Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெசோ மாநாட்டின் பின்னணி / பயன்கள்

டெசோ மாநாட்டின் பின்னணி? 29 members have voted

  1. 1. டெசோ மாநாட்டின் பின்னணி என்ன?

    • இந்திய நடுவண் அரசு மீது அழுத்தங்களை அதிகரித்தல்
      0
    • சிங்கள அரசு மீது அழுத்தங்களை அதிகரித்தல்
      3
    • சுயலாபம் சம்பாதித்தல்
      26
    • தமிழர் ஒற்றுமையை வலுப்படுத்தல்
      0
  2. 2. நடந்து முடிந்த மாநாட்டால் என்ன பயன்?

    • தமிழகத்திலும் இந்தியாவிலும் புதிய உணர்வலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
      5
    • தி.மு.க. இலாபம் பெற்றுள்ளது
      10
    • சிங்கள அரசு உரிமை பகிர்வுகளை துரிதப்படுத்தும்
      0
    • எந்த பயனும் இல்லை
      14

Please sign in or register to vote in this poll.

Featured Replies

[size=4]14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமான தீர்மானம் - அவை பெரும்பாலும் மத்திய அரசை வலியுறுத்திய தீர்மானங்களும், ஐக்கிய நாடுகள் சபைக்கு வேண்டுகோள் விடுக்கும் தீர்மானங்களும் அடக்கம். 14 தீர்மானங்களில் முக்கியமானது பத்தாவது தீர்மானம். [/size]

[size=4]அத்தீர்மானத்தின் வாசகங்கள், "இலங்கைத் தமிழர்களிடம் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அது தெற்காசிய மனித உரிமைகள் பிரச்சினையாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்" என்பதுதான். [/size]

  • தொடங்கியவர்

[size=4]மாலையில் வை.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முன்னோடி நிகழ்ச்சியாக ஈழத்தமிழர்களின் இன்னல்களை விளக்கும் பாடல்கள் இடம்பெற்றன. அதில் "இருட்டறையில் உள்ளதடா ஈழம், அங்கு எலும்புக்கூடாய் தமிழன் இருக்கின்றானே" என்ற முதல் பாடலை தி.மு.க. தலைவர் கருணாநிதியே எழுதியிருந்தார். [/size]

[size=4]"சுதந்திர "தமிழனைத் தமிழனே மோதி அழிப்பதுதானே தொடர்ந்து வரும் சரித்திரம்" என்று தன் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார் [/size]தி.மு.க. பொருளாளரும், டெசோ மாநாட்டின் வரவேற்பு குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின். உலக நாடுகளும், இந்திய பேரரசும் ஈழத்தமிழர்களுக்கு உதவிட முன் வர வேண்டும் என்று இறுதியில் கோரிக்கை வைத்து தன் பேச்சை முடித்துக் கொண்டார் மு.க. ஸ்டாலின்.

[size=4]அடுத்துப் பேசிய டெசோ உறுப்பினர் சுப்புலட்சுமி ஜெகதீசன், "தமிழினத்தை அழிக்க அதன் மொழியை அழித்தால் போதும்" என்ற கோட்பாட்டை கையிலெடுத்து செயல்பட்டனர் இலங்கை அரசாங்கத்தினர் என்று சுட்டிக்காட்டினார். [/size]

[size=4]நைஜீரியாவிலிருந்து வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரசாக் மோமோ, "இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் மிகவும் முக்கியமானது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அணுசக்தி (ஈரானின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி) பிரச்சினையை விட மனித உரிமைப் பிரச்சினை மிக முக்கியமானது" என்று சற்று வித்தியாசமான வாதத்தை முன் வைத்து விட்டு, "தமிழர்களின் உரிமையை இலங்கையில் பாதுகாப்பது டெசோவின் கடமை மட்டுமல்ல. இந்தியாவின் கடமை மட்டும் அல்ல. அது உலகத்தின் கடமை" என்று ஆவேசமாகப் பேசினார்.[/size]

[size=4]திராவிட இயக்கப் பேரவையின் சார்பில் பேசிய சுப. வீரபாண்டியன், "ஈழத்தமிழர்களுக்கு உரிமை பெறுவது கடினம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் அவர்களின் வாழ்வுரிமைக்காக மாநாடு நடத்துவதே எவ்வளவு கஷ்டம் என்பது இப்போது எங்களுக்கு தெரிந்திருக்கிறது" என்று கூறி, சென்னையில் நடைபெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிற்கு ஏற்பட்ட தடங்கல்களைச் சுட்டிக்காட்டியவர், "இலங்கையில் அமைதிப் போராட்டம் வெற்றி பெறவில்லை என்ற பிறகுதான் "அந்த தம்பிகள்" ஆயுதப் போராட்டத்தை 1970 வாக்கில் கையிலெடுத்தார்கள்" என்று சூடாகப் பேசினார்.[/size]

[size=4]மாநாட்டில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், "இலங்கைத் தமிழர் பிரச்சினை ஏதோ தமிழகப் பிரச்சினையல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்சினை. ஆகவே டெசோவின் தீர்மானங்களை நான் மனதார ஆதரிக்கிறேன். இலங்கைத் தமிழர் பிரச்சினையை தீர்க்க உதவாமல் பாரபட்சமாக இருப்பது இந்தியாவின் ஒற்றுமைக்கே பாதகமாக முடியும்" என்றும் எச்சரித்தார். [/size]

[size=4]மொரா்க்கோ நாட்டிலிருந்து வந்திருந்த தேசிய உண்மை(ம) நீதி ஆணையத் தலைவர் அஃபெகோ முபாரக் பிரான்சு மொழியிலேயே மேடையில் பேசினார். அதை மொழிபெயர்த்த தி.மு.க. தலைமைக் கழக அமைப்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், "டெசோ சக்தி வாய்ந்த அமைப்பு. தேசிய, பிராந்திய தலைவர்கள், உலகத் தலைவர்களை ஈர்க்க தி.மு.க. தலைவர் கலைஞரால் மட்டுமே முடியும். ஈழத்தமிழர்களுக்கு சம வாய்ப்பு, சம உரிமை கட்டாயம் வழங்கப்பட வேண்டும்" என்று முபாரக் பேச்சின் தமிழாக்கத்தைப் படித்தார். [/size]

[size=4]விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், "கலைஞர் அவர்கள் ஈழத்தமிழர்கள் படும் துயரத்தைப் பார்த்து வாள் ஏந்த வேண்டிய நேரம் வந்து விட்டது. சீற வேண்டிய நேரம் வந்து விட்டது. கொதிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. தனி ஈழம், பொது வாக்கெடுப்பு போன்றவற்றை கலைஞர் போல் சொல்லும் துணிச்சல் இன்று யாருக்கு இருக்கிறது. குறிப்பாக ஒரு கோடி உறுப்பினர்களுக்கு மேல் வைத்திருக்கும் தி.மு.க. இந்தப் பிரச்சினையை எழுப்புவதால்தான் ஈழத்தமிழருக்கு விடியல் கிடைக்கும்" என்ற ரீதியில் ரொம்பவும் ஆவேசமாக உரை நிகழ்த்தினார். கைதட்டலும் பெற்றார். [/size]

[size=4]விக்ரமபாகு கருணாரத்தின பேசும் போது, "தமிழர்களின் கலாசாரம் அழிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளே இலங்கையில் சுதந்திரமாக அரசியல் பேச முடியவில்லை. டெசோவின் தீர்மானங்கள் இலங்கையில் எல்.எல்.ஆர்.சி. அறிக்கைக்கு சமமாக இருக்கிறது. ஆனால் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுகிறது. அதற்கு இன்னொரு காரணம் இலங்கை அரசுக்கு உதவி செய்வது இந்தியாதான். ஏன் தமிழர்களுக்கு எதிரான இந்தியாவின் போரை ஜனாதிபதி ராஜபக்ஷதானே நடத்தினார்" என்ற ரீதியில் காரசாரமாகப் பேசினார். அதற்கு அரங்கத்தில் பெரும் வரவேற்பு இருந்ததைப் பார்க்க முடிந்தது. "இங்கு டெசோ மாநாடு நடத்துவது போல் எல்லா நாடுகளிலும் நடத்துங்கள். இலங்கையில் நிலைமை மாறும். இந்த டெசோ மாநாட்டிற்கே இலங்கை அரசு பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும்" என்று வித்தியாசமான உரை நிகழ்த்தினார்.

திராவிடக் கழதத் தலைவர் வீரமணி, "டெசோ மாநாடு ஐந்தாம் ஈழப்போர். ஆனால் இந்த போரில் ஆயுதம் இல்லை. சுயமரியாதை இயக்கத்தை நடத்தும் எங்களுக்கு பெரியார் போன்ற தலைவர்கள் தந்த ஆயுதங்கள் இருக்கின்றன. கலைஞரின் பேனா இருக்கிறது. ஈழத்தமிழர்களின் பக்கம் உலகத்தின் பார்வையை ஈர்க்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கத் தேவையான அழுத்தத்தை இந்திய அரசுக்கு கொடுக்க வேண்டும்" என்று பேசியவர், 1939ஆம் வருடத்திலேயே இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைப் போக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்று எடுத்துக்காட்டினார். அதற்கு திராவிடக் கட்சிகளின் தொடக்கத்திற்கு வழிகோலிய தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் 1939ஆம் வருடத் தீர்மானத்தை மேடையில் வாசித்தார். [/size]

[size=4]தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன், "கலைஞரின் குரல்தான் டெசோவின் குரல். இந்தக் குரலை மத்திய அரசு (இந்திய அரசு) புறக்கணிக்க முடியாது. ஈழத்தமிழர் பிரச்சினை இன்று கலைஞர் போல் எழுந்து நிற்க முடியாமல் இருக்கிறது. கைதூக்கி விட ஆள் இல்லாமல் தவிக்கிறது. அதை முன்னெடுத்துச் சென்று ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுக் கொடுப்பதுதான் டெசோ மாநாட்டின் முக்கியப் பணி" என்ற ரீதியில் பேசினார்.

இறுதியில் தி.மு.க. தலைவரும், டெசோ மாநாட்டுத் தலைவருமான கருணாநிதி பேசினார். இலங்கை தமிழர்களுக்காக 1956 முதல் தி.மு.க. போராடி வந்த விதங்களை பட்டியலிட்ட அவர், "மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இங்கே பேசியவர்கள் கூறினார்கள். அதனால்தான் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்குவதற்கு இந்திய அரசு ஐ.நா.மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது என்று கூறியிருக்கிறேன். இதைவிட வேறு அழுத்தம் என்ன வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை" என்றார். அதே நேரத்தில் தமிழ் ஈழம் பற்றி ஏன் தீர்மானம் இல்லை என்பதை விளக்கிய தி.மு.க. தலைவர், "முதலில் அங்கே (இலங்கையில்) காயம்பட்டுக் கிடப்பவர்களை ரணத்தை ஆற்ற, காயத்தை ஆற்ற, அவனை உயிர் பிழைக்க வைக்க முதல் உதவி செய்வதைப் போல "டெசோ" மாநாட்டின் மூலமாக தேவையான முதல் உதவிகளை எல்லாம் இலங்கையிலே இருக்கின்ற தமிழர்களுக்கு நாம் செய்ய வேண்டும். செய்யத் தொடங்கியிருக்கிறோம். அதைத் தொடர்ந்து நான் அடிக்கடி சொல்வது போல் என்னுடைய வாழ்நாளில் நான் கண்டு கொண்டிருக்கின்ற நிறைவேறாத கனவு இருக்கிறதே (தனி ஈழம்), அந்தக் கனவு நிறைவேறும் வகையில் உங்களையெல்லாம் அரவணைத்துக் கொண்டு போராடுவேன். நிச்சயமாகப் போராடுவேன்" என்று உருக்கமாகப் பேசினார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் "டெசோ" மாநாடு ஒரு முக்கிய திருப்பத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாநாடு தமிழர் வாழ்வுரிமைக்காகவே நடைபெறுகிறது என்று காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், நாராயணசாமி போன்றோர் கூறியிருப்பது மாநாட்டிற்கு மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸும் வேறு வழியின்றி கை கொடுக்க விரும்புகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. "ஈழம்" என்ற சொல்லை முதலில் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டு விட்டு, பிறகு உடனே அதைப் பயன்படுத்தத் தடையில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமே அறிவித்ததும் தமிழகத்தில் எழுந்துள்ள அழுத்தம் காரணமாகவேதான். இந்தியாவின் மீதான அழுத்தம் இனி தமிழகத்திலிருந்து பலமாகவே இருக்கும் என்பதற்கு டெசோ மாநாடு ஒரு முன்னோடியாக இருக்கிறது. இனி இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி அனைத்துக் கட்சிகளுமே இப்படியொரு போட்டி அமைப்புகளை உருவாக்கி கூட்டம் போடலாம். மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அ.தி.மு.க.வின் செயற்குழுக்கூட்டம் வருகின்ற 27ஆம் திகதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெசோ மாநாடு விளக்கப் பொதுக்கூட்டங்கள் வருகின்ற 20ஆம் திகதியிலிருந்து 30ஆம் திகதி வரை தமிழகம் முழுவதும் தி.மு.க. நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில் அ.தி.மு.க.வின் இந்த அவசரச் செயற்குழு முக்கியத்துவம் பெறுகிறது.

அனேகமாக இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையை மனதில் வைத்து அ.தி.மு.க.வும் ஒரு மாநாட்டையோ, கருத்தரங்கத்தையோ நடத்த முன்வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.[/size]

http://www.tamilmirror.lk/2010-08-31-14-50-37/46593-q---q---.html

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகள் எப்போதும்... காலை ஆட்டிக்கொண்டு, படுத்திருக்கா விட்டால்... அவர்களின் கட்சி அடுத்த தேர்தலில் காணாமல் போய்விடும். அதற்கு, நல்ல உதாரணமாக இருப்பவர்கள், தமிழக அரசியல் வாதிகள். அதில்... கை தேர்ந்தவர் கருணாநிதி. அவருக்கு ஈழத்தமிழர் மேல்... உண்மையான அக்கறை இருந்திருந்தால்... முள்ளிவாய்க்கால் போர் நேரமே... அதனைச் செய்ய, நல்ல சந்தர்ப்பம் இருந்தது. அந்நேரம் சும்மா... கோமாளி ஆட்டம் ஆடி விட்டு, இப்போ... மாநாடு நடத்துவதால்... எவ்வித பிரயோசனமும் இல்லை. கருணாநிதியின் ஈழக்காதல், தனது கட்சிக்கு செல்வாக்கு தேட, பிரயோசனப் பட்டாலும்..., எமக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை. மேலும் சில, சிக்கல்களை... எமக்கு உருவாக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது என்பதை, கருணாநிதியின் கோமாளிக்கூத்து உருவாக்கி விடக்கூடாது என்பதே... எமது பிரார்த்தனை.

  • தொடங்கியவர்

அரசியல்வாதிகள் எப்போதும்... காலை ஆட்டிக்கொண்டு, படுத்திருக்கா விட்டால்... அவர்களின் கட்சி அடுத்த தேர்தலில் காணாமல் போய்விடும். அதற்கு, நல்ல உதாரணமாக இருப்பவர்கள், தமிழக அரசியல் வாதிகள். அதில்... கை தேர்ந்தவர் கருணாநிதி. அவருக்கு ஈழத்தமிழர் மேல்... உண்மையான அக்கறை இருந்திருந்தால்... முள்ளிவாய்க்கால் போர் நேரமே... அதனைச் செய்ய, நல்ல சந்தர்ப்பம் இருந்தது. அந்நேரம் சும்மா... கோமாளி ஆட்டம் ஆடி விட்டு, இப்போ... மாநாடு நடத்துவதால்... எவ்வித பிரயோசனமும் இல்லை. கருணாநிதியின் ஈழக்காதல், தனது கட்சிக்கு செல்வாக்கு தேட, பிரயோசனப் பட்டாலும்..., எமக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை. மேலும் சில, சிக்கல்களை... எமக்கு உருவாக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது என்பதை, கருணாநிதியின் கோமாளிக்கூத்து உருவாக்கி விடக்கூடாது என்பதே... எமது பிரார்த்தனை.

[size=4]கருணாநிதி என்பவர் ஒரு தனி மனிதன், ஒரு தமிழக பெரும் கட்சியின் தலைவர், சுயநலவாதி.[/size]

[size=4]ஆனாலும் இவரையும் தாண்டி, தேவையானால் இவரையும் நம் வழிக்கு கொண்டுவந்து எமத இலக்கு நோக்கி பயணிக்கவேண்டும், பயணிக்க முடியும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிரமபாகு கருணாரட்ணவை அழைத்து அவரை உண்மையை பேச விடாமல் செய்ததன் மூலம் மாநாட்டின் குறிக்கோள் என்ன என்பதையும் தமிழர்களுக்கு எந்த பலனும் தரப்போவதில்லை என்பதையும் உறுதிப்படுத்தி விட்டது.மாநாட்டுக்கு அழைத்தும் போகாத சம்பந்தர்,மனோ கணேசன் போன்றோருக்கு நன்றிகள்.

விக்கிரமபாகு கருணாரட்ணவை அழைத்து அவரை உண்மையை பேச விடாமல் செய்ததன் மூலம் மாநாட்டின் குறிக்கோள் என்ன என்பதையும் தமிழர்களுக்கு எந்த பலனும் தரப்போவதில்லை என்பதையும் உறுதிப்படுத்தி விட்டது.மாநாட்டுக்கு அழைத்தும் போகாத சம்பந்தர்,மனோ கணேசன் போன்றோருக்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்

[size=6]Karuna reignites Tamil issue[/size]

[size=5]DMK would hold public rallies across Tamil Nadu for ten days from August 20 to explain the TESO resolutions to the people. [/size]

[size=3]http://www.deccanchr...tamil-issue-968[/size]

[size=5] [/size]

[size=6]Tamil Eelam Supporters’ Organisation demands UN probe on Lanka war crimes, steers clear of Eelam [/size]

[size=5]Ram Vilas Paswan, president of Lok Janshakti Party, called upon Karunanidhi to hold such conferences in other parts of India and abroad to make people aware of the sufferings of Lankan Tamils as well as to mobilise mass support for their cause. He said people in north India mistake Lankan Tamils' issue as an LTTE problem. [/size]

[size=5][size=3]http://timesofindia....ow/15469364.cms[/size][/size]

[size=6]DMK's Delhi nudge on Lanka

[size=5]A DMK-organised conference today urged the Centre to move a resolution in the United Nations that would enable Sri Lankan Tamils to reach a political solution of their choice.[/size][/size]

[size=6][size=5][size=5][size=3]http://in.news.yahoo...-000000430.html[/size][/size][/size][/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கருணாநிதி என்பவர் ஒரு தனி மனிதன், ஒரு தமிழக பெரும் கட்சியின் தலைவர், சுயநலவாதி.[/size]

[size=4]ஆனாலும் இவரையும் தாண்டி, தேவையானால் இவரையும் நம் வழிக்கு கொண்டுவந்து எமத இலக்கு நோக்கி பயணிக்கவேண்டும், பயணிக்க முடியும். [/size]

கருணாநிதி சுயநலவாதி என்பதை... அகில உலகத் தமிழரும் அறிந்த விடயம்.

ஆனால், இந்த்தக் கயவன்... எப்ப, குத்துக்கரணம் அடிப்பான்... என்று, அவரைச் சார்ந்தவர்களுக்கே... தெரியாது, அல்லது தெரியாத மாதிரி நடிப்பார்கள். ஈழத்தமிழனை அழித்து, சிங்களவன் கொட்டம் விட்ட... சில கிழமைகளில்... கருணாநிதியின் பேரன் ஸ்டாலின் உதயநிதி ஸ்ரீலாங்கா கிரிக்கெட் மைதானாத்தில் சிங்கள தொப்பி அணிந்து வலம் வந்ததை... இணையத்தில் நாம் பார்த்தோம். அதற்கு மேலாக.. கனிமொழி கருணாநிதி மகிந்தவுக்கு பொன்னாடை போர்த்தியதை.... இன்னும் தமிழுலகம் மறக்கவில்லை. இந்தக் கேடு கெட்ட, சுயநலவாதிகள்... திருந்துவார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு, அறவே இல்லை. இவர்கள் செய்யும்... செய்லால், முதலாவதாக பாதிக்கப் படப்போவது சம்பந்தன். அடுத்து.... மனோ கணேசன், விக்கிரபாகு என்று....... அரசியல் அழுத்தம் கூடும்.

கருணாநிதி, மனச்சுத்தியுடன் ஈழத்தமிழருக்கு உதவ விரும்பினால்...

முன்னாள் தமிழக முத‌லமைச்சர் என்னும்... முறையில், அமுசடக்கமாக... சென்னையிலுள்ள‌ பல வெளிநாட்டு தூதர்களைச் சந்தித்து காரியமாற்றலாம்.

கருணாநிதியின்.... ஒரு தொலைபேசி அழைப்புடன்.... சென்னையிலுள்ள, வெளிநாட்டு தூதுவர்கள் பல‌ர், கருணாநிதி குடியிருக்கும்... கோபாலபுரத்துக்கே... வருவார்கள்.

அதனைச் செய்யாமல், மாநாடு என்று கூட்டி, மற்றவனை... நாறப் பண்ணுவதே... இவன் தொழில்.

Edited by தமிழ் சிறி

கருணாநிதி இனித்தன்னும் காங்கிரசை விட்டு விலகினால் சிலர் அவர் மீது நம்பிக்கை வைக்கத்தொடங்குவார்கள். ஆனால் அதற்கு கருணாநிதி தேர்தல் வரை காத்திருக்கிறார். அந்த நேரம் தேர்தல் வெல்லத்தக்க திசையில் செய்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி இனித்தன்னும் காங்கிரசை விட்டு விலகினால் சிலர் அவர் மீது நம்பிக்கை வைக்கத்தொடங்குவார்கள். ஆனால் அதற்கு கருணாநிதி தேர்தல் வரை காத்திருக்கிறார். அந்த நேரம் தேர்தல் வெல்லத்தக்க திசையில் செய்வார்.

அடுத்த தேர்தல் மட்டுமல்ல, இப்போது... மதுரையில் வெளியாகி இருக்கும் 18,000 கோடி கிரனைட் ஊழலை மறைக்க... போடும் நாடகம்.

ஏற்கேனவே... தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மகள், மருமகன் என்று மத்திய, மாநில அரசுகள் ஆட்களை அள்ளி சிறையில் போட்டுக் கொண்டிருக்க... அதனைத் திசை மாற்ற எடுத்த போராட்டம் தான்... கருணாநிதியின் ஈழப்பாச‌ டெசோ மாநாடு.

  • தொடங்கியவர்

அடுத்த தேர்தல் மட்டுமல்ல, இப்போது... மதுரையில் வெளியாகி இருக்கும் 18,000 கோடி கிரனைட் ஊழலை மறைக்க... போடும் நாடகம்.

ஏற்கேனவே... தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மகள், மருமகன் என்று மத்திய, மாநில அரசுகள் ஆட்களை அள்ளி சிறையில் போட்டுக் கொண்டிருக்க... அதனைத் திசை மாற்ற எடுத்த போராட்டம் தான்... கருணாநிதியின் ஈழப்பாச‌ டெசோ மாநாடு.

[size=4]அப்படியே இருந்தாலும் மீண்டும் தமிழக மற்றும் இந்திய மாநிலங்களில் எமது பிரச்சனையை ஈழ ஆதரவாளர்கள் வலுப்பெறச்செய்யலாம். கருணாநிதி தனக்கு இலாபம் தேடும் பொழுது நாம் அதில் இலாபம் அடைய வேண்டும். அதற்கு தடை ஏதும் இல்லை. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியிடம் மீண்டும் ஒரு முறை ஏமாற்றம் அடைய நாங்கள் தயாரில்லை.

இந்திய காங்கிரசிற்கான ஆதரவை முதலில் வாபஸ் வாங்கட்டும்

பேச்சுடன் நிற்காமல் செயலில் இறங்கட்டும்

கருணாநிதியிடம் மீண்டும் ஒரு முறை ஏமாற்றம் அடைய நாங்கள் தயாரில்லை.

இந்திய காங்கிரசிற்கான ஆதரவை முதலில் வாபஸ் வாங்கட்டும்

பேச்சுடன் நிற்காமல் செயலில் இறங்கட்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாநிதி மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஈழத்தமிழரின் அவலத்தில் சுயலாபம் தேடும் ஈனப்பிழைப்பைக்கைவிட்டு உண்மையாக நடந்தாலேயொழிய மற்றும் படி இவை எல்லாம் தமது சுயலாபத்துக்காய் எங்களை அடகுவைக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம். :icon_idea:

...

டெசோ மாநாடு - கருணாநிதிக்கு ஈழத்திலிருந்து ஒரு அகதியின் கடிதம்...!

மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்கட்கு,

எங்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் பேரன்பு எங்களைச் சிலிர்க்க வைக்கிறது. எங்கள் துன்பத்திலும், துயரத்திலும் நீங்கள் காட்டும் அக்கறையின் தீவிரம் எம்மை வியக்கவைக்கிறது.

எப்படி உங்களால் மட்டும் இது முடிகிறது? தள்ளாத வயதிலும் தார்மீக உணர்வோடு தமிழீழம் காணப் புறப்பட்டிருக்கும் புதிய புறநானூறு வீரத்தலைவனே!

தங்களுக்கு நிகர் தாங்களே தான்.

கந்தக வெடிப்பில் உடல் சிதற, செங்கழுநீர் வன்னி மண்ணில் காட்டாறாக ஓட, எம்மவர் உயிர்கள் இடம்பெயர்ந்து பறக்க - இந்த அவலங்கள் கண்டு துடிதுடித்தெழுந்து நீங்கள் சுழற்றிய வாளின் வீச்சு கண்டு திகைத்துத்தான் போய்விட்டோம் ஒரு போது.

உலகத்தமிழரின் தலைவனாக முடி தரித்து, செங்கோல் ஏந்தி அரியாசனத்தில் வீற்றிருக்க தங்களை விட்டால் யாருக்கு தகுதி இங்கு உண்டு.

காலைச் சிற்றுண்டிக்கும் மதியபோசனத்திற்கும் இடையே நீங்கள் இருந்த “சாகும்வரை உண்ணாவிரதம்” சரித்திரத்தில் ‘பிளாட்டினம்’ எழுத்தில் பொறிக்கப்பட வேண்டியது. எமது வரலாற்றாசிரியர்களின் எழுது கோலை “சாணை” கொண்டு தீட்டி கூர்மையாக வைத்திருக்க வேண்டும். உங்களின் வரலாறு ‘கூர்’மையாகப் பதிவு செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். முனை மழுங்கிய எழுத்தாணி;கள் தங்கள் பிளாட்டினக் காலவரலாற்றைச் சேதப்படுத்தி விடக் கூடாதல்லவா? தமிழின உணர்வாளர்களுக்கு ஒரு முன்னோடி தாங்கள். திராவிட பாரம்பரியத்தின் பெருமையினையும் தமிழின் தொன்மையையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய முன்னோடிகளில் இன்றுவரை உயிரோடிருப்பவர் நீங்கள் மட்டும் தான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய எம் மொழியின் தொன்மைச்; சிறப்புக்களை, அம்மொழியின் மூத்த குடிகளின் சீரார்ந்த வாழ்வின் பண்பாடுகளை உங்கள் எழுத்து மூலமும் பேச்சுக்கள் மூலமும் முரசறைந்து நிறுவியவர் தாங்கள். தமிழுக்குள்ளே அதன் முறையான பிரயோகங்களிலே எத்துணை அழகும் இனிமையும் இருக்கிறது என்று எடுத்துக் காட்டியவர் தாங்கள்.

தமிழ் கொஞ்சும்;

தமிழ் ஆனந்தம் பாடும்;

தமிழ் காதல் செய்யும்;

தமிழ் கோபப்படும்;

தமிழ் இரங்கும்;;

பொங்கும், நெருப்பாய் மாறும், சுவாலையாய் எரிக்கும், எரிமலையாய் வெடிக்கும், தீமையைப் பொசுக்கும்.

இவற்றைத் தங்களின் தமிழ் பிரயோகங்களிலிருந்து நாமறிந்தது. தமிழின் பெயரால் கம்பனை, இளங்கோவை, பாரதியை நாமறிந்ததை விட கருணாநிதியை நாம் அறிந்தது அதிகம்.

தந்தையின் கையைப் பிடித்து தளர் நடையில் ஆரம்பப்பள்ளி சென்று ‘அ,ஆ’ எழுதிப் பழகும் காலத்திலே இலங்கை வானொலியில் ‘மனோகாரா’ திரைப்படத்தின் வசனங்களைக் கேட்டவன் நான். அப்போது ஏதும் புரியாத போதும் தமிழின் மீது தீராக் காதல் கொண்ட எந்தையும் தாயும் மனோகரா திரை வசனத்தைச் சிம்மக் குரலோனின் கர்ச்சனையில்; கேட்டு அதை சிலாகித்துப் பேசும் போது “கருணாநிதி” எனும் பெயரை காதுகளில் வாங்கியவன் நான்.

காலவேகத்தில், விபரம் அறியும் வயதின்போது ‘நானும்’ என்னைப் பெற்றவர்கள் போல் மெய்மறந்து நின்றது உண்டு; தங்கள் வசனங்களைக் கேட்டு.

வெளிப்படையாகச் சொல்வதானால் தங்களது தமிழைக் கேட்டே தமிழ் மீது ‘காதல்’ கொண்டவன் நான்.

தமிழுக்கும் தமிழருக்கும் ஒரே தலைவன் ‘கருணாநிதி’ தான் என என்னளவில் நம்பவும், மற்றவர்க்கு நம்பிக்கையூட்டவும் என்னை முனையச் செய்தது தங்களது தமிழ் தான். தங்கள் மீது கொண்ட பற்றினால் தங்கள் கண்களை அலங்கரிக்கும்(?) விழிக்கண்ணாடி போன்றதொன்றை தந்தையைச் சிரமப்படுத்தி அங்காடிகளில் அலையவிட்டு வாங்கி வைத்திருந்தவன் நான்.

பெரியவனாகி திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றபோதும் - அந்தக் கண்ணாடி மட்டும் புது மெருகு மாறாமல் என் பொக்கிசப்பெட்டியில், பெறுமதியான பேழையொன்றில் தனி சாம்ராஜ்யத்தையே நடாத்திக்கொண்டிருந்தது.

எனது குழந்தைகளுக்குக் கூட அந்தக் விழிக்கண்ணாடியையும், தங்களது புகைப்படத்தையும், சந்தர்ப்பம் கிடைக்கும் போது வர்ணத்தொலைக்காட்சியில் (இலவசமாகக் கிடைத்தது அல்ல) வரும் தங்கள் பிரதிமைகளையும் காட்டி – திரைப்படங்களையும் காட்டி ‘கருணாநிதி’ புகழ்பாட தவறியவனல்ல நான்.

அந்த கறுப்புக்கண்ணாடி போர் இடப்பெயர்வுகளின் போது தொலைந்து போனது என் பொக்கிசங்களைப் போலவே; எனதும் என் இனத்தினதும் கனவுகள் போலவே...!!

எனது பொக்கிசங்கள் தொலைந்ததற்கும், எம் கனவுகள் அழிந்ததற்கும் இன்றுவரை இரத்தக் கண்ணீர் வடிக்கின்றேன் - விழிக்கண்ணாடி தொலைத்ததற்கு அல்ல. தொலைந்தவற்றை இன்றும் தேடுகின்றேன். “கறுப்புக்” கண்ணாடியையும் கூட. என்ன முரண்நகையாகத் தெரிகிறதா?

ஒருவேளை எனது தேடுதல் வேட்டையின் போது அந்தக் ‘கண்ணாடி’ கண்டுபிடிக்கப்பட்டால்......... மீண்டும் பாதுகாக்க மாட்டேன். மாறாக என் காலில் போட்டு மிதித்து உடைப்பேன். உடைந்த அந்தத் துகள்களை ஒரு பொலித்தீன் பையிலிட்டு எனது வீட்டு வரவேற்பறையில் வைப்பேன், துரோகச்சின்னமாக.

ஒரு தேசிய இனத்தின் உரிமைக் கோரிக்கையை நிர்மூலமாக்கிய துரோகத்தின் அடையாளம் அது.

நம்பிய ஈழத் தமிழ் மக்களின் முதுகில் குத்தி குப்புறச் சாய்த்த சுயநல வெறியின் அடையாளம்! ‘காப்பாற்றுங்கள்’ என அவலக் குரலெடுத்துக் கதறி அபயம் கேட்டு நீட்டிய கைகளை குறுகத் தறித்தெறிந்த அரசியற் துரோகத்தின் அடையாளம்!

அண்ணாவை விட, ராஜாஜியை விட, காமராஜரை விட உண்மையில் தாங்கள் பெரும் புத்திசாலி தான்.

பாவம் அவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள். வங்கி இருப்பில் சேமிப்பேதும் இல்லாமல் செத்துத் தொலைத்தவர்கள் அவர்கள். கருணாநிதியின் சாதுரியம் அவர்களுக்கு இருந்திருந்தால் அவர்களது சந்ததியினர் இன்று “கோடி”களில் புரண்டிருப்பார்கள்; தங்களது சந்ததியினரைப் போலவே.

8ஆம் வகுப்புக் கல்வியையே இடைநடுவில் முறித்துக் கொண்டு, தற்குறியாக இரயில் (அல்லது பேரூந்து) கட்டணத்தை மட்டுமே சட்டைப்பையில் கொண்டு, ‘பெரியாரின்’ முகாமுக்குத் தொண்டனாக வந்து, - இன்று பல்லாயிரம் கோடி ரூபா மோசடி ஊழலில் பெயர் அடிபடும் அளவுக்கு உயர்ந்து விட்ட உங்கள் “தமிழ்ப்பணி” அவர்களுக்குக் கைகூடி வரவில்லை. உண்மையிலேயே தாங்கள் மேதாவி தான்.

நீங்கள் கொண்ட இலட்சியத்தை அடைந்து விட்டீர்கள் இனியுமென்ன நாடகம்? இனியும் ஏன் வேசங்கள்? உலகளந்த பெருமாளுக்கும், உலக நாயகனுக்கும் ஆகக்கூடியது பத்து அவதாரங்கள் தான். ஆனால் தங்களுக்கு….

எத்தனை முகங்கள்?

மாநில அரசியலில், மத்திய அரசியலில், குடும்ப அரசியலில், வர்த்தக அரசியலில், புலம்பெயர் ஈழத்தவர் அரசியலில், சினிமா அரசியலில், சுயமரியாதை அரசியலில், ஆன்மீக அரசியலில், சிறை அரசியலில், ஊழல் அரசியலில், ஊடக அரசியலில் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். போயின் பக்கங்களும் போதாது; எனது ஞாபகசக்தியும் போதாது. இவ்வாறு ஒவ்வொரு அரசியலிலும் ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடான, முரண்நகையுள்ள அவதாரங்கள் அவற்றுக்கு பூசிய அரிதாரங்கள்.

இந்த அரிதாரங்கள் நாட்பட்டு, கலைந்து வழிந்து நாற்றமும் வீசத் தொடங்கியதின் பின்பும், மீண்டும் நீங்கள் ‘கதா’யுதத்துடன் மேடையேற இந்தத் தள்ளதா வயதிலும் நினைப்பது தான் சற்றும் இரசிக்க முடியாமல் உள்ளது.

‘உங்கள் அவதாரம் கலைந்து போனது ஈழத்தமிழனின் குருதியிலே’ என்பதை நாமுணர்ந்து பல காலமாகி விட்டது.

‘உங்கள் கூத்து மேடை சரிந்து போனது எங்களது சாவிலே’ என்பதைத் தாங்கள் உணர இன்னும் வெகுகாலம் பிடிக்குமோ?

“விடுதலைப் புலிகளை ஆதரிக்கமாட்டேன், ஆனால் தமிழீழம் மலர்ந்தால் மகிழ்ச்சியடைவேன்” என்று தாங்கள் கூறியபோது, அதிலுள்ள முரண்நகையை தங்கள் மீது கொண்டிருந்த அபிமானம், எம் புலனுணர்வுக்கு மறைத்து விட்டது.

தமிழ்ச்செல்வனின் சாவிற்கு நீங்கள் வரைந்த கவியாஞ்சலி, அதற்கு நாம் இசைப்பாடல் வடிவத்தை ரி.எல்.மகாராஜன் குரலில் வழங்கி, பட்டிதொட்டி எல்லாம் ஒலிக்கச் செய்து மெய்யுருகிக் கண்ணீர் விட்டோமே…. அப்பொழுதும் நாம் தங்களின் முடைநாற்ற அரிதாரப்பூச்சுக்களைக் கண்டுபிடிக்கவில்லை நாம்.

காலை உணவு அருந்தி விட்டு, அண்ணா சிலையடியில் திடீரென நீங்கள் மேற்கொண்ட சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம், ஏற்கனவே எம் இதய வாயிலருகில் வீற்றிருந்த உங்களை இதய கர்ப்பக்கிரகத்துக்குள்ளே உங்களை குடியமரச் செய்தது. “அந்தப்புரம்” உட்பட தங்களது சகல பரிவாரங்களும் குளிரூட்டி பொருத்திய சொகுசு பெருவாகனத்துடன் தங்கள் சாவைக் காணக் கால்கடுக்கக் காத்திருக்கும் செய்தி எம்மை உருக வைத்தது.

எறிகணைகளுக்கும், விமானக்குண்டுகளுக்கும், சீறிவரும் கனரகத் துப்பாக்கிச் சன்னங்களுக்கும் அஞ்சி குழந்தை குட்டிகளோடு எம்முடன் இடம்பெயர்ந்து கூடவே வந்த ஆட்டுக்குட்டி, நாய் போன்றவற்றையும் அருகிலே வைத்துக் கொண்டு பதுங்கு குழிக்குள் நாமிருந்த வேளை; காற்றிலே கலந்து வந்த செய்தி தான் தாங்கள் எடுத்த உண்ணாவிரத அவதாரம்.

சக்தியிழந்து செயலற்றிருந்த மின்கலங்களுக்கு பற்களால் கடித்தும், கற்களால் தட்டியும் அவற்றின் உருளை வடிவத்துக்கு நவீன சிற்பங்களைப் போல வினோதமான நெளிந்த வடிவங்கள் கொடுத்து, சற்று உசுப்பி அவை மூலம் வானொலியில் வரும் தங்கள் செய்திக்காக செவிமடுத்துக் காத்திருந்தவேளை “ஏதாவது நடக்கும்” “நல்ல செய்தி வரும்” “எம்மை காப்பார் உலகத் தமிழர் தலைவர்” என நம்பிக்கையுடன் நாம் காத்திருந்த வேளை....

வந்ததையா நற்செய்தி! காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே நடந்த மிகத் தீவிரமான சாகும் வரையான உண்ணாவிரதப் போருக்கு மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் உருவிலே வந்தது தீர்வொன்று.

“கனரக ஆயுதப்பாவனை நிறுத்தம்” “போர் நிறுத்தம்” “இனி ஈழத்தமிழர் வாழ்வில் விடிவு”

“தமிழக முதலமைச்சரின் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிகரமாக நிறைவு”

பலவீனமான மின்கலத்தால் முனுமுனுப்பாகக் கேட்ட வானொலியின் அறிப்பில் கூட திடீரென சக்தி கூடியதான உணர்வு எமக்கு “வெற்றி....வெற்றி..... தமிழர் தலைவன் கருணாநிதி எம்மைக் காப்பாற்றி விட்டார்.”

குதூகலத்துடன் கூவியபடி குஞ்சு குருமான்களுடன் பதுங்குகுழியிலிருந்து பாய்ந்து வெளியே வந்தோம்.

ஆடவேண்டும்...... பாடவேண்டும்...... மனம் மகிழ்ச்சியில் துள்ள ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்ள......

வந்ததையா எறிகணைகள்.....

கொள்ளை கொண்டு போனதையா எம்மவர் உயிர்களை.

தொடர்ந்தும் இந்திய வனொலியில் “கருணாநிதி ஈழத்தமிழரைக் காத்து அருள்பாலிக்க வந்த தேவதை. வெற்றி வாகை சூடி ஈழத்தமிழர் தலையிலே முடி சூட வந்த கருணைக்கடல்.”

இப்படியாக......... இப்படியாக......... தொடர் புகழாரங்கள்!

நாம் கண்ணீரில் மிதந்தோம், இந்த நயவஞ்சகத்தை எதிர்த்துக் கருணாநிதி எனும் வீரத்தலைவன் தன் போர்க்;கலத்தைத் தூக்கப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்தோம்.

அன்றைய தினம் மட்டும் காவு கொள்ளப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு மேலாகும்.

ஆனால் அவ்வளவு தான்.

நம்பிக்கை கானல் நீரானது. கருணாநிதியின் முடிவு - மத்திய அரசின் முடிவைச் சார்ந்ததே என்றானது. ஆவியே வெந்து போனது.

எம்மால் என்ன செய்ய முடியும்?

கருணாநிதி நினைத்திருந்தால்; மத்திய அரசில் அவரது கட்சிக்கிருந்த பலத்தைக் கொண்டு ஈழத்தமிழரைக் காத்திருக்கலாம்.

அவர் தம் வாழ்வியல் உரிமைக்கான அரசியல் வேணவாவைப் பேணி இருக்கலாம். எம்மைக் காக்கும் கவசமாக தமிழ் நாட்டையே மாற்றி இருக்கலாம்.

எனினும் நாம் நம்பிக்கை இழக்கவில்லை. “தமிழகம் தொப்புள் கொடி உறவு. கருணாநிதி அதன் முதலமைச்சர். அவரது தலைமையில் எம்மை மீட்க தமிழகம் திரளும். எம்மைக் காத்து அணைத்து ஆறுதல் சொல்ல ஓடோடி வருவார் உலகத் தமிழர் தலைவன்” என இன்னும் நம்பினோம். அவரது மௌனம், எம்மைக் காக்கும் இராஜதந்திரமாக இருக்கலாம் எனும் ஒர் நப்பாசை.

“ஓடினோம்…ஓடினோம், வாழ்க்கையின் ஒரத்துக்கே ஒடினோம்.” அந்த ஓரம் தான் முள்ளி வாய்க்கால் ‘கடல் - ஒரம்’. பாராசக்தியின் பார்வதிக்காவது நியாயம் கேட்க குணசேகரன் என்ற அண்ணன் இருந்தான். அவன் பக்கம் பக்கமாக வசனம் பேச நீதிமன்றமும் இருந்தது. கேட்க நீதியரசரும் இருந்தார்.

எனினும் எமக்கு...?

“தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா….. ‘செந்நீரால்;;’ காத்தோம்..... கருகத் திருவுளமோ….”

ஏக்கத்துடன் வங்கக்கடலின் வானம் தொடு எல்லையை, அந்த நீண்ட விளிம்பைப் பார்த்திருந்தோம். ஏமாற்றம்! எம்மைக் காக்க எவரும் வரவில்லை. எம் குரல் கேட்கவும் எந்த நீதிமன்றமும் தயாராக இருக்கவில்லை.

356 என்ற சட்டப் பிரிவின் மீதான பயமா இது?

கலைஞரே! உங்களது சிலவருட பதவி நாற்காலிகளைப் பாதுகாப்பதற்காக ஒரு தேசிய இனத்தின் அழிவுக்குத் துணை போக உங்களால் எப்படி முடிந்தது?

அன்று பதவிகளைத் தூக்கி எறிந்து இந்திய அரசுக்குப் பாடம் புகட்டி எம்மைக் காத்திருந்தால் இன்று நீர் அல்லவோ உலகத் தமிழர் தலைவர். இப்படி அவமானகரமான தோல்விகளையும் இனத்துரோகி என்ற அவப்பெயரையும் சந்திக்க நேர்ந்திராது அல்லவா!

ஆட்சிக் கதிரையை மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதி நிலையையே இழக்க வேண்டிய அவலநிலை வந்திராது அல்லவா?

தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றிலேயே அறிஞர் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட தி.மு.க என்ற புரட்சிக்கட்சி, இத்துணை தாழ் நிலைக்கு என்றுமே சென்றதில்லை.

‘தானாடாது விட்டாலும் தன் தசை ஆடுமாமே…’ வன்னிமண்ணின் இடப்பெயர்வு அவலங்கள் காணொளி இறுவெட்டுக்களாகத் தமிழ்நாட்டை அடைந்த போது தமிழகமே பொங்கி எழுந்ததாமே!

அப்போதும் கூட உங்கள் கண்ணில் கூட ஈரக்கசிவு ஏற்பட்டதாமே…?

அப்போதும் கூடத் தங்கள் கபட மூளை அந்த உணர்வெழுச்சிகளை உங்கள் குடும்ப, அரசியல் நலன்களுக்கான முதலீடுகளாக்கிக் கொண்ட சாமர்த்தியம் வேறு எவருக்கு வரும்?

கல்விச்சமூகம், சினிமாத்துறை, தொழில்துறைகள் எனப் பல்வேறு தரப்பட்டத் தமிழ்நாட்டு உறவுகளின் உண்மையான அக்கறையைக் கையாள, அவர்களின் பிரதிநிதியாக மீண்டும் ஒரு அரிதாரப்பூச்சு.

பதவி விலகல் கடித நாடகங்கள்.

கொட்டும் மழையில் மனிதச் சங்கிலிப் போராட்ட நாடகங்கள்.

இப்படி எத்தனை..... எத்தனை…..?

முத்துக்குமாரன் முதலானோரின் அக்கினிச் சங்கமங்கள் கூட உங்கள் அரசியல் கபட நாடகத்துக்கு உரமாக்கப்பட்டன. இத்தனை போராட்டங்களும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு விடிவினைப் பெற்றுத்தருவதற்குப் பதிலாக மத்திய அரசில் கருணாநிதியின் அரசியல் சார்ந்த சலுகைகளையே வென்றுகொடுத்தன. சில வருடங்கள் ஆட்சியையும் தாக்குப்பிடித்துத் தக்க வைக்க முடிந்தது.

தங்கள் நாடகங்கள் முடியுமுன்னே பூசிய அரிதாரப்பூச்சுக்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இன்று சொறிந்து கொண்டிருக்கும் நிலையில் நீங்கள்.

கட்டபொம்மனுக்கு எட்டப்பன்! பண்டாரவன்னியனுக்குக் காக்கை வன்னியன்! ஈழத்தமிழருக்குக் கருணாநிதியா…?

எம்மை வீழ்த்தும் கூட்டுச்சதிக் கூட்டாளிகளில் தாங்களும் ஒருவன் என்பதை நாம் நன்கு அறிவோம்.

எனினும் அந்தச் சதி அம்பலமானதைப் பூசி மெழுக, நீங்கள் சொன்ன காரணங்கள் இருக்கிறதே; அப்பப்பா…. பொய்யின் மொழிப்புலவர் தாங்கள்.

கனிமொழியைச் சிறைக்கூண்டுக்குள் சந்தித்தபோது நா தழுதழுத்ததாமே, கண்ணரும் கசிந்ததாமே.

ஊழல் செய்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாக்களைக் கபளீகரம் செய்த குற்றச்சாட்டில் அடைக்கப்பட்ட கனிமொழியின் தந்தைக்கு மகளிருந்த கம்பிக்கூண்டு கண்ணீரை வரவழைத்தது என்றால்.....

இங்கே இந்த மண்ணிலே வாழும் உரிமையைக் கேட்டதால் கொத்துக் கொத்தாக மடிந்து போன பிள்ளைகளின் தாய் தந்தையரின் கண்களில் என்ன வரும்…?

இதை உணராதவர் போல், ஒன்றுமே தெரியாதவர் போல், ‘ஈழத்தமிழர் வீழ்ச்சிக்குச் சகோதர இயக்க மோதல்களே காரணம்’ என நாம் எப்போதோ மறந்து போனவற்றை இன்று ஞாபகம் வைத்துப் பேசும் முன்னாள்; முதல்வர் கருணாநிதி - அந்தச் சோற்றுக்குள்ளே தன் துரோகம் எனும் முழுப்பூசனியை மறைக்க நினைப்பது தான் வேடிக்கையானது.

இந்த நிலையில் மீண்டும் சில நாடகங்களின் அறிவிப்புகள்.

“தமிழீழம்

“டெசோ

என்ன இவை....? வரலாற்று நாடகங்களா..?

இருபத்தோராம் நூற்றாண்டில் மட்டுமல்ல் இனி வரப்போகும் சில நூற்றாண்டுகளுக்கும் இதுவே பெரும் நகைச்சுவையாக இருக்க முடியும்.

உண்ணாவிரத நாடகத்தைப் போல் ஒரு ‘ரெசோ’ மாநாட்டு நாடகம். உச்சக்கட்டக் காட்சியாக தமிழீழத் தீர்மானம். பரபரப்பாக ஒத்திகை பார்க்கப்பட்ட இந்த நாடகம் எதை இலக்காகக் கொண்டது என்பதை யார் அறியாவிட்டாலும் ஈழத்தமிழர் நாம் அறிவோம். அதனால் நாம் பரபரப்படையவில்லை..... சிலிர்க்கவில்லை. வேடிக்கை மட்டுமே பார்த்தோம்.

“உண்ணாவிரத” நாடகத்தில் வந்தது போலவே உச்சக்கட்டக் காட்சி. “மத்திய அமைச்சர் சிதம்பரம் வருகை!”

அதே நாடகத்தில் வந்தது போலவே இறுதி முடிவு..... பிசுபிசுப்பு.....! தாங்கள் தமிழீழம் என்று முணுமுணுக்கும் போதே எமக்குப் புல்லரிப்பை ஊட்டவில்லை. மிகப்பெரும் கோமாளித்தனமாகவே தெரிந்தது.

முடிவு எப்படியிருக்கும் என்று புரிந்ததால் மயிர்க் கூச்செறிவு எதுவுமில்லை.

அதிலும் உச்சக்கட்ட நகைச்சுவை என்னவென்றால்;; ஈழத்தமிழர் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் பற்றித் தாங்கள் பேசுவது! அக்கறை காட்டுவது! அது மட்டுமல்ல உங்களது நேர்மையை நிரூபிக்க எமது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களையும் அழைத்திருப்பதாகச் சொன்னது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா கலைஞரே….? உங்களை விடப் பெரிய நடிகர்கள்; எமது அரசியற் தலைவர்கள். அவர்கள் எம்மைக் கைவிட்டு நீண்ட காலமாகிவிட்டது தெரியுமா….?

உங்களது மாநாட்டில் அவர்கள் பங்குபற்றுவது இருதரப்புக்கும் அவரவர் தரப்பு மக்களை ஏமாற்ற உதவக்கூடுமே தவிர எமது வாழ்வில் எந்த விடிவையும் கொண்டு வந்துவிடப் போவதில்லை.

நாமும் கட்டப்பட்டு கடலில் தான் போடப்பட்டுள்ளோம்..... எம்மால் கட்டுமரங்களாக மிதக்க முடியவில்லை. எந்தக் கட்டுமரங்களும் எம்மை கரைசேர்க்க வரவில்லை.

இதுவரை காலமும் இடம்பெயர்ந்து அல்லலுறும் எமக்காக தங்கள் ‘கஜானா’ விலிருந்து ஒரு ரூபாய் கூட கொடுக்க மனம் வராதவர் நீங்கள். தமிழைச் செம்மொழியாக்கி விட்டுத் தமிழனைக் கொன்றொழித்தவர் நீங்கள். உண்மையில் நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இதய சுத்தியுடன் வாருங்கள். எமது காயங்கள் ஆற்றமுடியாதவையானாலும் எம்மைத் தேற்றலாம். உங்கள் உண்மையான மனமாற்றம் எமது இனத்தின் மீளெழுச்சிக்கு, ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு உதவுமேயாக இருந்தால் - கடந்தகாலத்தை மறக்க முடியாவிடினும் கூட மன்னிக்கவாவது செய்யும் மனிதத்துவம் இன்னும் எங்களிடம் இருக்கிறது.

தயவுசெய்து எம்மைப் பகடைகளாக்கி விளையாடாதீர்கள்.

ஏனெனில் நாம் மனிதர்கள்.

எங்கள் வாழ்வுரிமைக் கோசத்தை உங்கள் மூலதனமாக்காதீர்கள்.

ஏனெனில் அது எமது இனத்தின் இருப்பு.

சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால்......

எம்மை வாழ விடுங்கள்.

இவ்வண்ணம்

ஈழத்தமிழ் அகதி.

...

... ஸ்பெக்ரம் ஊழல், இப்போ மதுரை கிரனேட் கற்கள் ஊழல் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான கோடிகளை சுருட்டிய குடும்ப உறவுகளின் செய்திகளை மறைத்து திசை திருப்ப, தமிழக கருணாவிற்கு இப்போ "TESO" தேவைப்படுகிறது. .

  • தொடங்கியவர்

[size=5]டெசோ மாநாடு வெற்றி என்கிறார் கருணாநிதி[/size]

திமுக தலைவர் கருணாநிதி, பல்வேறு சிக்கல்களுக்கிடையில் நேற்று சென்னையில் நடந்து முடிந்த “டெசோ” மாநாடு பெரும் வெற்றி எனவும் அது ஈழத் தமிழர்களின் நலன்களை மேம்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாகவும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.[size=3]

[size=4]தனி ஈழம் குறித்து இலங்கைத் தமிழரிடையே வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று மாநாடு வாயிலாக பிரகடனப்படுத்துவோம் என முதலில் அறிவித்து, பின்னர் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவரை சந்தித்துச் சென்ற பிறகு தனி ஈழம் கோரப்போவதில்லை, ஈழத்தமிழர் மறுவாழ்வு பற்றியே மாநாடு விவாதிக்கும் என்று கருணாநிதி தெரிவித்தார்.[/size][/size][size=3]

http://www.bbc.co.uk/tamil/india/2012/08/120813_tesosucces.shtml[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரணவீட்டிலும் சுகம்,சுபம் தேடிய கருணாநிதி..................மிகுதி நாகரீகம் கருதி எழுதவில்லை.

  • தொடங்கியவர்

[size=3][size=5]விக்ரமபாகு கருத்து[/size][/size]

[size=3][size=4]மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இழந்த உரிமைகளை இலங்கைத் தமிழர் மீண்டும் பெற மாநாடு உதவும் என நம்பிக்கை தெரிவித்தனர். இலங்கை நவ சம சமாஜ கட்சியின் பொதுச்செயலாளர் விக்ரமபாகு கருணரட்ண, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இப்படிப் பெருமளவில் மக்கள் திரளும்போது அதை அலட்சியப்படுத்த இந்திய அரசால் முடியாது, தமிழர் வாழ்வு சிறக்க மஹிந்தா அரசின் மீது அழுத்தம் கொடுக்கவேண்டிய நிலை உருவாகும் என்றார் அவர்.[/size][/size]

[size=3][size=5]அனந்தபத்மநாபன்[/size][/size]

[size=3][size=4]ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் இந்தியப் பிரிவுத் தலைவர் அனந்தபத்மநாபன் தங்கள் அமைப்பு தனி ஈழம் குறித்து எந்த நிலைப்பாடும் எடுப்பதில்லை, அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தே அக்கறை தெரிவிக்கிறது, அந்த அளவில் டெசோ மாநாடு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தர உதவும் ஆனால் இன்னும் அதிக அளவில் மக்கள் திரள்வேண்டும் என்றார்.[/size][/size]

[size=3][size=5]ஆங்காங்கே கருணாநிதி நாடகமாடுகிறார் என்று ஒரு சில தலைவர்களும் அமைப்புக்களும் விமர்சித்திருந்தாலும் பொதுவாக இந்த அளவாவது இலங்கைத் தமிழர் பிரச்சினையை மையப்படுத்தி நடந்திருப்பது வரவேற்கத்தகுந்ததே என்பதுதான் பொதுக்கருத்தாக இருக்கிறது.[/size][/size]

[size=3]http://www.bbc.co.uk...esosucces.shtml[/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=4]தமிழ்நாடு இந்தியாவின் அடிமை நாடு. அங்கே மிகப் பெரிய கொந்தளிப்பு வந்தால் ஒழிய இந்தியா கண்டு கொள்ளாது. [/size]

[size=4]வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருக்கும் போது ஈழத்திற்கு விடிவு " தமிழ் நாடு கொந்தளிக்கட்டும்" என்றார். கொந்தளிக்காமல் போனதற்கு மிகப் பெரிய தடையாக அமைந்தது ராஜிவ் கொலை என்பது சிலர் கருத்து. அரசியல் சுயநலம் என்பது பலரின் கருத்து.

இந்திய அளவிலே ஈழப் பிரச்சினை சரியாகப் புரிய வைக்கப் படவில்லை என்பது பேருண்மை.

தலைவரிடம் உலக அள்விலே ஈழப் போராட்டம் புரிந்து கொள்ளப் படவில்லையே என்று கேட்டதற்கு, நாங்கள் இங்கு போராடத்தான் முடியும், அங்கு நீங்கள் தான் செய்ய வேண்டும் என்றார். அதைச் செய்தோமா? இன்று செய்வதில் ஒரு சிறு பங்காவது செய்திருந்தால் எதிரியின் மிகப் பெரிய ஆயுதம் " பயங்கரவாதம்" , இதைத் தடுத்திருக்கலாம் அல்லவா?ஓரளவிற்குப் புரிய வைத்திருக்கலாம் அல்லவா?

கலைஞரைப் பொறுத்தவரை அவர் உண்ணாவிரதம் இருந்தது உண்மையான செயல், அதை கொலம்பு சென்று சிவசங்கரமேனனும், நாராயணனும் சூழ்ச்சி செய்து சிதம்பரத்தின் மூலம் ஏமாற்றி விட்டார்கள் என்பது தான் நன்கு அறிந்தவர்கள் சொல்வது. மற்றவர்கள் ராஜபக்சேவும், டில்லியும் தான் எதிரிகள் என்பதை மறந்து நீயா, நானா போட்டியில் ஏமாந்து விட்டார்கள்.

நாம் பழையவற்றை ஒரு முடிவிற்குக் கொண்டு வந்து இனி என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்தித்துச் செயல் பட வேண்டும்.

நமது எதிரி "இந்தியா ". இந்தியா மாற்றப் பட வேண்டும், அல்லது ஒதுக்கப் பட வேண்டும்.

உலகமெங்கும் நமது உண்மையை எடுத்துச் சொல்லி, நமது போராட்டம் ஐ நா விற்குச் செல்ல ஒரு நாடு வேண்டும்.

நாம் குழுக்களாக வேலை செய்யலாம், ஆனால் குறிக்கோளுடன் செயல் பட வேண்டும்.இன்று உள்ள உலக நிலைக்கு ஏற்ப

புத்தித் திறமையுடன், வார்த்தைகளைக் குறைத்துச் செயலைக் காட்டுவோம்.

உணர்வுகள் இதயத்தில் ஆழமாக இருக்கட்டும், உதடுகளில் புன் சிரிப்புடன் கேட்போரை மயக்கும் பேச்சாகச் செயல் படட்டும்.[/size]

[size=4]- [/size][size=1]மின்னஞ்சல் ஊடாக [/size]

  • தொடங்கியவர்

உலக நாடுகளின் ஆதரவில்லாத எந்த போராட்டமும் வெற்றிபெற்றதேயில்லை. ஆனால் நாமோ தமிழகத்திலேயே மூன்று வெவ்வேறு குழுக்களாக பிரிந்து நின்று போராடிக்கொண்டிருக்கிறோம். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறோம். யாருக்கு நற்பெயர் கிடைக்கும் என்கிற போராட்டம் தான் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறதே தவிர, ஈழ தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்று இதுவரை யாரும் உருப்படியாக சிந்திக்காமலேயே இருந்துவிட்டோம்.

[size=4]அதனால் தான், இந்த விஷயத்தை முதல் கட்டமாக இந்திய அளவிலேயும் பின்னர் உலக அளவிலேயும் கொண்டு சென்று அவர்களுடைய ஆதரவையெல்லாம் பெறவேண்டும் என இந்த மாநாட்டில் சொல்லப்பட்டு இருக்கிறது.[/size]

[size=4]இந்திய அரசை தமிழகம் மட்டுமே நிர்ப்பந்தப்படுத்தி எதையும் சாதித்துவிடமுடியவில்லை என்பதால் தான், இந்தியாவின் முக்கிய பிற கட்சிகளின் ஆதரவையும் இதில் கோரியிருக்கிறோம். பல கட்சிகளின் ஆதரவு இருந்தால் தான், நாளைக்கு பாராளுமன்றத்தில் ஒரு தனி தீர்மானத்தை கொண்டுவந்து வெற்றிபெற வைக்க முடியும் என்பது தானே அடிப்படை?[/size]

[size=4]அதேபோல, ஐ.நாவில் ஒரு தீர்மானம் கொண்டு வருவதற்கோ, ஐ.நாவின் குழுவின் கண்காணிப்பில் தமிழர்கள் அமைதி வாழ்வு வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கோ, பல்வேறு நாடுகளின் ஆதரவும் தேவை என்பதால் தான், உலகநாடுகளில், ஒத்தகருத்துடைய பிரதிநிதிகளையெல்லாம் அழைத்து இந்த மாநாட்டில் அவர்களது மேலான கருத்துக்களையெல்லாம் அறிந்து அதன் படி தீர்மானம் வடிக்கப்பட்டிருக்கிறது.[/size]

[size=4]தனி ஈழம் தாருங்கள் என தீர்மானம் போட்டால் அது கிடைக்க நியாயமில்லை. அதை விட, தமிழர்கள் அங்கே அமைதியாக வாழுவதற்கு வழிசெய்யுங்கள் என்று உலக நாடுகளை வற்புறுத்துவதில் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.[/size]

[size=4]இது தான் சரியான உறுதியான செயல்வடிவம் பெறத்தக்கதான வழியாக இருக்கமுடியும். [/size]

[size=4]தமிழகத்துக்குள்ளேயே ஒரு மூலையில் மேடையிட்டு, ஈழ விவகாரத்தில் எதிரணியினர் எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதை விட, ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பு தான் உரிய பலன் தருகின்ற ஒன்றாக இருக்கமுடியும்.[/size]

- [size=4][size=1]மின்னஞ்சல் ஊடாக [/size][/size]

நமது எதிரி "காங்கிரஸ் ". காங்கிரஸ் மாற்றப் பட வேண்டும், அல்லது ஒதுக்கப் பட வேண்டும்.

கலைஞரைப் பொறுத்தவரை அவர் உண்ணாவிரதம் இருந்தது, பதவி துறப்புகள் பொய்யான செயல்கள். அதை நாலு மணித்தியாலத்தில் கொலம்பு சென்று சிவசங்கரமேனனும், நாராயணனும் சூழ்ச்சி செய்து சிதம்பரத்தின் மூலம் ஏமாற்றவில்லை என்பது தான் நன்கு அறிந்தவர்கள் சொல்வது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசை வீட்டுக்கனுப்ப எல்லாம் சரியாக வரும்..! :rolleyes:

  • தொடங்கியவர்

[size=6]MK distancing himself from UPA, feels delegate[/size]

[size=5]On Sunday, when the deliberations on the resolutions to be passed in the conference concluded in the morning, some delegates who emerged out felt that the DMK was distancing itself from the UPA.[/size]

[size=5]Speaking to Express, Vickramabahu Karunarathne, the Left front candidate in Sri Lanka, who contested and lost against Mahinda Rajapaksa in the Presidential poll, said while it was true that DMK chief M Karunanidhi remained silent during the ‘pogrom’ of 2009, he is now trying to distance himself from the UPA, which, he alleged, aided the Sri Lankan army by supplying arms.[/size]

[size=5] [/size]

[size=5]“In 2009, he did not make a noise. He was at fault at that time. Today, he is doing the correct thing. That is why I am here,” he said. However, he added, “Now he is breaking away. He is distancing himself from the current rulers (UPA) and has come out with the conference against the wishes of Sonia Gandhi. This is a very strong statement,” he remarked.[/size]

[size=5] [/size]

[size=5]He said that the probable reason for the members of the Tamil National Alliance (TNA) not attending the meet could be threats issued by Rajapaksa.[/size]

[size=5] [/size]

[size=5][size=3]http://ibnlive.in.com/news/mk-distancing-himself-from-upa-feels-delegate/281858-60-118.html[/size][/size]

  • தொடங்கியவர்

[size=6]Tamil Eelam Supporters’ Organisation demands UN probe on Lanka war crimes, steers clear of Eelam[/size]

[size=5]The meet, referring to a report of a three-member UN team which exposed mass killings of Tamils by the Lankan forces through bombing of notified safety zones and hospitals in the northern and eastern parts of the island nation in May 2009, demanded that an international committee be constituted by the Human Rights Council of the UN to examine war crimes committed by the Lankan government.[/size]

[size=5]The Teso conference was also critical of the stand taken by the government of India on the Lankan issue. They called upon the Central government to move a resolution in the UN that would provide a rightful political space for the Lankan Tamils.[/size]

[size=4]http://articles.timesofindia.indiatimes.com/2012-08-13/india/33181516_1_tamil-eelam-supporters-lankan-tamils-teso[/size]

  • தொடங்கியவர்

[size=4]அரசியல் என்பதில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை.[/size]

[size=4]கருணாநிதி உண்மையிலேயே காங்கிரசை மெல்லமாக விட்டு இல்லை இலாவகமாக கையாண்டு ஒரு அரசியல் தீர்வை பெற்றுத்தந்தால் மட்டுமே அவரை மீண்டும் தமிழுலகம் ஏற்கும் நிலையில் இன்று உள்ளது.[/size]

[size=4]அந்த வழியில் அவரில் சில மாற்றங்கள் தெரிகின்றன. ஆனால், நடைமுறை மாற்றங்கள் நிகழும்வரை அவர் ஏமாற்றக்கூடும் என்ற பயம் இருக்கும். அதேவேளை அவருக்கு உரிய ஆதரவை தராமல் தமிழர் தரப்பு சந்தர்ப்பங்களை இழக்கவும் கூடாது.[/size]

  • தொடங்கியவர்

[size=4]தீர்மானங்கள் எமக்கு ஒருபோதும் தீர்வைப் பெற்றுத்தரப்போவதில்லை. ஆனால் குறித்த மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை நாங்கள் வரவேற்கின்றோம்.[/size]

[size=4]இனிமேல்தான் கருணாநிதிக்கு வேலையிருக்கின்றது. எடுக்கப்பட்ட தீர்மானங்களை மத்திய அரசுக்கும், ஜ.நாவுக்கும் கொண்டு சென்று அவை நிறைவேற்றப்படுவதற்கு போதுமானளவு அழுத்தங்களை அவர் கொடுக்கவேண்டும்.[/size]

[size=4]அப்போதே ஈழத்தமிழர் மீது அவர் கொண்டிருக்கின்ற உண்மையான உளப்பாங்கை நாம் பார்க்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம். [/size]

[size=4]- [size=5]சுரேஷ் பிரேமச்சந்திரன்.[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.