Jump to content

அம்மா பிள்ளைகளான ஆண் திமிங்கிலங்கள்


Recommended Posts

பெண் கொலைகார திமிங்கிலங்கள் (Killer whales, சரியான தமிழ் பெயர்?? ) இன் மாதவிடாய் 30 அல்லது 40 வயதுக்கு பின்னர் நிறுத்தப்பட்டு விடுகிறது. இது மனிதனுக்கு அடுத்ததாக விலங்கினங்களில் நீண்ட menopause காலத்தை கொண்டது.

இதற்கான காரணத்தை ஆராய்ந்த பொது, பெண் திமிங்கிலங்கள் தமது 30 வயது/ அல்லது வயதுக்கு வந்த ஆண் பிள்ளைகளின் நலன்களை பராமரிக்க அல்லது உதவ இந்த மாதவிடாய் நிறுத்தம் உதவுகிறது என சொல்லப்படுகிறது. தாய் திமிங்கிலம் இறந்தால் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண் திமிங்கிலங்கள் தப்பி வாழும் காலம் குறைவடைவதாகவும், இந்த ஆண் திமிங்கிலங்கள் அவற்றின் தாய் இறந்து ஒரு வருடத்துக்குள் இறந்து போவதற்கான வாய்ப்பு 14 மடங்கு அதிகம் என்றும் அறியப்பட்டுள்ளது. ஆனால் வயது வந்த பெண் திமிங்கிலங்கள் தமது தாய் இன்றி தப்பி வாழக்குடியவை என்றும் அறியப்பட்டுள்ளது.

http://www.theglobea...article4543945/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா எல்லா இடத்திலும் ஸ்பெசல் தான் நமக்குத்தான் குடுப்பினை இல்லை :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பகிர்வு குளக்காட்டன்..! திமிங்கலங்களும் மனிதனைப் போல.. பாலூட்டிகள் வகுப்பில் அடங்குகின்றன. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இனங்களிலும், ஆண்கள், பிழைக்கத் தெரியாத, இளிச்ச வாயர்கள், போலத் தான் உள்ளது!

நன்றிகள், குளக்ஸ்!

Link to comment
Share on other sites

நல்ல தகவல்கள் குளம்ஸ்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் எப்போது இந்த காவுதலை நிறுத்தி சாதாரண நிலைக்கு வரப் போகிறீர்கள்,??? 
    • வாக்கெடுப்பு மந்த கதியில் நடைபெறுகிறது? சனங்கள் எல்லாரும் வாக்கு அளிப்பார்களோ? விடுமுறைதினம் ஆகையால், ஒவ்வொரு பாதையில்.. கோயில்/குளம்/புரட்டாதி சனி விரதகாரர்/மற்றும் கோழிக்கறி/புரியாணி உண்போர்/ஊர் சுற்றி பார்ப்போர் என ஆளாளுக்கு.. பப்பாவில் ஏற்றிய பொது வேட்பாளருக்கு நாமம் வைத்து விடுவார்களோ.
    • ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்! ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும் இருந்த நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாலை 4 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசைகளில் நிற்கின்ற அனைத்து வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும் வரையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிவிசேட வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது இதேவேளை இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது களுத்துறை – 32% கம்பஹா – 25% கேகாலை – 15% நுவரெலியா – 30% இரத்தினபுரி – 20% அம்பாறை- 30% மன்னார்- 29% முல்லைத்தீவு – 25% வவுனியா – 30% கொழும்பு – 20% கண்டி – 20% காலி – 18% மாத்தறை – 30% மட்டக்களப்பு – 17% குருநாகல் – 30% பொலனறுவை – 38% மொனராகலை – 21% பதுளை – 21% https://athavannews.com/2024/1400397
    • லெபனான் தலைநகரில் இஸ்ரேல் தாக்குதல் - ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்டதளபதி பலி 21 SEP, 2024 | 07:00 AM   லெபனான் தலைநகரின் மீது இஸ்ரேல்; மேற்கொண்ட தாக்குதலில்  ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார். பெய்ரூட்டில் இடம்பெற்ற தாக்குதலில் இப்ராஹிம் அகில் உயிரிழந்துள்ளதை  ஹெஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் பல தளபதிகள் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகமாக வாழும் டஹியே என்ற பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதல் காரணமாக 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபனான் தெரிவித்துள்ளது. லெபானின் புறநகரில் உள்ள இந்த ஹெஸ்புல்லாக்களின் வலுவிடம் என்பது குறிப்பிடதக்கது. தாக்குதலை தொடர்ந்து குழப்பமான நிலை நிலவியது,அந்த பகுதிக்கு விரைந்த அவசரசேவை பிரிவினர் காயமடைந்தவர்களையும் கட்டிடங்களின் கீழ் சிக்குண்டிருந்தவர்களையும் மீட்க முயன்றனர் என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/194227
    • நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க 9ஆவது  ஜனாதிபதியை தெரிவு செய்யும் 8ஆவது  ஜனாதிபதி தேர்தல் இன்று Published By: VISHNU   21 SEP, 2024 | 10:05 AM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது  ஜனாதிபதியை தெரிவு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று சனிக்கிழமை (21)  இடம்பெறவுள்ளது. இம்முறை 38 பேர் போட்டியிடுகின்ற நிலையில்,  17, 140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சுதந்திரமானதும், நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு சகல பிரஜைகளிடமும்  தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. நாடளாவிய ரீதியில்  13421  வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், சுமார் 63 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். முப்படையினரும் பாதுகாப்பு நிமித்தம் தயார் நிலையில் உள்ளனர். தேர்தல் பணிகளுக்காக 2 இலட்சத்து 25 ஆயிரம் அரச உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தேர்தல் தொகுதிகளுக்குமான வாக்கு பெட்டிகள் மற்றும் தேர்தல் பணிகளுக்கான ஆவணங்கள் நேற்று காலை கையளிக்கப்பட்டன. 22 தேர்தல் மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்தில் தான் அதிகளவில் தேர்தல் தொகுதிகள் , கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் 3151 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது. வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. வாக்களிக்க செல்லும் போது வாக்காளர் அட்டை மற்றும் தேசிய அடையாளர் அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திர அட்டை உட்பட அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்லுமாறு வலியுறுத்தப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட கோட்டபய ராஜபக்ஷ 6,924, 255 வாக்குகளை பெற்று  52.25 சதவீத வாக்குகளுடன் நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.  அதேபோல் அத்தேர்தலில்  ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச 5,564, 239  வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிட்ட அனுரகுமார திஸாநாயக்க 41, 553 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர். வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிடுகையில்; வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை பிரஜைகள் அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். ஒருவரின் உரிமை பிறிதொருவருக்கு இடையூறாக அமைய கூடாது. தகுதி பெற்றுள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் அத்துடன் சுதந்திரமாகவும்இ நியாயமானதாகவும் தேர்தலை நடத்த  சகல பிரஜைகளும் ஒத்துழைக்க வேண்டும். வாக்களிப்பு மத்திய நிலையத்துக்கு செல்லும் போது வாக்காளர் அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரம், ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். வாக்களிப்பு மத்திய நிலையத்தில் அமைதியை பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.  தேர்தல் காலத்தில் அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு காரணியாக அமைவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ளுங்கள். வாக்களித்ததன் பின்னர் அமைதியான முறையில் செயற்படுங்கள் . ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவை உங்களின் குடும்பமே எதிர்க்கொள்ள நேரிடும். ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு எவ்வித இழப்பும் ஏற்படாது. ஆகவே தமது குடும்பத்தை நினைவில் வைத்துக் கொண்டு செயற்படுங்கள் என்று நாட்டு பிரஜைகளிடம் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/194220
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.