Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைஞருக்கு வாழ்த்துக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பாத்த வெற்றி..எதிர் பார்த செய்தி வாழ்த்துக்கள் கலைஞரே.. :D

  • தொடங்கியவர்

எப்படியோ நல்லவர்கள் எதிர்பார்த்த மாதிரியே டாக்டர் கலைஞர் மீண்டும் முதல்வராகிறார்.... எத்தனை சதிகள்! எவ்வளவு கேலி கிண்டல்கள்! அத்தனையையும் மீறி ஐந்தாம் முறையாக அரியணை ஏறுகிறார் தமிழினத் தலைவர்....

கலைஞரைப் பொறுத்தவரை ஐந்து முறை முதல்வராவது பெரிய சாதனை அல்ல.... அரை நூற்றாண்டுக்கால தமிழக அரசியலின் மையமாக அவர் செயல்பட்டது தான் அவரது அளப்பரியாச் சாதனை....

கலைஞரின் ப்ளஸ் பாயிண்டே அவரின் டைமிங் சென்ஸ் தான்.... மக்களை எது கவர முடியும் என்று சரியாக கால்குலேட் செய்து தேர்தல் அறிக்கை தயாரித்து வெற்றி பெற்றிருக்கிறார்.... வலைப்பூக்களில் இருக்கும் அறிவுஜீவிகளின் கிண்டலைப் பெற்ற கலைஞரின் தேர்தல் அறிக்கை தமிழக மக்களால் பெருமளவு வரவேற்கப்பட்டிருக்கிறது....

டைமிங் சென்ஸ் எனும்போது ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.... கலைஞர் விதவைகள் மறுவாழ்வு திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய நேரம் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்.... அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் எழுந்து, "தலைவா, விதவை என்ற சொல்லுக்கே பொட்டு இல்லை... அந்த விதவை நெற்றியில் போய் எப்படி தலைவா பொட்டு வைக்க முடியும்?" என்று கேட்டார்....

கொஞ்சமும் யோசிக்காமல் கலைஞர் உடனே, "ஏன் தம்பி விதவை என்கிறாய்... கைம்பெண் என்று சொல்லிப்பார்... ஒன்றுக்கு இரண்டு பொட்டு உண்டு.... மனமிருந்தால் மார்க்கமுண்டு" என்றார்....

புத்திக்கூர்மை மிகுந்த முதல்வர் மீண்டும் நமக்கு கிடைத்திருக்கிறார்.... கோடிக்கணக்கான தமிழர்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன்....

லகி உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு கொள்ளும் வேளை, எங்கள் துயரை நீக்க தமிழ் நாட்டு அரசுடன் நீங்களும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதன் மூலம் கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர்கள் எல்லோராலும் நேசிக்கப்படும் ஒரு தலைவராக உருவாக முடியும்.தமிழ் ஈழத்தின் விடுதலைச் சரித்திரத்தில் அவர் இடம் பெற வேண்டும்.

  • தொடங்கியவர்

கலைஞர் செய்வார் என்று நம்புகிறோம் நாரதர்...

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

கலைஞர் 5 தடவை வந்து கிளித்து விட்டார் எனி தான் கிளிப்பாரோ........

அம்மா பக்கம் வந்தவுடனே எனக்கு 6 ஆசனங்கள் கிடைத்து விட்டது அங்கே என்ன தான் கண்டணாண்......

கலைஞர் தொலைகாட்சி கொடுப்பார் ஏன் எனில் தன் நிறுவனத்தை விஸ்தரிக்க.....பணம் சம்மாதிக்க.....

என்னடா கிழடா கிழடா உனக்கு இவ்வளவு ஆசையடா...கொடுடா பதவியை இளசுகளுக்கு........

ஈழத்து நண்பர்களே இவனே நம்பாதயுங்கோ வந்தாலும் ஒன்று தான் வராட்டியும் ஒன்று தான்......

யாழ் களத்தில் இருக்கும் போலி ஈழ வாதிகளுக்கு தான் முதல்வராக வந்தது சந்தோசமாக இருக்கும்....

சன் தொல்லைகாட்சியில் ஈழத்துக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்வார்கள்...........

நீடூழி வாழ்ந்து தமிழை வளர்க்க வாழ்த்துக்கள் :P

இலவசமானியங்களால் மீண்டும் தமிழக கஜானாவை காலி பண்ணி(அடுத்து வர்ர முதல்வருக்கு வேலை வேண்டாமோ?), இலவச வண்ணத்தொலைக்காட்ச்சியால் சன்ரீவி,கேபிள்ரீவி முலம் குடும்ப கஜனாவை நிரப்பிடவும் வாழ்த்துக்கள்.

தமிழின :?: த்தலைவருக்கு

வாழ்த்துக்கள்!!!

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

அப்படி போடு அரிவாள......

இவன் எல்லாம் தலைவன் என்றால் தலைவனுக்கு வரைவிலக்கனமே மாறிகிறது..........

இவங்கள் எல்லாம் தலைவராக இருப்பதால் தான் 50 வருடமாக நமது தமிழ் நாடு உறுப்படாம இருக்கு.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி எல்லாம் நாசமே.

தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். :(

திருட்டு பயலே திருட்டு பயலே செய்தி கேளடா ஒவ்வோரு மனிதனும் ஒவ்வொரு வகையில் திருடனடா......

ஆசை எல்லை மீறும் போது அணைகளை உடைக்குது திருட்டு.....

தமிழால் திருடுவதும் திருட்டு தான்....

  • கருத்துக்கள உறவுகள்

கலைஜர் வெற்றி பெற்றுவிட்டார். லக்கிலுக்கு எப்ப விருந்து தரப்பொறீர்கள்?

  • தொடங்கியவர்

கந்தப்பு இப்போதே தயராக இருக்கிறேன்....

ஆனாலும் எனக்கு ஒரு தோல்வி.... நெப்போலியன் வெற்றி பெறுவார் என்று என் அதிமுக நண்பணிடம் பிரியாணி பெட் கட்டி தோற்றுப் போனேன்.....

லக்கிலுக்

இவ்விடயம் எனக்கும் ஆச்சரியத்தை தந்தது. எப்படி எஸ்.வி.சேகரிடம் நெப்போலியன் தோற்று போனார் என்று??

மயிலாடுதுறை தொகுதியில்...பிராமணர்கள் வோட்டுக்கள் அதிகம .....எஸ்.வி.சேகர் பிராமணரென நினைக்கிறன்

ஈழத்தில் பாலாறும் தேனாறும் ஒடுதாம் !! :lol::lol:

தமிழ் நாட்டின் பொருளாதார வளர்சி தெரியாமல் பேசும் உங்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. :lol:

அதை விட உங்களை எந்த வித சுய நலமும் இல்லாமல் ஆதரித்த ஒரு தலைவரை, அவரின் கடந்த கால செயல்களை மறந்து தற்போது கேலி செய்து விளையாடும் உங்கள் குணம் அதை விட அருமை.

:lol::lol:

அப்படி போடு அரிவாள......

இவன் எல்லாம் தலைவன் என்றால் தலைவனுக்கு வரைவிலக்கனமே மாறிகிறது..........

இவங்கள் எல்லாம் தலைவராக இருப்பதால் தான் 50 வருடமாக நமது தமிழ் நாடு உறுப்படாம இருக்கு.....

சின்னக்குட்டி

நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம். எஸ்.வி.சேகர் பிராமணர் தான் . ஆனால் வெறும் ஆயிரத்தி சொச்ச வோட்டுக்கள் வித்தியாசத்தில் தான் நெப்போலியன் தோல்வியைத் தழுவினார்.

கவியரசு வைரமுத்துவின் வாழ்த்துக் கவி:

கருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்து அவரது மிக நெருங்கிய நண்பரான வைரமுத்து எழுதியுள்ள கவிதை:

ஐந்தமிழ் அறிஞரே,

உன்

உழைப்பின் உயரம் பார்தது

கழுத்துச் சுளுக்கின மலைகள்

உன்னோடு ஓடி வந்து களைத்து

மூர்ச்சையாயிற்று காற்று.

சுடு மாதங்களில் நீ

வீதி வீதியாய் எப்படி

வெயில் சுமந்தாய்?

நிலத்துக்கு நிழல் ஏது?

மரம்

வெயில் சுமக்காத போது?

இனத்துக்கு நிழல் ஏது?

நீ

வெயில் சுமக்காத போது?

உன்

கனவுகள் புதியன

கடமைகள் புதியன.

சூரியன் பழையதெனினும்

நாள் புதியது தானே?

யோசிக்கப் படைக்கப் பெற்ற மூளை பலர்க்கு

யோசித்துப் படைக்கப் பெற்ற மூளை உனக்கு

ஒவ்வோர் அரிசி மணியிலும்

உண்போர் பெயரை

எழுதியுள்ளதாம் இயற்கை.

இரண்டு ரூபாக்கு

நீ வழங்கும்

ஒவ்வோர் அரிசி மணியிலும்

உன் பெயர் எழுதப்பட்டிருக்கும்

தமிழ் பசியறியாது

உன் கையெழுத்தால்

தமிழ்நாடு பசியாறட்டும்

உன் கையொப்பத்தால்

உன்னை வாழ்த்துவோர் வரிசையில்

கையில் ஒரு பூங்கொத்தோடு

தமிழ்த்தாயும்.

இவ்வாறு கவிதையால் கருணாநிதியை நனைத்துள்ளார் வைரமுத்து.

  • தொடங்கியவர்

லக்கிலுக்

இவ்விடயம் எனக்கும் ஆச்சரியத்தை தந்தது. எப்படி எஸ்.வி.சேகரிடம் நெப்போலியன் தோற்று போனார் என்று??

வசம்பு!

ஊரைக் காவல் காக்கும் தலையாரியின் வீட்டில் திருடுப் போவது என்று தமிழகத்தில் உதாரணம் சொல்வார்கள்... அதுபோல ஆனது நெப்போலியன் கதை....

எப்படியும் ஜெயித்துவிடுவோம் என்ற மிதப்பில் தன் தொகுதியில் அவ்வளவாக பிரச்சாரம் செய்யாமல் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து திமு கூட்டணிக்கு நெப்போலியன் ஆதரவு தேடினார்....

கடைசியில் ஆமை முயலை வென்ற கதையாக 1657 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்....

சின்னக்குடி சொன்னதைப் போல பிராமணர்களும் சங்கராச்சாரியார் விவகாரத்தை மறந்து எஸ்.வி. சேகருக்கு பெருவாரியாக வாக்களித்திருக்கிறார்கள்....

வெள்ள நிவாரணம் மற்றும் சுனாமி நிவாரணப் பணிகளால் சென்னை முழுவதுமே கொஞ்சம் அதிமுக அலை வீசி இருப்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு உண்மையே.....

Vasampu எழுதியது:

லக்கிலுக்

இவ்விடயம் எனக்கும் ஆச்சரியத்தை தந்தது. எப்படி எஸ்.வி.சேகரிடம் நெப்போலியன் தோற்று போனார் என்று??

முன்பு நடந்த தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட எஸ்.வி.சேகர் கணிசமான தொகை வென்றிருந்தார். பிராமணராக உள்ள எஸ்.வி.சேகர், சாங்கராச்சாரியாரின் தீவிர பக்தர். இதனால் கிடைத்த பிராமணர்களின் வாக்குகள். தி.மு.கவின் கோட்டையாக உள்ள சென்னையில் இம்முறை வீசிய அ.தி.மு.க அலை.

pg2.jpg

:?: இன்பத்தமிழன், சரத்குமார், வைகோ, பாக்யராஜ், விஜய டி.ராஜேந்தர், திருமாவளவன், விசு, என்று ஏகப்பட்டவர்கள் கட்சி மாறி, அணி மாறி ஒரே குழப்பமாக இருக்கிறதே?

:!: சந்தர்ப்பவாத அரசியலின் உச்சகட்ட காமெடிகள் அரங்கேறிய தேர்தல் இது. போதும்டா சாமி!

நன்றி: அரசு

pg2.jpg

விஜயகாந்த் சினிமா ஹீரோதான் என்றாலும், இந்தத் தேர்தலில் கிட்டத்தட்ட சினிமாப் போலவே ஒரு பெரிய சக்தியாக எழுந்து நின்றிருக்கிறார். மதுரையில் கடந்த செப்டம்பரில் தே.மு.தி.க.வை அவர் ஆரம்பித்தபோது, 'கட்சிப் பெயரைக் கூட எளிதில் ஞாபகம் வைத்துச் சொல்ல முடியவில்லையே' என்ற விமர்சனங்கள்தான் எழுந்தன. கட்சி ஆரம்பித்த சூட்டோடு கொஞ்ச நாள் அமைதியாக இருந்த கேப்டன் பிறகு, தமிழகம் முழுவதும் ஆவேசமான சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தார். சென்ற இடமெல்லாம் அவருக்குக் கூட்டம் கூடியது, பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, அவரது கட்சி வேட்பாளர்கள், பெயர் தெரியாத ஆட்களாக இருந்தபோதிலும், பல தொகுதிகளில் பிரமிக்கத்தக்க அளவில் வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் ராஜமாணிக்கம் என்ற தே.மு.தி.க. வேட்பாளர், சுமார் 40,000 வாக்குகளைப் பெற்றுள்ளார். சமயநல்லூர் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரன் என்பவர், முப்பத்தாறாயிரம் ஓட்டுக்களுக்கு மேல் அதிகமாக வாங்கி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். மதுரை கிழக்குத் தொகுதியில் சி.பி.எம். வேட்பாளர் நன்மாறனும், ம.தி.மு.க. வேட்பாளர் பூமிநாதனும் தலா சுமார் 36,000 ஓட்டுகள் வாங்கிய நிலையில், இவர்களுக்குப் பின்னால் மூன்றாவது இடத்தைப் பிடித்த தே.மு.தி.க. வேட்பாளர் பெற்ற வாக்குகளோ சுமார் பதினேழாயிரம். இதேபோல்தான் திருமங்கலம் தொகுதியின் நிலையும். இங்கு மூன்றாவது இடம் பெற்ற தே.மு.தி.க.வின் வேட்பாளர் தனபாண்டியன் பெற்றது சுமார் இருபதாயிரம் வாக்குகள்.

மதுரையில் மட்டுமல்ல; விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் இதே நிலைதான். காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய தொகுதிகளில் இக்கட்சி வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுக்கள், சுமார் பதின்மூன்றாயிரம். மேலும், இவர்களுக்குக் கணிசமான தபால் ஓட்டுகளும் கிடைத்தது ஆச்சரியப்பட வைக்கிறது.

இந்த மாவட்டங்களின் நிலை இப்படியிருக்க... கோவையிலும் விஜயகாந்த் அலை வீசியது என்றுதான் சொல்ல வேண்டும். அங்குள்ள சிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் பொன்னுச்சாமி 31,000 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இங்கு சி.பி.எம். வேட்பாளர் சௌந்தரராஜன் தோல்விக்கு இவர்தான் முக்கியக் காரணம் என்கிறார்கள் தோழர்கள். இதேபோல, தொண்டாமுத்தூர் தொகுதியில் 37,000 ஓட்டுக்கள் தே.மு.தி.க.வுக்கு விழுந்திருக்கின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பி.யின் தோல்வியில் கேப்டனுக்கும் இப்படி பங்கு போய்ச் சேர்ந்திருக்கிறது.

இங்குள்ள திருப்பூர், பேரூர் தொகுதியில் இருபதாயிரத்துக்கும் மேல் ஓட்டுக்களை வாங்கிய தே.மு.தி..க., இம் மாவட்டத்தில் பெருவாரியாக உள்ள அருந்ததியினர் ஓட்டுக்களை கவர்ந்திருக்கிறது என்கிறார்கள். அத்துடன் இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் ஓட்டுக்களும் விஜயகாந்த்துக்கு விழுந்த ஓட்டுக்களில் அதிகமானவையாக உள்ளன.

சேலம் மாவட்டத்திலும் சேலம் _1, சேலம் _2, ஆத்தூர், தலைவாசல் போன்ற தொகுதிகளில் விÊஜயகாந்த் கட்சியினர் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பதினொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் தே.மு.தி.க. குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றுள்ளது. சேரன்மாதேவி தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் ராஜேந்திர நாத், எட்டாயிரம் வாக்குகளைப் பெற்றார். நெல்லை, பாளை, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், தென்காசி, ராதாபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட கேப்டன் கட்சி வேட்பாளர்கள், 5000_க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள்.

விஜயகாந்த்துக்கு விழுந்த ஓட்டுக்களில், ரசிகர்கள் ஓட்டுக்களைவிட, பொதுமக்கள் ஓட்டுக்களே அதிகம் என்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக, ஓர் அணியைத் தேடிக் கொண்டிருந்த ஒரு சாராரும் அவருக்கு அதிகமான வாக்குகளை அளித்திருக்கிறார்கள். தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் விஜயகாந்த் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

ஆக மொத்தம், சமூகத்தின் அடித்தட்டு மற்றும் இளைஞர்கள் திரும்பிப் பார்க்கிற தலைவராக விஜயகாந்த் வளரும் வாய்ப்பு, இத்தேர்தலில் அவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது என்பது உண்மை. ஆனால், முன் பேசப்பட்டது போல அ.தி.மு.க.வுடன் அவர் கூட்டணி வைத்திருந்தால், இவ்வளவு வாக்குகள் அவருக்கு விழுந்திருக்குமா என்பது சந்தேகமே.. "அவர் தனித்து நின்றதால், எக் கட்சியையும் சாராதவர்கள் அவருக்கு ஓட்டளித்தனர். அவரே கூட்டணி வைத்திருந்தால், இந்தளவுக்குப் பரவலான செல்வாக்கு அவருக்கு இருப்பது தெரியாமலேயே போயிருக்கும்" என்பது, அரசியல் விமர்சகர்களின் கருத்து.

"கறுப்பு எம்.ஜி.ஆர்." என்று, அவரது ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட விஜயகாந்த், கட்சி ஆரம்பித்து கையைச் சுட்டுக் கொண்ட பிற நடிகர்கள் மத்தியில் முதல் தேர்தலிலேயே பெரிய சக்தியாக எழுந்த தெம்பில் உயர்ந்து நிற்கிறார். இனிவரும் காலங்களில் அவர் செயல்பாடுகள் எப்படியிÊருக்கின்றன என்பதைப் பொறுத்துத்தான் அவர் வெறும் 'கறுப்பா' அல்லது கறுப்பு எம்.ஜி.ஆரா என்பது தீர்மானமாகும்!

நன்றி: குமுதம்

  • தொடங்கியவர்

முன்பு நடந்த தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில்  சுயேட்சையாக போட்டியிட்ட எஸ்.வி.சேகர் கணிசமான தொகை வென்றிருந்தார்.

தவறான தகவல் அரவிந்தன்.... 1989 தேர்தலில் எஸ்.வி. சேகர் நெடுஞ்செழியனை எதிர்த்து மயிலாப்பூரில் சுயேச்சையாக நின்று 1,000 ஓட்டுகளுக்குள் தான் வாங்கினார்.... நெடுஞ்செழியன் அவரை விடக் குறைவாக 450 ஓட்டுகள் தான் வாங்கினார்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்றா கருணா(நிதி)....

இது தான் கடசி தேர்தலா இருக்கனும் என்டு நினைக்கிறன். ***** :-)

மாறி மாறி நீயும் செல்வியும் தான் அந்த கதிரேல இருக்கனும் என்டா எப்படி??!?!

**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

கலைஞரை வாழ்த்தும் கவிஞர் வாலியின் கவிவரிகள்:

வாழ்த்திசை _ பாடுது

கீழ்த்திசை;

வந்தது

விடிவு ;

அய்ந்தாண்டு கால

அமாவாசைக் கான முடிவு;

அரியணை ஏறி

அமர்கின்றது _ எமது

அன்னைத் தமிழின்

ஆண் வடிவு!

அரசியல் பண்டிதர்

அளந்தனர் பக்கம் பக்கமாக...

இங்கங்கெனாது _ எங்கும்

இலை அலை என்று;

திருப்பிப் போட்டுத்

தீர்ப்புச் சொன்னது தேர்தல் _

இலை அலை என்பதை

அலை இலை என்று!

இது

இடம்பெயர்ந்த கண்ணகி

இட்ட சாபம்; சிறைப்

பட்ட கோபம்!

கோபத்தில்

கோவலன் மனைவி _

அன்று திருகி எறிந்தது முலை;

இன்று திருகி எறிந்தது இலை!

கலைஞர் கோவே! தொல்

காப்பியப் பூங் காவே!

கதாநாயகன் ஆனது _ உன்

கட்சியின் தேர்தல் அறிக்கை;

அதற்குக் காரணம் _

அதை வரைந்தது உன் நெறிக்கை;

அந்தத் தாள் _

ஆனது வாள்;

வில்லன்கள்

விலா எலும்புகள் தூள்!

புறங்கண்டாய்

புல்லாட்சி;

நல்க வந்தனை

நல்லாட்சி;

உன்

உயர்வை _

உள்ளது

உள்ளபடி...

ஏற்றப் போற்ற _ என்னிடம்

ஏது போதிய சொல்லாட்சி?

உன்னைப் பற்றிச்_ சுருக்கமாய்

உரைக்கப் போயின் _ நீ

தடியில்லாத பெரியார்;

பொடியில்லாத அண்ணா;

இருவரும் உன் வடிவில்

இருக்கின்றார் ஒண்ணா!

எந்தையே!

ஏறுக அரியாசனம்;

உலகு மிசை

உண்டோ _

உனது

உன்னதத்தை அறியா சனம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.