Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிக செலவாகும் Windows XP

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிக செலவாகும் Windows XP

[size=1]windows_xp_logo.jpg[/size]

[size=1][size=4]மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தினைக் கை கழுவ பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏப்ரல் 2014க்குப் பின்னர், எந்த வித மான உதவியும் எக்ஸ்பி பயன்படுத்துபவருக்கு வழங்கப்பட மாட்டாது என்ப தனை, மிகவும் உறுதியாக அறிவித்துள்ளது.

எச்சரிக்கையாக வும் தந்துள்ளது. பெரும்பாலானவர்கள் இன்னும் விரும்பிப் பயன் படுத்தும் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து, ஏன் மைக்ரோசாப்ட் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது என்று நாம் எண்ணலாம்.

இதற்குக் காரணம், எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்துபவருக்கு சப்போர்ட் தருவதற்கான செலவு தொகையே ஆகும். விண்டோஸ் 7 சிஸ்டம் பராமரிப்பிற்கான செலவினைக் காட்டிலும், எக்ஸ்பி சிஸ்டத்தினை நிர்வகிக்க, பராமரிக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குக் கூடுதலாக ஐந்து மடங்கு செலவாகிறது.

இதனாலேயே, மைக்ரோசாப்ட் இந்த முடிவினை எடுத்துள்ளது. பல ஆண்டு களாக இதனைச் சொல்லி வந்தாலும், இந்த ஆண்டில் தான் அறிவிப்பினை எச்சரிக்கை கலந்த சொற்களில் வெளியிட்டது மைக்ரோசாப்ட்.

இது குறித்து வெளியாகியுள்ள மைக்ரோசாப்ட் வலைமனைச் செய்தியில், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு நிறுவனங்கள் மாறினால், அதற்கான முதலீடு சார்ந்து, லாபத்தினையும் கூடுதலாகப் பெறுவார்கள்; செலவு குறையும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

மேலும் அண்மையில் எடுத்த ஆய்வின் படி, ஏப்ரல் 2014க்குப் பின்னரும் கூட, நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் 11% பேர், தொடர்ந்து எக்ஸ்பியினைப் பயன்படுத்துவார்கள் என்று அறியப்பட்டுள்ளது. எனவே தான் மைக்ரோசாப்ட் தொடர்ந்து தன் நிலைப் பாட்டினை அடிக்கடி எச்சரிக்கையாக வெளியிட்டு வருகிறது.

எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்துபவர்கள், தங்கள் கம்ப்யூட்டரினைப் பராமரிக்க 11.3 மணி நேரம் செலவழிக்கின்றனர். விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்து பவர்களுக்கு 2.3 மணி நேரம் போதுமானது. இதனால் தகவல் தொழில் நுட்ப வல்லுநரின் நேரம், அதற்கான பணம் வீணாகிறது.

விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்த, ஹார்ட்வேர் பிரிவில் ஏற்படுத்தப்படும் கூடுதல் மூலதனத்தினை, ஒரு நிறுவனம் ஓராண்டில் பெற்றுவிடலாம் என இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளில் கூடுதல் லாபம் 137% ஆக இருக்கும் எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இறுதிக்குள், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வெளியிட உள்ளது. எனவே, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன், உற்பத்தி ஒப்பந்தம் மேற்கொண்ட கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனங்கள் அனைத்தும், தங்கள் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 8 சிஸ்டத்துடனேயே வெளியிடுவார்கள். அப்படியானால் விண்டோஸ் 7 சிஸ்டம், அதன் பின்னர் கிடைக்காதா என்ற சந்தேகம் பலருக்கு வரலாம்.

விண்டோஸ் 8 வெளியான பின்னரும், இரண்டு ஆண்டுகளுக்கு, விருப்பமுள்ளவர்களுக்கு விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்திட மைக்ரோசாப்ட் அனுமதி அளித்துள்ளது. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் இப்போது 46.1% கம்ப்யூட்டர்களில் இயங்கி வருகிறது.

இது மறைந்து வரும் வேகத்தினைக் கணக்கிட்டால், ஏப்ரல் 2014க்குப் பின்னரும், எக்ஸ்பி 17.6% கம்ப்யூட்டர்களில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7க்கு மாற யோசிக்கிறீர்களா? அல்லது விண்டோஸ் 8 சிஸ்டம் வந்த பின்னர், அதற்கே மாறிக் கொள்ளலாம் என முடிவெடுக்கிறீர்களா?[/size][/size]

[size=1]Read more: http://therinjikko.b...l#ixzz24cQrClQ6[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எப்பொழுதுமே புதுசு கவர்ச்சியாகவே தெரியும். ஆனால் உள்ளே இறங்கிப் பார்த்தால் பல பிரசனைகளையும், கட்டி மேய்ப்பதிலும் நாளுக்கு நாள் அதிக நேரம் செலவிட வேண்டிவரும்.

மைக்ரோசாஃப்டின் குறுகிய காலத்தில் பணத்தையள்ளும் பேராசைக்கு பயனாளர்களை தள்ளி, அடுத்த பதிப்பை வற்புறுத்தி வாங்க வைப்பது அநியாயமாகும். அவர்கள் நினைத்தால் இதே விண்டோஸ் 7 ல் பயன்படுத்த, (விண்டோஸ் 8 ல் தர இருப்பதாகவுள்ள) அனைத்து வசதிகளையும் ஒரு சர்வீஸ் தொகுப்பாக வெளியிட முடியும்...இரண்டு வருடத்கிற்கு ஒருமுறை இயங்குதளம் வெளியிட்டு, முந்தைய பதிப்பு பயனாளர்களை பயமுறுத்தி வற்புறுத்தி காசையள்ளும் முதலாளித்துவம் கண்டிக்கப்பட வேண்டும்.

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்

இது தான் உண்மை. பழையதை(operating system) தொடர்ந்து வைத்திருப்பதற்கோ அல்லது(update) களை செய்வதற்கோ விடாமல் சில(update) களை செய்து அதனை விற்பதற்கு தான் இந்த பணமுதலைகள் முயல்கிறார்கள்.உதவிகள் செய்ய மாட்டோம் என்ற பயமுறுத்தல் வேறு.

ராஜவன்னியன், நுணா நீங்கள் கூறுவது தவறு. கணணி உலகில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் முன்னேற்றமும் அதிக வேகமாக இடம்பெறுகின்றது. 3 வருடங்களுக்கு முன் இருந்த தொழில்நுட்ப சவால்களை விட இப்ப இருக்கும் சவால்கள் மிக அதிகம். இன்னும் 3 வருடங்களில் இன்றைய நிலையை விட இன்னும் தீவிரமாக முன்னேறி இருக்கும். புதிய தொழில்நுட்பங்களின் பலனை அனுபவிக்க விரும்புகின்றவர்கள் மட்டும் தம் பதிப்புகளை தரவேற்றினால் சரி.

XP மிகச் சிறந்த ஒரு OS தான். ஆனால் அதனை பயன்படுத்துபவர்கள் இன்றைய நவீன தொழில்நுட்ப விடயங்களையும் பயன்படுத்த ஆசைப்பட்டால் கண்டிப்பாக OS இனை தரவேற்றத்தான் வேண்டும். மென்பொருள் தொழில்நுட்பங்களும் அசுர வளர்ச்சியினை அடைந்து இருக்கு. தொடர்பாடல் விடயங்களில் cloud போன்ற விடயங்கள் வந்து இன்று அநேகமானவை SAAS (Software as a Service) ஆகிக் கொண்டு இருக்கின்றன. இவற்றை எல்லாம் 2001 இல் அறிமுகமான XP இல் திறம்பட பயன்படுத்த முடியாது. அதன் Core moduleஎ களில் மாற்றங்களை செய்து இப்ப இருக்கும் வசதிகளுக்கு மாற்றவே முடியாது. 2001 இற்கும் 2012 இற்கும் இடையில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து இருக்கு. Windows 7 இல் இப்ப இருக்கும் விடயங்கள் 2015 இற்கு உகந்ததாக அமையாது. Touch screen இற்கான வசதிகள் அதில் மிகக் குறைவு. அத்துடன் Tablet பயன்பாட்டுக்கும் Mobile phone பயன்பாட்டுக்கும் அதை நிறுவி இலகுவாக இயக்க முடியாது. Hardware பக்கம் நடக்கும் அதீத வளர்ச்சியுடன் மென்பொருள் வளர்ச்சியும் சமாந்தரமாக இயங்க வேண்டிய சூழலில் இவற்றை தவர்க்க முடியாது.

சரி, MS இன் OS version மாற்றங்கள் பிடிக்காவிடின், இருக்கவே இருக்கு Open source விடயங்கள். Ubuntu OS அல்லது அது போன்றவற்றையோ அல்லது லினக்ஸ் பக்கமோ போகவேண்டியது தான்.

நிழலி, நீங்கள் ஒரு சில பயன்பாடுகளை(applications) முன்னிறுத்தி அப்படி சொல்கிறீர்கள் என் நினைக்கிறேன். நான் சொல்ல வந்தது, விண்டோஸின் Core வடிவமைப்பும், Modularity யும். எந்த ஒரு இயங்குதளமும் அடிப்படையே முற்றிலும் மாற குறைந்தது பத்து வருடங்களாவது ஆகிறது.

விண்டோஸின் அடிப்படை (Base architecture)யும், அதன் மாடுலாரிடியும் பல வருடங்களுக்கு வருமாறு திட்டமிட்டே வடிவமைக்கபட்டுள்ளது. ஆனால் இந்த Core architecture மேல் அமரும் பயன்பாடுகளை(Applications) புகுத்துவதில்தான் மைக்ரோசாஃப்டின் வியாபார புத்தியும், குயுக்தியும் அடங்கியுள்ளது.

அடிப்படையை நிரந்தரமாக வைத்துக்கொண்டு, அதன் மேல் அமரும் பயன்பாடுகளை கவர்ச்சியாக வண்ணமயமாக்கி மாற்றி மாற்றி செய்து, அவ்வப்போது " பழைய சூப்பின குச்சியை கீழே போடு...!இதோ பாரு... புதுசு...! வா என்கிட்டே..! காசு குடு.. !!" என சிறு குழந்தைகளுக்கு குச்சி மிட்டாயை காண்பித்து ஏமாற்றுவது போல் தான் இதுவும். :lol:

அதையே நாங்கள் கண்டிக்கிறோம்.

Edited by ராஜவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன், நுணா நீங்கள் கூறுவது தவறு. கணணி உலகில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் முன்னேற்றமும் அதிக வேகமாக இடம்பெறுகின்றது. 3 வருடங்களுக்கு முன் இருந்த தொழில்நுட்ப சவால்களை விட இப்ப இருக்கும் சவால்கள் மிக அதிகம். இன்னும் 3 வருடங்களில் இன்றைய நிலையை விட இன்னும் தீவிரமாக முன்னேறி இருக்கும். புதிய தொழில்நுட்பங்களின் பலனை அனுபவிக்க விரும்புகின்றவர்கள் மட்டும் தம் பதிப்புகளை தரவேற்றினால் சரி.

XP மிகச் சிறந்த ஒரு OS தான். ஆனால் அதனை பயன்படுத்துபவர்கள் இன்றைய நவீன தொழில்நுட்ப விடயங்களையும் பயன்படுத்த ஆசைப்பட்டால் கண்டிப்பாக OS இனை தரவேற்றத்தான் வேண்டும். மென்பொருள் தொழில்நுட்பங்களும் அசுர வளர்ச்சியினை அடைந்து இருக்கு. தொடர்பாடல் விடயங்களில் cloud போன்ற விடயங்கள் வந்து இன்று அநேகமானவை SAAS (Software as a Service) ஆகிக் கொண்டு இருக்கின்றன. இவற்றை எல்லாம் 2001 இல் அறிமுகமான XP இல் திறம்பட பயன்படுத்த முடியாது. அதன் Core moduleஎ களில் மாற்றங்களை செய்து இப்ப இருக்கும் வசதிகளுக்கு மாற்றவே முடியாது. 2001 இற்கும் 2012 இற்கும் இடையில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து இருக்கு. Windows 7 இல் இப்ப இருக்கும் விடயங்கள் 2015 இற்கு உகந்ததாக அமையாது. Touch screen இற்கான வசதிகள் அதில் மிகக் குறைவு. அத்துடன் Tablet பயன்பாட்டுக்கும் Mobile phone பயன்பாட்டுக்கும் அதை நிறுவி இலகுவாக இயக்க முடியாது. Hardware பக்கம் நடக்கும் அதீத வளர்ச்சியுடன் மென்பொருள் வளர்ச்சியும் சமாந்தரமாக இயங்க வேண்டிய சூழலில் இவற்றை தவர்க்க முடியாது.

சரி, MS இன் OS version மாற்றங்கள் பிடிக்காவிடின், இருக்கவே இருக்கு Open source விடயங்கள். Ubuntu OS அல்லது அது போன்றவற்றையோ அல்லது லினக்ஸ் பக்கமோ போகவேண்டியது தான்.

நிழலி தொழில் நுட்பம் மாறுகிறது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. தனிப்பட்டவர்களோ அல்லது நிறுவனங்களோ பணத்தை கொட்டி ஒரு OP ஐ வாங்குகிறார்கள்.பயன்படுத்துகிறார்கள்.அடுத்தடுத்த வருடத்தில் மற்ற ஒரு op சில மாற்றங்களுடன். மீண்டும் பணம் கறக்கப்படுகிறது.இன்னும் சில வருடங்களோ அல்லது ஒரு வருடத்திலோ மீண்டும் ஒரு op.மீண்டும் பணம் கறப்பு. அத்தோடு முதலாவதாக வாங்கியவர்களுக்கு இல்லையாம் என்ற பயமுறுத்தல் வேறு.

பில்கேட்சின் monopoly முறியடிக்கப்பட வேண்டும்.இதற்குள் அவர் ஆபிரிக்காவில் மக்களுக்கு உதவுகிறாராம் என்ற மீடியாக்களின் படம் காட்டல் தாங்கமுடியவில்லை.

அடிப்படையை நிரந்தரமாக வைத்துக்கொண்டு, அதன் மேல் அமரும் பயன்பாடுகளை கவர்ச்சியாக வண்ணமயமாக்கி மாற்றி மாற்றி செய்து, அவ்வப்போது " பழைய சூப்பின குச்சியை கீழே போடு...!இதோ பாரு... புதுசு...! வா என்கிட்டே..! காசு குடு.. !!" என சிறு குழந்தைகளுக்கு குச்சி மிட்டாயை காண்பித்து ஏமாற்றுவது போல் தான் இதுவும். :lol:

Windows XP இனதும் Widows 7 இனதும் அடிப்படை முற்றிலும் வேறானவை. இன்று இருக்கும் வன்பொருட்கள் பலவற்றை XP இல் பயன்படுத்த முடியாது. அவற்றுக்கான drivers கூட இல்லை. அத்துடன் MS இன் மேல் அமரும் பயன்பாடுகளில் முக்கால்வாசியும் MS இனால் எழுதப்படுவன அல்ல.

நிழலி தொழில் நுட்பம் மாறுகிறது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. தனிப்பட்டவர்களோ அல்லது நிறுவனங்களோ பணத்தை கொட்டி ஒரு OP ஐ வாங்குகிறார்கள்.பயன்படுத்துகிறார்கள்.அடுத்தடுத்த வருடத்தில் மற்ற ஒரு op சில மாற்றங்களுடன். மீண்டும் பணம் கறக்கப்படுகிறது.இன்னும் சில வருடங்களோ அல்லது ஒரு வருடத்திலோ மீண்டும் ஒரு op.மீண்டும் பணம் கறப்பு.

எந்த புத்திசாலி நிறுவனமும், தனி நபர்களும் OS கள் வெளியானவுடன் ஓடோடிப் போய் வாங்குவதில்லை. தமக்கு அவை பயன்படுமா என்றுதான் முதலில் பார்க்கின்றன. MS Office 2003 மட்டுமே போதுமானதாக இருக்கும் ஒரு நிறுவனத்துக்கு windows 2000 னே போதும். நான் கனடா வந்து முதலில் வேலை செய்த online pharmacy நிறுவனத்தில் இப்பவும் Windows NT தான் OS.

அத்தோடு முதலாவதாக வாங்கியவர்களுக்கு இல்லையாம் என்ற பயமுறுத்தல் வேறு.

இதை தவறாக விளங்கியுள்ளீர்கள் என நினைக்கின்றேன். எந்த வன்பொருள் / மென் பொருள் வந்தாலும் அதனை இயக்க OS இல் மாற்றங்களை கொண்டு வந்து service pack குகளாகவோ அல்லது drivers களாகவோ வெளிவிடுவர். 2001 இல் போதுமானதாக இருந்த XP இல் இப்ப வரும் வன்பொருட்களுக்கானதோ அல்லது மேலான தொழில்நுட்பத்தினை பயன்படுத்தும் மென்பொருட்களையோ இயங்க வைக்க முடியாது. OS இல் மாற்றம் கொண்டு வந்து இயங்க வைக்க முயல்வதை விட புதிதாக ஒன்றை உருவாக்குவது இலகுவானதுடன், இலாபமானதும் ஆகும்.

பில்கேட்சின் monopoly முறியடிக்கப்பட வேண்டும்.இதற்குள் அவர் ஆபிரிக்காவில் மக்களுக்கு உதவுகிறாராம் என்ற மீடியாக்களின் படம் காட்டல் தாங்கமுடியவில்லை.

முக்கியமான விடயம் Microsoft என்பது தொண்டு நிறுவனம் அல்ல. அது ஒரு வியாபார நிறுவனம். அதன் முக்கிய இலக்குகளில் ஒன்று பணம் ஈட்டுவது. அதனை பயன்படுத்தி கோடிக் கணக்கில் பணம் ஈட்டும் பல்லாயிரம் நிறுவனங்கள் இருக்கும் போது, MS வியாபாரத்தினை முக்கிய விடயமாக பார்ப்பதில் எந்த தவறும் இல்லை.

பில்கேட்ஸ் (இன்று அவரல்ல MS இன் CEO. அத்துடன் MS தனிநபருக்கான சொத்தும் அல்ல. பங்குதாரர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனம்) தான தருமம் செய்யாமல் சும்மா சிவனே என்று இருக்கலாம். மக்கள் பணத்தில் கொள்ளை அடித்து மக்களுக்கு எதுவுமே செய்யாத அரசியல்வாதிகள், அரசுகள், அமைப்புகள் என்பனவற்றை விட ஏதாவது செய்து media வில் stunt அடிக்கும் இவர் எவ்வளவோ மேல்

  • கருத்துக்கள உறவுகள்

சரி, விண்டோஸ் எக்ஸ்பி வெளியாகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது...? 2001ல் இறுதியில்.

அதற்கடுத்த பதிப்பான விண்டோஸ் விஸ்டா வந்தது 2007 இறுதியில்.

ஆக ஆறு வருடங்களாக நிலையாக இருந்த இயங்குதளம் மாற்றப்பட்டு நிலையில்லாத, பல்வேறு பிழையுடன் விஸ்டா, அதற்கடுத்து விண்டோஸ் 7... இப்பொழுது விண்டோஸ் 8 என் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும்...மாற்றி பயனர்களை வற்புறுத்தி அலைக்கழிப்பது எந்த விதத்தில் நியாயம்?

இதை பயன்படுத்த வருடாந்திர லைசென்ஸ் தொகை, பராமரிப்புத் தொகை என மக்களை வாட்டி வசூலித்துவிட்டு, உடனே அடுத்த ஷோ...ஆரம்பம்... வாங்க மறுபடியும்...

இது கொடுமை இல்லையா?

நீங்கள் சொல்லும் பயன்பாடுகளை நிச்சயம் ஒரு "சர்வீஸ் தொகுப்பாக" அவர்களால் தரமுடியும்..ஆனால் அவர்களுக்கு மனம் தான் இல்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனாக்காரன் மாதிரி சிம்பிளாய் இருக்கணும்.....விண்டோஸ்8 வந்தாலும் ஓகே.......விண்டோஸ்80 வந்தாலும் ஓகே........எதுக்கும் எவரெடி :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

சீனாக்காரன் மாதிரி சிம்பிளாய் இருக்கணும்.....விண்டோஸ்8 வந்தாலும் ஓகே.......விண்டோஸ்80 வந்தாலும் ஓகே........எதுக்கும் எவரெடி :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

[size=4]நான் நினைக்கிறேன் முக்கியமான ஒரு பகுதியை விட்டுவிட்டீர்கள் என்று. சீனாக்காரன் வெளிவந்த அடுத்த நிமிடத்திலேயே பிரதிகளை அடித்துவிடுவான். ஒரு சில முன்னேற்றங்களை அமெரிக்க நிறுவனங்கள் கண்டாலும், இந்த பிரச்சனை பல நூறு மில்லியன்கள். வேறு நாடுகள் மீது அழுத்தம் தருவது போன்று சீனாவை வெருட்டவும் முடியாது. [/size]

[size=4]பொதுவாக நிறுவனங்கள் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மென்பொருள் தரமுயத்தர்களுக்கு பணம் ஒதுக்குவது உண்டு. ஆனால், ஆம் ஆண்டின் பொருளாதார சரிவின் பின் இதை பல நிறுவனங்கள் பின்போட்டுள்ளன. [/size]

[size=1]

[size=4]காரணம்: இந்த பகுதி அவர்கள் நிறுவனங்களில் பண வருவாயை தருவதில்லை. [/size][/size]

[size=1]

[size=4]இதை நன்றாக புரிந்த ஒரு நிறுவனம் - மைக்ரோசொப்ட். நிறுவனங்களிடம் இருந்து அதி உச்ச வருவாயை பெறக்கூடிய வழிமுறைகளை அது வகுக்கும். [/size][/size]

[size=1]

[size=4]ஐந்து வருடத்திற்கு ஒருமுறை [size=5]OS [/size]இனை மாற்றும்.[/size][/size][size=1]

[size=4]இடையில் [size=5]Office, Exchange .. [/size]என்பனவற்றில் மாற்றங்களை உருவாக்கி விற்கும்[/size][/size][size=1]

[size=4]சேர்த்து கொடுக்கும் கலவையில் [size=5]( package ) [/size]மாற்றங்களை உருவாக்கும் [size=5]no more MS access edit , One Note etc. [/size][/size][/size]

[size=1]

[size=4]நாம் இந்த நிறுவனத்தை வெறுத்தாலும் வேலை பெறுவதற்கு இது முக்கியம். இது கசப்பான உண்மை. [/size][/size]

[size=1]

[size=4]அமெரிக்கா உலகின் வல்லரசாக இருக்கும் வரை அது தனது நிறுவனங்களை பாதுகாக்கும், பலப்படுத்தும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆரோக்கியமான விவாதம் நடக்கது இங்கே.

எனக்கு எனது தொழில் சார்ந்து பலத்த செலவும் நேர விரயமும் இதனால்.

ஒரு தொகுதியிலிருந்து இன்னொரு தொகுதிக்கு மாறும்போது பல கணணிகளை இணைத்து வேலை செய்யும் நிறுவனங்கள் அது சம்பந்தமான பல இணைத்தொகுதிகளையும் மாற்றவேண்டியுள்ளது.

உதாரணமாக reseau.

அத்துடன் அவற்றிற்கும் பணத்தையும் நேரத்தையும் செலவளிக்கவேண்டியுள்ளது. அத்துடன் புதிதாக அறிமுகமாகும்போது விலையும் மிகவும் அதிகமாக உள்ளது.

எனது கேள்வி என்னவென்றால் பழைய பிரதியை வைத்திருப்போருக்காவது புதிய பிரதியை இனாமாக அல்லது குறைந்தவிலையில் தரலாம் தானே???அதிலும் கொள்ளை லாபமடிப்பது ஏகபிரதிநிதித்துவ ஆட்டம் தானே?

அதிலும் VESTA வை வாங்கி அல்லல்படுவோருக்கும் அல்லது W -7யை வாங்கி 2 வருடத்துக்குள் W - 8யை வாங்கு என்பது அடாவடித்தனமானது. :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு பொருளை விலை கொடுத்து வாங்கினாலும் அதை உச்ச அளவு பயன்படுத்தும் உரிமை வாங்கியவருக்கு உண்டு.

(உதாரணமாக ஒரு காரை வாங்கினால் 50 வருடங்கள் கூட அதைப்பாவிப்பவர்கள் உண்டு. அதற்கான உதிரிப்பாகங்கள் என்றும் கிடைக்கின்றன)

அதை நிறுத்தம் படி கூறும் உரிமை விற்றவருக்கு கிடையாது. அப்படியாயின் விற்கும்போதே அவர் அதை அறியத்தந்திருக்கவேண்டும். அல்லது நிறுத்தும்படி சொல்லும் விறபனையாளர் அதற்கான மாற்றீடை இனாமாக கொடுக்கவேண்டும்.

ஆனால் கணணியைப்பொறுத்தவரையே இவை மீறப்படுகின்றன. காரணம் அவர்களே உலகத்தின் எயமானர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.