Jump to content

இனிம குழப்படி செய்வியா...பளார்.. சளார்.. சடீர்..


Recommended Posts

பதியப்பட்டது

இனிம குழப்படி செய்வியா...பளார்.. சளார்.. சடீர்..

சின்ன வயசில கட்டாயம் எல்லாரும் குழப்படி செய்திருப்பம்.செய்த ஒவ்வொரு குழப்படிக்கும் முறையா வாங்கிக் கட்டியிருப்பம்.அடி வாங்கி அழுதழுது கண்ணு மூக்கெல்லாம் சிவந்து சாப்பிடாமலெல்லாம் நித்திரையாயிருப்பம் பிறகு அன்றைக்கு இரவு அடி விழுற மாதிரி கனவு கண்டு திரும்ப விக்கி விக்கி அழுது போட்டு படுத்திருப்பம்.அடுத்தடுத்த நாள் நடந்த மண்டகப்படியெல்லாம் மறந்து அம்மாவாவோடய அப்பாவோடய செல்லம் கொஞ்சியிருப்பம்.இதெல்லாம் ஒரு பத்து பதினொரு வயசு வரைக்கும் தான் பிறகு அடியெல்லாம் விழாது.இதையெல்லாம் நினைச்சுப் பார்க்கிற சந்தர்ப்பம் இன்று எனக்கு வாய்த்தது.அதால நான் என்னென்ன குழப்படி செய்து எப்பிடியெல்லாம் அடி வாங்கினான் என்று சொல்றன் நீங்களும் சொல்லோணும் என்ன.

untitled8zr1.jpg

அப்ப எனக்கொரு மூன்று வயசிருக்கும்.அம்மாவும் அப்பாவும் வீட்ட இல்லை நானும் அக்காவும் அம்ம்மா வீட்டதான் நின்டனாங்கள்.அம்மாவும் அப்பாவும் வீட்ட வந்திட்டினம் அம்மம்மா சாய்மனைக் கட்டில்ல தடியோட இருக்க நானும் அக்காவும் ஹ_ட்வாசல்ல முழசிக் கொண்டிருக்கிறம்.அம்மா வந்ததுதான் தாமதம் அம்மம்மா போட்டுக்குடுக்கத் தொடங்கிட்டா.

அம்மம்மா: பிள்ளை இஞ்ச வந்து பார் உன்ர பெட்டையள் இரண்டும் என்ன செய்திருக்குதுகள் என்று.

அம்மா: என்ன இண்டைக்கு ஆற்ற ஆட்டுக்குட்டிக்கு பல்லு மினுக்கினதுகள்?

அம்மம்மா: அதில்லை இன்டைக்கு இரண்டும் சம்பல் இடிச்சு வைச்சிருக்குதுகள்.என்ன சம்பல் தெரியுமே? புவுண் சம்பல்.

அம்மா: என்னம்மா? புவுண் சம்பலோ?

அம்மம்மா: அக்காவும் தங்கச்சியும் சேர்ந்து காப்பு சிமிக்கி எல்லாத்தையும் கழட்டி உரலுக்கை போட்டு இடிச்சு வைச்சிருக்குதுகள்.;.

உரலுக்கு நசிஞ்சு போய்க் கிடந்த எல்லாத்தையும் அம்மம்மா எடுத்துக் கொண்டு வந்து காட்டினா அவ்வளவும் தான் தெரியும் அடுத்த நிமிசம் புக்கத்தில நின்ற செவ்வரத்தையை முறிச்சு இரண்டு பேருக்கும் நல்ல வெளுவை.

அடுத்த திருவிழா ஒரு புpறந்த நாள் விழாக்குப் போட்டு வந்த இரவு நடந்தது.வீட்டுக்குள்ள வரும்வரைக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை.அப்பா நல்லாத்தான் கதைச்சுக் கொண்டு வந்தவர்.வீட்டுக்குள்ள வந்த உடன கதிரைல தூக்கி இருத்தினார்.இருத்திப்போட்டு பிரம்பு எடுத்துக்கொண்டு வந்தார்.

அப்பா:இரண்டு பேரும் கையை நீட்டுங்கோ.

நானும் அக்காவும் : ஏனப்பா நாங்கள் ஒரு குழப்படியும் செய்யேல்லயே.

அப்பா: கைய நீட்டைச் சொன்னான்.

இரண்டு பேருக்கும் மூன்று மூன்றடி.

அப்பா: எத்தினாள் சொன்னான் உடைஞ்ச பலூனை வைச்சு விளையாட வேண்டாம்.முட்டை விட வேண்டாம் என்று.பிரவீனாக்கு பலூன் துண்டு தொண்டைல ஒட்டி என்ன நடந்தது என்று தெரியும் தானே.இனிம பலுனைக் கண்டாலே இந்த அடிதான் ஞாபகம் வரோணும்.

ஒரு நாள் நாங்கள் பக்கத்து வீட்டு பிள்ளையள் எல்லாரும் சேர்ந்து உக்கிப் போன மண்ணெண்ணை பரலுக்கு மேல உருண்டு விளையாடினாங்கள்.பரலில படுத்துக்கொண்டு காலால உருட்டினா இது உருளும்.எத்தின பேர் இந்த விளையாட்டு விட்டிருப்பியள்.அதில கிடந்த ஒரு உக்கின இரும்புத் துண்டு அக்காக்கு குத்தி இரத்தம் வந்திட்டுது.டாக்குத்தர் மாமாட்ட போய் மரு;ந்தெல்லாம் போட்டிட்டு வந்திட்டு இரண்டு பேருக்கும் விளாசல்; தான்.

பிறகொருநாள் அக்கா நெல்லி மரத்தில ஏறி நின்டுகொண்டு நெல்லிக்காய் ஆய்ஞ்சு போட போட நான் கீழ நின்று பொறுக்கிக் கொண்டு நிண்டனான்.அக்கா ஒருநாள் நான் அங்கர் மா களவெடுத்து சாப்பிட்டத அம்மாட்ட கோள்மூட்டிட்டா அந்தக் கோவத்தில சும்மா அவாவை வெருட்டுறதுக்காக அக்கா நீ நிக்கிற கொப்புக்குப் பின்னால கோடாலிப் பாம்பு நிக்குது என்று ஒரு பொய்யைச் சொன்னன்.அவா பயத்தில பலன்ஸ் இல்லாம தொபுக்கடீர் என்று விழுந்திட்டா.பெரிய உயரம் இல்லை நெல்லி மரம் ஆனால் விழுந்த இடத்தில இருந்த கல்லு உள்ளங்கையில குத்திட்டுது அவாக்கு.அன்டைக்கும் எனக்கு புூசைதான்.

இன்னொருநாள் உப்பிடித்தான் கோயில் திருவிழா நெரிசல்ல "அம்மா அப்பான்ர சைக்கிள் டைனமோவைக் களவெடுத்தது இந்த மாமா தான " என்று நான் கத்திட்டன்.அவருக்கு ஒரு மாதிரிப் போட்டுது.அம்மாக்கு

ஏன்தான் என்னை கோயிலுக்குக் கூட்டிக் கொண்டுவந்தம் என்று ஆயிடுச்சு. என்னைக்.கோயிலுக்குள்ள கூட்டிக்கொண்டே போய் இறுக்கி நுள்ளி விட்டா.

இன்னும் நிறைய சளார் பளார் சடீர் எல்லாம் இருக்கு.ஆனால் இனிம நீங்கள் சொல்றதைக் கேப்பம்..நான் நிப்பாட்டுறன் நீங்கள் உங்கட வண்டவாளங்களை தண்டவாளம் ஏத்துங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓ பிளாஸ்பாக்கா!! நல்லாத்தான் இருக்கின்றது.

உந்த ஆட்டுக்குட்டிக்கு பல்லு மினுக்கின்ற கதை இருக்கட்டும். நீங்கள் எப்பவாவது உங்களுக்கு மினுக்கி இருக்கின்றீர்களா? :wink: :P

Posted

சீ சீ அம்மாதான் பல்லையும் மினுக்கி கன்னத்தையும் மினுக்கி விடுறவா..உங்கட வீட்டில எப்பிடியண்ணா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்பவும் அம்மாவா!! :shock: :shock: :shock:

Posted

இல்ல ஆட்டுக்குட்டி :-)

Posted

ஏன் சில பேருக்கு வளந்தாப்பிறகும் அடி விழுந்தமாதிரி முந்தி யாரோ எழுதினமாதிரி எனக்கு நாபகம்.இங்க என்னடா எண்டா சின்ன வயசில தான் அடி விழுந்தமாதிரிச் சொல்லிக் கிடக்கு..ம்ம்ம் ஒண்டுமா விளங்கேல்ல?அப்பாட்டைக் கேட்டாத்தான் உண்மை தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

:):D சினேகிதி நல்லாத்தான் வேண்டிக்கட்டி இருக்கிறீர்கள். நானும் சிறு வயதில் இடம்பெற்ற ஒரு சந்தர்ப்பத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

சிறுவயதில் பாடசாலை தண்ணிதொட்டியில் ஏறி விளையாடினேன். தண்ணியில்லாத தொட்டிலில் விழுந்து நெத்தியில் காயம். நான் அழவில்லை தையல் போடும் போது கூட. ஆனால் அப்பா வந்ததும் முறைத்துப்பார்த்தார். உடனே அழ அரம்பித்துவிட்டேன். அப்போது டொக்டர் சொன்னாரு. இப்ப இவர் விக்கி விக்கி அழுதால் கட்டு இழகிவிடும். மாறியபின்னர் தழும்பு பெரிதாக தெரியும் மறைவதற்கு நீண்ட நாட்கள் எடுக்கும் என்று. ஆனால் நம்ம அப்பா வீட்டை போகும் வரை.. போன பிறகும் என்னை திட்ட தவறவில்லை. எதிர் காலத்தில் ஒரு வேலைக்கு இன்டவியூக்கு போகும் போது இந்த காயத்தை பார்த்து உனக்கு வேலை கிடைக்காது என்று பேசினார். சொன்னதில் உண்மை இருக்கிறது. ஆனால் சொல்லி திட்டுவதற்கான நேரம் அதில்லை என்பதும் எனது கருத்து. நாள் முழுவதும் அழுது காயம் பிரிந்து தழும்பி பெரிதாகி இன்னும் முகத்தில் இருந்து மாறவில்லை.

பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிக்கவேண்டும். பின்னார் அப்பா அம்மா கண்டித்த நிகழ்வுகளை ஒரு சுகமான நினைவாக எடுக்ககூடியதாக அவர்கள் பிறகு பாசத்தை காட்டுதல் சிறந்தது என்று நினைக்கிறேன். :roll:

Posted

இங்க இன்னொரு முக்கியமான விசயத்தையும் சொல்ல வேணும். நான் புலத்தில் கற்ற இன்னொரு முக்கியமான விசயம்.புலத்தில் பெற்றோராக இருப்போர் ,ஆக இருப்போர் ஏன் ஊரிலும் தெரிச்சு கொள்ள வேண்டிய விடயம்.அதாவது எப்படி பிள்ளயளுக்கு அடிக்காம அவர்களது பிழைகளை உணரவைப்பது புத்திமதி சொல்லுறது எண்டு.

அடிப்பது என்பது பிள்ளைகளுடன் தொடர்பாட முடியாமையின் அவர்களைக் கட்டுப் படுத்துவதன் ஆற்றாமையின் வெளிப்பாடு தான்.புலத்தில் மேற்கத்தியர் குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொண்டு எவ்வாறு அவர்களைக் கட்டுப் படுத்துகின்றனர் என்று நாம் கற்க வேண்டும்.

அடிப்பதென்பது மனதில் ஆற்றாத பாதிப்பை ஏற்படுத்தும். நாம் குழந்தைகளுக்கு விளங்கும் வண்ணம் அவர்களுடன் கதைக்க வேணும். நல்ல விடயங்களைச் செய்யும் போது அவர்களுக்கு ஊக்கமும், பரிசுகளும் வழங்க வேண்டும்.கூடாத விடயத்தைச் செய்யும் போது அவர்கள் மிகவும் விரும்பும் ஒன்றை அகற்றி விடவேண்டும்.அதாவது இண்டைக்கு விளாயட ஏலாது பேசாமப் போய் ஒரு இடத்தை இருக்க வேணும் அல்லாட்டி இண்டைக்கு டிவி பாக்கேலாது என்று சொல்ல வேண்டும்.

இவ்வாறு செய்வதால் அவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.குழந்தைகளுக்கு

Posted

நாரதர் அண்ணா அப்பிடி எழுதினதுக்குத்தான் வளர்ந்த பிள்ளைய அடிப்பினமா என்று கேட்டார் ஒரண்ணா அதான் இப்பிடி எழுதினான்.அப்பாட்டதானே கேளுங்க கேளுங்க:-)

Posted

விஸ்ணு அண்ணா நீங்களும் தொட்டில ஏறி நின்று விழுந்தீங்களோ..ஹா ஹா.நானும் தொட்டி விழும்பில ஏறி நின்று விழுந்து இன்னமும் இடது புருவ மத்தியில வெற்றிடம் தானிருக்கு.அதுக்கு அடியெல்லாம் விழேல்லயாம் அம்மாதான் ஒரே அழுகையாம் கண்ணுக்கு ஏதாவது நடந்துடுமோ என்று.நித்திரை கொள்ள தையல் பிரிஞ்சு திரும்பப் போட்டதாம்.இருந்தாலும் உங்கட அப்பா கொஞ்சம் மோசம் தான்.

Posted

நாரதர் அண்ணா நீங்கள் சொல்வது மிகச்சரி.உங்கட பிள்ளைக்கு நீங்கள் அடிக்கிறேல்லதானே? றிவாட் ரெயினிங் என்று சைல்ட் சைக்கோலஜில ஒரு பகுதியிருக்கு.ஆறுதலா எழுதுவம்.

Posted

1.ஆட்டுக்குட்டிக்கு பல்லு மினுக்கினதுகள்

2.உக்கிப் போன மண்ணெண்ணை பரலுக்கு மேல உருண்டு விளையாடினாங்கள்

3.நான் அங்கர் மா களவெடுத்து சாப்பிட்டத

À¢û¨Ç ¯í¸¨¼ «õÁ¡ «ôÀ¡ °Ã¢¨Ä þÕó¾ ´Õ측 ¦º¡øÖí§¸¡. .ºó¾¢ì¸ §ÅñÊ¢ÕìÌ (±ôÀ¢ÊÂôÀ¡ þôÀ¢Ê ´Õ Å¡¨Ä ¦ÀòÐ ÅÇò¾¢Âû ±ñÎ §¸ì¸ò¾¡ý)

Posted

:):D:D:D:D

ம்ம் ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே...அடி வாங்கிய ஞாபகம் வருதே.. :P

அங்கர் மா எடுத்தால் அடியா? நானும் நெஸ்ரமோல்ற்ற்க்கும்..புளிக்க

Posted

வணக்கம் முகத்தார்..நலமா? திருகோணமலையிலா நிக்கிறீங்கள் இப்போ? நாரதர் அண்ணா முகம்ஸ் வேற யாரெல்லாம் வீட்ட வரப்போறீங்கள்?கெரியாச் சொல்லிடுங்க ரிக்கற் அனுப்புறன்.

Posted

சகி சகி..வாசிச்சு வாசிச்சு சிரிக்கிறன்.நெஸ்ரமோல்ற்ற்இ..

Posted

அட கடவுளே இப்படி எல்லாம் அடி வாங்கி இருக்கிறியளா? :cry: :cry: :cry:

வாசிக்கும் போது சிரிப்பாக இருக்கு. :P :P

அப்பா அம்மாவிடம் அடி வாங்கியதாக நினைவில்லை. ஆனால் வாத்திமாரிடம் குட்டும் அடியும் வாங்கிய நினைவுகள் ஏராளம். :evil: :cry:

"வகுப்பில் பரீட்சை வைத்து திருத்தி மார்க்ஸ் தந்த நேரம் அவர் எதிர்பார்த்த புள்ளி யாருமே எடுக்கவில்லை என்பதற்காக ஒரு பெடியனை திட்டினார் வெங்காயம் என்று. அப்போ நான் லொள்ளாக கேட்டேன். சேர் வெங்காயம் அந்த பெடியன் போல ஜீன்ஸ் அண்ட் சேர்ட் போட்டிருக்குமா? அப்படியாயின் நீங்களும் வெங்காயமா? :lol: அட சே அந்த வாத்தி எழும்படி உனக்கு ரொம்ப தான் நக்கல் கூடிட்டு எடுத்த மார்க்ஸ் க்குள் அவாக்கு என்னோடை லொள்ளு என்று 4 அடி. :cry: :cry: :cry: இப்பவும் அந்த வாத்தியை கண்டால் பயம் வாறதில்லை. வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் வருவது போல தான். அழுகை தான் வரும். என்னமோ தெரியா அந்த வாத்தியின் பாடத்தில் சித்தியடைந்து விட்டேன். :P :P

Posted

ஹா ஹா நிலா உங்களுக்கு ரொம்பத்தான் லொள்ளு.அந்த வாத்தி உங்கட லொஜிக் வாத்தியா?

Posted

ஹா ஹா நிலா உங்களுக்கு ரொம்பத்தான் லொள்ளு.அந்த வாத்தி உங்கட லொஜிக் வாத்தியா?

லொஜிக் வாத்தி என்றால் வெங்காயம் பற்றி அதாவது அவன் வெங்காயம் எனில் தானும் வெங்காயமா என ஒருகணம் சிந்திச்சிருப்பார் எல்லோ. ஆனால் இது கணித வாத்தி :cry:

Posted

ஆமா..நீங்கள் லொஜிக்காத்தான் கதைக்கிறீங்கள்.

Posted

ஆமா..நீங்கள் லொஜிக்காத்தான் கதைக்கிறீங்கள்.

அட பாவமே. நான் சாதாரணமாக கதைப்பது லொஜொக் போல தெரியுதா? விட்டால் நீங்களும் குட்டுவியள் போல இருக்கு :cry: நான் லொஜிக் பாடம் படிக்கவே இல்லை. ஆளை விடுங்கோ

Posted

நிலா சொட்டுறதுக்கு யாழ்ல யாருமில்லையென்றுதான் அப்படி சொன்னேன் குட்ட எல்லாம் மாட்டன். :oops: :oops:

Posted

வீட்டைச் சுத்தி ஓடிறதுதான் நாங்களும் ஆனால் பிடிபட்டா அவ்வளவும் தான்.விட்டுத்துரத்தேக்க அம்மா ஏறமாட்டாதானே என்று எப்பவாவது மதில்ல ஏறி நின்றிருக்கிறீங்களோ சகி

ம் வாலில்லாக் குறை தான்...... :lol:

Posted

அடிப்பது என்பது பிள்ளைகளுடன் தொடர்பாட முடியாமையின் அவர்களைக் கட்டுப் படுத்துவதன் ஆற்றாமையின் வெளிப்பாடு தான்.புலத்தில் மேற்கத்தியர் குழந்தைகளின் உளவியலைப் புரிந்து கொண்டு எவ்வாறு அவர்களைக் கட்டுப் படுத்துகின்றனர் என்று நாம் கற்க வேண்டும்.

அடிப்பதென்பது மனதில் ஆற்றாத பாதிப்பை ஏற்படுத்தும். நாம் குழந்தைகளுக்கு விளங்கும் வண்ணம் அவர்களுடன் கதைக்க வேணும். நல்ல விடயங்களைச் செய்யும் போது அவர்களுக்கு ஊக்கமும், பரிசுகளும் வழங்க வேண்டும்.கூடாத விடயத்தைச் செய்யும் போது அவர்கள் மிகவும் விரும்பும் ஒன்றை அகற்றி விடவேண்டும்.அதாவது இண்டைக்கு விளாயட ஏலாது பேசாமப் போய் ஒரு இடத்தை இருக்க வேணும் அல்லாட்டி இண்டைக்கு டிவி பாக்கேலாது என்று சொல்ல வேண்டும்

இன்று ரொரன்ரோவில் வெளிவந்த தமிழ்ப் பத்திரிகையில் ரொரன்ரோ சுகாதாரச் சேவையினரால் வழங்கப்பட்டிருந்த விளம்பரம் பின்வருமாறு அமைந்திருந்தது.

'பிள்ளைக்குத் தட்டுதல் அல்லது அறைதல் நீங்கள் நினைப்பதைவிட அதிக ஊறுவிளைவிக்கும்.

பிள்ளைகளைப் பேணி வளர்ப்பது எளிதான பணி அல்ல. ஆனால் பிள்ளைக்கு ஊறு விளையா வண்ணம் அதனை நீங்கள் பேணி வளர்க்க வேண்டும். பிள்ளையை ஒழுக்காற்றி வளர்ப்பது பற்றிய மேலதிக விபரங்களிற்கு சுகாதாரச் சேவையை அழைக்கவும்.'

இவ்வாறு அவ்விளம்பரம் அமைந்திருந்தது.

Posted

நாரதர் மூதாதையார் தானே..இப்போ நம்ம அம்மம்மா போல இருக்கோம்..அப்பப்பா போல இருக்கோம் எண்டு சொல்லி பெருமை படுவதில்லையா.அது போல இப்படியான சந்தர்ப்பத்தில..மூதாதையார் போல இருப்பதில் தப்பில்லையே..இப்ப செய்தால் தான் அசிங்கம்..அப்போது இருக்காது தானே..இல்லையா சினேகிதி? :P :wink:

Posted

நான் மதிலில் ஏறியதில்லை..ஏன் என்றால் மதில் அவ்ளோ உயரமில்லை..எப்பிடியும் காலில் அடி விழும் தானே சினேகிதி? :cry: ஓடுவதே சகிக்கு மேல்! :arrow:

நிலா சொட்டுறதுக்கு யாழ்ல யாருமில்லையென்றுதான் அப்படி சொன்னேன் குட்ட எல்லாம் மாட்டன். :oops: :oops:

ம்ம்..நானும் உடனே இந்த அடிக்குற வாத்தியார்களை நினைத்தேன்..சிலர் அடிக்கிறதை ஒரு தனி இன்றெஸ்ற் எடுத்து செய்வார்கள் இல்லையா??? :twisted:

நிலா வாத்தியாரை நக்கல் அடித்து அடி வாங்கி இருக்கிறார். எனக்கு அவ்ளோ துணிவில்லை. ஆனால்..எங்க ஊரில ஒரு வாத்தி இருக்கார். ஸ்கொலசிப்புக்கு படிப்பிப்பார்..அவரட்ட அடி வாங்காமல்..படித்து முடித்தால்..அதுக்கு அவார்டே குடுப்பார்கள்..அப்பிடி ஒரு வாத்தி. டென்சன் பார்ட்டி. எல்லாத்துக்கும் அடிப்பார். சில வேளை வீட்ட துரத்தி விட்டு..அம்மாவை அல்லது அப்பாவை கூட்டி வர வைப்பார். அப்போ அடி டபுள்..வீட்டயும் விழுமெல்லோ...ஆனால் அவர் நல்லா படிப்பிப்பார். எல்லாரும் பாஸ் பண்ணுவாங்கள். அதனால வீட்டில அடிப்பார் எண்டு தெரிஞ்சும் கொண்டு போய் விடுவார்கள் :cry:

அப்பிடி நானும் போனேன்..எங்க வீட்டில அக்காவும் அண்ணாவும் அவரட்ட அடி வாங்கல..என்னையும் வாங்க கூடாது எண்டு சொல்லி சொல்லி அம்மா விட்டாங்க. நானும் முடிஞ்சவரை படிச்சேன்..ஆனால் என் கெட்ட நேரம்..என்னோட படிக்கிற பெடியன் அவன் நல்ல பெடியன்..ஓட்ட போட்டி வைச்சதாய் சொன்னேனே அவன்..அவன் ஒரு பிழையும் செய்யல..அவர் வீட்டு கொதில வந்து..அவன் கொம்பாசை வைச்சு சத்தம் போட்டதாக..சொல்லி பேசினார்..அவனும் இல்லை இல்லை எண்ட..வீட்ட துரத்தினார்..எனக்கு ஒரே பாவமா இருந்திச்சு..நான் பின்ன.அவன் சத்தம் போடல எண்டு..அவனுக்காக கதைக்க போக..அவனை துரத்திட்டு..எனக்கு அடி. :cry:

அதுதான் வாங்கிட்டேன்..வீட்டில..வேற பேச்சு.

இப்படி வாத்தியார்கள் நிறைய அநியாயம் செய்தார்கள்.இப்பவும் செய்கிறார்கள்..தங்கட கோவம் எல்லாம் எங்க மேல காட்டிவார்கள்..எனக்கு சுத்தமாக பிடிக்காது..அருவி போட்ட நியூஸ் போல..நம்ம ஊரிலலாம் வந்திருந்தா..இவ்ளோ அடி விழுந்திருக்காது இல்லையா. :cry: :cry:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.