Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனுஷ்கோடியில் இந்திய ராணுவத் தளம்!: கருணாநிதி கோரிக்கை

Featured Replies

[size=4]தமிழக மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குவதை தடுக்க தனுஷ்கோடியில் இந்திய ராணுவத் தளம் அமைக்க வேண்டும் என திமுக கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்[/size]

[size=4]இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:-[/size]

[size=4]கோடியக்கரை அருகே 18-8-2012 அன்றிரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். மீனவர்கள் வைத்திருந்த மீன்கள், டீசல் உள்ளிட்ட பொருள்களைக் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.[/size]

[size=4]இந்தத் திடீர் தாக்குதலில் தமிழக மீனவர்கள் நிலைகுலைந்து போய் கதறியுள்ளனர். இந்தத் தாக்குதலில் வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருடன் சென்ற மீனவர்கள் மகாலிங்கம், அன்பு மற்றும் பிற படகுகளில் சென்ற மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் கயிறு மற்றும் கட்டைகளால் தாக்கியிருக்கிறார்கள்.[/size]

[size=4]மேலும் வானவன் மகாதேவி பகுதியைச் சேர்ந்த முருகேசன், அவருடைய தந்தை நாகப்பன், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட மீனவர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்கள். அதில் ஒன்பது மீனவர்கள் காயமடைந்து மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.[/size]

[size=4]தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு என்னுடைய கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தமிழர்கள் இவ்வாறு அவ்வப்போது தாக்கப்படுவதும், உடனே தமிழக அரசின் சார்பில் அதைப் பற்றி மத்திய அரசிடமும், பிரதமரிடமும் முறையிடுவதும், அவர்கள் நம்மை சமாதானப்படுத்துவதற்காக இலங்கை தூதுவரிடமோ, இலங்கை அரசிடமோ அதைப் பற்றி தெரிவிப்பதும்; அவர்களும் இந்திய அரசிடம் இனிமேல் இவ்வாறு நடைபெறாது என்று உறுதி கூறுவதும்; ஆனால் அதற்கு இரண்டொரு நாட்களிலேயே இலங்கைக் கடற்படையினர் நமது மீனவர்களைத் தாக்குவதும் என்பதும் தொடர்கதையாக நீண்டு கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை.[/size]

[size=4]இதுவரை நடைபெற்ற இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் தாக்குதல் என்ற புள்ளிவிவரத்தைப் பார்க்க வேண்டுமென்றால் 1991 முதல் 2011 வரை மீனவர்கள் மீது தாக்குதல் 167; 85 பேர் இறந்துள்ளனர்; 180 பேர் காயமடைந்துள்ளனர்; 2006 முதல் 2011 வரை 146 படகுகள், இலங்கை கடற்படையினரால், பறிமுதல் செய்யப்பட்டும், 746 மீனவர்கள் சந்தேக அடிப்படையில் கைது செய்யப்பட்டும் உள்ளனர். இதில் 131 படகுகள் மற்றும் 741 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.[/size]

[size=4]அண்மையில் நடைபெற்ற டெசோ மாநாட்டிலேகூட இந்திய மீனவர்களின் இந்தக் கொடுமைகளை விவரிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பையும், நிவாரணத்தையும் உறுதி செய்யும்போது, இலங்கைக் கடற்படையினால் இந்திய மீனவர்கள் மீது தொடுக்கப்படும் கொடுமைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது நமது இன்றியமையாக் கடமையாகிறது.[/size]

[size=4]இலங்கை கடற்படையால் நிராயுதபாணிகளாக இருக்கும் அப்பாவித் தமிழக மீனவர்கள் ஈவிரக்கமின்றித் தாக்கப்படுகின்றனர்; கைது செய்யப்படுகின்றனர்; சுட்டுக் கொல்லப்படுகின்றனர்; அவர்களது மீன்பிடிப் படகுகள் மூழ்கடிக்கப்படுகின்றன; தமிழ் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர்.[/size]

[size=4]இந்தியாவின் நிர்வாக எல்லைக்குட்பட்டிருந்த கச்சத்தீவு இலங்கை அரசு வசம் ஒப்படைக்கப்பட்டதால், மீனவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்றாலே இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தித் துன்புறுத்துகிறார்கள். இந்தக் கொடுமைக்கொரு முடிவு கட்ட, கச்சத்தீவை இந்தியா மீண்டும் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வருவதோடு தனுஷ்கோடி அல்லது மண்டபம் முகாமில் இந்தியக் கடற்படைத் தளம் ஒன்றை இந்திய அரசு நிறுவ வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று சொல்லியிருக்கிறோம்.[/size]

[size=4]இந்தத் தீர்மானத்தை நாம் நிறைவேற்றி ஒரு வார காலத்திற்குள்ளாகவே மீண்டும் நமது மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். எனவே இதற்கொரு நிரந்தர முடிவு காண நமது இந்திய அரசுதான் முனைப்போடு செயல்பட வேண்டும். இலங்கை அரசிடம் முறைப்படி ஒரு வேண்டுகோள் விடுத்து, அவர்கள் நமக்கொரு சமாதானம் அளிப்பது என்பதோடு இந்தப் பிரச்சினை முடிந்து விடாமல், இனியொருமுறை இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படாமல் இருப்பதற்கு உறுதியானதொரு நிரந்தர வழிவகையைக் காண வேண்டுமென்று மத்திய அரசை தி.மு.கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.[/size]

[size=4]இவ்வாறு அவர் கூறி உள்ளார்.[/size]

[size=4]http://news.vikatan.com/?nid=9986#cmt241[/size]

நல்ல ஆக்க பூர்வமான கருத்து . ஆளும் கட்சியும் இந்த விடயத்தில் இணைந்தால் நலம் .. நடக்குமா ??????????????????????????????????????????????????????????????????

  • தொடங்கியவர்

[size=5]மீனவர்கள் தாக்குதலுக்கு முற்றுபுள்ளி வைக்க பிரதமரை சந்திப்போம்: [/size]

[size=5]ஜி.கே.வாசன் உறுதி[/size]

[size=5][size=4] தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து தாக்கப்படுவதுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அடுத்த வாரம் மீனவப் பிரதிநிதிகளோடு பிரதமர், வெளியுறத்துறை அமைச்சரை சந்தித்து விவாதிக்கப்படும், என மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.[/size][/size]

[size=5][size=4]கும்பகோணத்தில் இன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியதாவது:தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை அதிகமாக உள்ளது. எதிர்காலத்தில் மின்வெட்டு இருக்க கூடாது என்பதற்காகதான், காமராஜர் தமிழகத்தில் அனல், புனல், நீர்மின் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்படி கூடங்குளத்தில் அணு மின்நிலையம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. தமிழகத்தின் மின்வெட்டை முழுமையாக நிவர்த்தி செய்ய, 100 சதவீதம் கூடங்குளம் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க, மத்திய அரசுக்கு பரிந்துரைத்து வருகிறோம்.[/size][/size]

[size=5][size=4]தமிழகத்தில், 45 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்யவிட்டாலும், இங்கு தொடர்ந்து காங்கிரஸ் கட்சி உயிரோட்டத்தோடு தான் உள்ளது.[/size][/size]

[size=5][size=4]தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவது கண்டனத்துக்குரியது. இது தொடர்பாகஇரண்டு முறை வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவை சந்தித்து பேசியுள்ளேன். ஆனாலும், தாக்குதல் தொடர்கிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, அடுத்த வாரத்தில் தமிழக மீனவப் பிரதிநிகளோடு டில்லிக்கு சென்று பிரதமர், வெளியுறத்துறை அமைச்சரோடு விவாதிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

http://tamil.yahoo.com/ம-னவர்கள்-க்க-ல-க்க-152900948.html;_ylt=Aq3ljIHLRD4JEQqjy3h3wdSZBtx_;_ylu=X3oDMTNxMmpiZGZvBG1pdANUb3BTdG9yeSBGUARwa2cDOWM2MWY0ZGYtYjU3ZS0zZmJlLWI5NDQtNGFmNTE3OGMyNTE1BHBvcwMxBHNlYwN0b3Bfc3RvcnlfY29rZQR2ZXIDOGUzNDAyZTEtZWFlMS0xMWUxLWJlYWYtMTE4Mzk0NjQxYTc2;_ylg=X3oDMTI5YnQ5N2Y1BGludGwDaW4EbGFuZwN0YS1pbgRwc3RhaWQDBHBzdGNhdAPgrprgr4bgrq_gr43grqTgrr_grpXgrrPgr40EcHQDc2VjdGlvbnM-;_ylv=3[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ தளத்த அமைச்சு ஒரு RPG கொடுத்து கருணாநிதி ah centryla விடுங்கப்பா வேட்டியோட :D

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ தளத்த அமைச்சு ஒரு RPG கொடுத்து கருணாநிதி ah centryla விடுங்கப்பா வேட்டியோட :D

அந்த ஆளிட்டேயே பலவிதமான கனரக ஆயுதம் இருக்கு எத்தனையோ பங்கர்களை தகர்த்தேறிந்த்தவர். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவது உண்மையல்ல!

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்திய கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இந்தியாவின் மேலதிக சொலிசுட்டர் ஜெனரல் ரவீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இவ்வாறு இலங்கைக் கடற்படையினர் இந்திய கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்தால் அது யுத்த முனைப்பாகவே கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்து உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கடல் வளங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இலங்கையில் யுத்தம் காரணமாக சில தசாப்தங்களாக மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ்கோடியில் இந்திய ராணுவத் தளம்!: கருணாநிதி கோரிக்கை

எந்த சினிமாவில் இந்த சீன் எல்லாம் வருது..ஆனா சீன் ரொம்ப புதுசாக இருக்கு

டிஸ்கி:

தலிவர் புது புது ஐடியக்காலா எடுத்துவிடுகிறார் .. "எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் " மாதிரி ஏதோ புது ரொப்பிக்கு அடி போகிறாரப்பா... இனி ரசினி விஜயகாந்து எல்லாம் .. இந்த ரொபிக்கை பாலொ பண்ணி புதுபடம் எடுக்க போகிறார்கள்.. கடைசியில் படம் பார்த்தவனுக்கு பஜ்ஜி சமசோதான் மிச்சம்...

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வாயிலிருந்து வரும் செய்திகள் எல்லாம் இந்திய மத்திய அரசின் இலங்கைக்கான மிரட்டலாகவே தெரிகிறது..

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் எனோ திராவிடர்.. சுயமரியாதை அது இது என்கிறார்கள்.. ஆனால் அல்லக்கைக்கு அல்லைகையா இருக்க சாத்தியம் இல்லை என்பது எனது கணிப்பு அடுத்த எம்பி எலக்கசனுக்கு எல்லாம் தெளிவாகிடும்..

டிஸ்கி:

மக்கள் முன்ன மாறி கிடையாது இப்பல்லாம்.. லைட்டா கொஞ்சம் திங்க் பண்ண ஆரம்பிச்சு போட்டார்கள் .. பாராட்ட வேண்டிய விடயம்

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆளிட்டேயே பலவிதமான கனரக ஆயுதம் இருக்கு எத்தனையோ பங்கர்களை தகர்த்தேறிந்த்தவர். :lol::icon_idea:

:D

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் கட்சியில், மூத்த தளபதியிலிருந்து... இளைய தளபதி வரை... போர்ப் பயிற்சி பெற்று...

தங்க வாழும், தங்கக் கேடயமும்... பரிசாகப் பெற்ற‌வர்கள். அதிலும்... மூன்றாம் கட்டத் தளபதிகள், மூத்திரம் பெய்ய... நன்றாக... பயிற்சி எடுத்துள்ளார்கள்.

இதை... விட, என்ன... இழவு வேண்டிக் கிடக்குது.... கருணாநிதிக்கு.

தூத்த்தேரி........+ நாதாரி.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே போகிறது தமிழகம்?

நமது நாட்டின் அரசியல்வாதிகள் இரு வகைப்படுவர். தமது அரசியல் வளர்ச்சிக்காகப் பாடுபடுவோர் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக அரசியலில் ஈடுபடுவோர். இதில் பெரும்பாலானோர் அரசியலில் வளர்வதற்காகச் செயல்படுகின்றனர். வெகு சிலரே வளர்ச்சிக்கான அரசியலில் ஈடுபடுகின்றனர் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். தமிழக சட்டப்பேரவைத் தேர்லில் போட்டா போட்டியாக வெளிவந்துள்ள தேர்தல் அறிக்கைகளைப் பார்க்கும்போது நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் அரசியல்வாதிகளின் சொற்ப எண்ணிக்கையும் குறைந்து வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

வறுமையை ஒழிப்போம், ஊழலை ஒழிப்போம், நல்லாட்சி தருவோம், அனைவருக்கும் வேலைவாய்ப்பு, இலவசக் கல்வி, மருத்துவ சிகிச்சை அளிப்போம், அடிப்படைக் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவோம் என்பதுபோன்ற தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பது "அவுட் ஆஃப் ஃபேஷ'னாகிவிட்டது. இதையெல்லாம் இதுவரை எந்த அரசும் நிறைவேற்றியதும் இல்லை, இனி செய்யப்போவதும் இல்லை என்று வாக்காளர்கள் உணர்ந்து கொண்டதாலோ என்னவோ தங்களது வாக்குகளை இலவசங்களுக்கு அளிக்கத் தயாராகி வருகின்றனர்.

இந்தியாவை வல்லரசாக்கும் வகையில் அரசியல்வாதிகள் அனைவரும் வளர்ச்சிக்கான அரசியலில் ஈடுபட வேண்டும். அதுதான் இந்நாட்டுக்கு இப்போதைய தேவை என்று அறிவுறுத்திய அப்துல் கலாமை அளித்த தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை தலைகீழாக உள்ளது.

பசுமைப்புரட்சியை உருவாக்கி உணவு தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வித்திட்ட சி.சுப்பிரமணியம், கல்விக் கண் திறந்த காமராஜ், எதிர்கால இந்தியாவின்மீது குழந்தைகள் மனதில் நம்பிக்கையை விதைத்த அப்துல் கலாம் போன்றோரை நாட்டுக்கு வழங்கிய தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கை இன்று இலவசங்கள் எனும் இருளால் சூழப்பட்டுள்ளது.

இலவச அரிசியை வாங்கி, இலவச வெட்கிரைண்டரில் அரைத்து, இலவச காஸ் அடுப்பில் இட்லியாக்கி, இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து, இலவச கான்கிரீட் வீட்டில் உட்கார்ந்து, இலவச மின் விசிறியை சுழலவிட்டபடி சாப்பிட்டு, இலவச டி.வி.யில் படம் பார்த்து மகிழ்ந்தால் வாழ்வு சுகமாகத்தானே இருக்கும். அப்படி உட்கார்ந்து சாப்பிட்டால் வரும் பல்வேறு இலவச நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இருக்கவே இருக்கிறது இலவச காப்பீட்டுத் திட்டம். வயதாகி ஓய்ந்துபோனால் ஊர் சென்றுவர இலவச பஸ் வசதியும், மாதாமாதம் இலவசமாகப் பணமும் தருவார்கள். மக்களைப் பெறப்போகும் கர்ப்பிணிகளுக்கு அரசாங்கமே ஆயிரக்கணக்கான ரூபாய்களை அள்ளித் தரப்போகிறது. அதுவும் பெண் குழந்தையாயின் அவள் வளர்ந்த பின் திருமணம் செய்யத் தங்கத் தாலியும் பணமும் கிடைக்கப்போகிறது. நல்ல வேளை மாப்பிள்ளையும் தேடிக் கொடுக்கப்படும் என்று கூறவில்லை! எனவே குடும்பத்துக்காகவோ, எதிர்காலத்துக்காகவோ, நாட்டுக்காகவோ எதற்காக உழைக்க வேண்டும்? அதனால் இந்த நாடும் மக்களும் எப்படிப் போனால் என்ன? என்ற நிலைமைக்கு மக்கள் வந்து விட்டார்கள் போலிருக்கிறது; அல்லது அந்த நிலையை இருபெரும் கட்சிகளும் உருவாக்கிவிட்டன என்றுதான் கூற வேண்டும்.

தமிழனுக்குத் தன்மானம் முக்கியம். சுயமரியாதையோடு இருக்க வேண்டும் என்ற முழக்கமெல்லாம் இன்று எங்கே போனதெனத் தெரியவில்லை. ஒட்டுமொத்த தமிழர்களின் சுயமரியாதைக்கும் விடப்பட்ட சவாலாக இருக்கின்றன இந்தத் தேர்தல் அறிக்கைகள்.

வாக்காளர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ அதைத்தான் அரசியல்வாதிகள் கொடுக்க முன் வருகிறார்கள். உழைத்துக் களைத்துச் சாப்பிட்டால்தான் உடலில் ஒட்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்; ஒரு பொருளைச் சும்மா கொடுத்தால்கூட வாங்கத் தயக்கம் காட்டுபவர்கள் எம் தமிழர்கள். ஆனால், இன்று நிலைமை தலைகீழ். இலவசம் கிடைக்கவில்லை என வீதியில் போராடுகிறான் தமிழன்.

இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் இலவச டி.வி. தருகிறோம், இலவச அரிசி தருகிறோம் என்று தமிழகத்தைப் பின்பற்றி அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் எடுபடாமல் போனாலும்கூட தமிழ்நாட்டில் மட்டும் கைமேல் பலன் தருவது எதைக் காட்டுகிறது? இலவசங்களுக்குத் தமது வாழ்வையும், எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வையும் விற்பதற்குத் தமிழர்கள் தலைப்பட்டுவிட்டனர் என்பதையே காட்டுகிறது.

தர்மம் போடுங்க சாமீ என்று யாரேனும் யாசிக்கும்போதுகூட மேலும் கீழும் ஒருமுறை பார்த்துவிட்டுக் 'கையும் காலும் நன்றாகத்தானே இருக்கிறது, உழைத்துச் சாப்பிட்டால் என்ன கேடு' என்று எண்ணாதவர்கள் நம்மில் எத்தனை பேர்?

50 பைசாவைத் தூக்கிப் போடும் ஒரு சில விநாடிகளுக்குள் எத்தனை சிந்தனைகள் நம்முள் ஓடுகின்றன. இந்த நாடு ஏன் முன்னேறவில்லை என்றோ அல்லது ஏழை, பணக்காரன் இடைவெளி அதிகரித்துவிட்டது என்றோ நினைக்காதவர்கள் யாரேனும் உண்டா?]

குறைந்தபட்சம் பிச்சைபோடும் நேரத்திலாவது, வறுமை என்று ஒழியும், எல்லோருக்கும் எல்லாமும் எப்போது கிடைக்கும் என்று நினைக்காத கல் நெஞ்சக்காரர்கள் நம் நாட்டில் குறைவுதானே? "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்' என்ற சிந்தனையை அரசியல்வாதிகள் தவறாகப் புரிந்து கொண்டார்கள் போலிருக்கிறது. அதனால்தான் இலவசங்களால் நிறைகிறது தமிழனின் வயிறு. அதைப் பார்த்து குலுங்கி குலுங்கிச் சிரிக்கிறது இதர இந்தியர்களின் வயிறு.

தொகுதிக்கே எங்கள் எம்.எல்.ஏ. வருவதில்லை என்று குற்றஞ்சாட்டும் மக்களையோ அல்லது தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறி, ஓட்டுக் கேட்க வரும் கட்சியினரைப் பார்த்துப் பொங்கி எழும் வாக்காளர்களையோ காண முடிவதில்லை. அப்படியே பொங்கினாலும், நீங்கள் ஒன்றும் சும்மா ஓட்டுப் போடவில்லையே, சில ஆயிரங்கள் வாங்கிக் கொண்டும் இலவசங்களைப் பெறவும்தானே வாக்களித்தீர்கள் என்று ஏளனமாய் கேட்கப்படும் அவல நிலையில் இருக்கிறார்கள் தமிழக வாக்காளர்கள்.

இரு அணியில் ஓரணியைத் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயத்தால், ஒரு மாநிலமே சத்திரமாகப் போகிறது. அதுவே சரித்திரமாகவும் போகிறது!

நன்றி: 26.03.2011 தினமணியில் வெளியான கட்டுரை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.