Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய செயற்பாட்டாளர் மீது பாரிசில் தேசவிரோதிகள் துப்பாக்கிச்சூடு!

Featured Replies

வீரமரணம் அடைந்த நடராஜா மதிந்திரன் என்னும் பரிதி, இந்தியாவில் இரண்டாம் பயிற்சி முகாமில் கெரில்லா பயிற்சி பெற்ற ஒருவர். 1983 இல் இவர் பெற்ற பயிற்சியின் வெளிப்பாடாக எண்பதுகளின் நடுப்பகுதியில்

மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இவர்

ஸ்ரீலங்கா ராணுவத்துக்கு எதிராக நடை பெற்ற அனைத்து தாக்குதல்களிலும் பங்கு பற்றினார்.இவருடன் பயிற்சி பெற்றவர்களில் குறிப்பாக பிரிகேடியர் பானு, லெப் கேர்ணல் குமரப்பா, கப்டன் வாசு, லாலாரஞ்சன் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்.2003 முதல் பிரான்சில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த பரிதியை,பிரான்ஸ் அரசு,2007 முதல் 2010

வரை புலிகளுக்கு நிதி திரட்டினார் என்னும் குற்றச் சாட்டின்பேரில் கைது செய்து சிறையில் அடைத்து வைத்து 2010 இல் விடுதலை செய்திருந்தது.

நன்றி தகவலுக்கு வண்டு முருகன் ..............உண்மையில் இந்த தமிழன் இப்படியெல்லாம் துன்பங்களை அனுபவித்தது ...தன் இன்னுயிரை .அர்ப்பணித்தது ..யாருக்காக .................

நாமெல்லாம் யார் ..................எந்த அருகதையும் இல்லை எங்களுக்கு .......................ஆனால் இப்படி இன்னும் எத்தனையோ தமிழர்கள் தங்களை எமக்காக அர்ப்பணிக்க தயாராய் உள்ளதை நாம் எம் நிஜ வாழ்க்கையில் கண்டும் காணாதோர் போல் வாழும் நிலையை மாற்றி .......அவர்களை விமர்சிப்பதை தவிர்த்து அவர்களுக்கு என்றும் பக்க பலமாக இருப்போம் என்று உறுதியெடுத்து கொள்வோம் ...........

  • Replies 240
  • Views 17.7k
  • Created
  • Last Reply

பழ. நெடுமாறன் இரங்கல் அறிக்கை

விடுதலைப் புலிகளின் பிரான்சு நாட்டுப் பொறுப்பாளர் பரிதி என்ற ரீகன் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சிங்கள அரசின் கொடுங்கரங்கள் பிரான்சு வரை நீண்டிருப்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

நல்ல செயல் வீரராகவும் கடமையில் சிறிதும் தவறாதவரும் தனது தொண்டின் சிறப்பினால் மக்கள் உள்ளங்களில் இடம் பெற்றவருமான பரிதியின் மறைவின் மூலம் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது. பரிதிக்கு எனது வீர வணக்கத்தையும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புள்ள

(பழ. நெடுமாறன்)

______________________________________________________

நினைவு வீடியோ

Edited by வண்டுமுருகன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தகவலுக்கு வண்டு முருகன் ..............உண்மையில் இந்த தமிழன் இப்படியெல்லாம் துன்பங்களை அனுபவித்தது ...தன் இன்னுயிரை .அர்ப்பணித்தது ..யாருக்காக .................

நாமெல்லாம் யார் ..................எந்த அருகதையும் இல்லை எங்களுக்கு .......................ஆனால் இப்படி இன்னும் எத்தனையோ தமிழர்கள் தங்களை எமக்காக அர்ப்பணிக்க தயாராய் உள்ளதை நாம் எம் நிஜ வாழ்க்கையில் கண்டும் காணாதோர் போல் வாழும் நிலையை மாற்றி .......அவர்களை விமர்சிப்பதை தவிர்த்து அவர்களுக்கு என்றும் பக்க பலமாக இருப்போம் என்று உறுதியெடுத்து கொள்வோம் ...........

இதைத்தான் நானும் நினைத்தேன்.. எல்லாவற்றையும் விட்டுவிட்டு குடும்பம், பிள்ளைகள் என்று இவரும் வாழ்ந்திருக்கலாம். அவதூறுகளைத் தாங்கிக்கொண்டு செயற்பட்டிருக்கிறார். கண்கள் கலங்குகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நானும் நினைத்தேன்.. எல்லாவற்றையும் விட்டுவிட்டு குடும்பம், பிள்ளைகள் என்று இவரும் வாழ்ந்திருக்கலாம். அவதூறுகளைத் தாங்கிக்கொண்டு செயற்பட்டிருக்கிறார். கண்கள் கலங்குகின்றன.

புலிகள் வாய்விட்டு கதறி அழுததை நேற்றுத்தான் பார்த்தேன்.

என்னாலும் முடியவில்லை

முதன் முதலாக கத்தி அழுதேன்

அவருடைய உழைப்பையும் தியாகத்தையும் கடினமான வேளைகளில் அவரது முடிவுகளையும் நேரில் பார்த்தவன்.

போன மாதம்கூட எனது மக்கள் உதைபந்து விளையாடும் இடத்தில் பிணக்கு வந்து எடுங்கடா துவக்கை என ஒருத்தர் கத்தியதை கேட்டவுடன் காருக்குள் இருந்து முதலில் இறங்கி முதல் வேலையாக காவல்துறைக்கு அறிவித்துவிட்டு முழு ஒழுங்குகளையும் ஏற்படுத்தி எந்த விபரீதமும் ஏற்படாமல் தடுத்தார். இனி அப்படி ஒருத்தர் எமக்கு வரமுடியாது.

இதைத்தான் நானும் நினைத்தேன்.. எல்லாவற்றையும் விட்டுவிட்டு குடும்பம், பிள்ளைகள் என்று இவரும் வாழ்ந்திருக்கலாம். அவதூறுகளைத் தாங்கிக்கொண்டு செயற்பட்டிருக்கிறார். கண்கள் கலங்குகின்றன.

இது பெரிய துயரம் தான் இசைக்கலைஞன். ஆனால் இதனை விட பெரிய கவலை; அப்படி இழக்க காரணமான கோஷ்டி அரசியலை விட்டு வைத்து இருப்பது.

அன்று சிலர் படுகொலை செய்யப்படும் போது, அன்றிருக்கும் நிலையில் உண்மை பேசினால் பொது எதிரியின் மீதான கவனம் குறைந்து விடும் என்று உண்மை தெரிந்தவர்கள் எல்லாரும் மெளனமாக இருந்தம்..இப்ப அந்த மெளனமே எல்லாரையும் கொல்ல வைக்குது, இன்று பொது எதிரியை விட மோசமான எதிரியாக எம் கோஷ்டி அரசியல் முளைவிட்டு பெரிய மரமாக நிக்குது. மக்களுக்கு உண்மைகளைச் சொல்லும் போதுதான் இது கொஞ்சமாவது குறையும்.

  • கருத்துக்கள உறவுகள்

எடுங்கடா துவக்கை என ஒருத்தர் கத்தியதை கேட்டவுடன்

பொது இடத்தில் இப்படிக் கத்துபவர்களும் இருக்கிறார்கள் என்பதை நினைக்க தலை விறைக்குது..

  • கருத்துக்கள உறவுகள்

பொது இடத்தில் இப்படிக் கத்துபவர்களும் இருக்கிறார்கள் என்பதை நினைக்க தலை விறைக்குது..

காவல்துறை வந்து எல்லோரையும்

அவர்களது வாகனங்கள் உட்பட சோதித்தும் எதுவும் அகப்படவில்லை.

வெருட்டுவதற்காகவே அவர் அப்படி கத்தியுள்ளார்.

ஆனால் காருக்குள் எவருக்கும் தெரியாமல் அந்த இடத்தில் எந்த நேரமும் காவலிருந்து பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் அவரது கடமையுணர்வை இனி ...........????????????????

கனடியத் தமிழர் தேசிய அவையின் வீரவணக்கம்

தமிழ்த் தேசியப் பற்றாளரும் நீண்ட காலமாகப் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளருமாக அயராது தமிழ் மண்ணின் விடுதலைக்காகச் செயற்பட்டுவந்த 'பருதி' என்று பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களால் அழைக்கப்பட்ட திரு நடராஜா மதீந்திரன் அவர்கள் நவம்பர் 8ம் நாள் 2012 வியாழக்கிழமையன்று சிறிலங்காவின் நயவஞ்சகர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திரு.பருதி அவர்களின் இழப்பு ஈழத் தமிழருக்குப் பேரிழப்பாகும்.அவரின் இழப்பினால் துயருறும் அவரின் குடும்பத்தாருடனும் உலகத் தமிழருடனும் கனடியத் தமிழர் தேசிய அவை தமது துயரைப் பகிர்ந்து கொள்வதுடன் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

_________________________________________________

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதி அவர்களுக்கு வீரவணக்கம் - யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பு

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளர் தளபதி பரிதி (நடராஜா மதீந்திரன்) அவர்கள் 08.11.2012 பிரான்ஸ் தலைநகரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். தளபதி பரிதி அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டலில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் செயற்பட்ட ஒரு மூத்த தளபதி ஆவார். தமிழீழம் நோக்கியதான போராட்ட வடிவம் மாறிய போதிலும் தன்னை அதற்கமைய மாற்றி புலம்பெயர் தமிழருடன் இணைந்து பல இடர்களுக்கு மத்தியிலும் செயற்பட்டு வந்தார். மேலும் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு இணங்க தமிழீழம் நோக்கிய பாதையில் இளையோரின் பங்கு இன்றியமையாத ஒன்று என்பதை நன்கு அறிந்து பணியாற்றியவர்.

கடந்த சில வருடங்களாக புலம்பெயர் தேசத்தில் தமிழ்த் தேசிய பணிச்செயற்பாட்டாளர்களை அழிப்பதற்கான நடவடிக்கையை இலங்கை அரசு முன்னெடுத்து வருகிறது. அதன் முதற்கட்டமாக சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் தளபதி பரிதி அவர்கள் மேல் நடாத்திய கொலைமுயற்சி இங்கு குறிப்பிடதக்கது. அதன் பின்னரும் அஞ்சாது தனது தாயகப்பணியைத் தொடர்ந்து வந்த தளபதி பரிதி அவர்கள் 08.11.2012 அன்று சிங்கள இனவாதக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழரின் இறுதியும் அறுதியுமான முடிவாம் தமிழீழம் எனும் இலக்கை நோக்கி பயணிக்கும் பாதையில் வழிமாறாது ஒன்றிணைந்து பயணிப்பது காலத்தின் தேவையாகும். எமது போராட்டமானது புலம்பெயர் தேசத்தில் தமிழின உணர்வாளர்களால் அமைதியான மற்றும் சனநாயக முறையில் முன்னெடுக்கப்படும் இக்காலத்தில் இலங்கை அரசின் இவ் எல்லை மீறிய படுகொலையை தமிழ் இளையோர் அமைப்பாகிய நாங்கள் கண்டிப்பதுடன் இக்கொலைக்கான நீதியை சர்வதேசத்தின் முன் கோரி நிற்போம்.

_________________________________________________________________

நிலத்திலும் புலத்திலும் போராடிய மாவீரர் பரிதி அவர்களுக்கு டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் வீரவணக்கம் .

மக்களோடு மக்களாய் நின்று நிலத்திலும் புலத்திலும் களமாடிய மாவீரர் பரிதி நயவஞ்சகச் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று மாலை வீரமரணம் தழுவிக் கொண்டார் .

முள்ளிவாய்க்காலில் தமிழினம் முடிந்தது என்று கங்கணம் கட்டிய சிங்களத்துக்கு புலம்பெயர் நாட்டில் பொங்கி எழுந்த இனமான ஈழத்தமிழர்களின் முகமாக விளங்கியவர் தான் மாவீரர் பரிதி .

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தூணாக துணிவுடன் சிறை சென்றும் விடுதலையை மூச்சாக கொண்டு அயராது போராடிவர் தான் மாவீரர் பரிதி . அரசின் கைக்கூலிகள் பலதடவை மாவீரர் பரிதியை கொல்வதற்கு முயற்சித்து வந்தது அனைவரும் அறிந்தவிடயம் . அவ் வகையில் இன்று மாவீரர் பரிதி அவர்கள் திட்டமிட்ட நயவஞ்சகச் செயலால் வீரமரணம் அடைந்ததை அறிந்து எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது மக்கள் சிங்கள இனவாத அரக்கர்களால் கொன்று குவிக்கப்படும்போது , முழு உலகமுமே கவலை கொள்ளலாம் கண்டனங்கள் தெரிவிக்கலாம் , கண்ணீர் வடிக்கலாம் .ஆயினும் , எமது மக்களைப் பாதுகாத்து அவர்களது விடுதலையை வென்றெடுக்கும் மாபெரும் பொறுப்பு , எம்முடையது எனும் தேசியத் தலைவரின் கட்டளைக்கு செயல்வடிவம் கொடுத்த மாவீரன் பரிதியின் நினைவுகள் அணையாச் சுடராக, விடுதலைத் தீயாக தொடரும் எமது விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் என்பது நிச்சயம் .

மாவீரர் பரிதி அவர்களை இழந்து நிற்கும் அவர் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .

____________________________________________________________

பரிதி அவர்களுக்கு வீரவணக்கம் - தமிழ் இளையோர் நடுவம் நோர்வே

சிறிலங்கா அரசின் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் நேற்று பாரீசில் சிறிலங்கா அரசின் எல்லைதாண்டிய பயங்கரவாதத்திற்கு பலியான தமிழ் தேசிய செயற்பாட்டாளர் பரிதி அவர்களுக்கு எமது வீரவணக்கம்.

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளருமான நடராசா மகேந்திரன் ( பரிதி )நேற்று இரவு சிறிலங்கா புலனாய்வாளர்களால் பாரிசில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இளையோரை இணைத்து ஒன்றுபட்ட தாயக விடுதலைப் போராட்டத்தை பிரான்சில் முன்னெடுக்க முயன்ற ஒரு தமிழ் தேசிய செயற்பாட்டாளர் சிறிலங்கா அரசின் எல்லைதாண்டிய பயங்கரவாதத்திற்கு இன்று பலியாகியுள்ளார்.வீரச்சாவை அணைத்துக்கொண்ட பரிதி அவர்களுக்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்திக்கொள்ளும் இவ்வேளையில் அவரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

தமிழ் இளையோர் நடுவம் - நோர்வே

________________________________________________________

படுகொலைசெய்யப்பட்ட பருதி அவர்களுக்கு ஊடகஇல்லம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது

தமிழீழ விடுதலையை நேசிக்கும் எம் இன மக்களை ஒருங்கிணைத்து, அவர்களது கலை பண்பாட்டுக் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாத்து, எம் புலம் பெயர் சமூகத்தினை ஒன்றிணைக்கும் பணியைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் பல்தேசம் எங்கிலும் செய்து வருகின்றது.

இந்த வகையிலேயே பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் செயற்பட்டு வருகின்றது. இதன் முதன்மைச் செயற்பாடட்டாளராகத், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராகத் திரு.பரிதி அவர்கள் பணியாற்றி வந்தார்.

பல இன்னல்களுக்கும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் அயராது மக்கள் பணிக்காகத் தம்மைத் திரு.பரிதி அவர்கள் அர்ப்ணித்திருந்தார். ஏற்கனவே படுகொலை முயற்சிக்கு ஆளாகியும் அதிலிருந்து தப்பித் தனது பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.

தமிழின அழிப்பு சக்திகளால் 08.11.2012 அன்று திரு.பரிதி அவர்கள் பரிசில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஊடக இல்லம் திரு பரிதி அவர்களின் பணிக்குத் தலை வணங்குவதுடன் இப்படுகொலைக்கான விசாரணையை மேற்கொள்ளுமாறு பிரான்ஸ் காவற்துறையினரையும் கேட்டுக் கொள்கின்றோம்.

திரு.பரிதி அவர்களை இழந்து நிற்கும் அவர் குடும்பத்தினர்க்கு பிரான்ஸ் ஊடகஇல்லம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.

ஊடகஇல்லம்

_________________________________________________________

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதி அவர்களின் கனவை நனவாக்குவோம்-பிரான்ஸ் மக்கள்

பிரான்ஸ் தலைநகர் பரிசில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு பரிதி அவர்கள் இன்று துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி வீரமரணமடைந்துள்ளார்.

திரு பரிதி அவர்கள் வீரமரணம் அடைந்த செய்தி கேட்டு உலகத்தமிழினமே கண்கலங்கி வேதனையில் தவிக்கின்றனர்.

இந் நிலையில் இன்று திரு பரிதி அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர் வீரச்சாவடைந்த இடத்தில் பல நூறு தமிழர்கள் ஒன்று திரண்டு திரு பரிதி அவர்கள் சிந்திய குருதியை எடுத்து தமது நெத்தியில் இட்டு திரு பரிதியவர்களின் அழியாத கனவான தமிழீழ தனிநாட்டை மீட்கும் கனவை நனவாக்குவோம் என்று சத்தியம் செய்து சபதம் எடுத்துக்கொண்டனர்.

பின் அவர் வீரமரணமடைந்த இடத்தில் மலர்வலையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது

ஆட்களைப் பிடித்து உள்ளே போடுவதால் குற்றங்கள் நிற்கப்போவதில்லை.

[size=4]மேற்குலக சட்டத்திலும் சிறைகளிலும் நம்பிக்கை ஆசியாவைவிட உள்ளது ! பயங்கரவாத அமைப்பு என கூறி தடை இட்டு நிதி சேர்த்தவர்களையே சிறையுள் அடைத்தது இந்த மேற்குலக சட்டங்கள். [/size]

குற்றத்திற்கான காரணங்களை சரிசெய்வதே இவ்வாறான குற்றங்கள் நிகழாமல் இருக்க ஒரே வழி. அந்தவகையில் அடுத்தவனுக்கு துரோகிப்பட்டம் கட்டுவது. குழப்புவது. மாவீரர் தினம் நிகழ்வுகளுக்கு போட்டி போடுவது. தேசியத்தை குத்தகைக்கு எடுப்பது , சொந்தமாக விலைக்கு வாங்குவது, சீன் போடுவது. பல்வேறு அமைப்புகளில் இருந்துகொண்டு குழப்புவதற்கான முடிவுகளை எடுத்து விட்டு அமைப்புகளை நல்ல பிள்ளையாக்கி அநாமதேய பெயர்களில் குழப்புவது. இப்படியானவைக்கள் தான் கொலைக்கான வேர்கள். பிரச்சனை எங்கே உற்பத்தி செய்யப்படுகின்றதோ அங்கே சரிசெய்வது ஒன்றே வழி. அல்லது இருக்கவே இருக்கின்றது இந்திய இலங்கைபப்புலநாய்வுத்துறைகள் அவர்கள் தலையில் எல்லாத்தையும் போட்டுவிட்டு தொடர்ந்து நல்லபிள்ளைகளாக குழப்பிக்கொண்டும் இருக்கலாம்.

[size=4]இன்று புலிகள் ஆயுத ரீதியாக மௌனிக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கு மேல். "புலம்பெயர் மக்களால் தான் பிரச்சனை" என பகிரங்கமாக சிங்களம் கூறி வரும் நிலையில் அவர்கள் மீது சந்தேகம் வருவதற்கு காரணிகள் பல உண்டு. [/size]

[size=1]

[size=4]எம்மவர்கள் இதை செய்திருக்க கூடும். ஆனாலும் பின்னால் சிங்களம் இருந்திருக்க கூடும். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

றீகன், கேணல் பருதி என்ற பெயர்களில் அறியப்பட்ட ஈழ விடுதலைப் போராளி நடராசா மர்கீந்திரன் புலம்பெயர் தமிழர்களின் முக்கிய தலைநகரங்களில் ஒன்றான பரிசில் வைத்து இனம் தெரியாதோரால் சுட்டுப் படுகொலை செய்யப் பட்ட சேதி அதி|ற்ச்சி தருகிறது. மேற்படி விடுதலைப் போராளி கேணல் பருதிக்கு என் வணக்கங்களும் அஞ்சலிகளும் உரித்தாகுக.

ஊகங்களுக்குப் பதில் தீவிரமான விசாரனையைக் கோரி தெருவில் இறங்கி பிரான்ஸ் அரசை நெருக்குவதும் பிரன்சு பொலிசாரின் விசாரணைக்கு பூரணமாக ஒத்துழைப்பதும் அனைத்துத் தமிழர்களது கடமையாகும்.

நமக்குள் ஆயிரம் விவாதங்கள் பிழவுகள் இருந்தாலும் நமக்கென்று பொதுவான விடுதலைப் பணி காத்திருக்கிறது. எல்லாக் கருத்து முரண்பாடுகளுடனும் நாம் ஒன்று சேர்ந்து நமது விடுதலைத் தேரை இழுத்தே ஆகவேண்டியுள்ளது. இதுவே நம் வரலாற்றுக் கடமையாகும். இதனை இத்தருனத்தில் நாமெல்லாம் மனதில் இருத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் / வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்.

Edited by poet

பரிதி அண்ணாவுக்கு வீர வணக்கங்கள்....

கொலை நடந்த இடத்தைச் சுற்றி தடுப்புப் பட்டியைக் கட்டாமல் ஏனோதானோ என்று விட்டிருக்கிறது ஃபிரான்ஸ் காவல்துறை.. இந்த லட்சணத்தில் இருந்தால் கொலை நடக்காமல் வேறு என்ன நடக்கும்?

பிரான்ஸ் காவல் துறை புலனாய்வில் பெரிதாக சொல்லிக்கொளும்படி இல்லை

பிரான்ஸ் காவல்துறைக்கு திறமை மற்றும் பலம் உள்ளது. ஆனால் சாதாரணமாக அதனை பயன்படுத்துவதில்லை. நாட்டிற்கே எதிரான பயங்கரவாதம் என்று வரும்போது அவர்கள் மும்முரமாக பலவித கட்டளைகள் இட்டு குற்றவாளியை தேடுவார்கள். இந்த விடயம் எவ்வாறு கையாளப்படப்போகிறது என்பது தெரியவில்லை. ஆனால் குற்றவாளியை பிடிக்கும் வரை நாமும் அவர்களுக்கு அறிவுறித்திககொண்டிருக்க வேண்டும்...

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் ஐயாவின் ஆலோசனை சரியாகப் படுகிறது. இந்தக் கொலைக்கு நியாயம் கேட்டு போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் ஃபிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள்..!

ஒரு விடயம் என்னவெனில், இதை நாங்கள் அனுமதித்தோம் என்றால் நாளை அவர்கள் எங்களின் வீட்டுக்கதவுகளையும் தட்டிச் சுடக்கூடும். இது தான் மிகவும் வருத்தமான உண்மை. இதற்கு நாங்கள் உண்மையில் கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இந்த நடவடிக்கை அவர்களுக்குப் பரிசோதனை நடவடிக்கையாகவும் இருக்கலாம். இதில் நாங்கள் முடங்கினோம் என்றால் தொடர்ச்சியாக அவர்கள் செய்ய முயற்சிப்பார்கள்

உண்மை...

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் காவல்துறைக்கு திறமை மற்றும் பலம் உள்ளது. ஆனால் சாதாரணமாக அதனை பயன்படுத்துவதில்லை. நாட்டிற்கே எதிரான பயங்கரவாதம் என்று வரும்போது அவர்கள் மும்முரமாக பலவித கட்டளைகள் இட்டு குற்றவாளியை தேடுவார்கள். இந்த விடயம் எவ்வாறு கையாளப்படப்போகிறது என்பது தெரியவில்லை. ஆனால் குற்றவாளியை பிடிக்கும் வரை நாமும் அவர்களுக்கு அறிவுறித்திககொண்டிருக்க வேண்டும்...

குற்றம் நிகழ்த்தப்பட்ட இடத்தை வரையறுத்து ஒருவரையும் முதலில் உள்ளே செல்லமுடியாது தடுப்பது முதல் வேலை. அங்கே தடயவியல் விற்பன்னர்களைக் கொண்டு பௌதீக ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டியது இரண்டாவது வேலை..

காலதாமதமாக வந்து ஆதாரங்களைச் சேர்த்தால் நீதிமன்றங்கள் ஏற்காது. அவை கலப்படமற்றவை என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் போகும்.

ஃபிரான்ஸ் காவல்துறைக்கு இதிலெல்லாம் அக்கறையில்லை போல் தெரிகிறது..

குற்றம் நிகழ்த்தப்பட்ட இடத்தை வரையறுத்து ஒருவரையும் முதலில் உள்ளே செல்லமுடியாது தடுப்பது முதல் வேலை. அங்கே தடயவியல் விற்பன்னர்களைக் கொண்டு பௌதீக ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டியது இரண்டாவது வேலை..

காலதாமதமாக வந்து ஆதாரங்களைச் சேர்த்தால் நீதிமன்றங்கள் ஏற்காது. அவை கலப்படமற்றவை என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் போகும்.

ஃபிரான்ஸ் காவல்துறைக்கு இதிலெல்லாம் அக்கறையில்லை போல் தெரிகிறது..

உண்மை தான்.. பிரான்ஸ் மற்றும் லண்டன் காவல்துறையினர் எல்லாம் இவ்வாறு தான் அக்கறையற்று செயற்படுவார்கள். :(

[size=1]

[size=4]நன்றி பல தகவல்களுக்கு ![/size][/size]

[size=4]அத்துடன் இந்த 'விறுவிறுப்பு' ரிசி இப்பொழுது கொழும்பில் இருந்தே இயங்குவதாக முன்னர் யாழ் களத்தில் வாசித்த நினைவு. [/size]

COLONEL-PARITHI-ANNA.jpg

8.11.2012 அன்று இரவு கேணல் பரிதி அண்ணா அவர்கள் தேசியம் தொடர்பான அன்றைய ‌வேலைகளை முடித்துவிட்டு வெளிவருகையில் காத்திருந்த தமிழின தேசவிரோதிகள் அவரை சுட்டுக் கொலை செய்துள்ளார்கள்.

இக் கொலை பல சந்தேகங்களை பலர் மீது திருப்பியுள்ளது. ஆனால் உண்மை ஒன்றுதான் இதற்கு பின்னால் இருப்பது தமிழன தேச விரோத சக்திகளான, சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகள் என்பது அப்பட்டமான உண்மை.

கேணல் பரிதி அவர்களை நெருங்கும் தைரியம் சாதராண பொதுமகனுக்கு இருந்திருக்க துளியும் வாய்ப்பில்லை. பெரும் திட்டம் வகுத்து காத்திருந்து, உயிர் துறக்கும் வரை சுட்டுக் கொல்லும் அளவுக்கும், துடிதுடித்து இறப்பதை பார்ப்பதற்கும் பயிற்றுவிக்கப்பட்ட அல்லது ஏற்கனவே அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம்.

ஆக இது மிகவும் திட்டமிட்ட ‌தொலைநோக்குள்ள கொலையாகத்தான் கருத முடியும். அதுவும் மாவீரர் நாள் நெருங்கும் சமயத்தில் இக்கொலையானது, புலம் பெயர் மக்கள் மத்தியில் பயத்தையும், பிரிவையும் பெரும் உளவியல் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது மட்டும் எதிரியின் திட்டம் அல்ல!

மாறாக கேணல் பரிதி அவர்கள் பிரான்ஸ் செயற்பாட்டாளாராக இருக்கும் வரை நினைத்ததை சாதிக்க முடியாது என்பதும் அவர்கள் கணிப்பாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால் எதிரியின் கணிப்பு முற்றிலும் பிசகியிருப்பதை, நடந்துகொண்டிருப்பவைகள் உறுதிப்படுத்துகின்றது. மக்கள் முக்கியமாக பிரான்ஸ் மற்றும் புலம்பெயர் நாட்டு இளையோர்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சியை உருவாக்கியிருக்கின்றது.

குற்றவாளியை உடனே கைது செய்து , யார் எதற்காக இக்கொலை செய்யப்பட்டது என வெளிக்கொண்டுவர வேண்டும் அல்லது பெரும் போராட்டங்கள் பிரான்ஸ்சில் வெடிக்கும் என காவல்த்துறைக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு பெரும் எழுச்சி உருப்பெற்றுள்ளது.

ஏனைய நாட்டு செயற்பாட்டாளர்கள் சோர்ந்து போவதற்கு மாறாக மேலும் பெரும் சினம் கொண்டு முன்னிலும் திடமாக பணியாற்ற உறுதி கொண்டுள்ளார்கள்.

கேணல் பரிதி அண்ணாவை ஏன் எதிரி குறி வைத்தான் என்பதில் இருந்தே அவரது தேசிய பணி உலக தமிழர்களுக்கு விளங்கியிருக்கும்.சிங்கள பயங்கரவாத அரசினால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட புலம்பெயர் மக்களுக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்தவர் கேணல் பரிதி அண்ணா அவர்கள்

எவ்வித மிரட்டல்களுக்கும் அடிபணியாது, வீரமாகவும் வி‌வேகமாகவும் அயராது சிந்தித்து ஒவ்வொரு காய்களையும் நகர்த்தும் கேணல் பரிதி அண்ணா அவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு பின் எதிரியின் முதல் குறியாக இருந்ததில், அவருக்கு அருகில் இருந்தவர்களுக்கு வியப்பாக இருக்காது, ஏனெனில் எதிரிக்கு எதிரான காத்திரமாக பணியாற்றியவர் கேணல் பரிதி அண்ணா அவர்கள்.

கேணல் பரிதி அண்ணாவுடன் நாமும் இருந்திருக்கின்றோம் என்பதில் மிகவும் பெருமையும் கர்வமும் கொள்கின்றோம். கேணல் பரிதி அண்ணா உங்கள் வீரமரணம் மூலம் எதிரி நினைத்ததை அடைய விடமாட்டோம் என நாங்கள் உறுதி கூறி எமது வீர வணக்கத்தை செலுத்துகின்றோம்

தமிழீழ புரட்சிகர மாணவர்கள்

REVOLUTIONARY STUDENTS OF TAMILEELAM

WWW.RSTE.ORG

INFO@RSTE.ORG

  • கருத்துக்கள உறவுகள்

கேணல் நிலை இச் சகோதரனுக்கு எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்த முன்பு யாரோ எழுதிய கேள்விக்குச் சொல்லக்கூடிய பதில் என்னவெனில், அது ஒரு அன்பில், அவர் வழங்கிய பணிக்காக அவரைக் கொளரவிக்க எண்ணத்தில் யாரோ எழுதியிருக்கின்றார்கள். ஒரு செயற்பாட்டாளராக மறைந்துபோனார் என்ற எண்ணத்தில் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

----------

உண்மையில் இயக்கம் களத்தில் அவர்கள் கொண்டிருந்த போராளிகளினைக் கணக்கில் கொண்டு தான் பதவி நிலை கொடுத்திருப்பதாக நம்புகின்றேன். ஆரம்ப காலத்தில் லெப். நிலை, பிற்பாடு லெப். கேணல் என்று அவரவர் காலத்தில் கொண்டிருந்த படையணிளை வைத்துக் கணித்திருந்தார்கள். பிரிகேடியர் வரை தான் எம்மினத்தில் போராளிகளாக இணைந்திருந்தார்கள். ஜனரல், மார்சல் நிலைக்குப் போகவில்லை. எந்தக் காலப்பகுதியில் மரணித்தாலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட இத்தகுதி நிலைகள் என்பது தாங்கிய படையணிகளைக் கருத்தில் கொண்டே தவிர, கொளரவத்துக்காக அல்ல.

ஆனால் புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு, இப்படிக் கொடுப்பது என்பது சில சட்டப்பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொள்வது நன்று....

Edited by தூயவன்

[size=4]பலவேறு பதிவுகளை இந்த திரியில் வாசித்த பின்னர் இந்த மாவீரன் மீது மேலும் மதிப்பும் மரியாதையும் அதிகரித்தே செல்லுகின்றது. [/size]

[size=1]

[size=4] -- ஆரம்ப காலத்திலேயே தன்னை போராட்டத்தில் இணைத்தமை;[/size][/size][size=1]

[size=4] -- புலம்பெயர்ந்தும் அதே இலட்சியத்திற்காக இறுதிவரை உழைத்தமை; [/size][/size]

[size=1]

[size=4]இவை ஒரு சாதாணர மனிதரால் செய்யக்கூடிய காரியங்கள் அல்ல. [/size][/size]

[size=1]

[size=4]மீண்டும் ஒரு முறை என் சிரம் தாழ்த்திய[/size] [size=4]வீர வணக்கம் பரிதி அண்ணா! [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

பொது இடத்தில் இப்படிக் கத்துபவர்களும் இருக்கிறார்கள் என்பதை நினைக்க தலை விறைக்குது..

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதெல்லாம் சகஜம் குழு மோதல் காங், எடுங்கடா துவக்க, கத்திய, வாள, பொல்ல எண்டு கண்டவன் நிண்டவன் எல்லாம் வெளிநாட்டுக்கு வர வெளிக்கிட்டதால வந்த பிரச்னை

[size=5]வீரவணக்கம் பருதி அண்ணா.[/size]

Edited by சுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் நிகழ்த்தப்பட்ட இடத்தை வரையறுத்து ஒருவரையும் முதலில் உள்ளே செல்லமுடியாது தடுப்பது முதல் வேலை. அங்கே தடயவியல் விற்பன்னர்களைக் கொண்டு பௌதீக ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டியது இரண்டாவது வேலை..

காலதாமதமாக வந்து ஆதாரங்களைச் சேர்த்தால் நீதிமன்றங்கள் ஏற்காது. அவை கலப்படமற்றவை என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் போகும்.

ஃபிரான்ஸ் காவல்துறைக்கு இதிலெல்லாம் அக்கறையில்லை போல் தெரிகிறது..

உண்மை தான் இப்போலாம் வெளிநாட்டவர்கள் தங்களுக்குள் அடிபட்டால் எல்லாம் முடிந்தா பிறகு தான் வருகின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் நிகழ்த்தப்பட்ட இடத்தை வரையறுத்து ஒருவரையும் முதலில் உள்ளே செல்லமுடியாது தடுப்பது முதல் வேலை. அங்கே தடயவியல் விற்பன்னர்களைக் கொண்டு பௌதீக ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டியது இரண்டாவது வேலை..

காலதாமதமாக வந்து ஆதாரங்களைச் சேர்த்தால் நீதிமன்றங்கள் ஏற்காது. அவை கலப்படமற்றவை என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் போகும்.

ஃபிரான்ஸ் காவல்துறைக்கு இதிலெல்லாம் அக்கறையில்லை போல் தெரிகிறது..

உங்களது முதல்;கேள்விக்கே பதில் எழுதணும் என்று நினைத்தேன்.

மனநிலை தளும்பல் காரணமாக எழுதமுடியவில்லை.

[size=5]நேற்று 11/2 மணிவரை அவ்வீதி பூட்டப்பட்டு[/size]

[size=5]வாகனங்கள் மற்றும் மனித நடமாட்டம் தடைசெய்யப்பட்டு அவரது உடல் இருந்த இடம் மிக பாதுகாப்பாக பாதுகாக்கப்பட்டு விசாரணைகள் மற்றும் தடையங்கள் எடுக்கப்பட்டு 11/2 மணிக்கே அவரது பூதவுடல் அங்கிருந்து அகற்றப்பட்டு எமக்கு அதற்கு அருகில் போக இடம் தரப்பட்டது. அதுவரை ஒரு 25 மீற்றருக்கு அப்பால் தடைகள் மூலம் நாம் மறிக்கப்பட்டோம். எம்மை அவர்கள் அருகில் விட்ட பின்பே படங்களும் வீடியோக்களும் இரத்தத்தினால் உறுதிகளும் எடுக்கப்பட்டன. அதற்கும் சிறிது நேரத்தில் கழுவுவதற்கும் கூட்டுவதற்கும் வாகனங்கள் வந்து விட்டன. சிலர் எதிர்ப்புக்காட்டிய போதும் அங்கு நின்ற பெரியவர்களால் காவல்துறைக்கு ஒத்துழைக்கும்படி கேட்கப்பட்டு கலைந்து செல்ல முடிவெடுக்கப்பட்டது[/size].

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.