Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடைக்கலநாதனின் மைத்துனர் சடலமாக மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடைக்கலநாதனின் மைத்துனர் சடலமாக மீட்பு

சனிக்கிழமை, 03 நவம்பர் 2012 10:27 0 COMMENTS

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 30ஆம் திகதி காணாமல் போனதாக பொலிஸில் முறையிடப்பட்ட சின்னத்துரை இந்திரேஸ்வரன் (53) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு - தமிழ்மிரருக்கு தெரிவித்தது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நானுஓயா, பங்களாவத்தையில் 111ஆம் இலக்க மைல்கல்லுக்கு அருகில் சடலமொன்று மீட்கப்பட்டிருந்தது. அச்சடலம் அடையாளம் காணப்படாமல் இருந்த நிலையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மனைவியினால் அடையாளம் காட்டப்பட்டது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (எஸ்.தியாகு)

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/51845-2012-11-03-04-58-44.html

  • கருத்துக்கள உறவுகள்

செல்வம் எம்.பி.யின் மைத்துனர் கொலை: சந்தேக நபர் கைது face.jpg By General

2012-11-03 13:29:27

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் சின்னத்துரை இந்திரேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புறக்கோட்டை பகுதியில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரஷாந்த ஜயகொடி வீரகேசரிக்குத் தெரிவித்தார்.

சின்னத்துரை இந்திரேஸ்வரன் நகை வியாபாரத்துக்காக 30 இலட்சம் ரூபாவுடன் சந்தேக நபரோடு சென்றதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பணத்தை நோக்கமாகக் கொண்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

http://www.virakesari.lk/article/local.php?vid=1446

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செட்டியார் தெருவில் பதற்றம்

By General

2012-11-03 13:20:52

கொழும்பு செட்டியார் தெருவில் நகை விற்பனைத் தரகராக தொழில்புரிந்து வந்த சின்னத்துரை இந்திரேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து செட்டியார் தெருவில் பதற்றம் நிலவுவதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்.

செட்டியார் தெருவுக்கு தொழிலுக்காகச் சென்ற இவர் கடந்த 30 ஆம் திகதி காணாமல் போனதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் நானுஓய பங்களாவத்தை பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் சின்னத்துரை இந்திரேஸ்வரன் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து செட்டியார் தெரு வர்த்தகர்களிடையே பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

http://www.virakesari.lk/article/local.php?vid=1445

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் கொலைகள், மீண்டும் ஆரம்பிதுவிட்டதா?

தமிழன் கொலைகள், மீண்டும் ஆரம்பிதுவிட்டதா?

ஒரு தீர்வு வரும்வரைக்கும் தமிழர் மீதான கொலைகள் என்றுமே நிறுத்தப்படப் போவதில்லை. ஆனால் இந்தக் கொலை பணத்தை கொள்ளையடிக்க மேற்கொண்டது போல இருக்கு. செட்டியார் தெருவைச் சேர்ந்த ஒருவரைக் கைதும் செய்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனரான சின்னத்துறை இந்திரேஸ்வரன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை குறித்து விசாரணை நடத்திய கோட்டை பொலிஸார் வெல்லம்பிட்டி பகுதியில் வைத்து நேற்று சந்தேகநபரை கைது செய்துள்ளனர். கைதானவர் சின்னத்துறை இந்திரேஸ்வரனுடன் சேர்ந்து தரகுவேலை பார்ப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவருவதாவது,

கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள இரு வர்த்தகர்களிடம் தங்கம் வாங்கவென 33 லட்சம் ரூபா பணத்தை இந்திரேஸ்வரன் பெற்றுக் கொண்டுள்ளார்.

அந்த பணத்தை பறிக்கும் நோக்கில் சின்னத்துறை இந்திரேஸ்வரனை கொலை செய்து கார் ஒன்றில் ஏற்றிச்சென்று நானுஓயா பகுதியில் குறித்த சந்தேகநபர் போட்டுச் சென்றுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 33 லட்சம் ரூபா பணமும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரும் கைப்பற்றப்பட்டதோடு கொலை செய்யப்பட்டவர் அணிந்திருந்த நான்கு மோதிரங்கள் வேறு ஒரு நபரிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://thaaitamil.com/?p=37374

[size=4]தாயகத்தில் உள்ள எமது உறவுக்களுக்கு பணம் அனுப்பவதில் கூட நாமும் அவர்களும் கவனமாக இருக்கவேண்டும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தாயகத்தில் உள்ள எமது உறவுக்களுக்கு பணம் அனுப்பவதில் கூட நாமும் அவர்களும் கவனமாக இருக்கவேண்டும். [/size]

உண்மைதான்... பலர் அங்கு, வெளிநாட்டுப் பணம்தானே... என்று தண்ணியாகச் செலவழிப்பதை அவதானித்தேன்.

அதைப்பார்க்கும்... ஏதுமற்றவர்கள், கூனிக்குறிகி நிற்பதைப் பார்க்கக் கவலையாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனரின் பூதவுடல் அஞ்சலிக்காக செட்டித்தெருவில் வைக்கப்பட்டுள்ளது. camera_icon.jpeg[/size]

[size=4]sinnadurai_indireswaran-150-seithy.jpg[/size]

[size=4]நானுஓயா பகுதியிலிருந்து கடந்த 31ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நகைத்தொழில் வர்த்தகரான சின்னத்துரை இந்திரேஷ்வரனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக இன்று கொழும்பு செட்டியார் தெருவில் வைக்கப்பட்டிருந்தது. இன்று முற்பகல் 11 மணியளவிலிருந்து 12 மணிவரை பூதவுடல் செட்டியார் தெருவில் அமைக்கப்பட்டிருந்த விசேட பந்தலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.[/size] [size=4][/size][size=4] [/size]

[size=4]உயிரிழந்த இந்திரேஷ்வரனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு செட்டியார் தெருவிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முற்பகல் மூடப்பட்டிருந்தன.அத்துடன் நகைக்கடைத் தொழிலாளர்கள் அனைவரும் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.கொழும்பு - செட்டியார் தெருவின் வர்த்தகரான சின்னத்துரை இந்திரேஷ்வரன் கடந்த 30ம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் மறுநாள் 31ம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.[/size]

[size=4]கொழும்பு ஆமர் வீதியைச் சேர்ந்த 53வயதான குறித்த நபர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக பொரளை மலர்சாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]

funeral-seithy-1-20121105-382.jpg[/size]

[size=4]

Indireswaran-un-seithy-20121105-308.jpg[/size]

[size=4]

Indireswaran-funl-seithy-20121105-359.jpg[/size]

[size=4]

Indreswaran-funl-seithy-20121105-368.jpg[/size]

[size=4]http://www.seithy.com/breifNews.php?newsID=69627&category=TamilNews&language=tamil[/size]

  • கருத்துக்கள உறவுகள்

கடன் தொல்லையிலிருந்து மீள்வதற்காகவே சின்னத்துரை இந்திரேஸ்வரனை கழுத்து நெரித்து கொலைசெய்தேன்: சந்தேகநபர்.

மனைவியின் நகைகள் அடகு வைக்கப்பட்டிருந்தன, பெருந்தொகையான கடன் இருந்தது. இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. எனவே கடன் தொல்லையிலிருந்தும், ஏனைய பிரச்சினைகளிலிருந்தும் மீள்வதற்காகவே நண்பனான சின்னத்துரை இந்திரேஸ்வரன் என்பவரை கழுத்தை நெரித்து படுகொலை செய்தேன். இவ்வாறு இக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த வாரம் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனரான 57 வயதுடைய இந்திரேஸ்வரன் காணாமல் போனார். அவர் கடந்த 31 ஆம் திகதி நானோயா பகுதியில் சடலமாக மீட்கப்பட்டதுடன், கடந்த 03 ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் ஒருவர் கொழும்பு புறக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரே இவ்விதம் வாக்குமூலம் அளித்ததாக புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியந்த திக்கோவிட்ட தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொலைசெய்யப்பட்ட நபரும் சந்தேக நபரும் நெருங்கிய நண்பர்கள். கொலையுண்ட நபர் அடகுவைத்து மீட்கமுடியாமல் இருக்கும் நகைகளை மீட்டெடுத்து அதனை விற்பனை செய்து வருவதை தொழிலாகக் கொண்டிருந்தார். சம்பவ தினமான கடந்த 30 ஆம் திகதி தந்தேக நபர் ஒரு தொகை நகை இருப்பதாகவும் அதனை மீட்பதற்கு வருமாறும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

நண்பனின் அழைப்பை ஏற்று 33 இலட்சம் ரூபாய் பணத்துடன் புறக்கோட்டைக்கு வந்த இந்திரேஸ்வரனை அவருடைய நண்பர் தனது காரில் கொட்டிகாவத்தை பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இவ்வாறு கொலை செய்த பின்னர் சடலத்தை காரில் கொண்டு சென்று நானோயா பகுதியில் வீசிவிட்டு வந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நபரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்த தொலைபேசி இலக்கத்தினூடாகவும் பொலிஸாருக்கு கிடைத்த மேலும் பல தகவல்களின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கடந்த 04 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவரிடமிருந்து 23 இலட்சம் ரூபா பணத்தினையும் கொலை செய்யப்பட்டவரிடமிருந்து எடுக்கப்பட்ட நான்கு மோதிரங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். சந்தேக நபர் 33 இலட்சத்தில் 10 இலட்சத்தை சிலருக்கு கொடுக்கவேண்டிய கடனை அடைத்துள்ளதுடன் அடகுவைத்திருந்த மனைவியின் நகைகளையும் மீட்டுள்ளதாக சந்தேக நபர் வாக்குமூலம் அழித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீரகேசரி.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு நண்பன்..! :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.