Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு மணம் பலமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி அங்கிள் கதை நல்லாயிருக்கு. ஆனால் தொடரை கொஞ்சம் விரைவாக தந்தால் எங்கள் ஆவல் தொடராதல்லவா.

  • Replies 151
  • Views 22.7k
  • Created
  • Last Reply

ஆஹா ... கதை அருமை....ம்ம் அடுத்த பாகத்தையும் சீக்கிரம் எழுதிப் போடுங்க... வாசிக்க ஆவலாக இருக்கு.... :lol:

ஆகா நான் இப்பத்தானே பாக்கிறேன் இதெல்லாம் நடக்குதா நடக்கட்டும் ?

உங்களுக்கு வாழ்க்கையில் நடக்கிற கதைகளை எல்லாம் எழுத்தி;ல் வீசிகின்றீர்கள் மனதில் இருக்கும் பாரங்களை எல்லாம் நீங்கிடும் என நினைக்கிறேன் ம் நன்றகத்தான் இருக்கு

என் கதைகள்மாதிரி இருக்கு வாழ்த்தக்கள் சாத்திரி :lol:

என் கதைகள்மாதிரி இருக்கு வாழ்த்தக்கள் சாத்திரி

என்ன உங்க கதை மாதிரி இருக்கா................ :shock: புறாக்களுக்கும் இப்படியெல்லாம் நடக்கிறதா... :roll:

என்ன உங்க கதை மாதிரி இருக்கா................ :shock: புறாக்களுக்கும் இப்படியெல்லாம் நடக்கிறதா... :roll:

பின்ன மனிசர்களுக்கு மட்டுமா நடக்கும்

புறாவுக்கு நடக்காதா ஆ எனக்கு 5 அறிவுதான் ஆனால் மனிதர் மாதிரி அறிவு :roll: :evil:

பின்ன மனிசர்களுக்கு மட்டுமா நடக்கும்

புறாவுக்கு நடக்காதா ஆ எனக்கு 5 அறிவுதான் ஆனால் மனிதர் மாதிரி அறிவு :roll: :evil:

புறா இப்ப மீனாகிட்டுதோ? :roll:

ஏன் அந்த மீனை பிடித்து சமைக்க போறிங்களா வெண்ணிலா :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கு சாத்திரி தொடர்ந்து எழுதுங்கோ

ஏன் அந்த மீனை பிடித்து சமைக்க போறிங்களா வெண்ணிலா :lol:

சமைக்கலாம் தான். ஆனால் மீன் துடிச்சிட்டே இருக்குதல்லவா? :cry: :cry:

அட நீங்க வேற போங்க வெண்ணிலா?

எல்லாரும் அதிகமாக துடிக்கின்ற மீனை தானே பிரும்பி வேண்டிவினம் ?அதான் கறிக்கு மிகவும் ருசியை கொடுக்கும்

அது க்கு ஏன் அழுகிறிங்கள் சா துடிக்கின்ற மீனை நானே கொண்டுட்டு தாறேன் சமையுங்கள் :P :oops:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர் 3

சில நாட்களின் பின்னர் நான் வழமை போல எனது வெலைக்குத் திரும்பிவிட்டேன் அனால் முன்பு போல சுராயாவிடம் அவ்வளவாக நெருக்கம் காட்டுவதையோ பேசுவதையோ தவிர்த்தேன் காரணம் வெறுப்பால் அல்ல அவள் என்னை பார்த்து காதலிக்கிறேன் என்று சொன்னதன் பின்னர் எனது மனப்பூனை மதிலில் ஏறி அமர்ந்து விட்டது அது எங்கே அவளின் பக்கம் பாய்ந்து விடுமோ?? என்கிற பயத்தில்தான் அவளிடம் தனிமையான நெருக்கமான் சந்தர்ப்பங்களைத் தவிர்த்தேன் என்பதுதான் உண்மை.

என்ன விரும்பினால் விருப்பம் எண்டு சொல்லறது தானே அதை விட்டிட்டு ஏன் இப்பிடி ஒழிக்கிறாய் எண்டு நீங்கள் கேக்கிறது விழங்குது அதைத்தான் அவளும் என்னிடம் கேட்டாள். ஆனால் எனக்கோ எனக்கு மனைவியாய் வரப் போகிறவள் இப்படித்தான் இருக்க வெண்டும் எனது குடும்பம் இப்படித்தான் அமைய வேண்டும் என்று சில கனவுகள் கற்பனைகள் இருக்கு.

சுராயா அழகான அன்பானவள் தான் ஆனாலும் நாளை குடும்பம் என்று வருகிற போது என்னுடைய அந்தக் கற்பனை மனைவியாக இருக்கமாட்டாள் என்பது நிச்சயம். காரணம் அவளது பழக்கவழக்கம் கலாச்சாரம் என்பது என்னுடைய பழக்க வழக்கங்களுடன் ஒத்து போகாது.அப்ப பிடிக்காட்டில் நேரடியா பிடிக்கேல்லையெண்டு சொல்லுறதுதானே எண்டுறீங்கள். அதைத் தான் இப்ப சொல்லப் போறன் ஆனாலும் அதை உடன எனக்கு ஏனோ சொல்ல முடியலை. ஒருவிதமான தடுமாற்றத்தில் இருந்தேன். அவளது மனதை உடைக்க விரும்பவில்லை எனது மறுப்பைச் சொல்ல ஒரு காரணத்தை எதிர் பார்த்திருந்தேன். அதே நேரம் எனக்கு திருமணப்பேச்சும் நடந்து கொண்டிருந்ததால் அது நிச்சமானதும் சொல்லாமென்று சில நாட்கள் காத்திருந்தேன். இன்று சொல்லி விடலாம்.

சுராயா எனக்குப் பக்கத்தில் வந்து அமர நானே பேச்சைத் தொடங்கினேன். சுராயா நான் சொல்வதைக் கவனமாகக் கேள் சொல்ல கஷ்டமாத் தான் இருக்கு ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும். நான் நாளை இந்தியா போகிறேன். அங்கு எனக்குத் திருமணம் நிச்சமாகி இருக்கிறது. எனவே உனது காதலை என்னால் ஏற்றுக் கொள்ள முடியலை. ஆனால் அதுக்கு இது மட்டும் தான் காரணம் அல்ல பல காரணங்கள் உண்டு அதில் இதுவும் ஒரு காரணம் எனவே என்னில் ஏதாவது தவறு இருந்தால் மன்னித்து விடு. நீ உனது காதலை எனக்குத் தெரியப் படுத்தின உடனேயே எனது மறுப்பைச் சொல்லியிருக்க வேண்டும் சொல்லாதது எனது தவறு தான் நானும் யோசிக்க வேண்டியிருந்தது. எனவே அதற்காகவும் மன்னிப்புக் கேட்கிறேன் என்றதும். சூரிய காந்திப்பூவாய் இருந்த அவளது முகம் திடீரென சுருங்கிக் காய்ந்து சருகானதை கவனித்தேன்.

நீ எனது காதலை ஏற்று எனக்கு அதை சொல்லதான் அழைத்தாய் என்று ஆசையாய் அருகில் வந்தேன் அனால் நீ இப்பிடி சொல்லிட்டியே. எப்பிடி பழகிப் பார்க்காத புரிந்து கொள்ளாத தெரியாத ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்த போறாய் என்று வழமையான ஒரு மேலைத்தேய பெண்களின் கேள்வியை அவளும் கேட்டாள். திருமணத்தின் பின்னர் புரிந்து கொள்ளலாம் என்று விளக்கம் கொடுத்தேன் இப்படியே அவளின் கேள்விகளும் எனது பதிலும் வாதம் பிரதி வாதம் என்று சுமார் ஒரு மணி நெரத்திற்கும் மேலாக எங்கள் வாதம் தொடர இடையில் தனக்கு இன்று வேலை செய்யும் மன நிலை இல்லை எனவே லீவு வேண்டும் என்று கேட்டவள். எனக்கு குடிக்க வேண்டும் போல் உள்ளது உனக்கு ஏதாவது வேண்டுமா என்றாள்.

நானோ வேண்டாம் எனக்குப் பயண வேலைகள் உள்ளது எனவே ஒரு பியர் மட்டும் கொண்டுவா என்று சொல்லி விட்டு உரையாடலை தொடர்ந்தோம். இடையிடையே எழுந்து போய் வொட்கா வில்(ஒருவகை மது பானம்)ஒறேன்ஞ் யூசை கலந்து கொண்டு வந்து குடித்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தவள் நேரம் செல்லச் செல்ல விடுதிக்குள் ஆட்களும் வரத் தொடங்கி விட்டனர்.

அவளிற்கு போதையேறி வார்த்தைகள் தளம்பித் தடுமாறி அழத் தொடங்கி விடவே நான் அத்துடன் கதையை நிறுத்தி விட்டு. சரி சுராயா நான் போக வேண்டும் எனவே வா உன்னை உனது வீட்டில் விட்டு விட்டுப் போகிறேன் என்றவும் அவளோ வேண்டாம் நான் வீட்டிற்கு போகவில்லை எங்காவது ஒரு தனிமை எனக்குத் தேவைப் படுகிறது நான் அருகிலுள்ள பூங்காவிற்கு போகிறேன். நீ போய் வா நல் வாழ்த்துக்கள் என்றபடி எழுந்து சற்று தள்ளாடிய நடையுடன் போய்க் கொண்டிருந்தவளை அழைத்தேன்.

சுராயா....மன்னித்துக் கொள் என்னில் கோபம் இல்லையே என்றேன். திரும்பி வந்தவள் என்னைக் கட்டியணைத்து எனது கன்னத்தில் ஒரு முத்தமிட்டு இல்லை கோபம் இல்லை உனது பயணம் நல்லபடி அமையட்டும் என்றாள். சரி சுராயா நன்றி இன்றிலிருந்து நான் திரும்ப வரும்வரை லோறொன்தான்(என்னுடன் வேலை செய்யும் பிரெஞ்சுக் கார நண்பன்) எனது இடத்தில் பொறுப்பாக இருப்பான் உனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அவனிடம் கதைத்துக் கொள் பத்திரமாக போ விரைவில் சந்திப்போம் என்று கூறி அவளிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து எனது மீதிப் பயண அலுவல்களைத் தொடர்ந்தாலும் எனக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வு குடிபுகுந்து விட்டிருந்தது.

சுராயா விடயத்தில் நான் செய்தது சரியா? தவறா? என்று என்னால் சரியான முடிவெடுக்க முடியவில்லை. எனது நண்பன் ஆனந்தனோ நான் எடுத்தது சரியான முடிவுதான் என்று என்னை ஆறுதல்ப் படுத்தினான். காலை வேளைக்கு எழும்ப வேண்டும் எல்லாவற்றையும் ஒழுங்கு படத்திவிட்டு அலாரத்தையும் வைத்து விட்டு படுக்கையில் விழுந்தேன். நித்திரை வரவில்லை கண்ணை மூடினால் சுராயாவின் அந்த விசும்பலே சுத்திச் சுத்தி வந்தது. புரண்டு புரண்டு படுத்த நான் எத்னை மணிக்கு நித்திரையானேன் என்று தெரியாது ஆனால் ஏதோ படுத்ததும் அலாரம் அலறியது போல் இருந்தது. திடுக்கிட்டு எழுந்து அலாரத்தை நிறுத்தி விட்டுப் பறப்பட தயாரானேன்.....

கதை மிகவும் நன்றாகப்போகின்றது...

மேலத்தேயப் பெண் வாழ்க்கைக்கு ஒத்து வராது என்றும் சமுதாயத்திற்குப் பயந்தும் நமது நாட்டுப் பெண்ணை மணம் முடிக்கப் போகின்றீர்கள்.(தங்கள் விருப்பங்களை மறைத்து விட்டு) ..ம்...மணம் முடித்து வந்ததும் மணப்பெண் மேலத்தேயப் பெண்ணாக மாறாமல் இருந்தால் சரி. சுரயாவுக்கு அனுதாபங்கள் உரித்தாகட்டும்

மன்னிக்கவும் இருமுறை பதிவாகி விட்டது

சரியான முடிவு தான் எடுத்திருக்கிறியள் சாத்ரி தாத்தா. ம்ம் தொடர்ந்து எழுதுங்கள்.

சாத்திரித் தாத்தா இன்றுதான் பாகம் 3 வரை வாசித்து முடித்தேன் நன்றாக இருகிறது மேலும் படிக்க ஆவலாக காத்திருக்கின்றேன் தொடருங்கள்

வாழ்த்துக்கள் சாத்திரியரே நன்றாக எழுதிறிங்கள் மனதில் இருக்கிறது எல்லாமே யாழிஇறக்கி வையுங்கள் நாங்கள் அதை பாத்து ரசிக்கின்றோம் தொடருங்கள் சோகமான கட்டம்என்றால் அழுவும் இருக்கின்றோம் நகச்சுவையாக இருந்தால் வயிறு குளுங்க சிரிப்போம்

சாத்திரி பாகம் - 3 நன்றாக இருக்கின்றது. தொடருங்கள். மற்ற பாகத்தையும் எதிர்பார்க்கின்றோம்.

திங்கள் கிழமையாச்சு எங்க பாகம் 4?

திங்கள் கிழமையாச்சு எங்க பாகம் 4?

இன்னும் திங்கட்கிழமை முடியல்லை சினேகிதி :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர் 4

விமானநிலையம் வரை எனது நண்பன்: வந்து வழியனுப்பி வைத்தான் விமானம் கிழம்பிய சில நிமிடத்தில் எனது கைப் பையை திறந்து நான் விமானத்தில் படிப்பதற்கு தயாராய் வைத்திருந்த ஒரு புத்தகத்தை பிரித்தேன் . காரணம் அதற்குள் நான் திருமணம் செய்ய போகும் பெண்ணின் படம் இருந்தது அதனை எடுத்து மீண்டும் ஒரு முறை பார்த்து எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன். இவ்வளவு நேரமும் நான் திருமணம் செய்ய போகின்ற பெண்ணின் பெயரை கூட சொல்லாமல் உங்களிற்கு கதை சொல்லுறன் நான்.

அவரின் பெயர் நிதர்சினி இரண்டு அண்ணன்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள் இவர் ஒரேயொரு தங்கை அவரை போலவே பெயரும் அழகாக தான் இருக்கிறது என்று நினைத்தவாறு புத்தகத்தை சிறிது படித்த நான் முதல்நாள் இரவு சரியாக நித்திரை கொள்ளாததால்: அப்படியே தூங்கி பொனேன்.

ஒரு மாதிரி தமிழ்நாடு மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து சேர்ந்தாகி விட்டது எனது வழைமையான் சோதனைகளை முடித்து கொண்டு வெளியேறிய பொது வெளியில் எனக்காக அம்மா தம்பி தங்கை மற்றும் பெண்ணின் தந்தை என்று ஒரு கூட்டமே காத்திருந்தது. அவர்கள் வந்திருந்:த வானில் ஏறி மாறி மாறி பலரின் கேள்விகளிற்கும் பதிலளித்தபடி அவர்கள் தங்கியிருக்கும் அண்ணா நகர் நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்:தது.

பெண்வீட்டார் அண்ணா நகரில் ஒரு வசதியான் குடியிருப்பு பகுதியில் மூன்று அடுக்குகள் கொண்ட வசதியான ஒரு மாடி வீட்டில் குடியிருந்தனர் . எங்கள் வீட்டு காரருக்கும் அருகிலயே ஒரு வீடு வாடைகைக்கு பிடித்து குடுத்திருந்தனர். இன்னும் இரண்டு நாளில் திருமணம். எனக்கு எந்த வேலையும் இருக்கவில்லை போனதிலிருந்து தம்பி தங்கைகளுடன் சாமான் வாங்குவது படம் பார்க்க போவது என்று இரண்டு நாளும் போய் விட்டது.திருமணம் பேசி சரிவந்த நாளிலை இருந்து இன்னும் ஒரு வசனம் கூட நான் நிதர்சினியொடை கதைக்கேல்லைஅதற்கிடையில் நான் ஆசையாய் நிதர்சினிக்கு வாங்கிய பொருட்களை கொடுத்து அதே சாட்டிலை கொஞ்சம் கதைப்பம் எண்டு பலமுறை முயற்சித்தம் சரி வரேல்லை

இரண்டு தடைவை அவர்கள் வீட்டிற்கு போயிருந்தும் அவரது வீட்டு காரர்களே என்னுடன் கதைத்தனர் நிதர்சினி மாடியிலிருந்து இறங்கி வரவே இல்லை சரி வெட்கமாய் இருக்கும் என்ற நினைத்தபடி நான் வாங்கிய பொருட்களை நிதர்சினியிடம் கொடுக்கம்படி எனது தங்கையிடமே கொடுத்தனுப்பி விட்டேன்.

திருமண நாளும் வந்தது காலை நாள் பாத்த நட்சத்திரம் பார்த்து ஒரு பிரபலமான சிவன் கொயிலில் தாலி கட்டு. சொந்தம் பந்தம் நண்பர் என்று நிறைய சனம் வந்திருந்தனர் பெண்ணின் சதோரர் உட்பட பலர் வெளி நாடுகளில் இருந்தும் வந்திருந்தனர்.நாலு புரோகிதர் மந்திரம் ஓத மேளம் கொட்ட சென்னை வெய்யில் வெக்கை காணாது என்று அய்யர் வேறு ஓமம் வளர்த்த வெக்கையில் வியர்வையில் குளித்தபடி ஒரு மாதிரி தாலி கட்டி முடிந்தது .

அன்று மாலை வடபழனியில் ஒரு பிரபல நட்சத்திர விடுதியொன்றில் வரவேற்பு நடந்தது.காலை வேட்டி சேலையில் வந்து பய பக்தியாய் கோயிலில் விபூதி குறியுடன் மரக்கறி சோறு சாப்பிட்டவர்கள் எல்லாரும் மாலை நட்சத்திர விடுதியில் கோட் சூட் குட்டை பாவாடையுடன் வந்து மதுவும் மாடு ஆடு என்று போட்டு தாக்கி கொண்டிருந்தனர். பெண் வீட்டாரும் ஏன் எனது பக்கமும் தான் பணத்தை இறைத்து தங்கள் கெளரவத்தை நிலை நாட்டி அதனை வீடியொ பதிவாக்கிகொள்வதில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர்.வரவேற்பு முடிந்து இரவு எல்லோரிடமும் விடைபெற நள்ளிரவாகி விட்டது .

அன்று முழுவதும் கூட ஒரு வசனம் நிதர்சினியிடம் பேச கிடைக்கவில்லை வந்தவர்களை பார்த்து சிரிப்பதும் அவர்களுடன் கதைக்கவுமே நேரம் போய் விட்டது ஆனாலும் இடைக்கிடை எனது புது மனைவியை நான் பார்த்தாலும் அவள் காலையில் குனிய போட்ட தலைதான் இடையிடை நிமிர்ந்து சிலரிடம் கதைத்தாலு்ம். என்பக்கம் திரும்பவே இல்லை என்ன இருந்தாலும் இவ்வளவு வெக்கம் கூடாது என்று நினைத்த நான் சரி போக போக சரி பண்ணுவம் என்று நினைத்த கொண்டேன்.

புது தம்பதியினரான எங்களிற்கு அன்று அந்த விடுதியிலேயெ தங்க அறையும் ஒழுங்கு செய்ய பட்டிருந்தது. எங்கள் மற்றும் பெண் வீட்டு காரரும் மற்றவர்கள் கொண்டுவந்து இறைத்த விட்டு பொன பரிசு பொருட்களையெல்லாம் வானில் எற்றி விட்டு கேலியும் கிண்டலுமாய் விடை பெற்று கொள்ள தங்கை வந்து உங்களுக்கு தேவையான உடுப்பெல்லாம் அறையிலை வைச்சிருக்கு என்று செல்லி ஒரு சிரிப்புடன் விடை பெற்றாள். நாங்கள் எங்களது அறைக்குள் போனதும் நிதர்சினியடம் எனக்கு சரியான வியர்வையா இருக்கு குளிக்க வேணும் நீர் குளிக்கிறதெண்டா குளிச்சிட்டு வாரும் என்றவும் .

ம்.....என்றவள் தனது உடுப்பகளை எடுத்து கொண்டு குளியலறைக்குள் நுளைந்தாள். அப்பாடா இப்பவாவது ம்...எண்டொரு வசனம் பேசினாளெ என்று எனக்குள் சந்தோசம் கரை புரண்டு ஓடியது.அடுத்ததாய் நானும் போய் குளித்து விட்டு தலையை துடைத்த படி வெளியெ வர நிதர்சினியொ காலில் இருந்து தலை வரை போர்த்தபடி நன்றாக உறங்கி கொண்டிருந்தாள் . வந்து பார்த்த எனக்கு சிரிப்புதான் வந்தது சரி பாவம் காலை வேளைக்கு எழும்பினது அதொடை கன நேரம் நிண்டது எண்டு அலுப்பாய் இருக்கும் எனக்கும் சரியான களைப்பாக தான் இருந்தது உச்சதில் இயங்கி கொண்டிருந்த ஏ.சி யை கொஞ்சம் குறைத்து விட்டு அருகில் மெதுவாய் படுத்து நானும் உறங்கி போனேன் :arrow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி கதை நன்றாக இருக்கு தொடருங்கள் :P :P :P :P

ஆகா ஆகா தொடர் 4 நன்றாகப் போகின்றது தொடருங்கள் தாத்தா வெகு விரைவில் அடுத்த பாகத்தை படிக்க எதிர் பார்த்த படியே :P :P :P

சீ அவ்வளவுதானா? என்னாப்பா மெகா சீரியலில வாற சஸ்பென்ஸ் மாதிரிக்கிடக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியாரே.. சீரியல் மாதிரிப்போகுது.. விடிய எழும்ப ஏதாவது பாம் வைச்சிருக்கப்போறாவோ என்னவோ..?? என்ன தான் இருந்தாலும் இவ்வளவு வெட்கம் ஆகாது.. பாவம் சாத்திரி எவ்வளவு தூரம் பிரயாணம் செய்து போயிருக்கிறார்.. ம் அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்தபடி.. :wink: :P

:lol::lol::lol: நிதர்சினி ம் என்று சொன்னதுக்கு சாத்ரி தாத்தா சந்தோசப்பட்டாராம். அட இனி என்ன நடக்கும்? வாசிக்க ஆவலோடு இருக்கிறன். :P :P :P இந்தளவு நேரமும் கதைக்காமல் இருந்தவா இனித்தான் தன் வாய்வீரத்தை காட்டப்போறாவோ? :?: :arrow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.