Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் 25 தமிழ்ச் சிறுவர்களை பௌத்த துறவிகளாக்கும் புனிதச

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மகாபோதி விகாரை மத்திய நிலையத்தில் கடந்த 3 ஆம் திகதி சென்னை மகாபோதி சங்கத்தின் தலைவராகிய பானகல உபதிஸ்ஸ நாஹிமி அவர்களின் தலைமையிலும் வழிநடத்தலிலும் 25 தமிழ்ச் சிறுவர்களை பௌத்த துறவிகளாக்கும் புனிதச் சடங்குகள் மகாபோதி மத்திய நிலையத்தில் நடாத்தப்பட்டன.

Full News: http://www.thinakkural.com/news/2006/5/6/s...ws_page1912.htm

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த மதத்தில் தப்பில்லை. இலங்கையில் அதைப் பின்பற்றுபவர்கள் தானே தப்பாக இருக்கின்றார்கள். திருமாவளவன் கூட பௌத்ததில் இணைந்திருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

சீழ்த்தலைச் சாத்தனாருக்குப் பிறகு ஆண்டாண்டு காலமாகச் சிங்களவருக்குச் சொந்தமாக இருந்த பௌத்தம் மீண்டும் தமிழனிடம் பறிபோகப் போகிறது. இப்படியே போனால் இலங்கையின் கௌத்த பீடங்களைச் சென்னைக்கு இடம் மாற்றவேண்டி வந்தாலும் வரலாம். இலங்கைப் பௌத்தர்களே ஜாக்கிரதை.

திருமாவளவன் போன்றோரின் இது போன்ற செயல்கள் வடிகட்டிய முட்டாள்த்தனம்!! சிலவேளைகளில் இந்த அரசியல்வாதிகள் என்னத்தை செய்வதென்று தெரியாமல் செய்கிறார்கள். ஏதோ நாமும் ஏதோ செய்கிறோம்/செய்து கொண்டிருக்கிறோம் என்று காண்பிப்பதற்காக என்னென்ன கூத்துக்கள் ஆட முடியுமோ, அதெல்லாம் ஆடுகிறார்கள்!

இந்து மதம் மூடநம்பிக்கைகளால் நிரம்பியிருப்பதாயின், அதற்கெதிராகப் போராடுவோம்! இந்துமதம் சாதிய வெறியர்களின் பிடியில் சிக்கியிருந்தால் அதற்கெதிராகப் போராடுவோம். அதை விடுத்து முட்டாள்த்தனமான முடிபுகள்!!

நாளை தாய், தந்தை, குடும்பம், சூழல், நாடு பிழை விடப்போகிறதென்றால் அவற்றையும் விட்டு ஓடப் போகிறாறார்களா????

இல்லை, இந்த தலித் மக்கள் பவுத்ததில் இணைந்தவுடனோ, பின்போ அவர்கள் எதிர்நோக்கும் பிரட்சனைகள் தீரப் போகின்றதோ????

இந்த அரசியல்வாதிகல் விபச்சாரிகள்!! தமது சுயநலன்களுக்காக எதையும் விற்பவர்கள்!!

ஆளுக்கொரு சாதீயக்கட்சி!! இவர்கள் இருக்கும் வரை சாதீயம் ஒழியவும் மாட்டாது!! ஒழிக்கவும் இவர்கள் போன்றோர் விடவும் போறதில்லை!!!

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் இருக்கிற வீடு சரியில்லையெண்டு வீட்டை கொழுத்திற மாதிரியிருக்கு இவையளின்ரை செய்கை ஈழத்திலையும் எண்பதுகளிற்கு முன்னர் குறிப்பிட்ட பிரிவினர் கோயிலுக்குள்ளை போக ஏலாது என்று எழுதபடாத சட்டம் இருந்தது அதற்காக அன்று எமது இளையவர்கள் நடாத்திய போராட்டங்களால் இன்று அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.அப்படி எதிர்த்து போராடாமல் மதம் மாறுவதால் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை இதனை கூட எதிர்க்க முடியாத ஒருவருக்கு ஒரு கட்சியையோ அவரை நம்பும் மக்களையொ எப்பிடி வழி நடாத்த போறார்??? தெரியலை ஆனால் நான் இந்த கருத்தை எழுதினதற்காக திருமாள் வழவனின் ஈழ ஆதரவு நிலையை இதற்குள் போட்டு தயவு செய்து குழப்பவேண்டாம் யாரும்

சாத்திரி நீங்கள் சொன்னது மிக சரி. போராட துணிவற்றவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்

பௌத்தம் ஒரு மார்க்கம்தானே...! தீட்ச்சை கேட்டு மதம்மாற வேண்டியதில்லை... அந்த மார்க்கத்தை தொடந்து கொண்டே சைவத்தில் இருக்கலாம்.... வீரசைவர்களான சோழப்பேரரசர்களே நாகபட்டினத்தில் மணிமண்டபம்கட்டி பௌத்ததை வளர்த்ததாக வரலாறு சொல்கிறது....!

பௌத்ததில் இருக்கும் நல்லவிடயங்கள் வெளியில் வந்து இனவாதம், மதவாதம் பேசும் பேசும் நல்லவர்களுக்கு செருப்படி கொடுப்பதாக அமைந்தால் நல்லதுதான்.....

தெரியலை ஆனால் நான் இந்த கருத்தை எழுதினதற்காக  திருமாள் வழவனின் ஈழ ஆதரவு நிலையை இதற்குள் போட்டு  தயவு செய்து குழப்பவேண்டாம் யாரும்

நீங்கள் சொல்வது ஒருவகையில் சரிதான்..... சாதியம் கொல்லப்படவேண்டுமான முதலில் சாதிப்பெயரில் இருக்கும் கட்ச்சிகள் சாகவேண்டும்.... அவர்களுக்கான பெயர்களை மாற்றி எல்லாமக்களுக்குமான கட்ச்சிகளாய் ஆக்கி நல்ல உள்ளம் கொண்ட அனைத்து மக்களையும் இணைத்து போராடவேண்டும்.....

அதற்கும் முதல் அரசாங்கத்தை ஒழுங்காக்கவேண்டும்.... அதோடு எல்லாமக்களுக்கும் கல்வியறிவை கொடுக்கவேண்டும்....!

திருமாவளவனை நொந்து பிர௯யோசனமில்லை, சாதியினால், மதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் தெரியும் அதன் வேதனை, தனது மலத்தையே தானே உண்ண பணிக்கப்பட்ட ஒருவனின் மனநிலை அவனது இடத்தில் இருந்து பார்பவனுக்குதான் தெரியும், அவ்வளவு சாதி தடிதேறி இருக்கிறது தமிழ்நாட்டில். பாதிக்கப்பட்டவனின் உச்சக்கட்ட எதிர்ப்பு மதமாற்றம். இந்த சாதி வெறியர்மீது, எம்நாட்டு பச்சைமட்டை அடியை பரிசோதித்துபார்க்கலாம். :wink:

மதங்கள் மாறுவதுனால் பிரச்சனை தீரப்போவதில்லை... எதிர்த்து போராடுவதனால் தீர்க்க

முடியும்

உப்பிடித்தான் சிறிமாவின்ரை அரசாங்கத்திலை.... வடமராட்ச்சி...நெல்லியடியில் இராஜ கிராமம் என்ற இடத்திலை.கொஞ்ச.தமிழ் மக்களை பெளத்தத்துக்கு மாத்தி....அங்கை ஓரு சிங்கள பள்ளி கூடமும்.. உருவாக்கி..ஒரு ஆலமரமும் நட்டு.. அங்கு ஒரு பனசிலை...அங்க மஞ்சள் சீலையோடை.. ஒரு பெளத்த பிக்கும் நிரந்தரமாக தங்கி....பெளத்தத்தையும்...சிங்க

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெளத்த பிக்கும் நிரந்தரமாக தங்கி....பெளத்தத்தையும்...சிங்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.