Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

SLMCயின் தலைவர் றவூவ் ஹக்கீம் மீண்டும் ஒரு முறை SORRY கேட்கப் போகிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SLMCயின் தலைவர் றவூவ் ஹக்கீம் மீண்டும் ஒரு முறை SORRY கேட்கப் போகிறார்

10 செப்டம்பர் 2012

lg-share-en.gif

UNPயிடம் அல்ல - தனது மதிப்பிற்குரிய நல்ல நண்பரான சம்பந்தனிடம் மட்டுமே - குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர்:-

Sampanthan%20hakeem_CI.jpg

கிழக்கு மாகாண சபை குறித்து சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் எந்த நிபந்தனைகளுக்கும் அடிபணியாமல் அதேவேளை தவிர்க்க முடியாதவாறு ஆதரவை வழங்கவேண்டிய இக்கட்டான நிலையை மகிந்த ராஜபக்ஸ சகோதரர்கள் உருவாக்குவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு அமைவாக மகிந்த சிந்தனையின் ராஜதந்திர காய் நகர்த்தல்களை ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது.

குறிப்பாக கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த ஒருவரும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல் ஒன்று குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளது.

தேர்தல் முடிவுகளின்படி மாகாண சபையில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் தெளிவான பெருபான்மை கிடைக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவான 12 பேருடன் இரண்டு போனஸ் ஆசனங்களையும் பெற்றுள்ளதால் 14 ஆசனங்களை ஆளும் அரசாங்கம் கைப்பற்றியுள்ளது. இதனால் முதலமைச்சரை தெரிவுசெய்து ஆட்சியமைக்குமாறு அதிக ஆசனங்களை கைப்பற்றிய கட்சிக்கே மாகாண ஆளுநர் அழைப்பு விடுப்பார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அதிக ஆசனங்களை கைப்பற்றியுள்ளதால், எதிர்க்கட்சிகளின் பலத்தை குறைப்பதற்காக இவ்வாறு இந்த இரண்டு கட்சிகளை சேர்ந்த 4 உறுப்பினர்களை அதிக விலை கொடுத்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும்படி வற்புறுத்தி உள்ளதாகவும் அதற்கு அவர்கள் இணங்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இதன் அடிப்படையிலேயே ஜனாதிபதியின் உற்ற நண்பரும் அமைச்சருமான டளஸ் அழகப்பெரும ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்டாயம் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கும் என உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

கூடவே அநாவசியமான அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் அரசாங்கம் கூட்டணிக்கு செல்லக்கூடாது என அமைச்சரும் மகிந்தவின் இனவாத முகமுமான சம்பிக்க றணவக்க வலியுறுத்தி விடுத்துள்ளார்.

இதனால் முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றவூவ்ஹக்கீம் பாரிய இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்த்தர் ஒருவர் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.

காரணம் கடுமையான நிபந்தனைகளை விதிக்காமல் முஸ்லீம்காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும். அவ்வாறாயின் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க இணங்கிய மூவரை அரசாங்கம் உடைத்தெடுக்காது. இல்லை நிபந்தனை விதிக்க முற்பட்டால் முஸ்லீம் காங்கிரசில் இருந்து உதிரிகளாக உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று அரசாங்கம் மாகாண ஆட்சியைக் கைப்பற்றும். அத்தகய நிலை ஏற்பட்டால் முஸ்லீம் காங்கிரஸ் அமைச்சுப்பொறுப்புக்களை துறந்து அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என அரசாங்கம் கூறும். இவ்வாறான சூழல் உருவாகினால் கட்சியின் பாராளுமன்ற அமைச்சர்கள் சிலரும் கூட உதிரிகளாக அரசாங்கத்துடன் இணைவர். அவ்வாறாயின் கட்சிக்குள் பாரிய உடைவு ஏற்படும். இவ்வாறான நிலையினையே முன்னைய பாராளுமன்ற தேர்தலிலும் உருவாக்கி கட்சியின் சிதைவை தடுக்க கடுமையான அழுத்தங்களிடையே ஹக்கீம் அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்தார். அப்போது ஐக்கியதேசியக் கட்சியின் நெருங்கிய நண்பர்களிடம் சொறிகேட்டார் ஹக்கீம்.

இதே வகையான சூழலையும் அழுத்தங்களையுமே தற்போதும் மகிந்தராஜபக்ஸ சகோதரர்கள் முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ஹக்கீமின் மீது ஏற்படுத்தி உள்ளார்கள்.

அதனால் அமைச்சரும் முஸ்லீம் காங்கிரசின் தலைவருமான ஹக்கீம் மீண்டும் ஒரு முறை SORRY கேட்கப் போகிறார். ஆனால் இப்போது சொறிகேட்கப் போவது ஐக்கியதேசியக் கட்சியிடம் அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் அல்ல தனது மதிப்பிற்குரிய நல்ல நண்பரான இராஜவரோதயம் சம்பந்தனிடம் மட்டுமே.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82725/language/ta-IN/article.aspx

சம்பந்தரிடம் புதிதாக கொடுக்க எதுவும் இல்லை. கக்கீம், தான் இப்பொழுது அரசுடனும் கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதாக கூறுவதில் உண்மை எதுவும் இல்லை. அப்போ ஏன் கக்கீம் இப்படி நடிக்கிறார் என்ற கேள்வி வருகிறது.

அரசுக்கு வழமையில் இடக்கையில் துட்டுடனும், வலக்கையில் துவக்குடனும் தான் பேச்சுவார்த்தை நடத்தி பழக்கம். அதைவிட அரசு எதுவும் புதிதாக கக்கீமுடன் நடந்து கொள்ளவில்லை. வெட்ட வெளிச்சமான இதில் கக்கீம் நாடகமாடவேண்டிய தேவை இல்லை. இதில் கக்கீமை குழப்பியிருப்பது கூட்டமைப்பின் அண்மையின் சில முன்னெடுப்புகள். இது கக்கீம் தன்னை விட்டுவிட்டு சம்பந்தர் கிழக்குமாகாணத்தை வெளிநாட்டு உதவிகளை பாவித்து பிரித்தெடுத்துவிடுவாரா என்ற ஏம்பலிக்கிறார். குறைந்த பட்சம் கிழக்கையும்-வடக்கையும் இணைத்தாலே அது கூட்டமைப்பில் இருக்கும் முஸ்லீம்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கக்கீமுக்கு கொடுக்காது. எனவே சம்பந்தரை கக்கீமால் கிழக்கில் ஒரு தமிழ் நண்பணாக காணமுடியாமல் சின்ன(Junior) ராசபக்சாவாகவே காணமுடிகிறது. இதனால்த்தான் கக்கீம் சம்பந்தரிடம் ராசபக்சாவுக்கு சரிக்கு சரியாக பேரம் பேசுவதும்,தீர்வு கேட்கும் அவரிடம் முஸ்லீம் மாகாணம் கேட்கப் போவதும். இந்த நிலையில் கக்கீம் செய்ய கூடியது, தான் இணையத்தக்கவர் பெரிய ராசபக்சாவா(Sr.) அல்லது சின்ன ராசபக்சாவா(Jr.) என்று தீர்மானித்துக் கொள்வதுதான். நாம் கக்கீம் இறுதியில் என்ன முடிவு எடுப்பார் என்பதை ஆராய்வதில் எந்த உபயோகமும் வராது. ஏன் எனில் மு.கா ஏற்கனவே அரசால் அடித்து முடிக்கப்பட்டுவிட்ட பாம்புதான். அது ஏற்கனவே இறந்து போன பாம்பு. (ஆனாலும் மு.கா இனி உயிர்க்க வழி இல்லை என்று சொல்லவும் முடியாது. அதற்கு கக்கீம் தைரியத்தில், அஸ்சிரபாகாவிட்டாலும் அஸ்சிரபுக்கு தம்பியாகவாவது ஆகியே தீர வேண்டும். கான்சர் புண்ணை வெட்ட தைரியம் இல்லாத மருத்துவர் தனது நோயாளியை காப்பாத்துவது இல்லை. தீயன கழியவிட்டால் மட்டுமே நல்லன வந்து சேர முடியும்.)

கக்கீமிடம் அரசுடன் கூட்டு சேரவேண்டாம் என்று சம்பந்தர் மட்டுமல்ல, ரணில் மட்டுமல்ல, வெளிநாடுகளும் கேட்டுவிட்டன. காரணங்கள் ஒன்றும் புதியவையுமல்ல. எதிலும் ஒழிவு மறைவுமில்லை. கிழக்கில் அரசு ஆட்சி அமைத்தால் இனி புலிகள், கூட்டமைப்பு, ஐ.தே.க, கருணாநிதி, இந்தியா, நோர்வே, அமெரிக்கா என்று யார் விட்ட பிழைகளுக்கும் மாற்று மருந்து காணுவது சிக்கலாகிவிடும். அதனால்த்தான் எல்லோரும் ஒன்றாக கக்கீமிடம் மன்றாடினார்கள். கக்கீமுக்கு அரசை எதிர்ப்பதில் ஒரு சிக்கலும் இல்லை. பலர் மு.காவை பிரிந்து அரசுக்கு போனாலும் ஐ.தே.க தனது சிங்கள இடத்து தேர்தல்களை பணயம் வைத்து கிழக்கில் தமிழ் கட்சிகள் ஆட்சி அமைக்க உதவத்தாயாராக இருக்கிறது என்று கூறும் பொழுது இன்னமும் எதிர்க்கட்சிகள் தைரியமாக ஆட்சி அமைக்க முடியும். ஆனால் இருக்கும் பிரச்சனை எல்லாம் கக்கீமுக்கு ஒரே மாட்டிலிருந்தே பாலும் வேண்டும் இறைச்சியும் வேண்டுமென்ற பேராசையே. அரசுடன் சேர்ந்து மாட்டை அடித்து இன்று கக்கீம் இறைச்சி தின்ன அடம் பிடிக்கிறார். இவருக்கு நீண்ட நாளைய பால் கிடைக்காது. புத்தியை பாவித்தாராயின் பாலும் கிடைக்கும் மாடும் இவருடன் இருக்கும். பேராசை கூடியோ அல்லது பேடியாக மாறியோ அரசுடன் சேர்ந்தாராயின் அது அவரின் முடிவாகவே இருக்கும். அதுவே மு.காவின் முடிவும். கக்கீம் அரசனான ராசபக்சாவுக்காக புருஷனான சம்பந்தை விட்டுவிட்டு போவாராகில் இவர் நிச்சயம் தமிழரல்லாத ஒரு முஸ்லீமே. ஏன் எனில் மற்றைய எல்லா தமிழ் முஸ்லீம்களுக்கு அந்த பழமொழி தெரியும்.

Edited by மல்லையூரான்

[size=6]SLMC to align with government in East; Rauff Hakeem makes revelation during government party meeting[/size]

[size=5] [/size]

[size=5]Leader of the Sri Lanka Muslim Congress Rauff Hakeem has pledged the support of his party to the government.[/size]

[size=6] [/size]

[size=6][size=5]Hakeem's comments came during a meeting which held under the patronage of [/size][size=5]President Mahinda Rajapaksa at Temple Trees this morning.[/size][/size]

[size=6] [/size]

[size=6][size=3]http://www.hirunews.lk/43050[/size][/size]

[size=6] [/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ எங்கட சனம் திருந்தினாலும் அரசியல்வாதிங்க திருந்த மாட்டாங்க.

முஸ்லீம் காங்கிரஸை அணைக்கனும்.. கொஞ்சனும்.. என்று புத்திமதி சொல்லுறவை.. இதுக்கென்ன சொல்லப் போகினம்.

முஸ்லீம் காங்கிரஸ் மதவெறி.. பதவி வெறி பிடித்த ஒரு முஸ்லீம் மதப் பயங்கரவாத அமைப்பு..!

தலைவர் தவிர வேற யாரும் அவையை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கும் துணிவற்றவர்களாகவே இருக்கின்றனர். இதனால் ஏமாற்றங்களே எமக்கு மிஞ்சும்..!

தாயக அரசியல் கட்சிகள்.. புதிய சூழலை நோக்கி திட்டங்களை வகுத்துச் செயற்படாதவரை.. கூலிக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவது என்பது முடியாத காரியம்.

ஒருவேளை.. த.தே.கூ.. 18 இடங்களை வென்றிருந்தால்.. கக்கீம்.. கா... கா என்று சம்பந்தனின் தலையைச் சுற்றி பறந்திருப்பார்..!

த.தே.கூ.. தமிழீழத்தைக் கைவிட்டது.. சிங்கள சிங்கக் கொடியை தூக்கிப் பிடித்தது.. சிங்கள இனவாத அரசியல் கட்சிகளோடு.. கொஞ்சிக் குலாவுவது... மகிந்தரோடு ரகசியமா பேசிக் கொள்வது.. இவற்றை எல்லாம் கைவிட்டு.. 35 வருடமாக தங்கள் பிள்ளைகளை.. தமிழீழம் என்ற கனவை நிறைவேற்ற பறிகொடுத்த கிழக்கு மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு நடக்க முன்வருதல் அவசியம்..! இதன் மூலமே தமிழ் மக்களின் அமோக ஆதரவை.. எந்த தமிழ் கட்சியும் பெற முடியும்.

த.தே.கூ.. முன்னாள்.. காட்டிக்கொடுப்பாளர்களை அரவணைத்து வைத்துக் கொண்டு மக்கள் முன் போய் வாக்குக் கேட்டால் மக்கள் விடுதலைப்புலிகள் அற்ற சூழலில் அவர்களை நம்பி வாக்குப் போட மாட்டார்கள்..! முன்னர் புலிகள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் வாக்குப் போட்ட மக்கள் இன்று அதனை இழந்து நிற்கிறார்கள்..!

த.தே.கூ.. தாந்தோன்றித்தனமாக முடிவுகளை எடுக்காமல்.. இதர தமிழ் மக்களின் உணர்வறிந்த சக்திகளோடு இணைந்து முடிவுகளை மக்கள் நலனோடு பொருந்தி எடுக்கும் நிலைக்கு வந்தால் அன்றி த.தே.கூ.. தன் வாயால் கெடும் தவளையாவது உறுதி.

இந்த நிலை தொடர்ந்தால்.. அது.. சிங்கள இனவாத தேசியக் கட்சிகளுக்கும் முஸ்லீம் மதப் பயங்கரவாதிகளுக்கும் இடையில் எமது மக்கள்.. சிக்கிச் சின்னாபின்னமாவதையே செய்து முடிக்கும்..! சர்வதேசத்துக்கும் தமிழ் மக்கள் அரசுடன் என்று காட்ட இதனை சிங்களம் பாவிக்கும்..! இது தமிழ் மக்களின் 64 ஆண்டு கனவுகளையும் தகர்த்து எறியலாம்..! :icon_idea:

அப்படியென்றால் ஒரு முஸ்லீம் மதப் பயங்கரவாத அமைப்பின் ஆதரவில் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கவில்லை என்று சந்தோசப்பட வேண்டியதுதானே!

இதை தேர்தல் முடிந்தவுடன் சொல்லியிருந்தால் சம்பந்தரும் முஸ்லீம் மதப் பயங்கரவாதியிடம் ஆதரவு கேட்காமல் இருந்திருப்பார் அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியென்றால் ஒரு முஸ்லீம் மதப் பயங்கரவாத அமைப்பின் ஆதரவில் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கவில்லை என்று சந்தோசப்பட வேண்டியதுதானே!

இதை தேர்தல் முடிந்தவுடன் சொல்லியிருந்தால் சம்பந்தரும் முஸ்லீம் மதப் பயங்கரவாதியிடம் ஆதரவு கேட்காமல் இருந்திருப்பார் அல்லவா?

உண்மையிலேயே நல்ல கேள்விதான். என்ன நாங்கள் இந்த விடையை சம்பந்தனுக்கு சொன்னால் அவர் என்ன நினைப்பாரோ தெரியாது? :D

ஒன்று இந்த இடத்தில் ஜெயானந்த மூர்த்தி ஒரு சிங்கன்தான். சிங்கனுக்கு தெரிந்திருக்கும், உதில போட்டியிட்டு எல்லாருக்கு முன்னாலே தலைகுனிந்து நிற்பதை காட்டிலும் சிவனே என்று எட்டா பழம் புளிக்கும் என்று கதை விடுவது நல்லது என்று. உண்மையிலேயே கஜேந்திரகுமார் தலைமயிலான அணியை பலபடுத்துவது, அல்லது அவர்களையும் சேர்ந்து செல்லவது காலத்தின் கட்டாயமாகி விட்டது. அவர்கள் சொல்லிய படி, சுயேட்டையாக போட்டியிட்டுருந்தால், பெரியளவில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெற்றி இல்லை என்ற நிலைமை தெரியாமல் போயிருக்குமோ தெரியவில்லை. அதே நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இது ஒன்றும் குறைந்த வெற்றி அல்ல. அவர்கள் உண்மையில் இழந்தது ஒரு ஆசனம் மட்டுமே, மற்றைய இரண்டும் போனஸ் மூலமே வந்தது. நான் நினைக்கிறன் ஏழாயிரத்து சொச்ச வாக்குகளாலேயே அந்த 2 போனஸ் ஆசனமும் அவர்களுக்கு போனது. அதை செய்தவர்கள் பிள்ளையானும், ஒரு வகையில் ஜெயானந்த மூர்தியுமே. அந்த அடையக்கூடிய 7000 வேட்டுகாக தமிழ் காங்கிரசும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்று சேர்ந்தால் தலை வாங்குவோம். வேறு ஒரு இடத்தில் எழுதி இருந்தார்கள் பட்டிருப்பு தொகுதி மக்கள் கிட்டதட்ட 90 வீதம் பேர் கூட்டமைப்புக்கு போட்டதாக, வேறு இடங்களிலும் இருந்திருக்கும், ஆனால் அந்த மக்களுக்காக வாவது, அதைப்போன்ற மக்களுக்கு ஆக வாவது; காலத்தின் கடமைகளை செய்வது அனைவரினதும் பொறுப்பு.

D31052246.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.