்கிலோ இல்லை. ஆனால் பள்ளி வாசல்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றன. இதை கூட்டமைப்பையும், நா.க. அரசையும் விட இதுவரையில் யாரும் நிசத்தில் நடந்த சம்பவங்களை சொல்லி எதிர்த்தது கிடையாது.செய்தித் தணிக்கை இருக்கும் போது வதந்திகளில் மட்டும்தான் தங்கியிருக்க முடியும். அதைவிட வேறே வழி கிடையாது. அப்படித்தான் கிழக்குமாகணத்து மக்கள் தங்கியுமிருக்கிறார்கள். அதை நன்றாக தெரிந்து வைத்துகொண்டு, கக்கீம் இப்படி வதந்திகளைப் பரப்பி தேர்தல் வெல்லப் பார்க்கிறார். உண்மையைப் பேசி அரசை தாக்குவதில் இருந்து தப்புகிறார். இதனால் மந்திரி்ப்பதவி பாதுகாக்கப்படும். தேவைப்படும் போது அரசுடன் சேர்ந்து புலிக்காச்சலும் பரப்புகிறார். பதியுதின் இலங்கையில் பேசும் பேச்சான "இந்த அரசின் பின்தான் முஸ்லீம்கள் கௌரவத்துடன் வாழமுடிகிறது" என்ற பேச்சை கக்கீம் ஐ.நாவில் பேசியவர். இதற்கு பதிலாக இந்து, கிறிஸ்தவ, முஸ்லீம் வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதை நா.க.அரசு வெளிநாடுகளுக்கும் கொண்டுவந்திருந்தது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தேர்த்தலுக்கு பின் ஹக்கீமோ அல்லது அஸ்வரோ முஸ்லிம்களுக்கு எதிராக அரசால் நடாத்தப்படும் எந்த அராஜகம் பற்றியும் பேசவே மாட்டார்கள்.ஆகவே தற்போதைய பேச்சுக்கள் முற்று முழுக்க ஒரு நடிப்பு என்பது மட்டும் உண்மை.

இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் எந்தப் பள்ளிவாயலுக்கும் ஆபத்தில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். ஏம். அஸ்வர் கூறும் அதே வேளை இந்த ஆட்சியில் பெண்களுக்கு தமது வீட்டில் கூட தொழ முடியவில்லை என அரசாங்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறுகிறார். இதில் எது உண்மை என்பதை ஹக்கீமினால் பாராளுமன்றத்தில் தெளிவு படுத்த முடியுமா என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பியுள்ளார்.

முஸ்லிம்களுக்கே உரிய போக்கிரித்தனத்தை இதில் காணலாம்!

Aug 12, 2012

ரவூப் ஹக்கீம் பதவிக்காகசோரம் போய்விட்டார் - உலமா கட்சி கண்டனம்

நாட்டில் காவியுடை பயங்கரவாதம் நிலவுவதாக கிழக்கில் வீறாப்புடன் பேசிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்இ கொழும்பு வந்ததும் தனது பேச்சுக்காக ஜாதிக ஹெல உறுமயவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டதன் மூலம் பதவிக்காக பகிரங்கமாகவே சோரம் போய் விட்டார் என அகில இலங்கை உலமா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Mubarakamajeed.jpg

இது பற்றி உலமாக் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது

அண்மைக்காலமாக முஸ்லிம்களின் சமயக் கிரியைகளுக்கெதிராக பல சக்திகள் செயற்பட்டு வருவதை நாடு அறியும். இவற்றை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான ரவுப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் அல்லது ஜனாதிபதியுடன் பேசி இவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை நாடியிருக்கலாம்.

அதனை விடுத்து இது விடயங்களை தனது கட்சியின் தேர்தல் சுய நலனுக்காக பயன்படுத்துவதன் மூலம் கிழக்கு முஸ்லிம்களை பகடைக்காயாக மாற்ற முனைந்து கடைசியில் தான் பேசியவற்றுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்கும் இழி நிலைக்குத் தள்ளப்பட்டதன் மூலம் முஸ்லிம்களின் அரசியல் தலைவராக இருப்பதற்குரிய தகுதியை இவர் முற்றாக இழந்து விட்டார்.

இத்தகைய ஒருவரை நம்பி கிழக்கு மக்கள் இவரது கட்சிக்கு வாக்களித்தால் நிச்சயம் அவர்கள் நட்டாற்றில் விடப்படுவர் என்பதை உறுதியாகக் கூற முடியும். முஸ்லிம் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதாயின் அமைச்சுப்பதவிகளில் இருந்து கொண்டு ஒரு போதும் முடியாது என்பதை நாட்டின் வரலாறு நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. இதன் காரணமாகவே மு. கா தலைமை அமைச்சுப்பதவியைப் பெறாமல் அரசுக்கு ஆதரவளிக்கலாம் என்பதை கடந்த காலங்களில் நாம் சொன்னோம்.

அமைச்சுப்பதவியைப்பெற்று அரசுக்கு முட்டும் கொடுத்துக்கொண்டு சமூகத்துக்கான உரிமைகளைப் பெற முடியும் என்றிருந்தால் தமிழ் கூட்டமைப்பினர் எப்போதோ அதற்கு முன் வந்திருப்பார்கள். அவர்களைப் பார்த்தாவது ஹக்கீம் அரசியல் கற்றுக்கொள்ளாமல் அதாவுல்லாஇ ரிசாத் போல் தாமும் தமது சகாக்களும் அமைச்சர்களாகவும் அரச வாகனங்களில் உல்லாசமாக வலம் வரவும் வேண்டும் என்பதுடன் சமூகத்தின் உரிமைகளுக்காக பேசுவது போல் காட்டவும் வேண்டும் என்றால் அது முடியாத காரியம் என்ற யதார்த்தம் இப்போதாவது ரவூப் ஹக்கீமுக்கு விளங்கியிருக்குமா என்பது தெரியவில்லை. ஹெல உறுமயவிடம் போய் இவர் பகிரங்க மன்னிப்புக் கேட்டமை மூலம் நாட்டில் காவியுடை பயங்கரவாதம் இல்லை என்பதை இவரே பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதாகவே அர்த்தப்படுகிறது. இதன் மூலம் முழு முஸ்லிம் சமூகத்துக்கும் தலை குனிவை ஏற்படுத்தியுள்ளதோடு ஜாதிக ஹெல உறுமயவுக்கான சிங்கள மக்களின் வாக்குகளைக் கணிசமாக உயர்த்தி விட்டார்.

இவ்வாறு மன்னிப்பு கேட்பதை விட அமைச்சுப்பதவியை தூக்கி எறிந்திருந்தால் இந்த நேரத்தில் சமூகத்துக்கு பெருமை சேர்ந்திருக்கும். அதனை அவர் செய்ய மாட்டார் என்பது நமக்குத்தெரியும். காரணம் முஸ்லிம் காங்கிரஸ் என்பது முழுக்க முழுக்க சுயநலவாதிகளின் கோட்டை என்பதைக் கடந்த பத்து வருடங்களாக நாம் கூறி வருகிறோம்.

இவ்வாறு கிழக்கில் ஒன்றும் கொழும்பில் ஒன்றுமாகப் பேசும் ஒரு தலைமையைப் பற்றி இன்னமும் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் புரியவில்லை என்றால் அவர்கள் இன்னமும் யதார்த்த அரசியலை புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தப்படும்

http://www.pathivu.com/news/21656/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹக்கீம், அஸ்வர் - இருவரில் யார் சொல்வது உண்மை? : அப்துல் மஜீத்

நீங்கள் எல்லாருமே பொய்.......இதுக்கை கேள்வி வேறை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.