Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் பேச்சுக்களில் ஈடுபட புலிகள்-இலங்கை அரசாங்கம் இணக்கம்.. சில வாரங்களில் நோர்வேயில் பேச்சுக்கள் ஆரம்பம்.... :idea:

  • Replies 2.2k
  • Views 133k
  • Created
  • Last Reply

கள உறவுகளே!

நடக்கும் சம்பவங்கள் ஒன்றுதான். ஆனால் அது எவ்வாறு ஒவ்வொரு பத்திரிகை, வானொலி தொலைக்காட்சி இணயத்தள செய்தி நிறுவனங்களால் செய்திகளாக வருணிக்கப்படுகிறது என்றதை கவனியுங்கள்.

-1- அந்த விடயத்தை என்ன தலையங்கத்தோடு வெளியிடுகிறார்கள்.

-2- சம்பவம்-விடயத்தின் ஆரம்ப விவரணம் என்னவாக எப்படி இருக்கிறது.

-3- சம்பந்தப்பட்டவர்களின் கூற்றுக்களில் அல்லது வெளியிடப்படும் அறிக்கைகளின் எப்பகுதிகளை தமது செய்திகளில் மேற்கோள் காட்டுகிறார்கள்.

-4- பழய விடயங்களை அல்லது சம்பவங்களை சுட்டிக்காட்டி ஏதாவது தொடர்புகளை மறைமுகமாக சொல்ல முனைகிறார்களா?

-5- செய்தியின் இறுதிப்பகுதி எவ்வாறு முடிக்கப்பட்டுள்ளது.

-6- இந்த விவகாரங்களில் (உதாரணத்துக்கு ஈழப்போராட்டம்) எந்தவெரு முன் அனுபவம்-அறிவு இல்லாத ஒரு சாதாரணமானவர் இச்செய்தியை வாசித்து முடிக்கும் போது எந்த மாதிரியான எண்ணங்கள் அவருள் வரும் என்ன மனோநிலையை அடைவார்.

-7- சம்பவத்தில் நடந்தவற்றை பக்கச்சார்பின்றி நடு நிலையாக அறிவிக்கிறார்களா இல்லை விவரணங்களின் நடுவே சில "கருத்துக்களும்" உள்நோக்கங்களோடு விதைக்கப்பட்டிருக்கின்றனவா?

யாரும் இந்த விசயத்தில ஆர்வம் காட்டிறதா தொரிய வில்லை? :lol: :?

அரசியல் நாட்டு நடப்புக்களில் ஆர்வமாக கருத்தாடும் கள உறுப்பினர்களே உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.

-1- BBC தமிழ் இன் செய்தியின் தலையங்கத்தை மாத்திரம் வாசிக்கும் போது எப்படியான ஒரு விவகாரம் என எண்ண வைக்கிறது?

-2- செய்தி 7 பந்திகளாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. 5 தாவது பந்தியில் தான் சம்பவம் பற்றிய முக்கிய மான பின்னணித் தகவல் சொல்லப்படுகிறது.

-3- 4வது பந்தி ஒரு பின்னணி மேலதிக தகவலாக செய்தி நிறுவனத்தால் புகுத்தப்படுகிறது. அதுவரை (பந்தி 1 முதல் 3 வரை) சம்பவம் பற்றி கூறியதோடு இந்த "குறிப்பிடத்தக்கது" என கூறப்படும் மேலதிக தகவல் ஒரு சாதாரண மனிதருக்கு எப்படியான உணர்வலைகளை எழுப்பும்?

-4- செய்தியை முழுமையாக வாசித்தபின்பும் தலையங்கம் உணர்த்த முற்பட்ட செய்தியாகத்தான் இருக்கிறதா இல்லை மாற்றம் அடைந்தீர்களா?

  • தொடங்கியவர்

ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு குறித்த கட்சிகளின் கருத்துகள்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை இந்த வருட இறுதிக்குள் நடத்தியாக வேண்டும் என்று இலங்கை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தாம் மதிப்பதாக ஜனாதிபதி சந்திரிகாவின் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு கூறியிருக்கும் அதே வேளையில் ஏனைய எதிர்க்கட்சிகளும் அந்தத் தீர்ப்பினை வரவேற்றுள்ளன.

இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்களின் பதவிக் காலம் இந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடையும் என்றும், இதனால் ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டிலேயே நடத்தப்பட வேண்டும் என இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இலங்கை அரசியலமைப்புச் சட்டப்படி, 22 டிசம்பர் 1999ம் ஆண்டு பதவியேற்ற இலங்கை ஜனாதிபதியின் பதவிக் காலம் குறிப்பிட்ட தேதியில் இருந்து ஆறு ஆண்டு காலத்தில் முடிவடையும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இன்றைய தீர்ப்பில் கூறினார்.

இந்த வழக்கை பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்தது.

_40013883_swearafp.jpg

ஜனாதிபதியும் பிரதமர் மஹிந்த ராஜபட்சவும்

சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக முதன்முறை டிசம்பர் 1994 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், தன் பதவிக் காலம் முடிவடைவதற்கு ஓராண்டிற்கு முன்னதாகவே அவர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை அறிவித்து வெற்றி பெற்றார்.

எனவே, அவருடைய இரண்டாவது ஜனாதிபதி பதவிக் காலம் டிசம்பர் 2007ல்தான் முடிவடையும் என அவர் தரப்பில் வாதாடப்பட்டது.

ஆனால், இலங்கை எதிர்க்கட்சிகளோ அவர் 1999ம் ஆண்டு பதவியேற்றதால் இந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வாதிட்டன, போராட்டங்களும் நடத்தின.

இன்றைய தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு வெற்றியாகவும், சந்திரிகா குமாரதுங்கவிற்கு பின்னடைவாகவும் கருதப்படுகிறது.

இன்றைய தீர்ப்பின் மூலம் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தாம் ஏற்று நடப்பதுடன், அதற்கேற்ப குறிப்பிட்ட காலத்தில் நீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவோம் என்று இலங்கை அரசின் சார்பில் பேசவல்ல அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்ற ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணியும் அதனை வரவேற்றுள்ளார்.

இது மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்று கூறுகிறார் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயோன் முஸ்தபா.

_40004417_ranil_ap203ix.jpg

ரனில் விக்ரமசிங்க

தேர்தல் இந்த வருடத்துக்குள் நடக்கும் என்ற ஒரு முடிவு வந்துள்ளது என்பதைத் தவிர இந்தத் தீர்ப்பில் தமக்கு பெரிய விசேசம் எதுவும் தெரியவில்லை என்று கூறுகிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர்.

தீர்ப்பை வரவேற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள், யாருக்கு ஆதரவு என்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறுகிறார்.

இலங்கையின் அரசியல் சாசனத்தின்படி சந்திரிகா குமாரதுங்க மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலுக்கு நிற்க முடியாது.

இலங்கையின் ஆளும் கட்சியின் சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபட்ச அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

BBC தமிழ்

  • தொடங்கியவர்

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அவருக்கு ஆதவான பிரதம நீதியரசர் அடுத்த வருடம் தான் பதவி காலம் முடிவடைகிறது என்று சொல்வார் என்று நினைத்தேன். பரவாயில்லை இதிலாவது நியாயமாக தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

_40004417_ranil_ap203ix.jpg

ஆளும் கட்சியில் பலத்திற்கு முன்னால் ரணிணுக்கு வெற்றி வாய்பு இருக்குமோ தெரியலை. ஏறத்தாள இது தான் ரணிலின் தேர்தலுக்கு பின்பான நிலையாய் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுடரொளி அலுவலகம் மீது குண்டுத் தாக்குதல்: ஒருவர் பலி..

கொழும்பு கிராண்ட்பாசில் உள்ள சுடரொளி நாளேட்டின் அலுவலகம் மீது இன்று மாலை கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் ஒருவர் பலியானதாக முதலில் கிடைத்திருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வீசப்பட்டன.

இதற்குமுன் அண்மையில் சுடரொளி அலுவலகம் மீது இருமுறை குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னர் வெள்ளவத்தையில் உள்ள அதன் விளம்பரப் பிரிவு அலுவலகமும் தாக்கப்பட்டது..

puthinam..

  • தொடங்கியவர்

அரசியல் கொலைகளும் தாக்குதல்களும் இலங்கையில் இப்போதைக்கு நிற்க போகிறதா தெரியலை :(

:cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கொலைகளும் தாக்குதல்களும் இலங்கையில் இப்போதைக்கு நிற்க போகிறதா தெரியலை :(

விடுவமா.. நாங்கள் யாரு (ஜேவிபி, ஈபிடிபி) ஜனநாயக கட்சி எல்லோ... விட்டுடுவமா.... :wink:

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கொழும்பில் இடம்பெற்ற சுடரொலி காரியாலத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் தீபம் தொலைக்காட்சியின் இலங்கை செய்தியாளர் அனஸ் படுகாயம் என நிதர்சனம் தெரிவித்துள்ளது...

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில், ஷியா இனத்தவர்களின் வருடாந்த புனித வழிபாட்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வழிபாட்டுக்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் திடீரென பரவிய வதந்தியே இதற்குக் காரணம் என்று அறியப்படுகிறது.

தற்கொலைக் குண்டுதாரிகள் கூட்டத்தில் கலந்திருப்பதாகப் பரவிய வதந்திகளைத் தொடர்ந்து, அலை மோதிய கூட்டத்தினால் ஏற்பட்ட நெருக்கடியில் 600 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

Tigris நதிக்கு மேலாகக் காணப்படும் பாலத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் பலர் Tigris நதியில் வீழ்ந்து மரணித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கூட்டத்தை நோக்கி 15 வரையான மோட்டார் குண்டுத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டதாகவும் வேறு சில செய்திகள் தெரிவி்க்கின்றன.

  • தொடங்கியவர்

_40746840_crowdbridge_body_afp.jpg

இதுவரை 600க்கு மேற்பட்டோர் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன,

_40746426_coffin.jpg

ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் ஷியா முஸ்லிம்களின் இந்த புனித நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்,

_40746430_crowd_body_grab.jpg

ஆரம்பத்தில் கூட்டத்தின் மேல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் 16 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

_40746858_climb_body_grab.jpg

தற்கொலை குண்டு புரளியை தொடர்ந்து மக்கள் Tigris நதி பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் பலர் இறந்ததாகவும் காயமடைந்தோரில் பெருமளவான பெண்களும் குழந்தைகளும் இருப்பதாகவும் கூறப்படுகின்றது

நன்றி BBC

படங்களுக்கு நன்றிகள் மதன்

மனிதம் மறந்துவிட்டோம் மனதை தொலைத்து விட்டோம் மிருகமாகிவிட்டோம் மரணன்கள் மதிப்பிளந்து போயின

  • தொடங்கியவர்

கதிமியா பள்ளிக்கு அருகே நடந்தது என்ன?

20050831152224shoes203afp.jpg

சன நெரிசலில் அகப்பட்டவர்களின் காலணிகள் தேங்கிக் கிடக்கின்றன

ஷியா மதப்பிரிவினர் புனிதராகக் கருதும் ஹஸரத் மூஸா காசிம் அவர்களின் நினைவு நாள் இன்று.

அதை ஒட்டி ஆயிரக்கணக்கானவர்கள் பாக்தாத் நகரில் உள்ள கதிமியா பள்ளிக்கு யாத்திரை மேற்கொண்டிருந்த தருணம் இது.

நகரில் டைக்ரிஸ் நதியின் குறுக்கே இருந்த ஒரு பாலத்தை யாத்திரிகர்கள் அடைந்த போது, அங்கே கூட்டம் அலைமோதியது, ஒரே நெரிசல். அந்தக் கூட்டத்தின் இடையே தற்கொலைக் குண்டுதாரிகள் புகுந்துவிட்டார்கள் என்று வதந்திகள் பரவின, எங்கும் ஒரே பதற்றம், அச்சம், பீதி.

20050831115304baghdadsacredshrine203index.jpg

இறந்தவர்களில் சிலரது சடலங்கள்

அந்த மக்கள் திரள் பாலத்திலிருந்து திமுதிமுவென, தாறுமாறாக ஓடத் தொடங்கியது.

இதைத் தாங்கமுடியாமல் பாலத்தின் பக்கச்சுவர்கள் தாங்காமல் விழுந்தன, நிறையப்பேர் நதிக்குள் விழுந்துவிட்டார்கள்.

அதேவேளை, ஜனநெரிசலில் சிக்கி நிறையப் பேர் மூச்சுத்திணறி இறந்திருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.

நூற்றுக்கணக்கானவர்கள் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்ததாக இராக்கிய உடல்நலத்துறை அமைச்சின் கண்காணிப்பாளர் அப்துல் அப்துல்லா கூறுகிறார்.

சம்பவம் நடந்த பாலத்தை அடையும் முன்பாகவே, யாத்திரிகர்கள் வன்முறையை எதிர்கொண்டு, பதற்றம் அடைந்திருந்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

பாலத்தின் செல்லும்போது கூட்டத்தினர் ஏன் அச்சம், பீதி அடைந்து இப்படிச் செயல்பட்டார்கள் என்பதை விளங்கிக்கொள்ள இது உதவும் என்கிறார் எமது பாக்தாத் நிருபர் ஜோன் ப்ரெயின்.

p><p> <a href=]http://www.bbc.co.uk/worldservice/images/2...de203.jpg' alt='2...de203.jpg'>

சன நெரிசல்

சம்பவ இடத்தில், அவசர சேவைப் பிரிவினர் தொடர்ந்து நிவாரணப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்கிறார் அதிகாரி அப்துல் அப்துல்லா.

ஷியா மதப்பிரிவினருக்கு புனிதமிக்க நாளான இன்று, முதலில் செய்யப்பட்ட அந்த எறிகுண்டுத் தாக்குதல், இஸ்லாமிய மதப்பிரிவினருக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்திப் பெருக்கும் நோக்கில் நடத்தப்பட்டிருக்கலாம்.

ஆனால், இப்போதோ, ஜன நெரிசலில் சிக்கி இவ்வளவு பேர் பலியாகியிருப்பது, அதை விடவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இராக் நாட்டுக்கான புதியதொரு அரசியல் சாசனம், ஏற்கனவே, அந்நாட்டின் சுனி-ஷியா மதப்பிரிவினர் இடையே கடுமையான பிளவுகளை, வேறுபாடுகளைக் காட்டியிருக்கிறது.

இராக்கிய மக்கள், இந்த அரசியல் சாசனம் மீது வாக்களிக்கும் நோக்கில் தம்மைப் பதிவுசெய்துகொள்ளும் நேரத்தில் இந்த கோரமான சம்பவம் நடந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை பற்றி சரிவர மதிப்பீடு செய்வது சிரமம்தான்.

BBC Tamil

ஒரு வதந்தியால் இவ்வளவு உயிர்கள் பலியா? :evil: :cry:

தகவலுக்கு நன்றி மதன் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது இறந்தவர்களது தொகை 1000த்தை தாண்டிவிட்டது..

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதியின்றி புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்ற பொலீஸார் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைக்காக மன்னார் சிலாவத்துறை பகுதிக்குச் சென்றபோது விடுதலைப் புலிகளினால் பிடித்துச் செல்லப்பட்ட மூன்று பொலிசாரும் விடுதலைப் புலிகளின் காவல்துறையின் பொறுப்பில் இருப்பதாக விடுதலைப் புலிகள் வட்டாரங்கள் தெரிவிதுள்ளன.

கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர் செய்யப்படவுள்ளதாக விடுதலைப் புலிகளின் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்தார்.

மன்னார் சிலாவத்துறை பகுதியில் உள்ள அரிப்பு என்ற பிரதேசத்தில் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகச் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றையடுத்து, விசாரணைக்காகச் சென்ற சிறுவர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த சிவில் அதிகாரி ஒருவரும், அவருடன் சென்ற 5 பொலிசார், இது தொடர்பில் உதவிக்காகச் சென்ற இரண்டு கிறிஸ்தவ மதகுருமார்கள் மற்றும் இவர்களை ஏற்றிச் சென்ற வாகன சாரதி ஆகிய 9 பேரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் அரிப்பு பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளினால் பிடித்துச் செல்லப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரிப்பு பகுதிக்குச் செல்வதற்கு விடுதலைப் புலிகளின் அனுமதியைப் பெறுவத்றகாக மன்னார் ஆயர் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அனுமதி கிடைப்பதற்கு முன்னர் அங்கு சென்றபோதே இவர்கள் விடுதலைப் புலிகளினால் பிடிக்கப்பட்டு சிலாவத்துறையில் உள்ள புலிகளின் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களை விசாரணை செய்த புலிகளின் காவல்துறையினர் ஆண்களான மூன்று பொலிசாரை மாத்திரம் தடுத்து வைத்துக்கொண்டு ஏனைய ஆறு பேரையும் வாகனத்தையும் விடுதலை செய்ததாகவும், தடுத்து வைக்கப்பட்ட மூன்று பொலிசாரும் கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் மன்னார் ஆயர் இல்ல வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

விடுதலைப் புலிகளினால் பிடிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்காக போர்நிறுத்த சர்வதேச கண்காணிப்பு குழுவினர் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அது முழுமையாக சாத்தியமாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது

பிபிசி தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவில் தேர்தல்Sri Lanka polls set for November

Sri Lanka is to hold presidential elections on 17 November, the country's election commission has announced.

The poll will pit current Prime Minister Mahinda Rajapakse against an opposition leader and former Prime Minister, Ranil Wickramasinghe.

The future of Sri Lanka's economy and of a peace deal with Tamil Tiger rebels are set to be central to the contest.

The poll was prompted by a court ruling last month that said the current president's term must end this year.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4259278.stm

கொழும்பு, புறக்கோட்டை சிறீ கதிரேசன் வீதியிலுள்ள விடுதி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞர் ஒருவரின் சடலம், துர்நாற்றம் வீசிய நிலையில் நேற்று புதன்கிழமை மாலை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை அக்கரைப்பற்றைச் சேர்ந்த கந்தசாமி விவேகானந்தராஜா (அகவை 23) என்பரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை காவல்துறை நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஹேமந்த ஓவிட்டிகம தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக முடப்பட்டிருந்த அறையை திறந்து பார்த்த போது அவரின் சடலம் துர்நாற்றம் வீசிய நிலையில் காணப்பட்டது. இம்மரணம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் அந்த மர்மம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  • 1 month later...

திருகோணமலையில் புயல் அபாயம் உருவாகும் பட்சத்தில் எடுக்கவேண்டிய நட வடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

திருகோணமலையை புயல் தாக்கும் அபா யம் இருப்பதாக எச்சரிக்கை செய்யப்பட்டி ருப்பதை அடுத்தே இந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளருக் கும் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இது தொடர் பான சந்திப்பு நேற்று நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டம் சம்பூர் அர சியல்துறை நடுவப்பணியகத்தில் நடை பெற்ற இச்சந்திப்பில், அடுத்துவரும் வாரங் களில் திருமலை மாவட்டத்தில் புயல் மற் றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை அவதான நிலையம் விடுத்த எச்சரிக்கை

தொடர்பாகவும், மக் களின் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆராயப் பட்டதாக திருகோணமலை மாவட்ட அரசி யல்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரி வித்தார்.

நன்றி http://www.uthayan.com/pages/news/today/06.htm

யாழ் மாவட்டத்தில் பரவலாக குண்டுத் தாக்குதல்கள்

[வியாழக்கிழமை, 17 நவம்பர் 2005, 09:04 ஈழம்] [யாழ். நிருபர்]

தேர்தல் நடைபெறுவதற்கு முதல்நாள் இரவு, பரவலாக பல இடங்களிலும் கிரனைட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் சாவடிகளில் கள்ள வாக்குகள் இடுவதற்கு தயார் படுத்திக்கொண்டிருந்த ஈ.பி.டி.பி. முகவர் நிலையங்களைக் குறிவைத்தே இந்த கிரனைட் வீச்சுக்கள் நடாத்தப்பட்டுள்ளன.

சுhவகச்சேரி, மானிப்பாய், அச்சுவெலி, பருத்தித்துறை, மல்லாகம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி. முகவர் நிலையங்களில், இராணுவத்தினரின் உதவியுடன் கள்ளவாக்குகளைப் போடுவதற்கான திட்டமிடல் முடுக்கி விடப்பட்டுள்ளது.

வடக்கில் மக்கள் ஆதரவு தமக்கு இருப்பதாகக் காட்டுவதற்கான முயற்சியாக, ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் இந்த சதித்திட்டமிடலில் இறங்கியுள்ளனர். ஈ.பி.டி.பி. முகாமொன்றின்மீது வீசப்பட்ட ஒரு கிரனைட்டில், ஒரு இராணுவச் சிப்பாய் படுகாயமடைந்திருப்பது, இந்த சதிவேலையை அம்பலப்படுத்தியுள்ளது.

அனைத்து ஈ.பி.டி.பி. அலுவலகங்களுக்கும் கூடுதல் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், ஈ.பி.டி.பி. உறுப்பினர்களுடன் ஒத்துழைத்து செயற்படும்படி பொலிசாருக்கு உயர்மட்ட உத்தரவும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஓவ்வொரு தேர்தல் வாக்குச்சாவடியிலும் குறைந்தது 40 பொலிசாராவது கடமையில் இருப்பார்கள் என்றும், மேலதிகமாக உயர்மட்ட விசேட பணிப்பில் இறுதிநேரத்தில் 10 பொலிசார் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த மேலதிக 10 பொலிசார், ஈ.பி.டி.பி. போன்ற விரோதக் குழுக்களின் கள்ளவாக்கு விடயங்களில் உதவுவதற்கு ஏதுவாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஈ.பி.டி.பி. உறுப்பினர் என்று தன்னை அடையாளப் படுத்தியதும், அப்பகுதியில் வலிந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்து பதட்டநிலையைத் தோற்றுவித்து, ஈ.பி.டி.பி.யினர் வாக்குமொசடியில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதே இவர்களது திட்டமாக இருக்கிறது.

ஜே.வி.பி. மற்றும் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான இராணுவ மற்றும் பொலிஸ் தரப்பினர், இத்தகைய ஊழல்களில் ஈடுபட விசேட பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக இரகசியத் தகவல்கள் கசிந்துள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேவிபியின் தலைவர் சோமவன்சா அமரசிங்கா லண்டனுக்கு சொன்றுள்ளதாக அறியப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான கணிப்பீடுக்ள ரணிலுக்கு ஆதரவாக இருப்பதால், ரணில் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் தன்னை சிறைக்குள் தள்ளிவிடுவார்கள் என்ற அச்சத்தில் தான் சென்றதாக அறியக் கூடியதாக இருக்கின்;றது.

சென்ற முறை பிரதமராக ரணில் ஆட்சிக்கு வந்தபோதும் இவர் லண்டனுக்கு ஓடிச் சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜேவிபி தொடர்பான வழக்குகளில் குற்றவாளியாக இவரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்

இலங்கை தேர்தல் வேட்பாளர்கள் குறித்த ஒரு பார்வை

yarlele6rq.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.