Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர்களா...? வெளிநாட்டு மாப்பிள்ளை.

Featured Replies

FIER5CAVUM0CQCA14ZHR9CAF4Z1LACACNYVJFCANZ4OBYCAI8C7LXCAAXC212CAES4FUDCA04PF40CABC1GO1CA46BQ42CANVUXETCAZIQK45CAYAQ8V4CA5VAF3OCASS40NFCAT2FGOBCAP3R0NGCAB3G2LP.jpg

ஊரில் பழைய காலத்தில் அரசாங்கத்தில் ஏதாவது ஒரு வேலையில் இருப்பவர்களுக்குத்தான் என் பெண்ணைக்கட்டிக்கொடுப்பேன்

என்று பெண்ணைப்பெற்ற பெற்றோர் வீம்பாக இருப்பார்கள் என்று

என் தாத்தா பாட்டி பேசும் போது கேட்டு இருக்கேன். ஆனால்

இப்போது அந்த நிலை கொஞ்சம் வலுவிழந்து யாராவது ஒரு

வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தங்கள் பெண்பிள்ளைகளை

கட்டி வைக்க ஊரில் இருப்பவர்கள் நாயாய் பேயாய் அலைவது

மிக வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கு.

ஊரில் இருந்து யாராவது பெண் கேட்டு வந்துவிட்டால் மட்டும்

அவன் குணம், குடும்பம், படிப்பு, வேலை, சம்பளம், என தெளிவாக விசாரிக்கும் இந்த அறிவு ஜீவிகள் அதே ஒரு வெளிநாட்டு

மாப்பிள்ளை கிடைத்துவிட்டால் எந்த விசாரிப்புக்களும் இன்றி

முன்பின் தெரியாதவனுக்கு வெளிநாட்டில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக பொத்தி பொத்தி வளர்த்த அந்த அப்பாவிகளை

அவனுடன் அனுப்பிவைப்பது எந்த வகையில் நியாயம்..!

வெளிநாட்டில் இருக்கிறான் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக

கட்டிக்கொடுத்துவிட்டு அவர்கள் அங்கே நிம்மதியாக! இருந்து விடுகிறார்கள் ஆனால் இந்த அப்பாவிகள் இங்கே படும் பாட்டை

இவர்கள் அறிகிறார்களா..? "பாவம் இவர்கள் அறிவதில்லை" என்ற

ஒரே வசனத்தில் இவர்களை தப்பவிட முடியாது, முன்பு ஒரு

காலத்தில் வேண்டுமானால் இங்கு நடப்பது இவர்களுக்கு

தெரியாமல் இருக்கலாம் ஆனால் இப்போது நிலமை

அப்படி இல்லை எல்லாம் தெரிந்து இருந்தும் இவர்கள்

வெளிநாட்டு மோகம் எல்லாத்தையும் மறைத்து விடுகிறது. இந்த வெளிநாட்டு மோகத்துக்கு எங்கள் குடும்பத்தில் உள்ள

ஒருவருடைய வாழ்க்கையையும் பலி கொடுத்துள்ளோம்.

என் அத்தை. நன்றாக படித்தவர் அழகானவர், எனக்கு தெரிந்தே ஊரில் இவரை நிறைய பேர் பெண் கேட்டு வந்தார்கள் ஆனால் என் தாத்தா கட்டிக்கொடுத்தால் வெளிநாட்டு மாப்பிள்ளைக்குத்தான்

கட்டிக்கொடுப்பேன் என்று பிடிவாதமாய் நின்று புரோக்கர் மூலம்

வந்த ஒரு நோர்வை மாப்பிள்ளையை தெரிவுசெய்து,

அத்தை தாத்தாவுக்கு கடைசி பெண் ஒரே பெண் என்பதால்

அதிக சீதனம் கொடுத்து இந்தியா கூட்டிச்சென்று மிக பிரமாண்டமாக திருமணம் செய்துவைத்து அவனுடன் நோர்வை அனுப்பிவைத்தார். நோர்வை சென்ற சில மாதங்களிலேயே அவன் வண்டவாளங்கள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியது, எல்லாவற்றுக்கும் உச்சமாக அவனுக்கு நோர்வையில் ஒரு நோர்வைக்காரியுடன் திருமணமாகி (எழுத்தில் இல்லாமல்) இரண்டு குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. நியாம் கேட்ட அத்தைக்கு கிடைத்தது அடி உதைதான். யாருடைய ஆதரவும் இன்றி அவனுடன் போராடி விவகாரத்து வேண்டி அத்தை வெளியே வந்த போது அவருடன் வந்த ஒரே சொத்து அவன் கொடுத்த பெண் குழந்தைதான். இனி என் வாழ்க்கையில் திருமணம் என்ற

பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி அந்த பெண் குழந்தையுடன் தனியே வாழ்ந்து வருகிறார் அத்தை. அத்தையின் இந்த நிலைக்கு தான்தான் காரணம் என்று நினைத்து வேதனைபட்டே தாத்தாவும்

இறந்து விட்டார். இதில் அசிங்கம் என்ன வென்றால் எங்கள் தாத்தாவை ஏமாத்திய அந்த அயோக்கியனின் செய்கைகள்

எல்லாத்துக்கு அவன் தாயும் சப்போட் என்பதுதான்.

இப்போது அவனுக்கு மீண்டும் திருமணம் பேசுபடுதாம் பாவம் எந்த அப்பாவி பெண்ணின் வாழ்க்கை சீரழியப்படப்போகுதோ..

ஊரில் இருப்பவர்களின் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தை இங்குள்ளவர்களும் அழகாக பயன் படுத்திக்கொள்கிறார்கள். அங்கிருப்பவர்களிடம் ஏதோ சொர்க்கத்துக்கே அதிபதிபோல் காட்டிக்கொள்ளும் இவர்களின் உண்மை நிலை இங்கிருக்கும் எங்களுக்குத்தானே வெளிச்சம். இப்படியான இவர்களின் பந்தாவைக்கூட ஓரளவு சகித்துக்கொள்ளலாம் ஆனால் ஊரில் தங்களுக்கு பெண் பாப்பவர்களிடம் பொண்ணு த்ரிஷா மாதிரி மெல்லிசா இருக்கனும்

தமணா கலரில் இருக்கனும் என்று சொல்லுவது இருக்கே..

கடவுளே, இந்த ஆணழகன்கள் தங்கள் முகத்தை கண்ணாடியில் பாப்பதே இல்லைப்போல் இவர்களைப்போலவே அந்த பெண்களும் எங்களுக்கு வரும் மாப்பிள்ளைமார் சூர்யா மாதிரியோ ஆர்யா மாதிரியோதான் இருக்கணும் என்றாள் இவர்களுக்கு எல்லாம் எப்படி கல்யாணம் ஆகிறதாம்! அண்மையில் கூட இப்படிப்பட்ட ஒரு வெளி நாட்டு மாப்பிள்ளையின் கூத்தைப்பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே எனக்கு தெரியாமல் போச்சு. அவர் என் அண்ணாவின் ப்ரண்ட் இங்கே தனியேதான் இருக்காரு அவரின் அப்பா செத்து மூன்றே மாதங்கள் ஆன நிலையில்

நானும் அண்ணாவும் அவர் வீட்டுக்கு போய் இருந்தோம். எங்களை வரவேற்று பேசிக்கொண்டு இருந்தவர் தான் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சொன்னபோது அண்ணா பொண்ணு யாரு

எங்க இருக்கா எப்படி தெரியும் என்று விசாரித்த போதுதான் அந்த வெக்கம்கெட்ட செயலை கொஞ்சமும் கூச்சமும் இல்லாமல் அவர் சொன்னார். தன்னுடைய தந்தையின் இறந்தவீட்டை தான் வீடியோ எல்லாம் எடுத்து பெருசாக செய்ததாவும் அந்த வீடியோ கொப்பி தனக்கு அனுப்பட்டபோது அதில் ஒரு அழகான பொண்ணு ஒடியாடி வேலை செய்துகொண்டு இருந்ததாகவும், தன் தாயிடம் போன் பண்ணி அது யார் என்று கேட்ட போது அது பக்கத்துவீட்டு பொண்ணு என்று விவரம் சொன்னதும் அவளை தனக்கு புடித்து இருப்பதாக சொல்லி பொண்ணு கேட்க்க சொன்னாராம், தந்தை இறந்து சில வாரங்களே ஆனதால் இப்போது போய் பெண்கேட்டால் அவர்கள் தன்னை தப்பா நினைப்பார்கள் என்று அந்த தாய் மறுத்துவிட அதை இவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம் ஏனெனில் அந்த அழகான பெண்ணை அதர்குள் யாராவது கொத்திப்போய் விடுவார்களாம். பின் ஒரு வழியாகா தாயை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாராம். இப்போது எல்லாம் ஓக்கே ஆகி அந்த பெண்ணுடன் போனில் பேசுவதாகவும் அவர் சொன்ன போது என் எதிரே இருந்த அவரை நிமிர்ந்து பார்த்தேன். சத்தியமாக என் கண்ணுக்கு அவர் ஒரு மனிதப்பிறப்பாகவே தெரியவில்லை ஒரு அருவருக்கத்தக்க புளுவாகவே கண்ணுக்கு தெரிந்தார். தங்களுக்கு மாப்பிள்ளையாக வருபவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி வெளிநாட்டில் இருந்தால் மட்டும் போதும் என் ஊரில் இருப்பவர்கள் நினைப்பதும், தங்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் ஒரு தகுதியே போதும் ஜஸ்வர்யாராயைக்கூட

பொண்ணு கேட்கலாம் என இங்கு இருப்பவர்கள் நினைப்பதும் கொடுமையின் உச்சம். சிந்திப்பார்களா இவர்கள்..?

http://www.thusyanth.../blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

1. ஊரில படிக்காட்டி.. ஒரு உருப்படியான வேலை கிடைக்காது. ஊரில படிக்காதவனுக்கு எல்லாம்.. வெளிநாட்டில வேலை கிடைக்குதுன்னா... அது எப்படிப்பட்ட வேலையா இருக்கும் என்று நினைக்கனும் முதலில...!

2. வெளிநாட்டில.. அரச உதவிப் பெறுபவர்கள்.. ஏழ்மையானவர்கள் வருமானம் அற்றவர்கள் என்ற வரையறைக்குள் தான் வைக்கப்பட்டுள்ளனர். இதையே ஊரில் பிச்சை சம்பளம் என்பார்கள். யாராவது பிச்சை சம்பளம் எடுக்கிறவனுக்கு பொண்ணை கட்டிக் கொடுப்பீங்களா.. அப்படின்னா வெளிநாட்டில கட்டிக் கொடுங்க..!!

3. ஊரில பெட்டிக்கடை வைச்சிருக்கிறவனுக்கு என்ன வருமானம்.. அதே தான் வெளிநாட்டில அநேக மூலைக்கடை வைச்சிருக்கின்றவனின் நிலையும்..(பெரு வியாபாரிகள் என்றால் கடன் தொகை எகிறி இருக்கும்... மாப்பிள்ளை பார்க்க முதல்.. வங்கிக் கடனைப் பாருங்க).. ஊரில என்றாலும் சொந்தமா வீடு இருக்கும்.. இங்க எல்லாமே கடன். கடன் கட்டாட்டி.. வீட்டை பிடிங்கிட்டு போயிடும் வங்கி..! இந்த நிலையில்.. உழைப்பே இல்லாமல் கள்ளமா ஆவணங்கள் செய்து.. காட்டி வாங்கின வீட்டுக் கடன் சரியா கட்டல்லைன்னா...என்ன கதி..????!

4.வெளிநாடு ஒன்றும் வேறுக்கிரகத்தில இல்ல. நம்ம பூமிப் பந்து மேல தான் இருக்குது. உழைக்கும் மக்களின் வரி.. வட்டி... இதில மேனி மினுக்கின வீதிகளும்.. கட்டடங்களும்.. பார்வைக்கு அழகா இருக்கென்பதற்காக.. வெளிநாடு திறம் என்று நினைக்கப்படாது. அந்த மினுக்கின கட்டிடங்களுக்குள்ள இருக்கிற அசிங்கம் வெளில தெரிவதில்லை. மேலும்.. கார்..வசதி.. வெளிநாட்டில.. கார் என்பது ஊரில சைக்கிள் போல. ஆனால் ஊரில சைக்கிள் வைச்சிருந்தா ஒரு செலவு தான். வெளிநாட்டில கார் வைச்சிருந்தா பல செலவு..! அதுக்கும் சேர்த்து உழைச்சு அரசாங்கத்துக்கு வருமானம் சேர்ப்பது தான் காரின் வரவுகளை வரவேற்க ஒரு காரணம். அதுமட்டுமன்றி.. இந்தக் காரால.. கால் நடை மறந்தோர் பலர். அதனால் உடலும்.. உள்ளமும் பெருத்திக்கிட்டு.. போகுது. நோய்களுக்கும் குறைவில்ல..!

5. ஊரில வருமானம் இன்றி கஸ்டப்பட்டவைக்கு வெளிநாடு திறமா இருக்கலாம். மேலும் உண்மையிலையே ஊரில வாழ முடியாத அரசியல் காரணம் கொண்டவைக்கு வெளிநாடு ஒரு வித தற்காலிக பாதுகாப்பை வழங்கலாம். ஊரில சிங்களவன் அடிச்சா வெளில தெரியும். ஆனால் வெளிநாட்டில வெள்ளைக்காரனும் கறுப்பனும் அடிச்சா கூட.. அது தெரியாது. சிங்களவன்.. வெட்டி இருக்கிறான்.. கொன்றிருக்கிறான்.. எத்தனையோ கொடுமைகள் செய்திருக்கிறான். பறத்தமிழன் என்று திட்டியும் இருப்பான். ஆனால் அவனின் சித்திரவதையை விட.. வெளிநாடுகளில் உள்ள racism கொடுமையானது. தினம் தினம் மெளனமாக இருந்து மனிதர்களின் வாழ்வியலை சிறுகச் சிறுக பாதிக்கச் செய்வதே வெளிநாட்டு racism. அதை அனுபவிக்கிறவைக்குத் தான் தெரியும் அதன் வலியும் வேதனையும்.

6. ஊரில நல்ல பள்ளி கிடைச்சா படிக்க வசதி இருக்கும். இலவசக் கல்வி. ஆனால் வெளிநாடுகளில் பள்ளிகள் பெற்றோரை போட்டு வாட்டி எடுக்கிற எடுப்புக்கு.. நம்ம ஊர் ஆம்பிளைகள் முன்னே தள்ளிவிடுவது அவையிட மொழி தெரியாத மனைவிமாரை. அதுமட்டுமன்றி பிள்ளைகள் மீது உயர்கல்விக் கடன். அது அவர்களின் வாழ் நாள் சுமை..! ஊரில இந்தக் கஸ்டம் இல்லை..!

7. மேலும்.. அநேக வெளிநாட்டு மாப்பிள்ளைகள் ஊரில இருந்து ஏன் பெண்ணெடுக்கினம் என்றால் தங்கட வெருட்டலுக்கு.. உறுத்தலுக்கு அடங்கி வேலை செய்யக் கூடிய வீட்டுக்கு ஒரு வேலைக்காரி அவசியம் என்று தான். அதோட பிள்ளை பெத்துக்க ஒரு இயந்திரம் வேணும் என்று தான். ஏன் அதையே வெளிநாட்டு பெண்களிடம் பெற முடியாது. அவளவை உதுகளுக்கு எல்லாம் தயார் இல்லை. அதனால தான்.. இவை அங்க ஓடி வரினம்..!

8. வெளிநாட்டில.. அநேக தமிழர்கள் செய்வது கூலி வேலை. ஊரில கடையில நிற்கிறது என்பினமே அதை தான் இங்க சுப்பர் மார்க்கெட்டில் வேலை என்பது. ஊரில் சாப்பாட்டுக் கடையில சமைக்கிறது என்பது தான் இங்க.. மக்டொனால்ட்.. கே எவ் சி வேலை. ஊரில ஓ எல் பாஸ் பண்ணாட்டி என்ன வேலை கிடைக்கும்.. அதே ஆள் வெளிநாட்டுக்கு வந்திட்டா மட்டும்.. வைட் கொலர்.. வேலையா கொடுப்பாங்க..???! அந்த வகையில் வேலைக்கேற்ற கூலி தான் கிடைக்கும். அதுக்குள்ள தான் குடும்பத்தை கொண்டு ஓடனும். இதில வெட்டி பந்தா பாட்டிகள்.. நிகழ்ச்சிகள் வேற நடத்தனும். கடனட்டை அடிச்சு ஊருக்கு நாலு கொலிடே போகனும்.. அப்ப தான் நீங்க வெளிநாட்டில மாப்பிள்ளை எடுத்ததன்.. உண்மையான தார்ப்பரியத்தை ஊருக்கு பறைசாற்றலாம். அதெல்லாம் சும்மா இல்ல... தலைமேல இடியா உங்க பொண்ணு மேல தான் வந்து விழும்.

9. அநேக வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு சரியான மன உழைச்சல். வேலைக் களைப்பு. அதைப் போக்க.. அவை தியானம் பண்ணுறதில்ல. சோமபானமே அருந்துகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு பியர் கான் என்றாலும் வேணும். அல்லது ஊத நாலு சிகரெட் வேணும். இதெல்லாம் இங்க சகஜம் ஏனென்னா... ஊரில கூலி வேலை செய்திட்டு களைப்புப் போக்க.. கள்ளுக் குடிக்க போவினமே ஆக்கள் அப்படித்தான் இங்கையும்..!

10. ஊரில விபச்சாரின்னா ஊர் காறித்துப்பும். அங்க போற வாறவனை ஊர் தூர வைச்சிடும். வெளிநாட்டில அப்படி இல்ல. விபச்சாரம் தொழில். அவளவை வருமானத்திற்கு அலைய அவளைவைய தேடி கார்களில்.. இணையங்களில் அலையினம்.. உங்கட வருங்கால மாப்பிள்ளைமார். இதில இன்னொன்று.. அண்மையில் ஒருத்தர் வந்தார்.. அவருக்கு வேலை இணையத்தில் ஆபாசப்படம் பார்த்து சுய இன்பம் காண்பது. அதுவே எல்லை மீறிப் போய்.. இப்போ ஆண்மை இழந்து நிற்கிறார். இப்படியான ஆக்களுக்கும் ஊரில தான் பொம்பிளை எடுக்கப் போகினம். அவர் இங்கு டாக்டரிடம் கேட்டது.. டாக்டர் நான் ஊர் போய் கலியாணம் கட்டப் போறன்.. வயக்கரா பாவிக்க முடியுமோன்னு..! எனவே வெளிநாட்டு மாப்பிள்ளைகளில் குடி.. போதை.. புகை.. மாது.. ஆபாசம் போன்ற விவவாகரங்களால்.. ஆண்மை இழந்தவைக்கு.. உங்க பொண்ணுங்களை கட்டி அனுப்ப முன்.. வயக்கரா வாங்க சீதனத்தையும் கூட்டி கட்டி.. அனுப்பி வையுங்க..!

இந்த உண்மைகளை தெரிஞ்சு கொண்டும்.. நீங்க என்ன தான் சொல்லுங்க.. எங்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தான் வேணுன்னா.. வடிவா கட்டி அனுப்பி வையுங்கோ.. உங்க பொண்ணு.. நல்ல விலை மலிஞ்ச ரோபாவா இங்க வாழும்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

நானும் பலவிதமான கதைகளைக் கேள்விப்பட்டுள்ளேன்.

1) கல்யாணம் செய்த பின் பெண்ணைக் கூப்பிட மறுப்பது.

2) பெண்ணைக் கூப்பிடத்தேவையான சம்பளம், வீட்டு வசதி போன்றவை இல்லாமல் வீசா கிடைப்பதில் சிக்கல்.

3) கல்யாணம் கட்ட என்று போய், பின்பு தனக்கு இதில் விருப்பம் இல்லை என்று கல்யாணத்தை நிறுத்துவது - இது கொஞ்சம் பரவாயில்லை, பெண் சிறு அவமானத்தோடு தப்பிவிடலாம், மொத்த வாழ்க்கையையே தொலைக்க வேண்டியதில்லை.

ஊரில் உள்ள எம்மவர்கள் கொஞ்சம் அவதானமாக செயல்பட வேண்டியது அவசியமே!

  • கருத்துக்கள உறவுகள்

பதிவைக் கொண்டு வந்து இணைத்து 40 நிமிசத்துக்குள் இன்னொருவரால் இவ்வளவு பெரிய கட்டுரை எழுத முடியும் என்டால் மனதிற்குள் எவ்வளவு பெரிய ஆதங்கம் இருந்திருக்கும் :(

  • கருத்துக்கள உறவுகள்

அன்றாடம் சமூகத்தில்.. தரிசிக்கிறதை எழுதிறதுக்கு ஆதங்கம் படத் தேவையில்லை..! அது தன்பாட்டில வரும்..! என்ன சிலருக்கு தாங்க இங்க வெளிநாட்டில.. ஊரிக்குத் தெரியாமல் மறைச்சு வெட்டி பெருமை அளக்கிறதை இவன் பாவி அவிட்டு விடுறானே என்ற ஆதங்கம் மட்டும் இருக்குது..! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சமூகத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் தங்கள்பகிர்வுக்கு என் பாராட்டுக்கள். [/size]

இதென்ன பெரிய வேலை ??? இந்தியாவை திட்டி பாருங்கள் நாலே நிமிடங்களில் மொத்த யாழ் களமும் நாரி போகும் அளவுக்கு பெரிய கட்டுரை என்னால் எழுத முடியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.