Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் திருமுருகனின் நகர்வலம் !! தமிழர்களுக்கு என்ன பிரச்சனை ??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

உற்சவங்களில் மிகப்பெரிய உற்சவமாக பிரம்மோற்சவம் கருதப்படுகிறது. துவஜாரோஹனம் எனப்படும் கொடியேற்றம் முதல் தீர்த்தம்,பூங்காவனம் வரையான உற்சவங்கள் இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைத்தல் ஆகியவற்றை குறிக்கின்றன.

இறைவனின் அழித்தல் தொழிலைக் குறிக்கும் தேர்த்திருவிழாவானது மனிதனிடத்தில் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் இல்லாதொழிக்க வேண்டும் என்ற தத்துத்தை வெளிப்படுத்துகிறது.

கொழும்பு கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் பிரம்மோற்சவம் கடந்த முதலாம் திகதி விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமானது. இத்திருவிழா நாளை மறுதினம் திங்கட்கிழமை பூங்காவனம்,திருவூஞ்சல் பூஜைகளுடன் நிறைவுபெறும்.

(படப்பிடிப்பு: எஸ்.எம். சுரேந்திரன்)

dsc1184j.jpg

img0649st.jpg

img0657yf.jpg

img0674ul.jpg

img0681dc.jpg

img0685yr.jpg

img0723ks.jpg

img0726bl.jpg

http://www.virakesar...cal.php?vid=121

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புவாழ் மக்கள் புத்த மதத்துக்கு மாறாமல் இன்னும் சைவர்களாகவே இருப்பது சிறப்பு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புவாழ் மக்கள் புத்த மதத்துக்கு மாறாமல் இன்னும் சைவர்களாகவே இருப்பது சிறப்பு.. :D

:D :D

[size=4]குறைவான தமிழர்கள் உள்ள புலம்பெயர் தேசங்களில் / நகரங்களில் கூட தமிழ் மொழியும் கலாச்சாரமும் அதிகம் பேணப்படுவதை காணலாம்.[/size]

Edited by akootha

உதெல்லாம் சிங்களவங்கள் தான் ,உலகத்தை ஏமாற்ற நடத்திய திருவிழா.

[size=4]யுத்தம் முடிவடைந்த பிறகு தமிழ்க் கலாச்சாரம் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்படுகிறது என்ற அச்சம் தெரிவிக்கப்படுகிறது. அது சரியா? [/size]

[size=4]ஒரு பக்கத்தில் அரசாங்கம் புத்த சமயத்தைப் பரப்புவதற்கு முயல்வது தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால் வடபகுதியில், யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் புத்தருடைய சிலைகள் வைக்கப்பட்டு விகாரைகளும் கட்டப்படுகின்றன. இதுவும் தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. அங்கு வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்துமக்கள். அவர்கள் வாழும் இடங்களில் புத்த விகாரைகளோ புத்தர் சிலைகளோ எதற்கு? முன்பு மக்கள் கட்டுப்பாடுகளோடு இருந்தார்கள். போர் அவர்களை வேறு விடயங்கள் எதையும் யோசிக்க விடாது தடுத்திருந்தது. போர் முடிந்தவுடன் மக்கள் ஒருவிதச் சுதந்திர மனநிலையை உணருகிறார்கள். எல்லாவகையான போதைப் பொருட்களும் யாழ்ப்பாணத்தில் தாராளமாகக் கிடைக்கின்றன. இது இளைஞர்களைத் திசைதிருப்பிவிடுகிறது. சீரழிவுக்கு இதெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன். [/size]

[size=4]அங்கு இருக்கும் இன்னுமொரு பிரச்சினையைப் பற்றியும் இங்கே சொல்ல வேண்டும். ராணுவம் விவசாய நிலங்களையும் மற்ற நிலப்பகுதிகளையும் அபகரித்திருப்பதால் விவசாயம், கைத்தொழில் போன்றவை முடங்கிப் போயிருக்கின்றன. தமிழ் மக்களுடைய வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது பெருந்துயரம். நாற்பதாயிரம் ராணுவத்தினர் பெரும்பாலான நிலங்களை அபகரித்திருக்கிறார்கள். அது விவசாயிகளுக்குப் பாரியதொரு பிரச்சினை. பாதுகாப்பு என்னும் பெயரில் அவர்களின் நிலங்களைக் கேள்வியில்லாமல் ராணுவத்தால் பிடுங்கிக்கொள்ள முடியும். [/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=106212

[size=5]அருட்தந்தை தோமஸ் சௌந்தரநாயகம்[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரப்பா இப்படி தலைப்பு போட்ட நாதாரி? :wub:

[size=5]"கொழும்பில் திருமுருகனின் நகர்வலம்."[/size]

இப்படித்தானே தலைப்பு இருக்கு? இதிலை எங்கை

"[size=5]தமிழர்களுக்கு என்ன பிரச்சனை ??" என்று இருக்கு? [/size]

[size=5]சொந்த ஆக்கம் என்றால் விரும்பியது போல தலைப்பிடலாம் இன்னொருத்தன்ரைய வெட்டி ஒட்டும் போது அந்த தலைப்பை எல்லோ இடவேண்டும்? அப்படி இல்லை என்றால் எதுக்கு வீரகேசரியின்ரை இணைப்பைக்குடுப்பான்?[/size]

[size=5]இல்லை என்றால் கீழை விளக்கமாச்சும் போடலாமே? திருவிழா செய்தவுடனை தமிழற்றை பிரச்சனை முடிஞ்சுது என்று வீரகேசரி சொல்லிச்சுதா? இல்லை தமிழ்மக்கள் தான் சொல்லிச்சினமா?[/size]

[size=5]எப்படியெல்லாம் யோசிக்கிறாங்களப்பா..!! :wub:[/size]

[size=5]இண்டைக்கு ஜேர்மனியிலை கேவலார் மாதா கோவில் பெருவிழா ஜரோப்பாவிலை இருந்து வந்த குழந்தை குஞ்சிலை இருந்து எல்லாம் நிக்குதுகள் அப்ப ஈழம் கிடைச்சிடுமோ? :unsure:[/size]

[size=4]யாழ்ப்பாணத்தில் பொதுநிகழ்ச்சிகளில் ராணுவம் பங்கேற்பதாகத் தெரிகிறது. இதன் பின்னணி என்ன?

பொதுமக்களோடு தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்ற ராணுவம் நினைக்கிறது. ஆனால் ராணுவம் என்றால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அச்சுறுத்தக் கூடிய ஒரு அமைப்புதான். அதைத் தமிழ் மக்கள் எப்போதும் விரும்புகிறார்களில்லை.[/size]

[size=5]அருட்தந்தை தோமஸ் சௌந்தரநாயகம்[/size][size=4] [/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=106212

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.