Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிணறுகளுக்கு வரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images3(10).jpg

[size=2][size=4]சாதாரண கிணறுகள் அல்லது குழாய் கிணறுகளை தோண்டுவோர் ஆண்டுக்கான அனுமதிக் கட்டணமாக நீர்வளசபைக்கு 7,500 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவரை செலுத்தவேண்டிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு அமைச்சரவை பத்திரம் ஒன்று விரைவில் சமர்ப்பிக்கப்படும் என நீர்வளசபையின் தலைவர் பந்துல முனசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள நீர்வளசபை சட்டத்திற்கு திருத்தங்கள் பல கொண்டுவரப்படவுள்ளன. இதன்படி 12 அடிக்கு கூடிய விட்டமுள்ள கிணறு தோண்டுவதற்கு முன் அனுமதி பெறவேண்டியிருக்கும்.

குடிநீரை போத்தலில் அடைக்கும் நிறுவனங்கள் அவை பயன்படுத்தும் நீரின் அளவுக்கு ஏற்ப நீர்வளசபைக்கு காப்புரிமை பணம் செலுத்தவேண்டும்.

குழாய் கிணறு அமைக்கும் நிறுவனங்கள் பதிவுக் கட்டணமாக 15,000 ரூபாவும் அதை ஆண்டுதோறும் புதுப்பிப்பதற்காக 10,000 ரூபாவும் கட்டவேண்டும்.

ஆறுகள், குளங்கள், அருவிகள், வாய்க்கால்கள், நிலவடிநீர் என்பவற்றை மாசடையாது பாதுகாப்பதற்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும்.

அடுத்த 40, 50 வருடங்களில் சுத்தமான நீர் மிகவும் பெறுமதி வாய்ந்ததாகவும் அருமையானதாகவும் ஆகிவிடும். காலம் கடக்கும் முன் எதிர்கால சந்ததிக்காக இதை பாதுகாத்து வைத்திருப்பது இப்போதைய தலைமுறையின் பொறுப்பாகும் என நீர்வள சபையின் தலைவர் பந்துல முனசிங்க கூறினார்.[/size][/size]

[size=2][size=4](சந்துன் ஏ.ஜயசேகர)[/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...9-07-52-39.html[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனிட்டையிருந்து காசைப் பறிக்க, என்ன மாதிரியெல்லாம் 'பிளான்' பண்ணுறாங்கப்பா? :wub:

அப்ப இனி...கிணத்தைக் காணேல்ல எண்டு...கம்ப்ளைண்டு குடுக்கலாம் இலங்கையில..

  • கருத்துக்கள உறவுகள்

அல்லைப் பிட்டி, மண்டை தீவு என்னும் அழகிய மணல் பிரதேசத்திலிருந்து டக்ளஸ் தேவானாந்தா மணல் கடத்தியாதாக முன்னர் செய்தி வந்ததை.... வாசித்தேன். அப்போ.... ஏன் கண்டு கொள்ளவில்லை குணசேகரா...

அரசமரத்தை நடுவதையும், சிங்கள மொழியையும் புத்தசமயத்தையும் பரப்புவதையே.... தொழிலாககக் கொண்ட உங்களுக்கு..

கிணறு கிண்டுவதில் என்ன.. உங்களுக்கு ஏன்.. அக்கறை வந்தது. அது தமிழன் பூமி.

ஈழ‌த்தில் வாழும்... தமிழ் ம‌க்க‌ளுக்கு, அடிப்ப‌டை வ‌ச‌தி செய்ய‌... ம‌ன‌ம் இல்லை.

ச‌ட்ட‌த்தை... இய‌ற்றுகிறார்களாம். வெட்க‌ம் கெட்ட, சிங்க‌ள‌வன்.

தலைவர் பிர‌பாக‌ருனுட‌ன் நேருக்கு, நேர் மோதிப்பார்த்திருந்தால்... தெரிந்திருக்கும், சிங்க‌ள‌வ‌னின்... கிண‌று கிண்டும் வீர‌ம்.

எல்லா... வ‌ல்ல‌ர‌சுக‌ளுட‌ன், த‌ன்னந்த‌னியே... நின்று, மோதிய‌து த‌மிழின‌ம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதே வரியை புலிகள் அமுல் படுத்தியிருந்தால்..........

தமிழரும் ஓலமிட்டிருப்பார்

சிங்களவரும் உலகெல்லாம் ஓலமிட்டிருப்பார்

உலகமும் ஐநாவும் ஓலமிட்டிருக்கும்.

இப்ப பொத்திக்கொண்டு கட்டுங்கோ..

வேற வழி?????????? :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்து இன்னும் தமிழன் உயிர் வாழ்வதற்கு வரி போடலை... அவன் போடுவதற்கு முன்பு ஏதாவது செய்யுங்கப்பூ.. <_< <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதே வரியை புலிகள் அமுல் படுத்தியிருந்தால்..........

தமிழரும் ஓலமிட்டிருப்பார்

சிங்களவரும் உலகெல்லாம் ஓலமிட்டிருப்பார்

உலகமும் ஐநாவும் ஓலமிட்டிருக்கும்.

இப்ப பொத்திக்கொண்டு கட்டுங்கோ..

வேற வழி?????????? :( :( :(

இதற்க்குமேல என்னத்தை எழுத இருக்கு,

நாலுவார்த்தையில் நறுக்கெண்டு சொல்லிவிட்டீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கிணறுகளுக்கு வரி இல்லை: அரசு[/size]

index(503).jpg

[size=3](கெலும் பண்டார, யொஹான் பெரேரா) [/size]

[size=2][size=4]குடிநீர் கிணறுகள் அல்லது விவசாய தேவைக்கான கிணறுகளுக்கு வரி விதிக்கப்போவதில்லை என அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்துள்ளது.

அரசாங்கமோ அல்லது அமைச்சரவையோ இவ்வாறான ஒரு முடிவை எடுக்கவில்லை என அரசாங்கததின்; பிரதான கொறடாவான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இவ்வாறான வரி விதிப்பு பற்றி அரச அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார். இது அரசாங்கத்தின் தீர்மானம் ஆகாது என தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.

ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டவாறு அரசாங்கம் கிணறுகளுக்கு வரி விதிக்கவுள்ளதா? ஏன ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். [/size][/size]

[size=4]http://www.tamilmirr...3-14-44-11.html[/size]

Edited by தமிழரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.