Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமிர்தம் போன்ற தேனை தரும் தேனீக்கள் பற்றிய சுவாரசியமான தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி(Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இவற்றால் உற்பத்தி செய்யப்படும் தேன், பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது. இத்தகைய பிரம்மாண்ட எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில் தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி மிக விரிவான அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல அதிசயத் தக்க விஷயங்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன.

தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன. இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில் ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை

தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.

1. இராணித் தேனீ (Queen-Productive Female)

2. ஆண் தேனீக்கள் (Drone)

3. வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee-Non Productive Female)

ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை. ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும்.

இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது. மேலும் இவற்றைக் கொண்டு கூடுகளில் ஏற்படும் விரிசல் போன்ற பழுதுகளைச் சரி செய்யப்படுகின்றன.

இராணித் தேனீ

இராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். இவை 16 நாட்களுக்குப் பிறகு முழு வளர்சியடைந்து கூட்டிலிருந்து வெளி வந்தவுடன் ஏறக்குறைய 10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் பறந்து வெளியில் செல்கின்றது. தரை மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்திற்கு மேல் பறந்த நிலையிலேயே ஆண் தேனீக்களுடன் உறவு கொள்கின்றது.

அதன் மூலம் மில்லியன் கணக்கான ஆண் உயிர் அணுக்களை பெற்றுக் கொள்கின்றது. அதன் பின்னர் அவை இறக்கும் காலம் வரை உறவில் ஈடுபடுவதில்லை. அவை ஆண் ஈக்களிடமிருந்து பெற்ற அந்த உயிரணுக்களைக் கொண்டே அது இறக்கும் காலம் வரை முட்டையிட்டுக் கொண்டிருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும்.

இவை இடைவிடாது பணியில் ஈடுபடுவதால் இவற்றிற்கு ஓய்வு என்பதே இல்லை என்று சொல்லுமளவிற்கு பணியில் ஈடுபடுகினறது. இராணித் தேனீயின் உணவுத் தேவையை கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை அமர்த்தப்படுகின்றன. 20 முட்டை வரை இட்டதன் பின்னர், முட்டை இட்ட களைப்புத் தீர ஒரு முறை இவற்றிற்கு ஆகாரம் அளிக்கப்படுகின்றது.

ஆண் தேனீக்கள் (Drone)

ஆண் தேனீ பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை. தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை கடிக்கும் திறனையும் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு இல்லை.

நான் ஆண் என்று வீரவசனம் பேச இவற்றிற்கு கூட்டிற்குள் எந்தத் தகுதியும் இல்லை என்பதை இவை உணர்ந்து சமர்த்தாக நடந்து கொள்கின்றன. இவை தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்து வாழ்கின்றன இவை செய்யக் கூடிய உருப்படியான காரியம் என்னவென்றால் புதிதாகப் பொரித்து வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதுதான். இந்த ஒரு இனப்பெருக்கக் காரணத்திற்காகவே இவை மற்றவைகளினால் சகித்துக் கொள்ளப்படுகின்றன.

வேலைக்காரத் தேனீக்கள்

மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் இனிய நலன் பயக்கும் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும். இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை. இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, லார்வாக்கள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப் படுகின்றது. இவற்றின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் (honey sac) மலரின் குளுகோஸ் இரசாயண மாற்றம் செய்யப்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது.

தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள்.இவை வா‌ழ்நா‌ளி‌ல் பற‌க்கு‌ம் மொ‌த்த தூர‌ம், பூ‌மியை 4 முறை வல‌ம் வ‌ந்தத‌ற்கு சமமானதாகு‌ம்.

http://www.seithy.com/breifNews.php?newsID=70668&category=CommonNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை நாளில் ஆண் தேனீ பயனற்றது என்பதை இப்போதுதான் அறிகிறேன். நன்றி யாயினி மிகப் பயன் தரும் தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை நாளில் ஆண் தேனீ பயனற்றது என்பதை இப்போதுதான் அறிகிறேன். நன்றி யாயினி மிகப் பயன் தரும் தகவல்.

[size=4]அதுக்காக ஆண் சிங்கங்களை பற்றி எழுதி எம்ம்மை அசிங்க படுத்தி விடாதீர்கள்.[/size]

ஆண் தேனீக்கள் (Drone)

ஆண் தேனீ பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை. தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை கடிக்கும் திறனையும் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு இல்லை.

நான் ஆண் என்று வீரவசனம் பேச இவற்றிற்கு கூட்டிற்குள் எந்தத் தகுதியும் இல்லை என்பதை இவை உணர்ந்து சமர்த்தாக நடந்து கொள்கின்றன. இவை தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்து வாழ்கின்றன இவை செய்யக் கூடிய உருப்படியான காரியம் என்னவென்றால் புதிதாகப் பொரித்து வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதுதான். இந்த ஒரு இனப்பெருக்கக் காரணத்திற்காகவே இவை மற்றவைகளினால் சகித்துக் கொள்ளப்படுகின்றன.

இதிலிருந்து என்ன தெரியுதென்றால், ஆண் தேனீ தனது உயிரை மாய்த்து தியாகம் செய்யாவிட்டால் 'தேனீ' என்று ஒரு பூச்சி இனமே உலகில் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

தன்னலம் பாராது இனத்தை வளர்க்கும் ஆண் தேனீக்கள்..! :D

அண்ணா, ஆண் தேனீ ஒரு தாதி தேனியிலும் பார்க்க ஐம்பது விகிதம் பெரிது.

ஆனால் ஒரு இராணி தேனீ ஆணிலும் பார்க்க ஐம்பது விகிதம் பெரிது. அதனால் ஆண்கள் ஒவ்வொரு நாளும் ஜிம்முக்கு போய் பம்மி தமது நாளைக்கு காவல் இருப்பார்கள். புதிய கன்னி இராணி பறக்க தொடங்க அடித்து பிடித்து கொண்டு கலைக்க தொடங்குவர்.

இராணியும் கடைசி ஐந்து வீரர்கள் இருக்கும்வரை அலைக்கழிப்பாள். இது இலகுவான வேலை இல்லை.

இது ஒலிம்பிக் ஓட்ட வீராங்கனையை நாம் கலைத்து பிடிப்பது போல்! ஐந்து நிமிடத்தில் மாரடைப்பில் போய் சேர்ந்து விடுவோம்.

மற்றும் கூட்டில் தேனுக்கு பஞ்சம் என்றால் ஆண்கள் அடித்துவிரட்டபடுவார்கள். அப்பாவி கூட்டமாக வாசலை சுத்தி வருவார்கள்.

பாவமாக இருக்கும். தாமும் பயனுள்ளவர்கள் என்று காட்ட கூடு சுத்திகரிப்பு, குழந்தைபராமரிப்பு என்று திரும்பி புக முனைவர்.

அட பாவம். மனுசனுக்குத்தான் கஷ்டம் என்றால் தேனீக்கும் இந்த நிலைதானா? :D

இங்கு தேனீக்கள் குறைந்து வருவதால் உணவுப் பொருட்களின் விலை கூடி வருகிறது. விலையுள் இல்லை, விலை கூடுகிறது. நூற்றுக் கணக்கில் காய் கனி தந்த பழ மரங்கள் மலடாகி வருகின்றன. செயற்கை மகரந்தச் சேர்கை செய்வது நீண்ட காலத்திற்குப் பயன் தராது. மரக்கறி பயிர்களும் விளைச்சல் தருவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி யாயினி.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா, ஆண் தேனீ ஒரு தாதி தேனியிலும் பார்க்க ஐம்பது விகிதம் பெரிது.

ஆனால் ஒரு இராணி தேனீ ஆணிலும் பார்க்க ஐம்பது விகிதம் பெரிது. அதனால் ஆண்கள் ஒவ்வொரு நாளும் ஜிம்முக்கு போய் பம்மி தமது நாளைக்கு காவல் இருப்பார்கள். புதிய கன்னி இராணி பறக்க தொடங்க அடித்து பிடித்து கொண்டு கலைக்க தொடங்குவர்.

இராணியும் கடைசி ஐந்து வீரர்கள் இருக்கும்வரை அலைக்கழிப்பாள். இது இலகுவான வேலை இல்லை.

இது ஒலிம்பிக் ஓட்ட வீராங்கனையை நாம் கலைத்து பிடிப்பது போல்! ஐந்து நிமிடத்தில் மாரடைப்பில் போய் சேர்ந்து விடுவோம்.

மற்றும் கூட்டில் தேனுக்கு பஞ்சம் என்றால் ஆண்கள் அடித்துவிரட்டபடுவார்கள். அப்பாவி கூட்டமாக வாசலை சுத்தி வருவார்கள்.

பாவமாக இருக்கும். தாமும் பயனுள்ளவர்கள் என்று காட்ட கூடு சுத்திகரிப்பு, குழந்தைபராமரிப்பு என்று திரும்பி புக முனைவர்.

மிகவும் பயனுள்ள தகவல்கள்! நன்றிகள்!

வலிமையான, ஒரு தலைமுறையை உருவாக்குவதற்காகத் தான், இவ்வளவு சோதனைகளையும், ராணித்தேனீ நடத்துகின்றது! :lol:

இத்தனை நாளில் ஆண் தேனீ பயனற்றது என்பதை இப்போதுதான் அறிகிறேன். நன்றி யாயினி மிகப் பயன் தரும் தகவல்.

பாவம் டமில்,தெரிந்தால் நொந்துபோய்விடுவார்.

இன்னுமொரு விடயம் பாவம் ஒருதேனி ஒரு துளி தேனுக்காக அண்ணளவாக பறக்கும் தூரம்3160 மீட்டர்கள். நாம் எவ்வளவு தேனை வீணாக்குவோம்.பொதுவாக எமது கோவில்கள்கூட.....

நல்ல பதிவு யாயினி, இயற்கை விசித்திரமானது, படைப்புகள் அதைவிட விசித்திரம், மனிதனால் இயற்கையின் படைப்புகளை அறிய முடியாதது பல உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.