Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

90:10 என்றொரு அடிப்படைக் கொள்கை

Featured Replies

90:10 என்றொரு அடிப்படைக் கொள்கை

90:10 என்றொரு அடிப்படைக் கொள்கைஇருக்காமே?உங்கள் எல்லாருக்குமே அது தெரியுமோ? சத்தியமா எனக்கு

இதுவரைக்கும் தெரியாது. அம்மா சொல்றவா நான் ஒரு அவசரக் குடுக்கையாம்.என்ன செய்யிறதெண்டாலும் எடுத்தேன் கவுத்தேன் என்று செய்து போட்டு பிறகு இருந்து

யோசிக்கிறனாம். பதறாத காரியம் சிதறாதாம் என்று சொல்றவா தான் நான் கேட்டால் தானே.அப்பா ஒரு கதை சொன்னா நான் பத்துக் கதை சொல்லுவன் பிறகு வாய்க்கு வாய் காட்டதா என்று அப்பா பளார் என்று ஒன்று போட்டாப் பிறகு மூஞ்சையைத் துÖக்கி வைச்சுச்கொண்டு கொஞ்ச நேரம் திரிவன்.

சும்மா மாடு சொன்னா கேக்காட்டாலும் மணி கட்டின மாடு சொன்னாக் கேக்கேணும் தானே. ஒரு மணி கட்டின மாடு 90:10 கொள்கை பற்றி எனக்கு சொல்லிச்சுது அதான் நான் உங்கள் எல்லாருக்கும் மாட்டுப் பாசை விளங்காதெண்டு மனித பாசையில சொல்றன் கவனமாக் கேட்டிட்டு வாழ்க்கைக்கு பிரஜோசனமாப் பயன்படுத்துங்கோ என்ன.

ஒரு நாளைக்கு ரெயின் வர லேட்டானா அடுத்த ரெயின் வர இன்னும் ஒரு மணித்தியாலம் ஆகுமெண்டால் அன்றைய

நாள் வகுப்பு அம்பேல்தான். போற வழியில கார் மக்கர் பண்ணலாம் அல்லது ஒரு வோல்வோ ட்றக் சாரதி நித்திரை தூங்கிக் கொண்டே வந்து காரை இடிக்கலாம். இப்பிடி வாழ்க்கையில எதிர்பாரமா நடக்கிற விசயங்கள் 10% தான் ஆனால் இப்பிடி ஏதாவது நடந்தாப் பிறகு நாங்கள் என்ன செய்ய முடிவெடுக்கிறம் என்றதிலதான் வாழ்க்கையின் மிச்ச

90% தங்கியிருக்காம்.

ரெயின் வரத் தாமதமாவதை என்னாலோ, உங்களாலேயோ

தடுக்க முடியாது. ஆனால் ஒரு மணித்தியாலம் வெள்ளன வெளிக்கிட்டா ஐயோ ரெயின் லேற்றா வந்திட்டுதே இனிம நான் எப்ப வகுப்புக்குப் போய் எப்ப அஸைன்மன்ற் ஐ குடுக்கிறது என்று புலம்புறதை நிப்பாட்டலாம். (வேற வேலை இல்லை 8.30 வகுப்புக்கு 6 மணிக்கா வீட்டை விட்டுப் போறது). :x

சரி இந்த 90% எங்களிலதான் தங்கியிருக்கா என்று பார்ப்பம்.

காலமச் சாப்பாடு எல்லாரும் ஒன்றா இருந்து சாப்பிடுறியள். மகள் கவின்யான்ர கை பட்டு வேலைக்கு வெளிக்கிட்டு நின்ற அப்பான்ர சேர்ட்டில மேசையில கிடந்த தேத்தண்ணி ஊத்துப்பட்டிடுத்து. தேத்தண்ணிய ஊத்தோணும் என்று கவின்யா ஊத்தேல்ல. எதிர்பாராத விதமா நடந்தது இது. ஆனால் அடுத்து அப்பா என்ன செய்யிறது என்றது அப்பான்ர கையிலதானிருக்கு.

ஒரு வேலை ஒழுங்காச் செய்யத் தெரியாது.இப்பவும் சூட்டி பபாவுக்கு நிக்கிறது.கண்டறியாத ரீவி ஒன்று. ரீவியை ஆவென்று பாத்துக் கொண்டு தேத்தண்ணிய அருமந்த சேர்ட்டில ஊத்தியாச்சு.

அவள் என்ன வேணுமென்றா ஊத்தினவள்.பள்ளிக்கூடம் வெளிக்கிட்ட பிள்ளைய அழ வைச்சாச்சு. - இது அம்மா.

எல்லாம் உன்னாலதானப்பா. தேத்தண்ணியக் கொண்டு வந்து நுனி மேசையில வைக்க வேண்டியது பிறகு மகாராணிக்கு வக்காலத்து வாங்கிறது.

அடுத்த 10 ஞஉமிசத்தில அப்பா வேலைக்கு ஆயத்தம் ஆனா கவின்யா அழுதும் முடிக்கேல்ல சாப்பிட்டும் முடிக்கேல்ல.

எனக்கு நேரம் போட்டுது. அழுதது காணும் கார் ஸ்ரார்ட்டில நிக்குது கெரியா வா கவின்யா.

காருக்கயும் அவளைத் திட்டாதயுங்கோ. போட்டு வாங்கோ.-இது அம்மா

கவின்யாவக் கொண்டு போய் பள்ளிக்கூடத்தில விட்டிட்டு வேலைக்கு போற அவசரத்தில 120ல ஓட வழியில மாமா மறிச்சு ஒரு 100 டொலருக்கு ரிக்கற் தந்து விட்டார் போனஸாக. பள்ளிக் கூட வாசல்ல கவின்யாவ இறக்கி விட கோவத்தில கவி போட்டு வாறன் அப்பா என்று சொல்லாமப் போக, கோவம்,வருத்தம் எல்லாம் கூடிட்டுது. வேலைக்கு அரை மணித்தியாலம் தாமதமாப் போய் அங்கயும் பத்தாதக்கு யாரோடயும் சத்தம் போட்டு ...

சா தேவையா இதெல்லாம்? தெரியாம தேத்தண்ணி தட்டுப்பட்டு ஊத்துப்பட்டதில தொடங்கி எங்க வந்து நிக்கிறார் அப்பா.

இதுக்கு யார் காரணம்?தேத்தண்ணியா?கவின்யாவா?அம்மாவா?ரிக்கற் தந்த மாமாவா? இல்லாட்டா அப்பாவா?

அப்பாதான் காரணம். தேத்தண்ணி ஊத்துப்பட்ட உடனே அப்பா கோவப்பட்டு சத்தம் போட்ட அந்த சில வினாடிகளதான் எல்லாத்துக்கும் காரணம்.

அப்பா கவியில கோபப்படாம, பறவாயில்ல கவிம்மா... இனிம இப்பிடி கவலைனமா இருக்கக் கூடாது. பள்ளிக்கூடம் போற நேரத்தில கட்டாயம் ரீவி பார்க்கோணுமோ.வந்து பார்க்கலாம் என்ன. நீங்கள் வெளிக்கிட்டாச்சா? அப்பா இரண்டு நிமிசத்தில உடுப்பு மாத்திக் கொண்டு ஓடி வாறன். அம்மா எனக்கு இன்னொரு ரீ போடுங்கோ.

கவியை ஸ்கூல்ல விட கவி அப்பா போட்டு வாறன் பின்னேரம் மாமா வீட்ட போறம் தானே? ஓம் போறம். மூன்றரைக்கு வெளில வந்து நில்லுங்கோ கவி அப்பா வாறன் ஏத்த. அப்பா வேலைக்குப் போய் நிம்மதியாய் வேலை செய்திட்டு வீட்ட வாறார்.

அப்பா தேத்தண்ணி ஊத்துப் பட்டதுக்காக கோபப்பட்டுக் கத்தினார். அப்பிடி கத்தாம கவியை இனிம இப்பிடிச் செய்யக் கூடாதெண்டு சொல்லியிருக்கலாம்.

இப்பத்தான் 90:10 தெரியுமே.. . யாராவது உங்களைப் பற்றி குறைவாச் சொன்னா உடன நீங்கள் எந்த விதத்திலயும் குறையப் போறதில்லை. உடனே ஆத்திரப்பட்டு

சத்தம் போட்டால் வீணா மனஉளைச்சல் தான் மிஞ்சும். அவசரத்தில செய்யுற எதுவுமே நல்ல முடிவைத் தாறதில்லை.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று சும்மாவா சொல்லி வைச்சிருக்கினம்?அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டிட்டு பிறகு கவலைப்படுறது. மேலாளரோட சண்டை பிடிச்சிட்டு வேலையை விட்டிட்டு வாறது. பிறகு வேலை போச்சே என்று கவலைப்படுறது.கவலைப்படுறத விட்டிட்டு அடுத்த வேலையைத் தேட அந்தச் சக்தியை பயன்படுத்தச் சொல்லித்தான் 90:10 சொல்லுது.

நண்பர்களோட வாக்குவாதப்படுவானேன் பிறகு அநியாயமா நல்ல ஒரு நட்பைத் தொலைச்சிட்டன் என்று புலம்புவானேன்?என்ன காரியம் செய்ய முதலும் 90:10 கொள்கையை ஒரு கணம் ஞாபகப்படுத்தி இனிமேலாவது நல்லாயிருப்பமே.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். :( :wink:

அடடா 90:10ல் இப்படி ஒரு விசயம் இருக்கா.. வாசிக்க நல்லாதான் இருக்கு.. ஆனா கடைப்பிடிக்கும்போது.. சட்டுப்புட்டென வந்து நிற்கும் கோபம் இருக்கிறதே.. அதன் வேதனையும் ரோதனையும காலம் கடந்த பிறகுதான் புரியும்.. இனி கோபப்படுறதே இல்லப்பா.. இப்படி ஒரு மனத் தீர்மானம்.. அடுத்த நாள் விடிஞ்சுதா.. மனத் தீர்மானமா.. அப்படி ஒரு தீர்மானம் எடுத்தோமா.. எதுவுமே ஞாபகம் இருக்காது.. பிளட் பிறசர் தன் வேலையை காட்ட முன்னால வந்து நிற்கும்.. சிரிப்பு ஓடீ.. எல்லாம் கடுமையாகும்போதுதான்.. யாரோ ஒரு நெருங்கியவன் தொலைபேசீல அழைத்து அறுப்பான்.. அவனுக்காக சிரிதது கதைப்பதா.. ஏறிய கோபம் இறங்காமல் அவதிப்படுவதா..

'என்னடா ம் போடுறாய்.. கதையண்டா.." அவன் உள்ளநிலை புரியாமல் அலம்ப.. அவனிலயும் கோபமாக வரும்..

:P

என்னமோ.. வாழ்த்துக்கள் சிநேகிதி! நீங்களாவது கடைப்பிடீங்க.. :(

நன்றி சினேகிதி.. நல்ல விசயம் எழுதியிருக்கிறீர்கள்..

நன்றி சினேகிதி ( உங்களுக்கு மாட்டுப் பாஷை அத்துப்படியா??)

நல்ல விடயத்தைத் தான் சொல்லியுள்ளீர்கள். ஆனால் சில விடயங்களை அன்பாய்ச்

  • கருத்துக்கள உறவுகள்

பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு........

புத்தரும் முன்று முறை தான் கோபத்தை கட்டுபடுத்தியவர்......

ம்ம் வாசிக்க நல்லாய்த்தான் இருக்கு சினேகிதி. ஆனால் கடைபிடிக்க கஸ்டம் எல்லோ.

தகவலுக்கு நன்றி சினேகிதி.

  • தொடங்கியவர்

என்னமோ நான் கடைப்பிடிச்சு முத்தியடைஞ்சிட்ட மாதிரிக் கதைக்கிறீங்கள்.சும்மா எழுதுறதுக்காக எழுதினான் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று.நானும் இப்பத்தான் முயற்சி செய்யுறன் கோவத்தைக் கட்டுப்படுத்த கஸ்டம் தான் ஆனா முயற்சி திருவினையாக்கும் என்று நம்புவம் சோழியண்ணா.போனில நல்லா ம் போடுவீங்கள் போல :-) சரி என்னில கோவப்படாதயுங்கோ.

  • தொடங்கியவர்

ஹாய் வசி எல்லாரயும் காணவில்லை காணவில்லை என்று ஏலம் போடுவீங்கள் நீங்கள் எங்க காணாமப் போட்டீங்கள்? நல்ல விசயமா இது,அப்ப பின்பற்றுங்கள்.

  • தொடங்கியவர்

வணக்கம் வசம்பண்ணா..எனக்கு இன்னும் நிறையப் பாசை அத்துப்படி :-) அப்ப நீங்கள் அதட்டித் தான் சொல்லுவன் என்று அடம்பிடிக்கிறீங்கள்.

  • தொடங்கியவர்

இப்ப புத்தருக்கு கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு...பொறுமை எல்லை தாண்டுமளவுக்கு இங்க என்ன நடந்திட்டுது :-)

  • தொடங்கியவர்

வாசிக்க நல்லா இருந்ததே சந்தோசம் றமாக்கா.கடைப்பிடிச்சு பார்க்கிறது தான்.கோவம் வந்தா கண்ணை மூடிக்கொண்டு ஒன்று இரண்டு எண்ணச் சொல்றவை எல்லோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தம் போட்டால் வீணா மனஉளைச்சல் தான் மிஞ்சும். அவசரத்தில செய்யுற எதுவுமே நல்ல முடிவைத் தாறதில்லை.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று சும்மாவா சொல்லி வைச்சிருக்கினம்?அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டிட்டு பிறகு கவலைப்படுறது. மேலாளரோட சண்டை பிடிச்சிட்டு வேலையை விட்டிட்டு வாறது. பிறகு வேலை போச்சே என்று கவலைப்படுறது

:roll: :roll: எனக்கென்றே எழுதின மாதிரி இருக்கு. எனக்கு கோபம் வாற, அதுவும் தேவையில்லாமல் கோபம் வரும்போதெல்லாம் என்ட வாயை யாரும் திறக்காமல் ஒட்டி விட்டால் எவளவு சந்தோசம். அவசரப்பட்டு கோபப்பட்டுவிட்டு கோபத்தின் இழப்புகளை சரி செய்வதற்கும் போதும் போதும் என ஆகிவிடும். :roll:

எனக்கென்னவோ 1..2...3 என்று எண்ணி கோபத்தை குறைத்துக்கொள்ளலாம் என்று நம்பிக்கையில்லை. இதுவரை முயற்சி திருவினையாக்கவில்லை. முற்கோபத்தால் உறவுகளுடன் தூரமானதும், உடமைகள் சேதமானதும் தான் மிச்சம். இப்போ முயன்று கொண்டிருக்கிறேன். :roll:

உதுக்கென இங்க பட்டறைகள் நடத்துகிறார்கள்.அவற்றிற்கு 'அங்கர் மனேஜ்மன்ற்' என்று அதாவது கோவத்தைக் கட்டுப்படுத்தும் யுக்திகள் என்று சொல்லலாம்.

சிலவேளைகளில் இவை நீதிமன்றங்களால் கூட சிலருக்கு பரிந்துரை செய்யப் படுகின்றன. வேலைத் தளங்களில் அதிக கோவப்படுவோருக்கும் இவ்வாறான வகுப்புக்கள் நடைபெறும்.

இவற்றை உள்ளூரில் எங்கு பெறலாம் என்று அறிந்து தீர்வும் பயிற்ச்சியும் பெறுவது உபயோகமாக இருக்கும் விஸ்ணு.இதனால் பிரச்சினைகளைக் குறைக்கலாம்.சில யுக்திகள் சிலருக்குச் சரிவராது, இவற்றைப் பயிற்சியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தினமும் யோகசனம் செய்து வந்தால் எந்தக் கோபத்தையும் அடக்கும் சக்தி வரும் என்று சொல்கின்றார்களே!

  • தொடங்கியவர்

வணக்க விஸ்ணு அண்ணா :-) உங்களுக்கெண்டும்தான் எழுதினான் :wink: .எங்கட வீட்ட உடமைகள் சேதமாவது குறைவு.ஆனால் மனக்கஸ்டம் ஏற்படும்.சாப்பாட்டு மேல கோபம் வந்தா அம்மா வீட்டுக்கு வெளிய போய் நிப்பா யாருக்குக் கோபமோ அவை சாப்பிடும் வரைக்கும்.அண்ணா இருங்க உங்களுக்கு இனிம கோபம் வரும்போது பிளாஸ்டர் ஒட்டச் சொல்றன் :lol:

  • தொடங்கியவர்

நாரதர் அண்ணா தூயவன் அண்ணா சொல்ற வழிகளைக் கையாண்டு பார்க்கலாம் தான்.இங்க ஒரு கிழமைக்கு யோகா வகுப்புக்கு ஐம்பது டொலர்கள்.

சிநேகிதி.....இலவசமாக.ஒரு முறை..சொல்லி தர்றன்...கோலா கோலா...என்று உச்சரித்து...20 நிமிடங்கள்...காலையும் மாலையும் கண்ணை மூடி தியானித்து ஒழுங்காக செய்து வந்தீங்களென்றால்...கோபம் பொறாமை, பயம்......மற்ற எக்ஸ்ற்றா,எக்ஸ்ற்றா....எல்லாம் பறந்து போயிடும்....

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன குட்ஸ் ஏன் உதுகளை இளசுகளுக்கு சொல்லி கொடுத்து அதுகளின் எதிர் காலத்தை பாலடிக்கிறீர்...

50 வயதுக்கு பிறகு சுடலை ஞானம் வரக்கில்ல கோலா கோலா பாலா பாலா எல்லாம் தானாகவே வரும்.....

  • தொடங்கியவர்

சின்னக்குட்டி இலவச ஆலோசனைக்கு நன்றி :-) கோலா கோலா வா? அப்பிடியெண்டால் என்ன? என்ன புத்தன் சின்னக்குட்டி கோலா என்டார் நீங்கள் பாலடிக்கிறதென்றீங்கள் ...என்ன பாசை இது? கொஞ்சம் விளக்கமாச் சொன்னா நல்லம்.

சின்னக் குட்டி கோலா கோலா கொக்கக் கோலவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.