Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிறை தென்பட்டது: உலகளாவிய ரீதியில் நாளை நோன்பு பெருநாள்

Featured Replies

[size=4]ஹிஜ்ரி 1433ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களில் தென்பட்டுள்ளதாகவும் நாளை ஞாயிறுக்கிழமை நோன்பு பெருநாளை அனைத்து முஸ்லிம்களும் கொண்டாட முடியும் எனவும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் இன்று சனிக்கிழமை சற்று நேரத்திற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களில் பிறை தென்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து நாளை பெருநாள் கொண்டாட முடியும் என அறிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் சர்வதேசப்பிறை அடிப்படையில் 30 நோன்புகளையும் பூர்த்தி செய்து புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size]

http://www.virakesari.lk/article/local.php?vid=216

  • கருத்துக்கள உறவுகள்

ஈத் முபாரக்....

  • தொடங்கியவர்

[size=4]புனித நோன்பு பெருநாள் கொண்டாடும் அவைவருக்கும் வாழ்த்துக்கள்!!![/size]

அனைத்து முஸ்லிம் மதத்தை பின்பற்றி அந்த புனிதமான வழியில் வாழும் சகோதரருக்கு வாழ்த்துக்கள் ..........இஸ்லாம் அழைக்கும்....

[size=4]நோன்பு பெருநாளைக் கொண்டாடும் முஸ்லீம் மக்களுக்கு வாழ்த்துக்கள்![/size]

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னோடை இரண்டு சோனகர் வேலைசெய்யினம்......நாளைக்கு வீட்டை சாப்பிட வரச்சொன்னவையள்.....ஆடு,மாடு,கோழியெண்டு ஒரே அமர்க்களமாயிருக்கும் எண்டு சொல்லிச்சினம்.......போகவோவிடவோ எண்டு யோசிக்கிறன்...நாசமறுப்பார் போத்தில் எடுக்கமாட்டாங்கள் எண்ட விசயம் மனசை முள்ளாய்க்குத்திக்கொண்டிருக்கு...வாழ்த்துக்கள் :)

  • தொடங்கியவர்

[size=5]சூரியன் அஸ்தமிக்காத இடங்களில் ரமலான் நோன்பு வைப்பது எப்படி?[/size]

[size=4]புனித ரமலான் மாதம் நிறைவடைந்து ஈகைப் பெருநாளைக் கொண்டாட உலகெங்கிலும் முஸ்லிம் மக்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.[/size]

[size=3][size=4]கடந்த ஒரு மாதமாக சூரியோதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை நீரும் உணவும் இல்லாமல் முஸ்லிம்கள் நோன்பிருந்தனர்.[/size][/size]

[size=3][size=4]வெயில் காலத்தில் பகல் பொழுது என்பது மிகவும் நீளமாக அமைந்திருக்கும் வடக்கத்திய நாடுகளில் முஸ்லிம்கள் நோன்பிருப்பதென்பது மிகவும் சிரமம்தான்.[/size][/size]

[size=4]20 மணி நேரத்தை தாண்டி சூரியன் வானில் தென்படும் இப்படியான இடங்களில் முஸ்லிம்கள் எவ்வாறு நோன்பு வைக்கிறார்கள்?[/size]

120818162228_midnight_sun_finland_304x171_getty_nocredit.jpg

[size=2]ஃபின்லாந்தில் கோடைக்காலத்தில் நள்ளிரவிலும் சூரியன் வானில் தென்படும்.[/size]

[size=4]இருவித சிந்தனை ஓட்டம்[/size]

[size=3][size=4]ரொவானியெமி நகரில் வாழும் வங்கதேசப் பிரஜையான மியா மசூத், ஒரு நாளில் இருபது மணி நேரம் நோன்பு வைப்பதால் தான் மிகவும் சோந்துபோவதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் பசியையும் சோர்வையும் பொறுத்துக்கொண்டு நோன்பு வைப்பதிலும் ஒரு திருப்தி இருப்பதாக இவர் கூறுகிறார்.[/size][/size]

[size=3][size=4]ஆனால் இவ்வூரில் வாழும் நஃபீஸா யாஸ்மின் போன்றோர், மக்காவில் சூரிய உதயம் ஆகும் நேரத்தையும் சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தையும் அடிப்படையாகக் கொண்டு நோன்பு வைக்கின்றனர்.[/size][/size]

[size=3][size=4]சொந்த ஊரான வங்கதேசத்தில் 12 மணிநேர பகல் 12 மணி நேரம் இரவு என்ற வழமைக்கு பழகிப்போய்விட்டு கோடைக்காலத்தில் கூடுதலான நேரம் நோன்பு நோற்பதை உடல் அனுமதிக்கவில்லையாதலால் மக்கா நேரத்தை தாங்கள் கடைப்பிடிப்பதாக நஃபீஸா கூறினார்.[/size][/size]

[size=3][size=4]இவ்விஷயத்தில் இரண்டு விதமான சிந்தனை ஓட்டம் உண்டு என இவ்வூர் பள்ளிவாசல் இமாமான டாக்டர் அப்துல் மன்னான் குறிப்பிட்டார்.[/size][/size]

[size=3][size=4]நோன்பு சமயத்தில் பகல் பொழுது 18 மணி நேரத்துக்கு கூடுதலாகப் போகும் பட்சத்தில், மக்கா-மதீனா நேரத்தைக் கொண்டோ அல்லது அருகிலுள்ள இஸ்லாமிய நாட்டின் நேரத்தைக் கொண்டோ நோன்பு நோற்க இடம் உண்டு என்று இவர் கூறுகிறார்.[/size][/size]

[size=3][size=4]பகல் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் சரி குறைவாக இருந்தாலும் சரி உள்ளூர் சூரியோதயம் சூரிய அஸ்தமனத்தின் அடிப்படையில்தான் நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தை சௌதியரேபிய இமாம்கள் வலியுறுத்துவதாக அவர் ஒப்புக்கொண்டார்.[/size][/size]

[size=3]http://www.bbc.co.uk...esdilemma.shtml[/size]

Edited by akootha

கிரக சம்சாரங்கள், சூரிய மண்டலம், மில்கி வே பிளக்கோல் போன்றவற்றை பற்றி கூடக்கூட தெரிய வர நான் இரவுபகல் என்பதோ அல்லது நேரம் என்பதோ மாயையின் ஒரு தோற்றப்படே என இந்து சமத்தில் கூறப்பட்டிருப்பதை எண்ணி இந்த உண்மையை எப்படி அந்தகாலத்தில் கிரகித்திருந்தார்கள் என்று ஆச்சரியப்படுவதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

.

போகவோவிடவோ எண்டு யோசிக்கிறன்...நாசமறுப்பார் போத்தில் எடுக்கமாட்டாங்கள் எண்ட விசயம் மனசை முள்ளாய்க்குத்திக்கொண்டிருக்கு...வாழ்த்துக்கள் :)

போத்தல் பாவிப்பது "கராம்" ...:D வீட்டை போகும் பொழுதே அடிச்சுப்போட்டு போறதுதானே......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.