Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் தமிழ் பெண்களை மணம் முடிக்கத் துடிக்கும் இராணுவத்தினர்!

Featured Replies

யுத்தத்தின் கோரப் பிடிக்குள் சிக்கித் தவித்த எமது தமிழ்ச் சமூகம், கடந்த மூன்று வருடங்களாக யுத்தமற்ற சூன்யப் பிரதேசத்தினுள் பிரவேசித்துள்ளனர்.

அத்தகைய சூன்யப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள காக்கிக் சட்டைகள், ஆயுத கலாசாரத்திலிருந்து கீழிறங்கி, புதிய யுக்தியொன்றை கையாண்டு வருகின்றமை அதிர்ச்சியளிக்கின்றது.

யுத்தத்தின் வடுக்களும் இடப்பெயர்வுகளின் தாக்கமும் தமிழர்களின் மனதிலிருந்து அகலாமல் இருக்கும் நிலையில், தமிழ்ச் சமூகத்தின் கலாசாரத்தினை, அவர்களின் வாழ்க்கை முறைமையினை திட்டமிட்டு சிதைக்கும் நடவடிக்கைகள் தற்போது மேலேழுந்துள்ளன.

வடக்கில் உள்ள முன்னாள் போராளிகளோ சரி, போரின் போது அவயவங்களை இழந்து வாழ்க்கையினைக் கொண்டு நடாத்த முடியாத பெண்கள் மற்றும் விதவைகள் ஆகியோர் படையினரால் மேலும் மேலும் தங்களுக்குள்ளே ஒரு உளவியல் போராட்டத்தினையே நடாத்திக் கொண்டு வருகின்றனர். நிம்மதியான வாழ்க்கை கிடைக்காதா என்ற ஏக்கம் பெண்களிற்கு மட்டுமல்ல. தற்போது ஆண்கள் பலரிடமும் கேள்விகளாக தொடுக்கப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் காரணம், தமிழ்ப் பெண்களை தற்போது குறிவைத்துள்ள இராணுவத்தினரைப் பற்றிய சிந்தனைகள் தான். வெளியில் சொல்ல முடியாமலும், சொல்வதானால் பழிக்கு ஆளாக வேண்டிவரும் என்ற பயத்தினாலும் பல பெண்கள் பல பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களை சகித்துக் கொண்டுதான் போகவேண்டியுள்ளது.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் சமூகக் கட்டமைப்புக்கள் வலுவிழந்து வருகின்றமையை உணரக் கூடியதாக உள்ளது. அதாவது திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலங்களிலெல்லாம் கட்டுப்பாடுகள் மீறமுடியாதவைகளாக இருந்தன. மீறினால் நேரடியாகவே மறைமுகமாகவே தண்டனைகள் வலுவாக இருந்தன. ஆனால் இன்று ஆறாத ரணங்களோடு வாழ்க்கையினைக் கொண்டு நடத்தும் தமிழ்ச் சமூகத்தை சிங்கள மேலாதிக்க அரசாங்கம் எவ்விதத்திலெல்லாம் அடிமைப்படுத்த முடியுமோ அதையெல்லாம் திட்டமிட்டு மேற்கொள்கிறது.

தமிழர்களின் தாயகப் பகுதியான யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் வாழ்ந்த சாதாரண மக்கள், அரசியல் ரீதியாக வழி நடத்திய தமிழ்த் தலைவர்களின் காலத்திலும், தமிழர்களின் விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளின் காலத்திலும், தங்களுடைய கலாசாரம், பண்பாடு, விழுமியங்கள், மரபுகள் வழக்காறுகள் ஆகியவற்றை மிகவும் கண்டிப்பாக கடைப்பிடித்து வந்துள்ளார்கள்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் மட்டுமின்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களும் அவ்வாறே வாழ்ந்தனர். ஆனால் ஆயுத ரீதியாக எப்போது புலிகள் தோற்கடிக்கப்பட்டார்களோ, அன்றிலிருந்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வுகள், உரிமைகள், சுதந்திரங்கள் என்பவற்றை விரட்டியடிக்க சமூக சீரழிவு எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் வன்புணர்வுக்குள்ளாக்கியும், பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களை மேற்கொண்டும் இராணுவத்தினர் தங்களது இச்சைகளைத் தீர்த்துக் கொண்டனர். பிணம் தின்னும் கழுகுகளைப் போலவே அவர்கள் செயற்பட்டனர் என்பதில் சந்தேகம் இல்லை. இது முடிந்துவிட்ட பின், மீண்டும் இளம் பெண்களை குறிவைத்திருப்பது வேதனைக்குரியது. ( இதற்கு சில பெண்கள் உடன்படுகின்றமை அதைவிட வெட்கக்கேடு)

யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகமான பாடசாலைச் சிறுமிகளை தங்களது வலையில் சிக்க வைக்கும் இராணுவத்தினர் வயது வித்தியாசமின்றி திருமணம் செய்யவும் துடிக்கின்றனர். ஒரு புறம் காதல் லீலைகள் நடந்தேற, மறுபுறம் திருமணம் முடிப்பதில் தீவிர முயற்சிகள். அவ்வாறு திருமணம் செய்வதற்காக பொய் சான்றிதழ்களை உருவாக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இரவு பகலாக நடமாடும் தமிழர்களின் பகுதிகளின் நடமாடும் படையினர் அங்குள்ள பெண்களைப் பார்க்கும் பார்வை கழுகைவிட மோசமானதாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். இவற்றிற்கெல்லாம் காரணம், யாராலும் தங்களைத் தட்டிக் கேட்க முடியாது என்ற சிந்தனைகள் மேலோங்கி இருப்பதுதான்.

அதாவது, தமிழ்ப் பெண்ணைத் திருமணம் முடித்துவிட்டு, வேறொரு சிங்களப் பெண்ணை திருமணம் செய்யலாம். இல்லையேல் வேறு பெண்களை காதலிக்கலாம். (எத்தனை பெண்களென்றாலும்) காரணம், திருமணம் முடித்தது தமிழ்ப் பெண்ணை. அவளாலோ இல்லை, அவள் சார்பாகவோ யாரும் கேட்க முடியாது. கேட்கவும் வேறு நபர்கள் முன்வர மாட்டார்கள். சிங்கள அரசின் பார்வையில் தமிழினம் ஒரு ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனம் என கருதப்படுவதனால்.

அது மட்டுமல்ல, யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்த சிங்கள அரசு, தமிழ் இனப்பெருக்கத்தைக் குறைப்பதற்காக இவ்வாறு சிங்கள இராணுவம் திட்டமிட்டு தமிழ்ப் பெண்களை திருமணம் முடித்து, தமிழர்களின் வாழ்விடங்களில் சிங்களப் பரம்பலை உருவாக்கலாம்.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் தங்களது தொழில் நிமித்தம் யாழ். மாவட்டத்தில் ஏனைய படைகள் இருப்பதனால், அவ் இராணுவத்தினர் நீண்ட காலங்களாக தம் குடும்பங்களைப் பிரிந்து தங்கி வாழ்வதனால் அவர்களின் இச்சைக்காக தமிழ்ப் பெண்களை நாடுவதனால் திருமணம் செய்யும் ஆசை ஏற்பட வாய்ப்புக்கள் அதிகரிப்பதோடு, யாழில் கலாசார சீரழிவுகளும் கூடவே இள வயது கர்ப்பங்களும் அதிகரிக்கின்றன.

இதனால் வடக்கைப் பொறுத்தவரையில் தமிழ் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலை எந்த நேரமும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. பாலியல் துஸ்பிரயோகம், விபச்சார நிர்ப்பந்தம், இளவயதுக் கர்ப்பம் போன்ற சம்பவங்களால் பாதிப்புற்ற பெண்கள், நீதி கேட்கவோ, அல்லது சட்ட பரிகாரம் தேடிக்கொள்ளவோ, சிகிச்சை பெற்றுக்கொள்ளவோ முடியாத சூழ்நிலை போன்ற கொடுமைகளை சர்வதேச சமூகத்திற்கு தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு விடுகின்றமையே உண்மை.

இவ்வருடம் ஜனவரி மாதம் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும் முன்னாள் போராளி ஒருவருக்கும் ஜனாதிபதி செயலகத்தால் திருமணம் நடாத்தி வைக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமே. இதுவே யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினர் தமிழ் பெண்கள் மீது திருமண ஆசைக்கான தூண்டுகோலாகவும் இருந்திருக்கலாம்.

இவ்வாறு எமது பண்பாட்டுக் கோலங்கள் சிதைக்கப்பட்டு, தாயகத்தின் மக்கள் தொகைச் சமநிலையை மாற்றுவதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல என்பதனை உறுதி செய்துவிடும் என்பதே நிதர்சனம்.

புவிலக்ஸி

[size=3][size=3]http://www.eelamboys.net/archives/528[/size][/size]

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் புலிகள் மேல் பழியை போட ஒரு கூட்டம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி ஓடினதிகல கட்டி விடத்தானே வெளிநாட்டு மாப்பிளையல் இருக்கினம் பிறகேன் கவலை?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பெட்டையள் இந்திய ஜவான்களையும் கலியாண முடிச்சவை தானே. விட்டுத் தள்ளுங்க.. ஊருக்க ஒன்றிரண்டு.. இப்படி இருக்கத்தான் செய்யும். அதுதான் எயிட்ஸே இல்லாத இடத்துக்குள் எயிட்ஸ் பூந்து விளையாடுதில்ல.

அதுக்காக.. ஊரே அப்படின்னு இருக்க முடியாது. இருந்தாலும்.. அந்த ஒன்ரிரண்டு ஒரு கூட்டத்தை கூட்டாமல் இருப்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம் தான். கலாசார சீரழிவு என்பது ஆக்கிரமிப்பாளர்களின் ஒரு பாரம்பரிய ஆயுதம் தான். சிங்களவன் எத்தனையோ ஆயுதங்களைப் பாவிச்சவன். இதனை கையில் எடுக்காமல் விடுவானோ..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முன்னால்ப் பெண்போராளிகளுக்கு நடந்துவரும் அக்கிரமங்கள் நாள்தோறும் அதிகரித்துவருகின்றன. இதனால் சில பெண்போராளிகள் தற்கொலையும் செய்துவருகின்றனர். தமிழ்ப்பெண்கள் மீதான சிங்களத்தின் பாலியல் வண்புணர்வென்பது மிகவும் திட்டமிட்ட வகையில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய காலத்திற்கு முன்பிருந்தே அரங்கேறி வருகிறது. இனவழிப்பின் ஒரு அங்கமாக தமிழ்ப்பெண்கள்மீதான பாலியல் வன்புணர்வு சிங்களத்தால் இன்னுமொரு ஆயுதமாக்கப்பட்டிருக்கிறது.

எதிரியின் பெண்களை கைவசப்படுத்துதல் அல்லது அவர்கள் மேல் பாலியல் பலாத்காரம் புரிதல் என்பது அந்த எதிரிக்குக் கொடுக்கக் கூடிய மிகப்பெரிய அவமானம் அல்லது, அந்த எதிரியின் மேல் கொள்ளப்பட்ட மிகப்பெரும் வெற்றியென்று முன்னர் மன்னர் ஆட்சிக் காலத்தில் நடந்துவந்த ஒரு ஆக்கிரமிப்பு மனோநிலையிலான நடவடிக்கை. இதையே பல இனவழிப்பு நாடுகள் இன்றுவரை செய்துவருகின்றன.

ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நடைமுறை மிகவும் பிரபலம். ஐரோப்பாவின் இதயப்பகுதியில் கூட இந்த நடைமுறை பல்லாயிரக்கணக்கான பெண்கள் மீது நடைபெற்றது. 90 களின் ஆரம்பத்தில் பொஸ்னியப் பெண்கள்மீதான தமது பாலியல் வன்புணர்வென்பது அந்த இனத்தின்மீதான தமது வெற்றியாக சேர்பியர்கள் கருதினார்கள். இதன் காரணமாக பால்லாயிரக்கணக்கான பொஸ்னியப் பெண்கள் சுற்றிவளைக்கப்பட்டு நாசி தடை முகாம்களை ஒத்த முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு சேர்பிய இராணுவத்தாலும், சாதாரணப் பொதுமக்களாலும் பாலியல் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டனர். தம்மால் பாலியல் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பதை உறுதிசெய்து கொள்வதற்காக குறைந்தது 3 அல்லது 4 மாதங்களாவது அந்தப் பெண்கள் அம்முகாமை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை. தமது இனத்தின் வெற்றிக்கு எதிரி இனத்தின் பெண்களில் தமது இனத்தை உருவாக்குவது அவசியம் என்று சேர்பியர்கள் கருதினார்கள். இன்று சிங்களம் செய்துவருவதும் அதைத்தான். திட்டமிட்டு தமது இனத்தை தமிழ்ச் சமுதாயத்திற்குள் உருவாக்கிவிட்டால் தமிழரின் போராட்ட வீரியம் குறைந்துபோகும், பின்னர் இலகுவாக தமிழினத்தை சிங்களப் பேரினவாதத்திற்குள் உள்வாங்கிக் கொள்ளலாம் என்பதே அவர்களின் கணிப்பு. இதற்கு உடந்தையாகப் பலர் தமிழினத்திற்குள் செயற்பட்டுவருவதையும் மறுப்பதற்கில்லை.

அண்மையில் யாழ்ப்பாணம் சென்று திரும்பிய உறவினர் இருவர் என்னிடம் இவ்வாறு சொன்னார், " அங்க சனம் நல்ல சந்தோசமா இருக்குது, சிங்களவரோட சேந்து வாழ விரும்புதுகள், உங்கட கதையல சனம் ஏற்றுக்கொள்ளுற நிலையில் இல்லை. கொழும்பில இல்லாத சாமான்கள் யாழ்ப்பாணத்துக் கடையில் இருக்குது. பணக்காரருக்கு தங்கட சுகபோக வாழ்வு இல்லாமல்ப் போகுமெண்டு பயம், பாதிக்கப்பட்ட சனத்துக்கு இன்னொருக்கா கஷ்ட்டப்பட வேண்டி வருமெண்டு பயம், அதுதான் சனம் எல்லாம் சிங்களவரோட சேந்து வாழ வேனுமெண்டு சொல்லுது" என்றார். என்னைப் பொறுத்தவரையில் தமிழரின் இந்த தோல்வி மனப்பான்மையே சிங்களத்தின் முதல் வெற்றி என்று சொல்லலாம். சிங்களத்தைப் பொறுத்தவரை உளவியல்ப் போரில் தாயகச் சமூகத்தை வென்றுவருகிறான் என்பதையே இது காட்டுகிறது. எம்மால் இனி ஒன்றும் இயலாது, சிங்களத்துடன் ஒத்துப்போவதைத்தவிர எமக்கு வேறு வழியில்லை என்று தமிழ்ச் சமூகம் நினைப்பதே அவனுக்கு வெற்றிதான்.

சிங்களத்தின் அடிமைத்தனத்திலிருந்து பாதிக்கப்பட்டு அழிந்தது போதுமென்கிற நிலை அந்தச் சமூகத்திற்கு ஏற்படும்வரை எவராலும் எதையும் செய்யமுடியாது என்றே நினைக்கிறேன். நாம் செய்யவேண்டியது தாயகத்து அக்கிரமங்களைத் தொடர்ச்சியாக வெளியுலகிற்குக் கொண்டுவருவதுதான். இதை தயகச் சமூகம் விரும்பினாலென்ன விரும்பாவிட்டாலென்ன நாம் செய்யவேண்டியது அவசியம்.

Edited by ragunathan

  • தொடங்கியவர்

சிங்களத்தின் அடிமைத்தனத்திலிருந்து பாதிக்கப்பட்டு அழிந்தது போதுமென்கிற நிலை அந்தச் சமூகத்திற்கு ஏற்படும்வரை எவராலும் எதையும் செய்யமுடியாது என்றே நினைக்கிறேன். நாம் செய்யவேண்டியது தாயகத்து அக்கிரமங்களைத் தொடர்ச்சியாக வெளியுலகிற்குக் கொண்டுவருவதுதான். இதை தயகச் சமூகம் விரும்பினாலென்ன விரும்பாவிட்டாலென்ன நாம் செய்யவேண்டியது அவசியம்.

மிக அருமையான கருத்து ரகு அண்ணா....

  • கருத்துக்கள உறவுகள்

சோனகன் தமிழனை மதம்மாற்றுறான், சிங்க´ளவன் தமிழனை... இனம் மாற்றுறான்....

எப்படி வாழ்ந்த இனம், கேட்பதற்கு நாதியற்றுப் போய்விட்டது. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் காலம் காலமாக நடப்பது ஓன்று தான் ஒரு அந்நிய தேசம் ஒரு தேசத்தை ஆக்கிரமிக்கும் போது.......

ஒல்லாந்தர் போர்த்துகேயர் ஆங்கிலேயர் என்று வந்து ஆட்சி புரிந்தவர்களும் இதை செய்தார்கள் கோவில்களை இடித்தார்கள் மதங்களை பரப்பின்னார்கள் பெண்களை மணந்தார்கள் ஆனால் இன்று வரை யாழ்பாணத்தில் தமிழும் நிலைத்திருக்கு இந்து மதமும் நிலைத்திருக்கு எண்கள் கலாச்சாரமும் இருக்கு சோ இதுவும் கடந்து போகும் :D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் காலம் காலமாக நடப்பது ஓன்று தான் ஒரு அந்நிய தேசம் ஒரு தேசத்தை ஆக்கிரமிக்கும் போது.......

ஒல்லாந்தர் போர்த்துகேயர் ஆங்கிலேயர் என்று வந்து ஆட்சி புரிந்தவர்களும் இதை செய்தார்கள் கொவிலகை இடித்தார்கள் mathankalai பரப்பின்னார்கள் பெண்களை மணந்தார்கள் அனால் இன்று வரை யாழ்பாணத்தில் தமிழும் நிலைத்திருக்கு இந்து மதமும் நிலைத்திருக்கு எண்கள் கலாச்சாரமும் இருக்கு சோ இதுவும் கடந்து போகும் :D

சுண்டல், உங்கள் கருத்துடன் உடன் படும் அதே வேளை, இன்னொன்றையும் நாம் மறந்து விடக்கூடாது.

போர்த்துக்கேயர் காலத்தில், நம்மவர்களில் சிலரைப் பிடித்து,அவர்களுக்கு ஒரு காச்சட்டையையும் போட்டுக் 'கங்காணி' என்றொரு பட்டமும் கொடுத்து விட்டார்கள், போத்துக்கீசர்கள்!

கண்கானியும் ஒரு தடியோட விரதம் பிடிக்கிற வீடுகளெல்லாம், தேடித் திரிவார். சனமும் விரதம் முடிய, வாழை இலைகளைக் கூரையில் சொருகி வைத்து விடுவார்கள். இந்தப் பழக்கம் இன்றும் இருக்கிறது. ஆனால், விரதம் பிடிக்கிறதைச் சனங்கள் நிறுத்தவேயில்லை. இழந்தவை, காகங்கள் மட்டும் தான். ஏனெனில் அவை, சத்தம் போட்டு, விரதம் இருக்கும் வீடுகளைக் காட்டிக்கொடுத்ததால், சனங்கள் காகத்துக்குப் படைக்கவில்லை! கங்காணிக்கும், காச்சட்டையைத் தூக்கச் சொல்லி, நாலு அடி விழும். கங்காணியும் கவுரவம் கருதி,அதை வெளியே சொல்லமாட்டார்.

ஆனால், இன்று நிலைமை வேறு. இன்று ஊரெல்லாம் கங்காணிகளாய்க் கிடக்கு. அதோடு, ஆமிக்காரனோட சேர்ந்து, கங்காணியும் மேயுது. கங்காணியழுக்குப் பங்கும் கிடைக்குது! இந்தக் கங்காணியளை, ஒரு வழிப் பண்ணும் வரைக்கும், எமது இனத்துக்கு, தன்னை இழப்பதைத் தவிர வேறு வழியில்லை!

ரகுநாதன் சொல்வது போலச் செய்வது தான், எமக்குள்ள ஒரே வழி!

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம் ரகு அண்ணாவோட கருத்தும் என்னை சிந்திக்க வைச்சிருக்கு உங்கள் கருத்தும் சரியா இருக்கு..... எங்கள்

போராட்டம் சான் ஏற முழம் சறுக்குது :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.