Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூயோர்க் நகர் இருளில் மூழ்கியுள்ளது வீதிகளில் வெள்ளப்பெருக்கு - ரொறன்ரோவிலும் எச்சரிக்கை விடுப்பு பலபகுதிகள் இருளில்! தொடர்மாடி தீப்பற்றியது..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியூயோர்க் நகர் இருளில் மூழ்கியுள்ளது வீதிகளில் வெள்ளப்பெருக்கு - ரொறன்ரோவிலும் எச்சரிக்கை விடுப்பு பலபகுதிகள் இருளில்! தொடர்மாடி தீப்பற்றியது..!

[Tuesday, 2012-10-30 08:56:32]

அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை தற்போது சாண்டி புயல் கடந்துசெல்கிறது அதன் தாக்கம் ரொறன்ரோவின் மத்திய பகுதிக்கும் ஏற்ப்பட்டுள்ளது. வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் மின்சார விபத்துக்கள் மற்றும் வாகன விபத்துகள் ஏற்ப்பட்டுள்ளன இதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

அமெரிக்காவின் நியூயோர்க் நகர் பெரும் வெள்ளப்பெருக்குக்கு உள்ளானதால் நகரப்பகுதி நிலக்கீழ் தொடருந்து பாதைகளில் நீர் புகுந்துள்ளது. வீதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அரைமணி நேரத்தில் பத்தாயிரத்திற்கு மேற்ப்பட்ட அவசர அழைப்புகளை மக்கள் ( திங்கள் நள்ளிரவு) இரவிரவாக மேற்க்கொண்டுள்ளதாக மீட்புக் குழுவினரால் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 50 பேர்வரை இதுவரை உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது. மிக மிக அவசர அழைப்புகளை தவிர சாதாண தேவைகளுக்கான அழைப்புகளை மேற்க்கொள்ள வேண்டாமென தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்படுகிறது. அதிபர் பராக் ஒபாமா அடிக்கடி தொலைக்காட்சிகளில் தோன்றி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு எச்சரித்துவருகிறார்.

ரொறன்ரோ

ரொறன்ரோவில் பலத்த காற்றுடன் கூடிய மழை திங்கள் முன்னிரவு 10 மணிக்குபின்னர் அதிகரிததுள்ளதால் நகரில் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன. விமான பறப்புக்கள் யாவும் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது. பலமான காற்றில் முறிந்து பறந்த மரக்கிழைகளின் தாக்கத்தால் இருவர் உயிரிழநதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 60 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்காவும் கனடாவும் எதிர்கொண்டுள்ள மிகப் பெரும் புயல் சீற்றத்தால் அவசரகால பிரகடனநிலையும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

2ம் இணைப்பு

இதற்கிடையே செவ்வாய்கிழமை அதிகாலை ஒரு மணி தாண்டிய நிலையில் புயல் தாக்கத்தால் நகரப்பகுதியிலுள்ள தொடர்மாடிக் கட்டிடம் ஒன்று தீப்பறிறி எரிந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது இதன் சேதவிபரம் பற்றிய செய்திகள் தொடரும்...

http://seithy.com/breifNews.php?newsID=69265&category=TamilNews&language=tamil

[size=5]வல்லரசான அமெரிக்காவில் தண்ணீர், மின்சாரம் இல்லை: [/size]

[size=5]பேரிடர் என ஒபாமா அறிவிப்பு[/size]

[size=4]உலகிலேயே மிகவும் வளர்ந்த நாடு, வல்லரசு என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவில், தற்போது குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, இன்டர்நெட் இல்லை, போன் வசதி இல்லை என நிறைய இல்லைகள்.[/size]

[size=4]உலக பெரியண்ணன், போலீஸ் காரர், வல்லரசு என்றெல்லாம் பெரிய பெரிய பெயர்கள் உண்டு அமெரிக்காவுக்கு. மிகவும் வளர்ந்த நாடான அமெரிக்காவை ஒரு புயல் அப்படியே திருப்பி போட்டு விட்டது. சாண்டி என பெயரிடப்பட்டுள்ள சூப்பர் புயல் இந்திய நேரப்படி இன்று காலை 5.42 மணிக்கு நியூஜெர்சி அருகே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக இதுவரை 16 பேர் இறந்துள்ளனர். நியூயார்க் நகரம் இருளில் மூழ்கியுள்ளது. போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா, இது ஒரு தேசிய பேரிடர் என அறிவித்துள்ளார்.[/size]

http://tamil.yahoo.com/வல்லரச-ன-அம-ர-க்க-131400585.html

[size=4]16 பேர் பலி

சாண்டி புயல் காரணமாக நியூயார்க் மாகாணத்தில் இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர். நியூஜெர்சி, நியூயார்க், மேரிலாண்ட், வடக்கு கரோலினா, மேற்கு வர்ஜினியா, பென்சில்வேனியா ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததில் பலியானோர் இதில் அதிகம் என்கிறார்கள்.[/size]

[size=4]மின்சாரம் இல்லை:

நியூயார்க் நகர மருத்துவமனையிலிருந்து இதுவரை 200 நோயாளிகள் மின்சாரம் இல்லாத காரணத்தால் வெளியேற்றப்பட்டுள்ளனர். சாண்டி புயல் மின் விநியோகத்தை முற்றிலுமாக முடக்கிப்போட்டுள்ளது. நியூயார்க் நகரம் தற்போது இருளில் மூழ்கியுள்ளது. சுமார் 6.2 மில்லியன் மக்கள் தற்போது இருளில் உள்ளனர்.[/size]

[size=4]சப் வேக்களில் கடல் நீர்

: நியூயார்க் மாநகர சப் வேக்களில் தற்போது கடல் நீர் உள்புகுந்துள்ளன. சுமார் 13 அடி உயரத்திற்கு மேலெழும்பிய கடல் அலைகள் காரணமாக கடல் நீர் நகருக்குள் புகுந்துள்ளது. இதனால் நியூயார்க், பாஸ்டன் மற்றும் வாஷிங்டன் போன்ற நகரங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]விமான நிலையங்கள் மூடல்:

சாண்டி புயல் காரணமாக அமெரிக்க விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கானோர் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்.[/size]

[size=4]அரசு அலுவலகங்கள் மூடல்:

கனமழை புயல் காரணமாக நாட்டின் முக்கிய அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. நியூயார்க்கில் செயல்பட்டு வந்த தேசிய அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக நியூயார்க் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது. கடந்த 27 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது தான் பங்குச்சந்தைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அநேகமாக நாளையும் பங்குச்சந்தை மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.[/size]

[size=4]தேர்தல் பிரசாரம் ரத்து:

சாண்டி புயல் காரணமாக தங்களது தேர்தல் பிரசாரங்களை, அதிபர் ஒபாமா மற்றும் ரோம்னி ஆகியோர் ரத்து செய்துள்ளனர். அத்துடன் சாண்டி புயலால் அமெரிக்கா ஒரு பேரிடரை சந்தித்துள்ளதாகவும் ஒபாமா அறிவித்துள்ளார்.[/size]

[size=4]http://tamil.yahoo.com/வல்லரச-ன-அம-ர-க்க-131400585.html[/size]

[size=6]புயலால் அமெரிக்க பங்குச்சந்தைகள் மூடல்[/size]

அமெரிக்காவை கடுமையாக தாக்கி உள்ள சான்டி புயலால் அமெரிக்க பங்குச் சந்தைகள் 2வது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளன. மாதத்தின் இறுதி நாளான நாளை பங்குச் சந்தைகள் மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் 27 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் பங்குச் சந்தைகள் மூடப்பட்டுள்ளன. வர்த்தக மையங்களும் மூடப்பட்டுள்ளன.

http://tamil.yahoo.com/ப-யல-ல்-அம-ர-063700582.html

[size=4]கடந்த 2009 ம் ஆண்டு புது மாத்தளனில் தமிழ் மக்கள் பரிதவித்து ஓடியது போன்ற காட்சிகளை தற்போது நியூயோர்க்கில் காண்கிறோம்..[/size]

[size=4]என்ன செய்யப்போகிறார் ஒபாமா… எல்லோரையும் வென்ற அவரால் இயற்கையை வெல்ல முடியவில்லை..[/size]

[size=4]ஆனால் இந்தப் புயல் ஒபாமாவுக்கு தங்கக் கட்டி போல கிடைத்த வரம் என்கிறார்கள் அமெரிக்க ஆய்வாளர்.[/size]

[size=4]காரணம் புயலுக்கான நிவாரண வேலைகளை நல்லபடியாக செய்து வாக்குகளை திரட்டும் வாய்ப்பு அதிபருக்கே உள்ளது, எதிரணி வேட்பாளர் றொம்னிக்க கிடையாது.[/size]

[size=4]ஒபாமா புயலுக்கான உதவிகளை வேகமாக செய்வதுபோல றொம்னியால் முடியவில்லை இயற்கை ஒபாமா பக்கமே இருப்பதாக நோக்கர்கள் கூறுகிறார்கள்.[/size]

[size=4]http://www.alaikal.com/news/?p=116090[/size]

வினையை விதைத்தவன் வினைத்தான் அறுக்கமுடியும்...................இன்னும் என்ன என்ன எல்லாம் இந்த உலகில் நடக்க இருக்கு என்பதை

இலகுவாக ஊகிக்கமுடியும்....ஏனனில் தீமை அழிந்து நன்மை உலகை ஆட்கொள்ளும் வேளையிது.........ஆனால் மக்களின் துயரம் வருந்தத்தக்கது ................நாளை இந்த சம்பவம் நம்மை நோக்கியும் திரும்பலாம் ....................எதற்கும் இவ்வருடம் டிசம்பர் கழிந்த பின்னே எம் துன்பங்களும் கழியும் என்பதை போன்று ஓர் உணர்வு......................

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின் சீற்றத்தின் முன் எந்த வல்லரசும் தாக்கு பிடிக்க முடியாது என்பதினை உணர்த்துகின்றது !

[size=4]கடந்த 2009 ம் ஆண்டு புது மாத்தளனில் தமிழ் மக்கள் பரிதவித்து ஓடியது போன்ற காட்சிகளை தற்போது நியூயோர்க்கில் காண்கிறோம்..[/size]

eckert-2061_980x551.jpg

broken-crane_980x551.jpg

wrecked-apartment_980x551.jpg

AP85636565276_980x551.jpg

AP656009393975_980x551.jpg

  • கருத்துக்கள உறவுகள்

A01(65).jpg

A02(54).jpg

  • கருத்துக்கள உறவுகள்
:(
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புயல் லண்டனுக்கு வந்தால் வீடெல்லாம் காத்தோடு போய் விடும் :(

[size=4]வேறு எந்த நாட்டிலும் இந்த புயல் தாக்கினால் இதைவிட அதிக இழப்பு இருக்கும்.[/size]

[size=4]நூற்றுக்கணக்கில் இல்லை ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து இருப்பார்கள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் புயல் லண்டனுக்கு வந்தால் வீடெல்லாம் காத்தோடு போய் விடும் :(

அடி வாரத்தோட போயிடும் :(

இன்று பாலங்கள் பல திறக்கப்பட்டுவிட்டன. மரங்கள் இல்லாத தெருக்களில் பேருந்துகள் பயணிக்கின்றன. பயணிகள் தொடருந்துகள் சில நாளை ஆரம்பமாகலாம். நிலக்கீழ் தொடருந்துகள் சில நாட்கள் எடுக்கலாம். மாநகர பள்ளிகள் மூடப்பட்டிருக்கும். இது தான் நியுயெசி, கனக்ரிகட் மாநிலங்களிலும் நிலமை.

நாளை பங்கு சந்தையை திறக்க சில ஆயத்தங்கள் செய்யபட்டிருக்கிறது. மேசீஸ் போன்ற பாரிய வர்த்தக நிறுவனங்கள் நாளை திறப்பத்தாக அறிவிப்பு விட்டுள்ளன.

Edited by மல்லையூரான்

[size=4]அமெரிக்காவில் பெரும் அனர்த்தங்களை கிளப்பிவிட்ட சான்டி புயல் இதுவரை 67 பேர்களுடைய உயிர்களை காவு கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.[/size]

[size=4]இறந்தவர்களில் பலர் பெற்றோராக இருப்பதால் பல பிள்ளைகள் அநாதைகளாக வேண்டிய அவலமும் ஏற்பட்டுள்ளது, 11, 14 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயும், தந்தையும் கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் மரணித்துவிட்டார்கள், இப்படி சான்டி புயல் ஆடியுள்ள அவல நாடகங்கள் பல.[/size]

[size=4]மேலும் பெரும் தாக்கங்களை சந்தித்த நியூயேர்சிக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேரடியாக விஜயம் செய்து அங்கு கச்சிதமாக பணியாற்றிய கவர்னர் கிறிஸ்டியை பெரிதும் புகழ்ந்தார்.[/size]

[size=4]கவர்னர் கிறிஸ்டி ஒபாமாவின் டெமக்கிரட் கட்சியை சேர்ந்தவரல்ல றிப்பப்ளிக்கன் கட்சியை சேர்ந்த அவர் ஒபாமா மீது பலத்த விமர்சனங்களை முன் வைத்தவர்.[/size]

[size=4]இந்த நிலையில் நியூயேர்சி சென்ற ஒபாமா அவரை புகழ்ந்துள்ளமை ஒரு வகையில் வஞ்சப் புகழ்ச்சியாகவே இருக்கிறது.[/size]

[size=4]ஆனாலும் நியூயேர்சியில் பணியாற்ற கிடைத்த வாய்ப்பை காரணம் காட்டி அதிபர் தேர்தலில் மிற் றொம்னிக்கு வாக்களிக்கும்படி தாம் பிரச்சாரம் செய்யப் போவதில்லை என்று கிறிஸ்டி கூறியுள்ளார்.[/size]

[size=4]நியூயோர்சியை நேற்று சூறாவளிக்கண் கடந்தபோது சுமார் 2,4 மில்லியன் மக்கள் இருளில் கிடந்தார்கள்.[/size]

[size=4]இந்தப் புயல் அமெரிக்க பொருளாதாரத்தின் வயிற்றில் பயங்கரமான குத்து குத்தியுள்ளதாக தெரிவிக்கும் பொருளியல் நிபுணர்கள் சுமார் 25 பில்லியாட் டாலர்கள் முதல் கட்ட பொருளாதார பின்னடைவு என்கிறார்கள், ஆனால் மதிப்பீடு வெளி வந்தால் இந்தத் தொகை பலத்த அச்சமூட்டும் என்பது தெரிந்ததே.[/size]

[size=4]அமெரிக்காவின் சர்வதேச விமான நிலையங்களான நியூயோர்க் சிற்றி உட்பட ஒரு சில விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன, ஆனால் ஜோன் எப் கெனடி விமான நிலையம், நியூயோர்க் லிபேட்டி போன்றன இன்னமும் திறக்கப்படவில்லை.[/size]

[size=4]ஆங்காங்கு கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடப்பதாகவும், வாகனங்கள் ஓட ஆரம்பித்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.[/size]

[size=4]தற்போது சான்டியின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது, ஆனால் தாழமுக்கம் காரணமாக குளிர் காற்று, சில இடங்களில் பனிப்பொழிவு காணப்படுகிறது, அத்திலாந்திக் சமுத்திரத்தில் மட்டும் சூரிய ஒளி விழுவதை காண முடிகிறது.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.