Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திலகன் என்னும் மகா நடிகன்

Featured Replies

திலகன் என்னும் மகா நடிகன்

பிரபலமான ஒருவர் மறையும் போது அவரைக் குறித்து எழுதப்படும் புகழ் மொழிகளுக்குப் பின்னால் அந்த‌புகழுரைகளுக்கு அவர் தகுதியானவர்தானா என்ற சஞ்சலம் ஒட்டிக் கொண்டிருக்கும். திலகன் விஷயத்தில் எந்த ஊடாட்டமும் இல்லை. தைரியமாக ஆத்ம சுத்தியோடு சொல்லலாம்,

உலகின் எந்த ஒரு நடிகனுடனும் ஒப்பிடக் கூடிய தகுதியும், திறமையும் கொண்ட மகா நடிகன்.

img1120924051_1_1.jpg

FILE

திலகன் பிறவிக் கலைஞன். நடிப்புதான் தனது வாழ்க்கை என படிக்கிற காலத்திலேயே வ‌ரித்துக் கொண்டவா. பள்ளி நாடகங்களில் தொடங்கி, நண்பர்களுடன் தொடங்கிய முண்டகயம் நாடக சமிதி, அதிலிருந்து படிப்படியாக கேரளா பீப்பிள்ஸ் ஆர்ட்ஸ் கிளப், காளிதாஸ் கலா கேந்திரா என முன்னேறி திரைத்துறைக்கு வந்தவர். அவ‌ரின் முதல் படம் பி.ஜே.ஆண்டனியின் பெ‌ரியார். 1973ல் வெளியான இந்தப் படத்தில் மிகச்சிறிய வேடத்தில் தோன்றிய திலகனை பெ‌ரிதாக யாரும் அடையாளம் காணவில்லை. அவரை முன்னிலைப்படுத்திய திரைப்படம் 1979ல் வெளிவந்த கே.‌ஜி.ஜார்‌ஜின் உள்கடல். அதன் பிறகு திலகன் என்ற நடிகன் மக்களின் மனதை மெல்ல ஆக்கிரமிக்க ஆரம்பித்தார். 1981ல் யவனிகா திரைப்படத்துக்காக திலகன் தனது முதல் மாநில விருதை பெற்றார்.

ஏற்றுக் கொண்ட கதாபாத்திரமாகூடுவிட்டு கூடு பாய்வதில் திலகன் அசகாயசூரர். தனக்கே உ‌ரிய உடல் மொழியையோ, மேன‌ரிஸங்களையோ அவர் உருவாக்கிக் கொண்டதில்லை. கதாபாத்திரம் எதை கோருகிறதோ அதை மட்டும் பிரதிபலித்தவர். கேரளாவில் நடிகர்களை அப்படியே இமிடேட் செய்யும் மிமிக்‌ரி கலைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களின் கிண்டலுக்கு தப்பாத அரசியல்வாதியோ, நடிகனோ அங்கு இல்லை. மம்முட்டியும், மோகன்லாலும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அவர்களை இமிடேட் செய்து கிண்டல் செய்யும் நிகழ்ச்சிகள் அரங்கேறும். மிமிக்‌ி கலைஞர்களால் மிகக் குறைவாக இமிடேட் செய்யப்பட்டவாகள் திலகனும், நெடுமுடி வேணுவும்தான். இருவருக்கும் பொதுவான மேன‌ரிஸங்கள் என்று எதுவும் இல்லை. இருவரும் கதாபாத்திரங்களாக மாறக் கூடியவர்கள்.

திலகன் ஏற்று நடித்த பாத்திரங்கள் ஒவ்வொன்றும் வாழும் சித்திரங்கள் எனலாம். அவரை அகங்காரம் கொண்ட காரணவராகவே பல படங்கள் சித்த‌ரித்தன. அதன் தொடர்ச்சியாகதான் சத்‌ரியன் படத்தில் அவர் வில்லனாக நடித்ததும். ஆனால் திலகன் எல்லாவித கதாபாத்திரங்களையும் அனாயாசமாக கையாளக் கூடியவர். கி‌‌ரீடம் படத்தில் மகன் ஒரு நல்ல நிலையை எட்ட வேண்டும் என்ற பதைபதைப்புடன் வாழும் தந்தை. அது கண் முன்னால் நொறுங்கிப் போகும் போது அவர் வெளிப்படுத்தும் விரக்தி... திலகனால் மட்டுமே சாத்தியம். லோகிததாஸின் திரைக்கதையில் வந்த கி‌‌ரீடம் திலகனின் திரைவாழ்க்கையில் மறக்க முடியாத படம். அதன் தொடர்ச்சியாக வந்த செங்கோல் படத்தில் நியாய தர்மங்களையும், சுய கௌரவத்தையும் வறுமையின் முன் தொலைத்து மகளை நாடகத்திற்கு என்று சொல்லி விபச்சாரத்துக்கு அழைத்து செல்லும் தந்தையின் கதாபாத்திரம். தனது உண்மை முகம் மகனின் முன்னால் தெ‌ரிய வரும் போது அதனை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் இயலாமையும், பேடிமையும் மலையாள ரசிகன் ஒவ்வொருவ‌ரின் மனதிலும் கல்வெட்டாக பதிந்திருக்கும்.

img1120924051_1_2.jpg

FILE

தந்தையாக திலகன் நடித்த கதாபாத்திரங்கள்தான் எத்தனையெத்தனை. இன்னொரு மறக்க முடியாத தந்தை கதாபாத்திரம் ஸ்படிகம் படத்தில் இடம்பெறுவது. அதில் திலகன் கணக்கே உலகை ஆள்கிறது என்ற விடாப்பிடி கொள்கையுடைய கணக்கு வாத்தியார். அவ‌ரிடம் அதிக அடியும் அவமானமும் படுகிற மாணவனாக அவரது மகன் மோகன்லால். மகனின் தொழிலநுட்ப அறிவை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து துன்புறுத்த ஒருகட்டத்தில் மகன் ரவுடியாக மாறுகிறான். தந்தையின் பிடிவாதம் தொடர்கிறது. மகள், மனைவி என ஒவ்வொருவராக அவரைவிட்டு விலக, மெதுவாக மகனின் அருமை தெ‌ரிய வருகிறது. கத்திக்குத்துப்பட்டு மகன் மருத்துவமனையில் படுத்திருக்க யாருக்கும் தெ‌ரியாமல் மகனைப் பார்க்க திலகன் வருவார். மகனை பார்த்துவிட்டு திரும்புகையில் எதி‌ரில் தெ‌ரிந்தவர்களை கண்டதும் சட்டையை சுருட்டிவிட்டு தலையில் துண்டை போட்டு ஒரு நடை நடப்பார். துயரம், அன்பு, பச்சாதாபம் எல்லாம் கலந்த நடை. மகா நடிகனின் நடை.

வீண்டும் சில வீட்டுகா‌ரியங்கள் படத்தில் திலகன் ஜெயராமின் தந்தை. இதுவும் லோகிததாஸ்தான். சின்ன வயதில் கஷ்டப்பட்டு பெரும் பொருள் சேர்த்து பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு ஆளாக்கிய தந்தை. அவ‌ரின் இளைய மகன் ஜெயராம் நாடக மோகி. திலகனும் அப்படியே. எங்கு நாடகம் நடந்தாலும் சென்றுவிடுவது தந்தை, மகனின் வழக்கம். இந்த விஷயத்தில் இருவரும் கூட்டு‌களவாணிகள். ஜெயராமை திலகன் வாருவதும், ஜெயராம் திருப்பியடிப்பதுமாக படம் கலகலப்பாக செல்லும். ஒருமுறை நள்ளிரவு தாண்டியும் வீட்டிற்கு வராத திலகனின் மீது மனைவியும் பிள்ளைகளும் கோபத்துடன் காத்திருக்க, திலகன் அவர்களை சமாளித்து, அவர்களையே கோபித்து எஸ்கேப்பாகும் இடம் எப்போது நினைத்தாலும் சி‌ரிப்பை வரவழைக்கக் கூடியது. இளைய மகளின் திருமணத்துக்கு பணம் இல்லாமல் திலகன் கொள்ளும் கவலையும், மருத்துவமனையில் நெஞ்சுவலிக்கு சிகிச்சை எடுத்து படியேறிவரும் அந்த தடுமாற்ற நடையும் ஒரு நடுத்தர வர்க்க தந்தை எப்படி இருப்பார் என்பதற்கான அகராதி.

சந்தேஷம் படத்தில் போஸ்ட்மாஸ்டராக பல ஊர்களில் கடுமையாக உழைத்து கடைசியில் ஓய்வு பெற்று மனைவி பிள்ளைகளுடன் வாழும் தந்தையின் கதாபாத்திரம். ஜெயராமும், சீனிவாசனும் வளர்ந்த பிள்ளைகள். ஒருவன் கம்யூனிஸ்ட், இன்னொருவன் காங்கிரஸ். இவர்களின் கட்சி வெறியால் திலகனின் கனவுகள் ஒவ்வொன்றாக துண்டாடப்படும். எல்லாம் நகைச்சுவைதான். ஆனால் கேரளாவில் சகோதரர்கள் வெ‌வ்வேறு கட்சிகளில் இருந்தால் அவர்கள் கண்டிப்பாக விரோதிகளாகதான் இருப்பார்கள். அந்தளவு கட்சிதான் அவர்களுக்கு முதலிடம். அதனை பொட்டில் அடித்தது போல் சொன்ன படம். ஜெயராமும், சீனிவாசனும் இருந்தாலும் திலகன்தான் கதையின் நாயகன்.

http://tamil.webdunia.com/entertainment/film/article/1209/24/1120924051_1.htm

[size=4]கிரீடத்தை இறக்கி வைத்த நடிகர் திலகன்[/size]

[size=4]

oil-painting-of-Thilakan_oeuvre_grand.jpg[/size]

[size=4]Pavithram.jpg[/size][size=4]'பவித்ரம்" என்றதொரு மலையாளப் படம், கிட்டத்த ஏழெட்டு வருஷங்களுக்கு[/size]

[size=4]முன்னர் பார்த்திருந்தேன். இளந்தாரி மகன் மோகன்லால் ஷோபனாவுடன் காதல் வயப்பட்டு கல்யாணம் முடிக்கும் தறுவாயில் ஒரு புறம், இன்னொரு புறம் மூத்த மகன் சீனிவாசன் மணம் முடித்தும் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருப்பவர், இவர்களின் பெற்றோர் திலகன், ஸ்ரீவித்யா. தன் மூத்தமகனுக்குக் குழந்தை கிடைக்கவேண்டும் என்று வேண்டுதலோடு இருக்கும் ஸ்ரீவித்யாவுக்கு திலகன் மூலம் மீண்டும் ஒரு குழந்தை. பிறக்கும் போதே தாயைப் பரலோகம் அனுப்பிய பாவம் அந்தக் குழந்தைக்கு. திலகனுக்கோ தன் இச்சையின் விளைவு குழந்தையாக வந்து எள்ளலுக்கு ஆட்படும் அவமானம், ஒரு நாள் எல்லோரது கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார். தன் காதலை இழந்து, தந்தையாகவும், சகோதரனாகவும் மாறவேண்டிய அவல வாழ்வில் மோகன்லால். இறுதியில் எல்லாம் இழந்து பைத்தியக்காரன் ஆகிவிடுவார் மோகன்லால் . இப்படியான சின்னப்பாத்திரம் என்றாலும் மிகை நடிப்பற்ற, இயல்பான தன் நடிப்பினால் கேரளம் கடந்தும் அறியப்பட்டவர் திலகன். செங்கோல், கிரீடம் போன்ற படங்களில் திலகனின் பங்கு பெரும்பங்கு.

மலையாள சினிமாவின் குணச்சித்திரங்களின் பட்டியலில் முரளி, கொச்சின் ஹனீபா, ராஜன்.பி.தேவ் ஐத் தொடர்ந்து திலகனின் இழப்பு இன்று. இப்படியான மலையாள நடிகர்களை பெரும்பாலும் வில்லத்தனமாகக் காட்டும் எல்லையோடு நிற்கும் தமிழ் சினிமாவிலும் திலகனின் பரவலான அறிமுகம் சத்ரியன் படத்தின் அருமை நாயகம் என்ற வில்லனாக மலையே கவிழ்ந்தாலும் காட்டுக்கூச்சல் கத்தாத மென் நடிப்பில் பன்னீர்ச்செல்வம் என்ற விஜயகாந்த் இற்கு பெரும் தலைவலியாகப் படம் முழுதும் வருவார். பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகனுக்கோ கடுப்பேத்தும் நோகாமல் கொல்லும் இவரின் வில்லத்தனம். கரகரத்த சிரிப்பும், தீர்க்கமான பார்வையும், அலட்சியமான முகபாவமும் திலகனின் சொத்து.

சாணக்யன் போன்ற மலையாளப்படங்களில் முக்கிய வில்லன் பாத்திரத்தில் வைத்திருந்தாலும் தமிழில் கமல் போன்ற முன்னணி நடிகர்களே திலகனை ஆராதிக்கவில்லை. சத்ரியனுக்குப் பிறகு அவருக்குக் கிடைத்த பாலா படத்தில் சிறப்பாகச் செய்திருந்தாலும் அதற்கு முன் வந்த மேட்டுக்குடி படம் தான் அவருக்கான இன்னொரு சொல்லிக்கொள்ளும் படமாகத் தமிழில் கிட்டியது. மலையாளத்தின் எண்ணற்ற படங்களில் நடித்துக் கரைகண்டிருந்த திலகனின் சமீப ஆண்டுகள் தொழில் ரீதியில் அல்லல் மிகுந்தவை ஆனாலும் சளைக்காத போர்க்குணத்தோடு தன் கருத்தில் வழுவாது இருந்தவர். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்[/size]

[size=4]http://radiospathy.blogspot.com.au/2012/09/blog-post_24.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த அற்புதமான நடிகர் இவர் ஆத்மா சாந்தியடையட்டும்

இப்ப தான் சில வாரங்களுக்கு முன் மலையாள படங்களை திட்டி ஏதோ படித்தமாதிரி ஞாபகம் .

மிக நல்ல ஒரு நடிகரை இழந்துவிட்டோம்.அஞ்சலிகள் . இப்போ இரண்டு மூன்று வருடங்களாக மலையாள கதாநாயகர்களுடன் பிரச்சனை பட்டு படங்கள் இல்லாமல் இருந்தார் .

இப்போ மம்முட்டியின் கொடுப்பில் மட்டுந்தான் ..மட்டுமே சிரிப்பிருக்கும்....

அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்....

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திறமையான நடிகர், அவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நடித்த படங்களில் சத்திரியன் இன்றும் நினைவை விட்டு அகலாதவை .....

இவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.