Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளையும் ஐரோப்பிபயங்கரவாதப் பட்டியில் விடுதலைப் ய ஒன்றிய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெறும் மோதல்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைப் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதப் இயக்கமாக அறிவித்துள்ளது.

பெல்ஜியத்தின் புறுசெல்சில் வழக்கமாக நடைபெறுகின்ற சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி இவர்களின் விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் உறையில் நிலையில் வைக்கப்படும்.

இச்சொத்து முடக்க நடவடிக்கையானது புலிகளின் போர் முனைப்பை பாதிக்கும் என்றும் இவர்கள் ஐரோப்பாவிற்கான கடந்த கால பயணங்கள் யாவும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடமிருந்து பணம் திரட்டுவதற்காகப் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக, இத்தடையானது புலிகளின் முகத்தில் அறைந்த இராஜதந்திர அடியாகும். இவர்கள் தம்மை ஒரு அங்கீகரிக்கபடாத அரசின் ஆற்றல் மிக்க தலைவர்கள் என்ற தோற்றத்தை வெளிநாடுகளுக்குக் காட்ட முனைந்துள்ளனர்.

அமெரிக்கா, கனடா, பித்தானியா, என்பன விடுதலைப் புலிகளை ஏற்கனவே பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தியிருந்தன. கடந்த செப்ரெம்பரில் புலிகள் மீது ஐரோப்பிய பயணத் தடைவிதித்து, வன்முறையையும் பயங்கரவாதத்தையும் பயன்படுத்துவதற்கான தடையாகக் கருதப்படுவதாக தெரிவித்திருந்தது.

விடுதலைப் புலிகள் கடந்த மாதம், இரு தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலான சமாதானப் பேச்சுக்களை இடைநிறுத்தியிருந்தார்கள்.

pathivu

வெள்ளையன் தான் யார் என்பதை காட்டி விட்டான்.

நாலு வருடம் நாயாக அலைந்தோம் கிடைத்த பலன் இதுதான்.

சரி உறுதியாக அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவார் எங்கள் தலைவர். உறுதியாக கரம் பற்றி அவர் வழி நடப்போம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமைதி வழித்தீர்வுகள் இனி சாத்தியப்படாது. சும்மா ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் என நேரத்தை செலவழிப்பதை விட்டு ஆக்கபுூர்வமான நடவடிக்ககைகளில் ஈடுபடவேண்டும். பல்கட்சி சனநாயகம், மாற்றுக்கருத்து, தேர்தல் போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு களத்தில் நிற்பவர் கரங்களைப் பலப்படுத்துவோம்.

சிங்கள பேரினவாதிகளுக்கு இவை வெற்றியோ இல்லையோ.....தமிழினத்துரோகிகளுக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தடை யாரை பாதிக்கும்?

விடுதலைப்புலிகளது தளம் ஐரோப்பாவிலா இருக்கிறது?

அவர்களது தலைமைத்துவம் ஐரோப்பாவில இருக்கிறது?

மக்கள் நிதியுதவி செய்வது ஐரோப்பிய ஒன்றியத்திடம் அனுமதியேடுத்த பின்பா?

ஐரோப்பிய வாழ் மக்களே நீங்கள் தளராமல் இருங்கள், எம் தேசத்தின் மீதும் எம் தேசிய தலமை மீதும் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை இன்னும் அதிகமாகட்டும். இந்த பூச்சாண்டி காட்டும் விளையாட்டு எமது விடதலைப்போருக்கு மட்டும் கிடைத்ததல்ல, ஒவ்வொரு விடுதலைப்போருக்கும் மேற்குலம் விதைத்த சிக்கல் எதிர்பார்க்காத ஒன்று நடைபெற்றால் அதிர்ச்சியடையாலாம். ஆனால் எதிர்பரர்த்தது நடைபெற்றுள்ளது. அவர்கள் தங்கள் நாடுகளில் இருக்கும் ஆயிரக்கனக்கான மக்களை விட ஆசியாவின் ஓரத்திலிருந்து இரத்த வாடையோடு, பிணந்தின்னும் கழுகுகளில் கதையை கேட்கின்றனர் ஏனெனில் இனம் இனத்தை சேரும் என்பதால் தான் என்னவோ, தாயகத்திலே அடக்குமுறைாயளக் ஆயுதம் கொண்டு அடக்குகின்றான். இங்கே சட்டம் கொண்டு அடக்குகின்றான். இரு ஆட்சியாளர்களது கொள்கைகளும் ஒன்றே ஆனால், வடிவங்களும் பெயர்களும் மாற்றம் பெறுகின்றன. நாங்கள் இப்போது செய்ய வேண்டியது எங்கள் தேசியத்தை பலப்படுத்த வேண்டும். எமக்கு யுத்தம் நிறுத்த ஒரு உடன்படிக்கை வேண்டும் யுத்தம் செய்யவல்ல, இல்லையேனில், யுத்தம் செய்ய ஒரு அங்கீகாரம் தேவை, அது எந்த ஒரு நாட்டிடமிருந்துமல்ல, எங்களின் அங்கீகாரம் அதாவது புலம்பெயர்ந்து தாயகத்தில் வாழும் எங்களது அங்கீகாரம்

என்ன உறவுகளே சாவை கண்டு அஞ்சிவிட்டால்

சாதனை படைத்திட முடியாது

தடைகள் கண்டு துவண்டிட்டால்

தடைகள் உடைக்க முடியாது...

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளுக்கு ஆபத்து

புதுடில்லியில் சொல்ஹெய்ம் எச்சரிக்கை

விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் மீது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.

புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை செய்யும் நடவடிக்கையின் பின்னணியில் இலங்கை அரசாங்கம் செயற்படுவதால் இது குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லையென இந்தியத் தலைநகர் புதுடில்லியில் வைத்து சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கின்றார்.

வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபின் புதுடில்லியக்கு சென்ற எரிக் சொல்ஹெய்ம், சனிக்கிழமை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவுத்துறை இணைச் செயலாளர் மோகன் குமார் ஆகியோரைச் சந்தித்து இலங்கையின் நிலைவரத்தை விளக்கியுள்ளார்.

அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சொல்ஹெய்ம் தெரிவித்ததாவது;

இலங்கை நிலைவரம் மிகவும் ஆபத்தான திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளாத நிலையில், மேலும் அதிக வன்முறைகளும் மோதல்களும் வெடிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப் போனால், மீண்டும் போர் மூளும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றது.

அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல இரு தரப்பிலிருந்தும் எந்தவித சாதகமான அறிகுறியும் வரவில்லை. வட, கிழக்கில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் பீதியின் பிடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மோதல்களில் எந்த வகையிலும் தொடர்பில்லாத அப்பாவிப் பொதுமக்களும் தினசரி பலியாகி வருகின்றனர்.

அதனால், இரு தரப்பும் தங்கள் உறுதிமொழியைக் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். அரசுப் படைகள் மீதான கண்ணிவெடித் தாக்குதல்களை புலிகள் நிறுத்த வேண்டும். தற்கொலைத் தாக்குதல் உள்ளிட்ட மற்ற வன்முறைகளையும் கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து செயற்படும் தமிழ் ஆயுதக் குழுக்களின் (கருணா கோஷ்டி) தாக்குதல் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும். தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும். ஜெனீவா முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும்.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு, வன்முறை தொடர்பான அறிக்கையை வெளியிடவுள்ளது. அதில் இரு தரப்பினரும் எந்த அளவுக்கு வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியும்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை செய்யும் நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் இலங்கை அரசு செயற்படுவதால் இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், அப்படிப்பட்ட தடை இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் மீது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

கடல் எல்லையில் புலிகளுக்கு உரிமை உள்ளதா, இல்லையா என்ற பிரச்சினையிலும் நோர்வே தலையிட விரும்பவில்லை. போர் நிறுத்த உடன்படிக்கையின்போது இப் பிரச்சினை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படாமல் அப்படியே விடப்பட்டதால் இன்னும் அது தொடர்கிறது. புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணா, மற்ற கட்சிகளைப் போல தானும் தேசிய அரசியலில் ஈடுபட வேண்டும்.

புலிகள் இயக்கத்துடன் இந்தியா நேரடியாகத் தொடர்பில் இல்லாவிட்டாலும் இந்தியாவின் தகவல்களை புலிகளுக்கு நோர்வே தெரிவித்து வருகிறது. அதன்படி புலிகள் வன்முறையைக் கைவிட்டு, பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது என்றார் எரிக்சொல்ஹெய்ம்.

இலங்கையிலிருந்து பெருமளவில் அகதிகள் தமிழகத்துக்கு வருவது குறித்து எம்.கே.நாராயணனுடன் பேச்சு நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை விவகாரத்தில் இந்தியா பாரிய பங்களிப்பை வழங்க வேண்டுமெனவும் சொல்ஹெய்ம் வலியுறுத்தியிருக்கிறார்.

டோக்கியோவில் இணைத்தலைமை நாடுகளின் சந்திப்பு நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது. இந்தியா இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமா என்று சொல்ஹெய்மிடம் கேட்கப்பட்ட போது, பார்வையாளராக தனது பிரதிநிதியை இந்தியா இந்தத்தடவை அனுப்புமா என்பது பற்றி `எனக்குத் தெரியாது' என்று அவர் பதிலளித்திருக்கிறார்.

இலங்கை விவகாரத்தில் இந்தியா சார்பான பங்களிப்பை வழங்குமா என்று கேட்கப்பட்ட போது, எந்தவொரு ஆலோசனையையும் நான் வழங்கவில்லை. நோர்வேயிலும் பார்க்க இந்தியாவுக்கு அதிகளவில் நிலைமை பற்றித் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

-தினக்குரல்

தடைகளும் படிக்கற்களே!

இந்தியா தடை செய்தபோது கூட இனி விடுதலைப்புலிகள் நிமிர முடியாது என்று கூறினார்கள். புலிகள் பலமடங்கு பலத்துடன் எழவில்லையா? தலைமை மீது உண்மையான விசுவாசமும் தாய்நாட்டின் மீது பற்றுதியும் கொண்டவனை இந்ததடை ஒன்றும் செய்யாது. அவன் தனது கடமையைச் செய்வான். "கோம்பைத்தலை" மகிந்தவை ஜனாதிபதியாக தெரிவுசெய்தது நல்லதுக்குத்தான். ரணில் பின்னின வலையை தானே வெட்டுறார். இனி ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்கா, இந்தியாவைப்போல வெளியேதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈராக் மீது படையெடுக்க வேண்டாம் என்டு உலகில இருக்கிற மக்கள் எல்லாம் பேரணி நடத்தியும் அமெரிக்காவும் இங்கிலன்டும் படையெடுத்தவை தானே. முதல்ல இந்த 2 நாட்டையும் பயங்கரவாத பட்டியலில போட வேணும். உலகில இருக்கிற மக்களின்ர ஆர்ப்பாட்டத்துக்கு சரி வராத இவங்கள் தமிழர்களின்ர பேரணியளை பாத்து என்ன திருந்தவே போறாங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தடை செஞ்சது ஒரு விதத்தில நல்லது தான். இனி தலைவர் ஒரு நல்ல முடிவு எடுப்பார். சில தமிழ் "சனநா(ய்)வாதிகள்" வாயை மூடிக்கொண்டு இருக்கிற மாதிரி முடிவு வரும். புலி பதுங்கினது பாய்றதுக்கு என்டு அவையளுக்கும் தெரிய வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

தடைகள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புடம் போட்டிருக்கின்றன! இந்தியாவை நம்பிய காலம்போய் நாமே எம்மைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எமக்குள் வந்ததே, இந்திய ஆக்கிரமப்புப் படைகளின் செயல்களாலும், பின்னர் விதிக்கப்பட்ட தடைகளாலும் தான்! இதனால் தான் மரபுப் படையணிகள் முதற்கொண்டு தமிழீழக் கட்டுமானங்கள் வளர்ச்சியடைந்தன!

இப்போது சிலர் மேலைத்தேயர் தீர்வு தரக்கூடும் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள்! அவர்களுக்கு கிடைத்த பதில் இது தான். எனவே எம் உரிமைக்கு நாமே போராடுவது தான் சிறந்த வழி! அதை இப்போது செயலில் காட்ட வேண்டிய தருணம்!

இத் தடைகளில் இருந்து வெளியேறுவதற்கு பல ஓட்டைகள் உள்ளன! அவை காலத்தின் வெளிப்பாடுகளாக வெளிப்படும்.

முன்னரங்க நிலைகளுக்கு சென்று போராளிகளுடன் கலந்துரையாடிய மக்கள்

[செவ்வாய்க்கிழமை, 30 மே 2006, 18:58 ஈழம்] [யாழ். நிருபர்]

யாழ். வடமராட்சி கிழக்கு மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை நாகர்கோவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளுக்குச் சென்று போராளிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் இசையூரான் தலைமையில் வெற்றிலைக்கேணி, ஆழியவளை, கொடுக்குளாய், உடுத்துறை, வேம்படி, வத்திராயன், மருதங்கேணி, தாளையடி, செம்பியன்பற்று, மாமுனை, குடத்தனை, நாகர்கோவில் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் முன்னரங்க நிலைப் பகுதிகளுக்குச் சென்றனர்.

களமுனைத் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகளைச் சந்தித்த அவர்கள், போராளிகளுக்கு உலர் உணவுகளை வழங்கி கலந்துரையாடினர்.

போர் ஆரம்பித்தால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உறுதுணையாக நின்று உதவி வழங்குவோம் என்றும் அம் மக்கள் போராளிகளுக்கு வாக்குறுதி அளித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 19ம் திகதி ஈராக்கில் ஹடீத்தா என்ற பகுதியல் அமரிக்க இராணுவம் 2 வயது கை குழந்தை உட்பட 24 பேரை சுட்டக் கொன்றனர். இதை சரவதேச ஊடகங்கள் யாவும் வழமைபோல் மூடிமறைத்து விட்டது. அமரிக்க இராணுவமே கனகச்சிதமாக கதையை அமுக்கி விட்டார்கள். வழமையான பாணியில் பயங்கரவாதிளின் செயல் என புலடா விட்டு கதையை அன்றே புதைத்து விட்டதாக இருக்க. தற்போது உண்மை வெளிவர தொடங்கியுள்ளது. ஒரு கண்ணிவெடி தாக்குதலில் அமரிக்க வாகன் சிக்க, அதனை தொடரந்து அமிரிக்க இராணுவம் நடாததிய வெறியாட்டத்தில் ஒரே குடும்பத்தை சேரந்த பரல் கொல்லப்படட்டதுடன் 2 வயது குழந்தை உட்பட பல இளையவர்கள் இதில் மரணமானார்கள்.

இந்த கதைகள் போல பல நு}று கதைகளை வியட்நாம் முதல் ஈராக் வரை புரிந்த அமிர்க்காவும் அதன் சகாக்களும் அடக்கப்படும் சிறுபான்மை இனம் ஒன்று செவறு வழியின்றி தன் தற்காப்புக்காகவும் தன் இனத்தை தக்க வைக்கவும் ஒரு தற்காப்பு யுத்தத்தை நடாத்துவது பயங்கரவாதமாம்!

அமரிக்காவை விட இந்த உலகில் யார் பயங்கரவாதிகள் என்பதற்கு நான் மேலே கூறிய சம்பவம் ஒரு நல்ல உதாரணம்!

http://news.bbc.co.uk/1/hi/world/middle_ea...ast/5030960.stm

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றியத் தடை மூலம் புலிகளிடமிருந்து

புலம்பெயர்ந்த தமிழர்களை ஓரங்கட்டிவிட முடியாது!

நோக்கம் அதுவே என்றால் அது வரலாற்றுத் தவறாகவே முடியும் என்கிறார் பாலா

""ஐரோப்பிய நாடுகளில் வதியும் புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் அரசியல் ஆதர வையும், பொருளாதார உதவிகளையும் தடுத்து நிறுத்தி, எமது மக்களிடமிருந்து எமது விடுதலை இயக்கத்தை அந்நியப்படுத்தி, ஓரம் கட்டி விடலாம் என ஐரோப்பிய ஒன்றியம் கருதுமானால் அது மிகப்பெரிய வரலாற்றுத் தவறாகவே முடியும்.''

இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார் தமி ழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞரும், பேச்சுக் குழுத் தலைவருமான அன்ரன் பால சிங்கம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித் திருப்பது குறித்துக் கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

ஐரோப்பிய ஒன்றியத்தின் நியாயமற்ற பக்கச் சார்பான தீர்மானத்தால் ஒருபுறம் வேதனையும், மறுபுறம் சினமும் அடைந் திருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் புலிகள் இயக்கத்துக்கும் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படும் தேச சுதந்திரப் போராட்டத் துக்கும் மேலும் தீவிரமான ஆதரவையும், பொருளாதார உதவிகளையும் அள்ளி வழங்கி, இத்தடையின் உள்ளார்ந்த நோக்கத்தை முறி யடிப்பார்கள் என்பது திண்ணம்.

எதிரியின் விசமத்தனமான பரப்புரைக ளால் குழப்பமடைந்து எமது விடுதலைப் போராட்டத்தின் தர்மத்தையும், நியாயத்தை யும் புரியத் தவறியமையால் ஐரோப்பிய ஒன் றியம் இந்தத் தவறான முடிவை எடுத்திருக் கின்றது.

இதனால் சமாதான வழியிலான முயற்சி களுக்குப் பங்கம் ஏற்படக் கூடும். ஆனால், எமது சுதந்திரப் போராட்டம் அதன் இலட்சியப் பாதையில் எந்த சவால்களையும் எதிர் கொண்டு முன்னேறிச் செல்லும் என்பது உறுதி.

எமது நீண்ட நெருக்கடியான போராட்ட வரலாற்றுப் பாதையில் எத்தனையோ சோத னைகளுக்கு முகம் கொடுத்து வெற்றி கண்ட எமது விடுதலை இயக்கம் இந்த இராஜரீக அழுத்தத்தினால் ஆட்டம் கண்டுவிடாது.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங் கரவாதப் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், புலி களுக்கு எதிரான தடை வரும் என்பது எதிர் பார்க்கப்பட்டது தான். ஐரோப்பிய அமைச் சரவைக் கவுன்ஸிலினால் அது அங்கீகரிக்கப் பட்டதை அடுத்து அந்தத் தடை நேற்று (திங்கள்) முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அவ்வளவே.

ஆகவே, இந்த அறிவிப்புத் தமிழீழ விடு தலைப் புலிகள் இயக்கத்தை ஆச்சரியத்துக் குள் ஆழ்த்தவில்லை. ஆனாலும் அது கவலை யளிப்பது; அதிருப்தி தருவதுதான்.

தவிர்க்கமுடியாத இந்தத் தடை எதிர்பார்க் கப்பட்ட சமயத்திலேயே, ஐரோப்பிய ஒன்றி யத்தின் தண்டனை விதிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை ஏற்படுத்தக்கூடிய எதிர் மறைவான விளைவுகள் குறித்து நான் கருத்துக் கூறிவந்துள்ளேன்.

ஐரோப்பிய ஒன்றியத் தடை நீதியற்றது; பொருத்தமற்ற சமயத்தில் வந்திருக்கின்றது என்பதே எமது கருத்து. அத்தோடு அது ஒரு தலைப்பட்சமானது; இலங்கை அரசு சார்பா னது.

விடுதலைப்புலிகள் யுத்த நிறுத்தத்திலி ருந்தோ, அமைதி முயற்சிகளிலிருந்தோ விலகி ஒதுங்காமல் இருக்கும் சமயத்தில்

தொடரும் வன்முறைகளுக்காக இருதரப் பின்மீதுமே குற்றம் சுமத்தப்படும் சூழ்நிலை யில்

ஒரு பக்கத்துக்கு மட்டும் எதிராக புலிகள் மீது மாத்திரம் தண்டனை விதிக்கும் வகை யில் இத்தகைய நடவடிக்கையை எடுப்பது இராஜதந்திர ரீதியில் தவறானது; பொருத்த மற்ற நேரத்தில் எடுக்கும் முடிவாகும்.

தமிழ் மக்களின் உயிர்களையும் உடை மைகளையும் பாதுகாக்க வேண்டிய தனது பொறுப்புகளிலி ருந்து இலங்கை அரசு தவறி, தவறிழைத்து வருகையில், மற்றைய தரப்பை மட்டும் தண்டிக்கும் வகையிலான இந்தத் தீர்மானம் இவ்வளவு அவசரப்பட்டு ஏன் எடுக்கப்பட்டது என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத் தடை அமைதி முயற்சிகளில் தமிழ்ப் புலிகளுக்கு உள்ள சமதரப்பு என்ற அந்தஸ்தைப் பாதிக்கும். இது, அந்த முயற்சிகளில் தமிழர் தரப்பின் பேரம் பேசும் வலுவை அடியோடு குறைக்கும்.

அதேசமயம், இலங்கை அரசின் கைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தடை மேலும் வலுப்படுத்தும். ஐரோப்பிய ஒன்றியத் தடை, ராஜபக்ஷ அரசு தமிழர்களுக்கு எதிராக தீவிர இராணுவ நடவடிக்கை நிலைப்பாட்டைக் கைக்கொள்ள ஊக்குவிக்கும். அது இறுதி யில் மோசமான இனப்போர் வெடிக்க வழி சமைக்கும் என்றார் பாலசிங்கம்.

எதிர்வரும் 8, 9ஆம் திகதிகளில் ஒஸ் லோவில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட் டுள்ள கூட்டத்தில் புலிகள் பங்குபற்றுவதை இந்தத் தடை பாதிக்குமா என்று கேட்டதற்கு, பாலா கூறிய பதில் வருமாறு:

தடை வந்தாலும் ஒஸ்லோ பேச்சுகளில் புலிகள் இயக்கம் பங்குபற்றும் என்றே நான் நினைக்கின்றேன்.

இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பாதுகாப்பு, பந்தோபஸ்து, செயற் பாடு மற்றும் அமைதி பேணும் நடவடிக்கை யின் பல்வேறு அம்சங்கள் பற்றி ஆராய்வதற் கான கூட்டமே ஒஸ்லோ சந்திப்பு என்பதால் ஜெனீவாப் பேச்சிலிருந்து அது முற்றிலும் வேறுபட்டது.

கண்காணிப்புக் குழுவில் சுவீடன், டென் மார்க், பின்லாந்து நாட்டு அங்கத்தவர்களின் பங்கு, பணி பற்றிய விடயமும் ஒஸ்லோ சந்திப்பில் ஆராயப்படவுள்ளது.

அத்தோடு நோர்வே அரசின் சார்பில் அமைச்சர் எரிக் சொல்ஹெய்மினால் கூட்டப் பட்டிருக்கும் கூட்டமே இது.

இந்தக்கூட்டம் தொடர்பான நோர்வே யின் அழைப்புக்கு இலங்கை அரசு இன்னும் பதிலளிக்கவில்லை. அத்தோடு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் ஊடாக இந்தக் கூட்டத்துக்குப் புலிகளின் பிரதிநிதிகள் செல் வதற்குரிய பாதுகாப்பான பயணத்துக்கும் இலங்கை அரசு இன்னும் உறுதி தரவில்லை.

தற்போதைய நிலையில் நான் லண்ட னில் மருத்துவ சிகிச்சைக்கு உள்ளாகிவருவ தால் ஒஸ்லோ கூட்டத்துக்குச் செல்லக்கூடிய உடல் நிலையில் நான் இல்லை. என்றார் பாலசிங்கம்.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

பங்குச் சந்தையில் சடுதிச் சரிவு!

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப் பிய ஒன்றியம் தடைசெய்த செய்தி வெளி வந்ததையடுத்து கொழும்பு பங்குச் சந்தை நேற்று திடீர் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.

நேற்றுமுன்தினம் 20.64 புள்ளிகளாக இருந்த அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண் நேற்று 6.87 புள்ளிகளாக சடுதியாக வீழ்ச்சிய டைந்தது. வங்கித்துறை முதலீடு நேற்றைய தினம் பெரும் பின்னடைவைக் கண்டதாக கொழும்பு பங்குச் சந்தை வட்டாரங்கள் கூறின.

புலிகளை, ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்ததையடுத்து நாட்டில் மீண்டும் ஒரு போர் மூளக்கூடிய அச்சம் உருவாகியிருப்பதே இந்தப் பின்னடைவுக்குக் காரணமென கொழும்பு பங்குச் சந்தைத் தரகரொருவர் கூறினார்.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை தகர்ந்தது!

பல தரப்பிலும் கூறப்பட்டபடி தமிழீழ விடுதலைப் புலி கள் இயக்கத்துக்கு எதிராகத் தடையை விதிப்பதற்கு ஐரோப் பிய ஒன்றியம் தீர்மானித்து விட்டது.

இலங்கைப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரு தரப்புகளாலும் இலங்கை அரசு மற்றும் தமிழர்களால் வெளிப் படுத்தப்படும் விவாதங்களில் உள்ள நியாயப்பாடுகளை கவனத்தில் எடுக்காமல் ஒரு தலைப்பட்சமாக அதேநேரம் அவசரப்பட்டு இந்த முடிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வந்திருப்பதாகவே தமிழர் தரப்பு கருதுகிறது.

தமிழர் தரப்புக்குப் பெரும் கவலையையும் விசனத் தையும் தரும் இந்த நடவடிக்கை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண் டும். அந்தக் கடமையும், பொறுப்பும் அதற்கு உண்டு.

இலங்கைத் தீவில் இலங்கை அரசுக்கும், தமிழீழ விடு தலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் செய்யப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னும் விலகி அதை முறித்துக் கொள்ளவில்லை. இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காணும் முயற்சிகளி லிருந்து புலிகள் முற்றாக விலகிக்கொள்ளவுமில்லை. தற் போதைய அரசுடன் ஆரம்பிக்கப்பட்ட ஜெனீவா அமைதிப் பேச்சுகளில் தொடர்ந்து பங்குபற்றமாட்டோம் என்ற முடி வுக்கும் புலிகள் வந்துவிடவில்லை.

சமாதானப் பேச்சுக்கான புறநிலையை உருவாக்கி, முதல் சுற்று ஜெனீவாப் பேச்சில் காணப்பட்ட இணக்கங்களை முழு அளவில் நடைமுறைப்படுத்தி, சமாதான முயற்சிகளை அர்த்தமுள்ளதாக்குங்கள், அப்போதுதான் அமைதி எத் தனங் களைத் தொடர முடியும் என்றுதானே புலிகள் வற்புறுத்தி னார்கள்.......?

ஆனால், அமைதிப் பேச்சுக்கான புறச்சூழலைக் குழப்புவதைத் தவிர்த்து, அதற்கு இசைவான சூழ்நிலையை உரு வாக்குங்கள் என்று இலங்கை அரசுத் தரப்புக்கு அழுத்தம் போட வேண்டிய ஐரோப்பிய ஒன்றியம் அதை விடுத்து, விடுதலைப் போராட்ட அமைப்பான புலிகளைத் தடை செய்து ஒரு பக்கச் சார்பாகச் செயற்பட்டதன் மூலம் நிலைமையை மேலும் மோசமடைய வைத்திருக்கின்றது.

களத்தில் தமிழர் தாயகத்தில் வன்முறைகள், உயிர்ப் படுகொலைகள் அதிகரித்துச் செல்கின்றன. இதற்குப் பரஸ் பரம் இரு தரப்புகளின் மீதும் மாறி மாறி குற்றங்கள் சுமத்தப் படுகின்றன. பழிக்குப் பழி என்ற ரீதியில் படுகொலைகள், தாக்குதல்கள் விரிந்து செல்கின்றன. வன்முறைச் சம்பவங் களுக்கு இரு தரப்பு மீதுமே பரவலாகப் பொறுப்புச் சுமத்தப் படுகின்றது.

இந்த வன்முறைகளுக்கு ஒரு புறம் புலிகள் மீது குற்றம் சுமத்தப்படும் அதே வேளையில், அவற்றுக்குச் சூத்திரதா ரிகள் அரச புலனாய்வுத் துறையின் வழிகாட்டலில் இயங் கும் ஒட்டுப் படைகளே எனப் புலிகள் குற்றம் சுமத்துகின் றனர். புலிகளின் இந்தக் குற்றச்சாட்டை இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு உட்பட பல சர்வதேச அமைப் புகள் உண்மையானது என ஒப்புக் கொள்கின்றன.

தவறிழைத்து வரும் இலங்கை அரசுத் தரப்பைக் கண்டிக்காமல், தமிழர் தரப்பைக் கண்டிப்பதுபோல ஐரோப்பிய ஒன் றியம் தடைவிதித்திருக்கின்றது. அதனால், அது ஒரு தலைப்பட்சமானதாகின்றது. இலங்கை விவகாரத்தில் நாம் முன்னரே இப்பத்தியில் சுட்டிக் காட்டியிருப்பதுபோல "ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மறு கண் ணில் சுண்ணாம்பும்' தடவுவது போன்று பாரபட்சமாக நடந்துகொண்டிருக்கின் றது ஐரோப்பிய ஒன்றியம் என்பதே தமிழர்கள் தரப்பின் ஏகோபித்த கருத்தாகும்.

அமெரிக்க வல்லாதிக்கம் மற்றும் அதன் கூட்டு ஏவல் தரப்பான பிரிட்டன் போன்றவற்றின் அழுத்தம் தரும் இராஜ தந்திரத்துக்கு அடி பணிந்து சுயத்தை விட்டுக் கொடுத்து ஐரோப்பிய ஒன்றியம் செயற்பட்டிருக்கின்றது.

ஈழத் தமிழ் மக்களின் தேசியப் போராட்டத்தை இழிவுபடுத்தும் விதத்தில்

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட சக்தியான தமி ழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அவமானப்படுத்தும் வகையில்

அடக்குமுறையில் ஈடுபட்டு, வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டு தமிழர் தரப்பை சிறுமைப்படுத்தும் தென்னி லங்கைச் சிங்களத்தைக் கைகொடுத்துத் தூக்கிவிடும் போக் கில்

இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருக்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்.

தற்போதைய சமாதான முயற்சிகள் இனிமேலும் ஆக்க பூர்வமான திசையில் நகர்வதற்கு இந்த முடிவு உதவப் போவதில்லை.

தவிரவும், தங்களது நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்ய வேண்டி, நீதி கேட்டு ஈழத் தமிழர்கள் நடத்தும் போராட்டத்துக்கு நியாயத் தீர்வு பெற்றுத் தந்து சர்வதேச சமூகம் தங்களுக்கு உதவும் என்ற ஈழத் தமிழரின் எதிர்பார்ப்பை நம்பிக்கையை ஐரோப்பிய ஒன்றித்தின் இந்த நடவடிக்கை ஒரேயடியாகத் தகர்த்து விட்டது.

ஒரு தலைப்பட்சமாக அவசர அவசரமாக முன்னெ டுக்கப்பட்ட நம்பிக்கையைத் தகர்க்கின்ற இந்த நடவடிக் கையின் விளைவுகள் விபரீதங்களாக அமையலாம். போகப் போகத்தான் அவற்றின் ஆழமும், தாக்கமும் வெளிப்பட்டுப் புரியவரும்.

-உதயன்

±ÁìÌ ¾Á¢Æ£Æõ ¸¢¨¼ì¸§ÅñΦÁýÚ ÀÄý þÕ󾡸

þùÅ¡È¡É ¾¨¼¸û ÅóÐ ²¾¡ÅÐ ´Õ Ũ¸Â¢ø §ÀîÍÅ¡÷ò¨¾ ÌÆõÀ¢§Â§À¡Ìõ.

¦Á¡ò¾ò¾¢ø Á†¢ó¾¡¨Å ¦ÅøÄ ¨Åò¾¾ý §¿¡ì¸õ

¿¢¨È§ÅȢŢð¼Ð §À¡ø þÕ츢ÈÐ.

எத்தனையோ இலட்சம் யூதர்களை கொல்வதற்கு உடந்தையாக இருந்த ஐரோப்பிய நாடுகள் பிறகு எங்களுக்காகவா உதவி செய்யப்போகிறார்கள்.?

யூதர்கள் போல் சொந்த தாய்நிலம் அமைத்தால் மாத்திரமே நாங்கள் எங்களை பாதுகாக்கலாம். :oops:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தடை புலிகளை அடிபணிய வைக்காது

அவர்களின் கடும் போக்குக்கே வழிவகுக்கும்

இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு உறுதி

விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஐரோப் பிய ஒன்றியத்தின் தடை அவர்களை அடி பணிய வைப்பதற்குப் பதில், அதற்கு எதிரான அவர்களின் கடும் போக்கை சர்வதேச சமூ கத்துக்கு எடுத்துக் காட்டுவதற்கே வழிவகுத் திருக்கிறது என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் டாக்டர் விக்கிரமபாகு கருணாரத் தின, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

""விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஐரோப் பிய ஒன்றியத்தின் தடை, சமாதான முன்னெ டுப்புகளுக்கு எதுவிதத்திலும் உதவமாட் டாது. இந்தத் தடை சர்வதேச சமூகத்திட மிருந்து விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்தப் போகிறது என்று மஹிந்த ராஜபக்ஷவின் அரசு ஒருபுறம் ஆர்ப்பரிக்கலாம்.

விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு வரவழைப்பதற்கு அரசின் இந்த முயற்சி தூண்டுகோலாக இருக்கிறது என்று மறுபுறம் கூறி மகிழலாம்.

ஐ.தே.கட்சியும் ஐரோப்பிய ஒன்றியத் தின் இந்தத் தடையை வரவேற்றுப் பாராட்டி யிருக்கிறது.

ஆனால், உண்மையில் எதிர்விளைவுகளையே ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தடை தரப் போகிறது. அதாவது, இந்தத் தடைகள் மூலம் தங்களை அடி பணிய வைக்க முடியாது என்ற தமது கடும் போக்கைப் புலி கள் இன்னும் மேலும் பலமாக சர்வதேச சமூ கத்துக்கு வெளிக்காட்டு வதற்கான சந்தர்ப்ப மாக அமையப் போகின்றது. இந்தத் தடை பேரினவாத சிங்களவரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று, சமாதானமாகவும், சுய உரிமையோடும் நாட்டில் வாழ்வதற்கு தமி ழர்கள் நடத்தும் சுயாட்சிப் போராட்டங்களுக்கு மேற்கத்திய சுதந்திர ஜனநாயக நாடு கள் உதவும் என்று விடுதலைப் புலிகளுக்கு இருந்து வந்த நம்பிக்கையையும் துறப்பதற் கான சந்தர்ப்பமாகவுமே இது புலிகளுக்கு அமைந்திருக்கிறது.

எனவே, விடுதலைப் புலிகள், தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற் கான ஆதரவைத் தேடுவதற்கு பரந்து பட்ட உலகின் கண்ணே விசேடமாக இந்திய உப கண்டத்திலுள்ள இடதுசாரி சக்திகளைப் பார்க்க வேண்டிய, நாட வேண்டிய அருந் தருண மும் இதுவேயாகும். இங்கே முக்கியமாக முதலில் செய்ய வேண்டியது இலங்கை அர சின் இரட்டை வேடத்தை, அந்த கபடத் தனத்தை அம்பலப்படுத்த வேண்டும்.

தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றைக் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் பிரசாரம் செய்துகொண்டு, அதே நேரம் ஒற்றையாட்சி அமைப்பு முறையை அழுங்குப் பிடியாகப் பிடித்துக் கொண்டு இராணுவ நடவடிக்கைக்குத் தயாராவதுமே அரசின் அந்த இரட்டை வேடக் கபட நாடகமாகும். என்று உள்ளது.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறைகள் அதிகரிப்புக்கு புலிகள் மட்டும் காரணமல்ல

-தடைப்பிரகடனத்தில் சுட்டிக் காட்டுகிறது ஐரோப்பிய ஒன்றியம்; அரச கட்டுப்பாட்டுப் பகுதி வன்செயல்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம்பெறும் வன்செயல்களைக் கட்டுப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கிறது.

அதேசமயம், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் அதிகரித்து வருவதையிட்டும் கவலை தெரிவித்திருப்பதுடன் இந்த விடயம் குறித்து கவனத்திற்கெடுத்திருப்பதாகவ

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடை நாட்டை மீண்டும் பேரழிவிற்குள் இழுத்துச் செல்லும்

-தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. ஈழவேந்தன்

விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை விதிப்பானது இந்த நாட்டை மீண்டும் பேரழிவிற்குள் இட்டுச் செல்வதாகவே அமையப்போகின்றது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மா.கா. ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு அடிபணிந்து ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீது தடை விதிப்பதனால் தமிழர் விடுதலைப் பயணத்தைத் தடைசெய்யலாம் அல்லது முறியடிக்கலாம் என்று கருதுமாயின் அவர்கள் தம் கனவுலகில் வாழ்வதற்கு நாம் தடையில்லை. எந்தவொரு நாட்டின் விடுதலையும் கேட்கக் கிடைக்கின்ற பொருளாக விளங்கியதில்லை.

தமிழீழ விடுதலையை எந்த சிங்கள அரசும் வெள்ளித்தட்டத்தில் வைத்துத் தரப்போவதில்லை. மாறாக நாம் எம் விடுதலையைப் பெறுவது என்பது மிக வில்லங்கமான காரியந்தான். நாம் எதிர்க்காவிட்டால் அழிந்தே போய்விடுவோம்.

சிங்கள இனமோ சிங்கள ஆட்சிபீடமோ எமது உரிமையை நாம் கேட்கத் தரப்போவதில்லை. வெறிகொண்ட சிங்கள இனத்திடம் அறவழிப்போராட்டம் எடுபடாது. எனவே தான் ஆயுதம் தாங்கி எம் இனத்தைக் காப்பாற்ற நாம் களத்தில் குதித்துள்ளோம் என்று எம் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியுள்ள கருத்து வரலாற்றில் பதியப்பட வேண்டிய வைரம் வாய்ந்த வரிகள்.

25 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் சிங்கள அரசின் பயங்கரவாதத்தை மருந்தளவும் கவனத்தில் கொள்ளாது அரசு பயங்கரவாத அட்டகாசத்தை நியாயப்படுத்த முயல்வது எம் இனம் எல்லா மட்டத்திலும் பூண்டோடு அழிக்கப்படுவதற்குத் துணை நிற்கின்றது. அரசின் அட்டகாசத்தைப் பற்றி எத்தகைய கேள்வியையும் கேட்காத ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளோடு சீண்டுவதிலும் எம்மை சீற்றம் கொள்ளச் செய்வதிலும் தனி இன்பம் காண்கிறது.

நவாலித் தேவாலயம் உட்பட மற்றைய வழிபாட்டு நிலையங்களிலும் வழிபடச்சென்ற பக்தர்கள், குழந்தைகள் கோயிலின் உள்ளேயே குண்டுவீசிப் பொசுக்கப்பட்டதை நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். மறைந்த வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கிறிஸ்தவராய் இருந்த போதும் தம் முன்னோரின் மானிப்பாய் மண்ணில் நவாலியூர் தேவாலயத்தில் நடந்த கொடுமைகளை மூடிமறைக்க முனைந்ததையும் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

15 நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் உரிமைக்குரல் நிகழ்வு தாயகத்தின் அவலங்களை எடுத்துக்காட்டிய போதும் இத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 15 நாடுகளில் மட்டுமல்ல இலங்கையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை அந்நாட்டு அரசு நிறுத்த வேண்டும் என்றும் இதற்காக அமெரிக்க அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்காவில் உள்ள 15 தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை அரசு விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கியதற்கு அடிப்படைக் காரணமே விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு சட்ட அடிப்படையில் ஒப்புதல் வழங்கினால் தான் நாம் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என விடுதலைப்புலிகள் விதித்த நிபந்தனையை ஏற்றுத்தானே விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை இலங்கை அரசால் நீக்கப்பட்டது.

இலங்கை அரசு விடுதலைப்புலிகள் மீது எல்லை மீறிய அச்சம் காரணமாக தடை விதிக்க அஞ்சி மற்றைய நாடுகளைக் கொண்டு குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் துணையோடு தடைவிதிப்பதனால் இலங்கை அரசு ஈட்டப்போகின்ற வெற்றி என்ன? இதுவரை உலகை ஏமாற்றிய சிங்கள அரசு தம்மைத் தாமே ஏமாற்றுவதில் தாங்கொணா மகிழ்ச்சி அடைகின்றது.

கருணா குழுவினரை, ஈ.பி.டி.பி.யினரை அரசு கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்று இலங்கைக்கு உதவி வழங்கவிருக்கும் இணைத்தலைமை நாடுகள் எடுத்துரைத்துள்ளன. ஒட்டுப்படைகளை அகற்றுவதற்கு ஷ்ரீலங்கா அரசு இசைதல் வேண்டும் என்பது தான் சென்ற பெப்ரவரி 22 இல் நடைபெற்ற ஜெனீவா மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு. இவ் ஒட்டுப்படை அகற்றப்பட்ட நிலையில் தான் சென்ற ஏப்ரல் 19 ஆம் திகதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள படைமுகாம்களை அகற்றல், மக்களை இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவரச் செய்தல் போன்றவை ஆராயப்படவிருந்தன. ஆனால், பெப்ரவரி 22 தொடங்கி ஏப்ரல் 7 ஆம் திகதி வரை விடுதலைப்புலிகள் எத்தகைய தாக்குதல்களையும் நடாத்தவில்லை. மாறாக நாட்டை அமைதிப்பூங்காவாக மாற்ற உண்மையாக உழைத்தது.

ஆனால், பெப்ரவரி 7 ஆம் திகதி தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்படவிருந்த திருமலைத் தமிழர் பேரவையின் தலைவர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன் அவர் பணிபுரிந்த இலங்கை வங்கியின் வாயிலில் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஈவிரக்கமற்ற நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்துத்தான் திருமலை எரிமலையாகியது.

எதிலும் பொறுமை காக்கும் பொறுமையின் பிறப்பிடமாகவும் வீரத்தின் விளை நிலமாகவும் விளங்குகின்ற விடுதலைப்புலிகள் மீது வீண்பழியைச் சுமத்தி விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதிக்க உலக நாடுகளும் சிங்கள அரசும் ஆம் ஓத நாம் எவரும் விரும்பாத விளைவுகள் இத்தீவில் ஏற்படப்போகிறது. இவ்விளைவிற்கு ஐரோப்பிய ஒன்றியமும் ஷ்ரீலங்கா அரசுமே பொறுப்பேற்க வேண்டும். கடும்போக்காளர்களை உயர் பதவிகளுக்கு நியமித்துள்ள குடியரசுத் தலைவர் கடும் போக்காளர்களின் போக்கிற்கு தான் பொறுப்பில்லை என அவர் தட்டிக்கழிப்பாராயின் உலகம் அவர் போக்கைக் கண்டு எள்ளி நகையாடுவது உறுதி.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு அமைய எரிமலையாகியுள்ள திருமலையில் ஒரு முன்னாள் படைத்தளபதியை அரச முகவராகத் திருமலையில் நியமிக்க இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகவே மாறப்போவது உறுதி. வரலாற்றுக் காலத்திற்கு முன்பேயே திருமலை தமிழர் மண் என்பது உலகம் ஒப்புக்கொண்டுள்ள மறக்க முடியாத உண்மை. இதை மாற்றியமைக்கின்ற முறையில் திருமலையில் அடுத்தடுத்து சிங்களவர்களை அரச அதிபர்களாக நியமித்துள்ள சிங்கள அரசு இப்பொழுது முன்னாள் படைத்தளபதியை அரச முகவராக்க முனைகின்றது.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையும் தமிழ் கட்சிகளின் விசனமும்

யுத்தத்தின் விளிம்பில் இலங்கை இருப்பதாகவும் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் தத்தமது கடப்பாடுகளை நிறைவேற்றி போரைத் தவிர்க்க வேண்டுமென்றும், உதவி வழங்கும் இணைத் தலைமைகள் வலியுறுத்தி நீண்டதொரு அறிக்கையை கூட்டாக வெளியிட்டிருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, அமெரிக்கா, ஜப்பான் ஆகியவையே இந்த இணைத் தலைமையில் இடம்பெறும் நாடுகளாகும். அதேசமயம், 25 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளும் அறிவிப்பை இணைத் தலைமைகளின் மாநாடு டோக்கியோவில் இடம்பெற்ற தினத்திலேயே வெளியிட்டிருக்கிறது.

தமிழ் மக்களின் நியாய பூர்வமான துன்பங்களுக்குத் தீர்வு காணப்படவில்லை. அவர்களுக்குப் போதிய பாதுகாப்பை அரசாங்கம் வழங்கத் தவறி விட்டது. சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் விதத்திலான ஆட்சி முறைமை தற்போது இல்லை என்பன போன்ற பல்வேறு விடயங்களை உதவி வழங்கும் இணைத் தலைமைகள் தெளிவாக அறிந்தும் உணர்த்தும் இருப்பதை அவர்களின் கூட்டறிக்கை வெளிப்படுத்துகின்றது. ஆனால், அதே சமயம், இந்த இணைத் தலைமைகளில் மிகவும் பாரியதொரு அமைப்பாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் தேசியப் பிரச்சினையில் சமபங்காளிகளில் ஒன்றாக தங்களது தரப்பாலேயே அங்கீகரிக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளை தடை செய்யும் தீர்மானத்தை அறிவித்திருப்பது ஐரோப்பிய கூட்டமைப்பின் நன்மதிப்பில் பாரிய கறையை ஏற்படுத்தும் விடயமாகும்.

யுத்தத்திற்கு செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை எடுங்கள் என்று கூறும் ஐரோப்பிய ஒன்றியம் அதற்குறிய உதவி ஒத்தாசைகளை வழங்குவதாகக் கூறிக் கொண்டு மறுபுறம் விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்திருப்பதை தமிழ் மக்கள் கவலையுடனும் சந்தேகத்துடனும் பார்க்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தடை அறிவிப்பு பக்கச் சார்பான நடவடிக்கையென இலங்கையிலுள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தமிழ் கட்சிகளுமே கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கின்றன.

1983 ஜூலை கலவரத்தைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் தஞ்சமடைந்தனர். தமது தாயகத்தில் போதிய பாதுகாப்புடன் வாழ முடியாதெனக் கருதியே அவர்களில் பெரும்பாலானோர் சொல்லொணா நெருக்கடிக்குள் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் ஏனைய உலக நாடுகளிலும் தஞ்சமடைந்தனர்.

நீண்ட யுத்தத்தின் பின்னர் சர்வதேச சமூகத்தின் நெருக்குதலும் உள்நாட்டு பொருளாதார நிலைமையும் 2002 பெப்ரவரியில் இரு தரப்பினருக்குமிடையே யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த வழி வகுத்தது. அந்த யுத்த நிறுத்தம் இன்று வரை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. யுத்த நிறுத்த உடன்படிக்கையில் பற்றுறுதி கொண்டிருப்பதாக இரு தரப்பினருமே அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், அதனை செவ்வனே அமுல்படுத்தி நெருக்கடியில் பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தமிழ் மக்களுக்கு அவர்களின் நியாய பூர்வ அபிலாஷைகளை, வாழ்வுரிமையை நிறைவேற்றும் அரசியல் தீர்வை காண வேண்டும் என்ற ஆலோசனைகளையும் அழுத்தத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச சமூகம் வழங்க வேண்டும்.

பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினர் மீதும் நீங்கள் இதனை செய்யவில்லை. இந்தக் கடப்பாட்டை நிறைவேற்றவில்லை. இதற்கு நீங்களே காரண கர்த்தாக்கள் என்று சுட்டுவிரல் நீட்டுகிறது இணைத் தலைமை. ஆனால், அதே சமயம், இணைத் தலைமையின் பிரதான அங்கமாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தரப்பை மாத்திரம் பட்டியலிடுவது எவ்விதத்தில் நியாயம்? என்பதே தமிழ்க் கட்சிகள் தொடுத்திருக்கும் கேள்வியும், தமிழ் மக்கள் மத்தியிலான விசனமுமாகும்.

விரும்பியோ விரும்பாமலோ இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினை இன்று சர்வதேச மயமாகிவிட்டது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் நேர்மையுடனும் நீதியுடனும் செயற்படுவதே அவசியம்.

பிரிட்டிஷாரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் அரச இயந்திரத்தை பெரும்பான்மை என்ற எண்ணிக்கைப் பலத்தால் தம்வசம் வைத்திருப்போரால் சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக, தமிழ் மக்களின் உரிமைகள் அபகரிக்கப்பட்டிருப்பதும் கல்வி, வேலைவாய்ப்பு உட்பட சகல விடயங்களிலுமே புறக்கணிக்கப்பட்டதும் ஓரம் கட்டப்படுவதும் அறியாத, தெரியாத விடயமல்ல.

கடந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே தமிழ் மக்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக கருத பெரும்பான்மை சமூகம் தலைப்பட்டதென்பதற்கு தேசிய காங்கிரஸிலிருந்து சேர் பொன்.அருணாசலத்தின் வெளியேற்றம் முன்னுதாரணமாகும்.

சேர் பொன்.அருணாசலத்தின் வெளியேற்றத்திற்கு காரணமாக இருந்த சம்பவம் குறித்து ஜனாதிபதியின் தந்தையார் டி.ஏ.ராஜபக்ஷவின் நினைவு பேருரையில் முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் சாம் விஜயசிங்க மன வேதனையுடன் சுட்டிக் காட்டியிருந்தார்.

சுதந்திரத்திற்குப் பின்னர், தமிழ் மக்களின் நியாய பூர்வ உரிமைகளுக்காக அகிம்சை வழியில் தந்தை செல்வநாயகம் உட்பட தமிழ்த் தலைவர்கள் நடத்திய போராட்டம் தற்போது ஆயுதப் போராட்டமாக பரிணாமித்திருக்கின்றது என்பதை ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச சமூகத்திற்கு தெளிவாக எடுத்துக் கூறியும், புலிகள் அமைப்பை தடை செய்திருப்பது பக்கச்சார்பான நடவடிக்கையென்று வட, கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் மலையக தமிழ்க் கட்சிகளும் வன்மையாகக் கண்டித்திருக்கின்றன.

உலகின் பொலிஸ்காரனாக தன்னை சுயமாகப் பிரகடனப்படுத்தி செயற்படும் அமெரிக்காவின் அழுத்தமே ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது தடை விதிக்க முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இது உலக வரலாற்றில் இடம்பெறப் போகும் பாரிய தவறென தமிழ்க் கட்சிகள் சுட்டிக் காட்டுகின்றன.

வட, கிழக்கில் படுகொலைகள், காணாமல் போதல், அகதிகள் இடம் பெயர்வு என்பன அன்றாட நிகழ்வாகிவிட்ட அவல நிலையை தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் தருணத்தில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருக்கும் தடை சரியானதா என்ற கேள்வியையே தமிழ் மக்களும் தமிழ்த் தலைவர்களும் எழுப்புகின்றனர்.

ஐரோப்பாக் கண்டத்திடன் 25 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் `சமன் செய்து சீர்தூக்கும் கோலாக' செயற்பட வேண்டும். ஆனால், செயற்படவில்லையென்பதே தமிழ் மக்கள் மத்தியிலான கவலையாகும்.

-தினக்குரல்

ஐரோப்பிய ஒன்றியத் தடையால் புலிகள் இலக்கை தடுக்க முடியாது: இந்திய கட்டுரையாளர் எம்.ஆர்.நாரயணசுவாமி

[வெள்ளிக்கிழமை, 2 யூன் 2006, 16:35 ஈழம்] [ச.விமலராஜா]

ஐரோப்பிய ஒன்றியத் தடை மற்றும் இணைத் தலைமை நாடுகளினது எச்சரிக்கைகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்கை தடுக்க முடியாது என்று இந்திய கட்டுரையாளர் எம்.ஆர்.நாரயணசுவாமி கூறியுள்ளார்.

இனையத்தளம் ஒன்றில் வெளியான அவரது கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஐரோப்பிய ஒன்றியத் தடையையும் இணைத் தலைமை நாடுகளினது எச்சரிக்கையாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக சிறிலங்கா மகிழ்வாகக் கொண்டாடலாம். ஆனால் இவர்கள் எவராலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது இலக்கான தமிழீழ அரசு என்பதை அடைவதை தடுகக் முடியாது.

வரலாற்று ரீதியாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எதுவித அழுத்தங்களுக்கும் இணங்காதவர்.

"எந்த ஒரு அந்நிய சக்தியும் எமது மக்களை ஆதிக்கம் செலுத்தவோ தலையிடவோ அனுமதிக்க மாட்டோம்" என்று பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரன் கூறியிருந்தார்.

இன்றைய சூழ்நிலையில் இந்தியா, நோர்வே, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இது பொருந்தும்.

இந்தியாவும் அமெரிக்காவும் விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கமாக முத்திரை குத்தியபோதும் விடுதலைப் புலிகள் எதனையும் விட்டுக்கொடுக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையும் அப்படியானதே.

பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் பிரபாகரன் இருந்தபோது, இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதை இந்தியா நிறுத்திவிட்டால் என்ன செய்வீர்கள் எனக் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த பிரபாகரன், "இந்தியாவின் அனுதாபம் என்பது எங்களுக்கு தார்மீக ரீதியாக ஊக்கம் அளிக்கக்கூடியது. இந்தியா ஆதரவளிக்கவில்லை என்பதற்காக எமது விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்துவிடாது. இந்தியாவின் ஆதரவுடனோ அல்லது வேறு எந்த ஒரு அந்நிய சக்திகளினது ஆதரவுடனோ நாம் எமது விடுதலைப் போராட்டத்தை நாம் தொடங்கவில்லை. நாங்கள் சாகும்வரை போராடுவோம். நான் இறந்து போனால் மற்றொருவர் அப்பொறுப்பை ஏற்பார். எமது தலைமுறையில் எமது விடுதலையை வென்றெடுக்காது போனால் எமது அடுத்த தலைமுறையும் இதே போராட்டத்தைத் தொடரும்" என்றார்.

இவ்வாறு அந்த செய்தியில் எம்.ஆர். நாராயணசுவாமி குறிப்பிட்டுள்ளார்.

*************************

www.puthinam.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கி லுக் வாசிக்க வேண்டிய கட்டுரை:-)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.