Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் முதல் செயற்கைக்கோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோளால்...

இந்தியாவுக்கோ, சிங்குக்கோ, யோனியாவுக்கோ... எந்த ஆபத்தும்... ஏற்படாது...

என்று... ஜூரோ... கமிட்டித் தலவர் உறுதியாக... தலையில், சத்தியம் அடித்து சொல்கிறார்.

செய்மதியை அனுப்புவதற்கு 4200 கோடி ரூபா செலவீடு

By General

2012-11-24 10:00:37

வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள விதவைப் பெண்கள் செல்லொனா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் குறித்த புனர்வாழ்வுசெயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை எனினும் அரசாங்கம் செய்மதிக்காக வணிகக் கடனாக பெறப்பட்ட 4200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

http://www.virakesar...al.php?vid=1796

அந்த மனிசன் றோகித செல்லப் பிள்ளை, கடைக்குட்டியின்ரை கனவை நிறை வேற்ற ஒரு சின்ன விளையாடு சாமான் வங்கி கொடுத்தால் என்ன?

புலியல் அடிச்ச காசை எல்ஸ்ம் வைச்சு வியாபரம் செய்யினம். வன்னிக்கு அனுப்பினால் என்ன? இந்த சிங்கள அரசியல்வாதிக்கு புலம்பெயர் தமிழர் இருக்கிறது தெரியாதோ?

அந்த பொம்பிள்ளையளுக்கு தானே தொழில் செய்ய சட்டம் வருகுது. அதுக்கும் மேலை என்ன வேணுமாம்? :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]முதல் செய்மதியை அனுப்ப 4ஆயிரத்து 200 கோடி ரூபா செலவு செய்தது இலங்கை[/size]

b132034d65453695a96c28b919f158fa.jpg

இலங்கை சுப்ரீம்செட்- 1என்ற தனது முதல் செய்திமதியை விண்ணுக்கு அனுப்புவதற்காக 4ஆயிரத்து 200 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இலங்கை இந்த நிதியினை சீனாவிடம் இருந்து முற்று முழுதாக கடன் அடிப்படையில் பெற்றே இந்த செய்மதியினை செய்துள்ளது.

இதேவேளை, உலகில் செய்மதியை அனுப்பும் நாடுகளில் 45 ஆவது நாடாக இலங்கை இருப்பதுடன் தெற்காசியாவில் 3 ஆவது நாடாகவும் பெருமைப் பட்டுக் கொள்கின்றது.

எனினும் இது விண்ணுக்கு எவப்பட்டிருந்த நிலையில் காலநிலை சீரற்று இருப்பதாலும் , இயந்திரக் கோளாறினாலும் ஏவப்படுவதில் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அரசாங்கம் செய்மதிக்காக சீனாவிடம் 4200 கோடி கடன் வேண்டிய விடயத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.onlineuthayan.com/News_More.php?id=548331640924221388

காலில் (கடலில்) முத்துமாலை துறைமுக வியூகத்தை அமைத்த சீனா களுத்தில்(ஆகாயத்தில்) பூமாலை வியூகத்தை அமைத்திருக்கிறது. முத்து மாலையில் முன் பக்கத்தில் முத்துக்கள் இருக்கும் பின் பக்கத்தில் வெறும் நூலிழை இருக்கும். ஆனல் மலர் மாலையில் முழுவட்டமாக எங்கும் பூக்கள் இருக்கும். இதுதான் சீனா செய்மதிகளால் இந்தியா மீது தொடுத்திருக்கும் மாலை. இதுவரை தெற்கில் இல்லாத தொலைத்தொடர்பை இலங்கையிடம் பணம் வாங்கி தனக்கு செய்து முடித்திருக்கிறது.

இது முழுமையாக இயங்க இன்னும் பல உதிரிப்பாகங்களை 2015 வரையும் சீனா விண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதனால் இலங்கையில் ஒரு தீர்வு வர முன் எல்லாவற்றையும் செய்துவிட அவசரப்பட்டு ஆயத்தம் இல்லாத செய்மதியை அனுப்ப முயன்றுவிட்டது.

இந்தியாவுக்கு சில கஸ்டங்கள் இருக்கும். ஆனால் சீனா இதில் இலக்கு வைத்தது அமெரிக்காவை. இனி அமெரிக்கா இலங்கைக்கு பக்கத்தில் Coastguards யை வைத்திருந்தால் அது சீனாவுக்கு தெரியும்.

இனி இலங்கை முழுவதாக அமெரிக்கா பக்கம் திரும்பினால் மட்டுமே சீனாவுக்கு ஆபத்து. அப்படியாயின் அமெரிக்கா செய்மதியைபற்றி படிக்க முயலும். ஆனால் இது UNP ஆட்சிக்கு வந்தாலும் நடக்கக்கூடியதில்லை. இலங்கையில் இனி யார் பதவிக்கு வந்தாலும் இலங்கை முழுவதாக மேற்குநாடுகள் சார்பாகாது.

பிருத்தானியர் ஆட்சியில் சிறிய அளவில் இருந்த இடதுசாரிகள் தான் இன்று இலங்கையை ஆள்கிறார்கள். இதில் பழைய கொள்கைவாத இடதுசாரிகள் அழிந்ததை கணக்கில் எடுக்க வேண்டியதில்லை. அவர்களின் அழிவு மிகசாதாரணமாகா தென் கிழக்காசியா எங்கும் காணப்படும் ஊழல், இலங்கையில் சற்று மிகையாக காணப்படுவத்தால் மட்டுமே. உண்மை நிலைமை, இலங்கையில் மக்களின் ஆதரவை பெற வேண்டுமாயின் 1. தமிழர் எதிர்ப்பு, 2. சோசலிசம் என்ற இரண்டும் பேசுவதுதான் அழகு. எனவே UNP பதவிக்கு வந்தால் கண்ணை மூடிக்கொண்டு சீனா எதிர்ப்பில் இறங்கப் போவதில்லை.

அமெரிக்காவுக்கு கிடைக்கத்தக்கது, ஈழத்தை பிரித்துத்விட்டால், தான் அதன் மேல் இன்னொரு செய்மதியை ஏவ முடியும். இது சீனாவினதை இல்லாமல் செய்யாவிட்டாலும் சீனாவுடன் சரிசமப்பட முடியும்.

மேலும் இது சீனாவுக்கு ஏற்ற முடிவாகவும் இருக்கப் போகிறது. ஏன் எனில் இலங்கையோ அல்லது சீனாவோ விரும்பும் படி, மேற்கு நாடுகள் இலங்கையில் தமது தோல்வியால் உடனே வாலை சுருட்டிக்கொண்டு ஒதுங்கி விடும் என்று எதிர்பார்ப்பது இலகுவில் நடந்தேறாது. அவை இலங்கையில் பாகப் பிரிவினைக்கு தொடர்ந்து கங்கணம் கட்டிக்கொண்டுதான் நிற்கும். இதனால் UNP வந்தால் பாரிய பாகத்தை சீனா மேற்குநாடுகளுக்கு இழக்க வேண்டி வரும். இதை சீனா தடுக்க வேண்டுமாயின் தமிழ் ஈழத்தை பிரித்து விட வேண்டும். அப்படியாயின் அதன் பின் மேற்குநாடுகள் இலங்கையில் பங்கிற்கு தொடர்ந்தும் அடிபடப்போவதில்லை.

விரைவில் தமிழ் ஈழம் பிரிவது அமெரிக்கா, சீனா இரண்டுக்கும் ஏற்றதொன்றாகும். இவை இந்தியாவை இறுதியில் அதை ஏற்றுக்கொள்ளவைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் முதலாவது செய்மதியில் தேசியக்கொடியை பறக்கவிடுவதற்கு அனுமதி மறுப்பு!

[sunday, 2012-11-25 09:43:31]

சீனாவில் இருந்து ஏவப்படவுள்ளதாக கூறப்படும் இலங்கையின் முதலாவது செய்மதியான சுப்ரீம் சட் 1 இல், இலங்கையின் தேசியக்கொடி பறக்கவிடப்பட வேண்டும் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சும், தேசிய தொடர்பாடல் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவும் கோரிக்கை விடுத்திருந்தன. இந்தக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா? என்று நேற்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் றுவன் விஜயவர்த்தன இந்தக்கேள்வியை எழுப்பினார். இலங்கையர் என்ற ரீதியில் செய்மதி ஒன்று அனுப்பப்படுவதை தாம் வரவேற்பதாக குறிப்பிட்ட அவர் எனினும் அது அனுப்பப்படும் விதம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தநிலையில் இலங்கையின் தேசியக் கொடியை குறித்த செய்மதியில் பறக்கவிட அனுமதி கிடைக்கவில்லை என்று தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை இலங்கையின் தனியார் நிறுவனமான சுப்ரீம் சட், குறித்த செய்மதியில் இருந்து தொடர்புகளை பெற்றுக்கொள்ள 350 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவிருந்ததாகவும் விஜயவர்த்தன தகவல் வெளியிட்டார்.

http://seithy.com/breifNews.php?newsID=70799&category=TamilNews&language=tamil

யார் இந்த அனுமதி மறுக்கும் அதிகாரி?

இலங்கை அதிபர் மகிந்தவா அல்லது சீனா அதிபர் சி ஜிங் பிங்கா அல்லது மணிவண்ணனா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இலங்கையின் முதலாவது செய்மதி விண்ணில்[/size]

b2e1cceee6025951880a3709ef3686f8.jpg

சீனாவில் தயாரிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் விண்ணுக்கு ஏவப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் இலங்கை நேரப்படி மாலை 3.45 மணியளவில் ஏவப்பட்டதாக இலங்கை பிரதிநிதி விஜித் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 22ஆம் திகதி விண்ணுக்கு ஏவப்படவிருந்த நிலையிலும் 5 நாட்கள் தாமதமாகி இன்று விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.

சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னர் வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த செயற்கைக்கோளை கட்டுப்படுத்துவதற்கான நிலையம் கண்டி பல்லேகலவில் அமைக்கப்படவுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டதும், உலகில் சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வைத்திருக்கும் 45ஆவது நாடாக இலங்கை வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளதுடன் தெற்காசிய நாடுகளில் இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்ததாக, சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை கொண்டுள்ள மூன்றாவது நாடு என்ற பெருமையையும் இலங்கைக்கு உண்டு.

http://www.onlineuthayan.com/News_More.php?id=515931652027435926

[size=4]முதாலவது செய்மதி எப்பொழுது ஏவப்பட்டது ?, என பரீட்சைகளில் கேட்டால், தமிழ் மாணவர்களுக்கு சிரமம் இருக்காது அந்த நாளை நினைவில் வைத்திருக்க. [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

India, China trade set to hit $100 b by 2015: S.M. Krishna

http://www.thehindubusinessline.com/industry-and-economy/article2875665.ece

BEIJING, FEB. 9:

India and China have set an ambitious bilateral trade target of $100 billion by 2015 compared to last year's record figure of $74 billion, the External Affairs Minister, Mr S.M. Krishna, has said.

Bilateral economic and trade cooperation has witnessed a robust growth rate and India will continue to carry forward the positive momentum in ties, Mr Krishna said.

“We have set a target of $100 billion for the year 2015 and I'm confident we will achieve this target,” Mr Krishna said in an interview to China's state-run Xinhua news agency.

In order to further enhance economic consultation and cooperation, last year the two sides have launched the Strategic Economic Dialogue mechanism, Mr Krishna said.

“We will continue to work hard to maintain the positive momentum of bilateral trade with China,” Krishna, who is in China on a visit to inaugurate the new Indian Embassy here, said.

Over all, India-China bilateral trade rose by $12.2 billion increase last year compared to 2010 when the total trade was $61.7 billion, according to official trade figures for 2011.

The trade deficit from January to December of 2011, however, piled up to $27.07 billion even though Indian exports to China went up to $23.4 billion registering a growth of almost 12.26 per cent compared to the same period in year 2010.

Indian exports to China mainly composed of primary products and commodity sector increased despite the decline of iron ore exports, which dominated India's exports for long due to ban on mining in Karnataka and Goa, according to official sources.

கிருஸ்ணா, சிதம்பரம், சிவசங்கர் மேனன், தயாநிதி மாறன் போன்றோர் இந்த இலங்கை செய்மதியும், மற்ற தொலைதொடர்பு கம்பனிகள் மூலமும் சீனாவின் சம்பள பட்டியலில் இருப்போர். 2G வழக்கைதன்னும் முறையாக விசாரித்தால் சோனியா தொடக்கம் தயாநிதி மாறன் வரைக்கும் உள்ளுக்குள் போவார்கள். இந்த ஊழல்களால், மிக விரைவில், உலகிலேயே அதி கூடிய சீனத்தொழிலாளர்கள் தொழில் புரியும் இடமாக இந்தியா மறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனா உதவியுடன் செயற்கைக்கோளை ஏவிய இலங்கை

Published: Wednesday, November 28, 2012, 14:04 [iST]

கொழும்பு: இந்தியாவின் கடும் ஆட்சேபனை மற்றும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் சீனாவின் உதவியுடன் தனது முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோளான சுப்ரீம்சாட்-1 என்ற செயற்கைக் கோளை ஏவியுள்ளது இலங்கை.

sri lanka launches first communications satellite

சுண்டைக்காய் நாடான இலங்கை, விடுதலைப் புலிகள் இயக்கம் ஈழப் போரில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட பி்ன்னர் இந்தியாவை படு மோசமாக நடத்த ஆரம்பித்துள்ளது. இந்தியாவை எப்படியெல்லாம் எரிச்சல்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் செய்ய ஆரம்பித்துள்ளது. சீனாவின் கையை வைத்து நமது முகத்தை அவ்வப்போது குத்தி வருகிறது. நாம் சொல்வதை அது கேட்பதே இல்லை, கண்டு கொள்வதே இல்லை. இருந்தாலும் நமது மத்திய அரசு, இலங்கையிடம் எவ்வளவு குணிந்து போக முடியுமோ அவ்வளவு குணிந்து போய்க் கொண்டேயிருக்கிறது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில் அதுகுறித்து இந்திய அரசு கவலைப்பட்டாலும் அதைத் தடுக்க முடியாத நிலையில்தான் அமர்ந்திருக்கிறது. இந்த நிலையில் இலங்கை,சீனாவின் உதவியுடன் தனது முதலாவது தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த அரசு சார்பு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இந்த செயற்கைக்கோளை சீனாவிலிருந்து ஏவியுள்ளது இலங்கை. இதனால் இந்தியா, இலங்கை இடையிலான உறவில் மேலும் கசப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த செயற்கைக் கோள் ஏவுவதற்கு இந்தியா ஏற்கனவே கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. ஆனால், இதை இலங்கை நிராகரித்து விட்டது. இந்த செயற்கைக்கோள் ஏவும் திட்டம் முற்றிலும் தனியார் சம்பந்தப்பட்டது என்றும், இலங்கையைச் சேர்ந்த சுப்ரீம்சாட் என்ற தனியார் நிறுவனமும், சீனாவின் கிரேட் வால் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து இதை மேற்கொண்டதாக இலங்கை கூறியுள்ளது.

இருப்பினும் இந்த செயற்கைக் கோளை உருவாக்கியது தான்தான் என்பது போல சிங்கள மீடியாக்களுக்குப் பேட்டி கொடுத்துள்ளார் ராஜபக்சேவின் இளைய மகன் ரோஹிதா.

செயற்கைக் கோள் ஏவப்பட்டது குறித்து சுப்ரீம்சாட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜீத் பெரீஸ் கூறுகையில், செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. மேற்கு சீனாவில் உள்ள ஜிசாங் செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து செயற்கைக் கோள் ஏவப்பட்டது.

இலங்கை, சீனா இடையிலான நெருக்கமான உறவு இந்த செயற்கைக் கோள் மூலம் மேலும் வலுவடையும் என்றார்.

இந்த நிலையில் இலங்கையின் இந்த செயல் குறித்து டெல்லியில் உள்ள கொள்கை ஆய்வு மைய ஆய்வாளர் பிரம்மா செல்லனே கூறுகையில், சீனாவுடன் இலங்கை நிதானமாக அதேசமயம் வலுவாக நெருங்கி வருவதையே இது காட்டுகிறது. மேலும் இந்தியாவுக்கு இது மறைமுக எச்சரிக்கையுமாகும். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுத்து வருவதையும் இது வெளிக்காட்டுகிறது. இது நிச்சயம் நமக்கு நல்ல செய்தி அல்ல என்றார்.

ஏற்கனவே இந்தியாவை சுற்றி வளைத்து தனது நிலைகளை வலுப்படுத்தி வருகிறது சீனா. தற்போது இலங்கையை மையமாக வைத்து இந்தியாவுக்கு கடும் எரிச்சலையும், பாதுகாப்பு மிரட்டலையும் விடுத்து வருகிறது சீனா. தற்போதைய செயற்கைக் கோள் ஏவுதல், இந்தியாவுக்கு மேலும் பதட்டத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்கிறார்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வாளர்கள்.

http://tamil.oneindia.in/news/2012/11/28/srilanka-sri-lanka-launches-first-communications-satellite-165366.html

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து சீனாவின் ஆதரவோடு இலங்கை அணுகுண்டு தயாரிப்பிலும் ஈடுபட்டு மற்றும் விமானத்தாங்கி கப்பல்களையும் கொள்வனவு செய்து இந்தியாவிற்கு சவால் விட வேண்டும் இதையும் இந்தியா கண்டிக்குமாக இருந்தால் இந்தியா மீது படையெடுக்க வேண்டும் :D

இந்தியாவை கைப்பற்றி United States of Sri Lanka என்று பெயர் வைத்தால் இன்னும் சூப்பர் :D

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து சீனாவின் ஆதரவோடு இலங்கை அணுகுண்டு தயாரிப்பிலும் ஈடுபட்டு மற்றும் விமானத்தாங்கி கப்பல்களையும் கொள்வனவு செய்து இந்தியாவிற்கு சவால் விட வேண்டும் இதையும் இந்தியா கண்டிக்குமாக இருந்தால் இந்தியா மீது படையெடுக்க வேண்டும் :D

இந்தியாவை கைப்பற்றி United States of Sri Lanka என்று பெயர் வைத்தால் இன்னும் சூப்பர் :D

அணுகுண்டைத் தயாரிக்கும், இடத்தைத் 'தலதா மாளிகைக்கு' அண்மையாகத் தெரிவு செய்யும்படி, முன் மொழிகின்றேன்! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11658235291348620009Nov-28-L.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விண்ணில் செலுத்தியதாகக் கூறும் செய்மதிக்கான பணம் மஹாராஜாவின் பணமா? புலிகளின் பணமா? -

29 நவம்பர் 2012

ஐக்கிய தேசியக் கட்சியில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் - மங்கள சமரவீர

இலங்கை விண்ணில் செலுத்தியதாகக் கூறும் செய்மதிக்காக செலவிடப்பட்ட பணம் மஹாராஜாவின் பணமா அல்லது விடுதலைப்புலிகளின் பணமா என்பதை அறிய மக்களுக்கு உரிமை இருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையினால் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் செய்மதி இதுவென இலங்கையில் பிரசாரப்படுத்திய போதிலும், சீன ஊடகங்கள் அதனை சீனாவின் 18வது செய்மதி என்றே செய்தி வெளியிட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு சீன ஊடகம் மாத்திரம், இந்த செய்மதி தொழிற்நுட்படுத்தின் ஒரு பகுதியை இலங்கையின் நிறுவனம் ஒன்று கொள்வனவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியிட்டுள்ளது.

ஒருவரின் வீட்டை வடகைக்கு எடுத்ததால் மாத்திரம் அந்த வீடு தமக்குதான் சொந்தம் எனக் கூறும் உரிமையில்லை. அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதற்காக இப்படியான பொய்களை கூறி வருகிறது எனவும் மங்கள சமரவீர கூறியுள்ளார். கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

முழு நாடும், பொருளாதாரம் என்ற தீயில் எரிந்து கொண்டிருப்பதுடன் மக்கள் பட்டினியால் வாடும் போது, ராஜபக்ஷவினர் மக்களுக்கு நட்சத்திரங்களை காட்டி வருவதாகவும் வானத்தை காட்டி உண்மையான பிரச்சினை மூடி மறைக்க முயற்சித்து வருகின்றனர் எனவும் மங்கள தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் பட்டினியை போக்க அரசாங்கத்திடம் நிவாரணம் கோரி வரும் நிலையில், அரசாங்கம் அதிவேக வீதிகளில் பயணிக்கும் பந்தய கார்களுக்கு மானியம் வழங்கியுள்ளது. இது பிரான்ஸ் புரட்சியில் ஈடுபட்ட மக்கள் பாணை கேட்ட போது, மகாராணி, பாண் இல்லாவிட்டால் என்ன கேக் சாப்பிடுங்கள் என்று கூறியதற்கு இணையாகும்.

இதற்கு முன்னர், சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளில் கேட்க கிடைத்த துயரக் கதைகள் தற்போது, இலங்கை முழுவதும் கேட்க தொடங்கியுள்ளது. பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாத நிலையில், தாய்மார் பிள்ளைகளை நடு தெருவில் கைவிட்டுச் செல்வதுடன் காவற்துறையினரிடம் ஒப்படைக்கின்றனர் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் - மங்கள சமரவீர

ஐக்கிய தேசியக் கட்சியில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்த ஊழல் மோசடி மிக்க அரசாங்கத்தை தோற்கடிக்க அரசாங்கம் அடிப்படை மாற்றங்களை செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

மரபு ரீதியான முறைகளில் போராடி இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது எனவும், புதிய தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியே போராட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய தந்திரோபாயங்களை அமுல்படுத்தும் போது கட்சிக்குள் கடுமையான ஒழுக்க விதிகள் பேணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் கட்சி பொதுச்சபைக் கூட்டத்தில் இந்த அடிப்படை மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடிகளினால் இந்த நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வலுவிழந்துள்ளதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85980/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.