Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டொராண்டோ மாவீரர் தினம் 2012

Featured Replies

[size=1][size=4]நான் எனது நண்பர் ஒருவருடன் டொராண்டோ மாவீரர் விழாவின் இரண்டாவது அமர்விற்கு சென்றேன். வழமை போன்று நான்கு அமர்வுகள் இன்றும். [/size][/size]

[size=1][size=4]மிகவும் உணர்வுபூர்வமாக தேசியத்தலைவர் ஈகச்சுடர் ஏற்றும் திரை நிகழ்வுடன் ஆரம்பாமானது நிகழ்வு. அடுத்து அகவணக்கமும் பின்னர் மாவீரர் பாட்டும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மலர் வணக்க நிகழ்வு மீண்டும் ஆரம்பமானது. கண்ணை திறந்த பொழுது பல கனத்த கண்கள் கண்ணில் தெரிந்தன.[/size][/size]

[size=1][size=4]வீட்டிலே அகவணக்கம் செலுத்துவதும் ஒருவித உணர்வு. அதைவிட ஒரு சமூகமாக அகவணக்கம் செலுத்தும்பொழுது நாமும் பலம்பெற்று சக உறவுகளுக்கும் ஒரு பலத்தை தரும் உணர்வு இருந்தது. குறிப்பாக மிக சிறிய வயது குழந்தைகளுடன் வரும் உறவுகள் மற்றும் தள்ளாடியபடியே வந்து இருகரம் தலைமேல் வைத்து வணக்கம் செலுத்தும் முதியவர்கள் கல் மனத்தையும் கரைய வைத்தனர். [/size][/size]

[size=1][size=4]தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் மேடையில் நடந்தன. எமது வானம்பாடிகள் புதிய புத்துணர்வுடன் பாடல்களை வழங்கினர். நிறையவே இளையவர்களும் பாடினார்கள். [/size][/size]

[size=1][size=4]வழமை போன்று மிக நேர்த்தியாக மாவீரர் துயிலும் இல்லம், மக்கள் வந்து போகும் வழிமுறைகள், மேடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. தொண்டர்கள், குறிப்பாக இளையவர்கள் அதிகம் பாடசாலை, வேலை என்பனவற்றில் இருந்து நேரத்தை ஒதுக்கி பலவேறு விதமான பங்களிப்புக்களை நாள் முழுவதுமாக செய்தனர். குளிரில் நின்று வாகன வசதிகளை நிர்வகிக்கும் உறவுகள் தமிழீழ காவல்துறையை கண்முன் கொண்டுவந்தனர். [/size][/size]

[size=1][size=4]இந்த நிகழ்வை ஒழுங்குசெய்த குழுவினருக்கு ஒரு சிறு தொகை பணத்தை நன்கொடையாக வழங்கி பற்றுச்சீட்டையும் பெற்று ஒரு மனத்திருப்தியுடன் வீடு திரும்பினேன். [/size][/size]

Edited by akootha

  • தொடங்கியவர்

65380_558940050787379_1509072538_n.jpg

[size=4]நான்காவதும் இறுதி நிகழ்வும் மாலை ஆறு மணிக்கு (தற்பொழுது ஏழு மணி) ஆரபித்தது. நண்பர் ஒருவர் மூன்று கிலோமீட்டர் நீளத்தி[/size][size=4]ற்கு [/size][size=4] [/size]வாகனங்கள் நிற்பதாக கூறினார்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி..அகூதா....நான் இரண்டாவது..நிகழ்வுக்கு சென்றிருந்தேன்.......அருமையான ..அமைதியான நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தார்கள்....மனது கனத்தது.....அங்கு வரும் ஒவ்வொருவரும்....மனப்பூர்வமாக ....வணக்கம் ...செய்த காட்சிகளை காண்கின்ற பொழுது....வாய் விட்டு அழவேண்டும் உணர்வே..மேலொங்கியது.......சூழ்நிலை என்னை அமைதி ஆக்கியது.....பொது இடத்தில்....அவர்களை நினைவு கூர்வது......எமக்கு அமைதி..அடைய வழி வகுக்கும்....மாவீரர்களுக்கும்...சாந்தி அடைய வழி சமைக்கும்...அமைப்பாளர்களுக்கு..எனது நன்றிகள்....தாயகத்தில் எத்தனை இடரின் மத்தியில்....நினைவுகூர்ந்த உறவுகளுக்கும்...எனது...மனப்பூர்வ நன்றிகள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும், மாற்று அமைப்பு அல்லது நபர் ஒருவரால் பிறதொரு இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு மக்களால் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கனேடிய தமிழர்கள் ஒற்றுமையை சீர்குலைத்து நிற்க்கும் தலைவர்களுக்கு, அமைப்புக்களுக்கு சிறந்த செய்தியை இந்த மாவீரர் நாள் நிகழ்வின் ஊடக தெரிவித்துள்ளனர்.

  • தொடங்கியவர்

ஒவ்வொரு மாவீரர் வாரத்திலும் இரத்த தானம் செய்வது எனது வழக்கம்.

இந்த முறை மூன்று நண்பர்களுடன் சென்றேன்.

இந்த உலகில் எம்மை பற்றி சிந்தித்து தம் உயிரை கொடுத்த இந்த அரிய உயிர்களுக்கு எனது மிக மிக சிறிய காணிக்கை.

[size=1]

[size=4]உங்களினதும் நண்பர்களினதும் ஆக்கபூர்வமான செயற்பாட்டிற்கு நன்றிகள்.[/size][/size][size=1]

[size=4]கனேடிய தேசிய அவையும் கடந்த சனிக்கிழமை இரத்ததான நிகழ்வை வெற்றிகரமாக செய்திருந்தது. [/size][/size][size=1]

[size=4] அதைவிட போர்குற்ற நாள் அன்றும் முன்னெடுப்பார்கள், பின்னர் கருப்பு ஜூலை அன்று.[/size][/size]

  • தொடங்கியவர்

[size=4]

இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட்டாக வேண்டும், மாற்று அமைப்பு அல்லது நபர் ஒருவரால் பிறதொரு இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு மக்களால் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. [/size]

[size=4]இதன் மூலம் கனேடிய தமிழர்கள் ஒற்றுமையை சீர்குலைத்து நிற்க்கும் தலைவர்களுக்கு, அமைப்புக்களுக்கு சிறந்த செய்தியை இந்த மாவீரர் நாள் நிகழ்வின் ஊடக தெரிவித்துள்ளனர்.

[/size]

[size=1]

[size=4]உண்மை. இதன் மூலம் மாற்று அமைப்பு அல்லது நபர் ஒருவருக்கு பின்னால் நின்றவர்களுக்கு கனேடிய தமிழீழமக்கள் தெளிவான செய்தியை கூறியுள்ளார்கள். அடுத்தமுறை அவர்கள் ஒதுங்கினால் நன்று. [/size][/size]

  • தொடங்கியவர்

நன்றி..அகூதா....நான் இரண்டாவது..நிகழ்வுக்கு சென்றிருந்தேன்.......அருமையான ..அமைதியான நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தார்கள்....மனது கனத்தது.....அங்கு வரும் ஒவ்வொருவரும்....மனப்பூர்வமாக ....வணக்கம் ...செய்த காட்சிகளை காண்கின்ற பொழுது....வாய் விட்டு அழவேண்டும் உணர்வே..மேலொங்கியது.......சூழ்நிலை என்னை அமைதி ஆக்கியது.....பொது இடத்தில்....அவர்களை நினைவு கூர்வது......எமக்கு அமைதி..அடைய வழி வகுக்கும்....மாவீரர்களுக்கும்...சாந்தி அடைய வழி சமைக்கும்...அமைப்பாளர்களுக்கு..எனது நன்றிகள்....தாயகத்தில் எத்தனை இடரின் மத்தியில்....நினைவுகூர்ந்த உறவுகளுக்கும்...எனது...மனப்பூர்வ நன்றிகள்...

[size=1][size=4]நன்றிகள் அல்வாயன். [/size][/size]

[size=1][size=4]உலகில் அதிகம் புலம்பெயர்ந்து [/size][/size][size=4]வா[/size]ழும்** நகரமாக டொராண்டோ உள்ளது. எனவே சிங்கள புலனாய்வும் கனேடிய புலனாய்வும் நிச்சயமாக நேற்யை நிகழ்வை வைத்து வரும் நாட்களில் தமது அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். அந்த அறிக்கை ஒரே செய்தியை சொல்லும், "தமிழ் மக்கள் தமது இலட்சியத்தில் ஒற்றுமையாக உறுதியாக நிற்கிறார்கள்" என்பதே.

[size=1][size=4]நடக்கும் கயிறு இழுத்தல் போட்டியில் சிங்களம் தனது நிலையை தளர்த்த உதவும். [/size][/size]

[size=1][size=4]மேற்குலகம் மக்கள் விருப்பத்திற்கு செவிசாய்க்க தள்ளப்படும். [/size][/size]

[size=1][size=4]** [/size][/size][size=4]எழுத்துப் பிழை திருத்தம்[/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துப் பிழை ஏற்பட்டுள்ளது திருத்தம் செய்தால் நன்று..(பாழும்)அல்ல...

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மாவீரர் வாரத்திலும் இரத்த தானம் செய்வது எனது வழக்கம்.

இந்த முறை மூன்று நண்பர்களுடன் சென்றேன்.

இந்த உலகில் எம்மை பற்றி சிந்தித்து தம் உயிரை கொடுத்த இந்த அரிய உயிர்களுக்கு எனது மிக மிக சிறிய காணிக்கை.

உண்மையில் பெருமையாக இருக்கிறது.

நன்றி என்று சொல்லி தூரநிற்கமுடியாத உறவு.

கடவுள் உங்களுடன் இருப்பார்.

சில நேரங்களில் நினைப்பதுண்டு

எம்முடன் (என் தலைமுறை) எல்லாம் மறக்கப்பட்டுவிடுவோ என்று?

இல்லை

அது உங்கள் போன்றோரை கண்டதும் தவிடுபொடி ஆவதுண்டு

இது போன்ற செய்திகள்

எனது ஆயுளை கூட்டக்கூடியது.

நான் மூன்றாவதாக நிகழ்ந்த நிகழ்வுக்கு குடும்பத்துடன் சென்று இருந்தேன். 3 மணி நிகழ்வுக்கு அதிகம் பேர் வரமாட்டார்கள் என்று நினைத்து போயிருந்தாலும், வயோதிபர்கள் உட்பட பலரைக் காணக் கூடியதாக இருந்தது. மாவீரர் தின நிகழ்வுகளுக்கும் இது போன்ற நிகழ்வுகளுக்கும் குழந்தைகளை அழைத்து செல்வதன் மூலம் பல விடயங்களை புரிய வைக்க முடியும் என நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி நானும் 3,4 பாதிநேரம் வரை அங்குதான் நின்றேன். உங்களைத் தேடிப்பார்த்தேன். இசையை சந்தித்தேன். மற்றப்படி வல்வை மைந்தனைக் கண்டேன். தூயவன் தோற்றத்தில் ஒருவரைக்கண்டதாக ஞாபகம் ஆனால் தூயவனா என்பதை மட்டுக்கட்ட முடியவில்லை.

நான் நான்காவது நிகழ்விற்கு போயிருந்தேன்.....மக்கள் அலைவெள்ளமாக கூடியதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் இருந்தது. மறக்கமுடியாத மாவீரர் தினம்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஆண்டுகள் போலவே மாபெரும் எழுச்சியுடன் பல்லாயிரத்தில் மக்கள் கலந்து கொண்ட மாவீரர் நாள் நிகழ்வாக 2012 நிகழ்வு கனடாவின் மாக்கம் நகரில் நடைபெற்றது. கனடாத்தமிழர் நினைவெழுச்சி அகவத்தினால் வழமைபோல் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மாபெரும் மாவீரர் நினைவு மண்டபத்தில் அதிகாலை 6.45 மணிக்கே முதல் அமர்வு ஆரம்பமாகியது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது அவ்வதிகாலையிலேயே பல்லாயிரத்தில் மக்கள் வருகை தங்திருந்தனர்.

முதல் மாவீரர் லெப். சங்கர் வீரச்சாவடைந்த தாயகநேரமான மாலை 6.07க்கு கனடாவிலும் ஈகைச்சுடர் ஏற்றும் வகையிலேயே முதல் நிகழ்வு அதிகாலை வேளையிலேயே ஆரம்பமாகியது.

கனடிய தேசியக் கொடியேற்றம் தமிழீழ தேசியக்கொடியேற்றம் ஆகியவற்றைத் தொடர்ந்து ஈகைச்சுடறேற்றம் அமைதி வணக்கம் துயிலும் இல்லப்பாடல் கார்த்திகைப்பூ மலர் வணக்கம் என்பவை நடைபெற்றன. மக்கள் சாரை சாரையாக வந்து மலர் வணக்கம் செய்தனர்.

தொடர்ந்து எழுச்சிக்கலை நிகழ்வுகள் நடைபெற்றன. இதே போன்று இரண்டாவது அமர்வு மதியம் 12 மணிக்கும்�� மூன்றாவது அமர்வு பிற்பகல் 3.30 மணிக்கும் மாலை இறுதி அமர்வு இரவு 7 மணிக்கும் ஆரம்பமாகின.

தொடர்ச்சியாக 15 மணித்தியாளங்களாக நடைபெற்ற நிகழ்வுகளின் போது மக்கள் தமக்கு வசதியான ஒரு நேரத்தில் தமது மண்ணின் மைந்தர்களுக்கான வணக்கத்தை மண்டபத்தை நிறைத்து தொடர்ச்சியாக செலுத்திய வண்ணமிருந்தனர்.

பல்லாயிரத்தில் இருக்கை வசதிகள் அமைந்த போதும் அலை மோதிய மக்கள் வெள்ளத்தால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தமது இருக்கையை ஏனையவர்களுக்கு ஒதுக்கி மக்கள் மண்டபத்தை விட்டு வெளியேறியமை பிற்பகல் முதல் நிறைவு வரை முழுமையாக அவதானிக்கப்பட்டது.

சிங்கள அரச பயங்கரவாதம் எல்லை கடந்து புலம் பெயர்ந்த தளங்களிலும் அச்சுறுத்தல் விட ஆரம்பித்துள்ள நிலையில் தங்கள் உரிமைகளுக்காவும் தங்கள் தாயக உறவுகளுக்காவும் முழுமையாக போராட்டத்திற்கு கனடியத் தமிழ் உறவுகள் தயார் என்பபை பறைசாற்றுவது போன்றே கனடியத் தமிழர்களின் மாவீரர் நாள் எழுச்சி வெளிப்பட்டது.

மாவீரர்களால் ஈழத்தமிழர்களிடையே ஏற்படுத்தப்பட்ட ஒற்றுமையை எக்காரணத்திற்கும் சிதைக்க அனுமதியோம் என்பதை ஒரே நிகழ்வில் ஒன்றாக அணிதிரண்டமையூ டாக தமது சக புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கும் கனடியத் தமிழர்கள் தெளிவாக தெரிவித்துள்ளனர் என்றார் மூத்தவர் ஒருவர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=70999&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மாவீரர் தின நிகழ்வுக்குச் சென்றிருந்தேன் (பிற்பகல் ஆறு மணிக்கு.) உணர்வுபூர்வமான மக்கள் வரவும், பங்களிப்பும் பிரமிக்க வைப்பதாக‌ இருந்தது.

இவ்வாறான ஒரு நிகழ்வை ஒழுங்குபடுத்தி நடத்துவதற்கு எத்தகைய வேலைத்திட்டங்கள் / கட்டுப்பாடுகள் தேவை என்பதை நேரில் பார்த்தபோது ஒழுங்கமைத்தவர்களை வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை.

குறிப்பாக, இளையவர்கள் தமது நேரத்தை ஒதுக்கி ஒழுங்கமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தமை மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாக இருந்தது.

வல்வை அக்கா குடும்பத்தினர், தூயவன், அருவி ஆகியோரையும் முதன்முதலாக‌ சந்தித்தேன்.

நான் வெளியேறும் தருணத்தில் காவல்துறை வந்துவிட்டது. எங்கள் நிகழ்வுகளால் நெடுஞ்சாலை 7 வரை போக்குவரத்து நிலைகுலைந்து போயிருப்பதாகவும், உடனே ஏதாவது நடவடிக்கை எடுக்குமாறும் ஒரு அதிகாரி வற்புறுத்திக் கொண்டிருந்தார். ப‌தில் சொல்லிக்கொண்டிருந்த‌வரைப் பார்த்த‌போது பாவ‌மாக‌ இருந்த‌து. ஒரு ம‌க்க‌ள் நிக‌ழ்வு ஒழுங்காக‌ ந‌ட‌க்க‌வேண்டும் என்ப‌த‌ற்காக‌ முய‌ற்சி செய்துகொண்டிருந்தார். பின்ன‌ர் வெளியேறும் வாக‌ன‌ங்க‌ளைப் பின்வ‌ழியாக‌த் திருப்பிவிட்டு ச‌ம‌யோசித‌மாக‌ப் பிர‌ச்சினையை ச‌மாளித்தார்க‌ள்.

மாவீர‌ர் த‌ரிச‌ன‌ம் செய்த‌ திருப்தியுட‌ன் அவ‌ர்க‌ள‌து பாட‌ல் அட‌ங்கிய‌ இறுவ‌ட்டுட‌ன் வீடு திரும்பினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மாவீரர் தின நிகழ்வுக்குச் சென்றிருந்தேன் (பிற்பகல் ஆறு மணிக்கு.) உணர்வுபூர்வமான மக்கள் வரவும், பங்களிப்பும் பிரமிக்க வைப்பதாக‌ இருந்தது.

இவ்வாறான ஒரு நிகழ்வை ஒழுங்குபடுத்தி நடத்துவதற்கு எத்தகைய வேலைத்திட்டங்கள் / கட்டுப்பாடுகள் தேவை என்பதை நேரில் பார்த்தபோது ஒழுங்கமைத்தவர்களை வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை.

குறிப்பாக, இளையவர்கள் தமது நேரத்தை ஒதுக்கி ஒழுங்கமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தமை மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாக இருந்தது.

மாவீர‌ர் த‌ரிச‌ன‌ம் செய்த‌ திருப்தியுட‌ன் அவ‌ர்க‌ள‌து பாட‌ல் அட‌ங்கிய‌ இறுவ‌ட்டுட‌ன் வீடு திரும்பினேன்.

நன்றி இசை

நீங்கள் எழுதும் கருத்துக்காக காத்திருந்தேன்.

முதல் முதல் மாவீரர் நிகழ்வுக்கு செல்வதால்.

அவர்களது கடின உழைப்பில் பங்கு கொண்டவன் என்பதால்தான் அவர்களை நோக்கி விரல் நீட்டுவதில்லை.

நாங்கள் எல்லோரும் வீடு வந்தபின்பு தான் அவர்களுக்கான மீதி வேலைகள் (பொருட்களை ஏற்றுதல் அவற்றை உரிய இடங்களில் இறக்குதல் துப்பரவு செய்தல்.........) இருக்கின்றன.

அடுத்த நாள் வரை அது தொடரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.