Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலதும்,பத்தும்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மாணவர்களின் கூட்டம் ஒன்று நடந்தது.100 மாணவர்கள் பங்கு பற்றினார்கள்.பேராசிரியர் ஒருவர் உரையாற்றினார்.அவர் அந்த மாணவர்களைப் பார்த்து "இந்த அறையின் மேல் சுவரைத்[பத்தடி உயரத்தில் இருந்தது] தொட உங்களால் முடியுமா?" என்று கேட்டார்.
ஒருவரைத் தவிர யாருமே "முடியும்" என்று சொல்லவில்லை.
பேராசிரியர் அந்த மாணவனைப் பார்த்து முடியும் என்டால் "தொடு,பார்ப்போம்" என்டார்.
மாணவர் வெளியில் போய் ஏணியுடன் திரும்பி வந்து அதில் ஏறி நின்று மேற்சுவரைத் தொட்டார்!
 
எதையும் "முடியும்" என்று நினையுங்கள்.வழி திறக்கும்."முடியாது" என்று நினைத்தால்,திறந்திருக்கும் வழியும் மூடிக் கொள்ளும்
  • Replies 584
  • Views 41.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
காதலித்துப் பார்!
உன் கையெழுத்து அழகாகும்.
காதலிப்பதை விட்டுப் பார்
உன் தலையெழுத்து அழகாகும்
 
யாரும் கிழித்து விட முடியாத கடிதம்தான்!
அவன் பார்வை
 
வாழ்க்கை ஒரு வரம்.
காதல் அதில் ஒரு சாபம்
 
சாதனையாளர்கள் யாரும்
காதல் வலைக்குள் சிக்குவது இல்லை
 
இரு விழிகள் சங்கமிக்கும் போது தோன்றுவது கனவு
நான்கு விழிகள் இணையும் போது உதிப்பது காதல்
களிப்பைத் தருவது கனவு
காயப்படுத்துவது காதல்
 
ஒரு கண்ணாடிப் பாத்திர‌த்தை கையில் வைத்துக் கொண்டு எண்ணெய் கொட்டி விட்ட தரையில் நட‌ப்பதற்கு சமனானது‍ ஒரு ஆணைக் காதலிப்பதும்...அவனோடு பழகுவதும்!
 
 
 

இப்ப கொஞ்சநாளாக நீங்க எழதுவது

நீட்டி முழுங்குவது போலுள்ளது

வாசிக்க வருகுதில்லை

 

இருவரிச்சொற்களே  நன்று ரதி

பழைய வழிக்கு வாங்கோ

அசத்துங்கோ சகோதரி

வாழ்த்துக்கள்

நன்றிகள் நேரத்திற்கு

 

கவனத்தில் எடுக்கிறேன் அண்ணா

யுரேனியத்தை எரிப்பவர்கள் யார்? :rolleyes:

 

எனக்குப் புரியவில்லை இசை விளக்கமாய் எழுதுங்கள்
  • கருத்துக்கள உறவுகள்

 

 
எனக்குப் புரியவில்லை இசை விளக்கமாய் எழுதுங்கள்

 

 

யுரேனியம் chain reaction மூலமே சக்தியை உருவாக்கும்.. அதை எரிப்பதாக எழுதப்பட்டிருந்ததால் அதை யார் செய்கிறார்கள் என்று கேட்டேன்.. :D

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 
ஒரு கண்ணாடிப் பாத்திர‌த்தை கையில் வைத்துக் கொண்டு எண்ணெய் கொட்டி விட்ட தரையில் நட‌ப்பதற்கு சமனானது‍ ஒரு ஆணைக் காதலிப்பதும்...அவனோடு பழகுவதும்!

 

யாழ்  களத்தில் ஒரு  நெடுக்குத்தானே :lol:

 

மற்றவரெல்லாம் என்னைப்போல் வாயில்லாப்பூச்சிகள்

இவ்வாறு  எழுதலாமா?

இது தகுமா சகோதரி? :lol:  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சஞ்சிவி மலை என்பது இராமயணத்தில் வரும் ஒரு மலை.அங்கு பல மூலிகைகள் உள்ளன.அதில் முக்கியமான நான்கு மூலிகைகள் இருந்தன.அவையாவன;
 
1)சாவர்ணகரணி -உடலில் ஏற்படும் ரத்தக் காயங்களை குணப்படுத்தி காயம் ஏற்பட்ட இடத்தில் தழும்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு முன்பு தோல் எந்த நிறத்தில் இருந்ததோ அதே நிறத்திற்கு கொண்டு வந்து விடும்.
 
2)விசல்யகர‌ணி -கத்தி,வாள் முனைகள் உடம்புக்குள் தங்கி விட்டால் அவற்றை அப்படியே கரைத்து கழிவுப் பொருட்களில் கலக்க வைத்து அப்படியே வெளியேற்றி  விடும்.
 
3)சந்தானகர‌ணி -என்னும் மூலிகையானது போரின் போது துண்டாடப்பட்ட கை,கால் போன்ற உறுப்புக்களை மீண்டும் பழையபடி இணைத்து வைக்கும்.
 
4)மிருதச்ஞ்சிவினி- என்னும் மூலிகையானது இறந்து போகும் நிலையில் உள்ள ஒருவரை மூண்டும் பிழைக்க வைக்கும்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
"ஈரேழு பதினான்கு லோகங்களில் தேடினாலும் உன்னைப் போல் ஒருத்தனைப் பார்க்க் முடியாது" என்று சொல்வதுண்டு.அது என்ன 14 உலகங்கள்?
 
அதலம்
விதலம்
நிதலம்
மஹாதலம்
சுதலம்
ரசாதளம்
பாதாளம்
பூமி
புவர்லோகம்
ஸ்வர்கலோகம்
மஹாலோகம்
ஜனலோகம்
தபோலகம்
சத்தியலோகம்
 
 
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மனிதன் பிறக்கும் போதே 3 கர்ம வினைகளுக்குட்பட்டே பிறக்கிறான்.
 
சஞ்சீத கர்மா முற்பிறப்புக்களில் மனிதன் செய்த பாவ,புண்ணிய மூட்டைகளின் இருப்பாக இருக்கிறது.
 
பிராப்த கர்மா பிறக்கும் போது அவன் முப்பிறவியில் செய்த பாவ பலன்கள் விகிதாசாரப்படி இப் பிறவியில் அவனுக்கு அந்தந்த நேரத்தில் இன்னென்ன நடக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.அதன் படி அவன் அதை பெறுவதற்காக பூமியில் பிறவி எடுக்கிறான்
 
ஆகாமிய கர்மா பூமியில் பிறவி எடுப்பவன் அதன் தொடர்பாக இன்பத்தையோ,துன்பத்தையோ அனுபவத்தில் சந்திக்கும் போது அதன் நெருக்கடி காரணமாக மீண்டும் பாவமோ,புண்ணியமோ,நல்ல/தீய செயல்களோ,தெரிந்தோ/தெரியாமலோ ஆற்றுகின்ற செயற்பாடுகள் மறுபடியும் உயிரிலே பதிவாகி மீண்டும் கர்மாவாகப் பாவ புண்ணியமாகச் சம்பாதித்து,மறுபடியும் சஞ்சீத கர்மம் என்னும் பாவ,புண்ணிய மூட்டையின் இருப்பைக் கூட்டுகிறான்.இதுவே ஆகாமிய கர்மா
  • கருத்துக்கள உறவுகள்

 

மனிதன் பிறக்கும் போதே 3 கர்ம வினைகளுக்குட்பட்டே பிறக்கிறான்.
 
சஞ்சீத கர்மா முற்பிறப்புக்களில் மனிதன் செய்த பாவ,புண்ணிய மூட்டைகளின் இருப்பாக இருக்கிறது.
 
பிராப்த கர்மா பிறக்கும் போது அவன் முப்பிறவியில் செய்த பாவ பலன்கள் விகிதாசாரப்படி இப் பிறவியில் அவனுக்கு அந்தந்த நேரத்தில் இன்னென்ன நடக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.அதன் படி அவன் அதை பெறுவதற்காக பூமியில் பிறவி எடுக்கிறான்
 
ஆகாமிய கர்மா பூமியில் பிறவி எடுப்பவன் அதன் தொடர்பாக இன்பத்தையோ,துன்பத்தையோ அனுபவத்தில் சந்திக்கும் போது அதன் நெருக்கடி காரணமாக மீண்டும் பாவமோ,புண்ணியமோ,நல்ல/தீய செயல்களோ,தெரிந்தோ/தெரியாமலோ ஆற்றுகின்ற செயற்பாடுகள் மறுபடியும் உயிரிலே பதிவாகி மீண்டும் கர்மாவாகப் பாவ புண்ணியமாகச் சம்பாதித்து,மறுபடியும் சஞ்சீத கர்மம் என்னும் பாவ,புண்ணிய மூட்டையின் இருப்பைக் கூட்டுகிறான்.இதுவே ஆகாமிய கர்மா

 

கர்மா என்பதும், விதி என்பதும், வருணாச்சிரம தர்மத்தை நியாயப்படுத்துவதற்காகவும், அதை இலகுவாக அமுல்படுத்தக் கூடியவாறு, மனித மனங்களில் ஒரு வித பய உணர்வை விதைப்பதற்காகவும், வேண்டுமென்றே புனையப்பட்ட புனைகதைகள்!

 

இதை நம்புவதனால் தான், புலத்துத் தமிழன், கை நிறைய எல்லாமிருந்தும், தலை தூக்க முடியாமல், பிராமணர்களிடமும், சாத்திரிகளிடமும் அடிமையாகிக் கிடக்கிறான்! :o

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை.. நீங்கள் என்னத்தைச் சொன்னாலும் எனக்கு அடுத்த பிறப்பு இல்லை எண்டு சாத்திரிமார் சொல்லிப்போட்டினம்..  :icon_idea:  ஆகவே.. கர்மவினைகள் உண்டு.. உண்டு.. உண்டு.. :icon_mrgreen::D

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை.. நீங்கள் என்னத்தைச் சொன்னாலும் எனக்கு அடுத்த பிறப்பு இல்லை எண்டு சாத்திரிமார் சொல்லிப்போட்டினம்..  :icon_idea:  ஆகவே.. கர்மவினைகள் உண்டு.. உண்டு.. உண்டு.. :icon_mrgreen::D

 

அப்பாடா

உலகம் தப்பித்தது............ :lol:  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கர்மா என்பதும், விதி என்பதும், வருணாச்சிரம தர்மத்தை நியாயப்படுத்துவதற்காகவும், அதை இலகுவாக அமுல்படுத்தக் கூடியவாறு, மனித மனங்களில் ஒரு வித பய உணர்வை விதைப்பதற்காகவும், வேண்டுமென்றே புனையப்பட்ட புனைகதைகள்!

 

இதை நம்புவதனால் தான், புலத்துத் தமிழன், கை நிறைய எல்லாமிருந்தும், தலை தூக்க முடியாமல், பிராமணர்களிடமும், சாத்திரிகளிடமும் அடிமையாகிக் கிடக்கிறான்! :o

 

கர்மா என்று ஒன்று இல்லா விட்டால் இந்த பிறப்பில் சிலர் நல்லதையே செய்கிறார்கள்,நல்லவர்களாக வாழ்கிறார்கள் ஆனால் ஏன் அவர்கள் தொடர்ந்தும் கஸ்டத்தையே அனுபவிக்கிறார்கள் :unsure: போன பிறப்பில் செய்த பாவம் தானே இப்படி ஆட்டி வைக்கின்றது :(  :o

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உங்கள் வயது என்ன?
 
ஆண்டவன் படைப்பை துவக்கி விட்டு யோக நித்திரையில் ஆழ்ந்து விட்டார்.அவர் விழித்து எழும் போது பல நுற்றாண்டுகள் கடந்து விட்டன.உலகில் பெரிய நெருக்கடி.காரணம்,கடவுள் உயிரினங்களுக்கு வயதை நிர்ணயிக்கவில்லை.இப்ப்போதே செய்தேயாக வேண்டிய நெருக்கடி.
 
ஒவ்வொரு வகைக்கும் வயது நிர்ணயிக்கப்பட பல காலம் பிடித்தது.கடவுளுக்கே போதும்,போதும் என்றிருந்தது.
 
எல்லாவற்றை முடித்தாகிவிட்டது‍ -மூன்றைத் தவிர.அவை மனிதன்,கழுதை,நாய்.மூன்றின் பிரதிநிதிகளும் கடவுள் உன் நின்றன.
 
"மனிதன்,கழுதை,நாய் இனி ஆளுக்கு நாற்பது ஆண்டுகள்."  
 
மூன்றும் பதில் பேசவில்லை.அதே நேரத்தில் தீர்ப்பு முடிந்தது என்று திரும்பிப் போகவில்லை.
 
"என்ன?" என்று கடவுள் கேட்டார்.கழுதை பேசியது."ஆண்டவனே!என் மீதான சுமையை நான் நாற்பது ஆண்டுகள் சுமக்க வேண்டுமா? தயவு செய்து என் வயதை இருபதாக்கி விடுங்கள்".
 
அப்போது மனிதன் குறுக்கிட்டு,அந்த இருபதை எனக்கு கொடுத்து விடுங்கள்"என்றான்.
 
"சரி" என்றார் ஆண்டவன்.
 
இப்போது நாய்க்குத் தைரியம் வந்தது."கடவுளே",என் வயதையும் பாதியாகக் குறைத்து விடுங்கள்."
 
மனிதன் மீண்டும் குறுக்கிட்டு "சாமி..." என்று இழுத்தான்.
 
"அப்படியே ஆகட்டும்" என்று கூறி கடவுள் மறைந்து விட்டார்.
 
அன்றிலிருந்து மனிதன் நாற்பது ஆண்டுகள் மனிதனாக வாழ்ந்து,அடுத்த இருபது ஆண்டுகள் கழுதை போல் வாழ்ந்து,கடைசி இருபத் ஆண்டுகள் நாயாய் அலைய வேண்டியதாயிற்று 
 
 
படித்ததில் ரதிக்குப் பிடித்தது :D 
 
  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
என்னுள்ளிருக்கும்
உன்னுள்
என்னுள்ளிருக்கும்
எல்லாம் இருந்தும்
ஒன்று மட்டுமில்லை 
அது காதல்!
உன்னுள்ளிருக்கும்
எல்லாம் இருந்தும்
ஒன்று மட்டுமில்லை
அதுவும் காதல்!
பின் எப்படி உன்னை
நானும் என்னை நீயும்
நேசிக்கலானோம்?
என்பதை உன்னுள்ளிருந்தே
நான் கேட்க என்னுள்ளிருந்தும்
நீ கேட்க நம்முள் உள்ள
இக்கேள்வியை யாரறிவார்?
 
                         வாசித்தது
 
எனக்கு இந்தக் கவிதையில் ஒன்றுமே விளங்கவில்லை :unsure: யாராவது விளங்கப்படுத்தவும்.நன்றி
 
 
 
 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும்தான் விளங்கேல்லை :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கனவு!
 
தூங்கும் மூளையின் எண்ணக் கசிவுக்கு இன்னொரு பெயர் இது.
 
பெரும்பாலும் மனதுக்குள் ததும்பி வழியும் பலவிதமான எண்ணங்களே உறக்கத்தில் வெந்நீர்ப் பானையின் ஆவிபோல வெளிப்பட்டு காட்சிகளாய் விரிகின்றன.
 
           இது எண்ணங்களால் இயக்கப்படும் மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தும்.சில மிருகங்கள் கூட கனவு காண்கின்றன.இது ஒரு அநிச்சையான செயல்.இப்படித்தான் விஞ்ஞானம் சொல்கிறது.
 
சிறுநீர் கழித்தல்,மலம் கழித்தல்,எச்சில் சுரத்தல்,வியர்வை போல இதுவும் ஒரு அத்தியாவசியச் செயல் என்கிறது விஞ்ஞானம்.
 
ஆனாலும் விஞ்ஞானத்தின் கூற்றை மீறிய பல விசயங்கள் கனவுகளில் புதைந்திருக்கின்றன.அவை கனவை மிகமிக ஆச்சரியமான ஒன்றாக யூகிக்க வைக்கின்றன.
 
           அவற்றில் ஒன்று.... கனவில் யானை துரத்துவது! பெரும்பாலோருக்கு கனவில் யானை வந்து துரத்தும் சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.
 
ஒரு பெரிய பிரச்சனையின் மன அழுத்தம் தாளாமல் நிகழும் ஒன்றாகவே இதை ஆய்வாளார்கள் கருதுகின்றார்கள்.ஆனால் சாஸ்திர வல்லுநர்களோ 'சொப்பன சாஸ்திரப்படி அப்படி ஒரு கனவு கண்டவருக்கு அவரது தகுதிக்கு மீறிய பதவியோ இல்லை பரிசோ கிடைக்கப் போகிறது.அதன் எதிரொலிதான் அந்தக் கனவு' என்கின்றனர்.
            
                           எங்கோ வாசித்தது
 
உங்களில் யாராவது யானை துரத்தின மாதிரி கனவு கண்டு இருக்கிறீர்களா :lol: 
 
 
 
 
 
 
 
 
 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
'அப்பாவுக்கு
அறுபதினாயிரம் மனைவிகள்
இருந்தும்
சந்தேகம் இல்லை.
ராமனுக்கு ஒரு மனைவி
ஆயிரம் சந்தேகங்கள்.'
 
                    கபிலன்
 
'நீண்ட அழகு நாரை
நீரைக் கொத்தினாலும்
நீங்காத நிலா'
 
                   அமுதபாரதி
'கலவரத்திலும் 
புன்னகை மாறாமல்
சிலைகள்'
 
              ஜி.மாஜினி
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
யுத்த கால
இரவொன்றின் நெருக்குதல்
எங்கள் குழந்தைகளை 
வளர்ந்தவர்களாக்கிவிடும்
தும்பியின் இறக்கையைப் பிய்த்து எறிவது
தடியையும் பொல்லையும் துப்பாக்கியாக்கி
எதிரியாய் நினைத்து நண்பனைக் கொல்வதும்
எமது சிறுவர் விளையாட்டானது
யுத்த கால இரவுகளின் நெருக்குதலில்
எங்கள் குழந்தைகள்
வளந்தவர் ஆயினர்
 
                  சிவரமணி  
 
  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாக் காலங்களிலும் மக்களுக்காகப் பேசுபவர்களையும் அவர்களுக்காக போராடுபவர்களையும் வல்லரசு நாடுகள் 'தீவிரவாதிகள்' என்றால், அவரவர் நாட்டு சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை மட்டும் 'தியாகிகள்' என்றார்களே ஏன்? சே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புத்தளத்தை சேர்ந்த ஒரு நண்பி இருக்கிறார்.அவட ஊர்,சுத்தியுள்ள சிலாபம் போன்ற இடங்களில் உள்ள தமிழர்கள் அவவின் சொந்தக்காரரையும் சேர்ந்த்து சிங்கள இனத்தில் திருமணம் முடித்து,சிங்களத்தில் படித்து சிங்கள மொழி முழுமையாகவும் தமிழ் அரைகுறையாகவும் பேசுகின்றனர்.தற்போதே நிலை இப்படி உள்ளது என்டால் இந்த எதிர்காலத்தில் இச் சந்ததியின் நிலை :)

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனத்தில் மணமுடித்து அந்த சிங்களவரை எல்லாம்தமிழர்கள் ஆக்குகிறார்கள் பலே.. :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெட்டையளை கரெக்ட் பண்ணுறதில்,வழியிறதில் அரைக் கிழவன்களும்,கிழவன்களும் கெட்டிக்காரான்கள்:) பயமில்லாமல் தங்கட சேவையை செய்வார்கள்.இளைஞர்கள் மானம்,மரியாதை,பயம் கருதி கமுக்கமாய் இருந்திடுவார்கள்.இங்க யாழில் ஜொல்லு விடுகிறாக்களின்ட வயசைப் பார்த்தாலே தெரியும்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துடிப்பது என் இதயம் தான்.

ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ.

வலித்தால் சொல்லி விடு.

நிறுத்தி விடுகிறேன்.

துடிப்பதை அல்ல.இப்படி றீல் விடுவதை:lol::lol::lol:

Edited by ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சொல்ல கண்கள்

பொய் சொல்ல பெண்கள்

அதை நம்ப ஆண்கள்

உண்மை சொல்லிய கண்கள் சிறையறையில்

பொய் சொல்லிய பெண்கள் மணவறையில்

அதை நம்பிய ஆண்கள் கல்லறையில்:rolleyes:

Edited by ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனித மனம் எதையும் சாதிக்க வல்லது.ஏனெனில் கடந்த காலம் அதனுள் உள்ளது.எதிர்காலமும் அங்கேயே உருவாகிறது

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் ரதி......

 

தொடர்ந்து எதிர்பார்த்து வருகை  தருகின்றோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.