Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Civil war in Sri Lanka???!!!

Featured Replies

வெளிநாட்டு ஊடகங்கள் இலங்கைத்தீவில் நடந்த யுத்தத்தை Civil war என்றே குறிப்பிட்டு வருகின்றன. இங்கே ஜேர்மனியிலும் Buergerkrieg என்கின்ற சொல்லை பயன்படுத்துவார்கள்.

இரண்டு தேசியங்களுக்குள் நடக்கின்ற யுத்தத்தை அல்லது மூன்றாந் தரப்பால் இணைக்கப்பட்ட ஒரு நாட்டிடம் இருந்து விடுதலை கோரி ஒரு நாடு நடத்துகின்ற போராட்டத்தை இப்படி அழைக்க முடியாது என்பது என்னுடைய புரிதல்.

இதை சுட்டிக் காட்டிய பொழுது பல ஜேர்மனிய மக்களே அதனை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு தமிழர்களால் ஜேர்மன் மொழியில் வெளியிடப்பட்டிருந்த ஒரு துண்டுப் பிரசுரத்தில் இந்த சொல் இருந்ததை சுட்டிக் காட்டிய பொழுது அது சரியே என்று ஒரு தமிழர் வாதிட்டார்.

இது பற்றி கள உறவுகளின் கருத்து என்ன என்பதை அறிய விரும்புகிறேன்.

ஐ.நா மட்டத்தில் போர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் இரண்டு இராணுவம் மோதியதாகத்தான் இன்னும் நடைமுறையில் வைத்துக்கொள்கிறார்கள்.

உள்நாட்டுக்குள் நடக்கும் இரு நாடுகளுக்கிடையிலான யுத்தம் ..................

ceylon = eelam +srilanka

eelam Vs srilanka

இதை சுட்டிக் காட்டிய பொழுது பல ஜேர்மனிய மக்களே அதனை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு தமிழர்களால் ஜேர்மன் மொழியில் வெளியிடப்பட்டிருந்த ஒரு துண்டுப் பிரசுரத்தில் இந்த சொல் இருந்ததை சுட்டிக் காட்டிய பொழுது அது சரியே என்று ஒரு தமிழர் வாதிட்டார்.

[size=4]அவரது வாதம் சரி. [/size]

[size=5]A civil war is a war between organized groups within the same nation state or republic,[1] or, less commonly, between two countries created from a formerly united nation state.[2] The aim of one side may be to take control of the country or a region, to achieve independence for a region, or to change government policies.[1] The term is a calque of the Latin bellum civile which was used to refer to the various civil wars of the Roman Republic in the 1st century BC.[/size]

http://en.wikipedia.org/wiki/Civil_war

Edited by akootha

  • தொடங்கியவர்

அகூதா,

அப்படியென்றால் சிங்களவர்களும் நாங்களும் same nation state என்று சொல்கிறீர்களா?

  • தொடங்கியவர்

civil war என்பதை வரலாற்று ரீதியில் நாம் பார்க்கின்ற பொழுது, அது உள்நாட்டு மக்களுக்கு இடையில் நடைபெற்ற யுத்தங்களை குறிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் 1860களில் நடந்த வடக்கிற்கும் தெற்குக்கும் இடையிலான யுத்தம் அல்லது ஐரோப்பாவில் மன்னராட்சி ஆதரவாளர்களுக்கும் மக்களாட்சி ஆதரவாளர்களுக்கும் நடந்த யுத்தங்கள் போன்றனவையே குறிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

பின்பு தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கிய நாடுகளும் அந்த மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட யுத்தத்திற்கும் இந்த சொல்லை பயன்படுத்தின. இதன் மூலம் இது ஒரு உள்நாட்டுப் பிரச்சனை எனக் காட்ட முற்பட்டன.

இதன் அடிப்படையில் இந்த சொல் சரியாக என்று நாம் ஆராய வேண்டும்.

அகூதா,

அப்படியென்றால் சிங்களவர்களும் நாங்களும் same nation state என்று சொல்கிறீர்களா?

[size=4]இலங்கை ஒரு பல்லின நாடு. [/size]

[size=4]இலங்கை ஒரு பல்லின நாடு. [/size]

இலங்கையின் இருப்பை தமிழர் அங்கீகரிக்க வேண்டும். அங்கீகரிக்க மறுத்ததுதான் வட்டுக்கோடை தீர்மானம். நாங்கள் அங்கீகரித்து சேர்ந்திருந்தால் இலங்கை முழுமையான நாடு . நாம் எமது வட்டுக்கோடை தீர்மானத்தின் சுயநிர்ணய உரிமையை பாவிக்க முயன்றதுதான் விடுதலைப்போர். வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின் தமிழீழ எல்லைகள் இருப்புக்கு வந்துவிட்டன.

உள்நாட்டு போராக இருக்கும், தமிழர் 1948 FEB 4 யை ஏற்றுக்கொண்டால். பொன்னம் பலம் தனது எதிர்ப்பை சட்டப்படி தெரிவித்து, தமிழர் இலனகைக்குள் இருக்க வேண்டுமாயின் 50-50 கேட்டிருந்தார். அவரது கோரிக்கை நிறை வேற்றப்படாதபடியால் இலங்கைக்குள் தமிழர் ஒருநாளும் செல்லவில்லை.

  • தொடங்கியவர்

இலங்கை ஒரு பல்லினநாடு என்று கருதுபவர்களுக்கு இந்தப் பதம் சரியான ஒன்றே.

ஆனால் நாம் ஒரு தனியான நாட்டின் குடிமக்கள், எமது நாடு தமிழீழம், எமது தாயகம் தனியான அரசை அல்லது அரசுகளை பல ஆயிரம் ஆண்டுகளாக கொண்டிருந்தது, அந்த அரசு இன்னொரு தரப்பால் வேறொரு நாட்டுடன் இணைக்கப்பட்டது, நாம் அந்த நாட்டிடம் இருந்த எமது நாட்டை விடுவிக்கின்ற சுதந்திரப் போராட்டத்தை நடத்துகின்றோம் என்று நம்புபவர்களுக்கும் இந்தச் சொல் சரியாக அமையுமா?

இது பற்றி நான் சற்று விரிவாக ஆராயவும் விவாதிக்கவும் விரும்புகிறேன்.

சிறிலங்காக் கடவுச் சீட்டின் மீதான பற்று, சிறிலங்கா கிரிக்கட் அணியை சொந்த அணியாக கருதுவது, எம்மை சிறிலங்கன்ஸ் என்று அறிமுகப்படுத்தவது என்று நிறைய விடயங்களை சேர்த்து இதில் நாம் பேச முடியும்.

[size=4]சிவில் யுத்தம் என்பது ஒரு நாட்டு எல்லைகள் வரையறுக்கப்பட்ட நிலையில் அந்த எல்லைகளுக்குள் நடக்கும் யுத்தம் என கொள்ளலாம். இலங்கையில் இரு இனங்களுக்கு இடையில் நடந்தது. அமெரிக்காவில் ஒரு சமூகத்த்திற்குள்ளேயே நடந்தது. [/size]

[size=1]

[size=4]அதேவேளை முன்னாள் யுகொசிலாவியாவிற்கும் உள்ளே நடந்தது சிவில் யுத்தம். அங்கே பல்லின சமூகங்கள் இருந்தன. இறுதியில் பல நாடுகளாக அவை பிரிந்தன. [/size][/size]

  • தொடங்கியவர்

சரி, இன்னொரு விதமாகக் கேட்கிறேன்.

அடக்குமுறைக்கு எதிராக ஒரு தேசிய இனத்தால் நடத்தப்படுகின்ற ஒரு சுதந்திரப் போராட்டத்தை நாம் சிவில் யுத்தம் என்று அழைக்கலாமா?

  • தொடங்கியவர்

பல்லின நாடு, சிவில் யுத்தம் போன்றவைகளை அதிகாரத்தில் இருப்பவர்களே பயன்படுத்துகிறார்கள். யூலையில் நடந்த இனப் படுகொலையை "இனக் கலவரம்" என்று கூட அவர்கள் சொன்னார்கள்.

அடக்கப்படுகின்ற நாங்களும் இந்தச் சொற்களை அப்படியே காவிக் கொண்டு திரிகிறோம். இதன் உள் அர்த்தங்கள் பற்றி நாம் விரிவான விவாதங்களை செய்ய வேண்டும்.

Edited by சபேசன்

[size=4]

சரி, இன்னொரு விதமாகக் கேட்கிறேன்.

அடக்குமுறைக்கு எதிராக ஒரு தேசிய இனத்தால் நடத்தப்படுகின்ற ஒரு சுதந்திரப் போராட்டத்தை நாம் சிவில் யுத்தம் என்று அழைக்கலாமா?

ஆம் என்றே கருதுகின்றேன். உதாரணம் கோசவா. அவர்களின் ஆயுத போராட்டமும் 'பயங்கரவாதம்' என சித்தரிக்கப்பட்ட 'சிவில் யுத்தம்'. தனி நாடு கேட்டு போராடிய சிவில் யுத்தம், பின்னர் மேற்குலகால் அங்கீகரிக்கப்பட்ட குழுவாக மாறியது. [/size]

[size=1]

[size=4]அதேவேளை ஜே.வி.பி. போராட்டமும் (கடாபிக்கு எதிரான இலிபியா போன்றது) "சிவில் யுத்தம்". ஆனால் அது நாட்டின் தலைமைக்கு எதிரான சிவில் யுத்தம். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அவரது வாதம் சரி. [/size]

[size=5]A civil war is a war between organized groups within the same nation state or republic,[1] or, less commonly, between two countries created from a formerly united nation state.[2] The aim of one side may be to take control of the country or a region, to achieve independence for a region, or to change government policies.[1] The term is a calque of the Latin bellum civile which was used to refer to the various civil wars of the Roman Republic in the 1st century BC.[/size]

http://en.wikipedia.org/wiki/Civil_war

இந்த விளக்கத்தை வாசித்தபிறகு Civil War என்று சொல்லக்கூடாது என்று தோன்றுகிறது. :unsure: இந்த விளக்கத்தின்படி,

1) ஒரே தேசிய இனத்தினுள் ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதக் குழுக்களினுள் சண்டை (கடாஃபியும், புரட்சிப்படையும் போல.)

2) குடியரசினுள் சண்டை (ஜேவிபி, சிங்கள‌ அரசு சண்டைபோல)

3) அல்லது முன்பு ஒரே தேசிய இனத்தைக் கொண்ட நாடாக இருந்து பின்னர் பிரிந்த இருநாடுகளிடையே சண்டை. (வடகொரியா, தென்கொரியா போல.)

இதில் எதுவும் நமக்கு சரிவராதே..??!! :huh:

இலங்கை ஒரு பல்லினநாடு என்று கருதுபவர்களுக்கு இந்தப் பதம் சரியான ஒன்றே.

ஆனால் நாம் ஒரு தனியான நாட்டின் குடிமக்கள், எமது நாடு தமிழீழம்,

இரண்டு தனியான தேசிய இனங்கள் என்றதுக்கும் இரு வேறு தேசங்கள் என்பதற்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கு. தமிழர்கள் பிரிந்து போய் வாழக்கூடிய அனைத்து தகுதிகளையும் கொண்ட ஒரு தேசிய இனம். தமக்கென வரலாற்று ரீதியான நிலத் தொடர்ச்சி கொண்ட தாயகமும், மொழியும், கலாச்சாரமும் கொண்ட ஒரு தேசிய இனம். ஆனால் தனியான நாட்டின் குடிமக்கள் அல்ல. எமக்கான தேசிய இனத்துக்குரிய தகுதிகளைக் கொண்டு கொண்டு பிரிந்து போய் வாழ்வதன் மூலமே தன் அவ் அடையாளங்களைப் பேணிப்பாதுக்காத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் இனம்.

சிவில் யுத்தம் என்பதே சரியானது.

முன்பு வெள்ளைகளுடன் கதைக்கும் பொழுது இதே சந்தேகத்தைக் கேட்டுள்ளார்கள்.

Separatist conflicts என்று வர வேண்டுமா?

Separatism is the advocacy of a state of cultural, ethnic, tribal, religious, racial, governmental or gender separation from the larger group. While it often refers to full political secession,[size="2"][1][/size] separatist groups may seek nothing more than greater autonomy.[size="2"][2][/size] Some groups refer to their organizing as independence, self-determination, partition or decolonization movements instead of, or in addition to, autonomist, separatist or secession movements.[size="2"][citation needed][/size] While some critics may equate separatism and religious segregation, racial segregation or sexual segregation, separatists argue that separation by choice is not the same as government-enforced segregation and may serve useful purposes

http://en.wikipedia.org/wiki/Separatism

  • தொடங்கியவர்

Separatist conflicts என்பது பிரிவினை யுத்தத்தை குறிக்கும். நாங்கள் பிரிவினைவாதிகள் இல்லை. எமது நாட்டையே நாம் மீண்டும் கேட்கிறோம் என்கின்ற கருத்தின் அடிப்படையில் இது தவறான சொல்லாகவே அமையும்.

ஒரு யுத்தம் நடக்கின்ற பொழுது அது பற்றி ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு பார்வையை கொண்டிருக்கும்.

ஆள்பவனுக்கு அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர். அல்லது கலகத்தை அடக்கும் நடவடிக்கை

அடக்கப்படுபவனுக்கு அது விடுதலைப் போராட்டம்

அதில் சம்பந்தப்படாமல் வெளியில் நிற்பவனுக்கு அது ஒரு நாட்டில் வாழும் மக்களுக்கு இடையில் நடக்கும் சண்டை, அதாவது சிவில் யுத்தம்.

இந்த சிவில் யுத்தம் என்கின்ற பதத்தை மூன்றாம் தரப்போ அல்லது ஆள்பவர்களோ பயன்படுத்துவதில் உள்ள யுக்தியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் விடுதலைப் போராட்டத்தை நடத்துகின்ற ஒரு இனமும் இந்தப் பதத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பதைத்தான் எனக்கு புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

கொசொவொவில் நடந்தவைக்கும், எமது தேசத்தில் நடந்தவைக்கும் ஒற்றுமைகள் உள்ளன. அந்த வகையில் அணுகினால் ஒன்று தெளிவாகிறது. அங்கே நடந்ததை கொசொவோ போர் என்று அழைக்கிறார்கள்.

எங்கள் ஆயுதப் போராட்டத்தையும் ஈழப் போர் 1, 2 என்று புலிகள் குறித்ததையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம். :rolleyes:

[size=4]ஸ்பெயின் நாட்டின் கற்றலினா பிரதேசம் 'சிவில் யுத்தம்' இல்லாமலேயே பிரியும் சாத்தியங்கள் உள்ளன. இப்படி மேலும் பல ஐரோப்பிய நாடுகளில் பிரிவினை வரலாம். [/size]

அமெரிக்காவில் ஒரு சமூகத்த்திற்குள்ளேயே நடந்தது.

அமெரிக்காவில் நடந்தற்கும் எமக்கும் பாரிய ஒரு வேற்றுமை இருக்கு. அமெரிக்காவில் முதலில் 13 மாநிலங்கள் ஒரு உடனபடிக்கை செய்து அதன் கீழ் ஒன்றாயின. இது பரஸ்பர நன்மைகருதி செய்யப்பட்ட உடன்படிக்கை. அரசியல் அமைப்பு பின்னர் இந்த மானிலங்களில் இருந்து ஜனநாயமுறைகளால் தெரியபட்டவர்களால் ஆக்கப்பட்டது. இலங்கையின் எந்த அரசியல் அமைப்பிலும் தமிழர் பங்கெடுக்கவில்லை. இதை கூட்டணி வட்டுக்கோட்டை மகாநாட்டுக்கு முன்னர் தெளிவாக விளக்கியிருந்தது. யூகோசிலவாக்கியா ஒரு யூனியனாக இருந்தது.

எமது நாட்டை, போத்துகீசர், ஒல்லாந்தர், பிருத்தானியர்,சிங்களவர் என்று பிடித்தார்கள். நாம், போத்துக்கீசர் ஒல்லாந்தரிடம், எந்த போரில் தோற்ற பின்னர், என்ன உடன்படிக்கையின் படி யாழ்ப்பாணத்தையோ, மட்டக்களைப்பையோ கையளித்தர்கள் என்பதை பற்றி இதுவரையில் கவலைப் பட்டது கிடையாது. ஆனால் போத்துக்கீசரும் ஒல்லாந்தரும் செய்து கொண்ட்ட உடன்படிக்கையில் எமக்கு பந்கு தரவில்லை. அரசு எமது கையிற்கு வந்து மாற்றப்படவில்லை. இதே நிலைமே பிருத்தானியர் ஒல்லாந்தருடன் செய்த்துகொண்ட ஒப்பந்தத்தின் போதும் நடந்தது. , இதுவே சிங்களவரிடம் ஆட்சி கையளிக்கபடும் போதும் நடந்தது. சோல்பரி அரசியல் அமைப்பின் கீழ் இலங்கை சுதந்திரம் அடைய தமிழ் கட்சிகள் கையெழுத்திடவில்லை.

அமெரிக்காவில் ஒரு Unionலிருந்து சில மாநிலங்கள் பிரிய முற்பட்டன. இலங்கையில் தமிழரையும் சிங்களவரையும் உள்ளடக்கிய அரசியல் அமைப்பு ஒருபோதும் இருக்கவில்லை.

Edited by மல்லையூரான்

[size=4]மல்லையூரான்,[/size][size=1]

[size=4]உண்மை. நன்றிகள்.[/size][/size]

[size=1]

[size=4]நான் கூற வந்த விடயம் அந்த சண்டையையும் 'சிவில்' யுத்தம் எனவே அழைத்தனர் என்பதை சுட்டிக்காட்டவே. [/size][/size]

  • தொடங்கியவர்

சிவில் யுத்தம் என்பதற்கு பெரும்பாலும் அமெரிக்காவில் நடந்த குறிப்பிட்ட யுத்தமே பல இடங்களில் உதாரணம் காட்டப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கொண்டு வந்த அடிமை முறை ஒழிப்பு போன்ற சீர்திருத்தச் சட்டங்களை பிடிக்காமல் தெற்கில் அமைந்திருந்த அமெரிக்க மாநிலங்கள் ஒன்றாய் இணைந்து தனிநாடாக பிரிய முடிவெடுத்தன.

இதையடுத்து போர் மூண்டது.

தெற்கு மாநிலங்களை பொறுத்தவரை அந்த யுத்தத்தை ஒரு சுதந்திரப் போராட்டமாகவே பார்த்தன. ஆனால் வடமாநிலங்கள் போரில் வென்றன.

அமெரிக்கர்களுக்கு இடையில் நடந்த உள்நாட்டுச் சண்டை என்பதால் இது உலகிற்கு "சிவில் யுத்தம்" என்றே அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு அமெரிக்கனின் பார்வையில் அது சரியானதும் கூட.

அதே போன்று இலங்கைத் தீவில் நடப்பது சிவில் யுத்தம் என்று சொன்னால், அதன் அர்த்தம் "சிறிலங்கன்களுக்கு இடையில் யுத்தம் நடக்கிறது" என்பதே.

சிறிலங்கன்களின் பார்வையில் அது சரியாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

யோக்கரின் ethnic conflict தான் சரிபோல இருக்கு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.