Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம் பெயர்ந்தவனின் ஏக்கங்கள்!

Featured Replies

அழகான, ஏக்கத்தை அதிகரிக்க வைக்கும் கவிதை.

மீண்டும் ஊருக்குப் போகும் போது, அந்த நிகழ்வு, தெரியாத அயலவர் முகங்கள், பழக்கமில்லாத கடைக்காரர் என்று அந்நிய ஊருக்கு வந்தது போல் ஒரு உணர்வைக் கொடுப்பதும் இயல்பாகிவிட்டிருக்கிறது.

அதே பள்ளிக்கூடம், கோயில், எல்லாம் இருந்தும், தெரிந்த ஊரவர், உறவுக்காரர் (சிலரைத் தவிர) மற்றும் நண்பர்கள் இல்லாதது, ஒரு வெறுமையை காட்டியது வியப்பல்லவே!

உண்மையைச் சொன்னால் உணவுப் பண்டங்களை தேடி ஊருக்குப் போவது அனாவசியம், ஏனெனில், இங்கே எல்லாமே கிடைக்கிறது. அவுஸ்திரேலியாவில் கஷ்டம் என்பது தெரியும். சிட்னியில் இப்போது நிறைய கடைகள் வந்துள்ளன தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய விசுகர், தமிழ்சூரியன், சுண்டல், நிலாமதியக்கா, கிருபன், மற்றும் குமாரசாமி அண்ணாவுக்கும்,, எனது உளமார்ந்த நன்றிகள்!மற்றும் விருப்புத் தெரிவித்த உறவுகளுக்கும், எனது நன்றிகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகான உவமிப்பு ரோமியோ

"[size=5]வெள்ளை மணலாய்,[/size]

[size=5]விரிந்த கடற்பரப்பில்,[/size]

[size=5]உருண்டோடித் திரியும்,[/size]

[size=5]இராவணன் மீசையாக"[/size]

உப்புக்காற்றுரசும் நித்தியப் பொழுதுகளையெல்லாம் இழந்து எப்போதென்ற ஏக்கம் மட்டுமே எமக்கான சொத்தாக... உலக வெளியில் சிறகுகள் விரிக்கமுடியாத புலுனிக்குஞ்சுகளாக மீண்டும் மீண்டும் வளர்ந்த வாழ்ந்த இடங்களோடு மட்டுமே மனம் லயித்து நிற்கிறது. விடுபடமுடியாத நினைவுசிமிழ்களுக்குள் அடைபட்டுக் கொள்வதில் இருக்கும் சுகம் வேறெங்கும் கிடைக்காது. வாழுமிடங்கள் ஆளாளுக்கு மாறுபட்டாலும் எண்ணங்களும் ஏக்கங்களும் எங்கள் தலைமுறை சாயும்வரைக்கும் நீடித்துக் கொண்டிருக்கும். ஒன்று மிக முதியோராக இருந்திருக்கவேண்டும்...இல்லையென்றால் மிக இளையவர்களாக இருந்திருக்கவேண்டும். மிக முதியவர்கள் என்றால் ஓரளவுக்காகினும் ஏக்கமின்றி அனுபவித்திருப்பார்..இளையவராகில் இந்த ஏக்கமே அற்றவராக இருந்திருப்பார்..ஆனால் நாங்கள் இரண்டும் கெட்டான்கள் எல்லா விடயத்திலுமே இரண்டும் கெட்டான்கள். ஒண்ட வந்த புலத்திலும் இணைய முடியாத திண்டாட்டம். இருந்த நிலத்தையும் இழந்த பரிதாபம். இன்னும் கொஞ்சம் மிஞ்சியிருக்கிறது என்று வாழ வலிந்து பழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இப்படியான நிலையில் வாழும் எமக்கு மனதிற்குள் சிம்மாசனம் இட்டிருக்கும் நினைவுகளை மீள மீள பார்த்துக்கொள்வதைத் தவிர ஏது மிஞ்சி இருக்கிறது? :(

எங்கள் இழப்புகளின், வலியை, உங்கள் கவித் தமிழில், அழகாகக் கூறியிருக்கின்றீர்கள், வல்வை!

இதை விட, எந்த மொழியிலும், எமது நிலையை, விளக்கிச் சொல்ல முடியாது!

நீண்ட நாட்களின் பின்பு, பழைய யாழ் களம் போல, களம் காட்சியளிக்கின்றது!

தயவு செய்து, மீண்டும்,இன்னொரு 'அஞ்ஞாத வாசம்' வேண்டாம், சகோதரி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை, அழகாக வந்துள்ளது..வாழ்த்துக்கள்... :)

இதே போல, இங்கே உள்ள வாழ்வையும் எழுதுங்கோவன்...

50 வருட வாழ்வில் 25 - 30 வருடத்தை ஓங்கி உயர்ந்த கட்டிடங்களிலும், நவீன தொடர்படல்களிலும், வருமுன் காப்பு மருத்துவத்திலும்..இன்னும் என்னும் என்னும் துறைகளிலும், நினைத்துபார்கவே முடியாத வருவாய் உடனும் உள்ளதையும் சொல்ல வேண்டும்...இன்று காலை, அமெரிக்காவின் dallas என்னும் இடத்தில் இருந்து வேலைக்கு கேட்டிருந்தார்கள், அதற்காக அந்த நகரத்தை விகேபெடிவில் எடுத்து பார்த்தால்...அதனுடைய பெரும் தெருவை பாருங்கள்...5 அடுக்கில் விரைவு பாதைகள்...(ஜப்பான் இல் 7 அல்லது 8 அடுக்கில் உள்ளதாக யாரோ சொன்ன ஞாபகம்-)

அண்மையில் வீட்டுக்கு அருகில் உள்ள பார்க் க்கு போனேன், பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை..நான் எவ்வாறு ஊஞ்சலில் ஆடினெனோ அதே போலத்தான், எனது பெண்ணும் ஆடினாள்...இங்கே கொஞ்சம் குளிர் தொடங்கிவிட்டது அதையும் ரசித்தேன்... இங்கே உள்ள 100 க்கு 99 வீதம் ஆனா ஆக்கள் வாழும் வாழ்வையும்- அதில் நீங்கள் ரசித்த பகுதியையும் எழுதுங்கோ...

நிச்சயம் எழுதுவேன், எரிமலை!

சிங்களம், இதுவரை; இந்தப் போருக்குச் செலவழித்த பணத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால், மூன்று 'ஒலிம்பிக்' போட்டிகளைத் தனியாக நின்று நடத்தியிருக்கலாம், என்று கூறுகின்றார்கள்! இது பொருள் அளவு மட்டும் தான்!

மனித வளங்களின், அழிவு கணக்கிட முடியாதது!

முப்பது வருடங்களின் பின்பு, திரும்பவும், ஆரம்பப் புள்ளியில், அடுப்படியில் தானே வந்து நிற்கின்றது!

தமிழனின் பணத்தை, முற்றாக இழந்து விடவும், சிங்களம் விரும்பவில்லை!

கோழிகளைக் கொன்று விட்டால், முட்டைகளுக்கு என்ன செய்வது, என்ற தொலை நோக்கில் தான் சிங்களம் இன்று திட்டங்களை வகுக்கின்றது!

தங்கள் கருத்துக்கு நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

;கவிதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட சொந்தங்கள், நெடுக்கர், குருவி, காவலூர் கண்மணி,லியோ மற்றும் உடையார், ஆகியோருக்கு, எனது மனமார்ந்த நன்றிகள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]சாரத்தை மடித்துக் கட்டிச்,,[/size]

[size=5]சந்திக் கல்லில் குந்தியிருக்க,[/size]

[size=5]ஆசை வருகின்றது![/size]

[size=5]வேப்ப மரத்தடியில், [/size]

[size=5]சாக்குக் கட்டில் மீது,[/size]

[size=5]சாய்ந்திருக்கும், நினைவு வருகின்றது![/size]

உங்களின் வரிகள் இளமைக்காலத்துக்கு கண்ணிர் முட்ட இழுத்துச் சென்றுள்ளது. வாழ்த்துக்கள்.

நாங்கள் அங்கு அனுபவித்த சுதந்திரம். மீண்டும் வருமா? கண்ணகை அம்மன் கடற்கரை அருகு மடத்தில் கிடந்து காற்று வேண்டிய நிலை மீண்டும் முடியுமா? இப்போது எல்லாம் இராணுவப்பிடியுக்குள். எமது சுதந்திர பறிக்கப்பட்டுவிட்டது.

நான் உங்கள் ;மண்கும்பான்' கடற்கரையை எண்ணி ஏங்க, நீங்கள் கண்ணகை அம்மன் கோவில் கடற்கரையை, எண்ணி ஏங்குகிறீர்கள்?

அண்மையில், சாட்டிக்கும், கண்ணகை அம்மன் கோவிலுக்கும் போயிருந்தேன்!

சாட்டிக் கடற்கரை, நைனாதீவுக்குப் போகும், சிங்கள உல்லாசப் பயணிகளின், நடு வழித் தங்குமிடமாகி உள்ளது. பழைய நல்ல தண்ணிக் கிணறு, அதே இடத்தில் உள்ளது.கார்களை, நிறுத்துவதற்காக, 'பார்க்கிங்' அறவிடுகிறார்கள். அந்தியேட்டி மடம் ஒன்று, முன்பிருந்ததாக ஞாபகம். ஆமிக்காரர்களின், ஒரு காவல் நிலையம் ஒன்றும் உள்ளது. அங்கு வருகின்ற,சிங்கள உல்லாசப் பயணிகளுக்காக, என்று நினைக்கிறேன்!

கண்ணகை அம்மன் கோவில், கடற்கரை அவ்வாறே உள்ளது. முள்ளிப் பத்தைகள் , ஒன்று கூடக் காணப் படவில்லை. எவ்வாறு, அவ்வளவையும் அழித்து முடித்தார்கள், என்று நம்ப முடியவில்லை, அம்மன் கோவிலில், அருச்சனை செய்ய ஐயரைத் தேடினேன், அவர், எல்லாக் கோவில்களும், முடித்த பின்பு தான் அங்கு வருவாராம். விசிட்டிங் அய்யர், ஆனால், இராணுவப் பிரசன்னத்தை, நான் அங்கு காணவில்லை.

கடலுக்குள், கன தூரம் போக, என்னுடன் வந்தவர்கள், என்னை அனுமதிக்கவில்லை!

தங்கள் கருத்துக்கு, நன்றிகள், செண்பகன்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது தான் பார்த்தேன். எல்லாரிடமும் இருக்கும் ஊர்குறித்த மனவோட்டத்தை கவிதயாக்கினது அழகு..

ஏக்கங்கள் மட்டுமே இப்போதைய ஏகாநதம் போலும்.. :(

எனது அருமை நண்பர் புங்கையூரானின் இந்தக்கவிதை ஒருபேப்பர் 179 ஆவது இதழில் மீள் பிரசுரமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சிடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது அருமை நண்பர் புங்கையூரானின் இந்தக்கவிதை ஒருபேப்பர் 179 ஆவது இதழில் மீள் பிரசுரமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சிடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மிக்க நன்றிகள், கோமகன்!

பார்த்தேன்! நன்றாக இருந்தது! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மண்ணின் நினைவுகள் அழகு... தொடர்ந்து எழுதுங்கள். :)

மண் வாசனை வீசும் அழகான கவிதைக்குள் இதனை செருகாமல் விட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. :)

ஒரு புலம் பெயர்ந்த பறவை ஏன் திரும்பவும், பிறந்த இடத்திற்கே வருகின்றது என்பதற்குப் பல காரணங்கள் கூறப் படுகின்றன!

போன இடத்தில், கால நிலை மாற்றத்தால், அவை திரும்ப வருகின்றன, என்பது விளக்கமாக இருக்கலாம்! ஆனால், அவை ஏன் திரும்பவும் பிறந்த இடத்திற்கே வருகின்றன என்பது, ஒரு புதிர். உதாரணமாக, சைபீரியாவில் இருந்து வரும், கூழைக்கடாக்கள், நெடுந்தீவுக்கு வருகின்றன. நெடுந்தீவில் காலநிலை, மாறாத போதிலும், திரும்பவும், சைபீரியாவுக்கே திரும்பச் செல்கின்றன. அடுத்த முறை வரும்போது, மீண்டும் அவை நெடுந்தீவுக்குத் தான் வருவது, அவதானிக்கப் பட்டுளள்ளது. வரும் வழியில் தானே, கொடைக்கானல் இருக்கின்றது. மனிதன் எனின், கொடைக்கானலில் இறங்கியிருப்பான். இது தான் எனக்குப் புரியாத புதிர்.

நீங்கள் மாணவியாக இருப்பதால், ' The Root' என்று ஒரு ஆபிரிக்க அமெரிக்கர் எழுதிய புத்தகம் ஒன்று உள்ளது. இவரது மூதாதையர், கென்யாவில் இருந்து, அடிமை வியாபாரிகளால்,கடத்தப் பட்டவர். ஏறத்தாழப் பத்துத் தலைமுறைகளின் பின்பு, அவர் திரும்ப வந்து, தனது மூலத்தைத் தேடுகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார்.

இதை வாசித்தீர்கள் எனின், நீங்கள் எனது வரிகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்!

வேறொரு தளத்தில் நின்று பார்க்கும் போது, சிலவற்றை எம்மால் புரிந்து கொள்ள முடியும் என எண்ணுகின்றேன்.

தங்கள் கருத்துக்கு, மிகவும் நன்றி, துளசி! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகான, ஏக்கத்தை அதிகரிக்க வைக்கும் கவிதை.

மீண்டும் ஊருக்குப் போகும் போது, அந்த நிகழ்வு, தெரியாத அயலவர் முகங்கள், பழக்கமில்லாத கடைக்காரர் என்று அந்நிய ஊருக்கு வந்தது போல் ஒரு உணர்வைக் கொடுப்பதும் இயல்பாகிவிட்டிருக்கிறது.

அதே பள்ளிக்கூடம், கோயில், எல்லாம் இருந்தும், தெரிந்த ஊரவர், உறவுக்காரர் (சிலரைத் தவிர) மற்றும் நண்பர்கள் இல்லாதது, ஒரு வெறுமையை காட்டியது வியப்பல்லவே!

உண்மையைச் சொன்னால் உணவுப் பண்டங்களை தேடி ஊருக்குப் போவது அனாவசியம், ஏனெனில், இங்கே எல்லாமே கிடைக்கிறது. அவுஸ்திரேலியாவில் கஷ்டம் என்பது தெரியும். சிட்னியில் இப்போது நிறைய கடைகள் வந்துள்ளன தான்.

உங்கள் கருத்தில் உண்மையுள்ளது, ஈஸ்!

ஆனால் சில விசயங்கள், ஊருக்குப் போனால் தான் சரி வரும் போல உள்ளது.

ஒரு முறை, பழங்குளம்பு ( மீன்) சாப்பிட்டுப் பார்க்கும், விபரீத ஆசை ஒரு எனக்கு வந்தது.

தமிழ்க் கடைக்குப் போய், மினக்கெட்டு,மண் சட்டியும், தேங்காயும் வாங்கி வந்து செய்து பார்த்தேன். ஒரு விஞ்ஞானியின் மன நிலையில் இருந்து, எல்லாம் திட்டமிடப் பட்டு, ஊரில் செய்வது மாதிரியே, எல்லாம் செய்தும், குழம்பு ஊரில் வருவது மாதிரிப் பழசாகவில்லை. இன்னொரு நாள் அதிகமாக வைத்துப் பார்த்தேன்.

மணக்கத் தொடங்கி விட்டது! :wub:

இதுக்கு தான் ஊர் தேவை, என நினைக்கிறேன்!

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும், நன்றிகள்!

கருத்துப் பகிர்ந்த யாயினி, ஜீவா ஆகியோருக்கு எனது நன்றிகள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி புங்கையூரான்.இளமை கால நினைவுகள் பசுமரத்தாணியாக பதிந்து இருப்பதையும் அதற்க்காக ஏங்குவதையும் கவிதையில் வடித்தது அழகோ அழகு.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்றாக இருக்கிறது. நாங்கள் இழந்தவை அதிகம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணாவுக்கும், கந்தப்புக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!!!

சொல்ல வார்த்தையில்லை... ஒவ்வொருவர் மனசுக்குள்ளும் ஓலமிடும் ஏக்கங்களின் பிரதிபலிப்பு அழகாய் உங்கள் வரிகளில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.