Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டுமொரு தடவை சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச அரங்கொன்றில் அம்பலப்பட்டு நிற்கின்றது !

Featured Replies

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் சிறிலங்காவின் மனித உரிமைகள் தொடர்பிலான மீளாய்வுக்கூட்டம் (01-11-2012) வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது.

அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்றேலியா போன்ற சர்வதேச அரசியலின் முக்கிய விசையாகவுள்ள மேற்குலக நாடுகள், சிறிலங்காவின் வாக்குறுதிகளை நம்புவதற்கு இனியும் தாங்கள் தயாரில்லை என்ற நிலைப்பாட்டினை வெளிக்காட்டியுள்ளமை ஓருபுறமிருக்க, மறுபுறம் சிறிலங்காவின் செயற்பாடுகளுக்கு புகழ்மாலை சூட்டாது, இறுக்கமான நிலைப்பாட்டினை இந்தியா இம்முறை சபையில் வெளிப்படுத்தியுள்ளமை பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பல தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும், ஜெனீவாவில் முகாமிட்டிருந்து தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தினை சர்வதேச த்தினை நோக்கி வலியுறுத்தி வருகின்றனர்.

வியாழக்கிழமை அமர்வில் பல நாடுகள் தங்களது கருத்துக்களையும், பரிந்துரைகளையும் தெரவித்திருந்தன. இதற்கு பின்னர், முன்னரும் மூடியகதவுகளுக்குள் இடம்பெறுகின்ற விடயங்கள்தான், யாவற்றையுமே தீர்மானிக்கப் போகின்றன என அமர்வில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் வாசுகி தங்கராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணையின் நிறைவேற்றுக்காலம் சிறிலங்காவுக்கு 2013 மார்ச் மாதம் ஆகவுள்ள நிலையில், அந்தக் காலம் வரைக்கும் சர்வதேசத்தினை ஏமாற்றும் இழுத்தடிக்கும் தந்திரோபாயத்தினை, சிறிலங்கா கையாள்வதற்கும் வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் வாசுகி தங்கராஜா தெரிவித்துள்ளார்.

ஐ நா மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 192 உறுப்பு நாடுகளின் மனிதஉரிமை நிலைமைகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது.

இதன்போது, மனிதஉரிமைகளை மேம்படுத்தவும், மனிதஉரிமைகள் தொடர்பான கடப்பாடுகளை பின்பற்றவும் எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை விளக்க ஒவ்வொரு நாட்டுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

இந்நிலையில் 2008ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியினை மையப்படுத்தி சிறிலங்காவின் நிலைவரம் விவாததற்திற்கு எடுக்கப்பட்டிருந்த நிலையில், 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலம் மற்றும் அதற்கு பிந்தியநிலை முக்கியமானதாக கவனிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் சிறிலங்கா குறித்த விவாதம்பிற்பகல் 2.30 மணி தொடக்கம் 6:30 மணிவரை இடம்பெற்றிருந்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 99 உறுப்பு நாடுகள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தன.

சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க, முன்னாள் சட்டமாஅதிபர் மொகான் பீரிஸ் உள்ளிட்டவர்கள் அடங்கிய உயர்மட்டக்குழு வினர் சபையில் பிரசன்னமாகியிருந்ததோடு சிங்களதேசத்தின் நிலைப்பாட்டினை நியாயப்படுத்தி கருத்துக்களை வழங்கியிருந்தனர்.

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு கொடுத்தது, போரால் இடம்பெயர்தோர்களை மீள் குடியேற்றம் செய்தது, வடக்கே மிதி வெடிகளை அப்புறப்படுத்தியது, உள்நாட்டுக்குள் ஏற்படுத்தப்பட்ட படிப்பினைகள் ஆணைக்குழுவின் பரிந்துறைகளை அமல்படுத்த அரசு எடுத்துள்ள முயற்சிகள், பெண்கள் மற்றும் சிறார்களின் உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சிகள் போன்ற நடவடிக்கைகளை பட்டியலிட்டு சிறிலங்கா அரச பிரதிநிதிகள் தங்களை நியாயப்படுத்த முனைந்திருந்தனர்.

அமெரிக்காவின் கருத்து :

சிறிலங்கா அரசு தான் ஏற்கனவே முன்வைத்த வாதங்களைத்தான் இன்றும் முன்வைத்துள்ளது. புதிய யோசனைகளையோ திட்டங்களையோ அது முன்வைக்கவில்லை என அமெரிக்கப் பிரதிநிதி தெரிவித்திருந்தார்.

முன்பு போர் நடந்த இடங்களில் நடக்கும் இராணுவ மயமாக்கல் குறித்தும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம். காணமல் போவது குறித்து பேச்சுரிமை பாதிப்பது போன்ற விடயங்கள் குறித்து நாங்கள் கவலையடைந்துள்ளோம். சிறிலங்கா அரசு படிப்பினைக் குழுவின் ஆக்கபூர்வ பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும். அரசு சாரா நிறுவனங்களை கண்காணிக்கும் பொறுப்பை சிவிலியன்களுக்கு அளிக்க வேண்டும். மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்கப் பிரதிநிதியின் கருத்து அமைந்திருந்தது.

இந்தியாவின் கருத்து :

சிறிலங்கா அரசாங்கம் 13 ஆவது சட்ட திருத்தத்தை அமல்படுத்துவதோடு அதிகாரப்பரவலாக்கல் ஊடாக இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படவேண்டுமென இந்தியா வலியுறுத்தியிருந்தது.

வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் குறித்து தனது கவலையினைத் தெரிவித்திருந்த இந்தியா சுதந்திரமான முறையில் வடக்கில் விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறவேண்டுமென வலியுறுத்தியிருந்தது.

பிரான்சின் கருத்து :

2006ம் ஆண்டு மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பிரென்சு தொண்டமைப்பான பட்டினிக்கு எதிரான அமைப்பு தொண்டர்களுக்கான நீதிவிசாரணை குறித்து கடுமையான நிலைப்பாட்டினைத் பிரான்ஸ் வெளிப்படுத்தியிருந்தது.

மூன்றாம் உலக சிறிய நாடுகள் பலவும் சிறிலங்காவுக்கு பாராட்டுபத்திரம் வாசித்திருந்த நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்கா அங்கத்துவம் பெறவேண்டும் மற்றும் சர்தேச சுயாதீன விசாரணை போன்ற பல விடயங்கள் சில நாடுகளினால் முன்வைக்கப்பட்டிருந்தமை, சிறிலங்காவுக்கு கசப்பானதகவே அமைந்திருக்கும் என ஜெனீவா சென்றிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவைத் தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை அமர்வில் உறுப்பு நாடுகளினால் முன்வைக்கபட்ட கருத்துக்களின் அடிப்படையில் , இந்தியா, ஸ்பெய்ன் மற்றும் பெனின் ஆகிய நாடுகள் இணைந்து அறிக்கையொன்றினை தயாரித்து பரிந்துரைத் தீர்மானத்தினை எதிர்வரும் 5ம் நாள் திங்கட்கிழமை சபையில் சமர்பிக்கும்.

சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்படும் இந்த பரிந்துரைத் தீர்மானத்தினை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பொறிமுறைக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டிய சூழலுக்குள் சிறிலங்கா அகப்படுமா என்பதுதான் இன்றைய பலரது கேள்வியாகவுள்ளது.

நாதம் ஊடகசேவை

[size=4]

பிரான்சின் கருத்து :

2006ம் ஆண்டு மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பிரென்சு தொண்டமைப்பான பட்டினிக்கு எதிரான அமைப்பு தொண்டர்களுக்கான நீதிவிசாரணை குறித்து கடுமையான நிலைப்பாட்டினைத் பிரான்ஸ் வெளிப்படுத்தியிருந்தது.

[/size]

[size=4]சிறிலங்கா அரசு இவ் யுத்தமீறல் குற்றச்சாட்டிலிருந்து தப்பி விடுவதைத் தடுக்கும்படி ஐ.நா உறுப்புரிமை நாடுகளை நாம் வேண்டுகிறோம். நியாயமான ஐ.நா விசாரணையை வலியுறுத்தி நாம் முன்னெடுத்துள்ள இந்த முறையீட்டு மனுவில் கையெழுத்திடுமாறு அனைவரையும் வேண்டுகிறோம்.[/size]

[size=4]இவ்வாறு கடந்த 2006 ம் ஆண்டு மூதூரில் சிறிலங்கா அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட 17 மனிதநேயப் பணியாளர்கள் படுகொலை குறித்து, பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட Action against Hunger (ACF) அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த முறையீட்டை எதிர்வரும் அக்டோபர் 22 ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நாம் கையளிக்க உள்ளோம். எனவே அதற்கு முன் இவ்மனுவில் கையெழுத்திடுமாறு உலக மக்களை வேண்டுகிறோம் என Action against Hunger (ACF) அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம் மனுவில் கையெழுத்திட இங்கே அழுத்தவும்

http://www.dailymoti...7Q0n8mUlUy3oCnj (காணொளி)[/size]

[size=4]இது தொடர்பாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ACF வெளியிட்டுள்ள மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:[/size]

[size=4]2006 ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதி, மூதூர் பகுதியில் வெடித்த யுத்தத்தில் பொதுமக்கள் பலரோடு, மனிதாபிமான உதவி வழங்கும் அமைப்பின் பணியாளர்களான 17 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.[/size]

[size=4]http://www.yarl.com/forum3/index.php?showtopic=109278[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் எதிர்ப்பெல்லாம் அறிக்கைகளுடன் நின்றுவிடுகிறது. அதன்பிறகு எதுவுமே நடப்பதில்லை. அவரவர் தங்கள் வேலையைப் பார்க்கப் போயவிடுவார்கள். சிறிலங்காவும் தனது பாட்டில் இனவழிப்பை தொடர்ந்து நடத்தும். இவர்களுக்கெல்லாம் தமிழினப் படுகொலை என்பது வருடாவருடம் அனுஷ்டிக்கப்படும் நினைவுநாளாகவோ அல்லது ஞாபகார்த்த நிகழ்வாகவோ தான் இன்னும் இருக்கிறது என்றே எண்ணவேண்டியிருக்கிறது. எவருக்குமே நடத்தப்பட்ட திட்டமிட்ட இனக்கொலைக்கான சூத்திரதாரிகளை இனங்கண்டு தண்டனை கொடுக்கவோ அல்லது தொடர்ந்து நடக்கும் இனவழிப்பைத் தடுத்து நிறுத்தி தமிழினத்தை மனிதர்களாக வாழவைக்க வேண்டும் என்கிற தேவையோ அல்லது விருப்பமோ இருப்பதாகத் தெரியவில்லை. பணக்கார நாடுகளின் சந்தாப்பணத்தில் வருடத்திற்கொருமுறையோ இரு தடவையோ கூட்டம் கூடி ஐ.நா சபையில் மனிதவுரிமை பற்றியும் பேசுகிறோம் என்று சப்புக் கட்டிவிட்டு போய்விடுவதே இந்த மேற்குலக மனிதவுரிமை எசமானர்களின் வேலையாகிப் போய்விட்டது.

எகிப்த்திலும், லிபியாவிலும், சிரியாவிலும் வெறும் ஆயிரம் பேரே கொல்லப்பட்டிருக்க சர்வதேச ஆதரவுடன் அந்த அரசுகளை அகற்றிய, அகற்றிக்கொண்டிருக்கிற மேற்குலக சனநாயகம், 2009 இல் அதே சர்வதேச ஆதரவுடன் இனவழிப்பிற்கெதிராகப் போராடிய எம்மை முற்றான இனவழிப்புப் போர் ஒன்றின்மூலம் அழித்தது. நாம் எந்த விதத்திலும் மேற்குலககிற்கோ அல்லது அதன் விழுமியங்களுக்கோ எதிரானவர்களாக இருந்ததில்லை, ஆனால் பயங்கரவாதம் என்கிற மாயையைக் காட்டி அழிக்கப்பட்டோம்.

இன்னும் இதே சர்வதேசம் எம்மைக் காக்கும் என்று நம்பியிருக்கிறோம். அப்படி நம்புவதற்கு எந்தவிதமான சாட்சியங்களும் எம்மிடம் இல்லாத போதும் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

இன்னும் எத்தனை காலம் .....?

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எகிப்த்திலும், லிபியாவிலும், சிரியாவிலும் வெறும் ஆயிரம் பேரே கொல்லப்பட்டிருக்க சர்வதேச ஆதரவுடன் அந்த அரசுகளை அகற்றிய, அகற்றிக்கொண்டிருக்கிற [/size][size=4]மேற்குலக சனநாயகம், 2009 இல் அதே சர்வதேச ஆதரவுடன் இனவழிப்பிற்கெதிராகப் போராடிய எம்மை முற்றான இனவழிப்புப் போர் ஒன்றின்மூலம் அழித்தது[/size]. நாம் எந்த விதத்திலும் மேற்குலககிற்கோ அல்லது அதன் விழுமியங்களுக்கோ எதிரானவர்களாக இருந்ததில்லை, ஆனால் பயங்கரவாதம் என்கிற மாயையைக் காட்டி அழிக்கப்பட்டோம். - ரகுநந்தன்

ஆனால் மேற்குலக நாடுகலும் இந்தியாவும் நம் அமைப்புகள் தமக்கு எதிர் தமது மண்ணில் வன்முறையில் ஈடுபட்டன என்கிற நிலைபாடே எடுத்தது. எமது அமைப்புகள் சட்டரீதியாக தடை செய்யப் பட்டன. நாம் பெரும்தோல்வியின்பின்னர் கூட மேற்க்கு நாடுகளைஅனுசரித்து தந்திரோபாயமாகக்கூட அவர்கள் தடை செய்யாத பாதைகலில் செயல்படவில்லை என்கிற கருத்து மேற்க்கு நாட்டவர் மத்தியில் உள்ளது. இந்தியாவின் நிலைபாடும் அத்தகையதாகவே உள்ளது.

ஆனால் அதிஸ்ட்ட வசமாக களத்தில் துன்பபடும் மக்கள் தொடர்ந்தும் தெரிவு செய்கிற தமிழர் கூட்டமைப்பு மேற்க்கு நாடுகளை இந்தியாவை அனுசரித்துப் போகிறது. அதன் கனிதான் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் அமைப்புகளின் அழுத்தத்துக்கு செவிகொடுக்கும் நிலையை ஏற்ப்படுதியது.

தோல்வியின்பின் நாம் களத்து மக்களின் நிலமை நிலைபாட்டுக்கு ஏற்ப எதிரியை தனிமைப் படுத்தக்கூடியவகையில் மேற்க்கு நாடுகள் விரும்பும் அரசியல் வடிவத்தை நாம் எடுதிருக்க வேணும். களத்தில் எடுத்தார்கள். புலம் பெயர்ந்த நாமும் எடுத்திருந்தால் மேற்க்கு நாடுகளில் நம் புலம்பெயர்ந்த மக்கள் எழுச்சி மேலதிகப் பயன் தந்திருக்கும். நாம் தாங்கள் தடை செய்த வழிகளில் நின்று தங்களை அச்சுறுதியதாக மேற்க்கு நாட்டு பிரமுகர்கள் சொல்லும்போது என்னிடம் பதில் இருக்கவில்லை.

எமது இந்த நடவடிக்கை கொடுத்த space வெளியை வைத்துத்தான் இலங்கை தனது அரசியல் இராசதந்திர உத்திகளை வகுத்து மீண்டும் நம்மைத் தனிமைப் படுத்த முனைகிரது. அதனால்.

இதுபற்றி எல்லாம் விவாதிக்காமல் நாம் முன் செல்ல முடியாது. ஆனால் முகமூடிகளின் பின்னால் தனிமனித வசைபாடல் அனுமதிக்கப் படும் தளங்கள் அதற்க்குப் பொருத்தமில்லை என்று கவலையுடன் தெரிவிக்க வேண்டியுள்ளது.

புத்தகம் எழுதுவது அல்லது ஆங்கில தளங்களளுக்கு எழுதுவது அதிக ஆய்வு நேரம் வளங்களை கோரி நிற்க்கிறது.

உண்மை பெயரில் தாக்குதல் தொடுத்தால் அதில் துணிச்சலும் நேர்மையுமாவது இருக்கும். முகமூடிகளின் கோழைத்தனமான நேரடி மறைமுக தனிமனிதத் தாக்குதல்கள் இன்னும் தொடர்கிறது. இதற்க்கு முகம் கொடுத்து யாழில் தொடர்ந்து எழுத வேண்டிய அவசியம் என்ன?

Edited by poet

இன்று சிறிலங்காவில் நிலவும் சீனாவின் ஆதிக்கமே மேற்குலகையும் இந்தியாவையும் தமிழர்களின் மனித உரிமைகள் பற்றிப் பேச வைக்கிறது.புலிகள் அழிக்கப்பட்டால் இது தான் நடக்கும் என்று நாம் சொன்னதை குறுகிய சிந்தனை உடைய இந்திய அதிகார வர்க்கம் கேட்கவில்லை. அதனாலேயே புலிகளும் மக்களும் அழித்து ஒழிக்கப்பட்டனர்.

இந்த அனுசரித்து நடப்பது என்றால் என்ன என்பதைச் சொன்னால் மேலும் கருதுக்களை எழுதலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(Video) Sri Lanka Review - 14th Session of Universal Periodic Review

http://webtv.un.org/watch/sri-lanka-review-14th-session-of-universal-periodic-review/1940915085001

http://www.bbc.co.uk/news/magazine-20178655

சீனாவின் வளர்ச்சி பற்றி பி பி சி யில் ஒரு கட்டுரை இருக்கு, முக்கியமாக செயபாலன் படித்துப் பார்க்க வேண்டும்.

இன்னும் ஆறே வருடங்களில் சீனா அமெரிக்காவின் பொருளாதாரத்தை விடப் பெரியதாக இருக்கும். இன்னும் பத்தே வருடங்களில் உலகின் பலம் வாய்ந்த இராணுவமாக சீன இராணுவமும் கடற்படையும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எகிப்த்திலும், லிபியாவிலும், சிரியாவிலும் வெறும் ஆயிரம் பேரே கொல்லப்பட்டிருக்க சர்வதேச ஆதரவுடன் அந்த அரசுகளை அகற்றிய, அகற்றிக்கொண்டிருக்கிற [/size][size=4]மேற்குலக சனநாயகம், 2009 இல் அதே சர்வதேச ஆதரவுடன் இனவழிப்பிற்கெதிராகப் போராடிய எம்மை முற்றான இனவழிப்புப் போர் ஒன்றின்மூலம் அழித்தது[/size]. நாம் எந்த விதத்திலும் மேற்குலககிற்கோ அல்லது அதன் விழுமியங்களுக்கோ எதிரானவர்களாக இருந்ததில்லை, ஆனால் பயங்கரவாதம் என்கிற மாயையைக் காட்டி அழிக்கப்பட்டோம். - ரகுநந்தன்

ஆனால் மேற்குலக நாடுகலும் இந்தியாவும் நம் அமைப்புகள் தமக்கு எதிர் தமது மண்ணில் வன்முறையில் ஈடுபட்டன என்கிற நிலைபாடே எடுத்தது. எமது அமைப்புகள் சட்டரீதியாக தடை செய்யப் பட்டன. நாம் பெரும்தோல்வியின்பின்னர் கூட மேற்க்கு நாடுகளைஅனுசரித்து தந்திரோபாயமாகக்கூட அவர்கள் தடை செய்யாத பாதைகலில் செயல்படவில்லை என்கிற கருத்து மேற்க்கு நாட்டவர் மத்தியில் உள்ளது. இந்தியாவின் நிலைபாடும் அத்தகையதாகவே உள்ளது.

ஆனால் அதிஸ்ட்ட வசமாக களத்தில் துன்பபடும் மக்கள் தொடர்ந்தும் தெரிவு செய்கிற தமிழர் கூட்டமைப்பு மேற்க்கு நாடுகளை இந்தியாவை அனுசரித்துப் போகிறது. அதன் கனிதான் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் அமைப்புகளின் அழுத்தத்துக்கு செவிகொடுக்கும் நிலையை ஏற்ப்படுதியது.

தோல்வியின்பின் நாம் களத்து மக்களின் நிலமை நிலைபாட்டுக்கு ஏற்ப எதிரியை தனிமைப் படுத்தக்கூடியவகையில் மேற்க்கு நாடுகள் விரும்பும் அரசியல் வடிவத்தை நாம் எடுதிருக்க வேணும். களத்தில் எடுத்தார்கள். புலம் பெயர்ந்த நாமும் எடுத்திருந்தால் மேற்க்கு நாடுகளில் நம் புலம்பெயர்ந்த மக்கள் எழுச்சி மேலதிகப் பயன் தந்திருக்கும். நாம் தாங்கள் தடை செய்த வழிகளில் நின்று தங்களை அச்சுறுதியதாக மேற்க்கு நாட்டு பிரமுகர்கள் சொல்லும்போது என்னிடம் பதில் இருக்கவில்லை.

எமது இந்த நடவடிக்கை கொடுத்த space வெளியை வைத்துத்தான் இலங்கை தனது அரசியல் இராசதந்திர உத்திகளை வகுத்து மீண்டும் நம்மைத் தனிமைப் படுத்த முனைகிரது. அதனால்.

இதுபற்றி எல்லாம் விவாதிக்காமல் நாம் முன் செல்ல முடியாது. ஆனால் முகமூடிகளின் பின்னால் தனிமனித வசைபாடல் அனுமதிக்கப் படும் தளங்கள் அதற்க்குப் பொருத்தமில்லை என்று கவலையுடன் தெரிவிக்க வேண்டியுள்ளது.

புத்தகம் எழுதுவது அல்லது ஆங்கில தளங்களளுக்கு எழுதுவது அதிக ஆய்வு நேரம் வளங்களை கோரி நிற்க்கிறது.

உண்மை பெயரில் தாக்குதல் தொடுத்தால் அதில் துணிச்சலும் நேர்மையுமாவது இருக்கும். முகமூடிகளின் கோழைத்தனமான நேரடி மறைமுக தனிமனிதத் தாக்குதல்கள் இன்னும் தொடர்கிறது. இதற்க்கு முகம் கொடுத்து யாழில் தொடர்ந்து எழுத வேண்டிய அவசியம் என்ன?

மேற்குலகிற்கெதிராக புலிகள் என்ன தவறுகளை விட்டனர் என்று சொல்லுங்களேன் பார்க்கலாம். மேற்குலகிற்கெதிராக புலிகள் புரிந்த வன்முறை என்ன? பெரும் தோல்வியின்பின்னர்க கூட நாம் மேற்குலகின் பாதைகளில் செல்லவில்லை என்பதால் எதைக் குறிக்கிறீர்கள்? நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது முழுக்க முழுக்க மேற்குலகின் ஆதரவைப் பெறும் நோக்கில்தானே உருவாக்கப்பட்டது? அப்படியிருக்க நாம் அவர்களை அனுசரித்துப் போகவில்லை என்று யாரைக் குற்றம் சுமத்துகிறீர்கள்? மேற்குலகினர் தடைசெய்த வழிகளில் நாம் சென்றோமா? எப்போது 2009 இற்கு முன்னரா அல்லது பின்னரா??? திட்டமிட்ட இனவழிப்பை முன்னிறுத்திப் பேச முடியாத நீங்கள், மேற்குலகினருக்குச் சொல்ல பதில் இருக்கவில்லை என்று கூறுவது வேடிக்கை.

நாம் என்ன நடவடிக்கைகள் எடுத்தோம் , அவை எப்படிச் சிங்களத்துக்குச் சாதகமான வெளியை ஏற்படுத்திக் கொடுத்தது என்று சொல்லுங்கள்??

புலிகள் அழிக்கப்பட்டதும், எமது போராட்டம் துடைத்தெறியப்பட்டதும் புலிகள் நடந்துகொண்ட விதத்தினால் அல்ல என்பதை உங்கள் போன்றவர்களுக்கு எத்தனை முறை சொன்னாலும் நீங்கள் உணரப்போவதில்லை. அவர்கள் சொல்லும் காரணங்கள் தாம் செய்ததை நியாயப்படுத்துவதற்குச் சொல்லப்படும் சாட்டுக்கள். இவற்றுக்கெல்லாம் மேலாக பிராந்திய வல்லாதிக்க நலன்கள், சர்வதேச வல்லாதிக்க நலன்கள், பிராந்தியப் பொருளாதாரப் போட்டி, சிறிலங்காவின் பூகோள அமைப்பின் முக்கியத்துவம் என்பனவே எமது போராட்டத்தை அழித்தன.

இலங்கை அரசை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இந்திரா அம்மையார் போராளி அமைப்புகளுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுத்ததுமுதல், ரஜீவ் அமைத்திப்படையனுப்பி அவரது மனைவி சோனியா 2009 இல் சர்வதேச ஆதரவுடன் எம்மை அழித்தது வரை அனைத்துமே இந்திய அமெரிக்க நலன்களின் பால் எடுக்கப்பட்ட முடிவுகள். இன்றும் கூட எம்மைப்பற்றி சர்வதேச அரங்கில் நடந்துவரும் விவாதங்களும், தீர்மானங்களும் எம்மீது உண்மையான கரிசணையின்பால் எடுக்கப்பட்டவை என்று நீங்கள் நம்பினால் அது மடமை. சிறிலங்காவில் அதிகரித்துவரும் சீனத்து செல்வாக்கை கட்டுக்குள் வைக்க இந்தியாவை முன்னிறுத்தி அமெரிக்கா போடும் ஆட்டமே இன்று நடப்பது. 2001 இல் நோர்வேயை சிறிலங்காவிற்குள் அனுப்பியது இந்த நாடகத்தின் தொடக்கம். ஒரு விடுதலையமைப்பை பேச்சுவார்த்தை எனும் பொறிக்குள் 5 அல்லது 6 வருடங்கள் இழுத்துப்போடுவதன் மூலம், அவர்களின் போராட்டக் குணத்தை வலுவிழக்கச் செய்து, அவர்களுக்குள் ஊடுருவி, பலவீனப்படுத்தி, புலம்பெயர் நாடுகளில் இயங்கிவந்த அவ்வமைப்பின் உறுப்பினர்களைக் கைதுசெய்து, நிதி வளங்களை முடக்கி, அவ்வமப்பைத் தடைசெய்து, இறுதியில் பலவீனமான ஒரு அமைப்பின் மேல் சர்வதேச ஆதரவுடன் கடூரமான போரொன்றினை நடத்தி முற்றாக அழித்துவிடுவதென்பது இந்த நாடகத்தின் முழு வடிவமாகும். இதேமாதிரியான மேற்குலகின் சமாதான நாடகத்தை 1993 இல் நாம் பார்த்தோம். யாசீர் அரபாத்தின் பாலஸ்த்தீன விடுதலை அமைப்பை சமாதானப் பேச்சுவார்த்தை என்ற பொறிக்குள் நோர்வேயைக் கொண்டு வீழ்த்திய அமெரிக்கா, இன்று அதைத் துண்டங்களாக உடைத்துப் பலவீனப்படுத்தி வைத்திருக்கிறது.

எமது போராட்டம் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்படுவதற்கு எமது நடவடிக்கைகளும் காரணமாக அமைந்திருந்தன என்பதை மறுக்கவில்லை. அதே நேரத்தில், சிறிலங்காவை ஒத்த மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்ட நாடுகளை சர்வதேச அரங்கில் தடைசெய்து , போர்க்குற்றவாளி என அறிவித்து பிடிவிராந்து பிறப்பிக்கும் மேற்குலகு, சிறிலங்காவை ஏன் இதுவரை எதுவுமே செய்யவில்லை என்பதை உங்களை நீங்களே ஒருமுறை கேட்டுக்கொள்ளுங்கள்.

இறுதியாக, புலிகள் என்னசெய்தார்கள், சிங்களம் என்ன செய்துவருகிறது என்பது மேற்குலகிற்குத் தெரியாதது அல்ல. அவர்கள் உங்களிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர்களிடமே சரியான பதிலும் இருக்கிறது. அவர்கள் செய்ததெல்லாம் உங்களின் வாயை அடக்கி நியாயப்படுத்தல்களை உதாசீனம் செய்ததுதான். நாம் தவறு செய்துவருகிறோம் என்று அடிப்படையிலேயே எண்ணி செயற்பட்டுவரும் சிலரால் எமது போராட்டத்தின் நியாயத்தையோ அல்லது எமக்கு நடக்கும் அநீதியையோ முன்னிறுத்தி விவாதிக்கமுடியும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.

(குறிப்பு : ஒரு பிரபல அமெரிக்க அரசியல் எழுத்தாளர் ஒருவரின் எமது இனவழிப்புப் போர் பற்றிய கட்டுரை ஒன்றினை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் ஒரு இடத்தில், தமிழர்கள், 1800 களின் நடுப்பகுதியில் ஆங்கிலேயரால் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு தோட்டங்களில் வேலை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டு, இறுதியில் மொத்த சனத்தொகையில் 13 வீதத்தை அடைந்தனர் என்று குறிப்பிடுகிறார். இப்படியானவை தெரியாமல் விட்ட தவறுகள் என்று நான் நினைக்கவில்லை. தமிழரின் இருப்பை வேண்டுமென்றே கேள்விக்குறியாக்கிச் சர்வதேசத்தில் எமது நிலைப்பாட்டைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கள். அவரது பெயர் நீல் ஸ்மித், http://www.ndu.edu/press/understanding-sri-lanka.html)

இப்படி எழுதுவதை தனிமனிதத் தாக்குதல் என்று நீங்கள் நினைத்தால், நாம் எதுவுமே எழுத முடியாது என்றுதான் நினைக்கிறேன்.

நீங்கள் குறிப்பிட்ட இந்திய ஊடகமொன்றில் எமது அழிவு பற்றிய விவாதம் பற்றி நீங்கள் எதுவுமே சொல்லவில்லை. என்ன நடந்தது என்பதையும், யார் யார் என்ன பேசினார்கள் என்பதையும் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=1]மேற்கு நாட்டு பிரதிநிதிகளிடமும் தவறு [/size][size=1] [/size][size=1] [/size][size=1] உள்ளது ,சம்பத்தப்பட்டவர்களிடம் முறையிடாமல் வேறு யாரிடமோ சொல்கிறீர் களே என்ற எனது கேள்விக்கு மேற்க்கு நாடவர்களிடமும் பதிலிருக்கவில்லை . :lol:[/size][size=1]

இந்த சர்ச்சைகள் நாலு குருடர்கள் சேர்ந்து யானை பார்த்த மாதிரியிருக்கு.

[/size]

தோல்வியின்பின் நாம் களத்து மக்களின் நிலமை நிலைபாட்டுக்கு ஏற்ப எதிரியை தனிமைப் படுத்தக்கூடியவகையில் மேற்க்கு நாடுகள் விரும்பும் அரசியல் வடிவத்தை நாம் எடுதிருக்க வேணும். களத்தில் எடுத்தார்கள். புலம் பெயர்ந்த நாமும் எடுத்திருந்தால் மேற்க்கு நாடுகளில் நம் புலம்பெயர்ந்த மக்கள் எழுச்சி மேலதிகப் பயன் தந்திருக்கும். நாம் தாங்கள் தடை செய்த வழிகளில் நின்று தங்களை அச்சுறுதியதாக மேற்க்கு நாட்டு பிரமுகர்கள் சொல்லும்போது என்னிடம் பதில் இருக்கவில்லை.

எதிலும் அக்கறை இல்லாமல், தனது பணம், தனது புத்தகம் என்பவற்றால் தனக்கு போராட்ட விசையங்களை பற்றி பேச நேரம் வராது என்றும், ஆனால் புத்தகம் வெளிவிடும் நேரம் மட்டும் யாழில் வந்து விளம்பரம் செய்யும் சிலர், இடை இடை தாங்கள் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் தமிழர் உரிமைகள் பற்றி அக்கறையாக பேசியதாக பீற்றுகிறார்கள். இவர்கள் தமது சுய நலங்களை வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் பேசி பேசித்தான் தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு எதிர்ப்பு தேடிவைத்தார்கள். இவர்கள் வெளிநாடுகளிலிருந்து 5 ஆசங்களை பெற்ற நயீப் மயீத்தின் கொலைகார கட்சியின் தலைமையின் கீழ் 11 ஆசங்களை பெற்ற கூட்டமைப்பு செயல்பட வேண்டும் என்று அறிக்கைவிட்டு தாயத்தில் என்ன நடக்கென்பது தெரியாமல் தமது அரசியல் அறிவுச் சூனியத்தை வெளிக்காட்டியவர்கள்.

ஐ.நா. வில் பிரேரணை வந்த போது, நாடுகடந்த அரசின் பிரதிநிதிகள் வெள்ளை மாளிகையின் முன்னால் போராடி, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உப காரியதரிசியாகிய ரோபேட் பீளேக்கின் அலுவலகத்திலிருந்து, "தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் ஐ.நா வின் கவனத்தில் கொண்டுவரப்படும்" என்ற வாக்குறியை வாங்கியிருந்தார்கள். இவை யாழில் பியரசுரமாகியிருந்தன. பல TGTE, GTF, BTF போன்ற வெளிநாட்டு தமிழர் அமைப்புக்கள் நேரடியாகவோ அல்லது தமது பிரதிநிதிகள் மூலமாகவோ பிரேணையில் பங்கு பற்றி பிரேரணையை வெற்றிகரமாக்கியிருந்தன. ஆனால் இந்த அரசியல் ஞானிகள் உலகம் விளங்காதவர்களுக்கு, அமெரிக்கா, இலங்கை விவகாரத்தை ஐ.நாவில் எடுக்கும் போது கூட்டமைப்பு அங்கு சென்றால் பிரேரணயில் புலிகள தலையிடுவதாக கூறி அமெரிக்கா பிரேரணையை முன்னெடுக்க வராது என்று கூறி கூட்டமைப்பு ஜெனீவா செல்லக்கூடாது என்று வாதிட்டார்கள்.

மேர்கு நாடுகள் கூட்டமைப்புடனும், முஸ்லீம் காங்கிரசுடனும் ஒன்றாக அரசுக்கு தேர்தலில் போட்டியிடும்படி பேச்சு வார்த்தைகள் நடத்திக்கொண்டிருந்தபோது, கூட்டமைப்பு தேர்தலில் வெல்ல முடியாதென்பதால் தேர்தலில் இருந்து வெளியேற வேண்டும் என்று எழுதியவர்கள். மேற்கு நாடுகள் விரும்பியபடி கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தேர்தலில் போட்டியிடுவதை எதிர்த்தவர்கள் "மேற்கு நாடுகள் விரும்பும் அரசியல் வடிவத்தை நாம் எடுதிருக்க வேணும். களத்தில் எடுத்தார்கள்." என்று எழுதுவது நகைப்பிற்கிடம்.

1. இவர்களுக்கு அரசியல் விளங்காது.

2.இவர்களுக்கு புலத்தில் நடப்பதை பற்றிய அறிவு சூனியம்.

3.இவர் புலம் பெயர் மக்களுடன் எந்த போராட்டத்திலும் இணைந்து வரத்தயாரிலை.

4. அடிக்கடி ஏதாவது தான் தோன்றித்தனமான அரசியல் எழுதுகிறார்கள். அதற்கு விளக்கம் கேட்டால் பதில் தராமல், தன்னையாரோ கொல்ல வருவதாகவும், எப்போதும், முஸ்லீம் நணபர்களும், சிங்கள நண்பர்களும் தன்னை காப்பாற்றிவிட்டதாக ஒப்பாரி வைக்கிறார்கள்.

5. தமது சுயநலங்களை ராஜதந்திகளுடன் பேசுவதற்காக தமிழ் மக்களிடமிருந்து அவர்களுக்கு பயமுறுத்தல்கள் இருப்பத்தாக வத்திவைத்துவிட்டு வருகிறார்கள்.

6 ஆனால் ஒன்றில் மட்டும் தெளிவாக இருக்கிறார்கள். அது எப்படி நடிப்பதென்பதாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sunanda deshapriya@sunandadesh tweeted the following:

http://www.upr-info....14_srilanka.pdf

Page 7 ; 38

USA: gravely concerned of changes that had made to our recs. this is not transparent. Why not reflected in the foot notes #UPR14 #uprlka

Page 9 : 71

France: wordings are different from what what we said . Why they were changed? #uprlka #UPR14

Page 9: 74

Did India agreed to drop its recs re 13A ,de militarisation & elections to North from the report ? They not included report. indian rec on 13A is not included in the report.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.