Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

TNAஐ ராஜ மரியாதையுடன் அழைத்துப் பேசும் இந்தியாவுக்கு..தமிழகத்தை சீனா கைப்பற்றும்போது தான் எல்லாமே தெரியவரும் - குணதாச அமரசேகர

Featured Replies

[size=3]

[/size][size=3]

lg-share-en.gif

[/size][size=3]

[/size][size=3]

gunadasa_CI.png

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ராஜ மரியாதையுடன் அழைத்துப் பேசும் இந்தியாவுக்கு, தமிழகத்தை சீனா கைப்பற்றும்போது தான் எல்லாமே தெரியவரும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஈழ மொன்றை அமைப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டுச்சதியில் இறங்கியுள்ளன. இலங்கை விடயத்தில் தேர்ச்சிபெற்ற நிருபமாராவ் அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நேற்றுமுன் தினம் அந்நாட்டின் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது.

இதன் போது இந்திய முக்கியஸ்தர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் இலங்கையிலுள்ள சிங்கள அமைப்புகளினிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்ட தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர,

இலங்கையைக் கூறுபோடுவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் செயற்படுகின்றன. கூட்டமைப்பை இந்தியா அழைத்துப் பேசுவதன் பின்னணியிலும் அமெரிக்காதான் மறைமுகமாக செயற்பட்டுள்ளது.

சீனாவை அடக்கியாள்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படும் அமெரிக்காவின் சுயநலத்தை காலப்போக்கில் இந்தியா உணரும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கமைய அரசியல் தீர்வொன்றை வழங்குமாறு அந்நாடுகள் எமக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க முயற்சிக்கின்றன.

அவ்வாறு அதிகாரங்கள் பகிரப்பட்டால் அது தனி ஈழத்துக்கு வழிகோலும். இதுதான் மேற்கூறப்பட்ட நாடுகளின் எதிர்பார்ப்பாகும். கூட்டமைப்புக்கு ராஜமரியாதை கொடுத்து அழைத்துப்பேசும் இந்தியாவுக்குத் தமிழகத்தை சீனா கைப்பற்றும்போதுதான் இலங்கையின் அருமை தெரியவரும். அப்போதுதான் அவர்கள் அனைத்தையும் உணர்வர்.

தமிழர் பிரச்சினையை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கையிலெடுத்துள்ளதால் உலக நாடுகளுக்கிடையில் அது மோதலை உருவாக்கும் அவலநிலை தற்போது தோன்றியுள்ளது எனவும் குணதாச அமரசேகர கூறியுள்ளார்.

நன்றி

குலோபள்தமிழ்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வில்லாளப்பட்டி என்ற ஊரில் பந்தா பரந்தாமன் என்ற புகழ் மிக்கப் பண்டிதர் ஒருவர் இருந்தார். அவர் கல்வி கேள்விகளில் வல்லவர். அவரை யாரும் விவாதத்தில் தோற்கடிக்க முடியாது. எந்தவிதமான விஷயங்களானாலும் அவருக்கு அத்துப்படி, எனவே, இயல்பாகவே அவருக்குச் சற்று மண்டைக் கர்வம் ஏறி இருந்தது. நாட்டில் கல்வி அறிவு நிரம்பப் பெற்றவன். பெரிய அறிவாளி வாதங்களில் சிறந்தவன் என்று யாரும் அவர் இருக்கும் போது தலை காட்டிவிட முடியாது. அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு அரசாங்க அதிகாரி வந்தான். அவன் பெயர் வினோத். ல்லாவிதக் கலைகளிலும் அவனுக்குச் சிறிது பயிற்சி இருந்து வந்தது. அரசனின் உதவியால் படித்து முன்னேறியவன். இருப்பினும் அதை வெளிக் காட்டி கொள்ளமாட்டான். அமைதியாகவே தன் பணியினை செய்து வந்தான்.

வீண் ஆர்ப்பாட்டங்கள் செய்து எப்போதும் மக்களின் கவனத்தைத் தன் பக்கம் வைத்துக் கொள்வதில் பந்தா பரந்தாமன் கில்லாடி. சாமர்த்தியக்காரராக விளங்கினார். மக்களில் பலர் அவரை இதன் காரணமாக வெறுத்தனர். என்றாலும் இந்த வெறுப்பை வெளிப்படையாகக் காட்டி கொள்ளவில்லை. அன்று மஹாபாரதம் பற்றிய காலட்சேபம் நடந்தது. பண்டிதரின் நாவன்மையை ரசித்த வாறு வந்து கொண்டிருந்தான் வினோத். திடீரென்று, “யோவ் பிரசங்கியாரே! நிறுத்தும்’ என்று குரல் கேட்டது. அனைவரும் திடுக்கிட்டுத் திரும்பினர். பட்டு பீதாம்பரம் உடுத்தி ஜகஜ்ஜோதியாய் நின்றான் பந்தா பரந்தாமன்.

“”என்ன? என்ன விஷயம்?” என்று பதறினார் பாகவதர். என்னையா கதை அளக்கிறீர் நீர்! பீஷ்மரை அர்ஜுனன் கொல்லவில்லை! சிகண்டி தான் அம்பு எய்து கொன்றவனே தவிர அர்ஜுனன் வெறும் கருவிதான். அர்ஜுனனால் அவர் கொல்லப்பட முடியாது. முற்பிறவியில் பெண்ணாக இருந்து பீஷ்மரால் வஞ்சிக்கப்பட்டவனே சிகண்டி என்ற அலியாகப் பிறந்து கோட்டை வாயிலில் இருந்த மாலையை எடுத்துப் போட்டுக் கொண்டு, அர்ஜுனன் தேரில் ஏறி அம்புகளால் பீஷ்மரை துளைத்தான். சிகண்டியை முன் நிறுத்தி அர்ஜுனன் பீஷ்மரைக் கொன்றான் என்பது எல்லாம் மாயாவாதம்! சொல்வதை ஒழுங்காகச் சொல்!” என்று கம்பீரமாகக் கூறிவிட்டு பாகவதரை ஓரம் கட்டிவிட்டு அவரே சொல்ல ஆரம்பித்தார். இப்படி அநேகரை அவமானப்படுத்துவது பந்தா பரந்தாமன் ஸ்டைல்.

ஒரு சமயம் அறிஞர்கள் பலர் கூடி இருக் கும் சபையில் பல்வேறு விதமான சமஸ்கிருத ஸ்லோகங்களை கூறி தன் மனதில் தோன்றியவாறு அதற்கு விளக்கமும் சொன்னார். ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் இந்த சமஸ்கிருத ஸ்லோகங்களோ, அது வேதத்தின் ஓர் அங்கமா? அல்லது அவர் இயற்றியதா என்று கூடத் தெரியாது. தெரிந்த ஒரு சிலரும் அவருடைய தர்க்கவாதத்திற்கு அஞ்சி சும்மா இருந்தனர். வினோத்துக்கு ஓரளவு சமஸ்கிருதம் தெரியும். அவனும் அக்கூட்டத்திற்கு வந்திருந்தான்.

“”உங்களில் யாருக்கேனும் எதுவாவது சந்தேகம் உண்டா? இருந்தால் கேளுங்கள்,” என்றார். அனைவரும் மவுனமாக இருந்தனர். வினோத் எழுந்தான். “”ஐயா, நீர் சொல்வது அனைத்தும் தவறு என்று எனக்குத் தெரியும். உமக்கு அது புரியும். சமஸ்கிருதம் நன்றாகத் தெரிந்தவர்களுக்கும் நான் சொல்வது விளங்கும்! ஆகவே, மேற்கொண்டு உரையாற்றாமல் இருப்பதே விசேஷம்!” என்று கூறினார்.

இதைக் கேட்ட பந்தா பரந்தாமனின் மூக்கு சிவந்தது. கண்களில் கனல் பறந்தன. “”யார் நீ, சின்னப் பயலே, நான் யார் என்று உனக்குத் தெரியுமா? என்னுடைய கருத்துக்களைத் தவறு என்கிறாய்! எனக்குள்ள செல்வாக்கு உனக்கு தெரியாது என்று கருதுகின்றேன்! எனக்கு அரசே நெருங்கிய நண்பர்,” என்றார்.

“”ஐயா, இவ்வூர் மக்களை நீர் பயமுறுத்திக் கொண்டு வாழ்வதைப் போல என்னிடம் பயமுறுத்த நினைக்காதீர். நீர் சொல்வது தவறு என்றேன். அதற்கு ஏன் உம் செல்வாக்கைக் காட்டி என்னைப் பயமுறுத்த நினைக்கிறீர்.

“”உமக்கு அரசர் நண்பராக இருக்கலாம். அதே அரசரால் உம் அநியாயங்களைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட ஓர் உயர் அதிகாரி நான். வேண்டுமானால் என்னைப் பற்றி அரசரிடம் நீர் புகார் கூறும், நானும் கூறுகிறேன்! யாருடைய பேச்சு எடுபடுகிறது என்று பார்க்கலாம்,” என்று கூறினான் வினோத். இதைக் கேட்டதும் வாதத்தில் வல்லவரான பந்தா பரந்தாமனுக்கு வேர்த்துக் கொட்டியது. பேச்சிழந்து நின்றார்.

“”உம்முடைய தவறுகளை நான் விளக்குவேன். எனக்கு நிறைய அலுவல்கள் இருப்பதால் இப்போதைக்கு முடியாது. அதுவும் தவிர இவ்வளவு பெரிய சபையில் மேலும் உம்மை அவமானப்படுத்த விரும்பவில்லை. “”எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற பெயரில் எல்லாரையும் அவமானப்படுத்துவதை இன்றோடு விட்டு விடுங்க. மனிதர்களை மனிதர்களாக பாருங்க. அவர்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்க,” என்றான் வினோத், தலை குனிந்தான் பரந்தாமன்.

தீர்வு முயற்சியில் இந்தியா தீவிர அக்கறை! கூட்டமைப்பின் விஜயம் அதன் எதிரொலி!! - அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவிப்பு

'தீர்வு விடயத்தில் இந்தியா அக்கறை கொண்டுள்ளதன் காரணமாகத்தான் கூட்டமைப்பை அழைத்து அது பேச்சு நடத்துகின்றது. எனவே, இதற்கு நாம் எதிர்ப்பை வெளியிடப் போவதில்லை. பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருந்து வருகின்றோம்.'

இவ்வாறு லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

ஒரு தரப்புடன் பேசுவதை விட பல தரப்புகளுடனும் பேச்சு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதே சிறந்த வழிமுறையாகும். எனவே, தீர்வு விடயத்தில் தெரிவுக்குழுவை நோக்கி கூட்டமைப்பு பயணித்தால் சிறந்ததாக அமையும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்துக்கு வராததன் காரணமாகத்தான் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கூட்டமைப்பு அதில் அங்கம் வகித்தால் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நாம் நகரலாம்.

ஒரு தரப்புடன் பேச்சு நடத்துவதை விட பல தரப்புகளுடனும் பேச்சு நடத்தி தீர்வைக் காண்பதுதான் சிறந்த உபாயமாகும். அதற்கான சிறந்த பொதுக்களம்தான் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவாகும். எனவே, அதில் கூட்டமைப்பு இடம்பெறவேண்டும்.

தீர்வு விடயத்தில் இந்தியா கரிசனை கொண்டுள்ளதால்தான் இந்தியா கூட்டமைப்பை அழைத்துள்ளது. இதில் விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை. தெரிவுக்குழுவுக்குச் செல்லுமாறு கூட்டமைப்பிடம் இந்தியா சொல்லவேண்டும் என நான் கருதுகின்றேன் என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

10/12/2012 4:56:57 PM

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வடக்கு ஒபாமாவுக்கும், கிழக்கு சோனியாவுக்கும் உரித்தான பிரதேசங்கள் அல்ல குணதாச அமரசேகர:-

18 August 2012

obama-soniagandhi_CI.jpg

வடக்கு ஒபாமாவுக்கும், கிழக்கு சோனியாவுக்கும் உரித்தான பிரதேசங்கள் அல்ல என்பதை அந்நிய சக்திகளுக்கு மீண்டும் ஒருமுறை தெளிவாக கூறிவைக்க விரும்புகின்றோம் என எச்சரிக்கை விடுத்துள்ள தேசிய அமைப்புகளின் ஒன்றியம், நாட்டின் இறையாண்மையைக் கூறுபோடுவதற்கு இடமளிக்க போவதில்லை என தெரிவித்துள்ளது.

எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் அரசு, நாட்டுக்குப் பொருந்தாததை ஒருபோதும் செய்யக்கூடாது என தேசிய அமைப் புகளின் ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

'டெசோ' என்ற பிரிவினைவாத அமைப்பால் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்தான தீர்மானங்களை ஐ.நாவுக்கு அனுப்பிவைப்பதற்கு தி.மு.க. தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது.

இலங்கையை ஆள்வது ஐ.நாவோ அல்லது அமெரிக்காவோ அல்ல என்பதை கருணாநிதி போன்ற அரசியல் பச்சோந்திகள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

எமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் அந்நிய சக்திகளுக்கு வடக்கு ஒபாமாவுக்கும், கிழக்கு சோனியாவுக்கும் உரித்தான பிரதேசம் அல்ல என்பதைத் தெளிவாகக் கூறிவைக்க விரும்புகின்றோம் என அமரசேகர கூறியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/81705/language/en-US/-----.aspx

  • கருத்துக்கள உறவுகள்

13-tamil-nadu-map.jpg

தமிழகத்தை சீனா கைப்பற்றும்- அப்ப தெரியும் எங்க அருமை: புதுக் குண்டு போடும் சிங்கள தலைவர்.

யாழ்ப்பாணம்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உள்ளிட்டோர் நேரில் அழைத்துப் பேசியிருப்பது சிங்கள அமைப்புகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற சிங்கள அமைப்பின் தலைவர் குணதாச சமசரசேகர கூறியுள்ளதாவது:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ராஜ மரியாதையுடன் அழைத்துப் பேசுகிறது. இலங்கையில் ஈழத்தை அமைப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டுச்சதியில் இறங்கியுள்ளன. இலங்கை விவகாரத்தில் தேர்ச்சிபெற்ற நிருபமாராவ் அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான்.

இலங்கையைக் கூறுபோடுவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் செயற்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அழைத்துப் பேசுவதன் பின்னணியிலும் அமெரிக்காதான் மறைமுகமாக செயற்பட்டுள்ளது. சீனாவை அடக்கியாள்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படும் அமெரிக்காவின் சுயநலத்தை காலப்போக்கில் இந்தியா உணரும்.

இலங்கையில் அதிகாரங்கள் பகிரப்பட்டால் அது தனி ஈழத்துக்கு வழிகோலும். இதுதான் அமெரிக்கா, இந்தியாவின் எதிர்பார்ப்பாகும்.

இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ராஜமரியாதை கொடுத்து அழைத்துப்பேசும் இந்தியாவுக்குத் தமிழகத்தை சீனா கைப்பற்றும்போதுதான் இலங்கையின் அருமை தெரியவரும். அப்போதுதான் அவர்கள் அனைத்தையும் உணர்வர்.

தமிழர் பிரச்சினையை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கையிலெடுத்துள்ளதால் உலக நாடுகளுக்கிடையில் அது மோதலை உருவாக்கும் அவலநிலை தற்போது தோன்றியுள்ளது என்றார் அவர்.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னவொரு மூளை, குணதாச அமரசெகராவுக்கு!

நீங்கள், பென்டகனில் இருக்கவேண்டிய ஆள்!

அநியாயமாக, உங்கள் திறமை வீணாக்கப் படுகிறது! :wub:

அது சரி, ரெண்டு பஜ்ஜியும், மூண்டு சொஜ்ஜியும் ராஜ மரியாதை, என்று யார் உங்களுக்குச் சொன்னது? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கிந்திக்காரனின் ஆட்சியில் தமிழ்நாடு இருப்பதைக்காட்டிலும் சீனாவுடம் இருப்பது நல்லது அதன் பின்னராவது தமிழருக்கு ஒரு நாடு வேண்டும் என்ற எண்ணம் கிந்திக்காரனுக்கு வந்து ஈழத்தை அமைப்பதற்கு தடையாக இருப்பதை நிறுத்திக்கொள்வான் பின்னர் தமிழீழம் கிடைத்தால் நாம் சீனாவுடம் இருந்து திரும்பவும் தமிழ்நாட்டை மீட்டிட முடியும். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.