Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உன்னை எனக்குப் பிடிக்கும் என்னை உனக்குப் பிடிக்கும்

Featured Replies

உன்னை எனக்குப் பிடிக்கும் என்னை உனக்குப் பிடிக்கும்

நாங்கள் எல்லாருமே தினம் தினம் எத்தின பேரை பார்க்கிறம் பழகிறம் ஆனால் ஒரு சிலரைத்தான் நல்ல நண்பர்களாகவோ காதலன் காதலியாகவோ அல்லது இன்ன பிற உறவுகளாகவோ ஏற்றுக்கொள்ளுறம். ஏன் நாங்கள் சில பேரை மட்டும் நேசிக்கிறோம்? சில பேரை வெறுக்கிறோம்? எங்கட விருப்பு வெறுப்புகளைத் தீர்மானிக்கும் அகக்காரணிகள் புறக்காரணிகள் எவை?

sunmoon8px.jpg

முதலாவது காரணம் பரிச்சயம்.ஒரு பொருளாயிருந்தாலும் நபராயிருந்தாலும் ஏற்கனவே பழக்கம் என்றால் கூடுதலான நாட்டம் காட்டுவம்.யாரையும் அடிக்கடி சந்திச்சா அவையிலுள்ள நேசம் மதிப்பு எல்லாம் அதிகமாகும் என்று உளவியல் ஆராய்ச்சியாளர்களான சொல்லினம்.

பல்கழைக்கழக மாணவர்கள் சிலர் ருசி பற்றிய ஒரு ஆராய்ச்சிக்கு என்று சொல்லி கூப்பிட்டுட்டு; வேற ஒரு ஆராய்ச்சி செய்தவையாம {இந்த ஆராய்ச்சியாளர்களே இப்பிடித்தான்.மில்கிறம் செய்த அதிகாரிகளுக்கு எவ்வளவு தூரம் ஒருவர் பணிந்து போவார் என்ற ஆராய்ச்சி பற்றி யாருக்குத் தெரியும்? இன்னொருநாள் அதைப்பற்றி சொல்றன்} ஆராய்ச்சியின் போது ஒவ்வொரு அறையிலயும் போய் ஒவ்வொரு குடிவகையையும் ருசி பார்க்க வேண்டும்.இந்த ஆராய்ச்சியின போது சில பேர் பத்துக்கு மேற்படட தடவைகள் சந்தித்துக் கொண்டார்களாம் சில பேர் ஒன்றிரண்டு தடவைகள் சந்தித்துக் கொண்டார்களாம. ஆராய்ச்சி முடிவில் நடந்த ஒரு சின்ன கணக்கெடுப்பில் ஆராய்ச்சியின் போது நிறைய தடவைகள் சந்தித்துக் கொண்டவர்களை அதிகமாகப் பிடிக்கும் என்றும் குறைய தடைவ சந்தித்தவர்களை குறைவாகப் பிடிக்கும் என்றும் பங்குபற்றியவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். அதான் " நண்பனே எனக்குக் காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ" என்று ஜோதிகா பாடினவவோ:-) (பாடல் வரிகள் யாற்றயோ தெரியேல்ல).

அடுத்த காரணம் ஒருவரின் புற அழகு. என்னதான் புற அழகு மட்டும் அழகில்ல அக அழகும் முக்கியம் உண்மையான காதல் இரு உள்ளங்களின் சங்கமம் இப்பிடித்தானே நாம் கேள்விப்படுவது. ஆனால் ஒருவரிடத்தில் நாம் அன்பு வைக்க புற அழகு முக்கிய காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.புற அழகால கவரப்பட்ட பிறகுதான் அக அழகைத் தேடுகிறோமா?

200 பெண்களிடம் ஒரு 7 வயதுக்குழந்தையின் படமும் அந்தக் குழந்தை பாடசாலையில் மற்றக் குழந்தைகளுடன் சண்டை பிடிப்பது அடிப்பது பற்றிய விபரங்களும் குடுத்திட்டு அந்தக் குழந்தையைப் பற்றி என்ன நினைக்கிறீங்கள் என்று கேட்டினமாம்..இந்த 200 பேரில் சிலரிடம் பார்த்தாலே கொஞ்சத் தோன்றும் அழகான குழந்தையின் படமும் சிலரிடம் வடிவில்லாத குழந்தையின் படமும் குடுத்திச்சினமாம்.(குழந்தைகள

இப்ப என்ன சொல்லவாறியள்?

கத்திறது கூடாத குணம் எண்டா?இல்லை நான் பொதுவாகவே நல்ல பிள்ளை சும்மா விளயாட்டுக்குக் கத்திக் கொண்டு வந்தனான் எண்டுறியளா?இல்லை ஆராச்சியின் படி முதல் ஏற்படும் அனுபவம் உண்மயானது இல்லை,ஆன படியா நான் நல்ல பிள்ளை எண்டுறியளா?

ஆன சில பேர் முதல் அனுபவம் பிழையாக இருக்கக் கூடியது என்று எண்ணி அதைக் கணக்கில் எடுக்காமல் தவிர்த்திருக்கலாம் அல்லவா?

அதோட இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்ற இன்னும் மொரு சுவாரசியமான ஆராச்சியின் படி, முடிவு என்னவோ எல்லாரும் ஏற்கனவே அறின்சது தான், ஆண்கள் வடிவான பெண்களைப் பார்த்தால், ஆராய்ந்து முடிவெடுக்கும் திறனை இழந்து விடுகினமாம்.இதுக்கென்ன சொல்லுறியள்.அது தான் எல்லாரும் ஓம் எண்டு சொல்லிப் போட்டு பிறகு ,அடி வாங்கிறவயோ?

Sex cues ruin men's decisiveness

Images of women such as Kelly Brook can be distracting to men

Catching sight of a pretty woman really is enough to throw a man's decision-making skills into disarray, a study suggests.

The more testosterone he has, the stronger the effect, according to work by Belgian researchers.

Men about to play a financial game were shown images of sexy women or lingerie.

The Proceedings of the Royal Society B study found they were more likely to accept unfair offers than men not been exposed to the alluring images.

The suggestion is that the sexual cues distract the men's thoughts, preventing them from focusing on their task - particularly among those with high natural testosterone levels.

The University of Leuven researchers gave 176 heterosexual male student volunteers aged 18 to 28 financial games to test their fair play.

But first, half of the men were shown sexual cues of some kind.

One group of 44 men were given pictures to rate; some were shown landscapes while the rest were shown attractive women.

Another group, of 37 men, were either asked to assess the quality, texture and colour of a bra or a t-shirt.

And a third group of 95 were shown either pictures of elderly women or young models.

Each group was then paired up to play a game where the men had $10, a proposer had to suggest a split, and the other man accepted or rejected the offer.

If the second man accepted the offer, the money was distributed in agreement with the offer. If he rejected it, neither partner got anything.

The game is designed as a lab model of hunting or food sharing situations.

http://news.bbc.co.uk/1/hi/health/4921690.stm

...சிக்மன் பிராய்ட் என்ற உளவியல் அறிஞர்...ஒடிபஸ் கொம்பளக்ஸ், இலக்ரா கொம்பளக்ஸ் என்ற எடுகோளை வைக்கிறார்.... அதாவது...பொம்பிளை பிள்ளையளிலை தகப்பன் மாருக்கு பிடிப்பதற்க்கும் ஆம்பிளைப்பிள்ளையிலில் தாய் மாருக்கும் பிடிப்பதற்க்கும் ஏதோ வகையில் முடிச்சு போடுகிறார்.

எல்லாத்துக்கும் sex அடிப்படைக்கு வாறார்.........இப்பொழுது ஆண்கள் பெண்கள் காதல் வலையில் விழுவதற்க்கான ஆராய்ச்சி முடிவுகள் பெரும்பாலனவை....சிறுவயதில் நேசிச்சவை தெரிந்தவை பழக்கப்பட்டவர்கள் போன்ற உருவங்களை உடையவரை வயது வந்தப்போல காணும் பொழுது அவர்கள் இடம் வசீகரிக்கப்படுகிறார்களென்ற

  • தொடங்கியவர்

நாரதர் அண்ணா வணக்கம்...என்ன சொல்ல வாறன் என்றெல்லாம் சொல்லிப்போட்டுத்தான் எழுதவேணும்.? ஓம் என்று சொல்லிப்போட்டு அடி வாங்கினீங்கிளா நீங்களுமா? ஹா ஹா. :wink:

சின்னக்குட்டி சிக்மன் பிராய்ட் இன்னும் நிறையச் சொல்லியிருக்கிறார் அவர் சொல்லாமல் விட்டதை அவற்ற மகள் சொல்லியிருக்கிறா.

"காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே" என்றொபு பழைய பாடல் வரி "தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் குடு" பாடலில் யுவன் கலந்தடிச்சிருப்பாரே.பிராய்ட

ஆகா இப்படியெல்லாம் இருக்கா சிநேகிதி.?. ஆனால் இந்த ஆராய்சிகளும் பொய்யாகிப்போன அனுபவங்களும் இருக்கு சிநேகிதி.

தகவலுக்கு நன்றி சிநேகிதி.

  • தொடங்கியவர்

ஆமா றமாக்கா பொய்யாகிப்போகும் தானே....ஆராய்ச்சிகள் எல்லாம் 100% சரி என்று இல்லைத்தானே.

எது எப்பிடியோ - இப்பிடி யோசிக்கிற அளவுக்கு எழுதுற - உங்க சொந்த ஆக்கம் எல்லாருக்கும் - பிடிச்சிருக்கு சினேகிதி! :wink: 8)

  • தொடங்கியவர்

வணக்கம் வர்ணன்...லெக்ஸர் நோட்சை வைச்சுத்தான் இதை எழுதினேன்.எல்லாருக்கும் பிடிச்சருந்தா மகிழ்ச்சிதான்.

  • 3 weeks later...

ம்ம் சிநேகிதி உங்கட தத்துவம் இன்றுதான் வாசிச்சன். ம்ம் நல்லாதான் சிந்திச்சு எழுதி இருக்கிறியள். ஆனால் முடிவில என்ன சொதப்பிட்டியள் ஆரம்பத்தில கத்திக்கொண்டு வந்திருக்க கூடாது என்று. அப்படிக் கத்திக் கொண்டு வந்திருக்கிறதால தானே கன பேருக்கு உங்களை தெரியுது ஹீ ஹீ

  • தொடங்கியவர்

ரசியக்கா சொதப்பிட்டனோ? :oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

4.கெட்ட குணங்களைச் சொல்லி ஆனால் சினேகிதி நல்லவா அவாட்ட நிறைய நல்ல குணங்கள் இருக்கு என்று என்ர நல்ல குணங்களைச் சொல்லி முடிக்கிறீங்கள்.

என்னப்பற்றி நல்லதா சொல்லி கடைசில கவுத்த ஆளைத்தான் நான் அதிகமா வெறுப்பன்.அதே நேரம் குறையைச் சொல்லத் தொடங்கி நிறைகளைச் சொல்லி முடிச்ச ஆளைத்தான் அதிகமாக நேசிப்பேன்.

சிநேகிதிக்கா........... நீங்க சொன்ன இந்த நாலாவது விசயத்த கெட்டித்தனமா பாவிச்சு ஆக்கள கவுக்குற ஆக்கள் நிறைய பேர் இருக்கினம்.... எங்கட பிரச்சனையளிலயே நிறைய உதாரணங்கள சொல்லலாம்............கிட்டடில செத்தாரே புஸ்பராசா அண்ணா.....அவர் சாகுறதுக்கு முதல்ல கொடுத்த பேட்டிய கவனிச்சா தெரியும். புலியள பற்றி எல்லா விமர்சனத்தையும் வச்சிட்டு..... புலியில்லாட்டி ஈழமில்ல எண்டு பொசிட்டிவா முடிச்சார்......

அதமாதிரி கவிஞர் சேரன் அண்ணா ஒரு இடத்தில குடுத்த பேட்டியையும் பார்த்திங்க எண்டா இதே முறையத்தான் கடைப்பிடிச்சிருக்கிறார்...........

.

மற்றது மாவீரர்நாள் ரைம்ல அன்ரன் பாலசிங்கம் அண்ணாவின்ர விளக்கவுரை வந்திச்சு தானே.... அதை ஒராள் விமர்சிச்சவர்.....அவரும் இதேமுறையை கையாண்டிருக்கிறார்......

இந்த வழியை தெரிந்தே பாவிக்கினம். ஒருவகையில பகையுணர்வ ஏற்படுத்தாமலிருக்கிறதுக்கு இது உதவும்...... சில சந்தர்ப்பங்களில தங்கள காப்பாத்திக்கொள்ளுறதுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

பூனைகுட்டியை நாய் பிடித்தால்(லவ் பண்ணிணால்)அது தத்துவம்....

  • 1 month later...
  • தொடங்கியவர்

என்ன புத்தன் நக்கலா?? பூனைக்குட்டி எவ்வளவு தெளிவாக் கருத்து சொல்லியிருக்கு.பூனைக்குட்டி நீங்கள் சொன்னது சரிதான்.எதுக்கும் ஒருக்கா திரும்ப வாசிச்சிட்டு வாறன்.

நல்ல கருத்துக்கள் தான். ஆராய்ச்சியிலிருந்து மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறியள். அதாலை அதைப்பற்றி நான் கதைக்க விரும்பவில்லை. ஆனால்

சிலபேரைப் பார்த்ததுமே அவர்கள் மீது ஒரு பிரியமும் (அது அவாகளது புற அழகுடன் தொடர்புடையது அல்ல) சிலபேரைப் பார்த்ததுமே ஒருவித வெறுப்பும் ஏற்பட்டுவிடுகிறதே. அதற்கு என்ன காரணம் என்று பலதடவைகள் யோசித்திருக்கிறேன். இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.