Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் அப்பாவிடம் கூறிவிடுவேன் ௭ன்பதைப் போன்றது சம்பந்தனின் செயல்: பீரிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசியப் பிரச்சினை தீர்வு விடயம் தொடர்பில் மூத்த அரசியல்வாதி ஒருவர் அமெரிக்க பிரதிநிதி ரொபட் ஓ பிளேக்கிடம் விளக்கமளிக்கவுள்ளதாகக் கூறியிருப்பது சிறுபிள்ளை ஒன்று அப்பாவிடம் கூறிவிடுவேன் ௭ன்று கூறுவதனைப் போன்று காணப்படுகின்றது ௭ன்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.௭ல். பீரிஸ் தெரிவித்தார்.

பல வருடங்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற மூத்த அரசியல்வாதியிடம் இருந்து இதனைவிட ஆரோக்கியமான பங்களிப்பை ௭திர்பார்க்கின்றோம் ௭ன்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் ௭ழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தீர்வு விவகாரம் குறித்து அமெரிக்க பிரதிநிதி ரொபட் ஓ பிளேக்கிடம் விளக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார் ௭ன்று அது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு ௭ன்னவென்றும் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.

அமைச்சர் பீரிஸ் அங்கு மேலும் கூறியதாவது, ௭மது நாட்டின் ௭திர்காலம் ௭வ்வாறு அமையவேண்டும் ௭ன்று ௭மது நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். வேறு யாரும் அதனை தீர்மானிக்க முடியாது. ௭மது மக்களும் அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமுமே இதனைத் தீர்மானிக்கும்.

இந்நிலையில் ௭மது விவகாரத்தை வெளிநாடு ஒன்றின் பிரதிநிதியிடம் கூறப்போவதாக அரசியல்வாதி ஒருவர் தெரிவிப்பது நான் அப்பாவிடம் கூறிவிடுவேன் ௭ன்று சிறுபிள்ளை கூறுவதைப் போன்று காணப்படுகின்றது. பக்குவமான மற்றும் பாராளுமன்றத்தில் பல வருடகாலம் அங்கம் வகிக்கும் ஒரு மூத்த அரசியல்வாதியிடமிருந்து இதனைவிட ஆக்கபூர்வமான விடயங்களை ௭திர்பார்க்கின்றோம்.

http://www.virakesari.lk/article/local.php?vid=146

[size=4]அப்பாவிடம் மட்டும் கூறாமல் சித்தப்புவிடமும் கூற வேண்டும். தம்பி மகிந்தர் சித்தப்புவிடம் தானே உதவிகளை பெற்று அண்ணையின் பிள்ளைகளை கொல்லுகின்றார். [/size]

2012 மேயில் தான் அமெரிக்கா சென்று என்ன பிளேக்கிடம் கூறினார் என்பதை பீரிசு வெளியில் சொல்ல மறுக்கிறார். அதை வெளியில் பிரசுரிக்கும் படியும் அதன் பின் தன்னை வந்து சந்திக்கும் படியும் கில்லரி கிளின்ரன் கேட்டும் பீரிசு அதை செய்ய மறுத்துவிட்டார். பராளுமன்றத்தில் UNP கட்சியால் அதை திரும்ப திரும்ப கேட்டும் தெரிந்து கொள்ள முடியவில்லை. தன்னிடம் ஆலோசனை நடத்தாமல் அமெரிக்காவிடம் விபரம் கொடுத்தாக இந்தியா கூட அவரிடம் காட்டமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்திருந்தன. என்ன சந்தேகம் என்றால் இவற்றை தெரியாத மாதிரி கேள்வி கேட்கும் இந்த ஊடவியலார், பீரிசு எழுத்திக்கொடுத்த கேள்வியை மேடையில் கேட்டா அவரைக்கதாநாயகன் ஆக்குகிறார்கள்?

Edited by இணையவன்

சம்பந்தனின் சின்னப்பிள்ளைத் தனம் எதிரிகளின் கேலிப்பொருள் ஆகிவிட்டது.

சம்பந்தனின் சின்னப்பிள்ளைத் தனம் எதிரிகளின் கேலிப்பொருள் ஆகிவிட்டது.

[size=4]அமெரிக்காவிடம் முறையிடுவது தான் இன்று தமிழர் அரசியல் தரப்பால் முடியும். இதைத்தான் சிங்களமும் செய்கிறது. எனவே இது சரியான நகர்வே.[/size]

மகிந்தாவால் பலமுறை கால்களுக்குள் போட்டு பகிரங்கமாக பந்தாபட்ட பீரிசு தனது மானத்தை இலங்கையில் மட்டுமல்ல வெளியிலே கொட்டேல்களில் கூட காப்பாற்ற மாட்டாமல் தவிப்பவர்.

ஜெனிவாவில் வைத்து சாதரண தூதுவர் தாமரா குணநாயகத்தால் கூட மேலதிகாரம் செய்யபட்டவர். பதவி விலகக்கூட முடியாமல் உயிருக்கு பயந்து ஒட்டிக்கொண்டிருப்பவர்.

இவர் மற்றவர்களை கேலி செய்ய நினைத்து வார்தைகளை உதிர்ப்பது நகைப்பிற்கிடம்.

யார் கேலிக்கிடமானவர் என்று விளங்கிக் கொள்வது ஒன்றும் அப்படி சிக்கலான ராகெட் சயன்ஸ் இல்லை.

வெளிநாடுகளில் பொய்ப் பரப்புரை செய்கிறார் சம்பந்தன் – ஜி.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு [ திங்கட்கிழமை, 13 ஓகஸ்ட் 2012, 08:40 GMT ] [ தா.அருணாசலம் ]

சிறிலங்கா அரசுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளிநாடுகளில் பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாளைக்குக் கூட நாம் பேச்சுக்களைத் தொடங்கத் தயாராக இருக்கிறோம்.

ஆனால் அது நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பது பற்றியதாகவே இருக்க வேண்டும்.

இரா.சம்பந்தன் வெளிநாடுகளில் சிறிலங்காவுக்கு எதிரான பொய்யான பரப்புரைகளை மேற்கொள்கிறார்.

இருந்தாலும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முஸ்லிம் நாடுகள், ஆபிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவை வென்றெடுத்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள இரண்டு புலம்பெயர் குழுக்கள் சிறிலங்காவுக்கு பொருளாதார அழிவை ஏற்படுத்த முனைகின்றன.

ஒரு குழு, பொய்யான வதந்திகளையும், நாட்டின் மீது இனவாதக் குற்றச்சாட்டுகளையும் சுமத்தி அனைத்துலக முதலீடுகளைத் தடுக்கப் பார்க்கிறது.

இன்னொரு குழு, அதிநவீன தொடர்பாடல் கருவிகளின் மூலம், அனைத்துலக அளவில் சிறிலங்காவின் நற்பெயரைக் கெடுத்து, சிறிலங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை தடுக்க முனைகிறது.

என்னதான் செய்தாலும், புலிகள் ஆதரவு சக்திகளால் அதிகாரத்தைப் பெறமுடியாது.

இதை புலம்பெயர் தமிழர்கள் நன்றாக அறிவார்கள்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்

மூலம்: புதினப்பலகை.

பி.கு: மகிந்தா செய்வதை தமிழர் செய்யக்கூடாது என்று வாதிடும் பிரிசு.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் பீரிஸ் அங்கு மேலும் கூறியதாவது, ௭மது நாட்டின் ௭திர்காலம் ௭வ்வாறு அமையவேண்டும் ௭ன்று ௭மது நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். வேறு யாரும் அதனை தீர்மானிக்க முடியாது. ௭மது மக்களும் அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமுமே இதனைத் தீர்மானிக்கும்.

தமிழர்களும் இலங்கை குடி மக்கள் என்பதால் அவர்களுக்கும் இவ்விதி பொருந்தும்.எனவே தமிழர்களுக்கு பிரிந்து போகப்போகிறீகளா அல்லது ஐக்கிய இலங்கைக்குள் வாழப்போகிறீர்களா என ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடாத்த பேராசிரியர் பீரீஸ் தயாரா??

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவைக் கண்டு ஏன் இவர்கள் அஞ்சுகிறார்கள்? அதுதான் கிந்திய அண்ணன் மன்மோகன் சிங்கி மச்சாள் சோனியா தாத்தா கருணாநிதி யால்ரா மேனன்...... என இருக்கும்போது...

பேராசிரியரா! இனவாதப் பேயின் அடிமையா?

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.