Jump to content

ஜெனிவாவில் மகிந்தவை காப்பாற்றி இறுதிநொடியில் அந்தர்பல்டி அடித்தது இந்தியா.


Recommended Posts

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பூகோள காலகிரம மீளாய்வுக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று இலங்கைக்குப் பாதிப்பு எதுவும் ஏற்படாதவகையில் செயற்பட்ட இந்தியா, அபாயப் பொறியிலிருந்து கொழும்பைக் காப்பாற்றி இறுதிநொடியில் அந்தர்பல்டி அடித்தது.

அதேசமயம் இலங்கை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணாக நடந்துகொள்ளும் நாடுகள் குறித்து அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மீளாய்வுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை

நடந்தபோது அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டிருந்த இந்தியா இலங்கையில் 13 ஆவது அரசமைப்புத் திருத்த அமுலாக்கம், வடக்கு, கிழக்கின் இராணுவ முகாம்கள் அகற்றல் மற்றும் படைக்குறைப்பு, வடக்குத் தேர்தல் என்பன பற்றி காரசாரமாகக் கருத்து வெளியிட்டிருந்தது.

இலங்கை நிலைவரம் குறித்து ஆராய நியமிக்க ஐ.நாவால் நியமிக்கப்பட்டிருந்த குழுவில் ஸ்பெயின், பெனின் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் அங்கம் வகித்திருந்ததால் இந்தியாவின் அன்றைய கருத்து சர்வதேச மட்டத்திலும், மனித உரிமைகள் ஆர்வலர்கள் மத்தியிலும் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

ஆனால், நேற்று இலங்கை தொடர்பில் நடைபெற்ற இறுதிக்கூட்டத்தில், இலங்கை தொடர்பில் ஏற்கனவே முன்வைத்த சிபாரிசுகளை நீக்கியிருந்த இந்தியா அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் அந்தர்பல்டி அடித்தது நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜெனீவாவில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டுள்ள இலங்கை தூதுக்குழுவினர் இந்தியப் பிரதிநிதிகளைச் சந்தித்து சந்தித்து நடத்திய இரகசியப் பேச்சுகளை அடுத்தே இந்தியா தனது நிலைப்பாட்டை கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்டதாக இராஜததந்திர வட்டாரங்கள் சுடர் ஒளியிடம் தெரிவித்தன.

இதற்கிடையில் நேற்றையக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தில் சில நாடுகள் முன்னுக்கு பின் முரணாக நடந்துகொள்ளும் நாடுகள் குறித்து கடும் கவலை வெளியிட்டன.

இதேவேளை, நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இலங்கைக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்ததுடன் சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பில தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் சாதகமான பிரதிபலிப்பை இலங்கை அரசு இன்னும் இரு வாரத்துக்குள் அறிவிக்குமென்று குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் எதிர்வரும் மார்ச் மாத அமர்வுக்குள் இலங்கை அரசு மனித உரிமைகள் விடயத்தில் பொறுப்புக் கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று ஜெனீவாவிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் எம்மிடம் சுட்டிக்காட்டின.

இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இன்று நடைபெற்ற பூகோள கால மீளாய்வு அமர்வில் இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள 100 பரிந்துரைகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.

கடந்த முதலாம் நாள் நடைபெற்ற விவாத்தின்போது 99 நாடுகளும் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையில், இந்த மூன்று நாடுகளும் இணைந்து 210 பரிந்துரைகள் அடங்கிய தீர்மான அறிக்கையை நேற்று சமர்ப்பித்திருந்தன.

இந்த அறிக்கையை ஐ.நாவுக்காக ஸ்பெய்ன் தூதுவர் சமர்ப்பித்தார். இந்த அறிக்கையின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், 100 பரிந்துரைகளை நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை இலங்கை விவரித்துள்ளது.

அதேவேளை, பூகோள கால மீளாய்வுக் கூட்டம் குறிப்பிட்டதொரு நாட்டை இலக்கு வைத்து செயற்படுவதாகவும், இந்த நடைமுறைகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பிளவை ஏற்படுத்த முனைவதாகவும் கியூபா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் குறிப்பிட்டுள்ளன.

இந்தத் தீர்மானத்துக்குப் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகத்துக்கு இலங்கை இரண்டு வாரங்களுக்குள் தனது உறுதிமொழிகளை அனுப்பும் என்று தெரிவித்துள்ளார்.

http://thaaitamil.com/?p=37626

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய ஜனனாயகம் என்பது அதன் தொட்டிலிலேயே மகா பாதகங்களை பாலாய்க் குடித்து வளர்ந்தது; இங்கே ஒழுங்கு முறையை எதிர்பார்ப்பதுதான் அறியாமை நிறைந்த ஒன்று!

கொண்டவளுக்கே துரோகம் தீண்டிய நாகத்தை: மக்கள் தலைவன் என்ற அருகதையை அள்ளிக கொடுத்த இந்திய ஜனனாயகம் முதல் தன் மக்களையாவது வாழ் விடட்டும் என்று பிரார்த்திப்போம்!

Link to comment
Share on other sites

தாம் மனிதநேயம், பண்பாடு, நேர்மை, மனிதாபிமானம் அற்ற ஒரு காட்டுமிராண்டிக் கும்பல் என்பதை இந்தியக் காட்டுமிராண்டிகள் மீண்டும் நிரூபித்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எப்போதுமே ஈழ தமிழர்களிற்கு ஆதரவான நிலையை எடுக்காது எம்மில் சிலர்தான் அடிக்கடி இந்தியா ஏதேனும் மர்மக்கனியை பறித்து தரும் என்று நினைக்கின்றார்கள் அது ஒருபோதும் நடக்காது பார்க்க போனால் மகிந்தரை விட சோனியாதான் ஈழ தமிழர்களை இல்லாது ஒழிக்க சபதம் கொண்டுள்ளார் சோனியா தொலைந்தால்தான் விடிவு.

Link to comment
Share on other sites

இந்தியாவிடம் இதை எதிர் பார்த்ததே தப்பு. இன்னும் மேலை நாடுகள் இந்தியாவை ஜனநாயக நாடாக நினைப்பது முட்டாள் தனம். இதற்கு ஒரே வழி நாம் இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை உலககிட்கு வெளிச்சம் போட்டு காட்டுவதே. திருடனிடம் திருட்டை பிடிக்க சொன்னால் எப்பிடி நடக்கும். இந்தியாவின் ஆப்பை வாங்கி வாங்கி ஈழத் தமிழர் நாம் களைத்து விட்டோம். இந்தியாவிடம் இப்பிடியான பணிகளை ஒப்படைக்க வேண்டாம் என்று நாம் ஐநாவில் முறையிடுவதே மேல்

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]இந்த குத்துக்கரணம் ஊடாக இந்தியா எதனை கூறி நிற்கிறது?[/size][/size]

[size=1]

[size=4]இது சிங்கள தேசத்திற்கு தந்த இறுதி சந்தர்ப்பமாகவும் பார்க்கலாம். [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மானம்: இந்திய ஜனனாயகம் அறியாத ஊர்.

விபச்சாரம்: இந்திய ஜனனாயம் பிறந்த ஊர்.

மேலை ஜனனாயகத்தின் கண்களுக்கு: கொள்ளைக்காறன் கையின் திருவோடு இந்திய ஜனனாயகம்.

ஏழையின் ஆக்கத்தைப் பறிக்கும் திருட்டுக் கோழையின் கைவாள் இந்திய ஜனனாயகம்.

ஊரின் பெண்மையைக் பெண்டாளும் கிழங்களுக்கு பன்னிரு கரங்கள் ஆவது இந்திய ஜனனாயகம்.

"மேலைநாடுகளின் அடிமைகள் இந்திய மக்கள்" -இங்கே 'அடிமைகள்' என்ற சொல்லின் இன்னொரு அர்த்தம் 'இந்திய ஜனனாயகம்'

Link to comment
Share on other sites

ஈழத்தின் அருகே இந்தியா என்ற குள்ளநரி இருக்கும்வரைக்கும் தமிழனுக்கு விடிவு இல்லை

Link to comment
Share on other sites

இந்தியாவில் இராஜதந்திர Space இப்ப எத்தினை கியூபிக் மீற்றர் இருக்கு? :D

[size=1] [/size]

[size=1]நியானி: சுட்டிய பெயர் நீக்கம்[/size]

[size=1] [/size]

Link to comment
Share on other sites

அது தான் நம்ம கண்ணா நிதி ஒரு உண்ணாவிரதம் இருந்துவிட்டாரானால் போச்சு.

தேவையாயின்

பதவிகளை இராஜினாமா செய்யாமல், தமிழ்ஈழம் என்ற சொல்லை பாவியாமல் ஒரு டெசோவையும் சேர்த்துக்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தர் பல்டி ஓக்கே.. அவன் அடிப்பான் அது தெரிந்த விடயம் ... ஆனால் குரங்கிற்கு குடுக்க வேண்டிய சவுண்டை அங்கிட்டு குடுக்கணும்.. அதை குடுத்தது யார்...? :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் (24 ஜூன்) இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன. எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து (B1) அல்லது அவுஸ்திரேலியா (B2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. அதே போன்று ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.   யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:   62)    சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, மேற்கிந்தியத் தீவுகள் (C2) எதிர் தென்னாபிரிக்கா (D1)  WI  எதிர்  SA   நான்கு போட்டியில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். 11 பேர் போட்டியில் உள்ள தென்னாபிரிக்கா வெல்லும் எனக் கணித்துள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் வென்றால் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணித்த @suvy ஐயாவுக்குப் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, நியூஸிலாந்து அணிகளைத் தெரிவு செய்த ஏழு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் SA வீரப் பையன்26 SL சுவி AFG நிலாமதி NZ குமாரசாமி SA தியா NZ தமிழ் சிறி NZ புலவர் SA P.S.பிரபா WI நுணாவிலான் SA பிரபா USA SA வாதவூரான் SL ஏராளன் SA கிருபன் SA ரசோதரன் NZ அஹஸ்தியன் WI கந்தப்பு SA வாத்தியார் WI எப்போதும் தமிழன் SA நந்தன் SA நீர்வேலியான் WI கல்யாணி NZ கோஷான் சே SA   இப் போட்டியில் எவர் புள்ளிகளை எடுப்பார்கள்?         63)    சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா (B2) எதிர் இந்தியா (A1)    AUS  எதிர்  IND   11 பேர் போட்டியில் உள்ள இந்திய அணி வெல்லும் எனவும், 05 பேர் போட்டியில் உள்ள அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்.  இப்போட்டியில் அவுஸ்திரேலியா வென்றால், இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த 05 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் IND வீரப் பையன்26 IND சுவி IND நிலாமதி IND குமாரசாமி IND தியா PAK தமிழ் சிறி IND புலவர் PAK P.S.பிரபா ENG நுணாவிலான் PAK பிரபா USA ENG வாதவூரான் IND ஏராளன் PAK கிருபன் AUS ரசோதரன் IND அஹஸ்தியன் AUS கந்தப்பு IND வாத்தியார் AUS எப்போதும் தமிழன் AUS நந்தன் PAK நீர்வேலியான் IND கல்யாணி IND கோஷான் சே AUS   இப் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
    • கந்தையா57 ஐயா! உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா!! இது என்கணிப்பு அல்ல, கூக்கிள் ஆண்டவர் மேற்கொண்டு தந்த கணிப்பு என்பதைக் குறிப்பிட்டும் உள்ளேன். ஆண்டவர்மேல் குற்றம் கண்டு, மறுபடியும் முதுகில் பிரம்படி வாங்கிக் கொடுத்து உலக மானிடர் அனைவர் முதுகிலும் இரண்டாவது தழும்பையும் ஏற்படுத்த என்மனம்  ஒப்பவில்லை ஐயா!!🤔😟
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.