Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவஸ்த்தை.....

Featured Replies

itayam7wr.jpg

என்- இடத்தில்

என்னை இழந்தேன்

வாழ்வது நானல்ல

என்னினைவில்

நீ தான் இங்கு....!

களங்கமற்ற உன்

நினைவில்- கனவில்

நிழல்களுடன்....நிதமும்..

நிஜமாகுமா...........??

"அம்மா.......''

அலறிடத் துடித்தேன்

அழுதால் வாய் விட்டு.....

அயலில் இருந்து

அன்னியமாவேன்...!

மனதுள் விக்கி...முனகி...

முடியாமல்

கதவினை மூடி...

தாப்பாள் போட்டு

கட்டிலில் சாய்ந்து..

கண்களை மூடினால்......

''அம்மா.......''

அலறிடத்துடித்தேன்

அழுதால் வாய்விட்டு.......?

களங்க மற்ற-உன்

நினைவில்....கனவில்....

நிழல்களுடன்....நிதமும்....

நிஜமாகுமா...... :?: :?: :?:

cupid4gv.gif

களங்க மற்ற-உன்

நினைவில்....கனவில்....

நிழல்களுடன்....நிதமும்....

நிஜமாகுமா......

அந்த கனவுகளின் நிழல்கள் நிஐமானால் அதைப்போல் ஒரு சொர்க்கம் கிடைக்குமா பாலன்?

அழகான கவிதை. வாழ்த்துக்கள்.

அந்த கனவுகளின் நிழல் நிஜமாக வாழ்த்துக்கள். கவிதை நன்றாகவுள்ளது. வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

வாழ்த்துக்களிற்கு நன்றி ரமா, ரசிகை

களங்கமற்ற உன்

நினைவில்- கனவில்

நிழல்களுடன்....நிதமும்..

நிஜமாகுமா...........??

நல்ல வரிகள் பாலன் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

களங்கமற்ற உன்  

நினைவில்- கனவில்  

நிழல்களுடன்....நிதமும்..  

நிஜமாகுமா...........??  

நல்ல வரிகள் பாலன் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களிற்கு நன்றி

நல்ல பெண் ஏன் இப்படி ஓடுகின்றீர்கள் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழமைபோல் கவிதைக்கு எனது வாழ்த்துக்கள்.

குறுங்கவிகள் எழுதிவந்த கௌரிபாலன் (வழமையானவற்றைவிட சற்று நீளமாக) நெடுங்கவிகள் வடிக்கக் காரணம் என்னவோ?

நெடுங்கவி படைக்கும் மணிவாசகனைப்பார்த்து மனம் மாறிவிட்டதோ?

நன்றிகளும் பல.

  • தொடங்கியவர்

வழமைபோல் கவிதைக்கு எனது வாழ்த்துக்கள்.

குறுங்கவிகள் எழுதிவந்த கௌரிபாலன் (வழமையானவற்றைவிட சற்று நீளமாக) நெடுங்கவிகள் வடிக்கக் காரணம் என்னவோ?

நெடுங்கவி படைக்கும் மணிவாசகனைப்பார்த்து மனம் மாறிவிட்டதோ?

நன்றிகளும் பல.

ஆசிரியரே.. இதற்கு முதலும் இதுபோல் பல எழுதியிருக்கின்றேன்..அதற்கு தாங்கள் கருத்தும் சொல்லியிருக்கின்றீர்கள்...இப

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கௌரிபாலன்

பதிலுக்கு நன்றி.

விளக்கு, செலவு, தாக்கம், உன் வீரம் என்னிடமா? போன்ற கவிதைகளோடுதான் ஒப்பிட்டேன்.

மணிவாசகனின் கவிதைகளை அண்மைக்காலத்தில் அடிக்கடி படித்ததினாலும்தான் அப்படி எழுதினேன்.

கவிதைகளைப் படித்தவுடன் இருக்கும் மனநிலையில் கருத்துக்களை எழுதுவதால் எல்லாவற்றையும் திரும்பப்போய் பார்த்து எழுதமுடிவதில்லை.

நினைவுூட்டியமைக்கு மீண்டும் நன்றிகள் கௌரிபாலன்.

அண்மைக்கால நிகழ்வுகளால் மனம் அமைதியற்று இருக்கும்போது மனதிலே கவி ஊற்றெடுக்க சிரமப்படுகின்றது. இருப்பினும் நீங்கள் கேட்டபடியால் நான் முன்னர் 2000 இல் எழுதிய "இனிக்கும் நினைவலைகள்" என்கின்ற கவிதையை இன்றே இணைக்கிறேன்.

நன்றிகள் பல.

கவிதை நன்றாக உள்ளது பாலன்.... நல்லா எழுதுறீங்க தொடருந்து எழுத வாழ்த்துக்கள்...! :P

வாழ்த்துக்களிற்கு நன்றி

நல்ல பெண் ஏன் இப்படி ஓடுகின்றீர்கள் ?

அதுவா எனக்கு இப்படி ஓடிக்கொண்டிருந்தால் தான் நித்திரை வரும் 8)

அதுவா எனக்கு இப்படி ஓடிக்கொண்டிருந்தால் தான் நித்திரை வரும்

ஹே ஹே இது வித்யாசமா இல்லை..? ஓடிக்கொண்டே நித்திரை கொள்ளுவது.. :wink: :P

களங்கமற்ற உன்

நினைவில்- கனவில்

நிழல்களுடன்....நிதமும்..

நிஜமாகுமா...........??

அழகான வரிகள்..கனவுகள் நிஜமானால்..??இனிமையாக தான் இருக்கும்..என்ன அப்புறம் கனவு என்ற சொல்லுக்கு அர்த்தம் இருக்காதோ என்னவோ :roll:

அழகான கவி..உங்கள் மற்றைய கவிகளை நான் ஒரு தடவையில் வாசித்து விடுவேன்..இந்த கவிதையை..பல முறை வாசித்து தான் விளங்கினேன்..தப்பேதும் இல்லை..உங்கள் கவி நடை வித்தியாசம் என சொல்ல வந்தேன் :lol: தொடருங்கள் :arrow:

ஹே ஹே இது வித்யாசமா இல்லை..? ஓடிக்கொண்டே நித்திரை கொள்ளுவது.. :wink: :P

ம் அது தான் நல்லபெண் :lol:

  • தொடங்கியவர்

வாழ்த்துக்களிற்கு நன்றி அனிதா , ப்ரியசகி

பாராட்டுக்கள்!

வாழ்த்துக்கள்!

:P :P

கவிதை நன்றாயிருக்கிறது பாலன். தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்

மணிவாசகன்

  • தொடங்கியவர்

நன்றி தாரணி, மணிவாசகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.