Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

  • Replies 2.2k
  • Views 133k
  • Created
  • Last Reply

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் வாக்களிப்பதற்கு இணக்கம்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பில் சில இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளன.

இதன்படி, யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்கள் இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக, முகமாலை சிறீலங்காப் படைச் சோதனைச் சாவடியை 500 மீற்றர் பின்னகர்த்துவதற்கு குடாநாட்டுப் படைத்தளபதி மேஐர் ஜெனரல் சுசில் சந்திரபால இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், யுத்த சூனியப் பிரதேசத்தின் அளவு அதிகரிப்பதால், இப்பகுதிக்குள் வாக்களிப்பு நிலையத்தை அமைப்பதன் மூலம், மக்கள் அதிக சிரமங்கள் இன்றி வாக்களிப்பில் கலந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தேர்தலில் வாக்களிக்க வரும் பொதுமக்களை தாமதிக்கச் செய்யும் வகையில், படையினர் சோதனை நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளமாட்டார்கள் எனவும், குடாநாட்டுப் படைத்தளதி உறுதியளித்துள்ளார்.

யாழ் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலருடன் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது இவ்விதமிருக்க, மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த சூனியப் பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையத்தை அமைப்பது தொடர்பாக ஆராய்வதற்கான கலந்துரையாடலொன்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மோனகுருசாமி தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் வாக்களிப்பதற்கான வாக்களிப்பு நிலையங்களை யுத்த சூனியப் பிரதேசத்தில் அமைப்பது தொடர்பாக ஆராயப்பட்ட போதிலும், அதற்கு ஈ.பி.டி.பி., ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியன எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

யுத்த சூனியப் பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டால், தேர்தல் மோசடிகள் இடம்பெறலாம் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர்கள் இந்தச் சந்திப்பில் தெரிவித்தனர்.

எனினும், இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பி.கிருஷ்ணானந்தலிங்கம், இந்த விவகாரம், மட்டக்களப்பு மாவட்டத்தோடு மட்டும் சம்பந்தப்பட்ட ஒரு சிக்கலல்ல என்றும், மொத்தமாக நான்கு தேர்தல் மாவட்டங்களில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படவேண்டியிருப்ப

ம் வசி ஏனப்பா இந்த வேலை

  • கருத்துக்கள உறவுகள்

ஆரும் கடத்திக் கொண்டு போய் வைச்சிருந்திருப்பினம் தாத்தா. :D

:roll: :) :roll: :arrow:

80க்கு முன் குடாநாட்டில் வீட்டைச்சுற்றி எழுப்பிய ஏழு அடி உயர கிடுகு வேலிகள் உலகத்திலிருந்து தம்மை தனித்துவப்படுத்தும் என எண்ணி தனிமைப்பட்டுப்போன சந்ததியின் மிச்சசொச்சங்கள்தான் இன்னும்.......இங்கும்........ இணையத்திலும்............

:) :wink: :mrgreen: :idea:

கருணாவின் ஆயுதபலமும் போராளிகள் பலமும்...!

2000 பெண் போராளிகளும் 3000 ஆண் போராளிகளும்...!

[scroll:0f2ab5718e]_39937843_leader.jpg_39937833_troops.jpg_39937847_training.jpg_39938035_guns.jpg_39937831_drink.jpg_39937845_talk.jpg...BBC.com[/scroll:0f2ab5718e]

கருணா பற்றி ஈழநாதத்தின் பார்வை....!

கருணா தமிழீழத் தேசியத் தலைவருடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். நம்பிக்கைக்கும் பாத்திரமாகவும் இருந்தவர். அதுமட்டுமல்ல தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் இருந்து ஏனைய தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோரைவிட அதிகபட்ச அதிகாரங்களையும் பெற்றுக் கொண்டிருந்தவர். இவ்வாறாக தலைமையுடன் நெருக்கமான உறவையும், தொடர்பையும் கொண்டிருந்த கருணா கிழக்கிற்கு அதிக பிரதிநிதித்துவத்தை ஏன் தலைவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளவில்லை.

அதுமட்டுமல்ல, அவ்வாறு பேசித்தீர்வு காணமுடியாது என்ற முடிவிற்கு கருணா வருவதற்கு இத்தகைய கோரிக்கைகள் எதுவும் இதற்கு முன்னர் கருணாவினால் முன்வைக்கப்பட்டு தலைவரினால் நிராகரிக்கப்ட்டதுண்டா? அன்றி வேறு யாராவது இத்தகைய கோரிக்கையை முன்வைத்த போது அது தேசியத் தலைவரினால் நிராகரிக்கப்பட்டதாகவோ அன்றி கருத்திற் கொள்ளப்படாமலோ விடப்பட்டது என கருணாவிற்கு ஏதாவது தகவல் தான் கிடைத்ததுண்டா?

சரி தலைவருடன் நேரடியாக தனது இக்கோரிக்கைகளை முன்வைக்க விரும்பவில்லையென எண்ணியிருப்பின் ஏனைய தளபதிகளையாவது அனுப்பி தலைவரிடம் இக்கோரிக்கையை முன்வைத்திருக்கலாமல்லவா? தற்பொழுது மட்டு-அம்பாறை மக்களின் உணர்வுகளையே தாம் பிரதிபலிப்பதாகத் கூறும் கருணா, மக்களின் உணர்வுகள் இவ்வாறிருக்கின்றன அதற்குத் தீர்வு காணப்படுதல் வேண்டும் என தனது தளபதிகளிடம் விடயத்ததைக் கூறியாவது தலைவரிடம் அனுப்பி வைத்திருக்கலாமல்லவா?

செய்தி ஊடகங்கள் மூலம் தனித்துச் செயற்படப் போவதாக அறிவிப்புச் செய்துவிட்டு, தனது துரோகத்தனமான செயற்பாட்டிற்கு பிரதேச வாதத்தைக் கிளப்புவதும், மக்களை பகடைக் காய்களாவும் போராளிகளையும் பலிக்கடாக்கள் ஆக்கும் எந்த வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளுவதும் எப்படி ஏற்புடையதாக இருக்க முடியும்? இது கருணா விடுதலைப் புலிகளுக்கு செய்த துரோகமாக மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கும் செய்த துரோகமாகக் கொள்ளாது வேறு எவ்வாறு கொள்ள முடியும்?

இது ஒருபுறம் இருக்க அண்மைக் காலத்தில் தலைவர் பிரபாகரனால் அழைக்கப்பட்டும் வன்னிக்குச் செல்ல கருணா தயாராக இருக்கவில்லை. இதனை அவரே ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். தான் வன்னிக்குச் சென்றிருப்பின் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் எழுப்புகின்றார். இதில் உள்ள முக்கியமான வினா என்னவெனில் அவர் அத்தகைய முடிவிற்கோ சந்தேகம் கொள்வதற்கோ காரணம் என்ன?

அதாவது தலைவர் பிரபாகரன் அவர்களுடன் தனக்கு ஏற்கனவே முரண்பாடு இருந்ததாக அவரே கூறவில்லை. தலைவர் பிரபாகரன் இவரின் செயற்பாடுகள் எவற்றிக்கும் முட்டுக்கட்டை போடவும் இல்லை. அவரை கட்டுப்படுத்தும் வகையில் அறிவிப்புக்கள் எதையும் விடுக்கவுமில்லை. அவரின் பொறுப்புக்கள், பதவிகள் எதையும் பறிக்கவும் இல்லை. அதுமட்டுமல்ல பேச்சுவார்த்தைகளில் அவர் தொடர்ச்சியாக கலந்துகொள்ள தடையும் விதிக்கவில்லை.

அவ்வாறிருந்தும் கருணா ஏன் தலைவர் பிரபாகரன் அவர்களின் அழைப்பை ஏற்று வன்னி செல்லவில்லை? வன்னி சென்றால் தாம் தடுத்து வைக்கப்படுவோம் என்ற சந்தேகம் ஏன்வந்தது? அதாவது முரண்பாடோ அன்றிக் குற்றங்களோ அற்றவராக இருப்பின் அவர் ஏன் இத்தகைய சந்தேகம் கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டது?

மாறாக விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தினால் கருணா அமைப்பிலிருந்து நீக்கப்படும் வரை அவர் மீது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டோ அன்றி தனிப்பட்ட நடத்தைகள் தொடர்பான குற்றச்சாட்டோ சுமத்தப்படவில்லை. அவர் தமிழீழ தேசியத் தலைவருக்கும், மக்களுக்கும் துரோகம் இழைத்தாகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக கருணா பிரிந்து செல்வது தொடர்பான செயற்பாட்டின் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது கருணா மீதான நடவடிக்கை அண்மைய அவரின் செயற்பாட்டின் விளைவு மட்டுமே.

ஆகையினால், கருணா மடியில் கனமில்லை எனின் தேசியத் தலைவர் பிரபாகரனைச் சந்தித்திருக்க முடியும். தனது கோரிக்கையை முன்வைத்திருக்க முடியும். தமது மக்களின் அபிலாசைகள் இவை என கூறியிருக்க முடியும்.

ஆனால், கருணா அவ்வாறு நடந்து கொள்ளாது இயக்க விதிகளுக்கும், ஒழுங்குகளுக்கும் மாறுபட்ட விதத்தில் நடந்து கொண்டுள்ளார். அர்த்தமற்றதும், உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதோடு பொய்யான தகவல்களையும் வெளியிடுபவராக உள்ளார். தனது தனிப்பட்ட ரீதியிலான தான்தோன்றித்தனமான முடிவுகளுக்கு மக்களைச் சாட்டாக்கிக் கொள்ள முனைகிறார்.

கருணாவின் இச்செயலானது தமிழ் மக்களுக்குப் பெரும் வேதனையையும், துயரத்தையும் அளிப்பதாகியுள்ளது. சிங்களப் பேரினவாத சக்திகள் ஒன்றுதிரண்டு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என முனைப்புடன் தேர்தலில் இறங்கியுள்ள நிலையில், கருணாவின் நடவடிக்கையானது தமிழ் மக்கள் இடையில் பிளவுகளையும் அவநம்பிக்கைகளையும், தோற்றிவிப்பதாகவும் மாறியுள்ளது.

தமிழ் மக்கள் தமது தேசியம் பற்றிய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பினும்கூட, கருணாவின் நடவடிக்கை தமிழ் தேசியத்திற்கு ஊறு விளைவிக்கும் ஒன்றே ஆகும்.

நன்றி தமிழ்நாதம்...!

மடியில் கனமிருந்தமையால்தானே மடியைப்பிடிச்சுக்கொண்டே இருக்கின்றார்

  • தொடங்கியவர்

Sangaree Says LTTE Students Attacked His Vehicle

Bandula Jayasekara in Colombo, SLT 11.20 A.M

Wednesday 11 March. TULF leader V. Anandasangaree says that student group of the LTTE had carried out the attack on a vehicle being used in the election campaign by him yesterday. Anandasangaree who is contesting as an independent candidate in Jaffna said the vehicle was forcefully stopped and Propaganda leaflets and posters found inside were destroyed by a group of people near the Pameshwaran junction in Jaffna. He said " The attack was carried out by unscrupulous university students who belongs to a students group of the LTTE. The TULF leader alleged that the students had also assaulted two of his party members.

Anandasangaree also said that the LTTE had a free hand in the North and were engaged in a campaign of intimidation and violence to manipulate election results in the area. According to him the LTTE had procured 48 motor cycles and 2 jeeps all of which were umarked. He pointed out that the LTTE is using them to harass candidates other than the TNA. The TULF leader added that though complaints had been made to the Jaffna police there was little action the police could take to stop the LTTE from harassing the candidates.

Thanx: The Academic

  • தொடங்கியவர்

Sri Lanka peace monitors halt patrols in areas held by breakaway rebel

Monitors of a ceasefire between Sri Lankan government forces and Tamil Tiger rebels have halted their patrols in areas held by a renegade rebel faction.

The Norwegian-led Sri Lanka Monitoring Mission says it has stopped routine patrols in the east of the island where the renegade Tamil Tiger leader, V Muralitharan, better known as Karuna, holds sway.

However, a spokeswoman says they are keeping lines open to all LTTE (Liberation Tigers of Tamil Eelam) offices in all the districts of the northeast.

The AFP news agency says Karuna broke away from the LTTE last week over plans by its leadership to plunge Sri Lanka back into civil war.

Karuna has refused to recognise the monitoring mission, but has vowed to abide by the ceasefire arranged by Norway between the main Tiger group and the Colombo government in February 2002.

Requests from Karuna to the Sri Lankan government for a fresh truce accord with him have been turned down.

Government forces have been placed on alert in the eastern regions amid fears of factional war, but Karuna says he has no intention of sparking such a conflict.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) are fighting for self-rule for Sri Lanka's Tamil minority.

The conflict has claimed more than 60,000 lives since 1972.

Thanx: RADIO AUSTRALIA NEWS

  • தொடங்கியவர்

Renegade group says main Tamil Tiger outfit may be preparing for war; peace monitors halt patrols in east

Associated Press, Wed March 10, 2004 02:36 EST . DILIP GANGULY - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) A rebel leader who split with the Tamil Tiger guerrillas pulled his forces out because he believes the movement may be preparing to go back to war, the renegade leader's spokesman said Wednesday. Nevertheless, European cease-fire monitors said Wednesday they had temporarily halted their patrols in parts of eastern Sri Lanka - until Muralitharan clarifies his stand on the truce. ``We are no more patrolling areas in the east,'' said Agnes Bragadottir, the spokeswoman for the Norwegian-led Sri Lanka - Monitoring Mission. The SLMM will continue to patrol in the north, she said.

Muralitharan, also known as Karuna, said last week that because the cease-fire had been agreed between the Sri Lankan government and the main branch of the Liberation Tigers of Tamileelam, his breakaway rebel group was not bound by it. However, he vowed to honor the truce until a new one is agreed between his faction and the government.

``We have asked for clarification from Karuna'' on the status of the cease-fire in the east, Bragadottir said. The SLMM comprises about 55 monitors from Norway, Sweden, Denmark, Finland and Iceland. They are posted in both government-held and rebel-held territories. They are unarmed and have no peacekeeping force to back them. Muralitharan announced last week he was splitting his 6,000 fighters from the main rebel army in a dispute over troop deployment, raising the prospect of a Tamil-versus-Tamil conflict and imperiling the country's peace efforts ahead of April 2 parliamentary elections.

The rebels have 15,000 fighters nationwide.The main rebel group, led by Vellupillai Prabhakaran, announced over the weekend that it had expelled Muralitharan. But the renegade commander said he would not step down despite a promise by top rebel leaders that he could leave the guerrilla army without repercussions.About 65,000 people have been killed in the conflict between the Tamil rebels and the government.

  • தொடங்கியவர்

Sri Lanka 's ethnic cauldron takes dangerous turn: Tamil vs Tamil

Associated Press, Tue March 9, 2004 23:14 EST . DILIP GANGULY - Associated Press Writer - COLOMBO, Sri Lanka - (AP) More than two decades of civil war in Sri Lanka - between minority Tamils and successive Sinhalese-led governments has taken a potentially explosive ethnic twist: Tamils turning against Tamils. Most of Sri Lanka - 's 3.2 million Tamils live in the northern and eastern parts of this island, off the southern tip of India. Traditionally, northern Tamils, with Jaffna as their main city, have better education, more access to jobs and a higher standard of living. Eastern Tamils, with Batticaloa as their main city, are mostly farmers with poorer education and fewer jobs.

Still, the eastern Tamils have long provided the northern leadership with cadres ready to die in the battlefield.

Muralitharan's explosive declaration that he would stop sending fighters to the north gave vent to the anger of eastern Tamils. For the first time, Tamils there burned an effigy of Prabhakaran.

``People in Batticaloa are talking, as they haven't talked in many, many years,'' a new group, The North and East Underground, said in an e-mail to journalists. ``Over these last few years, the LTT has taxed the eastern people more than anywhere else, they have killed more people here than anywhere else, and they have taken their children more than anywhere else.''

The Tamil Tigers for years have taken children from their families, against their will, to train and use them for combat.

``The landscape in the east speaks eloquently of poverty and destruction,'' said the group of the lack of infrastructure in the east. ``They have squeezed us of everything, even our tears.''

Peace talks were launched after the Norwegian-brokered cease-fire. The talks have stalled, but the peace process has exposed Prabhakaran's outfit to foreign leaders and diplomats. Perera believes the rebels will try to safeguard their image as a group fighting for Tamil rights and not one that sponsors terrorism, and that this could soften the mainstream rebel response.

Some 900,000 Tamil expatriates living in a dozen countries will be a crucial factor. Much of the LTT's money comes from their donations, Perera said. This group can pressure Prabhakaran and Muralitharan to settle their dispute by holding back their money.

``The chance is always there, the two factions going to war,'' said Paikisothy Saravanamuttu, another prominent political analyst, who is a Tamil. ``It will be very difficult for the LTT to allow Muralitharan to carry on as a separate group. Open defiance is not tolerated in the LTT.''

The Tamil ethnic group began migrating from southern India about 1,000 years ago, and comprise 18 percent of Sri Lanka - 's 19 million people. More Tamils came in the 1700s as laborers for British planters.

The Sinhalese say they are a race unique to this island and trace their origin back 2,600 years.

Tamil discontent over discrimination embedded in Sri Lankan law erupted in war in 1983. About 65,000 people were killed in fighting and terrorist attacks in the 19 years leading up to the 2002 cease-fire.

  • தொடங்கியவர்

Sri Lanka: Can peace be restored?

A breakaway Tamil Tiger commander in Sri Lanka, Colonel Karuna, has accused the rebel leadership of preparing for a resummption of hostilities following the country's April elections.

Colonel Karuna told the BBC that he believed this was the reason why he was asked to send 1,000 troops from the east to the north of Sri Lanka.

Sri Lanaka's fragile peace process is already in trouble because of a rift between the president and prime minister over how to negotiate with the Tamil Tigers.

What is your reaction to the split within the Tamil Tiger rebel movement? Tell us what you think.

புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட அண்மைய பிரைச்சனைகளை நீங்கள் அறிவீர்கள்/ இந்த கருணா விடயம் சம்மந்தமான உங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்காக BBC செய்தி நிறுவனம் கருத்துகளம் (Talking Point) ஒன்றை ஆரம்பித்துள்ளது. அங்கே சென்று நீங்கள் உங்கள் கருத்துக்களை எழுதலாம். இந்த கருத்துக்கள் உலகின் பல இனமக்களால் பார்வையிடப்படும்.

உங்கள் கருத்தை எழுத இந்த முகவரிக்கு செல்லுங்கள்

http://news.bbc.co.uk/2/hi/talking_point/3497548.stm

  • தொடங்கியவர்

moorthy.gif

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

சங்கரியின் சுயேச்சைக்குழுவின் வேட்பாளர் ஒருவர் போட்டிýயிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

யாழ்.மாவட்டத்தில், வீ.ஆனந்தசங்கரி தலைமையில் போட்டிýயிடும் சுயேச்சைக் குழு வேட்பாளரொருவர் தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ப10ட்டு சின்னத்தில் சுயேச்சைக் குழுவில் போட்டிýயிடும் இளையதம்பி சாந்தசொரூýபன் (கரவெட்டிý) என்பவரே இவ்வாறு தேர்தலிலிருந்தும் தேர்தல் நடவடிýக்கைகளிலிருந்தும் விலகியுள்ளார்.

சுகயீனம் காரணமாகவே இவர் தேர்தலிலிருந்து ஒதுங்குவதாக இவரது குடும்பத்தவர்கள் பத்திரிகை அலுவலகங்களுக்கு அறிவித்துள்ளனர்.

வட பகுதியில், தேர்தலிலிருந்து விலகும் முதல் வேட்பாளர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

'பிரதேசவாதம் - தமிழ் இனத்தை குறுகத்தறிக்கும் நச்சுக்கோடரி கீழினும் கீழான தூண்டுதலை புறக்கணித்துச் செயற்படுங்கள்"

'பிரதேச வாதம் தமிழ் இனத்தைக் குறுகத் தறிக்கும் ஒரு நச்சுக் கோடரி" என்ற தலைப்பில் அறிக்கையான்றை விடுத்திருக்கும் திருகோணமலை வாழ் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சகல தரப்பு உத்தியோகத்தர்கள், வர்த்தக சமூýகத்தினர் மற்றும் பொது மக்கள், 'கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களே கீழினும் கீழான தூண்டுதலைப் புறக்கணித்து தொழிற்படுங்கள்" என்று அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

அந்த அறிக்கையின் விபரம் வருமாறு:

வடக்கு, கிழக்கு என்பது தமிழ் பேசும் இனங்களின் தாயகம், தாயகத்தை பிரதேசத்தின் பேராலோ, மதத்தின் பேராலோ, குறுகத்தறிக்க முனைகின்றமை ஒரு பச்சைத் துரோகம் ஆகும். இந்தப் பச்சைத் துரோகத்தைப் புரியும் ஒருவராக விடுதலைக்காகச் சிந்தப்பட்ட விடுதலைப் போராளிகளின் குருதியின் பேரால் விலை கூýவி விற்கும் ஒருவராக மாறியுள்ளார். அந்நிய விடுதலை விரோத சக்திகளுக்கு விலைபோன ஒருவர். யார் இவர் என்று பேர் சொல்லி அறிய வேண்டிýய தேவையில்லை. விடுதலைக்காக ஏந்தப்பட்ட கருவிகளை சொந்த தமிழ் மக்களுக்கு எதிராக இவர் திருப்பியுள்ளார். உண்மையில் மறுவளமாகச் சொல்வதானால் தனக்கு எதிராகத் திரும்பியுள்ளார்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்திலிருந்து திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்களை வெளியேறுமாறு கோரிக்கை வேறு அவர் பேரால் விடப்பட்டுள்ளது. தொலைபேசிய10டாக அநாமதேயத் தொலைபேசி மிரட்டல்கள் வேறு விடப்பட்டுள்ளன. மிகமோசமான உட்பகையைத் தூண்டிý தமிழ் பிரதேசங்களுக்கு இடையே பகைமையை மூýட்டிý அந்தத் தீயிலே தனது சுயலாபம் ஈட்டிýக் குளிர்காய முனைகின்றதான ஒரு செயலுக்கு தமிழ் பேசும் மக்களே! யாரும் மனசாலும் துணைபோகாமல் இருங்கள்.

நாள்தோறும் பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சிகள் ஊடாக வெளிவரும் செய்திகள் மட்டக்களப்பில் இருந்து வெளிமாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் கல்வியாளர்களை, தொழில் புரிவோர்களை, மாணவர்களை, உத்தியோகத்தர்களை வெளியேறிவிடுமாறு வலியுறுத்துவதாக கூýறுகின்றன. உண்மையில் இது மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கல்விசார் பின்னடைவுகளையும் எமது விடுதலைப் பாதையில் பாரதூரமான பின்னடைவுகளையும் ஏற்படுத்தும்.

தமிழ் தேசியப் போராட்டத்தில் இதுவரையும் கிழக்கு வாழ் தமிழ் மக்கள், போராளிகள், செய்த மகத்தான தியாகங்கள், பங்களிப்புகள், என்கின்ற பவித்திரமான முகத்திலே பச்சைக்கறையைப்ப10சும் செயலாகவே அமைகின்றது.

எமது விடுதலைப் போராட்டத்திற்கு மட்டுமல்ல கடந்த இரண்டரை வருடகாலத்திற்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சமாதான முயற்சிகளை தமிழ் மக்களைக் கொண்டே சீர்குலைப்பதற்கான திட்டமிட்ட சதி முயற்சியின் ஓர் அங்கமாகவும் நாம் இதனை கருத வேண்டும்.

கடந்த காலங்களில் சமாதான முயற்சிகளிற்கு ஏற்பட்ட சீர்குலைவுகளிற்கு விடுதலைப்புலிகளே அதாவது தமிழ்த்தரப்பினரே காரணம் என்கின்ற பொய்யான குற்றச் சாட்டுகளை நிரூýபித்து நிற்கும் ஒரு முயற்சியாகவும் இது அமைந்து விடும்.

தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் ஒட்டு மொத்தமான குரலை பிளந்தெறியவும், எமது ஆதரவின்றி அரசமைக்க முடிýயாத சூýழ்நிலையை தடுப்பதற்கு துணைபுரியும் துரோகச் செயலாகவும் இது அமைகின்றது.

பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் ஏக பிரநிதிகள் புலிகளே என்கின்ற கொள்கையை முன்வைத்தே பாராளுமன்ற தேர்தலில் போட்டிýயிடும் தமிழ் கூýட்டமைப்பிலும் வடக்கு கிழக்கு என்ற பிரிவினை வாதத்தை முன்வைத்து அதன் வலுவையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் சதி முயற்சியாகவும் இது அமைகின்றது.

எனவே வடக்கு, கிழக்கு மற்றும் இலங்கை வாழ் தமிழ் பேசும் இனங்களே! சமாதான விரும்பிகளே?.

வடக்கு கிழக்கை துண்டாட விரும்பும் ஒரு தீயசக்தியாக இதனை மட்டும் இனங்கான வேண்டாம்! விடுதலைப் பாதையில் இருந்தும் விலகிய ஒரு தனிமனித சக்தியாக மட்டும் இனங்காண வேண்டாம்!.

சமாதானத்திற்கும், சமூýகங்களிற்கிடையிலான நல்லிணக்கத்திற்கும் எதிரான, உள்ளக வெளியக சக்திகளின் கூýட்டுச் சதிகளிற்கு உடந்தையாக தொழிற்படும் ஒரு ஊடுருவல் சக்தியின் கருவியாக இனங்காண வேண்டும். வடக்கு, கிழக்கு சமூýகங்களையும் ஒட்டு மொத்த சமாதானத்தையும் கூýறுபோட முனையும் ஒரு நச்சுக் கோடரியாக இனம் கண்டு அதன் தீய நோக்கங்களிற்கு இரையாகாது இருக்கும்மாறு எமது உறவுகளை வேண்டிý நிற்கிறோம்.

எங்கள் மனங்களில் பிரதேசவாதம் எனும் நச்சு விதை இன்னமும் ஒட்டிýயிருந்தால், அதனைக் கல்லி எறிவோமாக, எந்த சுயநலமான நோக்கங்களிற்காகவும் சிறிதளவேனும் பிரதேசவாதத்தை பயன்படுத்தும் கேவலமான செயல்களை கைவிடுவோமாக, பிரதேச வாதம் என்கின்ற கோடரிக் காம்புகள் ஏந்தி நிற்கின்ற கொடிýய கருவியாக இப்போக்கை இனங்கண்டு அதனை வீசி எறிவோமாக.

பல்கலைக்கழக சமூýகத்தினர்களே! கல்வியாளர்களே! புத்திஜீவிகளே! எமக்கு முன்னால் ஒரு மாபெரும் கடமை உள்ளது. தேசிய விடுதலையை ஊறுபடுத்தும் பிரதேசவாதம் போன்ற குறுகிய வாதங்களில் இருந்து எமது இளைய பரம்பரையினர்களை மீட்டெடுக்கவும் நல்நெறிப்படுத்தவும் முனைந்துஃமுயலுதல் வேண்டும். கல்வியாளர்கள் மட்டுமல்லாது சமாதான சூýழலை விரும்பும் சகல நேச சக்திகளும் சமாதானத்திற்கு எதிரான சக்திகளின் சதி முயற்சிகளை கண்டிýத்து குரலெழுப்புவோமாக.

ஒன்றிணைந்த வடக்கு, கிழக்கிற்குள் நாம் அனைவரும் இணைந்து செயற்பட்டு நமது தேசியத்தை ஒரு கொடிýயின் கீழ் வென்றெடுப்போமாக.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

கருணாவுடன் தொடர்பு வைக்காதீர்! அரசுக்கு அறிவிக்க புலிகள் முடிவு!!

நேர்வே மூலம் உத்தியோக பூர்வமாக இன்று அல்லது நாளை தெரிவிக்கப்படும்

தமது அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள கருணாவுடன் பேச்சுக் களோ, தொடர்புகளோ வைப்பதைத் தவிர்த்துக்கொள்ளும்படி இலங்கை அரசைக் கோருவதற்குத் தீர்மானித்திருக்கின்றார்கள

  • தொடங்கியவர்

போருக்குத் தயாராகிறார் பிரபாகரன்: புலிகள் அமைப்பை கைவிட்ட கருணா புகார்

கொழும்பு, மார்ச் 10: சண்டை மேற்கொள்வது இல்லை என்று இலங்கை அரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளபோதிலும் மறுபுறம் சண்டையை மேற்கொள்ள தயாராகி வருகிறது விடுதலைப் புலிகள் அமைப்பு என்று அதிலிருந்து விலகிய கமாண்டர் கருணா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கிழக்குப்பகுதி புலிகள் கமாண்டராக இருந்தவர் கருணா என்கிற வி. முரளீதரன்.

செய்தி நிறுவனங்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

போருக்குத் தயாராகி வருகிறார் பிரபாகரன். அதற்காகத் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து (எல்டிடிஈ) பிரிந்து வந்துவிட்டேன்.

இலங்கையின் வடக்குப்பகுதியான வன்னி பகுதியில் புலிகள் நிர்வாகம் 1000 துருப்புகளை அனுப்பிவைக்கும்படி எமக்கு அழைப்பு விடுத்தது. அமைதி நிலவும்போது இந்த அழைப்பு வந்துள்ளது. அப்படியெனில் போருக்குத்தான் என நான் முடிவு செய்துள்ளேன். ஏப்ரலில் நடக்கும் பொதுத் தேர்தலில் முடிவு எப்படி அமைகிறதோ அதைப்பொருத்து போரை மீண்டும் தொடங்குவது பற்றி பிரபாகரன் பரிசீலிக்கக்கூடும்.

நன்றி - தினமணி

சந்திரிக்கா அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரங்களின் நோக்கம்...அலசுகிறது...ஈழநாதம்...!

விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்டத்தளபதி பதுமன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்; பதுமன் சுட்டுக்கொல்லப்பட்டார்; கருணாவைப் படுகொலை செய்வதற்காக சொர்ணம் தலைமையில் திருமலைக்கு விடுதலைப் புலிகளின் படைப்பிரிவுகள் அனுப்பப்பட்டுள்ளன என்பன போன்ற தகவல்களே கடந்த சில தினங்களாக சனாதிபதி சந்திரிகாவின் கட்டுப்பாட்டிலுள்ள சிறிலங்கா ஊடகத்துறையின் தலைப்புச் செய்திகளாக இடம் பிடித்துள்ளன.

இத்தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை, வேண்டுமென்றே கூறப்படுபவை என்பனவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கும் நோக்கில் இப்பத்தி எழுதப்படவில்லை. சனாதிபதி சந்திரிகாவின் கட்டுப்பாட்டினுள் லக்ஸ்மன் கதிர்காமர் அமைச்சராக இருக்கும் ஊடகத்துறை எத்தகைய பொய்களையும் கூறத் தயங்க மாட்டாது என்பது எமக்கு அனுபவம் தந்த பாடம்.

ஆனால், தற்பொழுது இவர்களின் இப்பிரச்சாரம் குறித்து சுட்டிக்காட்டுவதற்குக் காரணம் இவர்களின் பிரச்சாரம் எதனை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதற்காகவேயாகும். ஏனெனில் இப்பிரச்சாரத்தின் நோக்கமானது வடக்கு-கிழக்கில் பெரும் நெருக்கடிகளுக்கு வித்திடக் கூடியதாகும். அடிப்படையில் இப்பிரச்சாரங்கள் வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் இடையில் ஓர் பதட்டமானதொரு நிலையைத் தோற்றுவிக்கத்தக்கவையாகும் அதாவது சகோதரர்களுக்குள் குழப்பத்தைத் தோற்றுவித்து அவர்கள் இருவரையும் பலவீனப்படுத்திவிடும் நோக்கம் கொண்டதாகும்.

அத்தோடு இன்று வடக்கு-கிழக்கில் நிலவும் சமாதான அமைதிச் சூழ்நிலையை முடிவிற்குக் கொண்டுவரும் நோக்கம் கொண்டதாகும். அதாவது வடக்கு-கிழக்கு மக்கள் மத்தியில் முரண்பாட்டையும் அதன் மூலம் பதட்டத்தையும் தோற்றுவித்து தமிழ் மக்கள் மத்தியில் குரோதத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதாகும். அது மட்டுமல்லாது, விடுதலைப் புலிகளுக்கும் - கருணாவிற்கும் இடையில் இராணுவ ரீதியிலான மோதல்கள் இடம்பெற்றாலோ அன்றி இரு தரப்பினர் இடையிலான முரண்பாடு நீடித்தாலோகூட அது புலிகள் இயக்கத்தை - அதாவது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்திவிடும் என்பது அவர்களின் மதிப்பீடாகும். இதன் மூலம் வடக்கிற்கும்-கிழக்கிற்கும் இடையே தெளிவானதொரு முரண்பாட்டைத் தீவிரமாகவும் நிரந்தரமாகவும் ஆக்கிக் கொள்ளுதல் அவர்களின் குறிக்கோளாகும். அவ்வாறு ஆக்கிக் கொள்வதன் மூலம் தமிழரின் தேசியம், தன்னாட்சி உரிமை என்பனவற்றைக் கேள்விக்குள்ளாக் குவதே அவர்களின் நோக்கமாகும். அதாவது, வடக்கு-கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும்.

சனாதிபதி சந்திரிகா தலைமையிலான கூட்டணியின் நிலைப்பாடானது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பதற்கு விரோதமானது என்பது ஏற்கனவே உணரப்பட்டதொன்றுதான். ஆயினும், தேர்தல் காலமாகையினால் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்வது பற்றி இக்குழுவும் ஆதரவு தெரிவிப்பவையாகவே உள்ளன. இந்நிலையில், சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் அவர்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்று காணத் தயாராகவுள்ளனரா என்ற சந்தேகத்தையே தோற்றுவிப்பதாகவுள்ளது.

அதாவது, அரசின் கட்டுபாட்டிலுள்ள மக்கள் தொடர்பு சாதனங்கள், தமிழ் மக்கள் மத்தியிலுள்ள ஒருமைப்பாட்டைக் குலைக்க முற்படுவதோடு, மட்டு. அம்பாறை பகுதியில் காணப்படும் அசாதாரண நிலையை திருமலைக்கும் விஸ்தரிக்கும் நோக்குடன் செயற்படுவதாகவே தெரிகிறது. இதன் மூலம் வடக்கு-கிழக்கிலுள்ள ஸ்திர நிலையைக் குழப்பத்திற்குள்ளாக்கி அமைதியையும் யுத்த நிறுத்தத்தையும் முடிவிற்கு உள்ளாக்குவதே சனாதிபதியின் நோக்கமாகும்.

அவ்வாறு இல்லாதுவிடில், தகவல்களை நடுநிலைமையுடன் வெளியிடுவதோடு, வடக்கு-கிழக்கோ அன்றி இலங்கையின் ஏனைய பகுதிகளிலோ அமைதிக்குப் பங்கம் ஏற்படாத வகையில் செயற்பாடுகளை மேற்கொண்டிருத்தல் வேண்டும். ஆனால், அரசாங்க ஊடகங்களின் போக்கு விடுதலைப் புலிகளுக்கு எதிரானவையாகவும், அமைதிக்குப் பங்கம் விளைவிப்பவையாகவே உள்ளன. வேறுவிதமாகக் கூறின், தமிழ் மக்கள் இடையில் பிரிவினையை ஏற்படுத்துபவையாகவும், விடுதலைப் புலிகளை யுத்தத்திற்குள் இழுத்துவிடும் நோக்கம் கொண்டவையாகவே உள்ளன.

சனாதிபதி சந்திரிகா தரப்பின் இத்தகைய செயற்பாடானது அவரின் கூற்றுக்களில் இருந்து வெகு தொலைவில் உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, வெளிநாட்டவர் இதனை விளங்கிக் கொள்ள முற்பட வேண்டும். ஏனெனில் இனியொரு யுத்தம் மூழுமாக இருந்தால் அதற்கு சனாதிபதி சந்திரிகாவின் செயற்பாடே காரணமாக இருக்க முடியும். இதனைச் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்கூற வேண்டிய தேவையும், அவசியம் இன்று எங்களுக்குண்டு.

நன்றி தமிழ்நாதம்...!

தமிழ்நாதத்திலை உது வருமெண்டு எதிர்பார்த்ததுதான்.. பத்திரிகையாளரைகூப்பிட்டு பெரிய பத்திரிகையாளர் மகாநாடு கூட்டேக்கை உப்பிடி வருமெண்டு தெரிஞ்சிருக்கவேணும்.. மற்றவனும் தனதுபக்கக் கதையள் சொல்லுவானெண்டு கொஞ்சமாவது சிந்திச்சிருக்கவேணும்.. தனிமணிதன் எண்டு பத்திரிகைக்கு சொன்ன இயக்கம் ஒரு தனி மனிதனை எதிர்த்து இப்படியான அறிக்கை விடுமானால் அதன் அர்த்தம் என்ன.. அதைத்தான் ஆராய்ந்து பார்க்கிறார்கள்.. அன்னிய சக்தியென்ற சொல்லுக்கே அர்த்தமில்லாதவாறு அந்த ஊடகவியளாளர் மகாநாடு அமைந்துவிட்டது.. உள்வீட்டுப் பிரச்சனை என எல்லோரும் மௌனம் சாதித்தவிட்டனர்.. இந்தியாவை சீண்டி உதவிக்கு அழைத்தபோதும் அவர்கள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.. தற்போது அழைப்புவிடுத்து கதைகூறிய ஊடகங்களை சாடி என்ன பலன்..

:?: :!: :idea:

இப்ப உதுல உங்கட கதை கேக்கல்ல...அவங்கட செய்தியைப் போட்டுக்கிடக்கு...நாங்கள் ஒன்றும் பறையல்லயெல்லே...பிறகென்ன கம்மெண்டு இருக்க வேண்டியதுதானே....!

:P :twisted: :)

சரி உதை விடுவம் குருவிகாள்..

உந்த தமிழ்அலையைப்பற்றிய பிரச்சனைக்கு வருவம்.. உந்தத் தமிழ்அலை மீண்டும் கைமாறிவிட்டதா எனக்கு சந்தேகமாயிருக்கு.. மிண்டி விழுங்கிற அரைகுறை செய்தியளும்.. அங்காலையும்பாடி இங்காலையும்பாடி மழுப்பிற கதையையும் பார்க்க கை மாறினமாதிரித்தான் தெரியிது.. உங்கடை அபிப்பிராயம் என்ன..?

:?: :?: :?:

அவன் தம்பி தளபதியும் நேரத்துக் நேரம் சுருதி மாத்திறானே....முதல் சொன்னான் கிழக்கு புறக்கணிக்கப்பட்டதாலதான் வெளியேறுறன் எண்டு...இப்ப செய்தியாளரைக் கூட்டி வைச்சுச் சொல்லுறான் தலைவர் போருக்குப் போப்போறார் அதாலதான் பிரிஞ்சனான் எண்டு....இவனே சமாதான காலத்தில பல கொமோண்டோப் பிரிவுகளை உருவாக்கினவன்..இப்ப இப்படிச் சொல்லி இருக்கிறான்...ஏதோ மெல்லுறாங்கள் விழுங்கிறாங்கள் ஒன்றுமாப் புரியுதில்ல...!

அவையும் சொல்லியினம் அவன் தம்பி தளபதி நேற்று வரைக்கும் அச்சாப்பிள்ளைதான் இப்ப ஒரு மாசமாத்தான் கெட்டுப்போனான் என்று அதிலும் இப்ப ஒரு கிழமையாத்தான் படு குழப்படி என்று...!

பொறுத்திருந்து பாப்பம் என்ன நடக்குதெண்டு....!

:twisted: :P :) :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீரில் காவியங்கள்

செந்நீரில் ஓவியங்கள்

தண்ணீரில் ஓடம்போல்

தமிழீழக் கோலங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீரில் காவியங்கள்

செந்நீரில் ஓவியங்கள்

தண்ணீரில் ஓடம்போல்

தமிழீழக் கோலங்கள்

கண்ணான சுதந்திரத்தை

விற்றுக்காட்டிக் கொடுப்போரே

எண்ணாதீர் அடிமைநிலை

எந்நாளும் நிலைக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.